Friday, October 16, 2020

துலா மாதம் சிறப்பு என்ன?



நாளை ஐப்பசி -1 *துலா ஸ்நானம்* !

ஐப்பசி மாதத்தை *துலா மாதம்* என்று போற்றுவர். இந்த மாதத்தில் *இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால்* , இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர்.‘ *ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது* புண்ணியம்’ என்கின்றன ஞான நூல்கள்

ஐப்பசி முதல் நாளன்று  *திருப்பராய்த் துறை* யிலும் ஐப்பசி கடைசி நாள் *மயிலாடுதுறை* யிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மகாவிஷ்ணுவின் அருள் *கிட்டும்.துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்கு முன்* காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

துலா மாதத்தில் காவிரி யில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘ *கடைமுகம்* ’ என்று சொல்லப்படும் *ஐப்பசி 30ந் தேதி* நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘ *முடவன் முழுக்கு* ’ என்று சொல்லப்படும் *கார்த்திகை முதல் தேதி* நீராடினாலும்புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

‘ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் *கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்* ’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமான துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக் கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று *காவிரி மகாத்மியம்* என்னும் நூல் கூறுகிறது. துலா மாதத்தில் *காவிரியில்  ஒருமுறை நீராடுபவன் ஸ்ரீமன் நாராயணனாக* மாறுகிறான். மற்ற விரதங்களில் ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால், காவிரி துலா ஸ்நானத்திற்கு அப்படி எதுவுமில்லை.

‘ *மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்* தில் காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும், தங்கள் குடும்பத்தினரையும், முன்னோர்களின் பாபங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள்’ என்று ஞான நூல்கள் கூறுகின்றன.‘ *துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும்* . எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாபங்கள் விலகும்’ என்றார் பிரம்மா, நதி தேவதைகளிடம்.

ஐப்பசி மாதத்தில் *காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள்* . காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம்.

நதி தேவதைகளும், தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக் கொண்டதும், அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக் கொள்ள *திருமங்கலக்குடி* திருத்தலத்திலும், மாயூரத்தில் ( *மயிலாடுதுறை* ) *உத்தர வாகினி* யாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ரங்கநாதருக்கு *ஐப்பசியில் தங்கக்குட* ங்களில் ஸ்ரீரங்கத்தின் *தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறை* யிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். *மற்ற மாதங்களில் ஸ்ரீரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில்* தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள்.

No comments:

Post a Comment