Tuesday, September 1, 2020

வள்ளலார் சொன்ன ஏழு திரைகள்



ஏழு திரைகள்

ஆன்மாவானது ஏழு

திரைகளுக்கு அப்பால் உள்ளதாக வள்ளலார் கூறுகிறார்

அதாவது ஏழு திரைகள்

ஆன்மாவை மறைத்து

கொண்டுள்ளது

இந்த ஏழு திரைகளை கடக்கும் பொழுது அவன் ஆன்மாவைக் காணலாம்

அதன் மூலம் ஏழாம் அறிவை பெறலாம் முதலில் கறுப்புத்திரை

இதை நீங்கள் தூங்கும்

பொழுது காணும் திரை

என்று சொல்லாம்

அல்லது தியானத்தின் தொடக்கத்தில் காணும் திரை இதுதான்

இது மாய சக்தியால் ஆனது என்று சொல்லப்படுகிறது

இவ்வுலகம் மாயையால்

ஆனது

மாயை உங்களை ஆட்கொண்டிருக்கும் வரை இந்த திரை மட்டுமே

உங்களுக்கு தெரியும்

இதையும் தாண்டி

நீலத்திரை கிரியா சக்தியையும்

பச்சைத்திரை

பராச்கதியையும்

சிவப்புத்திரை இச்சா சக்தியையும்

பொன்மைத்திரை ஞான

சக்தியையும்

வெண்மைத்திரை ஆதி சக்தியையும்

கலப்புத்திரை சித்

சக்தியையும்

குறிப்பாதாக வள்ளலார் கூறுகிறார்

இந்த ஏழு திரைகளையும்

நம்முள் காண முடியும்

இந்த ஏழு திரைகளையும் தாண்டினால் இறைவனை காணலாம்

ஒருவரின் தியானத்தை

பொருத்தும்

ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை (அல்லது தியானத்தை)

பொருத்தும்

ஒருவர் இத்திரைகளை

வெகு சுலபாமாகவோ அல்லது பல காலங்கள் கடந்தோ கடக்க நேரிடும் இத்திரைகளை கடந்து

ஆன்மா அல்லது

இறைவனை கண்ட பிறகு

கிடைக்கும் அறிவு ஏழாம்

அறிவாகும்

நமது சித்தர் தாத்தாக்கள் இந்த ஒளி பொருந்திய பாதையில் தான் பயணம் செய்தார்கள் என தெரிய வருகிறது தன்னை இறைவன் என்று

கூறுபவர்களும்

இறைத்தூதன் என்று

கூறுபவர்களும்

இவ்வழியிலே.

No comments:

Post a Comment