ஐந்தெழுத்து மந்திரம் ஒரு சிறு விளக்கம்:
இம் மந்திரத்தில் ஐந்து நிலைகள் அல்லது ஐந்து வகைகள் உள்ளன என்பர்
முதல் நிலை: உலக இன்பங்களைத் தரவல்லது. இம்மை நலம் பயக்கும்.
மந்திரம்: நமசிவாய
இரண்டாம் நிலை: இம்மை மறுமைப் பயன்களை அளிக்கவல்லது
மந்திரம்: சிவாய நம
மூன்றாம் நிலை: இந்த உலகிலேயே, ஆணவம், கன்மம்( கர்மா), மாயை என்ற மூன்று தடைகளையும் நீக்கி இறைவனை அடைய உதவும்.
மந்திரம்: சிவயசிவ
நான்காம் நிலை: சிவனாகவே மாறும் நிலை. சிவ சிவ என்றிட தேவரும் ஆவார்; சிவசிவ என்ன சிவகதி தானே - திருமூலர்.
மந்திரம்: "சிவ" அல்லது " சிவ சிவ"
ஐந்தாம் நிலை: பெற்ற திருவடிப் பேற்றில், சிவகதியில் என்றென்றும் நிலை பெற்றிருத்தல். வாசனா மலம் தாக்காது காத்துக் கொள்ளுதல்.
மந்திரம்: " சி"
சி என்ற ஓரெழுத்தில் சிவாய நம என்ற ஐந்து எழுத்துக்களும் மறைபொருளாக உள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.
கூட்டு தவம் உங்களுக்கு நன்மை பயக்கும்; உலகுக்கும் நன்மை பயக்கும்🙏🙏
No comments:
Post a Comment