உங்களது வீட்டில் வாஸ்துப்படி எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்கலாம் என்பது பற்றி காணலாம்.
நெய் தீபம்:- உங்களது வீட்டு பாசல் படிகளில் வாரத்தில் ஒருமுறையாவது நெய்யால் நிர்ப்பட்ட இரண்டு தீபங்களை ஏற்றி வையுங்கள். இது உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
ஈரத்துணிகள்:- உங்களது வீட்டில் ஈரத்துணிகளை மரக்கதவின் மீது போட கூடாது. இது நெகட்டிவ் ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், உங்களது கதவுகளையும் அசிங்கப்படுத்தும். அதுவும், குறிப்பாக திருமணமான ஆண்கள் கதவின் மீது துணிகளை போட கூடாது என்று கூறுவார்கள்.
சாமி சிலைகள் :- பெரும்பாலும் ஒரு வீட்டின் லட்சுமி கடாட்சம் எங்கும் நிறைந்திருக்கும் என்றால் அது நம் வீட்டின் பூஜை அறை தான். நமது வீட்டு பூஜை அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். பின்னர் பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை கவனிக்க வேண்டும். இரண்டு தெய்வங்களின் சிலைகளை எதிரெதிரே பார்த்தவாறு வைத்தல் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும் எங்கிறது வாஸ்து…
கண்ணாடி பொருட்கள்:- வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் விழுந்த கண்ணாடி பொருட்களை வைத்திருக்க கூடாது. இவைகள் வீட்டில் நிதி பற்றாக்குறையை உண்டாக்கும்.
கிழிந்த படங்கள் :- வீட்டில் கிழிந்த புகைப்படங்களை வைத்திருப்பது, உடைந்த சாமி சிலைகள் போன்றவற்றை வைத்திருந்தால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் உண்டாகும்.
கடிகாரம்:- கடிகாரத்தை எப்பொழுதும் நீங்கள் வீட்டிற்குள் நுழைவதற்காக இருக்கும் கேட்டிற்கு எதிராகவோ அல்லது வீட்டு நுழைவாயில் கதவிற்கு எதிராகவோ வைப்பது என்பது கூடாது. இந்த இடத்தில் கடிகாரத்தை வைத்தால், உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.
படுக்கைக்கு வலதுபுறம் சிலர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, நேரம் பார்த்து எழுந்திரிக்க ஏதுவாக இருக்கும் என்று கருதி, தங்களது படுக்கைக்கு வலது புறத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்திருப்பார்கள். இவ்வாறு செய்வது என்பது முற்றிலும் தவறான ஒன்று இந்த இடத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்தீர்கள் என்றால் உங்களது நிம்மதி பரிபோய்விடும்.
கண்ணாடி:- உங்களது வீட்டில் எப்போதும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு எதிராக இந்த கடிகாரத்தை வைக்க கூடாது. இவ்வாறு நீங்கள் செய்திருந்தால் உடனடியாக இதனை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.
கிழக்கு மற்றும் வடக்கு வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டியது மிகமிக அவசியமாகும். இந்த கடிகாரத்தை உங்களது வீட்டில் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் வைப்பது மிகவும் நல்லது ஆகும்.
நஷ்டம் உண்டாகும்! உங்களது வீட்டில் வைத்திருக்கும் கடிகாரத்தில் அழுக்குகள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டிருந்தால் அது உங்களது நிதி நெருக்கடி, நஷ்டம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை கெடுக்கும்.
ஓடாத கடிகாரம் இருக்கா? உங்களது வீட்டில் ஓடாத கடிகாரம் இருந்தால் அதனை உடனடியாக பழுது பார்க்க வேண்டியது அவசியமாகும். அல்லது அதனை அப்புறப்படுத்த வேண்டும். ஓடாத கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது வாஸ்துப்படி நல்லது அல்ல..
படுக்கை அறையில் கூடாது! உங்களது படுக்கை அறையில் ஊசல் கடிகாரங்களை வைத்திருப்பது முற்றிலும் கூடாது. இது உங்களது தூக்கத்தை கெடுப்பதுடன், நிம்மதியையும் கெடுக்கும்.
No comments:
Post a Comment