Thursday, November 12, 2020

எம தீபம் என்றால் என்ன?

*🪔 'யம தீபம்" என்பது என்ன.? எப்பொழுது, எதற்காக இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும்.?*

*தீபாவளிக்கு முதல் நாள் மாலையில் இந்த யெமதீபம் ஏற்ற வேண்டும். பெரிய 

🪔அகல்விளக்கு ஒன்றில், முழுவதுமாக நல்லெண்ணை ஊற்றி திரியிட்டு 🪔தீபம் ஏற்ற வேண்டும்.*

*உங்கள் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில், மிக உயரமாக எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யெமதீபத்தை தென் திசை நோக்கி வைக்க வேண்டும். இதனால் எமபயம்& மரண பயம் நீங்கும்.*

*தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யெம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.*

*மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ருக்கள் மேலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.*

*அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வருபவர்கள், தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம்.*

*சாஸ்திரங்களும், தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும்.!' என்கின்றன. அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவதுதான் "யெம தீபம்" என்பது.*

*எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம்.*

 *இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும் போதே தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மரும் மகிழ்ச்சி அடைவார் என்பது ஐதீகம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.!*

 *யெம தீபமானது  துர்மரணம் அடைந்தவர் களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். என்றாலும்.,*
 
*எவரேனும் இறந்திருந்தால் மட்டுமே யெம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.*

 
*யெம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து,     "யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணை புரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.*

*யெம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே அமையும். அத்தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும். அன்றைக்கு மாலையில் யெம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.*
  
*புராணம்:-*
   
*சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.*

 
*இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார். ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவின் ஆயுளைத் தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான எமனும்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. ஜோதிடத்தில் எட்டாம் வீட்டை ஆயுள் ஸ்தானம் என்றும் சனீஸ்வர பகவானை ஆயுள் காரகன் என்றும் குறிப்பிடுவார்கள். எட்டாம் வீட்டில் சனீஸ்வரர் நின்றுவிட்டால் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளை பெற்றிடுவார். சனீஸ்வரர் மட்டுமே "காரஹோபாவ நாஸ்தி" எனும் தோஷத்திலிருந்து விலக்கு பெறுகிறார்.* 

*கதை:-*

*சூரியனின் பிள்ளை எமன், பெண் யமுனா. இருவரும் பாசப் பிணைப்புடன் உள்ளவர்கள். ஒருசமயம் யமுனா தன் சகோதரன் எமனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து படைத்தாள்.!*

*தன் சகோதரியைக் காண வந்த எமன் ஏகப்பட்ட துணிமணிகள், நகைகள், பட்சணங்களை சீர்வரிசையாகக் கொண்டு வந்து கொடுத்தான்.*

*யமுனா தன் அண்ணனுக்கு தன் கையாலே பலவித பட்சணம் தயாரித்து சாப்பிட வைத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த எமன் தனது தங்கையை "தீர்க்க சுமங்கலி பவ'' என்று சொல்லி வாழ்த்தினான்.*

*இதனால் தான் தனது கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள். இப்படி பாசமுடன் பழகும் உடன்பிறப்புகளுக்கு எமபயம் என்றைக்குமே இருக்காது.*

*இப்படியாக ஒரு வரலாறு கூறுகிறது.*

*அது முதல் சகோதரிகளுக்கு தீபாவளி அன்று பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்கும் பழக்கம் உருவானது. எமத்வீதியா நன்னாளில் சகோதரனை சந்தோஷப் படுத்தும் சகோதரிகளுக்கு விதவைக் கோலம் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.!*

*யாரெல்லாம் யெம தீபம் ஏற்றலாம்.?*

*1. பரணி, மகம், சதயம் நக்ஷத்திரங்களில் பிறந்தவவர்கள் யெம தீபம் ஏற்றுவது சிறப்பு. நக்ஷத்திர ஸூக்தத்தில் பரணி நக்ஷத்திரத்திற்க்கு யெமனையும் மகத்திற்கு பித்ருக்களை அதி தேவதையாகவும் கூறப்பட்டுள்ளது. வருஷாதி நூல்களில் சதயத்திற்கு யெமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது.*

*2. யெமனை அதிதேவதையாகக் கொண்ட சனீஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள்.*

 
*3. ஆயுள் ஸ்தானத்தில் சனீஸ்வர பகவான் நீசம் அல்லது பலமிழந்தவர்கள்.*

*4. சூரியனும் சனீஸ்வரரும் சேர்க்கை பெற்றவர்கள்.*

*6. ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாகக் கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்ட கேதுவின் நக்ஷத்திரங்களில் அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திர சாரங்களில் நிற்க பெற்றவர்கள்.*
   
*எம தீபம் எங்கு ஏற்றலாம்.?*

*1. மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் க்ஷேத்ரபாலகராக அமைந்து தனி சன்னதிபெற்ற யமதர்மராஜன் சன்னதி*

*2. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள யெமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதி*

 
*3. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து யெமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய எமன் சன்னதியில்.*

*4. அனைத்து சனீஸ்வர பரிகார ஸ்தலங்களில்.*

*5. அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளில்.*

*6. எமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்.*

*7. அனைத்து காலபைரவர் சன்னதிகளில்.*

*8. அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம்.*

*9. எம தீபம் ஏற்றவேண்டிய காலம் தீபாவளியின் முதல் நாளான (13/11/2020) சார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 28-ந்தேதி வெள்ளிக்கிழமை   மாலை 03-00முதல் 06-00 வரைக்கும்.*

   
*யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம் (மந்திரம்):-*

 *ஸ்ரீ யமாய நமஹ: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச| வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச| ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே| வ்ருகோத்ராய சித்ராய சித்ரகுப்தாய வை நமஹ:*

*சித்ரகுப்தாய வை ஓம் நமஹ:*

No comments:

Post a Comment