🙏🏻
பெருமாள் கோவிலில் , நவகிரக
சன்னதி அமைக்கப் படுவதில்லையே ஏன்?
பெருமாள் அல்லது திருமால் மூன்றடிகளில் உலகை அளந்தவர் . அதனால் அவருக்குள்ளேயே உலகம் மட்டும் அல்லாமல் அண்ட சராச்சரங்களும் அனைத்து கிரகங்களும் , உலகங்களும் அடக்கம் .
பெருமாளை கும்பிட்டாலேயே நவக்கிரகங்களையும் சேர்த்துக் கும்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஸ்ரீமன் நாராயணனை வணங்கும் பக்தர்களின் நம்பிக்கை .
அப்படி இருக்க தனியாக ஏன் ஒரு நவகிரக சந்நிதி வைத்து பராமரிக்க வேண்டும் என்பது ஸ்ரீமன் நாராயணனை வணங்கும் பக்தர்களின் எண்ணம். அதனால் தான் திருமால் கோயிலுக்குள் நவக்கிரகங்கள் இல்லை .
மேலும் , திருமால் கோயிலில் திருமால் தான் சுப்பீரியர் பவர். ஸ்ரீமன் நாராயணனை வணங்கும் பக்தர்களை பொறுத்தவரையில் ஸ்ரீமன் நாராயணனே சகலமுமாவார் .
தவிர ,
ராமாவதாரம் ( சூரியன் ) ,
கிருஷ்ணா வதாரம் ( சந்திரன் ) ,
நரசிம்மவதாரம் ( செவ்வாய் ) ,
கல்கியவதாரம் ( புதன் ) ,
வாமனவதாரம் ( குரு ) ,
பரசுராமாவதாரம் ( சுக்ரன் ) ,
கூர்மவதாரம் ( சனி ) ,
மச்சாவதாரம் ( கேது )
வராகவதாரம் ( ராகு ) ,
பலராமவதாரம் ( குளிகன் )
என்று பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது .
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன .
அவை ..
ஸ்ரீவைகுண்டம் ( சூரிய ஸ்தலம் ) , வரகுணமங்கை -நத்தம் ( சந்திரன் ஸ்தலம் ) , திருக்கோளூர் ( செவ்வாய் ஸ்தலம் ) , திருப்புளியங்குடி ( புதன் ஸ்தலம் ) , ஆழ்வார்திருநகரி ( குரு ஸ்தலம் ) , தென்திருப்பேரை ( சுக்ரன் ஸ்தலம் ) , பெருங்குளம் , ( சனி ஸ்தலம் ) , இரட்டைத் திருப்பதி- ( தேவர்பிரான் ) ( ராகு ஸ்தலம் ) இரட்டைத் திருப்பதி ( அரவிந்த லோசனர் ) - கேது ஸ்தலமாக கருதப்படுகிறது .
இப்படியாக அனைத்துமாகி நிற்பவனே நம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணன்.
எனவேதான், நம் பெருமாள் கோவிலில் , நவகிரக சன்னதி அமைக்கப் படுவதில்லை !
ॐ 🙏🏻
No comments:
Post a Comment