Sunday, November 15, 2020

ராகு ஜாதகத்தில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பரிகாரம்

ராகு கிரஹ தோஷ நிவாரணப் பரிகாரங்கள்!

ஜனன ஜாதகத்தில் பாதகமான ஸ்தானங்களில் ராகுபகவான் இடம் பெற்றிருந்தால் அது சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்பை விட அதிகமான சங்கடங்களைத் தரும்.உதாரணமாக நோய்,எதிரிகளால் தொல்லை,மாந்திரீக மற்றும் அமானுஷ்ய சக்திகளால் பாதிப்பு ஏற்படலாம்.அப்படி அமையப் பெற்றவர்கள் ராகுபகவானின் தசை மற்றும் புத்தி நடைபெறும் காலங்களில் கீழ்க்கண்ட பரிகாரங்களில் ஏதாவது ஒன்றைச் செய்து வரப் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.

1.வீட்டில் கருப்பு நிற நாய் வளர்க்கலாம்.அல்லது கருப்பு நிற நாய்க்குத்  தினமும்  உணவளிக்கலாம்.கருப்பு நிற நாய் இல்லை என்றால் சிகப்பு தவிர மற்ற நிறமுள்ள நாய் வளர்க்கலாம் அல்லது உணவளிக்கலாம்.

2.நிலக்கரி கொஞ்சம் வாங்கி அதை தலையைச் சுற்றி ஆறு அல்லது கடலில் போடத் தொழிலில் தொடர்ந்த நஷ்டம்,பிரச்சனைகள் ,அரசாங்கத் தொல்லைகள் தீரும்.

3.சம சதுர வடிவ வெள்ளித்தாயத்தைக் கழுத்தல் அணிய நன்மை உண்டாகும்.
4.ஒரு தேங்காயைத் தலையைச் சுற்றி ஓடும் நீரில் போடப் பாதிப்புகள் குறையும்.

5.  கடுகு எண்ணையைத் தானமாக அளிக்கலாம்.

6.மஞ்சள் சந்தனம் அல்லது குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றில் அணிந்து வரலாம்.

7.இரவில் பார்லி அரிசியைப் பாலில் ஊறவைத்துக் காலையில் ஓடும் நீரில் போடலாம் அல்லது பறவைகளுக்கு உணவாக அளிக்கலாம்.

8.சாதுக்கள் ,மகான்களுக்கு வெண்ணிறப் போர்வை தானமாக அளிக்கலாம்.

9.மாதாந்திர மளிகைப் பொருட்கள் வாங்கும் பொழுது கொஞ்சம் குங்குமப்பூ அல்லது குங்குமம் வாங்குவது அதிர்ஷ்டம் தரும்.
 
 
மேலே சொன்னவை பொதுவானது.மேலும்,அன்பர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் 12 பாவங்களில் எங்கெங்கு இருந்தால் என்ன பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை தரும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராகு கிரஹ தோஷ நிவாரண பரிகாரங்கள்

                     

லக்னம் - கழுத்தில் வெள்ளி செயின் அணிவது நல்லது.

 
2 ஆம் பாவம் - ஓட்டை அல்லது பழுதில்லாத வெள்ளி உருண்டை ஒன்றை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
3 ஆம் பாவம் - வெள்ளியில் சிறு பெட்டி போல் செய்து அதில் கொஞ்சம் அக்ஷதை வைத்துச் சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
4 ஆம் பாவம்- 4 கிலோ அல்லது 400 கிராம் பார்லி அரிசி வாங்கி அதை ஓடும் நீரில் போடவும். 

 
5 ஆம் பாவம் - மனைவி /கணவன் தவிர பிறரோடு தவறான தொடர்பைத் தவிர்க்கவும்.வெள்ளியில் யானை உருவத்தை டாலராகவோ அல்லது  பிம்பமாகவோ செய்து கழுத்தில் அணியலாம் அல்லது சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம்.

 
6 ஆம் பாவம் -   ஈயத்தில் திக்காக சிறிய உருண்டை ஒன்று செய்து அதை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
7 ஆம் பாவம் - சரஸ்வதி வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்.

 
8 ஆம் பாவம் -  கொஞ்சம் பெருஞ்சீரகத்தைக் வெள்ளைத் துணியில் முடிந்து உறங்கும் பொழுது தலையணைக்கடியில் வைத்து உறங்கி வரலாம்.

9 ஆம் பாவம் - நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.நெற்றியில் எப்போதும் குங்குமம் இருப்பது நல்லது.  

 
10 ஆம் பாவம்  - வெள்ளை நிறத்தில் தொப்பி,ஹெல்மெட் ,தலைப்பாகை அணிவது பாதிப்பைக் குறைப்பதோடு அதிர்ஷ்டம் தரும்.நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் தொப்பி,ஹெல்மெட் ,தலைப்பாகை அணியக் கூடாது.

 
11 ஆம் பாவம் - வெள்ளி டம்ளரில் நீர் அருந்தலாம் .

 
12 ஆம் பாவம் - கொஞ்சம் பாசிப்பயிரை வெள்ளைத் துணியில் முடிந்து உறங்கும்  பொழுது தலையணைக்கடியில் வைத்து உறங்கி வரலாம்.  
                      
                         
  வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

No comments:

Post a Comment