Sunday, November 8, 2020

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருகிறது.



#குடும்பத்தில்  #ஏன்  #சண்டை  #சச்சரவு #வருகிறது ?


          நாம்  குடும்பத்தில்  உள்ளவர்களிடம்   தான்  உரிமையுடன்  உணவு  கேட்போம். 

          அதிலும்  நைசாக  மொரு  மொரு  என்று  தோசை சுட்டு  கொடு  அம்மா   என்று  கேட்போம்.

          பூரி  சுட்டு கொடு ,   வத்தல்  சுட்டு  கொடு ,   என்று  எதாவது  கேட்போம்.   இப்படி  நாம்  கேட்க  காரணம்  நம்ம  அம்மா தானே  என்ற  உரிமையில்  கேட்போம். 

           அவர்களும்  சுட்டு  தருவார்கள்.   ஆனால்  பரிமாரும்  போது  தான்  நம்ம  கிரகம்  வேலை செய்ய  ஆரம்பிக்கும். 

          அதாவது  நமது  ஜாதகத்தில்  நவாம்ச  கட்டத்தில்  லக்கினத்தில்  இருந்து    6, 8, 12,  என்கிற  மறைவு ஸ்தானத்தில்    கிரகம்   இருந்தால்;  அந்த  கிரகத்தின்  தசையும்  தற்போது  நடந்தால்   மற்றவர்கள்   நமது  சாப்பாட்டை  தடுப்பர்.  அல்லது  சாப்பாட்டு  விஷயத்தில்  நம்மை  திட்டுவர். 

             இப்படி  எதாவது  ஒரு  வகையில்  நாம்  சாப்பிடும்  போது  சண்டை  வரும். 

          பொங்கல்,  தீபாவளி,  என்று  எந்த  பண்டிகை  நாட்களிலும்   நிம்மதியாக  சாப்பிட முடியாது.   எதாவது  சண்டை  வரும். 

           இந்த   நவாம்ச  கிரகதோஷம்  வேலை செய்கிறது  என்ற  உண்மையே   நமக்கும்  தெரியாததால் ,   நாம்  குடும்பத்தில்  உள்ளவர்கள்  மீதும் ;
 குடும்பத்தில்  உள்ளவர்கள்  நம்மீதும்  கோவப்படுவர். 

          நாளடைவில்   அவர்கள்  உடன்  பினக்கு,   மனஸ்தாபம் ,  டெங்ஷன்,   மனக்கசப்பு,   வெறுப்பு,  எல்லாம்  உருவாகி  நிம்மதி  அற்ற  வாழ்க்கையாக  இருக்கும். 
           குடும்பத்தில்  உள்ளவர்கள்   நடந்த  சண்டையின்  போது  பேசிய  வார்த்தைகளை  தான்   நினைவில்  வைத்து  கொள்வார்களே   தவிர   இந்த  சண்டை   எந்த  தோஷத்தால்  வந்தது  என்று  அறிய மாட்டார்கள்.

         நம்மை  விதி என்ற  ஒன்று  இயக்குகிறது  என்பதை  மறந்து    நாம  ஏதோ கெட்டவர்கள்  போல எண்ணிக்கொண்டு    நம்மீது  பகையை  வளர்த்துக்  கொண்டே  செல்வார்கள் . 

          அதன்  விளைவு  பிற்காலத்தில்  நிரந்தர  பிரிவு  ஏற்படுகிறது. 

           எனவே  குடும்பம்  ஒற்றுமையாக  இருக்க  வேண்டும்  என்று  நீங்கள்  விரும்பினால்   உங்கள்  ஜாதகத்தில்  நவாம்ச  கட்டத்தில் லக்கினத்துக்கு  6, 8, 12,  என்கிற  மறைவு  ஸ்தானத்தில்  எதாவது  கிரகம்  இருக்கிறதா  என்று  பார்த்து  கொள்ளுங்கள்.   எந்த  கிரகமும்  இல்லை  என்றால்  நீங்கள்  அதிர்ஷ்ட சாலி.    உங்களுக்கு  எந்த  சண்டையும்  வராது. 

           அதுவே  6, 8, 12  இடங்களில்   எதாவது  கிரகம்  இருந்து விட்டால் ;   அந்த  கிரகத்தின்  தசை நடக்கும்  காலத்தில்  நா சுவையை  கட்டுபடுத்தி  கொள்ளுங்கள். 
          " நீங்கள்  சாப்பிடுவது  உங்கள்  விதிக்கு   பிடிக்காது " *

        எந்த  சுவையான  உணவையும்  செய்து  தரும் படி  வீட்டில்  உள்ளோர்  இடம்  கேட்காதீர்கள்.   மீறி  கேட்டு  வாங்கி   சாப்பிட்டால்   தேவை இல்லாத  சண்டை சச்சரவுகள்  வரும்.  விதியிடம்   கோவம் ஆவேசம்   என்ற  ஆயுதம்  இருக்கிறது. 
           அதை  நம்மீதும்  நம்  அன்புக்குரிய  அம்மா , அப்பா,  சகோதர, சகோதரிகள்,  மனைவி , பிள்ளைகள்  மீது  அது  செலுத்தும்.   விளைவு   நம் கையை  கொண்டே  நம் கன்னை குத்தி கொண்டது  போல்  ஆகிவிடும்.

            தேவையில்லாத   வார்த்தைகள்  பேசி  மனஸ்தாபம்  ஏற்பட்டு   பிரிவினை  ஏற்படும்.     இதை  செய்விப்பது   நவாம்சத்தில்  6, 8, 12, உள்ள  கிரக தசை  விதி  ஆகும். 

          எனவே   நம்  விதியை  எவ்வாறு வெல்வது   எவ்வாறு  சண்டை சச்சரவு  இல்லாமல்  வாழ்வது  என்று   ஆராய்தோமானால்  சில  நடைமுறைகளை  கையாண்டாலே  போது  சண்டையை  தவிர்த்து  கொள்ளலாம்  என்று  அறிய  முடிகிறது. 

         நவாம்ச  கிரக தோஷம்  காலத்தில்  மட்டும்   குடும்பத்தில்  உள்ளவர்கள்  உடன்  சேர்ந்து  அமர்ந்து  சாப்பிடாதிர்கள். 

          தனியாக அமர்ந்து  போட்டதை  பிரசாதமாக  எண்ணி  சாப்பிட்டுவிட்டு  போங்க. 

         இப்படி செய்தால்  சண்டையும்  வராது  அன்பு  பாசத்தையும்  இழக்க மாட்டோம்.

            இந்த  ஜாதக உண்மைகள்   தெரியாமல்  கல்யாணம்  ஆனவர்கள்   தங்களுக்குள்  சண்டை போட்டு  கொண்டு  கடைசியில்  பிரிந்து  விடுகிறார்கள்.   டைவஸ்  ஆவதர்க்கு  இதுவே  முக்கிய  காரணம்  ஆகும். 

           திருமணம்  ஆனவர்கள்   தங்கள்  ஜாதகத்தில்    நவாம்சத்தில்   உள்ள   6, 8, 12 ல்   இருக்கிற   கிரகத்தின்  தசை நடந்து  முடியும்  வரை  மட்டும்  உணவை  வாய்  திறந்து  கேட்டு விடாதீர்கள்.

         நீங்களாகவே  சமையல் கட்டுக்கு  போங்க  இருக்கிறதை  எடுத்து  சாப்பிடுங்க.   ஏதும்  இல்லையா    எளிதாக  செய்ய கூடிய  உணவை  செய்து  சாப்பிட்டு விட்டு  பாத்திரத்தை  கழுவி வைத்து விட்டு  வந்துடுங்க.

            உறவுகள்   அன்பு , பாசம்,  மிக  முக்கியம்.   நம்ம  சாப்பாட்டு  தோஷத்தால்     அன்பு  பாசத்தை  இழந்து விட கூடாது. 

          இந்த  பிரச்சனை   காலத்துக்கும்  இருக்காது .   அந்த  குறிப்பிட்ட  கிரக காலம்  முடிந்ததும்   எல்லாம்   சரியாகிவிடும்.   

          எனவே  அந்த  குறிப்பிட்ட  காலத்தில்  மட்டும்   சில கட்டுபாடுகளை  நமக்கு  நாமே  போட்டு  கொண்டு   வாழ்ந்தால்   திருமண வாழ்கையை   மகிழ்ச்சியாக   நடத்த முடியும். 

         நாம்  விதியின்  இயக்க சிஸ்டத்தை  அறியாமல்  நம்ம இஷ்டத்திற்கு    கல்யாணம்  ஆன  ஜோரில்   இதை சுட்டு கொடு,   அதை சுட்டு கொடு   என்று  கேட்டு  வாங்கி  சாப்பிட்டால்  ;   பிறகு  நம்ம  ஜாதகம்   அதன்  வேலையை  காட்ட  ஆரம்பித்துவிடும்.

           சிறுவயதில்  நம்ம  பெற்றவர்கள்  ஆனாலும்  சரி ;    இளம்  வயதில்  வந்த  மனைவியானாலும்  சரி   எல்லோருமே  நமக்கு  பிடித்த  உணவை   செய்து  தர தான்   ஆசைபடுவர்.  பாசத்தின்  காரணமாக  செய்தும்  தருவர். 

          ஆனால்   ஜாதகத்தில்  உள்ள  இந்த  கோளாறு  காரணமாகவே   தான்   தொடர்ந்து  அவ்வாறு  ஒற்றுமையாக இருக்க  முடியாமல்    எதாவது  பிரச்சனை    உண்டாகி விடுகிறது .   

          நாம்  இந்த  தசை காலத்தில்  மட்டும்  பிடித்த  உணவை  கேட்காமல்,  போட்டதை தனியாக  அமர்ந்து  சாப்பிட்டு  வந்தால்   உறவுகள்  பிரிவினை  வராமலும் ;   சண்டை சச்சரவு வருராமலும்   தடுத்து  கொள்ள  முடியும்   என்ற  உண்மையை  நாம்  அனைவரும்     அறிவோமாக. 

         குறிப்பாக  இந்த  கால கட்டத்தில்  மட்டும்   கல்யாணம்,  ரிஷப்சன், வீடு கிரகபிரவேசம்,   போன்ற  பங்ஷன்களுக்கு   போகாதிங்க.   மீறி  போனால்  அங்கு  சாப்பிடாதிங்க.   

          நீங்கள்  சாப்பிட்டால்  உங்கள்  ரிலேஷன்  ஷிப்பை   முறிக்க  சண்டையை  உண்டாக்க   நவாம்ச விதி  எதாவது  சதி செய்யும்.  எனவே  அந்த குறிப்பிட்ட  காலம்  முடிந்த பிறகு  தான்  பங்ஷன்களில்   சாப்பிட  செல்ல வேண்டும்.  அப்போது  தான்  சண்டை சச்சரவு வராது.

          விதியை   இந்த  முறையில்   மதி கொண்டு  வென்று   ஒற்றுமையாக,  அன்பாக ,  பாசத்துடன்,   வாழ்வோம். 

          நம்  தலைவிதியிடம்  நாம்  தோற்று போக  கூடாது.   விதி  ஏன்  கோவத்தை  உருவாக்குகிரது  ;   ஏன்  சண்டை சச்சரவுகளை  உருவாக்குகிறது  என்ற  உண்மையை  அறிந்து  கொண்டோம்.

         எல்லாம்  நவாம்ச  6,8,12, கிரக தோஷத்தாலே  என்று  அறிந்து  கொண்டோம்.   இனி அந்த  காலகட்டத்தில்  எப்படி  நடந்து கொள்ள வேண்டும்  என்று  தெரிந்து  நடந்து  கொண்டால்  விதி  நம்மீது  அதன்  ஆயுதத்தை  பிரயோக படுத்தாது. 
நாமும்  நிம்மதியாக  வாழலாம். 

         இது தான்  பிராதத்த கர்மா,  ஆகாமிய கர்மா  என்று  சொல்லப்படுவது  ஆகும். 

                            

No comments:

Post a Comment