Friday, November 20, 2020

சிவனை வணங்கினால் துன்பமா துயரமா?

ௐௐௐௐௐௐௐௐௐௐ
              சிவ சிவ !
             ~~~~~~~~~
     *துன்பங்களா ?*
 ******  *சிவனடியார் களுக்கா ?*
 ***********************

                    *சிவனடியார்கள் பலர் தம் வாழ்வியல் துன்பங்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலும் , பொதுத் தலங்களிலும் , பல பதிவுகள் இட்டு வருகிறார்கள் ! சிலர் நான் இவ்வாறெல்லாம் வணங்குகிறேன்  ; எனக்கு இப்படித் துன்பமிழைத்து விட்டாரே !  , என ,இறைவனையே தாழ்த்திப் பதிவுகள் செய்ததைக் கண்டு அதிர்ச்சியே ஏற்பட்டது !*
      *இறைவன்பால் இவர்களுக்கு எந்த அளவுக்கு , அன்பின்மையும் , மரியாதை இன்மையும் உள்ளன !*
      *எங்ஙனம்  ஆளும் அருள் ? என்றே எண்ண ஓட்டங்கள் மேலிட்டன !*
      *உலக வாழ்க்கை இன்பமயமானது என்று தவறாக நம்புவதன் விளைவே இது !*
   *அடுத்து /தீதும் நன்றும் பிறன் தர வாரா / ,என்ற மொழியை உணராதது , & நமக்குள் இருக்கும் இழி குணங்களையும் , ஆராய்ந்து உணராதது !*
     *சிவ பெருமான் ஒருவரே கடவுள் என உணராதது !*
     *காமம் , குரேதம் , லோபம் , மோகம் , மதம் , மாற்சர்யம் எனற உயிரறிவைப் பற்றி நிற்கும்  அறு வகைப் பகைகளை வெல்லாதது !*
*இவை இறையன்பைப் பெறத் தடையாக நிற்பவையுங் கூட !*
      *இறைவனைத் தவிர இன்பமோ துன்பமோ அளிக்க வல்லார் யார் ?*
  *~ நலனொடு தீங்கும் தான் அலது அன்றி ~01 - 42 -04*
 *~நல் வினையும் தீ வினையும் ஆனான் தன்னை ~06-11-02*
      *இறைவனாரே விதித்து , உயிர்களைப் பக்குவப் படுத்தி தன் கழல் கூடச் செய்யும் வகையில் ஏற்றி அனுப்பியத் துன்ப வினைகளை யாரே உணரவல்லார் ?* 
  *~ என்றும் இடரே துன்பம் ஈவானாம் ~ 06-15-03  என்பர் திரு நாவுக்கரசு பெருமான் !*
     *கொடுத்தல் , ஈதல் என்ற சொற் பொருள் வேறுபாடுகளை ஆய்ந்து உணர வேண்டும் !*
*இறைவனே விதித்தவாறு வரக்கூடியத் துன்பங்களை விளைவிக்கும் விதியையே வெல்வதற்கு அருளாளர்கள் எவ்வளவோ வழிகளை அருளியுள்ளார்களே !* 
    *எத்தனை பேர் கற்றுத் தெளிந்து ,உணர்ந்து , உலகியல் பார்வையை மாற்றிக் கொண்டு இறைவனை நோக்கிப் பயணிக்கிறோம் ?*
     *விதியை வெல்ல முடியுமா ?*
   *அது எப்படி ?*
    *மார்க் கண்டேயருக்குப் பதினாறு வயது என நிர்ணயித்தது யார் ?*
      *ஓ ..... !  சிவ பெருமான் தான் !*
      *எம தர்மனின் கடமை என்ன ?*
        *சிவ பெருமான் விதித்த ஆயுள் எல்லை முடியும் போது , உயிரை உடலிலிருந்து பிரித்துக் கொண்டுச் செல்வதுதான் !*
     *மார்க் கண்டேயர் என்ன செய்தார் ?*
     *இறைவன் கழலை சரணடைந்துப் பற்றிப் பிடித்தார் !*
      *எமன் அவர் உயிரைப் பற்ற முனைந்தது தவறா ?*
       *இறைவன் விதித்த விதிப்படி ,திருமால் , பிரமன் , இந்திராதி தேவர்களானாலும் , இறைவன் விதித்த ஆயுள் எல்லை முடியுமாயின் அவர்கள் தாங்கிய உடல்களிலிருந்து உயிர்களைப் பிரித்துப் பற்றிச் செல்லத்தான் வேண்டும் !*
       *கடமையில் தவறினால் ?*
        *உடன் பதவி பறி போய்விடும் ! தண்டனைக்கும் ஆளாக நேரிடும் !*
   *மீண்டும் அதே வினா !*
   *மாரக்கண்டேயர் உயிரைப் பற்றிச் செல்ல எமன் முயன்றது சரியா தவறா ?*
    *ம்...... சரி என்றே தோன்றுகிறது !*
     *ஆனாலும் இறைவன் ஏன் அவரைச் சினந்து ,  கொன்று , மார்க்கண்டேயரை என்றும் சிரஞ்சீவியாக ( எல்லையில்லா வாழ் நாட்களுடன் ) வாழ அருள் கொடுத்தார் ?*
       *நீங்களே சொல்லுங்களேன் !*
      *விளக்கத்தை என்னிடமே கோரியதற்கு நன்றி !*
       *மார்க் கண்டேயர் ஒரு தவ சீலர் !*
       *சிவ பெருமான் மட்டுமே ஒரே கடவுள் எனத் தெளிந்தவர் !*
  *அறு பகைகளை வென்றவர் !*
        *சிவ பெருமானிடம் சரணடைந்து தன் ஆயுளை நீடித்துக் கொள்ள முடியும் என்ற ஞானம் உடையவர் !*
       *இறைவனை நோக்கித் தவம் செய்தார் !*
 *பிடித்தார் ! இறைவன் கழல்களையே பற்றிப் பிடித்தார் !* *தன்னை இறைவனிடம் முழுவதுமாக ஒப்படைத்தார் !*
      *அவரது ஆன்ம அறிவில் சிவத்தின் கழலைப் பற்றியதன்றி வேறு எந்த நினைவோட்டமும் இல்லை !*
      *சிவமே நிர்ணயித்த விதியை அவரே மாற்ற வேண்டியதாயிற்று !*
   *அது சரி !  தன் கடமையைச் செய்த எமனை ஏன் உதைத்துக் கொல்ல வேண்டும் ?*
     *அது இறைவனே விதித்த ,தர்மத்துக்கும் , நியதிகளுக்கும் முரண்படுகிறதே ?*
      *இது உலக உயிர்களுக்கு மெய்யடியார்கள் பெருமையை உணர்த்தி , இறைவனால் நம்மைப் பக்குவப் படுத்தும் ,கருணையே காரணமாக , விதிக்கப்பட்ட விதியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என உணர்த்த இறைவனே அரங்கேற்றிய ஞான நாடகமையா !*
     *தண்டனைக்கு உள்ளாகத் தக்க வகையில் எமன் செய்த தவறுதான் என்ன ?*
     *மார்கண்டேயர் ஒரு மெய்யடியார் !*
     *இவர் அவரைப் பிடிக்கச் சென்ற போது , அவர் சிவ பூசையில் ஒன்றி சிவ மயமாகவே இருந்தார் !*
      *இறைவனிடம் தன்னை முற்றொப்படைப்பு ( சரணாகதி ) செய்த நிலை !*
     *எமன் கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும் !*
      *இறைவனிடம் தன் இக்கட்டான சூழலை எடுத்துச் சொல்லித் தக்கவாறு வழி நடத்துமாறு மன்றாடி இருக்க வேண்டும் !*
     *ஆனால் இவன் என்ன பெரியவனோ என்ற ஆத்திரமே ஓங்கியது !*
       *மெய்யடியார் என்றத் தகுதி பற்றிய சிந்தனையே இல்லை !*
     *தவறிழைத்தான் ; தண்டிக்கப் பட்டான் !*
      *இந்த வரலாறு  என்ன உணர்த்துகிறது ?*
        *தூய மனத்துடன் இறைவனை உள்ளத்தில் ஏற்றி , இறைவனைத் தவிர அடைக்கலம் புகத் தக்க இடம் இல்லை என்ற உறுதி இருந்தால் , & பெருமானே விதித்த விதியையே ,அந்தப் பெருமானின் துணை கொண்டே , வெல்லலாம் என்ற விடையே கிடைக்கிறது !அல்லவா ?*
      *இந்த வரலாற்றை ,  இறைவன் விதித்தபடி , உயிர்களுக்கு காலம் அறிந்து , வினைகளை ஊட்ட நியமிக்கப் பட்ட , நட்சத்திரங்களும் , கோள்களும் ,இதர தெய்வங்களும் அறிவார்களா ?*
     *என்ன ஐயம் இது ?*
     *ஆம் ! நாமே அறிந்திருக்கும் போது அவர்களும் அறிந்திருப்பார்களா என்ற ஐயம் ஏன்  ?*
      *ஆக , வாழ்வியல் துன்பம் ஏற்படும் நிலையில் ,*
*இறைவனையே தூய உள்ளத்துடன் சரணடைந்தால் , இவர்கள் துன்பத்தை ஊட்டுவார்களா ?*
      *இந்த உண்மையை உலகோருக்குத் தெளிவு படுத்தவே , திரு ஞான சம்பந்தப் பெருமான் இறைவன் நிர்ணயித்த விதியை , அவனது பாதங்களைச் சரணடைந்து , அவன் பெருமைகளை ஞானாசிரியர்கள் வெளிப் படுத்தி அருளியவற்றை எல்லாம் உணர்ந்து ,அவன் நம் பொருட்டு அருளிய அருட் திருமேனியையும் , கொண்ட அருட் கோலங்களையும் , உச்சி முதல் பாதம் வரை , மனத்துட்புகச் செய்ய வல்லோமானால் ,*
*கோள்கள் தொடங்கி வினைகளைக் ,*
*காலமறிந்து ஊட்ட நிர்ணயிக்கப் பட்டத் தெய்வங்கள் , அந்தந்த மெய்யடியார்களைப் பொறுத்து  ,  துன்ப வினைகளைச் சேர்க்காமல் நல் ஆசி வழங்கிச் செல்வர் என்றே , வேயுறு தோளி பங்கன் என்ற திருப்பதிகத்தில் ஆணையிட்டு பகர்ந்துள்ளார் ?*
     *ஆணையிட்டா ? ஆம் !*
*ஆணையிட்டே தான் !*
     *இப்போது அறிந்து கொண்டோமையா !*
       *இவ்வாறு ,
 தான் ஆணையிட்டு அருளியதைக் கூட எல்லா உயிர்களும் பற்ற வல்லவையல்ல !* ;
 *நம்பிக்கை இன்மையாலும் ,*
*(ஏற்காமல் விலகித் துன்பத்தையே அடைவர் என்று , முக்காலம் உணர்ந்த ஞானியான அவர் ,பின்னால் நிகழ உள்ள வரலாற்று நிகழ்வை அத் திருப் பதிகப் பத்தாவது பாடலில் இடம் பெறச் செய்தார் !*
     *என்ன ஐயா அது ?*
*" புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திரு நீறு செம்மை திடமே !"*
   *என்ற மெய்த் திருவாக்குதான் !*
      *மேலும் விளக்கினால் நல்லது !*
      *இந்தத் திருப்பதிகம் எங்கு எப்போது அருளப்பட்டது ?*
      *திரு மறைக்காட்டில்  ,*
*ஆலவாய் நோக்கி ,அமணர்கள் தீங்கை நீக்கத் திரு ஞான சம்பந்தர் அங்கு செல்லத் தான் முடிவு செய்ததை அப்பர் பெருமானிடம் சொன்னார் !*
     *அமணர்கள் தீங்கை எண்ணி , அஞ்சி பல காரணங்களைச் சொல்லித் தடுத்து , மேலும் கோள்கள் தானும் தீய நிலையில் உள்ளன! ஆகவே தாங்கள் மதுரை செல்லச் சம்மதிக்க மாட்டேன் என்று அப்பர் பெருமான் மறுத்தபோது ,  அந் நிலையில் , திரு ஞானசம்பந்தர் அருளியது இத் திருப் பதிகம் !*
      *நன்று ! திரு மறைக்காட்டிலிருந்து மதுரைக்கு பல்லக்கில் செல்ல , அக்காலத்த்தில் எத்தனை மாதம் ஆகியிருக்கும் ?*
     *காடு ,மலை , காட்டாறுகள் , நதிகளையெல்லாம் கடந்து செல்லக் குறைந்தது இரண்டு மாதம் ஆகியிருக்கலாம் !*
     *அங்கு சென்று அமணர்களை சந்திக்கப் போகிறாரா ?* ; *அவர்களிடம் வாதம் செய்யப் போகிறாரா ?;*
    *அப்படியே வாதம் செய்யும் சூழல் ஏற்படினும் , இரு சமயக் கோட்பாடுகளின் மீதா அல்லது மந்திர தந்திரங்கள் மூலமாகவா , ஆலவாய் அண்ணல் திரு நீற்றின் ஆற்றலாலா ?* *என்பவற்றை எப்படி அறிந்திருக்க முடியும் ?*
     *ஆம் ! இயலாது தான் !*
    *அறிக !*
  *வேயுறு தோளி பங்கன் பாடல்கள் முழுதும் இறைவனாரே ,திரு ஞான சம்பந்தர் ஆன்ம அறிவில் மேலோங்கி நின்று அருளியவை என்று !*
     *எவ்வாறு ?*
 *இந்த மெய்த் திருவாக்கு பின்னர் வரலாற்று நிகழ்வாக நிறைவேறிற்று !*
     *திரு நீற்றுத் திருப் பதிகத்தைப் பாடியே , ஆலவாய் அரனின் திருநீற்றைப் பாண்டியனின் வயிற்றில் தடவி , அவன் வெப்பு நோயையே அகற்றிக் குளிர்வித்து , அவனைத் தெளிவித்து ,*
*அமணர்களை வாதில் வென்றது வரலாறு !*
    *அகச் சான்று காண்க !*
     *~ ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் / போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் / தேற்றித் தென்னன் உடலுற்றத் தீப் பிணியாயின தீரச் / சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே ~02-66-11*
     *தென்னன் ஆகியப் பாண்டியனின் அஞ்ஞானத்தைத் தெளிவித்து , ஆலவாய் ஈசனின் திரு நீற்றினை அவன் மீது தடவி ,அவனுக்கு உற்றத் தீப்பிணியைத் தீர்த்த வரலாறு திரு ஞான சம்பந்தர் வாக்கினாலேயே அகச் சான்றாக விளங்கி நிற்கிறது !*
    *இதிலிருந்து என்ன உண்மை நிறுவப் பட்டது ?*
      *வேயுறு தோளி பங்கன் என எடுத்தத் திருப் பதிகத்தில் இடம் பெற்ற  வாக்கு , பின் வரலாற்று உண்மையானது தெரிகிறது !*
    *அவ்வளவுதானா ?*
*அவை இறை வாக்குகளே என உணர்ந்து கொண்டேன் !*
*அது மட்டும் தானா ? ; கொஞ்சம் மாற்றி யோசி !*
     *ம் ம்  .... ஆ ... தெளிந்தேன் !*
      *இத் திருப்பதிகப் பத்தாவது பாடலில் அருளிய மெய்த் திருவாக்கே , பின் வரலாற்று நிகழ்வு ஆயினமையால் , ஏனைய பாடல்களிலும் ,* *காணும் ,*
*இறைவனின் , அருட் திரு மேனியையும் ,*
*கொண்ட கோலங்களையும் , என் ஆன்ம அறிவில் நிறைக்க வல்லவனாயின் , கோள்கள் நட்சத்திரங்கள் , முதலான வினைகளை ஊட்டித் துன்புறுத்த வல்ல தெய்வங்களும் , பிறவும் , இறைவனாரே நிர்ணயித்தத் தீ வினைகளை , எனக்கு ஊட்டாமல் ,  நல் ஆசி கூறியே விலகுவர் என்பதை அறிந்து கொண்டேன்  !*

     *ஆக இறைவன் விதித்த விதியை வெல்ல முடிமா ?*
      *முடியும் ஐயா !*
     *சரி ! என்ன செய்யப் போகிறாய் ?* 
      *இறைவனிடம் சரண் புகுவேன் ; திருமுறைகளையும் ,*
*சாத்திர ,சிவ புராணங்களையும் , படித்துத் தெளிந்து ,உணர்ந்து , அவரை முற்றிலும் உணர்வேன் !*
 *அவரது அருட் திருமேனியையும் , கொண்ட கோலங்களையும் , சிந்தையில் நிறைப்பேன் !*
     *அடியார் கோலம் கொள்வேன் !*
    *அடியார் கூட்டுறவிலேயே வாழ்வேன் ! சிவ ஞான விளக்கம் செய்யும்  வகுப்புகளில் சேர்ந்து , இறைவனின் பொருள் சேர் புகழை எல்லாம் கேட்டு ,இருள் சேர் இரு வினைகளையும் ஓட்டி விடுவேன் !*
      *இது போதும் இனி இன்பமே எந் நாளும் துன்பமே இல்லை !*
    நன்றி 

No comments:

Post a Comment