Sunday, October 4, 2020

வாழ்க்கை தத்துவம்

✍️கடலில் அலை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். 
சமநிலை என்பதே அங்கு இல்லை. 
அதேபோல வாழ்க்கையில் எப்போதும் வேதனைகள் இருந்துகொண்டே இருக்கும்.
என்றாவது ஒருநான் எல்லா துன்பங்களும் மறைந்துவிடும் அதன்பிறகு நிம்மதியாக வாழலாம் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் அப்படி ஒருபோதும் நடக்காது.
இந்த உண்மையை புரிந்துகொண்டால் தேவையற்ற எதிர்பார்புகளிலிருந்து விலகிவிடலாம்...
பணம் இல்லாதவனுக்கு நினைத்ததை வாங்க முடியவில்லையே என்ற வேதனை இருந்தால்,
பணம் இருப்பவனுக்கு அதை இழந்துவிடக்கூடாது,யாரும் களவாடி சென்றுவிடக்கூடாதே என்ற வேதனை இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வேதனை மனத்தை நிறைத்திருக்கும்..
மகான்கள்கூட வேதனையில்தான் வாழ்கிறார்கள்.உலக மக்களின் வேதனை அவர்களை வேதனையடையச்செய்கிறது.
..
மனம் என்ற ஒன்று இருக்கும்வரை வேதனை இருந்துகொண்டேதான் இருக்கும்.
குழந்தையாக இருந்தபோது மனம் இல்லை. அப்போது எதைக்குறித்தும் வேதனைப்பட எதுவும் இல்லை.
எனவே ஆனந்தம் ஒன்றே நிறைந்திருந்தது. 
மனம் செயல்பட ஆரம்பித்தபிறகு ஆனந்தம் மறைந்துவிட்டது. 
எப்போதாவது சிலநேரம் மனம் மறைகிறது,சிறிது ஆனந்தம் கிடைக்கிறது.
..
மனம் அற்ற நிலையில் இந்த உலகத்தில் வாழ முடியுமா? அதிக நாட்கள் வாழமுடியாது...
குழந்தை ஆனந்தமாக இருக்கிறது. ஆனால் அதை பாதுகாக்க தாய்தந்தை அல்லது வேறு யாராவது வேண்டும்.
குருவின் உடலை சீடர்கள் பாதுகாப்பதால் அவரால் அதிகநேரம் ஆனந்தமாக இருக்க முடிகிறது..
சீடர்களின் வாழ்க்கையை நினைத்து அவரும் அவ்வப்போது வேதனைப்பட வேண்டியிருக்கிறது.
....🕉️

No comments:

Post a Comment