Saturday, September 12, 2020

தற்கொலை செய்து கொண்டால் பெரிய பாவம்

ஓம்
சிவ சிவ :
     ~~~~~~~
  *தற்கொலை ?*
      ******
    *இது அறிவு மயக்கம் !*
  *மயக்கம் , மயக்கம் , மயக்கம் !* *மயக்கத்திலே பிறந்து மயக்கத்திலே வளர்ந்து மயக்கத்திலே மடியும் மனிதர்கள் !*
  *பலருக்குத் தொட்டில் மயக்கம் சுடுகாடு மட்டும் !*
   *சிவத்தால் நிர்ணயிக்கப் பட்ட ஆயுட் காலத்துக்கு முன்,  வாழ்வை முடித்துக் கொள்வோர் ,ஆயுள் எல்லை வரை பேயாய்த் திரிந்து அலைய வேண்டும் !*
  *""பேயாய்த் திரிந்து எய்த்தேன் "*
  *எய்த்தேன் = இளைத்தேன்.*
 *(பேய் பயனின்றி விரைந்து ஓடி ஒன்றைப் பற்றத் துடிக்கும் ; எய்த இயலாமல் மிக்க மனத் துயருக்கு ஆளாகும். )~07-01-02* ~
 *~இது சுந்தர மூர்த்தி சுவாமிகள் வாக்கு !*
  *பேய் ,பிசாசு , பூதம் , பிரேதப் பைசாசம் , டாகினி போன்ற இழி நிலைகளை அடைவது , வாழ்வியல் துன்பங்களை எதிர் கொள்வதை விட ஆயிரம் மடங்கு கொடுமையானத் துன்பங்களை விளைவிப்பது என்பதை அனைவரும் உணர வேண்டும். !*
   *அங்கே மட்டும் விரும்பியவை கிடைத்து விடுமா ?*
   *துன்பம் நிரந்தர மானதல்ல !*
  *எதனை அடைய முயன்று தோல்வியைத் தாங்க முடியாமல் உயிர் விடுகிறீர்களோ அதுவும் நிலையானதல்ல !*
  *இளமையில் அற்பக் காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்வது , எந்த அளவுக்கு , தம்மையே கொடுத்து , ,தம் இன்பங்களை தியாகம் செய்து வளர்த்தப் பெற்றோர்களுக்குக் கொடுந் துன்பம் விளைவிக்கும் என்பதைச் சிந்திக்கக் கூட ஆற்றலில்லையா ?*
   *இது அவர்களுக்கும் , இறைவனுக்கும் செய்யும் நம்பிக்கைத் துரோகம் அல்லவா ?*
    *அடுத்தப் பிறவி மட்டும் தேவலோகப் போகப் பிறவியா கிடைக்கப் போகிறது?*
   *சிந்திக்க வேண்டும். !*
*தற்கொலை எண்ணம் அவ்வப்போது எண்ணத்தில் எழின் இவற்றையெல்லாம் சிந்தியுங்கள்.* 
  *தன் உயிருக்குத் தானே தீங்கு செய்து கொள்வதா அறிவுடைமை ?*
  *மனிதப் பிறவி எளிதில் கிடைக்கப் பெறாது ; இறைவன் கொடுத்த அருட் கொடை !*
  *குழந்தைகள் கையில் கிடைத்தப் பொற் கிண்ணம் போல வீசி எறியாதீர்கள் !*
  *இறைவனது*
*துணையைப் பற்றி வீரத்துடன் வாழுங்கள் !*
  *தேசத்துக்காக , இந்த சமூகத்துக்காக வாழுங்கள் !*
    *சிங்கத்தின் மீது குறி வைப்பது வீரம் !*
  *குறி தவறினால் உயிரை மாய்த்துக் கொள்வது எதிர் மறையானக் கோழைத் தனம் !*
  *தேசீய அவமானம் !*
  *நமக்குங் கீழே கோடானு கோடி மக்கள் வாழ்வதைச் சிந்தியுங்கள் !*
*சிவத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.*
  

No comments:

Post a Comment