Saturday, October 10, 2020

முக்தி என்றால் என்ன?

✍️முக்தியைநோக்கி செல்பவர்களின் பாதை கடினமானதாக இருக்கிறது.
அவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் போதிய பணம் சம்பாதிக்க முடியாது.
குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
அவர்களை தொடர்ந்து பலர் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
உறவினர்கள் நன்றிகெட்டவர்களாகவும்,அவர்களை விட்டு விலகுபவர்களாகவும் இருப்பார்கள்.
வாழ்க்கைக்கு தேவையான உணவு,உடை.உறைவிடம் இவைகளைத்தவிர மற்றவைகள் விரும்பியபடி அமையாது.
மனத்தில் ஒரு வெறுமை இருந்துகொண்டே இருக்கும்.
இந்த உலகம் நரகம்போல தோன்றும். இறைவன்மீது கோபம் ஏற்படும்.
இவைகள் எல்லாம் ஏன் ஏற்படுகின்றன?
-
இது விதி.
-
முக்தி என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது அனைத்து பற்றுகளையும் விட்டு விலகுவதாகும்.
நாம் முக்தியை நோக்கி செல்லசெல்ல நம்மைச்சார்ந்தவர்கள் நம்மைவிட்டு விலகுவார்கள்.
உலகிலுள்ள அனைத்தும் நம்மைவிட்டு விலகும்
உடல்கூட நமக்கு ஒத்துழைப்பு தராது.
இதை புரிந்துகொள்ள வேண்டும்.
-
முக்தி என்ற ஒரு லட்சியத்தை ஏற்றுக்கொண்டபின் அதனால் விளையும் பலன்களை ஏற்றுக்கொள்ள தயங்குவது ஏன்?
அனைத்தையும் விட்டு விலகுவதில் ஆனந்தம் காணவேண்டும்.
நாம் சிலவேளைகளில் முக்தியை விரும்பாமல் இருக்கலாம்.
ஆனாலும் விதி நம்மை முக்தியை நோக்கியே அழைத்துசெல்லும்.அதை தடுக்க முடிமாது.
 உலகத்தில் உள்ள அனைத்து அனுவங்களையும் பெற்றபின் உலகத்தின்மீது வைரக்கியம் ஏற்படுகிறது. 
அதாவது பற்றற்ற மனநிலை ஏற்படுகிறது.நாம் மீண்டும்மீண்டும் பற்றுவைக்க முயற்சி செய்தாலும் அதனால் பலன் கிடைக்காது.
-
ஒரு மனிதன் அனைத்து அனுபவங்களையும் பெற்றுவிட்டபின் இந்த உலகத்தைவிட்டு மட்டுமல்ல அனைத்து உலகத்தையும்விட்டு செல்ல வேண்டியதுதான். 
நல்லபடி ஆட்சிசெய்யும் அரசன் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கிறான்.பின்புகடைசி காலத்தில் அனைத்தையும் துறந்து பிச்சையேற்று வாழும் துறவியாக மாறுகிறார்.
-
ஒவ்வொரு மனிதனும் தன்னை அறியாமலே முக்தியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.அனைத்து அனுபவங்களையும் அனுபவித்து, வாழ்க்கையில் யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழும் ஒருவன் கடைசியில் முக்தியடைகிறான்.
முக்தியடைவதிலிருந்து அவனை யாரும் தடுக்க முடியாது.அப்படி தடுத்தால் இன்னொரு பிறவி பிறந்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறான்.
....
மகான்கள் இதை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மனிதகுலத்தின் நன்மைக்காக மீண்டும் பிறக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சில அனுபவங்களை அனுபவிப்பதில்லை. 
முக்தியமாக உடல்உறவு வைத்துக்கொள்வதில்லை.
சிலர் மனைவியுடன் வாழ்ந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. 
சிலர் குழந்தையைவிட்டு விலகி அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் இருப்பார்கள்.
அல்லது ஏதாவது ஒரு அனுபவத்தை அனுபவிக்காமல் இருப்பார்கள்.
அதன் காரணமாக உலகத்தின்மீது சிறிது பற்று இருக்கும்.
எதுவரை மனிதன் அனைத்து அனுபவங்களையும் பெறவில்லையோ அதுவரை இந்த உலகம் அவனைக் கைவிடாது.
மீண்டும் பிறவி ஏற்படும்.
--
ஆனால் இதற்கு விதிவிலக்கும் உண்டு. 
குரு அல்லது இறைவனின் அருள் இருந்தால் அனைத்தும் மாற்றியமைக்கப்படும்.
மடங்களில் வாழும் துறவிகள் குருவின் அருளாலேயே முக்தியடைகிறார்கள்.
காசியில் சென்று கடைசி காலத்தை கழிப்பவர்கள் சிவனின் அருளால் முக்திபெறுகிறார்கள்.
இன்னும் பல உதாரணங்கள் உள்ளன...
இவர்கள் அனைத்து அனுபவங்களையும் அனுபவிக்கத்தேவையில்லை
---🕉️

No comments:

Post a Comment