Wednesday, September 9, 2020

அழுகணிச் சித்தரின் வரலாறு

சித்தர் தியானச்செய்யுள்

மாய மயக்கம் நீக்கி

காய கல்பம் தேடி அழுகண்ணி மூலிகை

அருளிய

ஆன்ம சித்தரே

எம் ஊழ்வினை ஓட- உம் கழல் பிடித்து கிடந்தோம் மனக்கலக்கம் நீக்கி மகிழ்ச்சி அருள்வாய் அழுகணி ஸ்வாமியே

சித்தர் வரலாறு

இந்த சித்தர் விவசாய குலத்தில் தோன்றியவர். ஸ்ரீ கருவூரார் சித்தர் காலத்திற்கு முன்னொத்தவராக அறியப்படுகின்றார்.

அரிய கல்ப மூலிகைகளான அழுகண்ணி தொழுகண்ணி ஆகியவற்றைப் பயன்படுத்தி, காயசித்தி கைவரப்பெற்றமையாலும், அழகிய வார்த்தைகளை அணிகலன்களாகக்கொண்டு தமிழ் பாடல்கள் புனைந்ததாலும், இவருக்கு இந்தப்பெயர் உருவாயிற்று. அழுகணி சித்தர் பாடல்கள் வாழ்க்கை வெறுத்து, ஞானமார்க்கத்தையே வற்புறுத்தி போதிக்கின்றது என்பது மகிழ்ச்சி கொள்ள வேண்டிய ஒன்றாகும்

நெடுங்காலம் வாழும் கலையில் காக புஜண்ட ஸ்வாமியை போல் இவரும் காரிய சித்து கைவர பெற்றவராவார்.

உலோப முத்திரையம்மையின் மைந்தராக இந்த்த சித்தர் போற்றப்படுகின்றார். சித்தி முறையில் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை மூலமாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் பல உருவங்களில் அழுகணி சித்தர் சுற்றித் திரிந்திருக்கிறார்.கருவூரார் நூல் ஒன்றில் இவர் அழுகின்ற கண்ணீராய் இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.

நவக்கிரகத்தில் ராகு பகவான் பிரதிபலிக்கும், இவரை வணங்குவதால் நமது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தை தீர்ப்பவராக உள்ளார். இவரை வழிபடுவதால் நாகதோஷம் அகலும்

மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும்

ராகு தசை நடப்பில் இருக்கும்பொழுது கணவன்-மனைவி இடையே உள்ள தாம்பத்திய பிரச்சினைகள் அகலும். தீய பழக்கங்கள் அகலும். ஜாதகத்தில் ராகு பகவானால் ஏற்படக்கூடிய களத்திர தோஷம் நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். வீண் பயம் அகன்று தன் பலம் கூடும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு அகலும்

இச்சித்தரை ஒரு சனிக்கிழமை அன்று தாம்பரம், மாடம்பாக்கம் "தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு" சென்று கருப்பு வஸ்திரம் வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக்கொண்டு, பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

ஸ்ரீ கிருஷ்ணப்ரியரே போற்றி

சர்ப்ப ரட்சகரே போற்றி

சங்கடங்களைப் போக்குபவரே போற்றி

பழங்களில் ப்ரியம் உள்ளவரே போற்றி

விவசாயிகளுக்கு அருள்பவரே போற்றி

லிங்க தரிசனம் செய்பவரே போற்றி

சிவனை பூஜிப்பவரே போற்றி

லோபா முத்திரையின் மைந்தரே போற்றி

திரிபுரத்தை தரிசனம் செய்பவரே போற்றி

திரிகூடத்தில் வசிப்பவரே போற்றி

சஞ்சலங்களைப் போக்குபவரே போற்றி

பால் அருந்துபவரே போற்றி

ஸ்நானப்பிரியரே போற்றி

ஞானம் அளிப்பவரே போற்றி

வாசி பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி

மூலிகை அலங்கார ப்ரியராகிய ஸ்ரீ அழுகணி சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி

இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு, பின்வரும் மூலமந்திரமான, "ஓம் வசி அழுகணி சித்தரே போற்றி! என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்

அதன்பின்பு, நிவேதனமாக நான்காவது முறை அரிசி களைந்த தண்ணீரை வடிகட்டி வைக்க வேண்டும். பிறகு உங்களின் பிரார்த்தனையை மனமுருகக் கூறி தீபாராதனை காட்ட அனைத்து வித நற்பலன்களையும் பெறுவீர்கள் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment