Monday, November 30, 2020

ராஜ யோகத்தை தரும் கஜலட்சுமி வழிபாடு

ராஜயோகம் தரும் ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்
ராஜயோகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி. கெளரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்திலும் தொழிலும் உயர்வுகளைத் தந்திடுவாள். சகல ஐஸ்வரியங்களும் தனம் தானியமும் அளித்துக் காத்திடுவாள் தேவி!

அஷ்டலக்ஷ்மிகளில் கஜலட்சுமியும் ஒரு தேவியாகக் கொண்டாடப்படுகிறாள். பாற்கடலில் இருந்து வெளிப்பட்டவர் என கஜலட்சுமியை வர்ணிக்கிறது புராணம். அப்படி, லக்ஷ்மியானவள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட போது, அவருடைய இரண்டு தோள்களுக்கு அருகில் இரண்டு யானைகள் வந்தன. சக்தி மிக்க லக்ஷ்மியும் வலிமை மிக்க யானைகளும் கொண்டு தோன்றியதால், இந்த லக்ஷ்மிக்கு கஜலக்ஷ்மி என்று திருநாமம் அமைந்தது. கஜ என்றால் யானை என்று அர்த்தம். வேழம் என்றால் யானை. ‘திரு’ என்பது லக்ஷ்மியைக் குறிக்கும். கஜலக்ஷ்மியை வேழத்திரு என்றும் போற்றுகிறது புராணம். கால்நடைகளைப் பாதுகாப்பவள். அவற்றால் இல்லத்தில் செல்வங்களைத் தருபவள். தன்னை வணங்குவோருக்கு, அளவிட முடியாத செல்வங்களையும் நன்மைகளையும் வழங்கும் கருணைக் கடலெனத் திகழ்கிறாள் பாற்கடல் நாயகி. இல்லத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீகஜலக்ஷ்மியை அவளுக்கு உரிய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, மனதார வேண்டிக்கொள்ளலாம்.
ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம் :
சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
வராபய கராந் விதாம்
அப்ஜத்வய கராம்போஜாம்
அம்புஜா சநஸமஸ்த்திதாம்
ஸஸிவர்ண கடேபாப் யாம்
ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
சர்வாபரண சோபாட்யாம்
சுப்ரவஸ்த் ரோத்தரீயகாம்
சாமரக்ரஹ நாரீபி :
ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
ஆபாதலம்பி வசநாம்
கரண்ட மகுடாம் பஜே.
இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, விளக்கேற்றி சொல்லி வாருங்கள். முடிந்தால், வெண்மை நிற மலர்கள், தாமரை மலர் கொண்டு கஜலக்ஷ்மியை அலங்கரியுங்கள். பால் பாயசம் நைவேத்தியம் படைப்பது இன்னும் வளம் சேர்க்கும்.
ராஜயோகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி. கெளரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்திலும் தொழிலும் உயர்வுகளைத் தந்திடுவாள். சகல ஐஸ்வரியங்களும் தனம் தானியமும் அளித்துக் காத்திடுவாள் தேவி!
💐🌹🙏🏻MPK🙏🏻🌹💐

கந்தசஷ்டிகவசம் எப்படி உருவானது

#கந்த #சஷ்டி #கவசம் #உருவான #வரலாறு.                    

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.                                                   பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. 

ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது. சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. 

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் : 

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.       இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.                                                                  சஷ்டி கவச பாராயண பலன்கள் : 

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்.... இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

Sunday, November 29, 2020

வாழ்க்கையின் முழு ரகசியம்

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். 

(கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்

 (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.

 (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.

 (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்

 (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.

 (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).

90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்

 (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்

 (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டு விடுவோம்.

மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது...

 நண்பர்களே உங்களின் வாழ்க்கையை வளமாக்கும் வழிமுறைகளை கண்டறிந்து உங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்துங்கள். 🙏🏻🙏🏻🙏🏻

தமிழ் மாதங்களின் உண்மை ரகசியம்

தமிழ் வருட பிறப்பை *சித்திரை* யிலிருந்து..
தை என்று திருத்தினான்..

*வைகாசி* விசாகத்திருநாளில் அறுபடை முருகனின் திருவிழாவை தடுத்திட ஆங்காங்கே சிலுவைகள் ஊன்றினான்..

*ஆனி* த் திருமஞ்சனத்தில் அடியார்களுக்கும் ஓதுவார்களுக்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணினான்..

*ஆடி* யில் 18 பெருக்குக்கு நீர்நிலை மாசு படுகிறது என்று தடை போட்டான்

*ஆவணி* யில் விநாயகர் சதுர்த்தசி கொண்டாட கூடாதென்றான்..ஆன்மீகமும் கடவுளும் ஆரிய சதி என்றான்..

*புரட்டாசி* யில்.
ஆயுத பூஜை அறிவீனம் என்றான் பூசணி உடைக்க கூடாதென்றான். தசராவை தடை செய்ய கலவரம் உண்டாக்கினான்..

*ஐப்பசி* யில்..
தீபாவளி பட்டாசு வெடிக்க கூடாதென்றான். சுற்றுசூழல் மாசென்றான்..போலி சென்செஸ் எடுத்தானே..

*கார்த்திகை* ஐயப்பப்ப வழிபாட்டை..
அசிங்கபடுத்த கண்ணியரை அனுமதி என்றான் காவலர் துணை போடு என்றான்..

*மார்கழி* ஆண்டாளை அவமதித்தான்..
அதிகாலை ஒலிபெருக்கியில் திருவெம்பாவையும் திருப்பாவையும் பாடகூடாதென்று கூம்புவடிவ ஒலிபெருக்கியை தடை செய்ய சொன்னான்..

*தை* யில் போகி கூடாதென்றான் பொல்லுசன் ஏற்படும் என்றான் ஜல்லிகட்டு தடை என்றான் மாடு வதை என்றான்..

*மாசி* மகத்திருவிழாவை தடுத்தான் விடுமுறை நாளை நீக்கினான்..
மேளாவையும் புஸ்கரனி தெப்பதிருவிழாவையும் தடுத்தான்..

*பங்குனி* உத்திர திருநாளை முருக வழிபாடு கூடாதென்றான்..
முருகனை ஆதிமனிதன் என்று அவநம்பிக்கை விதைத்தான்...

மடத்தமிழா.
உன் ஒவ்வொரு பண்டிகையும் உன் அடையாளமடா..
உன் அடையாளம் *திராவிட, மாற்றுமத* சூழ்ச்சியால் சிதைக்கப்படுவதை உணராமல் வாய் மூடி கிடக்கிறாய் மதசார்பின்மையால் மவுணமாய் இருக்கிறாய்..

இப்போதாவது உன் வாயை திற இல்லையேல்..
உனது அடையாளம் ஏட்டில் மட்டும் நீ படிக்க வேண்டியிருக்கும்...

Saturday, November 28, 2020

தானம் செய்வதால் வருகின்ற நன்மைகள்



வஸ்திர தானத்தின் நன்மைகள்

வஸ்திர தானமும் நன்மையும்

தானம் செய்வதற்கும், நம் வாழ்க்கையில் ஏற்படும்

நன்மைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம் முன்னோர்கள் அனைவரும் இயல்பாகவே தானமளிக்கும் இயல்பு

கொண்டவர்களாக வாழ்ந்து வந்தனர். முந்தய காலத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது அப்பொழுது பெரிய

விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் அங்கு வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களுக்கு இலவசமாகவே பொருட்களை வழங்கி

வந்தனர். அதுமட்டுமல்லாமல் பொங்கல், தீபாவளி திருநாள் போன்ற சிறப்பு தினங்களில் ஏழை எளியவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுப்பார்கள்

இன்றையக் காலகட்டத்தில் நாம் வேலை செய்யும் இடத்தில் நம் அருகில் இருப்பவர்கள் உதவி கேட்டால் கூட உதவ நாம் தயாராய் இல்லை என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை

வஸ்திர தானம் தானங்களில் பல விதங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் வஸ்திர தானம் பற்றித் தெரிந்து கொள்வோம்

வஸ்திரதானம் என்பது புது வீடு கட்டும்போது, வேலை செய்தவர்களுக்கும் கோயில் கும்பாபிஷேகம் செய்யும் போதும் கொடுப்பதைப் பற்றி மட்டும்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் வஸ்திர தானம் பற்றிய ஓர் உன்னதமான உண்மை என்னவென்றால் வஸ்திர தானம்

செய்பவர்களுக்கு

வாழ்க்கையில் அனைத்து

சுபிக்க்ஷமும் கிடைக்கும்.

நம் முன்னோர்கள் இதன் நன்மைகள் பற்றி அறியாமலேயே வஸ்திர தானம் செய்து சுபிக்ஷத்தை அனுபவித்து வந்துள்ளனர். தானம் செய்வதும் பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்று. வஸ்திர தானம் என்பது நாம் தினமும் செய்ய முடியாது

தானமும், தவமும்

ஆனாலும் வஸ்திர தானத்தை மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்தாலே போதுமானது அதுவும் குறிப்பாக நம் பிறந்தநாள், திருமண நாள் அல்லது வேறு ஏதேனும் வாழ்க்கையின் முக்கிய நாட்களில் வழங்கினால் மிகச்சிறப்பாக இருக்கும்

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்கா தெனின் திருவள்ளுவர் -

இதன் விளக்கம், இந்த பெரிய உலகத்தில் மழை பெய்யவில்லையானால் இங்கு தானமும் தவமும் இல்லையென்று பொருளாகும்

மழை இல்லை என்றால் வளம் இல்லை

எனவே தானம் செய்து, மழை பெய்ய செய்வதன் வளங்களை பெறுவோம்



Friday, November 27, 2020

ஆன்மிக சந்தேகங்கள் விளக்கங்கள்.

ஆன்மீக சந்தேகங்கள்... விளக்கம்!

#சிலர் ஒற்றைக்காலில் கருப்புக்கயிறு கட்டிக்கொள்வது ஏன்?

திருஷ்டி தோஷம் தாக்காமல் இருப்பதற்காக இவ்வாறு கட்டிக் கொள்கிறார்கள். கையில் கட்டிக் கொள்ளும் கருப்புக்கயிறு போலத்தான் இதுவும்.  நேரடியாகத் தாக்கும் திருஷ்டி தோஷத்திற்காக கையிலும், மறைமுகமாகத் தாக்கும் பில்லி, சூனியம், மாந்த்ரீகம் முதலான விஷயங்களில் இருந்து  தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காலிலும் கட்டிக் கொள்வது வழக்கம். இதுபோக, சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக இருப்பவர்கள்,  ஆன்மிகவாதிகள் போன்றவர்கள் கால்களில் பலரும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். அவ்வாறு ஆசிர்வதிப்பவர்களுக்கும் கூட  தோஷங்கள் தாக்கக்கூடும். அதாவது காலில் வந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்குபவர்களிடம் இருக்கின்ற குறைகள் ஆசிர்வதிப்பவரைச் சென்றடையும்.  இதுபோன்ற தோஷங்கள் ஆசிர்வதிப்பவரைச் சென்றடைந்து அவர்களது உடல்நிலையை பலவீனமாக்கக் கூடும். அவ்வாறு நேராதிருக்க  ஆசிர்வதிப்பவர்களில் ஆண்களாக இருப்பவர்கள் வலது காலிலும், பெண்களாக இருப்பவர்கள் இடது காலிலும் கருப்புக் கயிறினை கட்டிக்கொள்வது  வழக்கம். காலில் கருப்புக்கயிறு கட்டிக்கொள்வது என்பது எந்தவிதமான தோஷமும் தன்னை வந்து தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்  என்பதே உங்கள் கேள்விக்கான பதில்.

#குடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகுமா?

நிச்சயமாக இல்லை. வெள்ளை நிற ஆடை என்பது தூய்மையின் அடையாளம். வெண்ணிற ஆடை என்பது விதவைப் பெண்களுக்கு உரியது, இதனை சுமங்கலிப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து. பொதுவாக சுமங்கலிப் பெண்கள் எந்த நிறமாக இருந்தாலும் அதில் அலங்காரம் ஏதுமின்றி ஒரே வண்ணத்தில் அணிவதை விட பல நிறங்கள் கலந்தும், அலங்கார வேலைப்பாடுகளுடனும் கூடிய ஆடைகளை அணிவது என்பது நல்லது என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

அதாவது பார்ப்பதற்கு பளபளவென்று இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அலங்காரத்துடன் பெண்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் மகாலக்ஷ்மியின் அருள் அந்த குடும்பத்திற்கு என்றென்றும் நீடித்திருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே நேரத்தில் அந்த அலங்காரம் ஆனது சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

நெற்றியில் திலகம், கண்களில் மை, தலைவாரி பூச்சூடுதல், கை நிறைய வளையல்கள், கால்களில் தண்டை அல்லது கொலுசு, பலவண்ணங்களுடன் கூடிய புடவை, கழுத்தினில் ஆபரணம், பொன் நகையைவிட உயர்ந்த நகையான புன்னகை என்று எப்பொழுதும் கலகலவென்று பெண்கள் இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது. 

வெண்ணிற ஆடை என்பது அமங்கலமான விஷயம் என்று சாஸ்திரம் எந்தவொரு இடத்திலும் சொல்லவில்லை. வெண்ணிற பட்டுப்புடவை அலங்கார ஜரிகையுடன் இருப்பது இன்னமும் சிறப்பான ஒன்று.

#ஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது?

குழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன.ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும்.இந்த பூமியில் உதித்தவுடன் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சின் காலமே அதன் ஜனன நேரமாக அறியப்படுகிறது.அதனை ஒட்டியே ஜாதகம் என்பது கணிக்கப்பட்டு பலன்களை அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.ஆக ஜனன காலத்திலிருந்தே அந்தக் குழந்தைக்கான பலன்களை ஜாதகம் கணித்து தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால், ஒரு வயது வரை அந்தக் குழந்தை இறைவனின் குழந்தை என்றும், ஒரு வயது முடிந்ததும் குலதெய்வத்தின் கோயிலில் சிகை நீக்கி காதணி விழா நடத்தி அதனை இறைவனிடமிருந்து நமது குழந்தையாக ஸ்வீகரித்துக் கொள்கிறோம் என்றும் சம்பிரதாயம் இருப்பதால் அது வரை பொதுவாக குழந்தைக்கு ஜாதகம் எழுதி வைப்பதில்லை.

ஒரு வயது முடிந்த பின்னர் ஜாதகம் எழுதி பலன்களைத் தெரிந்துகொண்டால் போதுமானது என்று பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்வதன் காரணமும் இதுவே. கிரஹங்களின் தாக்கம் என்பது குழந்தை ஒரு தாயின் வயற்றில் உருவாகும்போதே துவங்கிவிடுகிறது என்பதும், ஜாதகத்தை கணித்து பலன்களைத் தெரிந்துகொள்வது என்பது அந்தக் குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே என்பதும் உங்கள் வினாவிற்கு உரிய தெளிவான விடை ஆகும்.

#நன்றி:-

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் ஷர்மா!! - Nandri: dinakaran aanmeegam

மனித வாழ்க்கைக்கு தெய்வபக்தி அவசியமா?


🔱🕉️#தெய்வ_நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ, அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி!  அதுவே மோட்சம்!  அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை!

பக்குவம் பெற்று முன்னேறுவதற்காகப் பூமியில் பிறவி எடுக்கிறோம்.  பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். முக்திக்கு வேண்டிய கர்மங்களை மேற்கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம். தேவர்களாக முன்னேறிய ஆன்மாக்கள் கூட, மீண்டும் பூமியில் பிறந்து முக்திக்கு முயலவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் தான் இந்தப் பூமியைக் ‘கர்ம பூமி’  என்கிறார்கள்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் மாதிரி நாமும் பிறவிப் பெருங்கடலை தாண்டுவதற்கு எளிய வழி இறைவனின் திருவடியை பற்றுவதே ஆகும்.

இறைவனின் திருவடியைப் பற்றி பாடாத ஞானிகளே இல்லை. “நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்று அனைத்து மகான்களும் இறைவனை வேண்டுகின்றனர். நம்மை அறிய, இறைவனை உணர இறைவன் திருவடியையே பற்ற வேண்டும்.

திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்

வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார். அதனால் தான் நம் முன்னோர்கள் இதை உலக பொதுமறை என்று கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடையவில்லை எனில் நம்மை பிறவிகள் தொடரும் என்றும் திட்டவட்டமாக சொல்கிறார் திருவள்ளுவர்.

🙏🏼#திருவள்ளுவர்

கடவுள் வாழ்த்து பகுதியில் அவர் எதை பற்றிக் கொண்டால் வீடு பேறு கிடைக்கும் என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

10 வது குறளில்

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது என்கிறார் வள்ளுவர். இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.

10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்

“கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
நற்றாள் தொழார் யெனின்”

நாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார். இதே போல மீதி உள்ள குறள்களை பார்த்தாலும், ஏன் வள்ளுவர் இதை இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மிகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.

திருக்குறள் – 3, 4, 7, 8, 9 ல்

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”

இந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார், தாளை -இந்த சொற்களை கவனித்தால் இறைவன் திருவடியை (அ) மெய்பொருளை நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார் என்பது புரியும்.

இந்த திருவடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக அது காட்டிவிடும், அதாவது

பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி மீண்டும் பிறவா வரத்தையும் பெற்றுவிடலாம் என்கிறார்.

🙏🏼#திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இறைவனை பற்றியும் அவனை அடையும் வழியை பற்றியும் மணி மணியாக தெரிவித்திருக்கிறார். திருவடி பெருமையை பற்றி மாணிக்கவாசகர், சிவ புராணத்தில் அவ்வளவு அழகாக சொல்கிறார்.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்

#பொருள்: திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக! ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவபிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின் கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். 

நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின் கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக்கின்ற மலை போலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினை முழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்.

இதைவிட எளிமையாக, தெளிவாக, அற்புதமாக இறைவனின் திருவடி பெருமையை நமக்கு ஒருவர் விளக்க முடியாது.



🙏🏼#திருவடி_பற்றி #திருமூலர்

திருவடி யேசிவ மாவது தேரில்                
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் திருமூலர்.
திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!
எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி! இதுதான் மெய்பொருள்! இந்த திருவடியான இணையடிக்கு இணையானது எதுவும் இல்லை இந்த உலகத்தில் என்கிறார் திருமூலர்.

🙏🏼#திருநாவுக்கரசர், மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்டு துவக்கத்தில் சமண சமயத்தில் இருந்தார். பின் சிவ பக்தனாக மாறினார். அதற்கு அவரை சமணர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கினார்கள். சுண்ணாம்பு காளவாயில் பிடித்துத் தள்ளினார்கள். சில மணி நேரம் கூட அதில் இருந்து பின் உயிருடன் தப்ப முடியாத நிலையில் சிவன் அருளால் திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்குப் பின்னும் நீற்றறையில் இருந்து உயிரோடு வெளி வந்தார். சொக்கலிங்கத்தின் அருளால் நீற்றறை அவருக்கு சொர்க்கலோகம் ஆனது. திருநாவுக்கரசர் நீற்றறைக்குள் தனது அனுபவம் எப்படி இருந்தது என்பதை இவ்வாறு கூறுகிறார்:

 மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

#பொருள்..

குற்றமிலாத வீணையின் இன்னிசையும், மாலை நேரத்து சந்திரனின் தண்ணொளியும், வீசுகின்ற நீழல் எமக்கு (நீற்றறைக்குள்) இன்பம் நல்கியது. தென்றலின் குளிர்ச்சியும், பருத்த இள நுங்குகளின் இன்சுவையும், மொய்க்கும் வண்டுகளின் ஆரவார மிக்க மலர்ப் பொய்கையின் வாசமும் போல எந்தையாகிய ஈசனின் திருவடி நீழல் எமக்கு இன்பம் நல்கியது. இறைவன் திருவடியை பற்றியோர்க்கு துன்பம் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.


🙏🏼#மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல்களும் திருவடி பெருமையை தான் போற்றுகின்றன. காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலா விநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் பாடிக்கொண்டே நீர் விளையாடுதல், முடிவில் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப் பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை. இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த திருவடிகளைப் போற்றுவதில் முடியும்.

 
#இறைவன்_திருவடிகளை சேவிப்போம்..பின் அடைவோம்..🙏🏼

Thursday, November 26, 2020

பஞ்சாட்சரம் மந்திரம் என்றால் என்ன?

🕉️நமசிவய🕉️

👉இரண்டு நிமிஷம் ஒதுக்கி 
படித்து விட்டு செல்லுங்கள்

*பஞ்சாட்சர  மந்திரம் பற்றிய அபூர்வ  விளக்கம்.*

*சிவயநம /சிவயா நம சரியா?*

*நமசிவய /நமசிவயா  சரியா ?*

*எதை நாம் சொல்ல வேண்டும் ?எப்படி
சொல்ல வேண்டும் ?*

முதலில் நாம் மந்திரம் என்பது என்ன என்று
புரிந்து அறிந்து கொள்வோம் ...

கருவில் உள்ளே புகுந்த உயிருக்கு ஓசை தான்
தொப்பிள் கொடிவழியாக
மனதை உண்டாகி மனதிடம் செல்கிறது,

இப்படியும் சொல்லலாம் உடலுக்கும்
உயிருக்கும்
ஓசை தான் மனதை உண்டாகிறது,

பிறப்பு எடுத்த பிறகு மனம் விழித்து
உணர்ச்சிகள் ,வாசனை ,கர்மம் போன்ற
நிலைகளை ஆட்பட்டு செயல்படுகிறது .

இப்படி மனதிற்கு அடித்தளமே இந்த ஓசை தான் .

மந்திரம் ஓசைகளினால் உண்டானது ,
ஓசை மனதின் உணர்சிகளுக்கு
கட்டுப்பட்டதால் நாம் உண்டாகும் ஓசைகள்
சில நமக்கு நன்மையையும் செய்யும்
தீமையும் செய்யும் ..

உதாரனமாக ஒரு நபரை பசு போல
இருப்பவனே என்றால் சிரித்து கொள்வார்கள்,
அவரை நாயை போல இருப்பவனே என்றால்
கோபாம் கொள்வார் .

இரண்டும் மிருகத்தை தான் குறிக்கிறது ,எது
அவருக்கு சிரிப்பை /கோபத்தை
தருகிறது என்றால் அந்த மிருகத்தின் செயல்
மனதில் படமாக தெரிவது தான் மனதில் உள்ள
உணர்சிகளை துண்டுகிறது என்பது ஒரு
பொருள் ...

மற்ற ஒன்று சப்தம் நீங்கள் நாயே என்று
சத்தமாக தான் சொல்லமுடியும் ஆனால் பசு
என்று கத்த முடியாது இப்படி சொல்லும்
பொழுது சாந்தமாக தான் ஓசை வரும் இதை
அனுபவத்தில் உணரலாம் ...

இது போல
ஒரு நாய் குட்டிக்கு உணவு அளித்து அது
உணவு உண்ணும் பொழுது அதன் பெயரை
சொல்லி அழைத்தால் அந்த சப்தத்தை அதன்
மனம் பதித்து கொள்ளும் ,

பிறகு எப்பொழுது அந்த சப்தம் கேட்டாலும்
(பெயர் ) தனக்கு உணவு கிடைக்க போகிறது
என்று அது நம்மை கவனிக்கும் இப்படி தான்
ஓசைக்கு மனம் விரிவடையும் சுருங்கும் ...

இங்கே கவனிக்க வேண்டியது ஓசை நம்
மனதை அடைந்து நம்மில் உள்ள நரம்பு
மண்டலத்தை அடைந்து நல்ல அல்லது தீய
எண்ணத்தை உண்டாக்கும் என்று புரிந்து
கொள்ள வேண்டும் ...

இதை உணர்ந்த நம் இன சித்தர்கள் ,மகான்கள்
,யோகிகள் ,ஞானிகள் நமக்கு நல்ல சிந்தனை
வளர மந்திரம் ,நாமம் என்ற சொற்களை
வகுத்து
தந்தார்கள் ...

இப்படி தான் மந்திரம் மனதில்
செயல்பாடுகளை தூண்ட வல்லது என்று
முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ...

மந்திரத்தை பற்றி அடுத்த பார்வை ....

மந்திரம் என்பது நினைபவனை காப்பது என்று
பொருள் .

மந்திரத்தை வசமாக்கினர் பலர் ,மந்திரம் பலரை
வசமாக்கியது
பலர் மந்திரத்தை துரத்தினர் மந்திரம் பலரை
துரத்தியது
மந்திரத்தை அறிந்தவர் சிலர் ,அழிந்தவர் சிலர் .

மேலும் மந்திரத்தை பற்றி சப்த கோடி மஹா
மந்திர நூலில் (வட மொழி)இருந்து சில
தகவல்கள் ...

1 எழுத்து--உடையது ----பிண்டம்

2-எழுத்து-உடையது--கர்த்தரி

3-எழுத்து--9-உடையது-பீசம்

10-எழுத்து-20 --உடையது--மந்திரம்

20-எழுத்து-மேல்--உடையது மாலா மந்திரம்
எனப்படும் என்றும் சொல்ல படுகிறது ...

மேலும் மந்திர தொகுப்பு என்ற நூலில் 68
வகையாக மந்திரம்களை பிரித்து உள்ளார்கள் .

இதனுடன் சைவ புஷன மந்திரம்கள்
1.சிருஷ்டி வடிவ சிவமந்திரம்கள்.
2.திதி வடிவ சதாசிவ மந்திரம்கள்
3.சங்கரவடிவ மகேஷ்வர மந்திரம்கள்
4.பிரணவ மந்திரம்கள்
5.பஞ்சாக்ர மந்திரம்கள்
6.தேவி முல மந்திரம்கள்
7.அஸ்திர மந்திரம்கள்
8.பஞ்ச பிரம மந்திரம்கள்
9.தேவாதி மந்திரம்கள்
10.மகாசக்தி மந்திரம்கள்
11.சித்த மந்திரம்கள்
12.கிரியா மந்திரம்கள் ..

இப்படி சித்தர்களின் மந்திர குறிப்பு நூல்கள்
சொல்கிறது ...

ஓசை தான் மந்திரம் ,சில ஓசைகள்
நன்மைகளும் சில ஓசைகள் தீமைகளும்
செய்யும் என்று கடந்த பதிவில் விளக்கினேன் ,

ஒரு மீன் நீரை விட்டு வெளியே வந்ததும்
எப்படி இறக்கிறதோ அப்படி தான் நாமும்
காற்றால் நிரப்பப்பட்ட பந்தில் வாழ்கிறோம்
காற்றை விட்டு வெளியே வந்தால்
இறக்கிறோம் என்பதனை நாம் அனைவரும்
அறிவோம்..

இந்த உலகம் சப்த அலைகளால் நிரம்பியது
என்று புரிந்து கொள்ள வேண்டும் ,

சப்த அலைகள் மனிதனை ஆட்கொண்டு நல்
வழிபடுத்த சித்தர்களும் ரிஷிகளும் மந்திரம்
என்ற மொழியை இறை சிந்தனையோடு நமக்கு
சொல்லி கொடுத்து உள்ளார்கள் என்று நாம்
புரிந்து கொள்ளல் வேண்டும் .

உலகில் உள்ள சமயம்களில் சைவ சமயம்
இதில் முதல் தரமாக வருகிறது என்று
சொல்வேன் ,

ஆம் திருமறைகள் என்னும் அற்புதம்களை
நமக்கு அறிவை தெளிவு படுத்தி கொள்ளவும்
,இறைவனை தொடர்பு கொள்ள உணர்வு
திருமறைகளையும் தந்து உள்ளது .

இவைகளை நாம் உணர்ந்து படிக்க ஆரம்பித்து
விட்டால் மனிதன் மனிதன் ஈசனாக
மாறிவிடுவான் .

உணராமல் படிப்பது வீண் ,
எல்லா பக்தர்களாலும் இப்படி உணர்ந்து படிக்க
முடியாது ,காலமும் கோள்களும் ,கர்மம்களும்
வழிவிடாது ,
இவர்களுக்காக
ஆண்ட பிண்ட சராசரத்தின் அன்னை சக்தி
பக்தர்கள் மேல் பரிவு பட்டு சிவபெருமானிடம்
வலது காதால் கேற்று பெற்ற ரகசியம் தான்
பஞ்சாட்சர மந்திரம் என்னும் 5 எழுத்து.

இந்த தகவலை பற்றி மாயவரத்தில் உள்ள ஒரு
கோவிலில் நாம் காணமுடியும் .

இப்படி அம்பாள் சிவ பெரு

மானிடம் வலது
காதில் மந்திரத்தை கேட்டபடி
இருப்பது போல் அதாவது அம்பாள் தெற்கு
பார்த்து இருப்பது போல கோவில்களை
வடிவமைத்தார்கள் .

(சில கோவில்கள் விதி
விளக்காக மாறும் ஏன் என்று அதை முடிவில்
புரிந்து கொள்ளலாம் )

அம்பாளுக்கு பிறகு
அம்பாளின் முழு அம்சத்தையும் அதாவது
அகத்தியும் என்ற நிலையை
அடைந்த ஒரே ஒரு நபரான அகத்தியர்
பெருமான் தான் பஞ்சாட்சர மந்திரத்தை
பெருமானிடம் கேட்டு அறிந்தவர் .

ஆதிசித்தர் என்றும் சித்தர்களின் குரு என்ற சிவ
பெருமான் பஞ்சாட்சர
மந்திரங்களையும் கோபீசம் என்னும்
மகத்துவம் பொருந்திய அட்சரம்களையும்
லக்கங்களையும் கடைபிடிக்க வேண்டிய
முறைகளை
மகிமைகளை உபதேசித்தவர் .

அவர் விதித்த நிபந்தனை காமத்தால் அடங்காத
மனதை உடையவர் ,கோபகாரர்கள் ஏமாற்றும்
சீடர்கள் போன்றவர்களுக்கு உபதேசிக்க
கூடாது என்றார் .

இதை பற்றி சிவ புராணத்தில் காணலாம் .

பொதிகை மலையில் இருந்து மாமுனிவர்
அகத்தியர் குரு உபதேச மொழியாக
மந்திரத்தை பெற்று மந்திரகாவியும் என்று
எழுதி மக்களுக்கு பயன்பட
வேண்டும் முயற்சி செய்தபொழுது மற்ற
சித்தர்களும் ரிஷிகளும்
தேவ ரகசியம் என்று அதை மறைத்து
விட்டார்கள் என்று சொல்ல படுகிறது .

பிறகு அகத்தியர் இறைவனை பணிந்து
உலகமக்களின் நன்மைகே எழுதியதாக
விளக்கம் அளிக்க இறையனார் சாபம்
போக்கினார் என்று நூல்கள் சொல்கிறது .

திருமறைகளை பாடி வந்த நாயன்மார்கள் தான்
முதன் முதலில் பஞ்சாட்சர மந்திரத்தை எல்லா
பக்தர்களுக்கும் தெரிவிக்கும் படி
சொல்லிவந்தார்கள் .

அதில் உள்ள ரகசியம்களை அவர்கள் சொல்வது...

முதலில் அவர்கள்
ந ம சி வ ய
என்று தான் சொல்லிவந்தார்கள் ,

இப்படி சொல்வதினால் இகலோக வாழ்க்கை
மேன்மையாகும்,
ஆனால் மோட்சம் கிடைக்காது என்று சில
காலம் கழித்து
சி வ ய ந ம
என்று மாற்றி சொல்லி இறைவனை அடைய
இது தான் சரி என்று முடிவுசெய்தார்கள்

அதன்படி

சி- சிவம்

வ- திருவருள்

ய-ஆன்மா

ந-திரோதமலம்

ம-ஆணவமலம்.

திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும்
பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை
பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு
சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து
பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது
இதன் பொருள் என்று முடிவு செய்து இப்படி
சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

இவர்கள் கோட்பாட்டின் அடிப்படையில்
முதலில் கோவில்களில் நமசிவய என்றும்
சில கோவில்களில் சிவயநம என்று எழுதி
வைக்க பட்டது ,

சில பக்தர்கள் அப்படியும் சில பக்தர்கள்
இப்படியும் சொல்லி வந்தார்கள் .

உண்மையில் இதன் அர்த்தம் சூக்கும
பஞ்சாட்சரம் ,ஸ்துல பஞ்சாட்சரம் என்று
பிரித்து பார்க்க வேண்டும் என்று சில
மகான்கள் சொல்கிறார்கள் .

கேளப்பா சிங் நமசி வாய மென்றால்
கிளர்ந்து நின்ற தென்னமரம் வளையுமப்பா
நாளப்பா மங் மங் கென் றொருகா லோதில்
நமனுமே கிட்ட வந்து அணுகா னப்பா
வாளப்பா வங் சிவய நமவென் றாலோ
மழைதனிலே நனையாமற் செல்லலாகும்
ஆளப்பா மழைநிற்க வேண்டு மென்றால்
ஆச்சரியம் சிவாய ஓம் ஸ்ரீயும் சொல்லே.

நாம் வாழும் இந்த பூமியை ஆண்ட வடிவம்
என்றும் இந்த அண்டம் ஒரு வெற்று இடத்தில்
சுற்றி கொண்டு இருக்கிறது என்றும் நாம்
அறிவோம் .

இந்த அண்டத்துள் வாழும் நம்மை பிண்டம்
என்று சொல்கிறார்கள் மெய்ஞானிகள்
(சித்தர்கள் )
அண்டமும் பிண்டமும் ஒன்றே என்றும்
அண்டத்துக்குள் அண்டமாய்
அணுவில் நிற்பவனும் ,
அண்டவெளி பிரபஞ்சத்தில் நிறைந்து இருக்கும்
அந்த இறைவனை
அடைவது பற்றி அதாவது சிவம் என்ற அந்த
மஹா பிரம்மத்தில் கலப்பது பற்றி
கலந்தவர்கள் ,

அதனுடன் கலக்க மனித பிறப்பு எடுத்த
உயிர்களுக்கு கருணையுடன் சொன்ன ரகசியம்
தான் இந்த பஞ்சாட்சர எழுத்துக்கள் ....

சில அடிப்படை விவமரம்களை நாம் தெரிந்து
கொள்ளவேண்டும் ...

எந்த ஒரு காரியத்தில் நாம் நுழைந்தாலும் சில
விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் உண்டு ,
அதன்படி நாம் செய்தோம் என்றால் நமக்கு
வெற்றியும் அந்த செயலின் நிறைவு
கிடைக்கும்.இது ஒரு வகை அறிவியல்
கோட்பாடு தான் ..

சிவபெருமானின் 5 முகம்கள்...

சத்தியோஜாதம்--படைத்தல் --பிரம்மா--தம்பனம் --பூமி --கேட்டல் --ந

வாமதேவம் -காத்தல்-பெருமாள் -பேதனம் -
தண்ணீர் -தொடு உணர்வு -ம

அகோரம் -அளித்தால் (கொடுத்தல் )-ருத்ரன் -.மோகனம் - தீ- பார்த்தல் - சி

தத்புருஷம் -சாந்தம் -மகேஸ்வரன் -மாரணம் - காற்று -சுவை அறிதல்-வ

ஈசான்யும்-அனுக்ரஹம்-சதாசிவம்-ஆ
கர்ஷணம்-ஆகாயம்-சுவாசித்தல்-ய

ந -காது

ம -தோல் (தீண்டுதல் உணர்வு )

சி -கண்

வ -நாக்கு

ய - மூக்கு

இவைகள் சித்தர்கள் வகுத்த யோகா நூல்களில்
சொல்லபடுபவை ..

இப்படி 5 செயல்களை உள்ளே அடக்கியது
அல்லது 5 செயல்களை கொண்ட
சிவபெருமானின் அட்சரம் என்று சொல்லலாம் .

இப்படி 5 பூதம் ,
5 புலன்கள் ,
5 மூர்த்திகள்
5 தொழில்கள்
5 உணர்வுகள்
5 மூர்த்திகள் ....கொண்ட கலவை
என்று புரிந்து கொள்ளல் வேண்டும் .

மற்ற ஒரு பார்வை
5 மூர்த்திகளையும் வணங்கும் படி 5
எழுத்துகள்
இதில் சிவ பெருமானின் 5 தொழில்களை பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியும்
ஆனால் 6வது ஒரு தொழில் உண்டு அத

அருளல் என்று செயலாகும் .

இதை அறிந்து கொள்ள அட்சரத்துக்குள் உள்ளே
கவனிக்க வேண்டும்

அது
1.ந ம சி வ ய
2. வ சி ய ந ம
3.ம ய ந வ சி 
4.ய ந ம சி வ 
6.சி வ ய ந ம 

இங்கே எல்லா அட்சரமும் சிவ பதியட்சரத்தில்
ஒடுங்க சீவன் முக்தி வரும் என்பது சித்தர்
வாக்கு ...

இதன் விவரத்தை நான் இங்கே பதியவில்லை ,
(யோக நூல்கள் உள்ள விவரம் விளக்கம் தர பல.தகவல் பதிக்க வேண்டிவரும்)

சிவ வாக்கியர் padalakali கவனமுடன்
கவனித்து கேட்டோம் என்றால்
இவைகள் தெளிவாக புரியும் ..

"சி வ ய ந ம" என்று சொல்பவருக்கு ஆபத்து
ஒரு நாளும் இல்லையே என்று
சொல்லபடுவதை காரண அட்சரம் என்றும்
" சி வ ய வ சி" என்பதனை மஹா காரண
அட்சரம் என்றும் இரு கொள்ளி என்று
சொல்கிறார்கள் சித்தர்கள் ...

நாம் எப்படி சொல்ல வேண்டும் ?

வாசி என்று சொல்லை திருப்பினால் சி வா..

வாசி என்றால் நம்மில் உள்ள மூச்சு காற்று
நம்முடைய உடம்பில் ஓடும் காற்றை மாற்றும்
சக்தி படைத்தது சிவா
என்ற சொல் சிவா சிவ இரண்டும் ஒன்று தான்
குழம்ப வேண்டாம் .

இதை பற்றி அறிந்து கொள்ள நீங்கள் திருவாசி
(திருச்சி ) என்று சிவ பெருமான் கோவிலுக்கு
சென்று வந்தால் புரிந்து கொள்ளலாம் .

"ஓம் ந ம சி வ ய "என்று சொல்வதின் முலம்
உலகத்தில் உள்ள எல்லா இன்பம்களையும்
பெறமுடியும் ....

"ஓம் சி வ ய ந ம" என்று சொல்வதின் முலம்
கோள்களின் சாபம் விலகும்
அம்மையப்பனின் தரிசனம் கிடைக்கும் ..

மற்றும் பஞ்சாட்சர மந்திரத்தை
மாற்றி ,திருப்பி

ஓம் ந ம சி வ ய-- தம்பனம்

ஓம் ம சி வ ய ந --பேதனம்

ஓம் சி வ ய ந ம--மோகனம்

ஓம் வ ந ம சி வ--மாரணம்

ஓம் ய ந ம ச வ--ஆகர்ஷணம்
போன்ற பலன்கள் அந்த மூர்த்திகளால்
தரப்படும் ,
நமக்கு வாழ்கையில் நற் கதி அடைய
அம்பாளின் முலம் அப்பனை அடைந்தால்
மட்டுமே சாத்தியம் ,
இது சத்தியம் ,சத்தியம் ,சத்தியம்
இதன் முறையாக பெருமானை அடைய நாம்
சொல்ல வேண்டிய அட்சரம்
"சி வ ய ந ம ஓம் "
"சி வ ய சி வ ஓம்"
"சி வ ய வசி ஓம் "
" சிவ சிவ சிவ ஓம் "....

என்று சுக ஆசனம்
கொண்டு ஜெபிக்க சிவ கதி கிடைக்கும் ..

இது.சித்தர்கள் வாக்கு
- வாட்ஸ் அப்பில் வந்தது

கார்த்திகை தீபம் என்றால் என்ன?

1.திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து "நமசிவாய" சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, "தீப மங்கள ஜோதி நமோ, நம" என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.

7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். 

8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை கலந்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை 
தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

9. திருவண்ணாமலை மலை சுமார் 
2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.

10. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு, சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.

11. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

12. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

13. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.

14. கார்த்திகை  மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

15. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.

16. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.

17. இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

18. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.

19. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.

20. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.

21. தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை #நினைத்தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

22. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை வந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

23. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

24. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

25. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

26. திருவண்ணாமலை தீபத்தை காண கடந்த ஆண்டு சுமார் 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

28. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “#அண்ணாமலையாருக்கு #அரோகரா” என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்"- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

29. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

30. தீப திருவிழாவுக்காக இந்த ஆண்டு   திருவண்ணாமலைக்கு போதிய அளவு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது.
💐🌹🙏🏻 MPK 🙏🏻🌹💐

Tuesday, November 24, 2020

நவகிரகங்களின் சிறப்பு குறிப்பு

What's App 
Message 

#நவகிரகங்களின்_சிறப்பு .(மகத்துவம்)

*1.#சூரியன்.*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
    

*2.#சந்திரன்.*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்.
   

*3 . #அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்.
   

*4.#புதன்.*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்.
    

*5.#குரு.*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.
    

*6.#சுக்கிரன்.*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .
    
*7.#சனி*
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்.

*8.#ராகு*
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்.

*9.#கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்.

Monday, November 23, 2020

வாழ்த்தி நலம் பெறுங்கள் வளம் பெறுங்கள்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*வாழ்த்துவதால் வருமே... வளமும், நலமும்..!!*

ஜப்பானில் 'கோய்’ என்றொரு மீன் வகை உள்ளது. இந்த மீன் விசித்திரமான இயல்புடையது. நீங்கள் இந்த மீனை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்த்தால், அது அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று அங்குலம் மட்டுமே வளரும்.

சற்று பெரிய தொட்டியில் வளர்த்தால், கோய் மீன் 8 அல்லது 10 அங்குலம் வரை வளரும். சிறு குட்டையில் கோய் மீன்களை வளர்த்தால், அது ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளரும். கோய் மீனைக் குளத்தில் வளர்த்தால் இரண்டரை அடி முதல் மூன்றடி வரை வளரும். மிகப் பெரிய ஏரியில் கோய் மீனை வளர்த்தால், அது ஐந்து அடி வரை வளரும்.

மனிதர்களும் கோய் மீனைப் போன்றவர்கள் தாம். சிறியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் வளர முடியாமல் போய்விடும். பெரியவைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். அப்போது தான் வளர முடியும். உங்களது சிந்தனை உயர உயர, உங்களது செயல்பாடும் மேம்பாடு அடையும். உங்களது மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும்.

மனிதர்கள் தங்களை பற்றிக் குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் கோய் மீன்கள் போல மனிதர்கள் தங்களைக் குறுக்கிக் கொண்டு விடுகினறனர். இதனால் அவர்களால் அவர்களது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் யாவை? இந்தக் காரணங்களைக் கண்டறிந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.

பொதுவாக எதிர்மறைச் சிந்தனை தான் அதிகமாகக் காணப்படுகின்றது. ஒரு குண்டான மனிதர் சாப்பிட உட்காரும் போதே “நான் சாப்பிடுவதெல்லாம் கொழுப்பாக மாறிவிடுகிறது.’ என்று அலுத்துக் கொள்ளுகிறார். ஒரு குடும்பத் தலைவி காலையில் எழும் போதே “இந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் குப்பையாகத் தான் கிடக்கிறது. ஒருநாளும் குப்பைகள் குறைவதாகத் தெரியவில்லை’ என்று அலுத்துக் கொள்கிறார். பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் மாணவி தனத தந்தையைப் பார்த்து, “அப்பா, கணக்கில் நான் குறைந்த மதிப்பெண்கள் தான் எடுப்பேன் போல் தெரிகிறது. தேர்வில் நான் தோல்வி அடைந்து விடுவேன் என்று அஞ்சுகிறேன்’ என்று சொல்கிறார். 

இவை யாவும் எதிர்மறையான எண்ண அலைகளாகும். ஆற்றல் மிக்க பலர் தங்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குடத்தில் இட்ட தீபங்களாக உள்ளனர். குன்றிலிட்ட தீபங்களாக அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், மேல் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கேலி, கிண்டல் செய்வதால் ஆற்றல்களைப் பலரால் வெளிப்படுத்த முடியவில்லை. இதமற்ற சொற்கள் ரணத்தை ஏற்படுத்துகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ உதிர்க்கப்படுகின்ற வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்துகின்றன.

உளவியலாளர்கள், எண்ண அலையின் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைத் துல்லியமாக நிரூபிக்க ஒரு சோதனையை மேற்கொண்டனர்.

இரண்டு பசுமைக் குடில்கள் ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டன. மண், உரம் போன்றவை ஒரே மாதிரியாக இடப்பட்டன. பசுமைக் குடிலில் சீதோஷ்ணம் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இரண்டு குடில்களிலும் தலா 23 விதைகள் ஊன்றப்பட்டன. ஒரு பசுமைக் குடிலின் முன் ஒருவர் தினந்தோறும் நின்று கொண்டு “இந்த விதைகள் முளைக்காது, முளைத்தாலும் நிலைக்காது. சீக்கிரமே வீணாகிப்போய்விடும்’ என்றெல்லாம் அவர் வசைமாரி பொழிந்து வந்தார்.

மற்றொரு பசுமைக்குடிலின் முன் மற்றொருவர் நின்று கொண்டு, “இந்த விதைகள் யாவும் அபாரமாக முளைக்கும், அற்புதமாக வளரும், அமோக பலனைத் தரும்’ என்று வாழ்த்து மாரி பொழிந்துவந்தார். இந்த வாழ்த்தும் வசையும் மூன்று வாரங்கள் தொடர்ந்தன. வாழ்த்துமாரிக்கு உள்ளான குடிலில் ஊனப்பட்டிருந்த விதைகள் யாவும் முளைத்தன. கம்பீரமாகக் காட்சியளித்தன.

வசைமாரிக்குள்ளான குடிலில் ஊன்றப்பட்டிருந்த 23 விதைகளில் இரண்டு மட்டுமே முளைத்தன. அவை மிகவும் நலிந்த நிலையில் இருந்தன. வாழ்த்து மாரியும் வசை மாரியும் தொடர்ந்தன. வாழ்த்துக்குள்ளான பசுமைக் குடிலில் பயிர்கள் செழித்தோங்கின. வசை மாரிக்குள்ளான பசுமைக் குடிலில் முளைத்திருந்த இரண்டு பயிர்களும் வாடி வதங்கிவிட்டன. விதைகளின் நிலையே இப்படிப்பட்டது என்றால் மனிதர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதனால் தான் வைபவங்களின்போது வாழ்த்துகளைக் கேட்க வேண்டும் என்று சமூக ரீதியாக ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

தனி நபர்களின் எண்ண ஓட்டத்தைச் சீர்குலைப்பதில் தெரிந்தோ, தெரியாமலோ ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், மேல் அதிகாரிகள் ஆகியோரும் ஈடுபடுகிறார். திடமான, தெளிவான ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே தோல்வியை அண்ட விடாமல் செய்ய முடியும்.

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஜெபம் செய்தால் நினைத்தது நடக்கும்

ஜபம் செய்தால் என்ன கிடைக்கும் ?

திருவண்ணாமலை சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்க்கையில் ஒரு நாள் ஒருவர் இடை விடாது  மந்த்ரம்  சொல்லிக் கொண்டுள்ள  சேஷாத்திரி ஸ்வாமியிடம்   அணுகி ,     "என்ன  செய்கிறாய் ? சேஷாத்ரி "  எனக்  கேட்டார். 

" கர்மா  ஒழிய  வேண்டும் ", அதற்காக  மந்த்ர  ஜபம்  செய்வதாக  சேஷாத்ரி ஸ்வாமி கூறினார்.

ஒரு லட்சம்  ஆவிருத்தி  ஆயிருக்கு. இன்னும்  ஒரு  அரை  லட்சம்  பண்ண  வேண்டி  இருக்கு. மந்திரம்  சொல்லிச் சொல்லி  கர்மாவை  அழிக்கலாம்.  
வாழ்க்கைப்  போக்கையே  மாற்றிவிடலாம். மந்த்ர  ஜபம்  மனசை  சுத்தம்  பண்ணும். மனசு  சுத்தமாயிடுச்சுன்னா  போதும்.....நீங்க  என்ன  கேட்டாலும்  கிடைக்கும். "

இது   ஆச்சரியமா  இருக்கே !  நாலு  வார்த்தையை  திருப்பித்   திருப்பி  சொல்றதால எல்லா  நன்மையும்   கொண்டு வந்து  தருமா ???

அது  வெறும்  வார்த்தையல்ல.    
கந்தகம் என்பது  ஒருவகை  மண்ணு.  
அது  வெடிமருந்தா  மாறலயா? 
அந்த மாதிரி   சில  குறிப்பிட்ட வார்த்தைகள்  உள்ளுக்குள்ள  மாறுதல்  நிகழ்த்தும். 
மந்த்ரம்  சொல்லச்சொல்ல  மனசு  ஒருமுகப் படும். ஒருமுகப்பட்ட  மனசுக்கு  நிறைய  சக்தி  உண்டு. "

வெறுமனே  சந்தேகப்படாம  உடனே  மந்திரம்  சொல்ல  ஆரம்பிக்கணும்.  
உனக்கு  என்ன  ஆயுசு  விதிச்சிருக்கோ  தெரியாது. அதனால  இந்த  ஆயுசிலேயே நல்லது  கிடைக்க  மனதில்  தெளிவு  கிடைக்க  இப்பவே  மந்திரம்  சொல்ல  ஆரம்பி. "

ஒருமணி  நேரத்துக்குமேல  ஜபம்  பண்ண  முடியலையே  சேஷாத்ரி.  அந்த  ஒருமணி  நேரமும்  மனசு  எங்கெங்கோ  சுத்துறதே " ஆர்வமுள்ளவர்கள்  ஆவலுடன்  கேட்டார்கள்.

பண்ணிதான்  ஆவேன்னு  உட்கார்ந்துடணும். அதுக்குப்பேர் தான்   வைராக்கியம். என்ன  தடுத்தாலும் ,   
எது  குறுக்கிட்டாலும்  தினம்  ஒருமணி  நேரம்  ஜபம்கறதை   ஆரம்பிச்சு டணும் சிரத்தையா  பண்ண  ஆரம்பிச்சுட்டா  ஒருமணி  நேரம்  போறாது. 
மனசுக்கு  பசிக்க ஆரம்பிச்சுடும். இன்னொரு  மணிநேரம்  பண்ணு.  இன்னொரு  மணி நேரம்  பண்ணுன்னு  அதுவா  கேட்கும் ஆரம்பத்தில்  ஆர்வம் இருக்காது,  ஆனால் கஷ்டப்பட்டு ஆரம்பிச்சுட்டா ஆர்வம் அதிகமானாலும். 
நான்   ஏழு வயசிலேயே  கார்த்தாலே  1 மணிநேரம், சாயந்தரம்  1 மணிநேரம்  ஜபம்  பண்ண  ஆரம்பிச்சுட்டேன்.  அதனாலே  கணக்கோ பாட்டோ பூகோளமோ, இங்கிலீசோ பள்ளிக்கூடமோ  முக்கியமில்லைனு  ஆயிடுத்து . 
காசை  விட  ஜபம் தான்  முக்கியம்னு  போயிடுத்து.

எல்லா  அபிலாஷைகளும்  ஜபத்தால்  நடக்கும்கறபோது  வேற  இங்கு  செய்ய
என்ன இருக்கு. மனசு கேட்க, கேட்க  ஜபம்  பண்ணிண்டே  இருக்கேன். என்  மனசுக்கு  பசி  அதிகம்  எத்தனை  சாப்பிட்டாலும்  நிரம்பாத  வயிறு  மாதிரி எத்தனை  ஜபம்  பண்ணினாலும்  மனசுக்கு  பத்தல . பன்னெண்டு  மணிநேரம்  பண்றேன்.

ஜபம் பண்ணி என்ன  கிடைச்சுது ??? 

சேஷாத்ரி ஸ்வாமிகள் சொல்கிறார் --

எனக்கு   என்ன  கிடைச்சுதுங்கறது  முக்கியமில்லடா. நான்  ஒரு  பொருட்டில்லை. என்ன  கிடைக்கும்னு  கேள்!  படிப்படியா  விளக்கிச்  சொல்றேன்.
தினம்  ஒருமணிநேரம்  ஜபம்  பண்ணினா, மனசு  அமைதியாகும். கோபம்  குறையும். இதைவிட  அதிகமா  பண்ணினா  கோபம்  அறவே  போறதுக்கு  வாய்ப்பிருக்கு. 

காலைல  ரெண்டு  மணிநேரம், சாயந்தரம்  ரெண்டு  மணிநேரம்  பண்ணினா  காதில்  இனிமையான  சங்கீதம்  கேட்கும். 
உடம்பு  இறகுபோல  லேசா  இருக்கும். நோய் உபத்திரவாதங்கள்  இருக்காது. உணவு  கவனமா  சாப்பிடத்  தோணிடும். ருசிக்கு  நாக்கு  அலையாது. உணவு குறைஞ்சு உள்ளம் பலமாயிடும் ! கார்த்தாலே  மூன்று  மணிநேரம்,  சாயந்தரம்  மூன்று  மணிநேரம்  ஜபம்  பண்ணினா, முகத்துல  மாறுதல்  உண்டாகும். கண்  கூர்மையாகும். 

உடம்பிலே  இருந்து  தேஜஸ்  விசிறி  விசிறி  அடிக்கும். நாம் சொல்லும் வாக்கு  பலிக்கும். 
எட்டு மணிநேரம்  ஜபம்  பண்ணினா, நீ  வேற  மந்த்ரம்  வேற  இல்ல. நீயே  மந்திரமா  மாறிடலாம். அதற்கப்புறம்  நடக்கறதெல்லாம்  ஆனந்தக்  குதியல் தான். 

எதை  பார்த்தாலும்  சந்தோஷம்  தான். பசிக்காது. தூக்கம்  வராது. யாரையும்  அடையாளம்  தெரியாது. மனசு   கட்டுலேயிருந்து  விடுபட்டு  ஸ்வாமி கிட்ட  நெருக்கமா  போய்டலாம். அப்புறம்  அதுவே உன்னை  இழுத்துண்டு  போய்டும். இன்னும்  உக்கிரமா  ஜபம்  செய்ய,   
அந்த  சக்தியே  கூட்டிண்டு  போய்டும். 

நீ  உன்னோட  கட்டுப்பாட்டில்  இருக்கமாட்டே. முழுக்க  முழுக்க  ஸ்வாமிகிட்ட  சரணாகதி  ஆயிடுவே.  
அப்ப  நீ  என்ன  கேட்டாலும்  கிடைக்கும்.  இதுல பெரிய  சந்தோஷம்  என்ன  தெரியுமோ ??? உனக்கு  வேணும்கறது  ஒவ்வொன்றும்  பகவானா  பார்த்து, பார்த்துக்  கொடுப்பார். உன்  வார்த்தையெல்லாம்  கடவுளுடைய  வார்த்தை.  உன்  செய்கையெல்லாம்  கடவுளுடைய  செய்கை. "

" எட்டு  மணிநேர  ஜபத்துக்கப்புறம்  என்ன ? 

எல்லா  நேரமும்  ஜபம்  பண்ண னும்னு  தோணிடும்.  எட்டு -இருபத்தி  நாலா  மாறிடும். அதுல  இன்னும்  உக்கிரம்   வந்துடும்.. மந்த்ர  ஜபம்  என்பது  கற்றுக்  கொள்வதில்  இல்லை. பூஜை  என்பது  சொல்லித்தந்து  செய்வது  அல்ல.  உள்ளிருந்து  பீறிட  வேண்டும். தன்முனைப்பாக  கிளர்ந்து  எழுந்து  அதற்குள்  தானே  மயங்கிச்  சரிதல்  வேண்டும்.சடங்காக  செய்கிறபோதும்,  எதிர்பார்த்து  உட்காரும் போதும்  செய்கிற  விஷயத்தின்  வீர்யம்  குறைகிறது. 
ஸ்வாசம்  போல  இயல்பாக  மாறிய  செயல் தான்  உன்னத  நிலைக்கு  அழைத்துச்  செல்கிறது....

ஸ்ரீ சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே!!!

Sunday, November 22, 2020

மனிதர்களை ஏன் துன்பம் துரத்துகிறது?

மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?- சீதை சொன்ன நீதி!

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். 

அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.

ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ''தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்'' என்று கூறினார். 

அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ''அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு அனுமன், ''தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ''அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.

எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே'' என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துக்கொண்டார்.

நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்' என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவித்தாலும், நம்மை ஒருவர் பழித்துப் பேசினாலும், அதற்குக் காரணம் நாம் செய்த வினைப்பயன்தான் என்பதை உணர்ந்து, நாம் பதிலுக்கு அவரைப் பழிதீர்க்க நினைக்கக்கூடாது.

அற்புதமான ஆன்மீக குறிப்பு

#தோஷம்_நீங்க - ஏற்ற வேண்டிய #தீபங்கள்

1.    ராகு தோஷம்            - 21 தீபங்கள்
2.    சனி தோஷம்            -  9 தீபங்கள்
3.    குரு தோஷம்            - 33 தீபங்கள்
4.    துர்க்கைக்கு               -  9 தீபங்கள்
5.   ஈஸ்வரனுக்கு            - 11 தீபங்கள்
6.    திருமண தோஷம்   - 21 தீபங்கள்
7.    புத்திர தோஷம்        - 51 தீபங்கள்
8.    சர்ப்ப தோஷம்         - 48 தீபங்கள்
9.    காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10.  களத்திர தோஷம்    -108 தீபங்கள்

வலம் வருதல்
1.    விநாயகர்                        -      1 அல்லது 3 முறை
2.    கதிரவன் (சூரியன்)      -      2 முறை
3.    சிவபெருமான்               -      3, 5, 7 முறை  (ஒற்றைப்படை)
4.    முருகன்                           -      3 முறை
5.    தட்சினா மூர்த்தி         -      3 முறை
6.    சோமாஸ் சுந்தர்          -      3 முறை
7.    அம்பாள்                          -      4, 6, 8 முறை  (இரட்டைப்படை)
8.    விஷ்ணு                          -      4 முறை
9.    மஹாலட்சுமி                     -      4 முறை
10.  அரசமரம்                        -      7 முறை
11.  அனுமான்                      -      11 அல்லது  16 முறை

12.  நவக்கிரகம்                  -      நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை 

13  பிராத்தனை                    -  108  முறை

* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
...
* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.

* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.

* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

வணங்கும் விதி

பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.
மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.
குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
... பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.
தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.
🦚🦢🙏🏻MPK🙏🏻🦢🦚

Saturday, November 21, 2020

படிக்க புண்ணியம் வேண்டும்

*படிக்க புண்ணியம் வேண்டும்*

நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..!

இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

*இழந்த செல்வம் மீட்டு தரும்* " தென்குரங்காடுதுறை "

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே..!

*கடன், சங்கடங்கள் போக்கும்* " திருபுவனம் சரபேஸ்வரர் "

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.

*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம்* "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு..!

*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர* "வாஞ்ஸ்ரீசியய்ம்"

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.

*பிதுர் தோஷம் நீக்கும்* " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர்.

இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

*மரண கண்டம் நீக்கும்* " திருநீலக்குடி "
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

*மாங்கல்ய தோஷம் நீக்கும்* " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

*கிரக தோஷங்கள் விலக்கும்* " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.

*பெண் பாவம் தீர்க்கும்* " திருவிசநல்லூர் "
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.
[24/10, 22:47] ssudarsan2004: *தேவாரம் பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25

மொத்தம் 275
இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25

சிவஸ்தலத் தொகுதிகள்

வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்

1. *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி ---- சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை --- காமனை எரித்தது
8. திருக்கடவூர் ---- யமனை உதைத்தது

2. *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*

1. கேதாரம் (இமயம்) ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்) ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி) ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்) ---- இராமநாதேஸ்வரர்

*முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம் ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை ---- நினைக்க முக்தி தருவது
4. காசி ---- இறக்க முக்தி தருவது

*பஞ்சபூத ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி ----- வாயு (வளி)
5. சிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)

*நடராஜருக்கான பஞ்ச சபைகள்*

1. திருவாலங்காடு --- இரத்தின சபை
2. சிதம்பரம் --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி --- தாமிர சபை
5, திருக்குற்றாலம் --- சித்திர சபை

*(வியாக்ரபாதர் வழிபட்டவை) புலியூர்கள்*

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

*சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர் -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர் ---- நீலவிடங்கர் --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

*சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர் ---- அசபா தாண்டவம்
3. மதுரை ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர் ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி ---- பிரம தாண்டவம்

*சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

*காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

*நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*

1. நந்தி சங்கம தலம் --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2. நந்தி விலகியிருந்த தலங்கள் ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்

பாக்கம்
4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

*சப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்*

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

*திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*

1. திருவோத்தூர் --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம் --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல் --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர் --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர் --- அரங்கநாதர்
12. திருவக்கரை --- அரங்கநாதர்

*ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்*

உட்கோயில் கோயில்

1. திருவாரூர் அரநெறி ---- திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் --- திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில் ---- மீயச்சூர்

*காயாரோகணத் தலங்கள்*

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

*மயானத் தலங்கள்*

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

*கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

*பூலோக கைலாசம்*

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

*அழகிற் சிறந்த கோயில்கள்*

1. தேரழகு --- திருவாரூர்
2. வீதி அழகு --- திருஇடை மருதூர்
3. மதிலழகு --- திருவிரிஞ்சை
4. விளக்கழகு --- வேதாரண்யம்
5. கோபுரமழகு -- திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

*பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*

1. திருக்குற்றாலம் -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம் --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர் --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம் --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை. ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*

1. மயூர தாண்டவம் - மயிலாடுதுரை
2. அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3. கடிசம தாண்டவம்- திருவக்கரை
4. சதுர தாண்டவம்- திருநல்நூர்
5. சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6. லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

*பெரிய கோபுரத் தலங்கள்*

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

*மண்டபங்கள் சிறப்பு*

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் - கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*

1. திருவானைக்காவல்
2. ஆக்கூர்
3. திருத்தேவூர்
4. திருக்கீழ்வேளூர்
5. சிக்கல்
6. வலிவலம்
7. அம்பர்மகாளம்
8. தண்டலை நீள் நெறி
9. திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

*பெரிய லிங்கம்*

கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.

*பெரிய நந்தி*

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

*புகழ்பெற்ற கோயில்கள்*

கோயில் – சிதம்பரம்
பெரியகோயில்- தஞ்சை
பூங்கோயில் – திருவாரூர்
திருவெள்ளடை- திருக்குருகாவூர்
ஏழிருக்கை-சாட்டியக்குடி
ஆலக்கோயில்-திருக்கச்சூர்
கரக்கோயில்- திருக்கடம்பூர்
கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
மணிமாடம்- திருநறையூர்
தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
சித்தீச் சுரம்- திருநறையூர்.

*நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்*

1. திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2. திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3. சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4. மாணிக்கவாசகர் – தில்லை

*சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2. அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3. மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்.

*சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருவண்ணாமலை
2. அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3. மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்

பக்தர்கள் பொருட்டு

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

என்றென்றும் இறைப்பணியில் 

*ஸ்ரீலஸ்ரீ பார்கவ மகரிஷி பீடம்,*
*ஸ்ரீ ஸத்குரு வாழ்வியல் மையம், நாகல் நகர், திண்டுக்கல் 3*
8344007714

உண்மையில் கடவுள் இருக்கிறாரா?

*#கேள்வி* : - கடவுள் உண்மையிலே இருக்கிறாரா ? 

தயவுசெய்து விளக்கமாகக் கூறவும் ?

*#ஓஷோபதில்* : - " இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி அலுத்துப் போய்விட்டது !

 மின்சாரம் என்றால் என்ன , உயிர் என்றால் என்ன , மறுபிறப்பு எப்படி ஏற்படுகிறது , இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதற்கு யாராவது ' இதுதான் ' என்று முடிவாக நிரூபிக்க முடிந்தால் , கடவுள் உண்டா , இல்லையா என்பதையும் நிரூபிக்க முடியும் !

 மேற்சொல்லியவற்றை சற்று ஆழ்ந்து பாருங்கள் . எல்லாமே இயக்கம்தான் ( Process ) ! 

எதுவுமே ஒரு பொருளாகக் ( Objcet ) கிடையாது .

ஆகவே கடவுள் என்பதும் ஒரு இயக்கம்தான் . 

அது உயிரற்ற பொருள்களில் ( Inanimate Objects ) உறக்கமாக இருக்கிறது .

 உயிர்ப் பொருள்களில் ( Animate Objects ) உயிராக - பிரக்ஞையாக - உணர்வாக - சக்தியாக இருக்கிறது .

இயக்கம் என்று வரும்பொழுது , மேடு , பள்ளம் ; இன்பம் , துன்பம் ; பகல் , இருட்டு ; ஆண் - பெண் ....... என்று மாறுபட்டு இயங்குகிறது .

 அப்பொழுதுதான் அது ஒரு இயக்கமாக இருக்க முடியும் .

 ஆகவேதான் நான் உங்கள் உள்ளே உள்ள உயிர்த்தன்மையை வணங்குங்கள் என்று கூறுகிறேன் .

கடவுள் உங்களுக்குள்ளே - உங்களோடு மிக நெருக்கமாக இருக்கிறார் . 

அதை நீங்கள் வெளியே தேடுவது முட்டாள் தனமில்லையா ? 

மதவாதிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள் !

ஆகவே , கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் ஒரு செயலோடு , அது சம்பந்தப்படும் பொழுதுதான் தெரியும் .

 மின்சாரம் இருப்பதற்கு ஆதாரம் , அது செயல்வடிவம் பெறும்பொழுதுதான் விளங்கும் , - (டிவி , ரேடியோ , மோட்டார் ஓடுதல் .....)

கடவுள் உங்களிடம் உணர்வாக ( Consciousness ) இருக்கிறார் . 

ஹெய்சென்பெர்க் ( Heisenbergh ) என்ற ஒரு ஜெர்மன் விஞ்ஞானியின் , ' நிலையாமைத் தத்துவம் ' ( Unerfainity Principle ) பற்றி உங்களுக்குத் தெரியுமா ? 

அவர் கூறுவது . " அணுவில் உள்ள மூலக்கூறுகள் ஒருசமயம் பொருளாகவும் , மறுசமயம் அலையாகவும் இன்னொரு சமயம் பொருளாகவும் அலையாகவும் , மறுசமயம் எதுவுமே இல்லாமலும் ( Nothing ! ) இருக்கிறது " என்று கூறுகிறார் .

 இதுவே கடவுள் தத்துவத்திற்கும் பொருந்தும் ! 

கடவுள் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கிறார் . அதனால்தான் மனிதன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறான் !

 இதில் புத்தர் அந்த ஒன்றுமற்ற தன்மையை ( The Great Nothing ) வற்புறுத்துகிறார் ! மதங்கள் பொருள்களை வலியுறுத்துகின்றன .

 ஆத்திகர்கள் ! யோகிகளும் , ஞானிகளும் அலையை வற்புறுத்துகிறார்கள் . 

*நாத்திகன் , அலையையும் - பொருளையும் பார்த்துப் புரியாமல் தவிக்கிறான்* .

இதை ஆழ்ந்து புரிந்துகொண்ட ஒருவன் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு , தன் வாழ்நாளை வீண்டிக்க மாட்டான் ! 

மனிதன் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதே ஒருவருக்கொருவர் அன்பும் , கருணையும் கொண்டு உதவி செய்துகொண்டு , ஆனந்தமாகச் சிரித்து வாழவே ! வேறு எதற்காகவும் இல்லை .

 பிறகு அவன் தன்னைத்தானே அறிந்துகொண்டு , ஞானத்தை அடைய வேண்டும் . "

#கேள்வி : - கோவில்களுக்குச் செல்வது நல்லதா , கெட்டதா ?

#பதில் : - நல்லது , கெட்டது , நம்பிக்கை எல்லாம் ஒரு தனிமனிதனைப் பொறுத்த விஷயம்.

*உங்களால் , அந்தச் சிலையை ஒரு அன்பு உருவமாகப் பார்க்க முடிந்தால் , ( ராமகிருஷ்ணரைப்போல ) உங்களால் பக்தி யோகத்தில் முன்னேற முடியும் .*

 ஆனால் இப்படிப் பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? அந்த மனப்பக்குவம் யாரிடம் இருக்கிறது ?

கோவிலுக்குப் போகும் 100 - க்கு 99 பேர்கள் , ' எனக்கு அது வேண்டும் , இது வேண்டும் ' என்று வேண்டிக்கொள்ளத்தான் போகிறார்கள் .

 அதாவது " வேண்டிக்கொள்ள ! " கைமாறாக , காசு போடுகிறேன் , தலை முடியைக் கொடுக்கிறேன் என்று வேறு வியாபாரம் ! 

இதுதான் ஆன்மீகமா ?
ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் . நீங்கள் வேண்டிக் கொள்ளுவது உங்களிடமேதான் ! 

அதாவது எதிரே உள்ள சிலையை முன்னிறுத்தி , உங்கள் உயிர்தன்மையிடம் , உங்கள் தெய்வீகத்தன்மையிடம்தான் வேண்டிக்கொள்கிறீர்கள் ! 

*#ஓஷோ*

Friday, November 20, 2020

சிவனை வணங்கினால் துன்பமா துயரமா?

ௐௐௐௐௐௐௐௐௐௐ
              சிவ சிவ !
             ~~~~~~~~~
     *துன்பங்களா ?*
 ******  *சிவனடியார் களுக்கா ?*
 ***********************

                    *சிவனடியார்கள் பலர் தம் வாழ்வியல் துன்பங்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலும் , பொதுத் தலங்களிலும் , பல பதிவுகள் இட்டு வருகிறார்கள் ! சிலர் நான் இவ்வாறெல்லாம் வணங்குகிறேன்  ; எனக்கு இப்படித் துன்பமிழைத்து விட்டாரே !  , என ,இறைவனையே தாழ்த்திப் பதிவுகள் செய்ததைக் கண்டு அதிர்ச்சியே ஏற்பட்டது !*
      *இறைவன்பால் இவர்களுக்கு எந்த அளவுக்கு , அன்பின்மையும் , மரியாதை இன்மையும் உள்ளன !*
      *எங்ஙனம்  ஆளும் அருள் ? என்றே எண்ண ஓட்டங்கள் மேலிட்டன !*
      *உலக வாழ்க்கை இன்பமயமானது என்று தவறாக நம்புவதன் விளைவே இது !*
   *அடுத்து /தீதும் நன்றும் பிறன் தர வாரா / ,என்ற மொழியை உணராதது , & நமக்குள் இருக்கும் இழி குணங்களையும் , ஆராய்ந்து உணராதது !*
     *சிவ பெருமான் ஒருவரே கடவுள் என உணராதது !*
     *காமம் , குரேதம் , லோபம் , மோகம் , மதம் , மாற்சர்யம் எனற உயிரறிவைப் பற்றி நிற்கும்  அறு வகைப் பகைகளை வெல்லாதது !*
*இவை இறையன்பைப் பெறத் தடையாக நிற்பவையுங் கூட !*
      *இறைவனைத் தவிர இன்பமோ துன்பமோ அளிக்க வல்லார் யார் ?*
  *~ நலனொடு தீங்கும் தான் அலது அன்றி ~01 - 42 -04*
 *~நல் வினையும் தீ வினையும் ஆனான் தன்னை ~06-11-02*
      *இறைவனாரே விதித்து , உயிர்களைப் பக்குவப் படுத்தி தன் கழல் கூடச் செய்யும் வகையில் ஏற்றி அனுப்பியத் துன்ப வினைகளை யாரே உணரவல்லார் ?* 
  *~ என்றும் இடரே துன்பம் ஈவானாம் ~ 06-15-03  என்பர் திரு நாவுக்கரசு பெருமான் !*
     *கொடுத்தல் , ஈதல் என்ற சொற் பொருள் வேறுபாடுகளை ஆய்ந்து உணர வேண்டும் !*
*இறைவனே விதித்தவாறு வரக்கூடியத் துன்பங்களை விளைவிக்கும் விதியையே வெல்வதற்கு அருளாளர்கள் எவ்வளவோ வழிகளை அருளியுள்ளார்களே !* 
    *எத்தனை பேர் கற்றுத் தெளிந்து ,உணர்ந்து , உலகியல் பார்வையை மாற்றிக் கொண்டு இறைவனை நோக்கிப் பயணிக்கிறோம் ?*
     *விதியை வெல்ல முடியுமா ?*
   *அது எப்படி ?*
    *மார்க் கண்டேயருக்குப் பதினாறு வயது என நிர்ணயித்தது யார் ?*
      *ஓ ..... !  சிவ பெருமான் தான் !*
      *எம தர்மனின் கடமை என்ன ?*
        *சிவ பெருமான் விதித்த ஆயுள் எல்லை முடியும் போது , உயிரை உடலிலிருந்து பிரித்துக் கொண்டுச் செல்வதுதான் !*
     *மார்க் கண்டேயர் என்ன செய்தார் ?*
     *இறைவன் கழலை சரணடைந்துப் பற்றிப் பிடித்தார் !*
      *எமன் அவர் உயிரைப் பற்ற முனைந்தது தவறா ?*
       *இறைவன் விதித்த விதிப்படி ,திருமால் , பிரமன் , இந்திராதி தேவர்களானாலும் , இறைவன் விதித்த ஆயுள் எல்லை முடியுமாயின் அவர்கள் தாங்கிய உடல்களிலிருந்து உயிர்களைப் பிரித்துப் பற்றிச் செல்லத்தான் வேண்டும் !*
       *கடமையில் தவறினால் ?*
        *உடன் பதவி பறி போய்விடும் ! தண்டனைக்கும் ஆளாக நேரிடும் !*
   *மீண்டும் அதே வினா !*
   *மாரக்கண்டேயர் உயிரைப் பற்றிச் செல்ல எமன் முயன்றது சரியா தவறா ?*
    *ம்...... சரி என்றே தோன்றுகிறது !*
     *ஆனாலும் இறைவன் ஏன் அவரைச் சினந்து ,  கொன்று , மார்க்கண்டேயரை என்றும் சிரஞ்சீவியாக ( எல்லையில்லா வாழ் நாட்களுடன் ) வாழ அருள் கொடுத்தார் ?*
       *நீங்களே சொல்லுங்களேன் !*
      *விளக்கத்தை என்னிடமே கோரியதற்கு நன்றி !*
       *மார்க் கண்டேயர் ஒரு தவ சீலர் !*
       *சிவ பெருமான் மட்டுமே ஒரே கடவுள் எனத் தெளிந்தவர் !*
  *அறு பகைகளை வென்றவர் !*
        *சிவ பெருமானிடம் சரணடைந்து தன் ஆயுளை நீடித்துக் கொள்ள முடியும் என்ற ஞானம் உடையவர் !*
       *இறைவனை நோக்கித் தவம் செய்தார் !*
 *பிடித்தார் ! இறைவன் கழல்களையே பற்றிப் பிடித்தார் !* *தன்னை இறைவனிடம் முழுவதுமாக ஒப்படைத்தார் !*
      *அவரது ஆன்ம அறிவில் சிவத்தின் கழலைப் பற்றியதன்றி வேறு எந்த நினைவோட்டமும் இல்லை !*
      *சிவமே நிர்ணயித்த விதியை அவரே மாற்ற வேண்டியதாயிற்று !*
   *அது சரி !  தன் கடமையைச் செய்த எமனை ஏன் உதைத்துக் கொல்ல வேண்டும் ?*
     *அது இறைவனே விதித்த ,தர்மத்துக்கும் , நியதிகளுக்கும் முரண்படுகிறதே ?*
      *இது உலக உயிர்களுக்கு மெய்யடியார்கள் பெருமையை உணர்த்தி , இறைவனால் நம்மைப் பக்குவப் படுத்தும் ,கருணையே காரணமாக , விதிக்கப்பட்ட விதியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என உணர்த்த இறைவனே அரங்கேற்றிய ஞான நாடகமையா !*
     *தண்டனைக்கு உள்ளாகத் தக்க வகையில் எமன் செய்த தவறுதான் என்ன ?*
     *மார்கண்டேயர் ஒரு மெய்யடியார் !*
     *இவர் அவரைப் பிடிக்கச் சென்ற போது , அவர் சிவ பூசையில் ஒன்றி சிவ மயமாகவே இருந்தார் !*
      *இறைவனிடம் தன்னை முற்றொப்படைப்பு ( சரணாகதி ) செய்த நிலை !*
     *எமன் கொஞ்சம் சிந்தித்திருக்க வேண்டும் !*
      *இறைவனிடம் தன் இக்கட்டான சூழலை எடுத்துச் சொல்லித் தக்கவாறு வழி நடத்துமாறு மன்றாடி இருக்க வேண்டும் !*
     *ஆனால் இவன் என்ன பெரியவனோ என்ற ஆத்திரமே ஓங்கியது !*
       *மெய்யடியார் என்றத் தகுதி பற்றிய சிந்தனையே இல்லை !*
     *தவறிழைத்தான் ; தண்டிக்கப் பட்டான் !*
      *இந்த வரலாறு  என்ன உணர்த்துகிறது ?*
        *தூய மனத்துடன் இறைவனை உள்ளத்தில் ஏற்றி , இறைவனைத் தவிர அடைக்கலம் புகத் தக்க இடம் இல்லை என்ற உறுதி இருந்தால் , & பெருமானே விதித்த விதியையே ,அந்தப் பெருமானின் துணை கொண்டே , வெல்லலாம் என்ற விடையே கிடைக்கிறது !அல்லவா ?*
      *இந்த வரலாற்றை ,  இறைவன் விதித்தபடி , உயிர்களுக்கு காலம் அறிந்து , வினைகளை ஊட்ட நியமிக்கப் பட்ட , நட்சத்திரங்களும் , கோள்களும் ,இதர தெய்வங்களும் அறிவார்களா ?*
     *என்ன ஐயம் இது ?*
     *ஆம் ! நாமே அறிந்திருக்கும் போது அவர்களும் அறிந்திருப்பார்களா என்ற ஐயம் ஏன்  ?*
      *ஆக , வாழ்வியல் துன்பம் ஏற்படும் நிலையில் ,*
*இறைவனையே தூய உள்ளத்துடன் சரணடைந்தால் , இவர்கள் துன்பத்தை ஊட்டுவார்களா ?*
      *இந்த உண்மையை உலகோருக்குத் தெளிவு படுத்தவே , திரு ஞான சம்பந்தப் பெருமான் இறைவன் நிர்ணயித்த விதியை , அவனது பாதங்களைச் சரணடைந்து , அவன் பெருமைகளை ஞானாசிரியர்கள் வெளிப் படுத்தி அருளியவற்றை எல்லாம் உணர்ந்து ,அவன் நம் பொருட்டு அருளிய அருட் திருமேனியையும் , கொண்ட அருட் கோலங்களையும் , உச்சி முதல் பாதம் வரை , மனத்துட்புகச் செய்ய வல்லோமானால் ,*
*கோள்கள் தொடங்கி வினைகளைக் ,*
*காலமறிந்து ஊட்ட நிர்ணயிக்கப் பட்டத் தெய்வங்கள் , அந்தந்த மெய்யடியார்களைப் பொறுத்து  ,  துன்ப வினைகளைச் சேர்க்காமல் நல் ஆசி வழங்கிச் செல்வர் என்றே , வேயுறு தோளி பங்கன் என்ற திருப்பதிகத்தில் ஆணையிட்டு பகர்ந்துள்ளார் ?*
     *ஆணையிட்டா ? ஆம் !*
*ஆணையிட்டே தான் !*
     *இப்போது அறிந்து கொண்டோமையா !*
       *இவ்வாறு ,
 தான் ஆணையிட்டு அருளியதைக் கூட எல்லா உயிர்களும் பற்ற வல்லவையல்ல !* ;
 *நம்பிக்கை இன்மையாலும் ,*
*(ஏற்காமல் விலகித் துன்பத்தையே அடைவர் என்று , முக்காலம் உணர்ந்த ஞானியான அவர் ,பின்னால் நிகழ உள்ள வரலாற்று நிகழ்வை அத் திருப் பதிகப் பத்தாவது பாடலில் இடம் பெறச் செய்தார் !*
     *என்ன ஐயா அது ?*
*" புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திரு நீறு செம்மை திடமே !"*
   *என்ற மெய்த் திருவாக்குதான் !*
      *மேலும் விளக்கினால் நல்லது !*
      *இந்தத் திருப்பதிகம் எங்கு எப்போது அருளப்பட்டது ?*
      *திரு மறைக்காட்டில்  ,*
*ஆலவாய் நோக்கி ,அமணர்கள் தீங்கை நீக்கத் திரு ஞான சம்பந்தர் அங்கு செல்லத் தான் முடிவு செய்ததை அப்பர் பெருமானிடம் சொன்னார் !*
     *அமணர்கள் தீங்கை எண்ணி , அஞ்சி பல காரணங்களைச் சொல்லித் தடுத்து , மேலும் கோள்கள் தானும் தீய நிலையில் உள்ளன! ஆகவே தாங்கள் மதுரை செல்லச் சம்மதிக்க மாட்டேன் என்று அப்பர் பெருமான் மறுத்தபோது ,  அந் நிலையில் , திரு ஞானசம்பந்தர் அருளியது இத் திருப் பதிகம் !*
      *நன்று ! திரு மறைக்காட்டிலிருந்து மதுரைக்கு பல்லக்கில் செல்ல , அக்காலத்த்தில் எத்தனை மாதம் ஆகியிருக்கும் ?*
     *காடு ,மலை , காட்டாறுகள் , நதிகளையெல்லாம் கடந்து செல்லக் குறைந்தது இரண்டு மாதம் ஆகியிருக்கலாம் !*
     *அங்கு சென்று அமணர்களை சந்திக்கப் போகிறாரா ?* ; *அவர்களிடம் வாதம் செய்யப் போகிறாரா ?;*
    *அப்படியே வாதம் செய்யும் சூழல் ஏற்படினும் , இரு சமயக் கோட்பாடுகளின் மீதா அல்லது மந்திர தந்திரங்கள் மூலமாகவா , ஆலவாய் அண்ணல் திரு நீற்றின் ஆற்றலாலா ?* *என்பவற்றை எப்படி அறிந்திருக்க முடியும் ?*
     *ஆம் ! இயலாது தான் !*
    *அறிக !*
  *வேயுறு தோளி பங்கன் பாடல்கள் முழுதும் இறைவனாரே ,திரு ஞான சம்பந்தர் ஆன்ம அறிவில் மேலோங்கி நின்று அருளியவை என்று !*
     *எவ்வாறு ?*
 *இந்த மெய்த் திருவாக்கு பின்னர் வரலாற்று நிகழ்வாக நிறைவேறிற்று !*
     *திரு நீற்றுத் திருப் பதிகத்தைப் பாடியே , ஆலவாய் அரனின் திருநீற்றைப் பாண்டியனின் வயிற்றில் தடவி , அவன் வெப்பு நோயையே அகற்றிக் குளிர்வித்து , அவனைத் தெளிவித்து ,*
*அமணர்களை வாதில் வென்றது வரலாறு !*
    *அகச் சான்று காண்க !*
     *~ ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் / போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் / தேற்றித் தென்னன் உடலுற்றத் தீப் பிணியாயின தீரச் / சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே ~02-66-11*
     *தென்னன் ஆகியப் பாண்டியனின் அஞ்ஞானத்தைத் தெளிவித்து , ஆலவாய் ஈசனின் திரு நீற்றினை அவன் மீது தடவி ,அவனுக்கு உற்றத் தீப்பிணியைத் தீர்த்த வரலாறு திரு ஞான சம்பந்தர் வாக்கினாலேயே அகச் சான்றாக விளங்கி நிற்கிறது !*
    *இதிலிருந்து என்ன உண்மை நிறுவப் பட்டது ?*
      *வேயுறு தோளி பங்கன் என எடுத்தத் திருப் பதிகத்தில் இடம் பெற்ற  வாக்கு , பின் வரலாற்று உண்மையானது தெரிகிறது !*
    *அவ்வளவுதானா ?*
*அவை இறை வாக்குகளே என உணர்ந்து கொண்டேன் !*
*அது மட்டும் தானா ? ; கொஞ்சம் மாற்றி யோசி !*
     *ம் ம்  .... ஆ ... தெளிந்தேன் !*
      *இத் திருப்பதிகப் பத்தாவது பாடலில் அருளிய மெய்த் திருவாக்கே , பின் வரலாற்று நிகழ்வு ஆயினமையால் , ஏனைய பாடல்களிலும் ,* *காணும் ,*
*இறைவனின் , அருட் திரு மேனியையும் ,*
*கொண்ட கோலங்களையும் , என் ஆன்ம அறிவில் நிறைக்க வல்லவனாயின் , கோள்கள் நட்சத்திரங்கள் , முதலான வினைகளை ஊட்டித் துன்புறுத்த வல்ல தெய்வங்களும் , பிறவும் , இறைவனாரே நிர்ணயித்தத் தீ வினைகளை , எனக்கு ஊட்டாமல் ,  நல் ஆசி கூறியே விலகுவர் என்பதை அறிந்து கொண்டேன்  !*

     *ஆக இறைவன் விதித்த விதியை வெல்ல முடிமா ?*
      *முடியும் ஐயா !*
     *சரி ! என்ன செய்யப் போகிறாய் ?* 
      *இறைவனிடம் சரண் புகுவேன் ; திருமுறைகளையும் ,*
*சாத்திர ,சிவ புராணங்களையும் , படித்துத் தெளிந்து ,உணர்ந்து , அவரை முற்றிலும் உணர்வேன் !*
 *அவரது அருட் திருமேனியையும் , கொண்ட கோலங்களையும் , சிந்தையில் நிறைப்பேன் !*
     *அடியார் கோலம் கொள்வேன் !*
    *அடியார் கூட்டுறவிலேயே வாழ்வேன் ! சிவ ஞான விளக்கம் செய்யும்  வகுப்புகளில் சேர்ந்து , இறைவனின் பொருள் சேர் புகழை எல்லாம் கேட்டு ,இருள் சேர் இரு வினைகளையும் ஓட்டி விடுவேன் !*
      *இது போதும் இனி இன்பமே எந் நாளும் துன்பமே இல்லை !*
    நன்றி