*திருச்செந்தூர் - முக்கிய பரிகாரம்.*
*முக்கியமான ஒரு பரிகாரத்தை இங்கே எல்லோரும் பயனடையும் விதத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.*
வாழ்வில் நடக்காத,முடியாத, இயலாத ஒரு காரியம் என்று எதையாவது நினைத்து கொண்டு வருந்தி கொண்டு இருகிறீர்களா..🤧
*புறப்படுங்கள் திருசெந்தூர் கோவிலுக்கு..*
அங்கே உள்ள பிச்சைகாரர்களுக்கு [ பிச்சைகாரர்கள் என்று சொல்ல கூடாது ...உங்கள் புரிதலுக்காக அந்த வார்த்தையை சொல்கிறேன் ..மன்னிக்க...] *#பண்டாரசாப்பாடு கொடுக்க வேண்டும்.*
*அது என்ன பண்டார சாப்பாடு..?*
_திருசெந்தூரில் ஒருவன் பிச்சை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு பல விதிமுறைகள் உள்ளது._
அது பின்னொரு நாள் விளக்கமாக கூறுகிறேன்..
அவர்கள் யாரும் பிச்சைகாரர்கள் அல்ல..
*முருகனை மட்டுமே நம்பி குடும்பத்தை விட்டு விலகி வந்தவர்கள். அவர்களுக்கு அளிக்கும் அன்னதானம் தான் நாம் பண்டார சாப்பாடு என்று கூறுகிறோம்.*
அதை அவ்வளவு எளிதாக கொடுத்து விட முடியாது..
*முன் பதிவு செய்ய வேண்டும்.*
நம்ம பாஷையில் முன்பதிவு முதலிலேயே செய்ய வேண்டும்.
*அவர்களுக்கு வயிறார உணவு அளித்த பின் அவர்கள் சாப்பிட்ட அந்த இலையை மடி பிச்சையாக எடுக்க வேண்டும்.*
இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்...
*எத்தனை பேருக்கு உணவு தருவது, என்றைக்கு தருவது போன்ற விவரங்களுக்கு கோவிலை அணுகி விளக்கம் பெறுங்கள்.*
செய்து பாருங்கள் ....உங்கள் பல நாள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
நற்பவி
No comments:
Post a Comment