💐படித்ததில் பகிர்ந்தது💐
*கடவுளின் உருவம் எவ்வாறு இருக்கும்?*
*"கடவுள் என்பது தன்மைகள் தானே...*
பின்னர் ஏன்...
*கடவுளுக்கு உருவம்?"*
ஒரு சமஸ்தானத்தின் மன்னர்,
சுவாமி விவேகானந்தரிடம்
கேட்க...
அங்கு மாட்டியிருந்த ஒரு
ஓவியத்தை காட்டி,
விவேகானந்தர்,
"இது உங்கள் தந்தையா?"
"ஆம்" என்றார் மன்னர்.
"இது மிகவும் அசிங்கமாக
உள்ளது, இதை கழற்றி
குப்பையில் எறிந்து விடுங்கள்"
என்றார் விவேகானந்தர்.
உடனே, ஆவேசமடைந்த
மன்னர், "உங்களை தவிர வேறு யார் இதை கூறியிருந்தாலும்,
அவரது தலை இந்நேரம்
தரையில் விழுந்து இருக்கும்..."
என்றார்.
"மன்னிக்கவும் மன்னரே! அது
ஒரு ஓவியம் தான். ஆனால்,
உங்களது தந்தையின்
நினைவாக, குறியீடாக அந்த
உருவம் இருப்பதால் தானே
உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்தது....
அது போல தான், இறைவனை
நோக்கி வழிபடும் போது....
*சிந்தனை ஒரு முகமாக இருக்க வேண்டும்*
என்பதற்காக தான் ஒரு
குறியீடாக உருவம்
உருவாகியது..." என்றார்.
*"சரி, அதற்கு ஏன் இத்தனை கடவுள்கள்?"*
யார் உண்மையான கடவுள்?
சிவனா, விஷ்ணுவா,
முருகனா, விநாயகனா?
காளியா?
இத்தனை கடவுள்களை
வைத்துக் கொண்டு எந்த
இறைவனை வழிபடுவது?"
என்று மன்னர் கேட்க,
விவேகானந்தர்,
"உண்மைதான்....
இன்னும் ஆயிரமாயிரம்
கடவுள்களும் இருக்கிறார்கள்.
சிவ புராணம் படித்தால்,
சிவனே ஆதி இறைவன்
என்பார்கள்.
விஷ்ணு புராணம் படித்தால்
விஷ்ணுவே ஆதி இறைவன்
என்பார்கள்.
இன்னும் வேறு புராணங்களில்
இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை
அறியும் முன்....
தத்துவரீதியாக பலவற்றை
தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்து கடவுளர்கள் பெயர்
எல்லாமே *காரண பெயர்.*
*'சிவா* என்றால்
புனிதமானவன்,
தீயதை அழிப்பவன்.
*'விஷ்ணு* என்றால்
அனைத்திலும் இருப்பவன்,
*'கிருஷ்ணன்* என்றால்
வசீகரிக்க கூடியவன்,
*'விநாயகன்* என்றால்
அனைத்திற்கும் நாயகன்.
*இராமன்* என்றால் ஒளி
மிக்கவன்.
இப்படி ஒவ்வொரு பெயர்களும்
ஒரு தன்மையைதான்
குறிக்கிறதே தவிர,
தனித் தனி கடவுள்களை
அல்ல ...
இந்த தன்மைகளை பொருத்தி
பார்த்தால்,
இறைவனுக்கு இந்த
அனைத்து பெயர்களும்
பொருந்தும் அல்லவா?
கீதையில் கிருஷ்ணன்,
*"யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது.*
என்று சொல்கிறார்.
இங்கே கிருஷ்ணன் யார் ?
புல்லாங்குழல்
ஊதிக்கொண்டு, பசுவிற்கு
பக்கத்தில் நிற்பவன் மட்டும்
அல்ல அவன்.
*'பரமாத்மா என்பது அனைத்திலும் (உருவம், அரூபம்) வியாபித்து இருக்கும் இறைவன்.*
அவனை நீங்கள் சிவனின்
உருவத்திலும் நினைக்கலாம்,
முருகனின் உருவத்திலும்
நினைக்கலாம்,
இன்னும் சொல்லப்போனால்
இறைவன் நம்
எண்ணிக்கைகளுக்கு அடங்க
மாட்டான்.
ஒருமை, பன்மைகளுக்கு
அப்பாற்பட்டவன் இறைவன்.
அறிவுக்கு புலப்படாத
இறைவனை, ஒன்று, இரண்டு,
நூறு என்று நம்மால் எண்ணி
தீர்க்க முடியாது.
நீங்கள் ஒன்று என்று
நினைத்தால் ஒருவனாய்
காட்சி தருவான்.
பல என்று சொன்னால் பல
தெய்வங்களாக காட்சி
தருவான்.
இல்லை என்று நினைத்தால்
இல்லாமல் இருப்பான்.
புராணங்கள் எனப்படும்
தெய்வீக கதைகள்....
சாமான்ய மனிதர்களுக்கு
இறைவனின் பல்வேறு
தன்மைகளை குறித்த
பல்வேறு விஷயங்களை
விவரித்து....
அதன் மேல் ஒரு லயிப்பு
ஏற்படும் வகையில்
சுவாரஸ்யமாக சொல்கின்றன.
இறைவனின் ஒவ்வொரு
தன்மையும், ஒவ்வொரு
விதமான உருவங்களில்
சித்தரிக்கப்படுகிறது.
*இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தன்மைகள் இருக்கின்றன...*
ஆகவே .... |
*எண்ணிலடங்காத உருவங்களில் மக்கள் அவனை வழிபடுகிறாகள்.*
என்றார் சுவாமி
விவேகானந்தர்.
ஆக, இறைவனில் பாகுபாடு
பார்த்தால்...
இறைவனை அறிய முடியாது.
இறை தன்மையோடு நாம்
நடந்து கொள்ளும் போது
தான்...
இறைவனின் அருளை பெற
முடியும்...
ஆகவே,
*இறை தன்மை வளர்ப்போம்..*
*இறையருள் பெறுவோம்*
No comments:
Post a Comment