-
ஓம்
-
ஒவ்வொரு பொருளுக்கும் ஒலிநிலை உள்ளது. அதாவது நுண் நிலை உள்ளது. நாம் காண்கின்ற கேட்கின்ற அனுபவிக்கின்ற தொட்டுணர்கின்ற பொருட்கள் எல்லாமே இவ்வாறு நுண்நிலை அல்லது ஒலிநிலையில் இருக்கின்ற பொருட்களின் தூல வெளிப்பாடுகளே.
இவற்றின் இடையில் உள்ள தொடர்பு காரணகாரியத் தொடர்பு போன்றது .உலகமே அழிந்து போனாலும் கூட ஒலிநிலை அல்லது அந்த உலகின் உணர்வான தூலப் பொருட்கள் அனைத்தின் நுண் நிலையான பிரம்மத்தில் காரண வடிவில் நிலைபெறுகிறது.
படைப்பு தொடங்கும் முன்னர் முதலில் இந்த நுண் வடிவங்களின் தொகுதியான பொருள்விம்மிப் புடைப்பதுபோல் அதிர்கிறது. அப்போது நுட்பமான ஆதி ஒலியான ஓம் தானாக வெளிப்படுகிறது பின்னர் படிப்படியாக அந்தத் தொகுதியிலிருந்து ஒவ்வொரு பொருளுடையவும் நுட்பமான ஒலி வடிவம் தோன்றுகிறது. பின்னர் அது தூலமாக வெளிப்படுக்கிறது .இவ்வாறு உலகம் படைக்கப்படுகிறது.
வேதம் கூறும் ஒலி என்பது நாம் கேட்கும் ஓசை sound என்று அர்த்தம் அல்ல.
ஒலி என்பது கருத்துக்களின் தொகுப்பு.அதன் வெளிப்பாடே ஓசை sound .
-
இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் அதாவது பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ள எல்லா பொருட்களும் அணு அணு வாகச் சிதைந்து போனாலும் அந்தப் பொருட்களைப் பற்றிய உலகைப் பற்றிய கருத்து எஞ்சிநிற்கும்.அந்த கருத்துதொகுதி ஓம்.
-
படைப்பின் ஆரம்பத் தில் பிரம்மம் முதலில் ஒலி வடிவாகிறார், பின்னர்நாதம் அல்லது ஓம் வடிவாகிறார் அடுத்த நிலையில் முந்திய யுகங்களில் இருந்த பூமி ஆகாசம் சொர்க்கம் அல்லது பசு மனிதன் குடம் துணி முதலிய குறிப்பிட்ட ஒலிகள் அல்லது கருத்துக்கள் அந்த ஓம் என்பதிலிருந்து வெளிவருகின்றன. ஸித்த சங்கல்பரான பிரம்மத்தில் இந்தக் கருத்துக்கள் ஒவ்வொன்றாகப் படிப்படியாகத் தோன்றுகின்ற கணமே அவற்றின் தூல வடிவங்களும் தோன்றி இந்த அற்புதப் பிரபஞ்சம் ஆகிறது ஒலியே படைப்பின் அடிப்படை
ஓம் ஆதி ஒலி.அதிலிருந்தே இந்த உலகம் தோன்றியது.
-
மனம் பிரம்மத்தில் மூழ்கும் போது முதலில் இந்த உலகம் எண்ணமயமாகத் தெரியும்.பிறகு எல்லாமே ஆழ்ந்த ஓங்காரத்திற்குள்(ஓம்) ஒடுங்கும்.பிறகு அதுவும் கேட்காமல் போய்விடும் அது இருக்கிறதா இல்லையா என்று தோன்றும் இதுதான் அனாதி நாதம்.
பின்னர் மனம் சுத்தப் பிரம்மத்தில் ஒடுங்கிவிடும் அவ்வளவுதான் எல்லாம் அமைதி
-
ஓம் மந்திர சிறப்பு
-
நம்நாட்டில் இந்து சமயத்தின் மிகவும் பக்தியுடன் உச்சரிக்கபடடும் புனித மந்திரம் ஓம்.
இதை பிரணவ மந்திரம் ஆகும். இந்த பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்தது வேதங்களில் சாரம் அனைத்தும் ஒம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன.
இந்த ஓம் மந்திரம் உச்சரிக்கப் படுவர்களின் உள்ளத்திற்கு கூர்மையையும், அமைதியையும் ஏற்படுத்தும் நன்மை தரும் மின்னதிர்வுகளை உண்டாக்குகிறது. நம் நாட்டில் பெரும்பாலான மந்திரங்களும் பிராத்தனைகளும் ஓம் என்ற ஓலியுடன் தான் தொடங்குகின்றன.
-
ஓம் நமசிவாய ஓம்,
ஓம் நாமோ நாராயணா
ஓம் முருகா
ஓம் சக்தி போன்றனவாகும்
எல்லா மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஓலியுடன் தொடங்குகின்றன.
-
ஓம் மனதை அமைதிபடுத்தி ஒருமுகப்படுத்துவதால் தியானம் செய்யும் பொழுதும் ஓம் எனும் மந்திரம் மனத்துக்குள் உச்சரிக்கப்படுகிறது.
ஓம் என்பது எழுத்து வடிவமும், பக்தியுடன் வணங்கப்படுகிறது.
ஓம் ஒரு மங்களச் சின்னமாக போற்றப் படுகிறது.
ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர்.
இச்சொல் அ, உ, ம், என்ற மூன்று எழுத்துக்களால் உருவாகிறது.
” அ” என்னும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது.
உதடுகளை உச்சரித்து “உ” என்று சொல்லப்படுகிறது.
உதடுகள் சேரும் போது ” ம்” என்னும் ஒலியில் அது முடிகிறது.
-
“எவ்வொருவன் பரம் பொருளாகிய ஓம் என்ற ஓரேழுத்து சொல்லை உச்சரித்துக் கொண்டும், என்னை மனதில் கொண்டும், இப்பூத உடலை விட்டு புறப்படுகின்றானோ, அவன் எல்லாவற்றிக்கும் மேலான கதியை அடைகிறான்” என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்
-
திருமூலர் இது பற்றி…
“ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத்துள்ளே பலபேதம்
ஓமெனு ஓங்காரம் ஓண்முத்தி சித்தியே ” என்கிறது திருமந்திரம்
-
ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது முதலில் ஒரு சொல்லாகவும், பின் உருவமாகவும், அதன் விளக்கங்கள் பலவாகவும், அதை உச்சரித்து தியானிப்பதால் முக்தியும், சித்தியும் கிட்டும் என்றும் திருமூலர் கூறுகின்றார்.
ஓம் மந்திரத்தை தியானித்து அறிபவன் தான் விரும்பியது அனைத்தையும் பெறுவான் என்று “கபோநிடதம்” கூறுகிறது,
-
பகவத்கீதை 8.12,13
எல்லா துவாரங்களையும் அடக்கி (கண்,காது உட்பட 9துவாரங்களை)
மனதை ஹிருதயத்தில் நிறுத்தி
தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து
யோகசாதனையில் நிலைபெற்று
ஓம் என்கின்ற ஓரெழுத்து அழிவற்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு,
உடலைவிட்டு யார் போகிறாரோ
அவன் மேலான நிலையை பெறுகிறான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்
-
“ஓம்” என்பது தமிழில் “ஆம்” என்று மருவியுள்ளது.பிற மதங்களில் “ஆமென்” என்று மாறியிருக்கிறது.
ஓம் என்பதன் அர்த்தம் அப்படியே ஆகட்டும் என்பதாகும்.
மனதில் ஒன்றை நினைத்துக்கொண்டு.ஓம் என்று கூறவேண்டும்.
அப்போது மனதில் நினைத்த கருத்தும்,வெளிப்பட்பட வார்த்தையும் இணைந்து செயல்வடிவம் பெறுகிறது.
-
1. ஒம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது
2. எதன் மீதும் செயல்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கின்றது.
3. ஓம் உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வுகள் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது.
4. உளவியல் ரீதியாக மன அழுத்திற்கு இது ஒரு மா மருந்து
-
காலையும், மாலையும் 15 நிமிடங்கள் ஓம் என்னும் மந்திரத்தை ஒருமுகத்துடன் செய்து வந்தால் ஆன்மிக பேரின்பத்தை நீங்கள் உணர முடியும். ஓம் மந்திரத்தை உள்வாங்கி உச்சரித்தால் அந்த மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் ஒருவித காந்தசக்தி போல பரப்புவதை உணரலாம்.
ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்துவரும் சப்தம்.
நம் பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருவதால் தான் இதற்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் வந்தது.
-
ஆலய வழிபாடு செய்து முடித்ததும், சன்னதி பிரகாரங்களில் அமைதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து மனத்துக்குள் ஓம், ஓம், ஓம் என்று உச்சரித்தால் உங்கள் மனம் இறைவனோடு முழுமையாக ஒன்றி விடும்.
அதன் காரணமாக ஆலய வழிபாடு செய்த பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
-
ஓம் மந்திரத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு பதஞ்சலி முனிவர் ஒரு வரையறை செய்துள்ளார்.
அதாவது, ஓம் என்று சொல்லும்போது ஓவின் உச்சரிப்பு குறைவாகவும், ம் என்பதின் உச்சரிப்பு நீண்டதாகவும் இருக்க வேண்டும் என்கிறார். ஓ என்று சொல்லத் தொடங்கும் போது உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். அப்போது மூச்சுக்காற்றை நன்கு உள் இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மூச்சுக்காற்றை மெல்ல வெளியில் விட்டபடி ‘ம்’ என்பதை உச்சரிக்க வேண்டும். அப்போது நீங்கள் நினைத்த இஷ்ட தெய்வத்தை மனதுக்குள் நன்கு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த முறையில், தினமும் ஓம் மந்திரத்தை சொல்லி வந்தால், நாளடைவில் உங்கள் இஷ்ட தெய்வம் உங்கள் ஆழ்மனதில் நிலையாக இடம் பெற்று விடும். உங்கள் மனம் வேறு சிந்தனைகளில் சிக்கி அலைபாய நேரிட்டாலும், ஓம் உச்சரிப்பால் இஷ்ட தெய்வத்தை ஓரிரு வினாடிகளில் மனதில் ஒரு முகப்படுத்தும் ஆற்றலை பெற முடியும்.
-
மிகவும் உயரமான இடத்தில் இருந்து ஓம் என்று உச்சரித்தால் பலன் அதிகம். அதனால்தான் முனிவர்கள் சித்தர்கள் மலை உச்சியில் இருந்து தியானம் செய்தனர். நாம் மலைக்கோவில்களில் இருந்து ஒம் சொல்லலாம். ஓம் மந்திரத்தை திரும்ப, திரும்ப கூறி வந்தால் மூச்சின் வேகம் குறையும். இது நோய்கள் வருவதைத் தடுக்கும். நோய் இருந்தால் நீங்கும். மலட்டுத் தன்மையை விரட்டும் சக்தி ஓம் மந்திரத்துக்கு உண்டு.
-
ஓம் எனும் ஒலி அதிர்வுக்கு இப்படி பல ஆற்றல்கள் தரும் மகிமை உண்டு.
-
No comments:
Post a Comment