Wednesday, September 30, 2020

சுக்கிர தோஷம் நீங்க சித்தர் வழிபாடு

தியானச்செய்யுள்

மண்ணை இனிக்க வைத்த பிண்ணாக்கு ஈசரே பொன்னை மக்கள் முன்னே கொண்டு வந்த

பொற் சீலரே

உன்னை துணையென்று வந்த எமக்கு கண்ணை திறந்து அருள்வாய் சென்னிமலை சித்தர்,

சித்தர் வரலாறு

இடையர் குலத்தில் பிறந்த இந்த அருட்செம்மல், பிளவுபட்ட இரட்டை நாக்கை உடையதால் "பிண்ணாக்கீசர்' என்ற காரணப்பெயர் பெற்றார்

அத்திமர பொந்தோன்றைத் தன் இருப்பிடமாக ஆக்கிக்கொண்ட பிண்ணாக்கீசர் முன்னிலையில்

"பாம்பாட்டி சித்தர்" ஒரு முறை தோன்றி ஞானத்தை உபதேசித்தார். அன்றிலிருந்து நம் பெருமானிடத்தில் சித்துக்கள் விளையாடத் துவங்கின

நோய் தீர்க்கும் தன்வந்திரி யாக இவர் விளங்கியிருக்கின்றார். மண்ணையே மருந்தாகக் கொடுத்து, தீராத வியாதிகளுக்கெல்லாம் விடை கொடுத்திருக்கின்றார்.

இவர் பாடல்கள் பதிணென் சித்தர் கோவையில் காணப்படுகின்றது.

இறுதியில் அத்திமரத்தினுள்ளே

சிவபெருமானை தரிசித்து, அதன் உள்ளேயே ஐக்கியமாகி விட்டார் பட்டுக்கிடந்த அந்த மரம் இவர் சித்திக்குப்பின் பச்சை பச்சையாய் துளிர்த்து செழித்தது

பிண்ணாக்கீசர் ஜீவசமாதி அடைந்த அம்மரத்தை மக்கள் வழிபட துவங்கினர்.

இன்றும் நோய் வந்தவர் அந்த மரத்திற்கு காப்புக்கட்டி பூஜை செய்து பின் அதன் இலைச்சருகை கசாயம் வைத்துக்குடித்தால், நோய் உடனே குணமாகும்

இச்சித்தர் பெருமான் நவக்கிரகங்களில் சுக்கிர கிரகத்தை பிரதிபலிப்பவர். இவரை முறையாக வழிபட்டால் ஜாதகத்திலுள்ள சுக்கிர கிரகதோஷம் அகலும். சுக்கிர கிரகத்தினால் ஏற்படக்கூடிய களத்திர தோஷம்,திருமண தடை நீங்கி, திருமணம் இனிதே நடக்கும்

கணவன், மனைவி இடையே உள்ள ஊடல் பூசல் நீங்கி ஒற்றுமை பெருகும் பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அகலும். மாமியார் மருமகன், மருமகள்-மாமியார் பிரச்சினைகள் நீங்கும். உடலில் மர்மஸ்தானத்தில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்

மகாலட்சுமியின் அருள் பொங்கும்

இந்தச் சித்தர் பெருமானை வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் மாடம்பாக்கம் 'தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின்' அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு வெள்ளை வஸ்திரம், மல்லிகை, அல்லி, தாமரை புஷ்பங்கள் ஆகியவற்றைக் கொண்டும். பின் பதினாறு போற்றிகளைக் கூறியும் அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

சகடப்பிரியரே போற்றி

தெய்வநாமங்களை ஜெபிப்பவரே போற்றி

பைரவரை பூஜிப்பவரே போற்றி

கஷ்டங்களைப் போக்குபவரே போற்றி

சிவனே போற்றி லட்சுமி கடாட்சம் அளிப்பவரே போற்றி நவரத்தின மேனி உடையவரே போற்றி

வாழைக்காட்டில் வசிப்பவரே போற்றி

மானஸாதேவியை வணகுபவரே போற்றி

எதிரிகளை அழிப்பவரே போற்றி

சஞ்சாரம் செய்பவரே போற்றி

மூலிகைகளை முடியில் தரிப்பவரே போற்றி பூலோகத்தில் வசிப்பவரே போற்றி

ஓம் வம் பீஜாட்ஷரம் உடையவரே போற்றி

தரிசிப்பவரே போற்றி

கும்ப முனியை தேவலோக நாதத்தில் ப்ரியம் உள்ள ஸ்ரீ சென்னிமலை சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி

இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு, பின்வரும் மூலமந்திரத்தை "ஓம் வம் ஸ்ரீ சென்னிமலை சித்தர் ஸ்வாமியே போற்றி" 108 முறை ஜெபிக்க வேண்டும்.

பின்பு, நிவேதனமாக "கர்ஜீரகக்காய் தீர்த்தம்" வைக்க வேண்டும் (கர்ஜீரகக்காயைத் தட்டி உள்ளே இருக்கும் விதையை நீக்கி வேகவைத்து சாறு எடுத்து வடிகட்டி தேன் கலக்க வேண்டும்) அதன்பின்பு, உங்கள் பிரார்த்தனையை மனமுருகிக் கூறி வேண்டி தீபாராதனை செய்ய உங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

புதன் தோஷம் நீங்க சித்தர் வழிபாடு

ஸ்வாமிகள் தியானச்செய்யுள் மென்மையே கருவாகி உண்மையே உருவாகி வெண்மையே உடையாகி ஈமையில் இறைமை கண்டவரே நீரில் ஒளி ஏற்றிய நிரமயளே சிவசோதியில் கலந்த பரஞ்சோதியே வழி தேடி அலையும் எமக்கு ஒளி காட்டும் மெய் ஞான சோதியே

சித்தர் வரலாறு

இராமையாப்பிள்ளைக்கும், சின்னக்காவனம் அம்மைக்கும் மகனாக பிறந்தவர் நம் மகான்

தந்தையின் மறைவிற்குப் பிறகு தமையனார் சபாபதிபிள்ளை யோடும், அன்னையோடும் வள்ளலார் சென்னை வந்தடைந்தார். கல்வியில் கவனமில்லாமல், கந்தன் ஆலயத்தில் கிடந்தார். காஞ்சி வித்வான் சபாபதி தன்னால் பாடமுடியாத பாடல்களை மிகச்சுலபமாகப் பாடும் அருட் குழந்தைக்கு தான் பாடம் கற்பிப்பதா? என்றெண்ணி வள்ளலாருக்கு கல்வி கற்பிப்பதை நிறுத்தினார்.

இதனால் கோபமடைந்த தமையனார் தம் மனைவியிடம், 'தம்பிக்கு உணவு அளிக்காதே' என்று கூறிவிட்டார்.

அண்ணியாரோ கணவரில்லாத நேரங்களில் வள்ளலாரை விட்டின் பின்புறத்தில் அழைத்து உணவளித்தார்.

தந்தையின் திதி அன்றும் யாரும் இல்லாத சமயத்தில் நேரம் தாழ்த்தி வள்ளலார் சில்லிட்ட உணவை உண்ணும் பொழுது தனக்காக கலங்கிய அண்ணியாருக்காக வள்ளலார் கல்வி பயில் இசைந்தார்.

ஒரு அறையில் திருவிளக்கேற்றி கண்ணாடியை சுவரில் மாட்டி, அதற்கு மாலை சூட்டி பழம் படைத்து கற்பூரம் காட்டினார். பின்பு, கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தையே உற்று நோக்கினார் அப்பொழுது கண்ணாடியில் கந்தனின் உருவம் தெரியலாயிற்று அன்று முதல் தணிகையன் திருவருளால் அவருக்கு சகல கலைகளும் தாமாகவே விளங்கலாயின.

ஒரு சமயம் தன் தமையனார் செய்யவிருந்த சொற்பொழிவை இவர் செய்ய வேண்டிய சூழ்நிலை

அன்று இரவு 9 மணிக்கு முடிவுற வேண்டிய சொற்பொழிவு நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. கேட்டவரெல்லாம் வாயடைத்து சிலையாய் நின்றனர்

அவையினரெல்லாம் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கினர்

இந்த ஆனந்தம் வள்ளலார் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து.

தன் தம்பி முருகன் அவதாரமென்றுணர்ந்த தமையனார் தன் மனைவியிடம் பெருமானை மிக்க மரியாதையுடன் நடத்துமாறு கூற, அவரும் அவ்வாறே செய்தார் அண்ணியாரின் செயல் பெருமானுக்கு பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

வடிவுடை அம்மனே ஒருமுறை தமது அண்ணியின் உருவிலே காட்சியளித்து அவருக்கு அமுது படைத்திருக்கிறார்.

மூதாட்டி ஒருவரிடம் ஒரு பிடி மண்ணைக் கொடுத்து திறந்து பார்க்கச் சொல்ல மணலெல்லாம் சிறு வடிவ சிவலிங்கங்களாகத் தோன்றின. பின்பு பெருமான் அவர்கள் வடலூரில் "சத்திய ஞான திருச்சபையை தோற்றுவித்தார்.

அங்குள்ள அடுப்பு இன்றளவிலும் புகைந்து கொண்டே இருக்கிறது.

வள்ளலார் பெருமான் அவர்கள் புத பகவானை பிரதிபலிப்பதால் அவரை முறைப்படி வணங்க நம் ஜாதகத்தில் புத பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள்

நீங்கி, நல்ல பலன்கள் கிடைக்கும்

கல்வியில் தடை நீங்கி, சரியாக படிக்க இயலாத நிலை அகலும். வியாபாரப் பிரச்சினைகள் தீரும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைவரம் கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமானை ஒரு புதன்கிழமையன்று தாம்பரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு சென்று பச்சை வஸ்திரம், விபூதி, ஜாதிப்பூ ஆகியவற்றைக் கொண்டும், பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறியும் அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

ஜோதி தரிசனம் செய்பவரே போற்றி

மூவுலகத்திலும் சஞ்சரிப்பவரே போற்றி விபூதி அபிஷேகப்பிரியரே போற்றி அமிர்தப்பிரியரே போற்றி சிவதாண்டவப்பிரியரே போற்றி ப்ரணவத்தின் விளக்கமே போற்றி முருகனோடு ஐக்கிய மலரே போற்றி

ஒருநிலைப்பட்ட மனனத உடையவரே போற்றி

தியகவுகளில் இருந்து காப்பவரே போற்றி

மாயையை அகற்றுபவரே போற்றி!

சித்தகத்தி உடையவரே போற்றி

வெப்ளை வஸ்திரம் தரித்தவரே போற்றி!

சிலம்பத்தை தரிசிப்பவரே போற்றி கமலப்பிரியரே போற்றி

தேவ ஒளியே போற்றி ஈக ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் சர்வ ஒளி உருவான ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே

போற்றி போற்றி இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

அதன்பின், நிவேதனமாக விபூதி, பஞ்சாமிர்தம்(வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, தேன், நெய் சேர்த்து செய்ய வேண்டும்) வைத்து மனமுருக பிரார்த்தித்து வேண்டி நிறைவாக தீபாராதனை காட்ட சகல சவுக்கியங்களும் உங்களை நாடி வரும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

Tuesday, September 29, 2020

சிவன் சொத்து குல நாசம் என்றால் என்ன?

*சிவன் சொத்து குல நாசம்.*
*சின்னதா ஒரு கதை*

செய்த பாவங்களுக்கு கூட புண்ணியம் தேடிக்கொள்ள் வழிகள் பல உண்டு. 

ஆனால் என்ன செய்தும் தீராத பாவம் ஒன்று உண்டு என்றால் அது சிவன் சொத்து.... கோயில் சொத்து திருடியவனையும்.... அவன் குலத்தையும் நாசம் செய்துவிடும்.

 படைத்த இறைவனுக்கு தொண்டு செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை அவனுக்குரிய பொருள்களைக் களவாடினால் இறைவனின் கடும் சாபத்துக்கு ஆளாக நேரிடும்.

ஒருமுறை எமதர்மன் தனது தூதர்களை அழைத்து, ”இன்ன இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட இந்த மனிதனின் இறுதிகணம் இன்று முடியப்போகிறது. 

நீங்கள் சென்று அவனை அழைத்து வாருங்கள்.ஆனால் இம்முறை உங்களை நான் சோதிக்க போகிறேன். நீங்கள் செல்லும் இடத்தில் ஒரே மாதிரி இரண்டு பேர் இருப்பார்கள். இதில் ஒருவன் கலியுகம் போற்றவும், மற்றொருவன் கலியுகம் தூற்றவும் வாழ்ந்துகொண்டிருப்பான். எனக்கு கெடுதல் புரிபவனின் உயிர்தான் தேவை” என்றார்.

தூதர்களும் பூலோகம் வந்து யமதர்மன் சொன்ன இருவரையும் கண்காணித்தார்கள்.

 ஒருவன் தினமும் சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டு ஆலய பணிகளில் ஈடுபட்டு பக்தியுடன் இருந்தான். 

மற்றொருவன் கள்ளம், கபடு, திருடு, பொய் பித்தலாட்டம் என்று இருக்கும் அத்தனைதீயவழிகளையும் தன் குணமாக்கி வாழ்ந்துவந்தான். 

அவனது தோற்றமும், வாழும் முறைகளும் அருகிலிருந்த மக்களை வெறுப்படைய செய்தன. 

தூதர்கள் இருவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து குறிப்பிட்ட நேரம் வந்ததும் சிவாலயத்துக்குள் பணியில் இருந்தவனை பாசக்கயிறு போட்டு இழுத்து சொர்க்கவாசல் வழியைத் தவிர்த்து நரகத்துக்குள் இழுத்துச் சென்றனர்.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த யமதர்மன் ”என்ன செய்கிறீர்கள் தூதர்களே? நல்லவனை மாற்றி அழைத்து வந்ததோடு அவனை நரகலோகத்துக்குள் பிரவேசிக்க செய்துவிட்டீர்களே?” என்று கோபம் கொண்டார்.

 ”இல்லை யமதர்மரே.. இவன் சிவாலயங்களில் சேவை செய்வதாக சொல்லி அங்கிருக்கும் பொருள்களை யாரும் அறியாமல் களவாடி சமூகத்தில் நல்ல முறையில் நல்ல பெயர் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கிறான்

கேட்பவர்களுக்கு உதவி செய்தாலும் இறைவனுக்குரியதை எடுத்து அனுபவித்து அதையே உதவி என்று பொய் முகம் காட்டி மக்களை ஏமாற்றி இறைவனையும் ஏமாற்றுவதாக நினத்துக் கொண்டிருக்கிறான். 

இன்னொருவன் மக்களிடம் கொள்ளையடிக்கிறான். அவனுக்கு தான் செய்வது தவறு என்று தெரியவில்லை. 

ஆனால் இவனுக்கு நன்மை தீமை என அனைத்தும் தெரியும். 

இருந்தும் இவன் படைத்த இறைவனிடமே ஆட்டுத்தோல் போர்த்திய புலியாய் நல்லவ னாய நடித்துநாடகமாடிக்
கொண்டிருக்கிறான். 
அதனால் தான் இவனை அழைத்து வந்தோம். 

இவனுடைய குடும்பத்தினரும் இவனது வம்சமும் இனி நல்லதை நினைத்து கூட பார்க்க முடியாது. 

வாழ்க்கையில் கவலையும், அச்சமும், தரித்தரமும் சூழவே அவர்கள் இறுதிக்காலம் வரை கழிக்க வேண்டும். 

மரணத்தைக் கூட அகால மரணமாக தான் பெறமுடியும்” என்றனர்.

புன்னகைத்த யமதர்மன் என்னுடைய தூதர்கள் எப்போதும் தரும வழியிலேயே செல்வார்கள் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றார்.

அதனால் தான் சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறோம்.

*சிவ சிவ...*

யார் நவகிரகத்தில் குரு அவரால் ஏற்படுகின்ற நன்மைகள் என்ன?

குரு பகவான் ☆☆☆☆
ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு, அறிவாளிகளை உருவாக்குபவர் இவர் தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவரும் இவரே. இவர் ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம்.

⭐ குருவின் பார்வை எதையும் பூரணமாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் அழித்து நல்லருள் புரியும். குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும். பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களை குருவின் பார்வை செய்கிறது.

⭐ குரு பகவானின் அருள் கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம்.

⭐ குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம்.

⭐ குருவிற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.

குருபெயர்ச்சி :
நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
⭐ குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் மற்றும் செல்வம் கிடைக்கும்.
⭐ குரு பகவான் 2-ம் இடத்தில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்.
⭐ குரு பகவான் 3-ம் இடத்தில் இருந்தால் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
⭐ குரு பகவான் 4-ம் இடத்தில் இருந்தால் வீடு வாகன யோகம் கிடைக்கும்.
⭐ குரு பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
⭐ குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்தால் பிரச்சனையில்லாத வாழ்வு மலரும்.
⭐ குரு பகவான் 7-ம் இடத்தில் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
⭐ குரு பகவான் 8-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
⭐ குரு பகவான் 9-ம் இடத்தில் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
⭐ குரு பகவான் 10-ம் இடத்தில் இருந்தால் பதவி மாற்றம் கிடைக்கும்.
⭐ குரு பகவான் 11-ம் இடத்தில் இருந்தால் செல்வ  நிலையில் உயர்வு உண்டு.
⭐ குரு பகவான் 12-ம் இடத்தில் இருந்தால் சுபவிரயம், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

Monday, September 28, 2020

தேவ ரகசியத்தை அறிய படியுங்கள்

#தேவரகசியம்!*

*ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான்.* 

*எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி "அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான்.*
*இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான்.*

*நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை வைத்திருக்கிறீர்கள். அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள்.*

*ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.*

*ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்,  "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை.*

*கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை.*

*அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.*

*அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான்.* *அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன்,*
*"என்னடா இது,  இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே" என்று அவனைப் பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான்.*
*மேலும் "என்னுடன் வா" என்கிறான்.*

*எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை.*
*தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான்.* *திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.*

*அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று கூப்பிடுவாள்.*
*அவன் "விருந்தாளி வந்திருக்கிறானே" என்று சொல்வான்.*
*அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.*

*"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று".  எமதூதன்  ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான்.*
*ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் "சரி சரி வா"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிடுவாள்.*

*அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.*

*தையற்காரன் சொல்வான், "எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.!!*

*எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.*

*ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம்* *"இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது" என்று சொல்வாள்.*

*எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும்.*

*இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.*

*ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து "இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான்.*

*அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.*

*முதல் நாள் போய்விட்டது.*
*இரண்டாம் நாள் போய்விட்டது.*

*தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பான்,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான்.*

*இவன் டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான்". என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்பான்.* 

*அப்போது கார் டிரைவர் ஓடி வருவான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று சொல்வான்.*

*இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.*
*அப்படியே மேலே போவான்.*  

*அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்பான்.*

*அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.*

*"என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று இவன் கேட்பான்.*

*முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...?*
*அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.*
*பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.*
*அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும்  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.*
*#இதுதான் #தேவரகசியம் #ஒன்று!*

*மனிதர்களிடமே  பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது.  ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால்  வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.* 

*"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...?*
*அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?*
*அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.*

*நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு,  இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.*
*ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது #இரண்டாவது #தேவ ரகசியம் #புரிந்தது.*

*கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்.*

*மூன்றாவது #தேவ_ரகசியம்  மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே!!*
*"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை.*

*அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".*
*இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு  வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.*

*சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!!*

*நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை!*

*அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும்,  மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா?* *அதுதான் #மூன்றாவது #ரகசியம்!!*

*அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!!*

*இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப் போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்!!!*
*அதனால்தான் உலகத்தில்  நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்!*

*இந்த மூன்று ரகசியங்கள்* 

*அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.*

*இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார்.*
*மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும்,  அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.*

*மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம்.*
*இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*இந்த #அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.*

*இவைதான் அந்த மூன்று #தேவ_ரகசியங்கள் என்பான்.*

*எனவே, நாமும் இந்த தேவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்!*

கோ பூஜை செய்வது எப்படி?

#கோ #பூஜை #செய்வது #எப்படி?

எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.
மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷட் வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் மேலானவளும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் உயிர்களையும் படைத்து காத்து ரட்சிப்பவளானா தேவி மனோன்மணியான பராசக்தியின் அம்சமே கோமாதா என்கிறது கோமாதா மகாத்மியம்.
கோமாதா பூனையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கோ பூனையை செய்வதால் பணக்கஷ்டம் தீரும். மணப்பேரும் மழலை, வரமும் கிடைக்கும். பசுவை பூஜிக்கும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது. முன்னோர் ஆசி சேரும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். மனக்குறையும் உடல் பிணிகளும் விலகும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.சுருக்கமாக சொன்னால் கோமாதாவை வணங்குவதால் கிடைக்காத நற்பலன் எதுவுமே இல்லை. பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வம்சமாகவே இன்று உலகில் உள்ள எல்லா பசுக்களும் உள்ளன என்பது புராண வரலாறு. எனனே பசுக்களில் பேதம் எதுவும் இல்லாமல் எல்லாமே வழிபடத்தக்கவை தான்.
ஒருவராகவோ பலர் சேந்தோ இந்த பூனையை செய்யலாம். கோயிலில் அல்லது வீட்டில் நடத்தலாம். பொதுவானதோர் புனித இடத்தில் பலர் கூடி செய்யலாம். எப்படி செய்தாலும் பலன் நிச்சயம். கன்றுடன் கூடிய பசுவனாட8ால் பலன் கூடுதலாக கிடைக்கும். வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் பசுவுக்கு பூஜைசெய்யலாம். தொடர்ந்து ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொரு வாரம் அல்லது மாதம் செய்வது நற்பலனை அதிகரித்து குடும்பத்தில் சுபிட்சம் நிலவச் செய்யும்.
சுபமான நேரத்தில் பூஜையை தொடங்க, பசுவை அழைத்து வர வேண்டிய நேரம் போன்றவற்றை முதல் நாளே திட்டமிட்டு கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் பசுவை பூஜை நடத்தும் இடத்துக்கு அழைத்து வர செய்யுங்கள்.
பசு பழக்கப்படும் முன் அதனை மிரட்டும் விதமாக நடந்து கொள்ளாமல் முதலில் ஒன்றிரண்டு பழங்கள் போன்றவற்றை தந்தும் மெதுவாக தடவிகொடுத்தும் அன்புசெலுத்துங்கள். பசுவுடன் கன்றும் வந்திருந்தால் பசுவின் பார்வை படும் இடத்திலேயே கன்று இருக்கட்டும். அதற்கும் பழம் ஏதாவது தந்து பதட்டப்படாமல் இருக்க செய்யுங்கள்.
பிள்ளையாரை வேண்டிய பின்னர் பசுவின்மீதுசிறிது பன்னீர் தெளித்து மஞ்சள் தடவி, குங்கும பொட்டு அதன் நெற்றியிலும், பின்புறமும் வையுங்கள். (இயன்றவரை நல்ல தரமான மஞ்சள் குங்குமத்தையே பயன்படுத்துங்கள். தரமற்றதால் பசுவுக்கு எதாவது சிரமம் வந்தால் அது உங்கள் பூனையின்பலனை குறைத்து விடலாம். பசுவின் கழுத்தில் மாலை அல்லது பூச்சரத்தினை அணிவியுங்கள்.
பசுவின் உடலில் புடவை அல்லது ரவிக்கை துணியினை சாத்துங்கள். (பலர் சேர்ந்து செயயும் போது பொது
வாக ஒரு புடவை அல்லது ரவிக்கை துணி அணிவித்தால் போதும்) முகத்துக்கு மிக நெருக்கமாக சென்று பசுவை மிரட்டாமல் சற்று தொலைவாக இருந்தபடி சாம்பிராணி, ஊதுபத்தி தூபம், தீபம் காட்டுங்கள். பசுவின்முன்புறம் போலவே பின்புறத்திற்கும் இவற்றை காட்டுவது அவசியம். காரணம் மகாலட்சுமி கோமாதாவின்பின்புறம் தான் வாசம் செய்கிறாள்.கோ பூஜை செய்யும் எல்லோரும் சேர்ந்து பசுவுக்கு உரிய துதிகளை சொல்லுங்கள்.

பசுவை வணங்க ஒரு துதி
ஓம் காமதேனுவே நமஹ
ஓம் சகல தேவதா ரூபிணியே நமஹ
ஓம் மகா சக்தி ஸ்வரூபியே நமஹ
ஓம் மகாலட்சுமி வாசின்யை நமஹ
ஓம் வ்ருஷப பத்னியே நமஹ
ஓம் சௌபாக்ய தாரிண்யை நமஹ
ஓம் சர்வ ரட்சிண்யை நமஹ
ஓம் ரோஹ நாசின்யை நமஹ
ஓம் ஜய வல்லபாயை நமஹ
ஓம் க்ஷீர தாரிண்யை நமஹ
ஓம் பபிலாயை நமஹ
ஓம் சுரப்யை நமஹ
ஓம் சுசீலாயை நமஹ
ஓம் மாகா ரூபின்யை நமஹ
ஓம் சகல சம்பத் தாரிண்யை நமஹ
ஓம் சர்வ மங்களாயை நமஹ

கோயில்களில் அந்தணர்களை வைத்து நடத்தும்போது கலசம் அமைத்து வேத மந்திரங்கள் ஓத கோ பூஜை செய்வார்கள். ஆகம விதிப்படி இன்றி இப்படி எளிய முறையில் நீங்களாகவே செய்வதும் உரிய பலன் தரும்.
பசுவை (கன்று இருந்தால் அதனை பசுவினருகே விட்டு அதனையும் சேர்த்து) மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்யுங்கள். அகத்திகீரை, சர்க்கரை பொங்கள், பழ வகைகள் போன்றவற்றை பசுவிற்கு கொடுங்கள்.
பின்னர் பூஜையின் நிறைவாக நெய்தீபம் ஏற்றி ஆரத்தி எடுத்து விட்டு மறுபடியும் பசுவை வணங்கி விட்டு வழியனுப்புங்கள். பசுவின் உரிமையாளருக்கு உங்களால் இயன்ற தட்சணை அளியுங்கள்.

அன்றைய தினம் உணவு எதுவும் உட்கொள்ளும் முன் சிறிது பஞ்சகவ்யம் எடுத்து கொள்ளுங்கள் (கோமயம், நெய், தயிர், பால் இவை ஐந்தும் சிறிது சிறிது சேர்த்து காலந்த கலவையே பஞ்ச கவ்யம்) முடிந்தால் இல்லம் முழுக்க கோமியத்தை தெளியுங்கள்.
சகல தெய்வங்களின் ஆசியும் பரி பூரணமாக கிடைக்கும். எல்லா திருக்கோயில்களுக்கும் சென்று வந்த புண்ணியம் கிட்டும். எல்லா கோரிக்கைகளும் ஈடேரி சகல ஐஸ்வர்யங்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ கோமாதா ஆசிர்வாதிப்பாள்.

Sunday, September 27, 2020

உங்கள் எண்ணமே உங்கள் வாழ்க்கை

உங்கள் சிந்தனைக்கு

மனிதக்குலத்தின் மிகப்பெரிய

கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது. நம் எண்ணத்தை மாற்றினால் நம்வாழ்க்கையை மாற்றலாம் என்பதுதான்

மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச்சாதிக்க முடியும் என்பதுதான்

மனிதக்குலவரலாறு

வேளாண்மை முதல் வாட்ஸ்அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது

தான் நம் உள்ளே உள்ள எண்ணமே நம் வாழ்வின்

சகல நிகழ்வுக்கும் விதை

என்கின்றன நவீன

ஆராய்ச்சிகள்

என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள் அதை எப்படி மாற்றுவது என்று கேட்கலாம்

உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களை ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா

உங்கள் படிப்பு, வேலை

காதல், திருமணம், தொழில்

செல்வம், குடும்ப வாழ்க்கை

என அனைத்தையும்

உறுதிப்படுத்துவது உங்கள்

எண்ணங்கள் தான்

ஆம் நண்பர்களே

நாம் எண்ணாத எந்த

செயலும் செயலாக

உருப்பெறுவது இல்லை உங்கள் வாழ்க்கையையே நீங்கள் பாருங்கள் உங்களின் ஒவ்வொரு

பெருமை படக்கூடிய

வளர்ச்சிக்கும்

வாழ்க்கைக்கும், உங்கள் எண்ணமும், மனமும் தான் காரணமாய் உள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்

கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப்பாடல் வரியில்

சொல்லிவிட்டார்

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.

சித்தர்களை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?

*சித்தர்களை எப்படி வழிபடுவது ?*

*இவர்களை வழிபட மந்திரம்கள் ஏதும் உண்டா?*

*இவர்களை எப்படி குருவாக வழிபடவேண்டும்...*

சிலர் என்னிடம் இப்படி கேட்பது உண்டு ,இதை பற்றி அறிந்து கொள்ளும் முன் நாம் சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டால் எளிமையாக புரிந்து கொள்ளமுடியும் ....

முதலில் *சித்தர்கள்* என்பவர்கள் யார் என்று புரிந்து கொள்ளவேண்டும் ..

இவர்களை பற்றி முகநூலில் பல தகவல்கள் வந்து உள்ளது வந்த படி உள்ளது ,

எளிமையாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால்..

"பிறந்தோம் வளர்ந்தோம் கடமைகளை செய்தோம் வாழ்த்தோம் என்றவர்கள் சாமானி" ,

"எல்லோரை போல நாமும் பிறந்தோம் ஆனால் நாம் தனிப்பட்ட முறையில் சில அடையாளம்களோடு வளரவேண்டும் வாழவேண்டும் சில சம்பவம்களை சாதித்து புகழ் பெறவேண்டும் என்றவர்கள் அபிமானி"

"இந்த பூமியை விட்டு செல்லும் முன் சில அறிய தகவல்களை கண்டு அறிந்து உலகிற்கு எடுத்து சொல்லி பதித்து மக்களுக்கு பயன்படும்விதம் செய்யவேண்டும் என்றவர்கள் விஞ்ஞானி" ,

"உலகத்தின் சத் விவரங்கள் ,பிரபஞ்ச ரகசியம்கள் ,தெய்வ ரகசியம்கள் போன்றதை அறிந்தவன் ஞானி"

"தன்னை உணர்ந்து, தன்னுள் எல்லாம் இருப்பதை உணர்ந்து , தானே இறைவனிடத்தில் இருப்பதை உணர்ந்தவன் மெய் ஞானி "

சித்தர்களை மெய்ஞானிகள் என்று சொல்லலாம்
அகத்தியர் நூல்களில் சித்தத்தன்மையை பற்றி உரைக்கும் பொழுது மனிதன் சித்தர்களாக மாற பல 10 ஆயிரம் ஜென்மங்கள் கடந்து காய சுத்தி, காய சித்தி பெறவேண்டும் என்கிறார்.

பொதுவாக சித்தம் என்பது மனதின் உச்சப்பட்ட விருப்ப செயல்பாடு /குறிகோள் எனலாம் ,
இது பலபிறவிகளாக நம்மில் கலந்து நம்முடன் வந்தபடி இருக்கும் கர்மம் சார்ந்தது
எனலாம்,

இதை கவனிக்கும் பொழுது முற்பிறவியில் உண்டான அறிவு ,செய்த பூசைகள் பலன் ,அவர்களின் நன்மை /தீமை என்கிற அவர்களின் கர்மா தான் அவர்களுக்கு தற்பொழுது உள்ள பிறப்பில் பட்டம், பதவிகளை தருகிறது என்று புரிந்து கொள்ளமுடிகிறது .

உபாசகர்கள் சில நபர்களை பார்க்கும் பொழுது பெருமாளுக்கு மலர் கட்டி அலங்கரித்து அழகு பார்த்த கர்ம பலனால் மனிதர்களை
வசீகரபடுத்தும் பொன்னவனின் பொற்தொழிலை செய்கிறாய் என்பார்கள் ,

சில நபர்களை பார்த்து சுயநலம் இல்லாமல் உன் அறிவால் பலருக்கு நீ
நல்ல தீர்வுகளை தந்தால் இப்பிறவியில் நீதிபதியாக உள்ளாய் என்று சொல்வார்கள் ,

நல்ல கர்மாவால் நல்ல நிலையும் தீய கர்மாவால் வாழ்வில் மேன்மை பெறமுடியாமல் வாழ்வதை நாம் கவனித்து பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும் ....

சித்தத்தை வென்றவனை சித்தன் என்பார்கள் ,
அது எப்படி சித்தத்தை வெல்வது என்று சிந்தனை செய்தால் சில ரகசியம்
புலப்படும் ,

அது சலிப்பில் உண்டாகிறது ,ஆம் மனதின் வெறுமை தான் சித்தத்தை உணர செய்ய முடியும் .....எப்படி?

 பொதுவாக சித்தர்கள் என்றால் சித்து வேலை செய்பவர்கள் மந்திர தந்திர செயல்களில் கைதேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் என்றும் மனநிலையை மாற்றி மனிதர்களை குழப்பிவிடுவார்கள் என்ற சில மேலோட்டமாக சில கற்பனைகளை மனிதர்களிடத்தில் நாம் காண முடியும்.

இதன் காரணமாக கூட பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணமும் செய்வது உண்டு ,

மேலும் திருநீர் தரித்து சடை முடிகளை விரித்து பரதேசம் சுற்றிவரும் சிவ சிந்தனை நபர்களை முக்கண்ணன், பூச்சாண்டி என்று பிள்ளைகளிடம் கூறி இவர்களிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்தி பால பருவத்திலேயே இப்படி ஒரு பதிவை நம் பெற்றோர்கள்
மனதில் பதித்து விட்டார்கள் என்று சொல்லலாம் .

நான் சிறுவனாக இருந்த பொழுது என் பாட்டியுடன் நான் வெளியில் செல்லும் பொழுது சித்தம் கலங்கிய மனிதர்களை நான் கண்டு பாட்டியிடம் அவர்களை பற்றி கேட்க்கும் பொழுது தப்பு செய்தால் இவர்களிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்பார்கள் .

கேளிக்கையும் ,பயமும், தவறான நம்பிக்கையும் நம்மிடையே நம் முன்னோர்களால் நமக்கு பதியப்பட்ட காலம்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விலக ஆரம்பித்த காலம் ,சித்தர்களை பற்றிய இந்த தகவல் தொலைக்காட்சிகளினால் என்று சொல்லலாம் ,

சித்தம் தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று என்று சொல்ல காரணம் ..
நாம் வாழ்க்கையில் நம்மை நாம் ரசிக்கும் ,அனுபவிக்கும் உணவு /பிரயாணம் /உடை /பேச்சு /களிப்பு கொண்டாட்டம்/காமம் /போதை போன்றதுகள் ஒரு கட்டத்தில் அலுத்து விடும் இப்படி அலுத்துவிட்ட விட்ட மனம் ஒரு வெறுமையில் உழன்று
நிரந்தர இன்பம் எதில் கிடைக்கும் அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும் பொழுது சித்தம் விழித்து கொள்ளும் இது ஒரு புறம்
மறு பார்வை
பழைய புண்ணிய கணக்கில் அருளும் சேரும்பொழுது சித்தம் வேகமாக விழித்து செயல்படும்
சித்தம் விழித்தால் ஏன் பசிக்கிறது என்ற கேள்வியே முதலில் எழும் ,

இவைகளுக்கு விடை தேடினால் சர்வ ஞானமும் புலப்படும்,
ஞானத்தின் துவக்கமே மனதில் இருந்து அடக்குமுறையில்
துவங்குவது,

மனதை அடக்க அடக்க ஆற்றலும் அதிகரித்து புரியாதவைகள் எல்லாம் புலப்பட ஆரம்பம் ஆகும் ...

இப்படி புரியப்பட்ட ஆன்மாக்களே சித்தர்கள் ஆக முதல் படி நிலை எனலாம் .

மனதை அடக்குவது என்பது சாதாரண செயல் இல்லை ,

மொழியினால் அடைபட்டு அவைகளுக்கு கட்டுப்பட்டு மனிதன் தன் வாழ்க்கையை நடத்துகிறான் என்று சொல்லலாம் ,

மேலும் வெறுமனையாக மனதை வைத்து இருப்பது சிரமமான காரியும் கூட .

இப்படி மனதை அடக்கி வைத்து இருப்பவர்களை அடைமொழிவைத்து அழைக்கப்பட்டனர் என்று சொல்லவேண்டும் ,

பாம்பாட்டி சித்தர் ,பிண்ணாக்கு ஈசர் ,சிவவாக்கியர் ,தேரையர் ,குதம்பை சித்தர் ,அகத்தியர் என்று அடைமொழியை தான் நம் அறிந்து அழைத்து வழிபடுகிறோம் ,இது இவர்கள் பெற்றோர் வைத்த பெயர் இல்லை ,

இவர்களின் மூலம் யாரும் அறியார் .

இவர்களை குருவாக வணங்குவது என்பதை விட யாரிடம் இவர்கள் நெருங்குவார்கள் என்ற தகவலை அறிந்து கொண்டோம் என்றால் நாம் எளிதாக இவர்களின் ஆசிகளை பெறலாம் .....

இது வசியம் அல்ல .....மந்திரம் அல்ல ....வழிபாட்டு முறையும் அல்ல
..அது என்ன ?

 சித்தர்களுக்களின் மூலத்தை அறியமுடியாது காரண பெயரை தான் நாம் அறிந்து அழைக்கிறோம் ,
மனதை அடக்காமல் மனதின் அற்புதத்தை நாம் அறியமுடியாது ,வயிற்றை அடக்காமல் உடலை அறிய முடியாது
சித்தர்களின் முதல் படி நிலையே உடம்பை அடக்குவது ,

உதாரணமாக உடல் நிலை பாதிப்பு அடைந்தால் மனம் சோர்ந்து
விடும் ,

மனம் சோர்ந்தால் உற்சாகம் போய்விடும்,

உற்சாகம் என்பது உயிர் உணர்ச்சி சார்ந்த நிலை என்பதால் உயிரின் சக்திகள் குறைய துவங்கி மரணத்தை அழைத்து வரும் .

சித்தர்கள் பொறுத்தவரை உடலை வெல்வதை இரண்டாக கொண்டார்கள்
ஒன்று
உடலை கல்ப முறையில் வெல்வது இதை காய சுத்தி ,காய சித்தி என்பார்கள் ,

இரண்டாவது அனுபவித்து வெல்வது இது காயத்தில் ஏற்படும் அவஸ்தைகளை அனுபவித்து வெல்வார்கள் .

இதை தான் சித்தன் போக்கு சிவம் போக்கு என்பார்கள் .

மேலும் சித்தர்களுக்கு காலம் என்பது நிகழ் காலம் மட்டுமே ,
நாளை என்பது மாயை என்பது அவர்கள் கணக்கு ,

இன்று என்ன நடக்க வேண்டுமோ அதன் படிதான் நடக்கும் என்பதும் அப்படி நடந்து முடிக்க தான் பூமிக்கு வருகிறோம் என்பதும் அவர்கள் கணக்கு ,

இந்த கணக்கு அவர்களிடம் வசப்பட்டு எழுத பட்டது தான் சோதிட கணக்கு என்று சொல்லலாம் ,இதில் கைதேர்ந்தவர்கள் அகத்தியர் ,
புலிப்பாணி, புஜேந்தர் போன்றவர்கள் ,

இவர்கள் நூல்கள் தான் இன்று பலருக்கு வழிகாட்டியாக உள்ளது எனலாம் .

சரி

இவர்களை எப்படி வழிபடலாம் என்பதை விட இவர்கள் யாரை தேடி வருவார்கள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .

இது ஒரு ஜென்மாந்திர தொடர் கணக்கு எனலாம்,பல ஜென்மங்களில் சித்தர்களின் வாசனை உடையவர்களுக்கு தான் இந்த வாசனையை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று உறுதி பட சொல்லமுடியும் .

எல்லோருக்கும் மருத்துவம் புலப்படாது ,

எல்லோருக்கும் சோதிடம் புலப்படாது ,

எல்லோருக்கும் மந்திர ஞானம் ,யந்திர ஞானம்புலப்படாது ,

இந்த மூன்றும் தெய்விக ரகசியமும் தேவர்களின் ரகசியமும் கொண்டது,

எந்த மனிதனுக்கு இந்த ரகசியம்கள் தெய்விகம் சார்ந்தது என்று புலப்படுகிறதோ அவர்களுக்கு சித்தர்களின் ஆசிகள் ஏற்படும் என்பதை
என்னுடைய அனுபவம்களே எனக்கு புரிய வைத்தது என்று சொல்வேன்.

மற்ற ஒரு பார்வை பசியாற்றுதல் ,பிறர் உயிர்களின் பசியை உணர்ந்து உணவு வழங்குதல் எனலாம் .

பொதுவாக நட்புகள் மனிதர்களுக்கிடையே உண்டாவது அவரவர் பழக்கத்தின் விருப்பமே என்று கவனித்து பார்த்தால் புரியும் .

உதாரணமாக விளையாட்டு சிலரின் நட்புகளை துவங்கும் ,
சிலருக்கு மது பழக்கம் நட்பை தரும் ,

சிலருக்கு களிப்பு கொண்டாட்டத்தில் நட்பை தரும்,
சிலருக்கு ஆன்மிகம் நட்பை தரும் ,

சிலருக்கு உணவு பழக்கத்தில் நட்பை தரும் இப்படி ஒரு நபரின் ஆன்மாவில் பதிந்த விருப்பம் பிறரிடம் காணும் பொழுது நட்பை வளர்க்கும்
இது போல சித்தத்தில் சுயநலமில்லாத சேவை துவங்கும் பொழுது விண்மண்டலத்தில் கலந்து உள்ள சித்தர்களின் ஆன்மாக்கள் நம் ஆன்மாவை தொடர்ப்பு கொள்ளும் ,

ஆடு மேய்த்த இடைக்காடர், பிட்சை எடுத்து உண்ட பிராந்தர் , வாயில்லா உயிரினம்கள் மீது பரிவு வைத்தவர்கல் ,
பசுவிற்காக தன் உடலை மறைத்து மூலன் உடலில் புகுந்த சிவயோகி திருமூலர் ,
சீன தேசத்தில் இருந்து குருவுடன் வந்த புலிப்பாணி மருத்துவம் சோதிடத்தில் வல்லவர் ,
இவர் குரு போகர் புலிக்கும் ,சிங்கத்திற்கும் ஞான உபதேசம் செய்தவர் ,

சப்த சமுத்திரத்தை தாண்டி சென்று மூலிகை கொண்டுவந்தவர் ,

கிளி முகத்தை உடைய காலாங்கி நாதரையும் சீடனாக கொண்டவர் .
பறவைகளின்/விலங்குகளின் பால் ,மலம் ,மூத்திரம் ,இவற்றின் இயல்புகளையும் இவைகள் மருந்துகளாக பயன்படுத்தும் விதத்தையும் ,

மேலும் மரம் செடி, கொடி,பூ,இலை,கொட
்டை ,காய் ,கனி முதலியவற்றின் மருத்துவ பயன்களை சொல்லிய தேரையர்,

ரசவாத விதையில் தேர்ந்த வடக்கில் இருந்து வந்து தெற்கில் முருகனின் இருப்பிடத்தில் உறைந்த போகரின் மற்ற ஒரு சீடர் ,மேலும் அகத்தியரின் முதல் சீடர் என்கிற மச்ச முனி .

இருளர் குளத்தில் பிறந்து பாம்புகளின் தன்மை அறிந்து ,பிறகு தன்னுள் இருக்கும் பாம்பை அறிந்த சட்டைமுனி சீடர் பாம்பாட்டி சித்தர் .

முன் ஞானம் நூறு ,பின் ஞானம் நூறு என 200 பாடல்களை கொடுத்த போகரின் மற்ற ஒரு சீடர் சட்டை முனி .

கஞ்சாவை கண்டு அறிந்து அதை மருத்துவத்திற்கு பயன்படுத்தி வயிற்றின் உள்ளே உள்ள உபாதைகளை சரிசெய்யும் கோரக்கர் மூலி என்ற மூலிகையை தந்த மச்சமுனியின் சீடர் கோரக்கர் ,

கொங்கண தேசம் எனும் கேரளத்தில் பிறந்தவரால் கொங்கணர் என்ற போகரால் பெயர் பெற்ற கொங்கணவர் ரசவாதம் செய்வதவரும் அம்பைகையின் ஆசிகளை பெற்றவரும் ஆவர் .

குதம்பை என்கிற மூலிகையை கண்டு அறிந்தவரும் குதம்பை போல உள்ள காதணியை பற்றி பாடியவரும் குதம்பை சித்தர் ,
போலி சாமியார்களை அடையாளம் காட்டியவரும்,

கற்களில் சிலை செய்வதில் ஞானம் உடையவரும் ,கோவில்களில் சிவலிங்க பிரசுதிஷ்டை செய்ய பூசை விதிகளை தந்தவர் கருறார் சித்தர் .

காகத்திற்கும் அன்னத்திற்கும் பிறந்தவர் என்றும் ,
சிவன் சக்தி முருகன் இவர்கள் மூவரும் ஒருவரே என்று சொன்னதும் ,
1008 சீடர்களை உடையவரும் ,
காகம் போல பார்வையும் ,மூக்கும் உடையவர் என்றும்
முருக பெருமானின் அம்சமே என்று அழைக்கப்படும் வைணவ சித்தர் காக புஜேந்தர் .

பேயாக அலையும் மனதை பற்றி 100 பாடல்கள் பாடிய அகப்பேய் சித்தர் ,
அமுக்கனி மூலிகை கண்டு அறிந்து வாத காவியத்தில் சொல்லிய அமுக்கனி சித்தர் ,
பிறப்பால் இஸ்லாமியராக பிறந்து பல மாந்திரிக விவரமக்களை மூலிகையில் தந்த யாக்கோபு என்கிற ராமதேவர் .

புஜண்டரின் மகன் என்று சொல்லப்படும் ரோமா ரிஷி ,
ஆயுர்வேத முறைகளை தந்தவர் என்றும் ,சுசுருத்தர் என்ற வைத்திய மேதையை சீடராக உடையவரும் வாகட நூலில் வல்லவரான தன்வந்திரி சித்தர் ,
இவர்கள் எல்லோராலும் ஆசான் என்று போற்றப்படுபவரும் ,
பொதிகை மலையில் சிரஞ்சீவியாக இருப்பவரும் ,
சிவனை குருவாக கொண்டவரும் ,
நட்சத்திர வடிவில் விண்ணில் இருப்பவரும் ,
ராமபிரானுக்கு ஆதித்திய மகா மந்திரத்தை உபதேசித்தவரும் ,
முருகனை குருவாக ஏற்று தமிழ் சங்கத்தை நிறுவியவரும் ,
"அகத்தியம் என்கிற நிலையால் பசுவாக உருமாறி பல மூலிகைகளை உண்டு அவைகள் என்ன பலன்கள் தருகிறது என்று அறிந்து பிறகு சுவடிகளில் பதித்து மனிதர்களுக்கு மிக பெரிய மருத்துவ மூலிகைகளை தகவல்களை தந்த
குறு முனி ,குட முனி,கும்ப முனி என்று பெயர் பெற்ற அகத்திய முனி "

(இவர் பசுவாக மாறி எந்த மூலிகை நஞ்சை முறிக்கிறது அறிய எல்லா 
தாவரம்களையும் உண்டு அது படி அறிந்த மூலிகை தான் இன்று நாம் உண்ணுவதும் பசுக்களுக்கு கொடுக்கப்படும் அகத்திக்கீரை )

*சித்தர்களை முறையாக வழிபட்டால்*

*சித்தர்கள் தானாக வாசம் செய்வார்கள்.....*

*🚩சர்வம் சிவமயம்🚩*

Saturday, September 26, 2020

துன்பம் அதுதான் அனைத்து இன்பங்களுக்கும் காரணம்

*பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும்...!*

வாழ்க்கை என்பது நீண்ட பயணம் என்று சொல்வார்கள். 
ஒரு நதி தன் வழியே போய்க் கொண்டே இருப்பது போல, உயிர்கள் அனைத்தும் வாழ்க்கை எனும் வழியிலே போய்க் கொண்டே இருக்கின்றன. 

கணக்கற்ற பிறவிகள் மூலமாக இப்பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பயணம் முழுவதும் இன்பமும், துன்பமும் பலவாறு மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன. 

பெரும்பாலும் எல்லோரும் சொல்வது என்னவெனில் ''துன்பமே வாழ்வாக வடிவெடுத்து வந்ததோ'' என்றுதான். அதற்குக் காரணம் இன்பமே இயல்பாகவுடைய நாம் அதை அறியாமல் அதனின்று விலகி துன்ப வழியில் பயணிப்பதினால்தான். 

எனினும் அத்துன்பத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமே நம் உண்மை இயல்பை நாம் உணர்ந்து கொள்ளப் பயன்படுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் இன்பத்தினின்று நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை. 

தேன் குடித்த வண்டு போல ஆகி, அதிலேயே உழன்று கொண்டிருக்கிறோம். ஆனால், துன்பம் அவ்வாறல்ல. அதிலிருந்து விடுபட்டு நம் உண்மை இயல்பை நாம் அடைவதற்கு தூண்டு கோலாக அது அமைகிறது.

துன்பத்தை நமக்குத் தருபவர்கள் யார் ? 

அவர்களை நாம் துஷ்டர்கள், கொடியவர்கள் என்று சொல்கிறோம். அத்தகைய கொடியவர்கள் இல்லாமல் இருந்தால் பூமி சுபீட்சமாகவும், இன்பமயமானதாகவும் இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம். 

ஆனால், நாம் திருந்தி வாழவோ அல்லது தீய வழியில் செல்லாமல் இருக்கவோ இந்த தீயவர்களே நமக்கு குறிகாட்டியாக இருக்கிறார்கள். 

இவர்களைப் பார்த்துதான் நாம் நம்மை தற்காத்துக் கொள்கிறோம். எல்லாம் இறை சொரூபமே என்கிற பொழுது இந்தக் கொடியவர்கள் யார் ? என்று பார்த்தால், அவர்களும் பரம்பொருளே. உலக நடைமுறைக்கு நல்லோர்களும், தீயோர்களும் வெவ்வேறு விதங்களில் உதவி புரிகின்றனர். 

நல்லோர்களாக வடிவெடுத்து விளையாடுவதும், தீயோர்களாக வடிவெடுத்து விளையாடுவதும் பரம்பொருளே. இதையே கூத்து என்றும் திருவிளையாடல் என்றும் சொல்கிறோம்.

நாம் உண்மையை உணர்வதற்குப் பரம்பொருளே இரண்டு விதங்களில் உதவி புரிகிறார். நல்லோர் மூலமாக புரியும் உதவி அனுக்ரகம் எனப்படுகிறது. தீயோர் மூலம் மறைமுகமாகப் புரியும் உதவி விக்கினம் எனப்படும். 

நம்மைப் பண்படுத்துவதற்கு அனுக்ரகம், விக்கினம் இரண்டுமே இன்றியமையாதவைகள்தாம்., வெவ்வேறு படித்தரங்களில் ஜீவாத்மன் வெவ்வேறு விதங்களில் பண்பாடு அடைகின்றான். அதற்கு நல்லவர்களும், கெட்டவர்களும் தத்தம் போக்கில் உதவியாக இருந்து வந்துள்ளனர். 

விவேகம் எனும் ஞானத்தைப் பெற்ற யோகிக்குத்தான் இவ்வுண்மை அறிவில் புலப்படுகிறது. அவன்தான் தன் பழைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறான். பரம்பொருளே நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் வடிவெடுத்து வந்து நன்மை, தீமைகள் வாயிலாக தம்மைப் பக்குவப்படுத்தினார் என்பதை உணர்ந்து கொள்கிறான்.

கல், புல், பூடு நிலையிலிருந்து இந்த மனிதப் பிறவியை மனிதன் அடைவதற்கு மனிதன் எடுத்துள்ள ஜென்மங்கள் எண்ணிக்கையில் அடங்காதது. மனிதப் பிறவியிலும் இத் துன்பம் தொடர்கிறது. துன்பத்தில் உழன்று வருந்திக் கொண்டிருக்கும் ஒருவன் பல வேளைகளில் அத் துன்பத்திற்கான ஆதியையோ, அந்தத்தையோ அறியாமல் இருக்கிறான். 

துன்பப்படுகிறோம் என்பதை மட்டுமே ஓரளவு அறிந்து கொள்கிறான். இந்நிலையையே சான்றோர் மருள்நிலை என்பர். மனிதன் படுகின்ற துன்பங்கள் அனைத்திற்கும் மூலக் காரணம் மருள் நிலையென்றும், இருள் நிலையென்றும் சொல்லப்படும் அஞ்ஞானமேயாகும். 

தாங்க முடியாத அளவு துன்பங்கள் தொடரும் பொழுதுதான் மனிதன் அதிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று யோசிக்கிறான். தான் கொண்டுள்ள பற்றுகளே இவையனைத்துக்கும் காரணமாக இருக்கிறது என்பதை உணர்கிறான். தான் நுகர்கின்ற இன்பங்களனைத்தும் பிறகு துன்பங்களாக வடிவெடுப்பது புரிய வருகிறது.

பிரபஞ்ச இன்பம் என்பது வெறும் மயக்கமே. உண்மை இன்பம் இதுவல்ல. இந்த தேகமும் அழியக் கூடியது. என்றெல்லாம் தான் கொண்டுள்ள ஒவ்வொரு பற்றுகளையும், அதன் கேடுகளையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு அவன் உள்ளத்தில் அருள் தாகம் ஏற்படுகிறது. 

தாகம் எடுக்கும் பொழுது தண்ணீரைத் தேடி மனிதன் செல்வது போல, அருள் தாகம் ஏற்படும் அளவிற்கு மனிதன் பரம்பொருளைத் தேடி அலைகிறான். தாகத்தால் வருந்தியவன் நீர் நிலையைத் தேடி அடைந்து நீரைப் பருகி திருப்தி அடைவது போல, அருள் தாகம் கொண்ட மனிதனின் நாட்டத்திற்கு ஏற்ப பரம்பொருளின் அருள் சுரக்கிறது. 

அங்ஙனம் அருள் தாகம் நிறைவேறப் பெறுவதே வீடுபேறு ஆகும். மானுடப் பிறவியின் நோக்கமும் அதுவே. எனவே துன்பம் முற்றிவிடும் பொழுது அதனின்று விலகி ஓட வேண்டும் என்று எண்ணுவது போல, இன்பத்தினின்றும் விலகி விட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டால் மனிதன் பற்றுகளை விலக்கியவனாகி விடுவான். 

பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும். தன் உள்ளத்திலேயே துன்பமற்ற ஆனந்தம் வந்து குடி புகுந்த பின்பு வேறென்ன வேண்டியதிருக்கிறது. கவனித்துப் பார்த்தால் இத்தகைய முழுமையான நிலையை அடைவதற்குக் காரணமாக அமைவது துன்பங்களே என்பது புரிய வரும்.

*பற்றற்றவன் உள்ளமே பரமன் வாழும் இடமாகும்...!*

*ஓம் நமச்சிவாய..!*

ராம நாமமே விலைமதிப்பற்றது

🌹ராமநாமத்திற்கு விலை மதிப்பே கிடையாது🌹

🌹 ஆஞ்சநேயர் உச்சரித்த ராமநாமத்திற்கு விலை மதிப்பே கிடையாது.🌹

🌹 கபீர்தாசரின் மகன் கமலதாஸ் ஒரு பஜனைக்குச் சென்றார். அவர் ஸ்ரீராமனைப் புகழும் ஏராளமான பஜனைப் பாடல்களைப் பாடினார். இதைக் கேட்ட வணிகர் ஒருவர், மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க நினைத்தார். கமலதாசிடம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதால், அவருக்கே தெரியாமல், அவரது மேல்துண்டில், தான் அணிந்திருந்த மோதிரத்தை கட்டி விட்டார்.
வீட்டுக்கு வந்த மகனைக் கபீர்தாசர் கடிந்து கொண்டார்.
""அப்பா! நான் அப்படிப்பட்டவனா? இது எப்படி வந்தது என்றே எனக்கு தெரியாது. ஆனாலும், யாரோ ஒருவர் அன்பளிப்பு அளிக்கும் அளவுக்கு என் பஜனை இருந்துள்ளது என்பதற்காக நீங்கள் பெருமைப்படலாம் அல்லவா!'' என்றார் கமலதாஸ்.
""மகனே! அதற்காக இல்லை! கேவலம்...ஒரு மோதிரத்துக்காக விலை மதிப்பற்ற ராமநாமத்தை விற்றுவிட்டாயோ என்று தவறாக நினைத்து விட்டேன்,'' என்றாராம் கபீர்தாசர்.
எல்லையில்லா மகிமையுள்ள ராமநாமமே, ஆஞ்சநேயருக்கு அனைவர் மனதிலும் நீங்கா இடத்தைத் தந்துள்ளது.

Friday, September 25, 2020

நாரதரின் கர்வம்

நாரதரின் கர்வம்

ஒரு சமயம் நாரதர், 

சிவபெருமானை குறித்து வெகு காலம் தவம் புரிந்தார். 

நாரதரின் தவத்தைக் கலைத்து அவர்  நோக்கம் நிறைவேறத் தடை செய்ய விரும்பினான் இந்திரன். 

அழகில் சிறந்த  அப்சரசுகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து நாரதரிடம் சென்று அவர் தவத்தைக் கலைக்குமாறு அனுப்பி வைத்தான்.

தேவ மங்கையரும், நாரதர் தவம் செய்யுமிடத்தை அடைந்து அவர் முன்பு ஆடிப்பாடிப் பலவிதங்களிலும் அவர்  உள்ளத்தைத் தங்கள்பால் திருப்ப முயன்றனர். 

நாரதர் தம் உள்ளத்தில் பரமசிவனைத் தியானித்து ஒருமித்த சிந்தையுடன் தவம் செய்து வந்ததால் அவரிடம் அப்சரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. 

ஆடி ஆடி முடிவில் அவர்கள் களைத்துப்போய் இந்திரலோகம் திரும்பினர்.

நாரதரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்து அவர் விரும்பிய வரத்தை அளித்தார். 

மகிழ்ச்சியோடு திரும்பிய நாரதர், தாம் தவத்தில் ஈடுபட்டிருக்கையில் இந்திரன் அப்சரசுகளை அனுப்பித் தவத்தைக் கலைக்குமாறு செய்த முயற்சி பலிக்காமல் போனதை நினைத்து கர்வம் கொண்டார்.  

தாம் காமனை வென்றுவிட்டதாக ஓர் எண்ணம் உண்டாயிற்று.

பிரம்மலோகம் சென்ற நாரதர், இந்திரன் தம்மிடம் தோல்வியுற்றதைச் பிரம்மாவிடம் பெருமையாக எடுத்துச் சொல்லி, தாம் காமத்தை, ஜெயித்துவிட்டதாகக் கூறினார். 

அதைக் கேட்ட பிரம்மன், நாரதரின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிவபெருமானின் அனுக்கிரகமே என்று கூறினார். 

நாரதர் அதை ஏற்கவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு நேராக வைகுந்தத்தை அடைந்தார். 

ஸ்ரீ விஷ்ணுபெருமானிடமும் அவர் தம் பெருமையைக் கூறிக் கொண்டார். 

மகாவிஷ்ணுவும் பிரம்மதேவனைப் போலவே, ’சிவபெருமானின் அனுக்கிரகமே அப்சரசுகள் தோல்வியுற்றுத் திரும்பக் காரணம் என்பதை நாரதரிடம் எடுத்துக் கூறினார். 

நாரதரோ தம் சொந்த முயற்சியாலேயே காமத்தை வென்றதாகக் கூறினார்.

நாரதரின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் கர்வத்தை திருத்த விரும்பினார் மகாவிஷ்ணு. 

ஸ்ரீபுரத்தில் இருக்கும் 

அம்பரீஷ சக்கரவர்த்தி தம் குமாரத்தி ஸ்ரீமதிக்கு விவாகம் செய்ய சுவயம்வரத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

மகாவிஷ்ணு நாரதரைப் பார்த்து, நாரதா, உனக்கு விஷயம் தெரியுமா? ஸ்ரீபுரத்து அரசன் தன் குமாரத்திக்கு விவாகம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறானாமே?" என்று கேட்டார்.

நாரதருக்குப் பூலோகம் செல்ல விருப்பம் உண்டாகியது. நாராயணனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட அவர், ஸ்ரீபுரத்திலுள்ள அரண்மனையை அடைந்தார். 

அரச குமாரத்தி ஸ்ரீமதியின் அழகு வடிவத்தைக் கண்டதும் அவர் உள்ளம் சலனம் கொண்டது. 

அரசகுமாரியைத் தாமே மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது, . 

அரசனை அழைத்து அவன் குமாரத்தியைத் தமக்கு மணம் செய்து கொடுக்குமாறு கேட்டார். 

மகரிஷி, தங்களுக்கு என் பெண்ணைக் கொடுப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? ஆனால்..." என்று இழுத்தான் அரசன்.

பின் ஏன் இந்தத் தயக்கம்!" என்று கேட்டார் நாரதர். என் குமாரத்தியோ ஹரியையே மணப்பேன் என்று பிடிவாதம் கொண்டிருக்கிறாளே!..."

அரசனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் நாரதரின் உற்சாகம் அடங்கி விட்டது. அடுத்த கணமே அவருக்கு ஓர் யோசனை தோன்றியது. 

ஸ்ரீமதியின் விருப்பத்தைக் கெடுப்பானேன். இதோ விரைவிலேயே வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வைகுந்தத்துக்கு ஓடினார் நாரதர். 

வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்த நாரதரைக் கண்டதும் நாரயணன் வியப்போடு, நாரதா, என்ன விஷயம் ? ஏன் இந்தப் பரபரப்பு ?" எனறு கேட்டார்.

பிரபோ, எனக்கொரு வரம் தரவேண்டும். தாமதிக்கக் கூடாது?" என்று வேண்டினார் நாரதர். 

என்ன வரம் வேண்டும், நாரதா?" என்று ஒன்றுமே தெரியாதவர் போலக் கேட்டார் நாராயணன்.

பிரபோ, நான் நினைக்கும் நேரத்தில் யார் என்னைப் பார்த்தாலும் ஹரியின் முகமாக என் முகம் தோற்றம் அளிக்க வேண்டும்" என்று வேண்டினார் நாரதர். 

எதற்கு இந்த வரம்?..." என்று கேட்டார் நாராயணன்.

நின்று சொல்ல நேரமில்லை, பிரபோ. பூலோகத்திலே முக்கிய காரியம் ஒன்றிருக்கிறது. முடித்துக் கொண்டு வருகிறேன். வந்ததும் எல்லாவற்றையும் சாவகாசமாகச் சொல்கிறேன்"  என்று சொல்லிவிட்டு ஓட்டமாக ஓடினார் நாரதர்.

பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு போய் வா, நாரதா?" என்றார் நாராயணன். 

ஸ்ரீபுரத்தை அடைந்ததும் நாரதர் நேராக அரசனிடம் சென்றார். நாளைக்கே திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் உங்கள் மகள் கண்டிப்பாக சம்மதிப்பாள்" என்றார்.

அரசனோ தயங்கியபடி,

வைகுந்தவாசனைத் தவிர வேறு எவரையும் மாலையிடுவதில்லை என ஸ்ரீமதி உறுதி கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன் என்றார்.

."கொஞ்சமும் தயக்கம் வேண்டாம்.

நாளை ஸ்ரீமதி எனக்குத் தான் மாலையிடுவாள்" என்றார் நாரதர்.

அரசன் தன் மகளை அழைத்தார்.  அவளுடைய சம்மதம் பெற எண்ணினார்.

அவள் வரும்போது தம்முடைய முகம் ஹரியின் முகமாகத் தோன்ற வேண்டுமென நாரதர் வேண்டிக் கொள்ள, .

உள்ளே நுழைந்த ஸ்ரீமதியின் பார்வை நாரதர் பக்கம் திரும்பியது. அவள் அலறிக்கொண்டு தந்தையிடம் ஓடிவந்தாள். 

அப்பா, அவரைப் பாருங்கள்!..." என்று ஸ்ரீமதி, நாரதரின் பக்கம் கையைக் காட்டினாள். 

அனைவரின் பார்வையும் நாரதர் பக்கம் திரும்பியது. நாரதரின் முகம் குரங்கு முகமாகத் தோற்றமளிப்பதைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் சிரிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு அரசனைக் கேட்டார். 

மகரிஷி, தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள். விஷயம் புரியும்" என்றான் அரசன்.

கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்க்கும்போதுதான் நாரதருக்கு உண்மை வெளிப்பட்டது. 

ஹரி என்பதற்குக் குரங்கு என்றொரு பொருள் உண்டு. ஹரியின் முகமாகத் தோன்றுவதற்கு பதிலாகக் குரங்கு முகமாகத் தோற்றமளிக்கச் செய்து நாராயணன் தம்மை ஏமாற்றிவிட்டார் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். 

நாராயணன் மீது அவருக்குச் சொல்ல முடியாத கோபம் உண்டாயிற்று. நேராக வைகுந்தத்துக்கு ஓடினார்.

அங்கே அவரைத் திடுக்கிட வைக்கக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்திருந்தது. 

எந்த ஸ்ரீமதியை மணக்க விரும்பியிருந்தாரோ அவள் நாராயணன் மடிமீது மணக் கோலத்தோடு அமர்ந்திருக்கக் கண்டார். அவர் ஆத்திரம் பன்மடங்காகிவிட்டது.

பிரபோ, என்னை ஏமாற்றி விட்டீர்கள். அந்தப் பாபம் உம்மைச் சும்மா விடாது. நீங்களும் மனிதனாகப் பிறந்து உங்கள் மனைவியும் பிறன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டு இழந்து வருந்துவீர்கள். உங்களுக்கு உதவ வானரங்களையே நாடுவீர்கள்" என்று சபித்தார்.

நாராயணன் புன்சிரிப்போடு நாரதரின் சாபத்தை ஏற்றுக் கொண்டு, நாரதா, பூலோகத்தில் என் காரியம் நிறைவேற உன் சாபம் தேவை. அதிருக்கட்டும், முற்றும் துறந்த முனிவனான உனக்கு ஏன் திருமணத்தில் விருப்பம் ஏற்பட்டது? காமத்தை ஜெயித்த நீயா இவ்விதம் அடிமையாக நிற்பது?" என்று கேட்டார்.

அப்போதுதான் இது நாராயணன் திருவிளையாடல் என்பதை உணர்ந்த நாரதர் தம் தவறுக்கு வருந்தி ஸ்ரீ பெரிய பெருமாளை சரணடைந்தார்.

வராகி தேவியை வழிபடும் முறை



🌹வாராகி வழிபாட்டு பூஜை முறைகள்🌹
  
வாராகி வழிபாட்டு பூஜை முறைகள்
வாராகி வழிபாடு ஒரு மனிதனை நிகராற்ற ஞானியாக ஆற்ற கூடிய வழிபாடு, அந்த கால விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அன்னை நமக்கு நலம் அருள்வாள்.

வாராகி வழிபாடு ஒரு மனிதனை நிகராற்ற ஞானியாக ஆற்ற கூடிய வழிபாடு, அந்த கால விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அன்னை நமக்கு நலம் அருள்வாள். வாராகி பற்றி ஒருசில பக்தர்கள் கோபநிலை, அதிகம் உக்ரம் பெருகுதல், ஏவல் தெய்வம் இப்படி எல்லாம் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன். உண்மை என்னவென்றால் வாராகி அன்புக்கு குழந்தை. அவளுக்கு உரிய இலக்கணம் நம்மிடத்தில் இருந்தால் இவ்வுலகமில்லை. ஏழு லோகத்திலும் அவரை

வாராகி ஏவல் தெய்வம் என்று பலர் கூறகேட்டேன். அது உண்மை இல்லை. ஏவல், பில்லி எனும் கெட்ட சக்திகளை அழிக்கவே அன்னை அவதாரம். ‘‘பெற்ற பிள்ளைக்கு இவ்வுலகில் கெடுதல் செய்யும் தாய் உண்டோ?’’, பூலோகம் காக்க அவதரித்த தாய் அதை அழிப்பாளா? அவள் அழிக்க பிறந்தது, அதர்மத்தை மகா சத்ருகளை ஏவல், ஏவி விடும் சத்ருகளை மட்டுமே. ஆக நீங்கள் அன்னையை கவலை இன்றி வழிபடலாம்.

 
வாராகி வழிபாடு முறைகள் :

1. வாராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
2. எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கி றோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும்.
3. வழிபாட்டிற்கு அன்னையின் படம், அல் லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபாடு செய்யலாம், நாம் வடக்கு, மேற்கு நோக்கி அமரலாம்.
4. காலை, மாலை குளிக்கின்றபோது தண்ணீரில் துளசி, வில்லம் ஒரு கைபிடி போட்டு குளிக்க வேண்டும்.
5. பூஜை அறையில் அன்னை படத்தை வைப்பதை காட்டிலும் தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு.
6. அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை, அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்து கொள்வது நலம்.
7. தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
8. வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
9. பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்துவது நலம்.
10. தர்பை பாய், அல்லது கம்பளி போர்வை ஆசனத்திற்கு பயன்படுத்த நலம்.
11. சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
12. சாம்பிராணி புகையில், வெண்கடுகு, வெள்ளை குங்கிலியம் சேர்த்து போடுவது சிறப்பு.
13. வாராகி அன்னை படம், விநாயகர் படம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்க வேண்டும்.

பூஜை முறை :

1. பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
2. முதலில் குருவை- மானசீகமாக வழிபாடு செய்து “குருவடி சரணம் திருவடிசரணம்” என்று 9 முறை கூறவும்.
3. பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை விநாயகாய நம என கூறி அர்ச்சிக்க வேண்டும்.
4. விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.
5. வாராகி அன்னையை துளசி, வில்லம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து “வாராகி மூல மந்திரம் மற்றும் “வாராகி மாலை” பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.
6. பூஜையில் அமர்ந்த பின் எழக் கூடாது.
7. அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபஆராதனை காண்பித்து வாராகி தேவி பாதம் பணிந்தேன் என கூறி பணிந்து கீழே விழுந்து வணங்க வேண்டும்.
8. பஞ்சமி, அம்மாவாசை அன்று, ஒரு ஐந்து நபருக்கு உணவளித்தால் நலம்.
9. கீழே விழுந்து வணங்கிய பிறகு, சங்கு நாதம் ஒலிக்க வேண்டும், அல்லது மணி இசைத்து மீண்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
10-. பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.
11. கண்டிப்பாக நேரம் தவறக்கூடாது, ஆரம்ப நாளில் எந்த நாளில் நேரத்தில் செய்தீர்களோ அதே நேரத்தில்தான் செய்ய வேண்டும்.
12. ஒருவேளை வெளியூர் சென்றால் ஒரு அம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்து மாற்றிக் கொள்ளலாம். இந்த எளிமையான வழி பாட்டை அனைவரும் செய்து அன்னையின் அருளை பெறலாம்.
13. அன்னையின் கோடிக்கணக்கான மந்திரமும், இந்த வாராகி மாலை ஒன்றுக்கு சமம். ஆக இதே ‘பாமாலை’ சக்தி எண்ணிலடங்கா இது ஒன்றே பூஜைக்கு போதுமானது.

Thursday, September 24, 2020

வள்ளலார் தனி சிறப்பு

*#வள்ளலாரின்_தனிச்சிறப்பு*

வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..

பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..

காவி ஆடை உடுத்த மாட்டார்.

உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.

உடம்பில் எந்த மத அடையாளங்களை அணிந்து கொள்ள மாட்டார்.

ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.

கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..

கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..

சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.

கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.

சிம்மாசனத்தில் அமரமாட்டார்.

ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.

தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்..

அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.

உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..

கை நீட்டி பேசமாட்டார்.

எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..

எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..

தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..

சத்தம் போட்டு பேசமாட்டார்..

சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..

ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.

உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..

புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பணத்தை கையிலே தொடவே மாட்டார்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.

உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.

வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..

வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சாஸ்த்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க கூடாது என்றவர்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்..

தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.

கடவுளைத்தேடி காடு, மலை, குகை,
குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.

கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர். 

அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.

தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.

தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.

மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..

எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

மூச்சி பயிற்சி, வாசியோகம், தியானம், தவம், யோகம், குண்டலினி போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.

தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.

உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.

ஆலய வழிபாடு, உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.

பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .

எவரையும் தொடமாட்டார் , தொட்டு பேசவும் மாட்டார்.

உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.

உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..

நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..

கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.

ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.

ஒளி வழிப்பாட்டிற்காக
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..

தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..

சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.

மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.

உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..

ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.

உலக மக்களுக்காக உண்மை நூலான *திருஅருட்பா* வைத் தந்தவர்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல .
செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.

மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..

மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.

தன் பெயருக்கு முன் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்

அவர் வாழ்ந்த மண்ணில் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதில்தான் எத்தனை எத்தனை பெருமைகள்

அருட்பெருஞ்ஜோதி! 
அருட்பெருஞ்ஜோதி! தனிபெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி!

அதிர்ஷ்டத்தை குறிக்கும் நட்சத்திர குறியீடுகள்

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்


ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.


அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர்.

வெற்றிக்கு தனி வழி


வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.

உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன விஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

நட்சத்திர குறியீடுகள்:

1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை

4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்

5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்

6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி

7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு

8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி

9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.

10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்

11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை

12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை

13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை

14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.

15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்

16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்




17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு

18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி

19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை

20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்

21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்

22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு

23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை

24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்

25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்

26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

சின்னங்களின் பயன்:

ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், ‘லெட்டர் பேடு’ போன்றவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.

அதற்காக, புராண கால உதாரணங்களை இங்கே காணலாம். கீதையின் நாயகன் கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோகிணி என்பது அனைவரும் அறிந்த விஷயம். ரோகிணி நட்சத்திர குறியீடாக ‘தேர்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தேரின் சாரதியாக கிருஷ்ணன் இருந்து நடத்திய ‘பாரதப்போர் நாடகம்’ அனைவரும் அறிந்ததுதான்.

இன்னொரு உதாரணமாக ராமபிரானை இங்கே குறிப்பிடலாம். அதாவது, ராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அந்த நட்சத்திரத்தின் குறியீடாக வில் சொல்லப்பட்டுள்ளது. ராம பாணத்தை செலுத்த உதவும் வில்லை தனது ஆயுதமாக பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பெற்ற வெற்றிகள் இதிகாசமாக மலர்ந்ததை உலகமே அறியும்.

இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றடி உருவம் கொண்ட வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த நட்சத்திரத்தின் குறியீடாக மூன்று பாதச்சுவடுகள் குறிப்பிடப்படுகிறது. ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து முடித்த பின்னர், மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பிய புராணத்தை அனைவரும் அறிவார்கள்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள ‘கதையின்’ வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..?

ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நட்சத்திரங்களுக்கான குறியீடுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதாகும். அதன் மூலம் ஒருவரது ஜனன கால கிரக நிலைகளுக்கு தக்கவாறு சாதகமான சூழல்கள் அமைகின்றன என்று கருதலாம். அந்த குறியீடுகளை அல்லது சின்னங்களை நமது வெற்றிக்கான ‘பார்முலாவாக’ பயன்படுத்தி, வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு களையும் பெறலாம்.

Wednesday, September 23, 2020

இறைவனின் உருவம் எப்படி இருக்கும்

💐படித்ததில் பகிர்ந்தது💐

*கடவுளின் உருவம் எவ்வாறு இருக்கும்?* 
  
*"கடவுள் என்பது தன்மைகள் தானே...*
பின்னர் ஏன்...
*கடவுளுக்கு உருவம்?"*
ஒரு சமஸ்தானத்தின் மன்னர்,
சுவாமி விவேகானந்தரிடம்
கேட்க...
அங்கு மாட்டியிருந்த ஒரு
ஓவியத்தை காட்டி,
விவேகானந்தர்,
"இது உங்கள் தந்தையா?"
"ஆம்" என்றார் மன்னர்.
"இது மிகவும் அசிங்கமாக
உள்ளது, இதை கழற்றி
குப்பையில் எறிந்து விடுங்கள்"
என்றார் விவேகானந்தர்.

உடனே, ஆவேசமடைந்த
மன்னர், "உங்களை தவிர வேறு யார் இதை கூறியிருந்தாலும்,
அவரது தலை இந்நேரம்
தரையில் விழுந்து இருக்கும்..."
என்றார்.

"மன்னிக்கவும் மன்னரே! அது
ஒரு ஓவியம் தான். ஆனால்,
உங்களது தந்தையின்
நினைவாக, குறியீடாக அந்த
உருவம் இருப்பதால் தானே
உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்தது....
அது போல தான், இறைவனை
நோக்கி வழிபடும் போது....
*சிந்தனை ஒரு முகமாக இருக்க வேண்டும்*
என்பதற்காக தான் ஒரு
குறியீடாக உருவம்
உருவாகியது..." என்றார்.

*"சரி, அதற்கு ஏன் இத்தனை கடவுள்கள்?"*
யார் உண்மையான கடவுள்?
சிவனா, விஷ்ணுவா,
முருகனா, விநாயகனா?
காளியா?
இத்தனை கடவுள்களை
வைத்துக் கொண்டு எந்த
இறைவனை வழிபடுவது?"
என்று மன்னர் கேட்க,

விவேகானந்தர்,
"உண்மைதான்....
இன்னும் ஆயிரமாயிரம்
கடவுள்களும் இருக்கிறார்கள்.
சிவ புராணம் படித்தால்,
சிவனே ஆதி இறைவன்
என்பார்கள்.
விஷ்ணு புராணம் படித்தால்
விஷ்ணுவே ஆதி இறைவன்
என்பார்கள்.
இன்னும் வேறு புராணங்களில்
இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை
அறியும் முன்....
தத்துவரீதியாக பலவற்றை
தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்து கடவுளர்கள் பெயர்
எல்லாமே *காரண பெயர்.*
*'சிவா* என்றால்
புனிதமானவன்,
தீயதை அழிப்பவன்.
*'விஷ்ணு* என்றால்
அனைத்திலும் இருப்பவன்,
*'கிருஷ்ணன்* என்றால்
வசீகரிக்க கூடியவன்,
*'விநாயகன்* என்றால்
அனைத்திற்கும் நாயகன்.
*இராமன்* என்றால் ஒளி
மிக்கவன்.

இப்படி ஒவ்வொரு பெயர்களும்
ஒரு தன்மையைதான்
குறிக்கிறதே தவிர,
தனித் தனி கடவுள்களை
அல்ல ...
இந்த தன்மைகளை பொருத்தி
பார்த்தால்,
இறைவனுக்கு இந்த
அனைத்து பெயர்களும்
பொருந்தும் அல்லவா?

கீதையில் கிருஷ்ணன்,
*"யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது.*
என்று சொல்கிறார்.
இங்கே கிருஷ்ணன் யார் ?
புல்லாங்குழல்
ஊதிக்கொண்டு, பசுவிற்கு
பக்கத்தில் நிற்பவன் மட்டும்
அல்ல அவன்.
 
*'பரமாத்மா என்பது அனைத்திலும் (உருவம், அரூபம்) வியாபித்து இருக்கும் இறைவன்.*
அவனை நீங்கள் சிவனின்
உருவத்திலும் நினைக்கலாம்,
முருகனின் உருவத்திலும்
நினைக்கலாம்,
இன்னும் சொல்லப்போனால்
இறைவன் நம்
எண்ணிக்கைகளுக்கு அடங்க
மாட்டான்.
ஒருமை, பன்மைகளுக்கு
அப்பாற்பட்டவன் இறைவன்.

அறிவுக்கு புலப்படாத
இறைவனை, ஒன்று, இரண்டு,
நூறு என்று நம்மால் எண்ணி
தீர்க்க முடியாது.
நீங்கள் ஒன்று என்று
நினைத்தால் ஒருவனாய்
காட்சி தருவான்.
பல என்று சொன்னால் பல
தெய்வங்களாக காட்சி
தருவான்.
இல்லை என்று நினைத்தால்
இல்லாமல் இருப்பான்.

புராணங்கள் எனப்படும்
தெய்வீக கதைகள்....
சாமான்ய மனிதர்களுக்கு
இறைவனின் பல்வேறு
 தன்மைகளை குறித்த
பல்வேறு விஷயங்களை
விவரித்து....
அதன் மேல் ஒரு லயிப்பு
ஏற்படும் வகையில்
சுவாரஸ்யமாக சொல்கின்றன.
இறைவனின் ஒவ்வொரு
தன்மையும், ஒவ்வொரு
விதமான உருவங்களில்
சித்தரிக்கப்படுகிறது.
*இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தன்மைகள் இருக்கின்றன...*

ஆகவே .... |
*எண்ணிலடங்காத உருவங்களில் மக்கள் அவனை வழிபடுகிறாகள்.*
என்றார் சுவாமி
விவேகானந்தர்.

ஆக, இறைவனில் பாகுபாடு
பார்த்தால்...
இறைவனை அறிய முடியாது.
இறை தன்மையோடு நாம்
நடந்து கொள்ளும் போது
தான்...
இறைவனின் அருளை பெற
முடியும்...

ஆகவே, 
*இறை தன்மை வளர்ப்போம்..*
*இறையருள் பெறுவோம்*

வாழ்க்கையில் முன்னுக்கு வர அருமையான சிறு குறிப்புகள்

Best tips

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர்...
(பண்ணவும் நினைக்காதீர்)

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....
குறிப்பாக பொது இடம்,சிக்னல்

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

10. நீங்கள் ஓட்டுனராகவோ , 
அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி ஆவந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

14.  நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. 
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

15.  வயது, சம்பளம், விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...
(no one likes advices.)

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...
'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...
உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, 
கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

23. பாடல்களை எப்போதும் 
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

24.  ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

25.  டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28.  குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...
ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ...
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ...

என்றும் அன்புடன் 
குடியாத்தம் பாரத் Er.அன்பு
                                        
ஶ்ரீ ஆண்டாள் வாஸ்து ஆலோசகர்
ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

Tuesday, September 22, 2020

காசியில் இறக்க முக்தி

மாறா மயானம்

காசி நகரம் பல

எங்களுக்கு பெயர்

பெற்றது என்றாலும்

இறப்பு என்பதற்கும் காசி

நகரம் பிரசித்தமானது

இந்தியாவின் பல

பகுதிகளில் இருந்தும்

நேபாளம் மற்றும்

வெளிநாடுகளில் இருந்தும்

முதியவர்கள்

கட்டி மூச்சை காசியில்

விட்டால் மோட்சம்

கிடைத்துவிடும் என்ற

நம்பிக்கையுடன் ஈூடும் ஒரே

நகரம்

உயிர் பிழைக்க வேண்டும்

என்பதற்காக,

ஆஸ்பத்திரிகளில்

செலவிடுபவர்கள்

திடீரென்று இறந்து

போகிறார்கள்

ஆனால், காசியில்

இறப்புக்காக

காத்திருப்பவர்கள்,

அதைத்தோ

வருடக்கணக்கில்

காத்துக்கிடக்கிறார்கள்

அதுதான் கிடைத்த

பாடில்வை

இறப்பு யார் கையிலும்

இல்லை இறப்பு: எவ்வளவு

எளிதான காரியம் ஒன்றும்

இல்லை

என்பதையும் நிரூபித்துக்

கொண்டிருக்கிறது. காசி

நகரம்

இங்கே மக்கள் இறப்பை

கொண்டாடுகிறார்கள்

துளி அளவும் இறப்பின்

சோகம் யாரையும்

வாட்டுவதில்லையா

இறப்பை மகிழ்ச்சியோடு

எதிர்நோக்க காத்திருக்கும்

முதியோர்களால்

சூழப்பட்டிருக்கும்

இடங்களில் ஒன்று

மணிகர்ணிகா பகுதியில்

உள்ள கங்கா பலன்

பல ஆண்டுகளுக்கு முன்பு

கோடீஸ்வரர் ஒருவரின்

பாட்டி, இது இறுதி மூச்சை

காசியில் விட வேண்டும்

என்று விரும்பியிருக்கிறார்

அவரைக் கொண்டு சென்ற

உறவினர்கள், தங்க இடம்

கிடைக்காமல் தவித்து

எப்படியோ ஒரு இடத்தை

தேடி பிடித்திருக்கிறார்கள்:

பாட்டி காலமான பின்பு,

மோட்சம் தேடிவரும்

எழைகள் தங்க எந்த இடமும்

நிரந்தரமாக இல்லை

என்று அவர்கள்

கவலை பட்டிருக்கிறார்கள்,

கபோலப்பட்டவர்கள்

செல்வச் சிமான்களாக

இருந்ததால், அங்கிருந்த

பொலிஸ் நிலையத்தை

குத்தகைக்கு எடுத்து

உயிர் துறக்க

விரும்புகிறவர்களுக்கு

உறைவிடம் ஆக்கினார்கள்.

இதுவரை அங்கு

தங்கியிருந்து 10 ஆயிரம்

பேர் உயிர்

துறந்திருக்கிறார்கள்

இப்போதும் பலர் அங்கே

நாயகி இருக்கிறார்கள்

அவர்கள் மூச்சு முடிவுக்கு

வந்த பின்பு தொடர்ந்து

இங்கு வந்து தங்கி

உயிரைவிட 12 ஆயிரம்

முதியோர்கள் தங்கள்

பெயரை பதிவு செய்து

விட்டு, எட்டாது அழைப்பு

பெரும் என்று

காத்துக்கிடக்கிறார்கள்

கியூவில் நிற்கும் அளவுக்கு

இறப்பு மீது எவ்வளவு ஏக்கம்

பாருங்கள்

இன்னொன்று காசி லாப்

முக்தி பவன்

ஜெய்டாஸ் டாலமியா என்ற

செல்வந்தர், தன் தாய்

காசியில் மரணமடைந்த

பிறகு தாயார் நினைவாக

இந்த கட்டிடத்தை விலைக்கு

வாங்கினார்

முதல் வேத மந்திரம்

ஓதவும், பகவத் கீதை

சொற்பொழிவுகள்

நிகழ்த்தவும் ஐதீக இசை

நிகழ்ச்சிகள் நடத்தும் இந்த

இடத்தை பயன்படுத்தினார்

ஆனால் இறப்பை

எதிர்நோக்கும் முதியோர்கள்

அந்த மையத்தில் வந்து

குவிய

இறுதிக்குரிய இடமாக அது

உறுதி செய்யப்பட்டுவிட்டது!

இங்கு கூடி இருக்கும்

முதியோர்களின் மனம் எப்

போதும் இறைவனை நாடிக்

கொண்டே இருக்க

வேண்டும் என்பதற்காக

வேத மந்திரங்கள்

முழக்கம் கேட்டுக் பெயிண்ட்

இருக்கிறது

முதியோர்கள் தினமும்

கங்கையில் குளித்து

இறைவா எங்களை ஏற்றுக்

பொள் என்று கோரிக்கை

வைக்கிறார்கள்

நேபாள நாட்டு அரசும்

முதியோர்கள் பேர் தங்கி

இருக்கும் ஓர் இடத்தை

பராமரிக்கிறது

அங்கிருப்பவர்களுக்கு

உணவு, உடை கொடுத்து

இறுதி வழியனுப்பி

வைப்பது வரை நேபாள

அரசால்

நியமிக்கப்பட்டிருப்பவர்களி

ன் பொறுப்பு)

இங்கே சகல

அவராசிகளுக்கும் மாணம்

நேரும் போது அவற்றின்

காதுகளில் ராம நாமத்தை

ஓம் என்ற பிரணவத்தை

சிவனே ஓதுகிறது என்பது.

தீராத பிரச்சனை தீர பரிகாரம்

*திருச்செந்தூர் - முக்கிய பரிகாரம்.*

*முக்கியமான ஒரு பரிகாரத்தை இங்கே எல்லோரும் பயனடையும் விதத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.*

வாழ்வில் நடக்காத,முடியாத, இயலாத ஒரு காரியம் என்று எதையாவது நினைத்து கொண்டு வருந்தி கொண்டு இருகிறீர்களா..🤧

*புறப்படுங்கள் திருசெந்தூர் கோவிலுக்கு..*

அங்கே உள்ள  பிச்சைகாரர்களுக்கு [ பிச்சைகாரர்கள் என்று சொல்ல கூடாது ...உங்கள் புரிதலுக்காக அந்த வார்த்தையை சொல்கிறேன் ..மன்னிக்க...]  *#பண்டாரசாப்பாடு கொடுக்க வேண்டும்.*

*அது என்ன பண்டார சாப்பாடு..?*

_திருசெந்தூரில் ஒருவன் பிச்சை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு பல விதிமுறைகள் உள்ளது._

அது பின்னொரு நாள் விளக்கமாக கூறுகிறேன்..

அவர்கள் யாரும் பிச்சைகாரர்கள் அல்ல..

*முருகனை மட்டுமே நம்பி குடும்பத்தை விட்டு விலகி வந்தவர்கள். அவர்களுக்கு அளிக்கும் அன்னதானம் தான் நாம் பண்டார சாப்பாடு என்று கூறுகிறோம்.*

அதை அவ்வளவு எளிதாக கொடுத்து விட முடியாது..

*முன் பதிவு செய்ய வேண்டும்.*

நம்ம பாஷையில் முன்பதிவு முதலிலேயே செய்ய வேண்டும்.

*அவர்களுக்கு வயிறார உணவு அளித்த பின் அவர்கள் சாப்பிட்ட அந்த இலையை மடி பிச்சையாக எடுக்க வேண்டும்.* 

இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்...

*எத்தனை பேருக்கு உணவு தருவது, என்றைக்கு தருவது போன்ற விவரங்களுக்கு கோவிலை அணுகி விளக்கம் பெறுங்கள்.*

செய்து பாருங்கள் ....உங்கள் பல நாள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

நற்பவி

Monday, September 21, 2020

யுகங்களின் கால கணக்குகள்

🟩🔥யுகங்களும்..
          கால 
          கணக்குகளும🔥🟩

🟨🟨🟨🟨🟨🟨🟨🟨
மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள்.
🟨🟨🟨🟨🟨🟨🟨🟨

அதன்படி அவை

01.கிருதயுகம், 

02.திரேதா யுகம்,

03. துவாபர யுகம்,

04. கலி யுகம் 

என்று நான்கு பிரிவாக உள்ளன.

🟨🟨🟨🟨🟨🟨🟨🟨

01.கிருத யுகம்: 

🔥இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள்.

🔥மனிதர்கள் சராசரியாக 
21 அங்குலம் 
(924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 
1,00,000 வருடமும் வாழ்வார்கள். 

🔥இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

02.திரேதா யுகம்:

🔥நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், 
ஒரு பகுதி மக்கள்  அறமில்லாமலும் வாழ்வார்கள்.

🔥மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம்
 (616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள். 

🔥இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டதாகும்.

03.துவாபர யுகம்:

🔥சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள்.

🔥மனிதர்கள் சராசரியாக
 7 அங்குலம் 
(308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். 

🔥இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.

04.கலியுகம்: 

🔥நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள்.

🔥மனிதர்கள் சராசரியாக
 3.5 அங்குலம் 
(154 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள். 

🔥இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டதாகும்.

இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு 
‘மகா யுகம்’ 
அல்லது ‘சதுா்யுகம்.’ 

12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம். 

14மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். 

இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.

🟩தற்போது நடந்து கொண்டிருப்பது 
2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.🟩

மனிதர்களின் கால அளவும், 
தேவர்களின் கால அளவும் வேறுபடும்.

நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள்.

ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது 
ஒரு நாள். 

அதன்படி 360 மனித வருடம், 
தேவர்களின் ஒரு வருடமாகும்.

12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். 

அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். 

ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை 
நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.

ஒவ்வொரு யுகத்திற்கான 
தேவ வருடத்தையும், மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

கிருத யுகம்
17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 
4,800 தேவ வருடம்.

திரேதா யுகம் 
12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 
3,600 தேவ வருடம்.

துவாபர யுகம் 
8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 
2,400 தேவ வருடம்.

கலி யுகம் 
4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 
1,200 தேவ வருடம்.

மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். 

இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர்.

மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. 

இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.

சரி. 
கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். 

ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். 

பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. 

எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும். 

எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.

பிரம்மனின் கல்ப காலத்தில் 
14 மனுவந்தரங்கள் அடங்கும். 

ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, 

ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள்.

(இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே).( ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். )
Indran is a post occupied  by ) (he is expected to follow orderliness,  else, he  will be punished,  by relevant devatha.).

இப்போது இருக்கும் இந்திரனின் பெயர்

🟧♻ புரந்தரா♻🟧

2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும். 

இந்த காலத்தின் பெயர்

 “ஸந்தியா காலம்”.

 இந்த காலத்தின் அளவு, 
நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும். 

அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள். 

இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் 
ஒரு பெரிய இடைவெளி இருக்கும்.

அதுவே பிரம்மனின் இரவு ஆகும்.

பிரம்மனின் ஒரு பகல் என்பது
 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994
மகா யுகங்கள்.

 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். 
அதாவது 6 மகா யுகங்கள்.

ஆக. 
பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் 
(994 + 6 சதுர் யுகங்கள்). 

இதையே பிரம்மனின் நாள் என்றும், 
கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர். 

இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும்.

பிரம்மனின் 100 வருடம், 
ஒரு பிரம்மனின் ஆயுள். 

12 ராசிகளுக்கு உரிய சிகப்பு புத்தக மந்திரங்கள்

12 இராசிகளுக்கும் அதிஷ்டம் அளிக்க கூடிய பண்டைய கால லால் கிதாப் மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்

12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள்:
இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-

1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கதிர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்

ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.
4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.
5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.

மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள் சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.
3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.
4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.
6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.
8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்

கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது.
2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.
3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.
4.எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.
5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.
6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.
7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்

சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.
3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.
4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.
6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.
7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்

கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.
2.மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.
4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.
5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.
6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.
7.புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.
8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.
9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்

துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.
4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
5.நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.
6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.
10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்

விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.
3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.
4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.
6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.
8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.
9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .
13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
2.தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
4.திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
5.வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
6.வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.
8.யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.
9. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்

மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
2.ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது.இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
3.பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும்.அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
5.48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது.அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.
6.கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.
7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும்.இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது

கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.
2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.
3.மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.
4.சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.
5.வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.
6.ஏழைகள் அலல்து கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.
7.ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம்.ஆனால் அதை அருந்தக்கூடாது.
8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.
9.விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.
10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்

மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
2.பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.
3.மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.
4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.
5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.
6.வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.
8. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.
9.வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
10.தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
11.பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.
12.கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
13.குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.