Friday, February 19, 2021

முதலில் தோன்றியது முட்டையா அல்லது கோழியா?

✍️முதலில் தோன்றியது விதையா அல்லது மரமா? கோழியா அல்லது முட்டையா?முதலில் தோன்றிய உயிர் எது? 
இந்த உலகத்தில் எல்லாமே வட்டம்போல இயங்கிக்கொண்டிருக்கிறது.
வட்டத்திற்கு முதலும் முடிவும் இல்லை என்பது நமக்குத்தெரியும்.
..
முட்டையிலிருந்து கோழி வருகிறது,பிறகு அது முட்டையிடுகிறது, பின்பு அந்த முட்டையிலிருந்து கோழி வருகிறது.இது ஒரு வட்டம்போல நடந்துகொண்டிருக்கிறது. 
இதில் முதலும் இல்லை,முடிவும் இல்லை.
இதே விதிதான் உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும்.
மனிதனும் இதே விதிக்கு உட்பட்டவன்தான்.
இந்த உலகமும் இதேவிதியின்படியே தோன்றியுள்ளது.
ஒடுங்கியிருந்த பிரபஞ்சம் பின்பு பல்வேறு சூரியர்களாகவும்,சந்திரர்களாகவும்,கிரகங்களாகவும் பரிணமித்தது,பின்பு மீண்டும் அனைத்தும் ஒடுங்குகிறது.மீண்டும் ஒடுக்கத்திலிருந்து பிரபஞ்சம் விரிவடைகிறது.இதில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஆதியும்இல்லை அந்தமும் இல்லை.
..
தியானத்தில் ஆழ்ந்து செல்பவர்களின் மனம் முற்றிலும் ஒடுங்குகிறது அப்போது அவர்களைப்பொறுத்தவரைபிரபஞ்சமும் ஒடுங்கிவிடுகிறது.கடவுள் காட்சி கிடைக்கிறது.
பின்பு மனம் மீண்டும் சாதாரணநிலைக்கு வரும்போது பிரபஞ்சத்தை காண்கிறார்கள்.அப்போது கடவுள் காட்சி கிடைப்பதில்லை. 
..
இந்த பிரபஞ்சம் முற்றிலும் ஒடுங்கும்போது கடவுள் மட்டுமே இருக்கிறார்.
அதேபோல பிரபஞ்சம் விரிவடைந்திருக்கும்போது கடவுளைக் காண முடியாது..
..
முற்காலத்தில் இந்த இரண்டு கருத்துக்களையும் அடிப்படையாகக்கொண்டு இரண்டு மதங்கள் தோன்றின.
பிரம்மம்(கடவுள்) சத்யம்(உண்மை) பிரபஞ்சம் மித்யை(இல்லை) என்று ஒரு மதம் உபதேசித்தது.
இன்னொரு மதம் பிரபஞ்சம் சத்யம். கடவுள் மித்யை(இல்லை) என்று போதித்தது.
இந்த இரண்டு கருத்துக்களும் உண்மைதான். கடவுளை மட்டுமே காண்பவன் பிரபஞ்சத்தை காண்பதில்லை.அவன் உருவங்களைக் கடந்து உருவமற்றவனாகிறான்.
ஆனால் பிரபஞ்சத்தைக் காண்பவன் கடவுளைக் காண்பதில்லை.
..
கடவுள் இருப்பதற்கு என்ன ஆதாரம்?
சிலருக்கு பிரம்மத்தின்(கடவுள்) காட்சி கிடைக்கிறது. இதுவே ஆதாரம்.
..
வட்டத்திற்கு ஆரம்பம் இல்லை. முடிவும் இல்லை என்று பார்த்தோம் .
மனத்தை முற்றிலும் ஒடுக்குபவன் வட்டத்தின் ஒரு புள்ளியில் நிற்கிறான்.அவனுக்கு கடவுள் மட்டுமே தெரிகிறது. மனத்தை முழுவதும் விரிவடையச்செய்பவன் வட்டத்தின் இன்னொரு புள்ளியில் நிற்கிறான் அவனுக்கு பிரபஞ்சம் மட்டுமே தெரிகிறது.
வட்டத்தைப்பற்றி முழுவும் அறிந்தவனுக்கு இந்த இரண்டும் தொடக்கம் முடிவு இல்லாதவை என்று தெரிகிறது.
-🕉️

No comments:

Post a Comment