🌹இல்லற தர்மம்!🌹
🌹கட்டிய மனைவியை
கடைசி வரை
கண் கலங்காமல்
காப்பவன்
தவம் செய்ய தேவை இல்லை
🌹 இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது
🌹 அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்
🌹 96 தத்துவங்கள்
முடிவு பெறுவது
இருபத்தி ஒரு வயதிலே
🌹 அதன் பிறகே
அவனது
சொந்த
ஆன்ம கர்மா
செயலில் இறங்கும்.
🌹 சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது
சக்தியோடு
துணை சேர வேண்டும்.
சிரசு ஏற பல வழி
🌹 தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
இன்னும்
எத்தனையோ மூலம்
வழி உள்ளது
சிரசு ஏற.
🌹 ஆனால்
சிறந்த மூலம்
இல்லற தர்மம்.
🌹 சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது
🌹 சக்தி மாறி
சிவம் சேர்ந்தாலே
பிறவியே சிக்கலே
🌹 மனம் பொறுத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை
🌹 ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.
🌹 அந்த சக்தி யோடு
சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்
🌹 சிவ சக்தி இடையே
ஊடலும் கூடலூம்
உற்சாகம் தானே......!!!
🌹 ஆனால்
சக்தியின் கண்ணீருக்கு
சிவம் காரணமானால்
அதை விட
கொடிய கர்மா
உலகில் இல்லை
🌹 ஒருவன்
வாழ்வை ஜெயிக்க
ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது உண்மையே
🌹 ஆனால்
உறவுகளை கொண்டே
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்க வும்
ஒரு வழி உள்ளது
உலகம் அறியாதது.
🌹 சொந்தம் என்பது
பழைய பாக்கி என
அறிந்தவனுக்கு
சொந்தம் சுமை இல்லை.
🌹 நட்பு என்பது
பழைய பகை என்பதை
பண்போடு அறிந்தவணுக்கு
பதற்றம் இல்லை
🌹 எதிரி என்பவன்
தனது கர்மாவின்
தார்மீக கணக்கே என
தன்மை யோடு உணர்ந்தவனுக்கு
எதிரி
எதிரி இல்லையே...
🌹 உனது எதிரியும் நீயே!
🌹 உனது செயலே
கர்மா ஆகி
அந்த கர்மாவே
நீ எதிரி என நினைக்கும்
ஒரு உயிருள்ள சடலத்தை
உனக்கு எதிராக
பயன்படுத்துகிறது என நீ
உணரும் போது...
🌹 உன் எதிரி முகத்தில
உனது கர்மா
உனது கண்களுக்கு தெரிய வந்தால்...
🌹 எதிரி
உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை!
🌹 உன்னை
உடனிருந்தே கொல்லும்
உறவும்
உன்னோடு பிறக்கும்
உனது
பழைய கணக்கிலே!
🌹 பழைய கணக்கு புரிந்தால்
பந்த பாசம்
சகோதரத்துவம் மீது
பற்று அற்ற பற்று வைத்து
பிறவி கடமை வெல்லலாம்.
🌹 கர்மாவின் கணக்கு புரிந்தால்
உனது பக்கத்தில்
சரி பாதி அமரும்
மனைவி
யார் என்றும் புரியும்.
🌹 தாய் தந்தையை
அன்போடு
பூஜிப்பவன்
தந்தை வழி
தாய் வழி
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.
🌹 உறவுகளுக்கு
அவர்கள் தரும் இன்னல்கள்
பொறுத்து
உபகாரமாக உதவி வந்தால்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உனது
ஏழு ஜென்ம
சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.
🌹 கோயில் போனாலோ
மகா குளத்தில்
குளித்தாலோ
ஒன்னும் மாறாது!
🌹 சிறு இன்பம் மட்டும்
சிறிது காலம் கிடைக்கும்
அவ்வளவே.
🌹 ஆனால், ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால்
பிறவி பிணி
மொத்தமாக தீரும்
அது மனைவியே.
🌹 மனைவியை
மகிழ்ச்சியாக வைப்பது
உலகிலேயே
சிரமம் மட்டும் அல்ல,
அது தான் உலகிலேயே சிறந்த
தவம்!?
🌹 தவம் என்பது
சாமாண்யன்களுக்கு சிரமமே!!
🌹 கட்டிய மனைவியை யும் உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும்
உளமாற நேசித்து
உன்னதமாக
உனது வாழ்வை
ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால்
அதுவே உலகின் சிறந்த தர்மம்
சிறந்த தவம்!
🌹 தாய் தந்தையை
வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்க.
🌹 உறவுகளை மதித்தால்
கிரக தோஷம் நீங்க
திருவண்ணாமலை
இடைக்காடரை
தேட தேவை இல்லை
நவ கிரகமும்
சுற்ற தேவை இல்லை.
🌹 மனைவியை
பெற்ற பிள்ளையை நேசித்தால்,
அவர்களை
ஆனந்தமாக வைத்தால்,
கர்ம விமோஜனம் தேட அகத்தீசனை தேடி பாபநாசம்
போக தேவை இல்லை.
🌹 இதற்கு தான்
இல்லற வாழ்க்கை அமைத்தான்
நமது முப்பாட்டன்
ஆதி யோக வம்சம்.
🌹 மனைவி அழும் வீடே
நரகம்.
🌹 மனைவி சிரிக்கும் வீடே பிரபஞ்ச சொர்க்கம்.
🌹 சக்தி உணர்ந்தாலே மட்டுமே
சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!
No comments:
Post a Comment