Sunday, February 28, 2021

சித்தர்களின் சமாதி மற்றும் அவர்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள்.

*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்._

Saturday, February 27, 2021

கடன் தீர சக்தி வாய்ந்த நரசிம்ம மந்திரம்.

கடன் தீர மந்திரம்

ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்  
* ***************************

1. தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

2. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

3. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

5. ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

6. ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

7. க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

8. வேதவேதாந்த யஞ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

9. ய இதம் பட்யதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

Friday, February 26, 2021

சிறிய பரிகாரம் முயற்சிகள் பெரிய பலன்கள்.

1.தினசரி காகத்திற்கு உணவிடுங்கள்.

2.தினசரி பறவைகள் உண்ண தானியங்களும்,குடிக்கத் தண்ணீரும் வையுங்கள்,

3.அரசு,வேம்பு, நெல்லி, வன்னி  மரங்கள் அருகில்  இருந்தால் ஜலம் விடுங்கள்.

4.பசுவிற்குப் புல்லோ,அகத்திக்கீரையோ அளியுங்கள்.

5.எறும்புகளுக்கு அரிசிக் குறுணை அல்லது அரிசி மாவு போடுங்கள் .

6.நாய்களுக்கு பிஸ்கட்டோ,மீதியான சப்பாத்திகளையோ போடுங்கள்.

7.மீன்களுக்குப் பொறி போடுங்கள்,

8.குரங்களுக்கு வாழைப்பழம் கொடுங்கள்.

9.கோயில் தீபத்திற்கு எண்ணெய் கொடுங்கள்,

10.ஊனமுற்றவர்களுக்கு உங்கள் பழைய ஆடைகளைத் துவைத்தபின் வழங்குங்கள்.

11.அன்னதானம்,நீர் மோர்,தண்ணீர் பந்தலுக்குப் பணம் கொடுங்கள்

12.காலையில் சூரியனைப் பாருங்கள்.

இதையெல்லாம் அவசியம் தினம் செய்யுங்கள்
நல்லதே நடக்கும்

நான் செய்கிறேன்

இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் கடவுளுக்கு நன்றி கூறுங்கள்.

Thursday, February 25, 2021

திருமண சடங்குகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

நம்முடைய இந்து சமயத்தில் திருமண
நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண
சடங்குகளும் அதன் விளக்கமும்:
1. நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.
பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும்
மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி
நடவேண்டும். மரத்தின் நுனியில், முனை
முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ
மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.
பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி
நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு
போட்டு பந்த கால் நட வேண்டும். சாம்பிராணி
காண்பித்து தேங்காய் உடைக்கவேண்டும்.
பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால்
ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி
தடவ வேண்டும். மாவிலை, நவதானியம்,
வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை
உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள
பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி
பெறுவது நோக்கமாகும்.
2. பொன்னுருக்குதல்:
திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம்
ஆகும்,போற்றி பாதுகாக்க படவேண்டியது
ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக
வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து
உரிய நபரிடம் (பொற்கொல்லர்) புதிய பொன்
கொடுத்து திருமாங்கல்யம் செய்யவேண்டும்.
3. கலப்பரப்பு:
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை
களத்தில் பரப்பி (தரையில் விரித்து)
மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை
இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம்
இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான
அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத்திரம்)
ஆகும். பாத்திரத்தில் மங்கலப்பொருட்கள
ை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு,
தெங்காய், பழக்கள் பூச்சரம்) நிரப்புதல்
கலப்பரப்பு ஆகும்.
4. காப்பு கட்டுதல்:
காப்பு என்பது அரண் போன்றது .
மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு
வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது.
திருஸ்டி மற்றும் அசுர சக்திகளால்
இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு .
காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு
அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான
அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி
செய்வேன் என்பதை உறுதி செய்யும்
சடங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும்
தடையின்றி நடைபெறும் வண்ணம்
இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை
வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.
5. முளைப்பாலிகை:
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை
சாந்தி செய்வது . முளைப்பாலிகையில்
இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல்
குடும்பமும் செழித்து வளரட்டும்
என்பதற்கான அடையாளச்சடங்கு .
கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம்
தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே
சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்ற
து.
6. தாரை வார்த்தல்:
தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத்
தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின்
அதிர்வை ஏற்கக்கூடியது . இப்படி
தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு
பயன்படுத்துகின்றனர் . திருமணச்
சடங்குகளில் மிக முக்கியமானது தாரை
வார்த்தல்.
தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள்
கழுத்தில் தாலி கட்டும் உரிமையை
அடைகின்றான்” என் மகளை தெய்வங்களின்
சாட்சியாக உனக்கு மனைவியாக
கொடுக்கின்றேன் “என மணமகளின் பெற்றோர் ,
தாரை வார்த்து கொடுக்க மணமகனின்
பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு
– மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம்
என்பதற்கான உறுதிமொழி.
எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை
ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க,
அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை,
மணமகனின் கை , மணப்பெண்ணின் கை ,
மணப்பெண்ணின் தந்தையின் கை,
எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின்
தாயாரின் கை. இந்தவெரிசையில் கைகளை
வத்து இச்சடங்கு நடைபெறும். உரிமையை
விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக
செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு
தாரை வார்த்தல் என்ப்படும்.
7. தாலி கட்டுவது:
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில்
கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம்
இந்துக்களின் புனித நிறம் ஆகும்.மேலும்
தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள
சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும்
ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது,
கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள்
மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி
போய்விடுவார்.
மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை
கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும்
ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.
தெய்வீக குணம், தூய்மையானகுணம்,
மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம்,
ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை
உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது
குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்க
வேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள
மாங்கல்ய நாண் பெண்களுக்கு
அணியபடுகிறது.
8. ஹோமம் வளர்த்தல்:
வேதங்களில் சொல்லப்பட்டப்பட
ி அக்னிசாட்சியாக திருமணம் நடைபெற
வேண்டும். ஹோமத்தின் மூலம்
நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும்.
ஹோமத்தில் இடப்படும் பொருட்கள்
சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது.
ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும்
ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எந்த ஒரு
நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான்
சாஸ்திரப்படி சரியாகும்.
9. கும்பம் வைத்தல்:
கும்பம் இறைவனது திரு உடம்பின்
அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத்
திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி ,
கும்பத்தில் பாவிக்கப்படும்
கும்பவஸ்திரம் உடம்பின் தோல்
நூல் நாட நரம்புகள்
குடம் தசை
தண்ணீர் இரத்தம்
நவரத்தனங்கள் எலும்பு
தேங்காய் தலை
மாவிலை தலைமயிர்
தருப்பை குடுமி
மந்திரம் உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .
10. அம்மி மிதித்தல்:
அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல்
செயவதற்கு பயன்படும், பொருட்களை
அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும்.அம்மி
மிக உறுதியுடனும், ஒரே இடத்தில்
அசையாமல் இருக்கும்.திருமண பெண் புகுந்த
வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள்
இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார்,
நாத்தானார் மற்றும் அனைவராலும்
சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன்
எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை
கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே
அம்மி மிதிப்பது ஆகும்.
11. அருந்ததி பார்த்தல்:
அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான
வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார்.ஏழு
ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி
வீசுகிறார்கள். இதைத்தான் நாம் துருவ
நட்சத்திரம் என்கிறோம்.ஏழு நட்சத்திரங்களில்,
ஆறாவதாக (நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர்
ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம்
பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை
காணலாம்.ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும்
வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால்
அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும்
பார்க்கலாம்.மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,
ஊர்வசி, மேனகை இவர்களிடம்
சபலபட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய
மனைவிகளும், இந்திரனனின் மேல்
சபலப்பட்டவர்கள். ஆனால் வசிஷ்டரும்,
மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின்
மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.
12. ஏற்றி இறக்குதல்:
மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள்
மங்கலப் பொருட்களை (திருவிளக்கு, நிறை
நாழி, சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு,
தேங்காய், பழம், குங்குமச்சிமிழ், மஞ்சள்
பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும்
சடங்கு . மேலும் அருவ நிலையிலிருந்து
மணமக்களை ஆசிர்வதிக்கும்
தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ,
முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான
பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக
செய்யப்படுவதும் உண்டு.
13. அடை பொரி:
பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும்
.பல உருவத்தைக் காட்டும் வகையில்
பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண
நகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி
தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத்
திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர்
பாகம் ஆகும்.
14. நிறை நாழி:
நித்தமும் குத்து விளக்கு என்று
சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து
வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது
அய்தீகம் ஆகும்.
15. ஒலுசை:
ஒலுசை என்பதை வரதட்சணை என்றும்
கூறுவர். மணமகள் அனைத்து வகைச்
செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு
வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி .
சிறப்பான இல்லறவாழ்விற்கு
அத்தியாவசியமான பொருட்களை
பொறுப்புணர்ச்சியுடன் பெண்வீட்டார்
கொடுப்பது . ஒலுசைப் பொருட்களைப்
பட்டியலிட்டு சபையில் கொடுப்பது
தற்சமயம் குறைந்து வருகிறது . இது
வரவேற்க்க தக்க விசயமாகும்.
16. மணமகள் பொங்கலிடுதல்:
முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள்
அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த
இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன்
முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்
நிகழ்ச்சி ஆகும். மணமகள் வீட்டுப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டாள் என்பதைக்
வெளிப்படுத்துவது. புதுப்பெண்ணின்
சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து
கொள்ள உதவுவது. இதுதான் மணப்பெண்ணின்
முதல் சமையல். இன்று போல் என்றும்
வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும்
என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின்
நோக்கமாகும்.
17. பிள்ளை மாற்றுவது:
எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும்
நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை
மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ
உபதேசம். பிறக்கப்போகும் குழ்ந்தைகள் நல்ல
முறையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற
நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர
வாழ்த்துவது. திருமணத்தின் பயனே
நன்மக்கட்பேறு “மங்கலமென்ப
மனைமாட்சிம்ற்று அத்ன் நஙலம்
நன்மக்கட்பேறு” – திருவள்ளுவரின்
வாக்காகும். நன்மக்கட்பேறு பெறுவதற்காக
செய்யப்படும் ஒரு சடங்கு.
18. மறுவீடு:
மணமகளின் பெற்றோரும் – உறவினரும்
மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக
மணமகளுடன் சென்று – விருந்துண்ட்
மகிழ்ந்து – உறவை வலுப்படுத்துவது . ஒரு
பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும்,
புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின்
இருபக்கங்கள் போன்றது . மகளை
வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச்செய்வதே
மறுவீடு ஆகும்.
19. கோவிலுக்கு அழைத்துச்செல்லுதல்:
நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது
மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக
அமைந்திருக்கும் . வேண்டுதலை
நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி
செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம்
பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு
தம்பதிகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல
வேண்டும்.

Wednesday, February 24, 2021

எதிர்பார்ப்பதை விட்டு விடுங்கள் ஏமாற்றம் இருக்காது.

*எதிர்பார்ப்பதை விட்டுவிடுங்கள்:-*

எதிர்பார்ப்பதை விட்டு விட்டால் ஏமாற்றமே இருக்காது. 

மகிழ்ச்சியின்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணம் என்றால் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான். 

அது எப்படி வருகிறது எனில் கற்பனையாக எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். 

எனக்கு இப்படி வர வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையான எதிர்பார்ப்புகள் இல்லாமல், எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கிறது எல்லாம் நாம் செய்ததினுடைய செயல் விளைவாகத்தான் கிடைக்கிறது. 

ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று நீங்கள் யோசித்துச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால், பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக் கொள்ளலாம். 

உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். 

பிறருக்கு மனப்பூர்வமாக எந்த அளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவுக்கு மனப்பூரிப்பும் மன அமைதியும் ஆற்றலும் உண்டாகும்.

பொருளைக் கொடுத்துத்தான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறதோ அந்த ஆற்றலைக் கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு அறிவாலே, பொருளாலே, பிறருக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து, அந்தந்த நேரத்தில் செய்ய மனப்பயிற்சி பெறுங்கள்.

காலையிலும் மாலையிலும் இந்த உலகம் சமாதானமாக இருக்கட்டும் என்று வாழ்த்த முடியாதா? அதைச் செய்யலாமே. 

அம்மாதிரி எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டே இருப்போமானால் மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும். 

நீங்கள் கவனித்து பார்த்தீர்களானால், எதிர்பார்ப்பவர்கள் எப்பொழுதும் மனதளவில் ஏழ்மையில்தான் இருப்பார்கள். 

நமது ஆற்றல், செல்வம், வசதி, செல்வாக்கு இவற்றைக் கொண்டு என்னென்ன வகையில் பிறர்க்கு சேவை, உதவி, செய்ய முடியும் என்று எண்ணுகிறபோது, நமக்கே நிறைய செல்வம் இருக்கிற மாதிரி நமது மனத்திற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
.

இதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால் மேலும் மேலும் ஆற்றல் வளரும். செல்வமும் வளரும், மகிழ்ச்சியும் நிறைவும் வளர்ந்து கொண்டே போகும். 

*எதிர்பார்த்தல் ஏமாற்றம்:*

"எதிர்பார்த்தல் எப்போதும் எவரிடமும்
ஏமாற்றமே விளைக்கும் ஏதுமனதில் அமைதி
எதிர்பார்த்தல் எனும்நோயை மாற்றி மனநலம்காண 
எதுஉளதோ அதைஏற்று உதவிசெய்தே வாழ்ந்திடுவோம்".

*மனநிறைவு :*

"எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது 
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில் 
எதிர்ப்பின்றித் தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும் 
எச்செயலும் மனவலிவு நுட்பத்தோடு ஆகும் 
எதிர்காலம் வாழ்க்கைத் துறை அனைத்திலும் புத்துணர்வும் 
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும் 
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலைதாண்டி 
எப்போதும் வளம் நிறைந்த மனநிறைவு உண்டாம்."

*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

Monday, February 22, 2021

உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு செல்ல வேண்டிய ஆலயம்

இது  மிக. மிக முக்கியமான பதிவு இதை   சேமித்து வைத்து கொள்ளுங்கள் .

மீள் பதிவு....

     நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு  அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள்  குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம்  செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்.........................

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது? 

எப்படி செல்ல வேண்டும்? 

அங்கு சென்றால் கிடைக்கும்

 பலன் என்ன! ...............

#அசுவினி:

கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும். 
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8.
போன்: 94438 85316, 04369 222 392

#பரணி:

கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
அம்மன்: சுந்தரநாயகி 
தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது. 
சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம். 
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை. 
திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30.
போன்: 94866 31196, 04364 285 341

#கார்த்திகை:

கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை
தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது. 
சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5
போன்: 94874 43351, 04364 282 853.

#ரோகிணி:

கோயில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்
தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.
சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு. 
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை.
திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30.
போன்: 044- 2723 1899.

#மிருகசீரிஷம்:

கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில்
தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான். 
சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும். 
இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.
திறக்கும்நேரம்: மாலை5- இரவு 7.
போன்: 94433 51528, 04366- 269 965.

#திருவாதிரை:

கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில்
அம்மன்: சுந்தரநாயகி அம்மன்
தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். 
சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது. 
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.
திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.
போன்: 99440 82313, 94435 86451.

#புனர்பூசம்:

கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.
சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும். 
இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7.
போன்: 99941 07395, 04174 226 652

#பூசம்:

கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் 
அம்மன்: அபிவிருத்தி நாயகி
தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.
சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும். 
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: மாலை4- இரவு7. 
போன்: 97507 84944, 96266 85051.

#ஆயில்யம்:

கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோயில்' என்றால் தான் தெரியும். 
சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும். 
இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை9- மதியம் 1.30, மாலை 4- இரவு7.
போன்: 99940 15871, 0435- 200 0240

#மகம்:

கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில்
அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி
தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார். 
சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு. 
இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை6- மாலை6.
போன்: 95782 11659, 93624 05382.

#பூரம்:

கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.
சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30
போன்: 98651 56430, 99652 11768

#உத்திரம்:

கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம். 
சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8.
போன்: 98439 51363, 0431- 254 4070.

#அஸ்தம்:

கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில்
அம்மன்: அன்னபூரணி
தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். 
சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு.
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30.
போன்: 95002 84866

#சித்திரை:

கோயில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி 
தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம். 
சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு. 
இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6.
போன்: 94439 61948, 97902 95795.

#சுவாதி:

கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
அம்மன்: பூங்குழலி
தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் "நெல்லி.
சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும். 
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை8- 10, மாலை 5-7
போன்: 93643 48700, 9382684485.

#விசாகம்:

கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்
தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது. 
சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும். 
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில். 
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.
போன்: 04633- 237 131, 237 343.

#அனுஷம்:

கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில் 
அம்மன்: உலகநாயகி
தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர். 
சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும். 
இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.
போன்: 04364- 320 520 

#கேட்டை:

கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்
தாயார்: பெருந்தேவி
தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார். 
சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30.
போன்: 97903 42581, 94436 50920

#மூலம்:

கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பகுஜாம்பாள்
தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.
சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும். 
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30.
போன்: 94447 70579, 94432 25093

#பூராடம்:

கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாசவெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார். 
சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1.
போன்: 94434 47826, 96267 65472

#உத்திராடம்:

கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மீனாட்சியம்மன்
தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது. 
சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும். 
இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ., 
திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8
போன்: 99436 59071, 99466 59072

#திருவோணம்:

கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்
தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்
தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள். 
சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும். 
இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில். 
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30
போன்: 94868 77896,04177 254 929

#அவிட்டம்:

கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பவல்லி
தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது.
சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6
போன்: 98658 04862, 94436 78579

#சதயம்:

கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: கருந்தார் குழலி
தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர். 
சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9
போன்: 04366 236 970

#பூரட்டாதி:

கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில் 
அம்மன்: காமாட்சி
தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார். 
சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7
போன்: 94439 70397, 97150 37810

#உத்திரட்டாதி:

கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் "சகஸ்ரலட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் "ஆயிரம்'. 
சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும். 
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 12
போன்: 99652 11768, 04371-239 212

#ரேவதி:

கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான். 
சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். 
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை5- இரவு8
போன்: 97518 94339, 94423 58146

Friday, February 19, 2021

முதலில் தோன்றியது முட்டையா அல்லது கோழியா?

✍️முதலில் தோன்றியது விதையா அல்லது மரமா? கோழியா அல்லது முட்டையா?முதலில் தோன்றிய உயிர் எது? 
இந்த உலகத்தில் எல்லாமே வட்டம்போல இயங்கிக்கொண்டிருக்கிறது.
வட்டத்திற்கு முதலும் முடிவும் இல்லை என்பது நமக்குத்தெரியும்.
..
முட்டையிலிருந்து கோழி வருகிறது,பிறகு அது முட்டையிடுகிறது, பின்பு அந்த முட்டையிலிருந்து கோழி வருகிறது.இது ஒரு வட்டம்போல நடந்துகொண்டிருக்கிறது. 
இதில் முதலும் இல்லை,முடிவும் இல்லை.
இதே விதிதான் உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும்.
மனிதனும் இதே விதிக்கு உட்பட்டவன்தான்.
இந்த உலகமும் இதேவிதியின்படியே தோன்றியுள்ளது.
ஒடுங்கியிருந்த பிரபஞ்சம் பின்பு பல்வேறு சூரியர்களாகவும்,சந்திரர்களாகவும்,கிரகங்களாகவும் பரிணமித்தது,பின்பு மீண்டும் அனைத்தும் ஒடுங்குகிறது.மீண்டும் ஒடுக்கத்திலிருந்து பிரபஞ்சம் விரிவடைகிறது.இதில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஆதியும்இல்லை அந்தமும் இல்லை.
..
தியானத்தில் ஆழ்ந்து செல்பவர்களின் மனம் முற்றிலும் ஒடுங்குகிறது அப்போது அவர்களைப்பொறுத்தவரைபிரபஞ்சமும் ஒடுங்கிவிடுகிறது.கடவுள் காட்சி கிடைக்கிறது.
பின்பு மனம் மீண்டும் சாதாரணநிலைக்கு வரும்போது பிரபஞ்சத்தை காண்கிறார்கள்.அப்போது கடவுள் காட்சி கிடைப்பதில்லை. 
..
இந்த பிரபஞ்சம் முற்றிலும் ஒடுங்கும்போது கடவுள் மட்டுமே இருக்கிறார்.
அதேபோல பிரபஞ்சம் விரிவடைந்திருக்கும்போது கடவுளைக் காண முடியாது..
..
முற்காலத்தில் இந்த இரண்டு கருத்துக்களையும் அடிப்படையாகக்கொண்டு இரண்டு மதங்கள் தோன்றின.
பிரம்மம்(கடவுள்) சத்யம்(உண்மை) பிரபஞ்சம் மித்யை(இல்லை) என்று ஒரு மதம் உபதேசித்தது.
இன்னொரு மதம் பிரபஞ்சம் சத்யம். கடவுள் மித்யை(இல்லை) என்று போதித்தது.
இந்த இரண்டு கருத்துக்களும் உண்மைதான். கடவுளை மட்டுமே காண்பவன் பிரபஞ்சத்தை காண்பதில்லை.அவன் உருவங்களைக் கடந்து உருவமற்றவனாகிறான்.
ஆனால் பிரபஞ்சத்தைக் காண்பவன் கடவுளைக் காண்பதில்லை.
..
கடவுள் இருப்பதற்கு என்ன ஆதாரம்?
சிலருக்கு பிரம்மத்தின்(கடவுள்) காட்சி கிடைக்கிறது. இதுவே ஆதாரம்.
..
வட்டத்திற்கு ஆரம்பம் இல்லை. முடிவும் இல்லை என்று பார்த்தோம் .
மனத்தை முற்றிலும் ஒடுக்குபவன் வட்டத்தின் ஒரு புள்ளியில் நிற்கிறான்.அவனுக்கு கடவுள் மட்டுமே தெரிகிறது. மனத்தை முழுவதும் விரிவடையச்செய்பவன் வட்டத்தின் இன்னொரு புள்ளியில் நிற்கிறான் அவனுக்கு பிரபஞ்சம் மட்டுமே தெரிகிறது.
வட்டத்தைப்பற்றி முழுவும் அறிந்தவனுக்கு இந்த இரண்டும் தொடக்கம் முடிவு இல்லாதவை என்று தெரிகிறது.
-🕉️

Thursday, February 18, 2021

தெரிந்து கொள்வோமா இதுதான் வழிபாட்டின் ரகசியம்.

விநாயகரை துளசியால்

அர்ச்சனை செய்யக் கடாது

(விநாயக சதுர்த்தியன்று

மட்டும் ஒரு தளம் போடலாம்)

பரமசிவனுக்குத் தாழம்பூ

உதவாது. தும்பை, பில்லம்

கொன்றை முதலியன

விசேஷம். வமத்தை

வெள்ளெருக்கு

ஆகியவற்றாலும்

அர்ச்சிக்கலாம்

விஷ்ணுவை

அட்சதையால் அர்ச்சிக்கக்

சடாது.

அம்பிகைக்கு அருகம்புல்

உகந்ததல்ல,

பட்சுமிக்குத் தும்பை

கூடாது

6. பவளமல்லியின்

சரஸ்வதியை அர்ச்சனை

செய்யக் கூடாது

விஷ்ணு சம்பந்தமான

தெய்வங்களுக்கு மட்டுமே

துளசி தளத்தால் அர்ச்சனை

செய்யலாம். அதேபோல், சிவ

சம்பந்தமுடைய

தெய்வங்களுக்கே

வில்வார்ச்சனை

செய்யலாம்.)

சாமந்தி பூவை

கண்டிப்பாக

உபயோகப்படுத்தக் கூடாது

மலரை முழுவதுமாக

அர்ச்சனை செய்ய

வேண்டும். இதழ் இதழாக

கிள்ளி அர்ச்சனை

செய்யலாகாது

வாயுப்போன

அழுகிப்போன, பூச்சிகள்

கடித்த பலர்களை

உபயோகிக்கக் கூடாது

அன்றலர்ந்த மலர்களை

அன்றைக்கே

உபயோகப்படுத்த

வேண்டும்

ஒரு முறை இறைவன்

திருவடிகளில்

சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை

எடுத்து, மீண்டும் அர்ச்சனை

செய்யக் கூடாது. பில்வம்,

துளசி ஆகியவற்றை

மட்டுமே மறுபடியும்

உபயோகிக்கலாம்

தாமரை, நீலோத்பலம்

போன்ற நீரில் தோன்றும்

மலர்களை

தடாகத்திலிருந்து எடுத்த

இன்னைக்கு

உபயோகப்படுத்த வேண்டும்

என்ற விதி இல்லை

வாசனை இல்லாதது

முடி, புழு ஆகியவற்றோடு

சேர்ந்திருந்தது. வாடியது

தகாதவர்களால்

தொடப்பட்டது. நுகரப்படும்

ஈரத்துணி உடுத்திக்

கொண்டுவரப்பட்டது

காய்ந்தது. பழையது

தரையில் விழுந்தது ஆகிய

மலர்களை அர்ச்சனைக்கு

உபயோகப்படுத்தக் கூடாது

சம்பக மொக்குத் தவிர

வேறு மலர்களின்

பொட்டுகள் பூஜைக்கு

உகந்தவை அல்ல

15. மலர்களை கிள்ளி

பூஜிக்கக் கூடாது.வில்வம்

துளசியைத் தளமாகவே

அர்ச்சிக்க வேண்டும்.

17 முல்லை , கிளுவை

நொச்சி, வில்வம், விளா.

இவை பஞ்ச வில்வம்

எனப்படும். இவை

சிவபூஜைக்கு உரியவை

துளசி, முகிழ் (மகிழம்)

செண்பகம், தாமரை

வில்வம், செங்கழுநீர்

மருக்கொழுந்து, மருதாணி,

தர்பம், அறுகு, நாயுருவி,

விஷ்ணுகிராந்தி நெல்லி

ஆகியவற்றின் (இலை)

பத்ரங்கள் பூஜைக்கு

உகந்தலை

பூஜைக்குரிய பழங்கள்

நாகப்பழம், மாதுளை,

எலுமிச்சை. புளியம்பழம்

கொய்யா, வாழை, நெல்லி,

இலந்தை, மாம்பழம்

பலாப்பழம்

20 திருவிழாக் காலத்தில்,

வீதிவலம் வரும் போதும்

பரிவார தேவதைகளின்

அலங்காரத்திலும், மற்றைய

நாட்களில் உபயோகிக்கத்

தகாதென விலக்கப்பட்ட

மயிர்களை

உபயோகிக்கலாம்

அபிஷேகம், ஆடை

அணிவிப்பது, சந்தன

அலங்காரம், நைவேத்யம்

முதலிய முக்கிய

வழிபாட்டுக் காலங்களில்

கட்டாயமாகத் திரை போட

வேண்டும். திரை

போட்டிருக்கும் காலத்தில்

இறை உருவைக்

நான் போகாது

22 குடுமியில்

தேங்காய் சமமாக

உடைத்து குடுமியை

நிக்கிலிட்டு நிவேதனம்

செய்ய வேண்டும்

பெருவிரலும்

மோதிர விரலும் சேர்த்துக்

திருநீறு அளிக்க வேண்டும்

மற்ற விரல்களைச் சேர்க்கக்

கூடாது

கோயில்களில்

பாகர்களிடமிருந்து தான்

திருநீறு போன்ற

பிரசாதங்கள் பெற

இன்னும். தானாக எடுத்துக்

கொள்ள கூடாது

பூஜையின்

துவக்கத்திலும், கணபதி

பூஜையின் போதும், நூ

திபம் முடியும் வரையிலும்

பலிபோடும் போதும் கை

மணியை அடிக்க வேண்டும்

மணியின் சப்தமில்லாவிடில்

அச்செயல்கள் பயனைத்

தரமாட்டா

ஒன்று, மூன்று, ஐந்து

ஒன்பது பதினொன்று

அடுக்குகள் கொண்ட

திபத்துக்கு மகாதீபம்

அல்லது மஹாநீராஜனம்

என்ற பெயர்.

Wednesday, February 17, 2021

குழந்தைகளுக்கு ஏன் மொட்டை போட வேண்டும் என்று தெரியுமா?

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும். 

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று. 

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா? 

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள். 

கருவறையில் 10 மாதம் 
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம். 

கடல் நீர் 
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும். 

வெளியேறும் வழி 
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர். 

மொட்டை போடாவிட்டால்? 
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். 

நேர்த்திக்கடன் 
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது. 

மூன்று வயதில் ஓர் மொட்டை 
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான். 

ஆன்மீக ரீதிக்கே மரியாதை 
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர்.🌹

Tuesday, February 16, 2021

கடன் தீர எதார்த்த பரிகாரம்.

#எதார்த்த_பரிகாரம்...



கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. 

இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். 

நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழே கொடுத்துள்ளேன். 

பயன்படுத்தி பலன்பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.

(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும். 

(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும். 

(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்

(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும். 

(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்) 

(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்...

Monday, February 15, 2021

வில்வத்தின் நன்மை மற்றும் அதனுடைய உண்மையான தன்மை.

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாத பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி , அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் விவாதப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பசைக்கு தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்

பழத்தைப் பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூசை செய்யும். உயர்ந்த வில்லம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யும்.

அவ்வளவு புனிதமானது, சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது

நம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்

மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் (திருவமுது செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்கள் வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்

இம் மரத்தின் காற்றை பகிர்ந்தால் நல்லது அதன் நிழல் நமது சரேத்தில் பட்டாலோ அதிக சக்தி கிடைக்கும்.

சிவனுக்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் (சிவபெருமானின் திருவருளை கடாட்சத்தைப் பெறமுடியும்

வில்வ மரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்,

வீட்டில் வில்வமரம் வைத்து பார்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எம பயம் ஒரு போதும் வாராது

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்பர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதி வைத்து பயன்படுத்துவது மேலான செய்வாகக் கொள்ளப்படுகிறது

வில்வம் பறிக்கும் போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்

மேலும், இவ்வாறு பறிக்கும் போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் (மானசீகமாக நினைத்து எண்ணிக் கொண்டு இந்த கலோகத்தைச் சொல்ல வேண்டும்

நமஸ்தே பில்வதரவே ப்ரீபலோதய ஹேதவே ஸ்வர்காபவர்க ரூபாய் நமோ மூர்த்தி தர யாத்மனே எம்--ரவிங் வைத்ய அம்பஸ்ய கருணாநிதே அர்சனார்த்தம் இபனாமி த்வாம் த்வத் பத்ர ததாமஸ்லா மகே

பொருள் விளக்கம்

போக மோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்கு காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்

வில்வ மரம்! பிறப்பு இறப்பாகிற வியத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலான சாம்பசிவன் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளிாடுக்கிறேன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து

பிறகு இலையை பறிக்க வேண்டும்.

வில்ல இதழின் மருத்துவ குணங்கள்

வெற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை

"சிவமூலிகைகளின் சிகரம் எனவும் அழைப்பர்

வில்வ இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர் கண் பார்வை சிறப்பாக அமையும் மூக்கடைப்பு சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் பல்வலி, பல் சொத்தை, பல் கூச்சம் போன்றவற்றால் அங்தியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்

கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும் தோல் மீது பரிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை,

Saturday, February 13, 2021

திருவண்ணாமலை அஷ்ட லிங்க தரிசனம் மற்றும் பலன்கள்.

#திருவண்ணாமலையில்_அஷ்ட_லிங்க_தரிசன #பலன்களும் ⚜ 🌷🧩🌷⚜ 
   
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஷ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இந்த எட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.

சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும். கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.

அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கமாகும். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்.

இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என நம்பபடுகிறது. 

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மழை தரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.🐚 

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.
செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிருவப்பட்டதது.

Friday, February 12, 2021

ஸ்ரீசக்கரத்தின் பரமரகசியம்.

மூன்றாவது கண்ணை திறக்கும் ஸ்ரீ சக்கரம் !
---------------------------------------------
-------------------------

 அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது. முதலில்
ஸ்தூல வடிவம் இரண்டாவது சூட்சம
வடிவம் மூன்றாவது காரண வடிவம்
என்பதாகும். ஸ்தூல வடிவம் என்பது பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் அம்பு
ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும் வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும். காரண வடிவம் என்பது ஸ்ரீ அன்னையின் மூல மந்திர ஒலிவடிவமாகும். சூட்சம வடிவம் என்பது
புகழ் பெற்ற ஸ்ரீ யந்திரம் என்ற ஸ்ரீ சக்ர
வடிவாகும் மோகினி ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது.

இந்த நூலை வாமகேஷ்வர தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள். இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள்
விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்ரம் என்பது
பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமை பாட்டை விளக்குவதே ஆகும். இந்த விளக்கத்தை
ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கிகொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும். அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன இந்த மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு
அழைக்கிறது. ஸ்ரீ சக்ரம் என்பது எல்லை
இல்லாத பிரபஞ்சத்தை குறிப்பதாகும்.
அண்டவெளிக்கு துவக்கமும் கிடையாது
முடிவும் கிடையாது அப்படி பட்ட
அண்டத்தின் ரகசியத்தை மனித அறிவால் எக்காலத்திலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.

அப்படி முடியாத விஷயத்தை அறிந்து கொள்ள அக்கால ரிஷிகளும் முனிவர்களும் முயற்சித்து கண்டறிந்த மெய்ஞான ரகசிய வடிவமே ஸ்ரீ சக்ரமாகும். இதை ஒரு பிரபஞ்ச கணித
கண்டுபிடிப்பு என்றும் சொல்லலாம் ஒரு
புள்ளிக்கு 360 பாகைகள் உண்டு ஒவ்வொரு தனித்தனி பாகையில் இருந்து புறப்படும்.

கோடுகள் பிரபஞ்சவெளியில் முடிவே
இல்லாமல் நீண்டு கொண்டே கொண்டே
செல்லும் அந்த கோடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அதாவது புறப்பட்ட இடத்திலேயே வந்து சேர்வதால் வட்டமாகவோ கோளமாகவோ தோற்றம் அளிக்கும் அந்த வடிவத்தை இரண்டு பாகமாக பிளந்தால் 180 பாகைகள் கொண்ட அரைவட்டம் கிடைக்கும்.
நான்காக பகிர்ந்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 90 பாகைகள் பிரிந்து நான்கு துண்டுகளாக விரிவடையும். இப்போது அந்த தோற்றத்தை பார்த்தால் ஒரு கூட்டல் குறியை போல நம் கண்ணுக்கு தெரியும்.

இது தான் சிவ சக்தி ஐக்கியத்தின்
வெளிப்பாடாக அமையும். அது தான்
பிரபஞ்சத்தின் அக்ஷர வடிவாகும். இந்த அக்ஷர வடிவம் க என்ற எழுத்தாக அமைந்திருக்கிறது இந்த எழுத்து வடிவம் தான் படைப்பு தத்துவத்தின் வெளிப்புற சின்னமாகும்.

எல்லையே இல்லாத பிரபஞ்சம் க வடிவ
சதுரத்துக்குள் காணப்படுகிறது இந்த
சதுரத்தில் அணிமா லகிமா,மகிமா பிரத்தி பிராம வசித்துவம் சத் சித்துவம் என்ற அஷ்டமா சித்துகள் அடங்கியிருந்து ஆட்சி செய்கிறது.  இந்த சக்கரத்தில் உள்ள நான்கு புற சதுர ரேகைகளும் அண்ட வெளியை காவல்
செய்யும் லோக பாலகர்களாக உருவகப்படுத்தப்பட்டு நிர்மானிக்கப்படுகிறார்கள்.

இச்சக்கிரத்தின் உள் வரிகளில் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் ஆகிய ஆறு குணங்களை கட்டுப்படுத்தும் பண்பு மற்றும் அறிவு ஆகிய இரண்டு நற்குணங்கள்
மறைந்துள்ளன. இதை பிரகட யோகினிகள் என்று அழைக்கிறார்கள். நிலையான பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் வட்டத்திற்குள் சதுரம் தோன்றும் ஸ்ரீ சக்ர சதுரத்திற்குள் இதே போன்று தான் வட்டம் தோன்றுகிறது. இது நமது கண்களில் உள்ள கருவிழிகள் போல் தெரிவதால் அண்டத்தின் ஒத்தைக் கண் எனவும் சுதர்மம் என்னும் அண்ட கருவாகவும் கருதப்படுகிறது சதுரம் என்பது ஆகாச வெளியினையும் வட்டம் என்பது ஆகாச காலத்தையும் குறித்து நிற்கிறது.

வெளி என்ற சதுரம் வளர்ந்து கொண்டே
செல்கிறது. காலம் என்ற வட்டம் சுழன்று
கொண்டே செல்கிறது.... பார்வையை இன்னும் சற்று கூர்மை படுத்தி வட்டத்தை பார்த்தோம் என்றால் வட்டத்திற்குள் வட்ட வட்டமாக
மூன்று வட்டங்கள் தோன்றும். இதில் இந்திரன் அக்னி எமதர்மன் நிருதிதேவன் வருணன் வாயு
குபேரன் ஈசானன் ஆகிய எட்டு திக்கின்
அதிபதிகள் நிற்கிறார்கள். ஒரு சதுரத்தில் அதற்குள் இருக்கும் வட்டத்தை அதாவது சதுரமான அண்டவெளியும் அதற்குள் இருக்கும் பூகோளத்தையும் எட்டு பாகமாக்கி
அஷ்டதிக்கிலும் பிரபஞ்சம் பறந்து
விரிந்துள்ளதை ஸ்ரீ சக்ர குறியீடுகள்
காட்டுகின்றன. ஸ்ரீ சக்ரத்தின் வட்டத்தில்
உள்ள நடுவட்டம் அகமுகமான வழிபாட்டால் பெருகக்கூடிய கொல்லாமை வெகுளாமை புலனடக்கம் பொறுமை தவம் வாய்மை அன்பு
ஆகிய நற்குணங்களை வரிசைபடுத்தி
காட்டுகிறது.

அதற்கு அடுத்த வட்டத்திற்குள் மனிதனின் 360 சுவாச கூறுகளான காலம் நிற்கிறது. இந்திய நாள்கணக்கு படி ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் உண்டு. ஒரு நாழிகையில் அதாவது
24 நிமிடத்தில் ஒரு மனிதன் விடும்
சுவாசத்தின் எண்ணிக்கை 360 இந்த 360தை 60 நாழிகையால் பேருக்கும் போது சராசரியாக ஒரு மனிதனின் தினசரி சுவாசம் 21,600 ஆகும்.

ஒவ்வொரு நாழிகைக்கான 360 சுவாசத்தை பாகங்களாக கொண்டோம் என்றால் அது ஒரு வட்டமாக வரும். இந்த பாகம் காலத்தை குறிப்பதாகும். இந்த காலம் என்னும் உள் வட்டம் 
(1)கிரேதா யுகம்
(2) திரேதாயுகம் 
(3) துவாபரயுகம்
(4) கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாக
சுழன்று வருகிறது. இப்படி வட்டமும்
சதுரமும் அண்டவெளியாகவும் காலமாகவும் விளங்கி மூலாதாரத்தில் கனலாக வடிவெடுக்கிறது.

இதை நெருப்புக்குள் நெருப்பு அல்லது
சிவத்துக்குள் சக்தி அல்லது சக்திக்குள் சிவம் என்றும் சொல்லாம். இந்த மூன்றாவது வட்டத்தில் பத்து இதழ் கொண்ட தாமரை ஸ்ரீ சக்ரத்தில் மலர்கிறது. பதினாறு இதழ்கள்
பிறக்கும் சக்ர பகுதியை சர்வ பரிபுரா சக்ரம் என்ற அழைக்கிறார்கள். இந்த ஒவ்வொரு இதழ்களிலும் அன்னையின் பதினாறு யோகினி சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த சக்திகள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தேவதைகள் ஆவார்கள். யோக
நெறியில் இந்த பகுதி சுவாதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது. இதில் மனம்  புத்தி  சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு அந்தகரணங்களும் பார்த்தல் கேட்டல் நுகர்தல் சுவைத்தல் உரைத்தல் நினைவு வைத்தல் கனைத்தல் சூட்சமம் சுக்குலம் காரணம் பெயர் வளர்ச்சி ஆகிய பனிரெண்டு தன்மாத்திரைகள்
அடங்கியுள்ளன. இத்தகைய பதினாறு இயல்புகளும் நிரம்பி.இயங்கினால் தான் உலக வாழ்க்கைக்கு தேவையான உடல் நலம் மனநலம் அறிவு நலம் பண்பு நலம் சமூக நலம் பொருள் நலம் ஆகிய பெயர்கள் கிடைக்கும் அதனால் தான்
இப்பகுதியை படைத்தல் தத்துவம்
என்கிறார்கள் அடுத்ததாக பதினாறு இதழ் தாமரைக்குள் எட்டு இதழ் கொண்ட
மூன்றாவது ஆபரணம் பிறக்கிறது.  இது சர்வ சம்மோகன சக்ரம் என்ற பெயர் கொண்டதாகும்.

எட்டு இதழ் கமலத்தில் எட்டு யோகினிகள் உள்ளதோடு அனங்க மன்மதன் என்ற சக்திகளும் அருளாட்சி செய்கின்றன. அனங்க என்றால் உருவம் இல்லாதது என்ற பொருள் வரும். அதனால் இந்த பிரபஞ்சமானது உருவம்
இல்லாத பரப்ரம்மத்தில் இருந்து உதயமானது என்ற மூல கருத்து வெளிப்படுகிறது.

மேலும் இந்த எட்டு இதழ்களும் எட்டு
பிரம்மாணங்களாகும் மேலும் இந்த சக்ரம் மனித உடலின் சதை பகுதியை
குறிக்கிறது. அடுத்ததாக உள்ள நான்காவது ஆவரணத்தில் கீழே எழும் மேலே ஏழும் ஆக பதினாறு உலகங்கள் அமைந்துள்ளன இதை சர்வ செளபாக்கிய தயகச்சக்கரம் என்று
அழைக்கிறார்கள் மேலே உள்ள ஏழு
கோணத்தில் பூர் பூவ சுவ ஜன தப சக்திய ஆகிய ஏழு உலகங்களையும் கீழே உள்ள ஏழு கோணங்கள் அதல விதல சுதல நிதல ரசாதல மகாதல பாதாள ஆகிய ஏழு உலகங்களையும்
காட்டுகிறது.

அது மட்டும் அன்றி ஒலித்தத்துவமான
சட்ஜமம் சமம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் விவாதம் ஆகிய ஏழு சப்த லயங்களையும், ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் ஆரஞ்சி சிவப்பு ஆகிய நிறதத்துவங்களையும் காட்டுகிறது. அதாவது இறை சக்தி ஓசையாகவும் ஒளியாகவும் இருப்பதை இந்த கோணங்கள் விளக்குகின்றன.

ஐந்தாவது ஆவரணமான சர்வார்த்த சாதக சக்கரத்தில் கீழே ஐந்து கோணமும் மேலே ஐந்து கோணமும் உள்ளது. இந்த பத்து கோணங்களும் மனித உடலில் உள்ள தச வாயுக்களை குறிக்கிறது. ஸ்ரீ அன்னையை
வழிப்படும் தசமகாவித்தியா தோற்றங்களை இது காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக கூறலாம்.

மேலும் மேலே உள்ள ஐந்து கோணங்கள்
சரஸ்வதி லஷ்மி கெளரி மகேஸ்வரி
மனோன்மணி என்ற அன்னையின் பஞ்ச வடிவங்களையும், கீழே உள்ள ஐந்து கோணங்கள் தத்புருஷம் சத்யோஜாதம் அகோரம் வாம தேவம் ஈசானம் ஆகிய ஈஸ்வர பஞ்சப்ரம்ம வடிவத்தையும் காட்டுகிறது. தேவி
யை வழிபடும் சர்வசோமணி சர்வவிக்ஷிரவினி சர்வாஷ்ணி சர்வசந்தசர்வேசினி மாதினி சர்வமகோரங்குசா சர்வகேச சர்வபிகம்ப
சர்வயோனி சர்வதிகண்டா ஆகிய பத்து
மூர்த்திகளையும் இந்த கோணங்கள்
காட்டுகின்றன. இதே போல அன்னமய கோசம் ஞானமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து உடல்களையும் அந்த உடல்களை தாக்கும் தோஷங்களான பொய்யாமை கொல்லாமை கள்ளுண்ணாமை
திருடாமை காமியாமை ஆகிய ஐந்து
நெறிகளை சுட்டிக்காட்டுகிறது. இப்பகுதி விந்து அணுக்களையும் கருமுட்டைகளையும் காட்டுவதாக தாந்திரிக தத்துவம் காட்டுகிறது.

ஆறாவது ஆவரணமான சர்வஞசக்கரம்
ஆஞ்சாசக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இது உருவ வழிபாட்டின் விளக்கமாகும். அன்னையானவள் சர்வத்தையும் அருளும் மூர்த்தியாகவும் திகழ்கிறாள். சர்வத்தையும் அழிக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள். உடல் இயக்க ரீதியில் இந்த ஆவரணம் எழும்பில் உள்ள மட்சையை குறிக்கும். 

சர்வரோகர சக்கரம் என்ற ஏழாவது ஆவரணம் பிந்துவை குறிப்பதாகும்.
இதில் எட்டு கோணங்கள் உண்டு இக்கோணங்கள் வசினி காமேஸ்வரி மோதினி விமலா அருணா.ஜெயினி சர்வேஸ்வரி கெளலனி ஆகிய வித்தைக்கும் ஞானத்திற்கும் உரிய தேவதைகள் வாசம் செய்கிறார்கள். இந்த அஷ்ட கோணத்தின் அதிதேவதை திரிபுரா ஆவாள். யோகமார்க்கத்தில் கூறப்படும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயமம் பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி ஆகிய எட்டு நிலைகளும் இதில் அடங்குகிறது.

மேலும் நூல்களை கற்றுத்தரும் போத குரு பேதங்களை அறிய செய்யும் வேதகுரு. மந்திர சித்தி பெற வழிகாட்டும் மிசிதகுரு. செயலுக்கம் தரும் சூட்ச்சக குரு. வார்த்தைகளால் ஞானத்தை போதிக்கும்
வாசககுரு. தான் பெற்ற ஞானத்தை சுயநலம் இல்லாமல் சீடருக்கு தரும் காரககுரு. முத்தியடைய வழிகாட்டும் விஷிதககுரு. ஆகிய அஷ்டகுருக்களையும் இக்கோணங்கள்
உணர்த்துகின்றன.

அன்னை ஆதிபராசக்தியின் நான்கு
திருகரங்களும் அந்த கரங்களில் இருக்கும் பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் கணை ஆகிய நான்கு கருவிகளும் இந்த எட்டு கோணத்தின் வடிவங்கள் எனலாம். இதில் பாசம் என்பது ஆசையின் வடிவம் அங்குசம் என்பது
கோபத்தின் வடிவம் கருப்பு வில் என்பது
மனதின் வடிவம் மலர் கணை என்பது
உணர்வுகளின் வடிவம் எட்டாவதாக உள்ள ஆவரணம் முக்கோணமாக
அமைந்த காயத்திரி பீடமாகும். அன்னை இந்த காயத்திரி பீடத்தில் திரிபுராம்பா என்ற திருநாமத்தோடு அமர்ந்திருக்கிறாள். காமேசி
வச்சிரேசி பகமாலினி என்ற மூன்று
தேவதைகளையும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி உள்ளாள். மனிதனை கடைநிலைக்கு தள்ளுகின்ற ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை
பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி
விடுகிறது. சுழன்றடிக்கும் சூறாவளி என்ற பேராசை அடங்கி விடவும் ஆயிரம்
இடர்பாடுகள் வந்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிடவும் வயிரக்கியத்தை பெறவும் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும்
மனமென்னும் மாய பிசாசை வசக்கி ஒடுக்கி.அன்னையின் திருபாதத்தில் பூர்ண சரணாகதி.அடைய செய்யவும் இச்சக்கரம் வழிவகுக்கும்.

இறுதியாக சர்வானந்த மயசக்கரம் என்ற
ஒன்பதாவது ஆவரணம் ஸ்ரீ சக்ரத்தின் மைய புள்ளியான பிந்து மையமாகும். இது பேரானந்தம் அடையக்கூடிய அம்பிகையின் திருகாட்சியை நேருக்கு நேராக தரிசிக்கும் நிலையை காட்டுகிறது. அம்மையும் அப்பனும்
இந்த பிந்து பகுதியில் ஒன்றாக இணைந்து நிற்கிறார்கள். இன்பம் துன்பமற்ற ஆழ்ந்த சமாதி நிலை பிந்து பகுதி காட்டும் சின்னமாகும். யோக மார்க்கத்தில் சொல்லப்படும் சமாதி
நிலையின் மூன்றவது கண் திறக்கும்
அனுபவமே ஸ்ரீ சகரத்தில் உள்ள மூல
பிந்தாகும்.
💐🌹🙏🏻MPK🙏🏻🌹💐

Thursday, February 11, 2021

இந்து மதத்தின் பெருமை அனைத்து விதமான கடவுள்களும் இங்கே உண்டு.

கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே.. இதை ஏதோ பெருமைக்காக கூறவில்லை அதற்கான ஆதாரங்கள் இதோ..........

1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட = வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

Wednesday, February 10, 2021

ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் எச்சரிக்கை.

வாழ்வை மாற்றும் சூட்சுமம்.

உங்களைப்  பார்த்து யாராவது எப்படி இருக்கீங்க சௌக்கியமா ன்னு கேட்டா நீங்க என்ன பதில்களைச் சொல்றீங்க

ஏதோ இருக்கம், என்னமோ வண்டி ஓடுது, என்னத்தச் சொல்ல, 
எல்லாம் என் தலையெழுத்து,
ஏண்டா பிறந்தம்னு இருக்கு,
நமக்கு மட்டும் கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு இதுதான உங்க பதில்களா இருக்கும்

இதுமாதிரி நீங்க விரக்தியான பதிலைத் தான் சொல்றீங்க , இதெல்லாம் உங்க ஆழ்மனசுல இருந்து வர்ற வார்த்தைகள் ,இந்த வார்த்தைகள் தான் உங்களோட வாழ்க்கைய தீர்மானம் பண்ணுது

ஒரு இரகசியம் சொல்லட்டுங்களா ஒரு வார்த்தைய ஒரு லட்சம் தடவ சொல்லிட்டிங்கன்னா அதுக்கு சக்தி கிடைச்சுடும் உடனே வேலை செய்ய ஆரம்பிச்சுடும்,உங்க சொல்படியே நடக்கும்,இது உண்மை

அதனால நீங்க சொல்லக் கூடிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா இருக்கட்டும்,

இனிமே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி யாராவது உங்களைப் பார்த்து எப்படி இருக்கீங்க சௌக்கியமான்னு கேட்டா 

நல்லா இருக்கேன்.வேலை நல்லபடியா இருக்கு.நாங்க சந்தோசமா இருக்கறம்
கடவுள் எங்களை நல்லபடியா வெச்சுருக்காரு

இதுமாதிரி வார்த்தைகளைச் சொல்ல சொல்ல உண்மையிலயே உங்க வாழ்க்கை மாறி நீங்க சொன்ன மாதிரியே மாற்றம் வரும்.

நல்லது

மகிழ்ச்சி

நன்றி...!!!

" வாழ்வை மாற்றும் சூட்சுமம் "

Tuesday, February 9, 2021

கடவுள் மீது நாம் ஏன் பழி போட வேண்டும்?

✍️நமது வாழ்க்கை என்பது ஏற்கனவே 100 சதவீதம் திட்டமிடப்பட்டதா? ஏற்கனவே திட்டமிட்டபடிதான் நாம் நடந்துகொண்டிருக்கிறோமா? நமது விருப்பபப்படி எதுவும் செய்ய இயலாதா? நாம் எதை செய்ய வேண்டும்,எதை செய்யக்கூடாது என்பதெல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதா?
..
இந்த கேள்விக்கு ஏற்கனவே பலமுறை பதில் சொன்னாலும்,மீண்டும் மீண்டும் இந்த கேள்வி எழுந்துகொண்டேதான் இருக்கும்.
அனைத்தும் இறைவனின் விருப்பபடிதான் நடக்கிறது,இதில் மனிதனின் சுயேட்சைக்கு இடமில்லை என்றெல்லாம் நாம் படிக்கிறோம்.
உண்மையில் இந்த உலகத்தில் இறைவனே அனைத்துமாகியிருக்கிறார்.
மனிதர்கள்,மிருகங்கள்,மரம்,செடி,கல்,மண்,இயற்கை சக்திகள்,விருப்பு வெறுப்பு.இன்பம் துன்பம்,காமம் அன்பு என்று எதுவுாக இருந்தாலும் அனைத்தும் கடவுள்தான்.
கடவுளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்கிறபோது அனைத்தும் கடவுள் விருப்பபடியே நடக்கின்றன என்று முடிவுசெய்வது சரிதான்.ஏனென்றால் மனிதர்,மிருகம்,இயற்கை அனைத்தின் விருப்பு வெறுப்பும்  கடவுள்தான்.
..
மரமாக இருப்பதும் கடவுள்தான்,அதில் இலையாக இருப்பதும் கடவுள்தான்,காற்றாக இருப்பதும் கடவுள்தான். காற்றினால் மரம் அசைந்து இலை விழுந்தாலும் அந்த விழும் சக்தி கடவுள்தான்.
இதனால்தான் இலை அசைவதுகூட கடவுளால்தான் என்று கூறுகிறார்கள்...
-
ஆனால் மனிதன் தனி கடவுள் தனி என்ற அஞ்ஞானம் யாரிடம் உள்ளதோ அவர்கள் அனைத்தும் இறைவன் விருப்பபடியே நடக்கின்றன என்று கூறமுடியாது.அப்படி கூறினாலும் அது உண்மையாகாது.
..
ஐந்து வயது சிறுவன் ஒருவன் மருத்துவராகவேண்டும் என்று நினைத்தானாம்.. அவ்வாறு நினைத்த உடனேயே நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையளிக்க கத்தியை கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றானாம்.
இது எப்படி நகைப்பிற்கு உரியதாக இருக்கிறதோ அப்படித்தான் அஞ்ஞானத்தில் மூழ்கியுள்ள மனிதன் அனைத்தும் கடவுளே செய்கிறார் என்று கூறுவதும்.
ஞானி இதைக் கூறலாம்.அவர் அனுபத்தில் உணர்ந்துவிட்டார். நானும் கடவுளும் வேறல்ல என்பதை அனுபத்தில் உணர்ந்து பக்குவமடைந்துவிட்டார். நான் செய்கிறேன் என்ற அகங்காரம் அவரிடம் இல்லை.
ஆனால் சாதாரண மனிதன் அகங்காரத்தில் செயல்புரிந்துகொண்டிருக்கிறான்.
அப்படிப்பட்ட மனிதனின் மனதில் நான் செய்கிறேன் என்ற எண்ணம்தான் எப்போதும் நிறைந்திருக்கும்.
அகங்காரம் இல்லாமல் செயல் இல்லை.
ஞானி செயல்புரியும்போதுகூட அகங்காரம் வந்துவிடுகிறது.அதனால்தான் அவர் செயல்களிலிருந்து விலகியிருக்கிறார். செயல்புரிவதிலிருந்து விலகியிருக்கவே கையில் எப்போதும் தண்டம் வைத்திருக்கிறார்.
ஆனால் இந்த நிலையை அடைய அவர் எத்தனை ஆண்டுகள் தவம்செய்திருப்பார் என்பதை மனிதர்கள் அறிவதில்லை.
..
மனிதனிடம் அகங்காரம் இருப்பதுவரை சுயமுயற்சி என்பது மிகவும் முக்கியம்.
சுயமுயற்சியின் மூலமே அகங்காரமற்ற நிலையை அடைய முடியும்.
ஐந்து வயது சிறுவன் மருத்துவராகவேண்டும் என்று நினைத்ததில் தவறில்லை. ஆனால் அவசரப்பட்டதுதான் தவறு.
அவன் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். முடிவில் மருத்துவராகும் தகுதி வரும்.
அதேபோல இந்த உலகில் உள்ள அனைத்தும் கடவுளின் விருப்படிநடக்கிறது என்பதை புரிந்துகொள்ள பலகாலம் தவம்செய்ய வேண்டும்,பாடுபட வேண்டும்.
அப்படி இல்லாமல் எல்லாம் இறைவன் செயல்,நம் கையில் எதுவும் இல்லை என்று கூறுபவன் அந்த,ஐந்து வயது பாலகனை ஒத்தவனே.
..
சுயமுயற்சி என்பது முக்கியம்.
சக்தியை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும்.
ஒரு மனிதன் ஆரம்பத்தில் பிறரின் கீழ் வேலை செய்கிறான்,பின்பு சுயமாக தொழில் செய்கிறான்,பின்பு பலருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாகிறான்,பின்பு அரசியலில் சேர்கிறான்,மக்களிடம் நன்மதிப்பை பெற்று பதவிகளில் அமர்கிறான்,முடிவில் முதல்வர்,பிரதமர் போன்ற உயர்ந்த பதவியை அடைகிறான்.
இவைகள் எல்லாமே கடின உழைப்பின் மூலம் கிடைக்கின்றன.தகுதியற்ற ஒருவன் உயர்ந்த பதவில் நீண்டநாட்கள் நிற்க முடியாது.
...
பசுமாட்டை மேய்ச்சல் நிலத்தில் மேயவிடும்போது,நீண்ட கயிற்றில் மாட்டை ஒரு மரத்தில் கட்டிப்போடுவார்கள். கயிறு எவ்வளவு தூரம் நீளமோ அந்த அளவுக்கு உள்ள புற்களை மாடுமேயும். சிலநேரங்களில் அந்த இடத்தில் உள்ள புற்கள் முழுவதையும் மாடுமேய்ந்துவிடும். அப்போது அந்த மாட்டின் உரிமையாளர் அந்த மாட்டை இன்னொரு மரத்தில் கட்டி வைப்பான்,அந்த மாடு அதை சுற்றியுள்ள இடத்தில் உள்ள புற்களைத்தின்னும்.
மாடு எந்த அளவுக்கு வேகமாக புற்களைத் தின்னுமோ அந்த அளவுக்கு புதிய இடங்களுக்கு அது செல்கிறது.
மெதுவாக தின்றுகொண்டிருந்தால் தினமும் ஒரே இடத்திலேயே அது கட்டி வைக்கப்படும்.
இதேபோல வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முயற்சி செய்பவன் புதுப்புது அனுபவங்களை வேகவேகமாகப்பெறுகிறான்,முயற்சி செய்யாதவன் இருந்த இடத்திலேயே இருக்கிறான்.
..
சுயமுயற்சி,முயற்சியற்ற நிலை இந்த இரண்டையும்பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.
சுயமுயற்சியின் மூலமே முயற்சியற்ற ஞானநிலை கிடைக்கிறது.
சோம்பேரிகள் மட்டுமே எல்லாம் தலையெழுத்துப்படி நடக்கின்றன என்று கூறுவான்.
முயற்சியுள்ளவன் எனது தலையெழுத்து என் கையில் என்று கூறுவான். அதுதான் உண்மை.
சக்தியின் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க காலம் சுருங்கிக்கொண்டே வரும்.
...
முற்பிறவியில் நாம் செய்த செயல்களினால்தான் இந்த பிறவி ஏற்பட்டிருக்கிறது என்றால்,இந்த பிறவிக்கு காரணம் நாமா அல்லது கடவுளா? நாம்தான். 
நாம் இந்த பிறவியில் நற்செயல்களைச்செய்து முற்பிறவியின் பாவங்களை போக்க முடியும்.அப்படி இருக்கும்போது கடவுள்மீது பழிபோடுவது ஏன்?
..🕉️

Monday, February 8, 2021

கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான மந்திரம்.

அனைத்து விதமான கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சுலபமான மந்திரம் தான் காளி கட்டு மந்திரம். உங்களை நீங்களே பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு செல்வதற்கான காளி கட்டு.நம்மை பிடிக்காதவர்கள்,நம்முடைய விரோதிகள், நம் மேல் பொறாமை கொண்டவர்கள், நம்மை அழிப்பதற்காக நம்மேல் ஏவிவிடும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் யாவும் நம்மை தாக்காமல் இருக்கவும், நம்மையறியாமலேயே நம்மை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் நம்மை தாக்காமல் இருக்கவும் நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. இப்படி அனைத்து விதமான கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சுலபமான மந்திரம்தான் காளி கட்டு மந்திரம். உங்களை நீங்களே பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு செல்வதற்கான காளி கட்டு மந்திரம் இதோ..

“ஓம் பஹவதி! பைரவி!!
என்னை எதிர்த்து வந்த எதையும் கட்டு,
கடுகென பட்சியை கட்டு, மிருகத்தைகட்டு
ஓம், காளி ஓம், ருத்ரி ஓங்காரி, ஆங்காரி,
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு!
சத்ருவை கட்டு, எதிரியை கட்டு,
எங்கேயும் கட்டு!
சிங் வங் லங் லங்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம”
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை நாம் வெளிப்படையாக உச்சரிக்காமல் நம் ஆழ் மனதுக்குள் பத்து நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். தினந்தோறும் நீங்கள் இதனை தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றத்தினை உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும்.
🌼🌹🙏🏻MPK🙏🏻🌹🌼

Saturday, February 6, 2021

உங்கள் வீட்டில் வாஸ்துபடி எந்தெந்த பொருட்களை எங்கே எங்கே வைக்க வேண்டும்.

உங்களது வீட்டில் வாஸ்துப்படி எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்கலாம் என்பது பற்றி காணலாம்.

நெய் தீபம்:-  உங்களது வீட்டு பாசல் படிகளில் வாரத்தில் ஒருமுறையாவது நெய்யால் நிர்ப்பட்ட இரண்டு தீபங்களை ஏற்றி வையுங்கள். இது உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

ஈரத்துணிகள்:-  உங்களது வீட்டில் ஈரத்துணிகளை மரக்கதவின் மீது போட கூடாது. இது நெகட்டிவ் ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், உங்களது கதவுகளையும் அசிங்கப்படுத்தும். அதுவும், குறிப்பாக திருமணமான ஆண்கள் கதவின் மீது துணிகளை போட கூடாது என்று கூறுவார்கள்.

சாமி சிலைகள் :- பெரும்பாலும் ஒரு வீட்டின் லட்சுமி கடாட்சம் எங்கும் நிறைந்திருக்கும் என்றால் அது நம் வீட்டின் பூஜை அறை தான். நமது வீட்டு பூஜை அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். பின்னர் பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை கவனிக்க வேண்டும். இரண்டு தெய்வங்களின் சிலைகளை எதிரெதிரே பார்த்தவாறு வைத்தல் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும் எங்கிறது வாஸ்து…

கண்ணாடி பொருட்கள்:-  வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் விழுந்த கண்ணாடி பொருட்களை வைத்திருக்க கூடாது. இவைகள் வீட்டில் நிதி பற்றாக்குறையை உண்டாக்கும்.

கிழிந்த படங்கள் :- வீட்டில் கிழிந்த புகைப்படங்களை வைத்திருப்பது, உடைந்த சாமி சிலைகள் போன்றவற்றை வைத்திருந்தால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் உண்டாகும்.

கடிகாரம்:- கடிகாரத்தை எப்பொழுதும் நீங்கள் வீட்டிற்குள் நுழைவதற்காக இருக்கும் கேட்டிற்கு எதிராகவோ அல்லது வீட்டு நுழைவாயில் கதவிற்கு எதிராகவோ வைப்பது என்பது கூடாது. இந்த இடத்தில் கடிகாரத்தை வைத்தால், உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.

படுக்கைக்கு வலதுபுறம் சிலர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, நேரம் பார்த்து எழுந்திரிக்க ஏதுவாக இருக்கும் என்று கருதி, தங்களது படுக்கைக்கு வலது புறத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்திருப்பார்கள். இவ்வாறு செய்வது என்பது முற்றிலும் தவறான ஒன்று இந்த இடத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்தீர்கள் என்றால் உங்களது நிம்மதி பரிபோய்விடும்.

கண்ணாடி:-  உங்களது வீட்டில் எப்போதும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு எதிராக இந்த கடிகாரத்தை வைக்க கூடாது. இவ்வாறு நீங்கள் செய்திருந்தால் உடனடியாக இதனை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.

கிழக்கு மற்றும் வடக்கு வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டியது மிகமிக அவசியமாகும். இந்த கடிகாரத்தை உங்களது வீட்டில் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் வைப்பது மிகவும் நல்லது ஆகும்.

நஷ்டம் உண்டாகும்! உங்களது வீட்டில் வைத்திருக்கும் கடிகாரத்தில் அழுக்குகள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டிருந்தால் அது உங்களது நிதி நெருக்கடி, நஷ்டம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை கெடுக்கும்.

ஓடாத கடிகாரம் இருக்கா? உங்களது வீட்டில் ஓடாத கடிகாரம் இருந்தால் அதனை உடனடியாக பழுது பார்க்க வேண்டியது அவசியமாகும். அல்லது அதனை அப்புறப்படுத்த வேண்டும். ஓடாத கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது வாஸ்துப்படி நல்லது அல்ல..

படுக்கை அறையில் கூடாது! உங்களது படுக்கை அறையில் ஊசல் கடிகாரங்களை வைத்திருப்பது முற்றிலும் கூடாது. இது உங்களது தூக்கத்தை கெடுப்பதுடன், நிம்மதியையும் கெடுக்கும்.

Friday, February 5, 2021

என்னடா இந்தியா வாழ்க்கை?

பஸ்ல போனா #போக்குவரத்து  துறை புடுங்குது
பைக்ல போனா #காவல்துறை 
புடுங்குது
கார்ல போனா #நெடுஞ்சாலை துறை புடுங்குது
வீட்ல இருந்தா #மின்சார துறை புடுங்குது
சமைக்கலாம்னா #எரிசக்தி துறை புடுங்குது
படிக்க போனா #கல்வித் துறை
புடுங்குது
மாடு மேய்க்லாம்னு போனா #கால்நடை துறை புடுங்குது
விவசாயம் பண்ணலாம்னா #வேளாண் துறை புடுங்குது
சேமிக்கலாம்னா #வங்கித்துறை புடுங்குது
செலவு பண்ணுனா #வரித்துறை புடுங்குது
அட ஆஸ்பத்திரிக்கு போனா கூட #மருத்துவதுறை புடுங்குது

ஆண்டவா
இதுக்குலாம் ஒரு நீதி கிடையாதானு கேட்டா #நீதித்துறையும் புடுங்குது

படித்ததில் பளிச்னு பட்டது

Thursday, February 4, 2021

பார்த்தேன் படித்தேன் மகிழ்ந்தேன்.

*பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...*

ஒரு தெரு நாய்  சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே
திரிந்து கொண்டிருக்கும்,

அது அந்த 
ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தும் வந்தது,

இப்படியாக 
வாழ்ந்து வந்த காலத்தில்,
அந்த ஊரின் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது,

அந்த ஊரில் அனைவருமே 
பத்து நாட்களுமே விரதம் இருந்தார்கள்,

விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை 
நாய்க்கு போடக்கூடாது 
என்ற ஒரு நம்பிக்கையில்,
யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவே இல்லை,

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால், 
பசி தாங்க முடியாமல்,

கோயிலின் 
ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது,

அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் பண்ணி, 

இராமேஸ்வர 
தல மகிமையை விளக்கமாகவே பேசினார்கள்,

அதனை 
அப்போது,
அந்த நாயும் காது கொடுத்தே கேட்டதாம் !!

ஆஹா !! இராமேஸ்
வரத்துக்கு இத்தனை மகிமையா ?? 

எல்லோரும் போகனும்ணு சொல்றாங்களே !!  

நாமும் தான் இப்படியே எச்சில் இலையை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன ?? 

போகிற வழிக்கு
ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா ??
என்று 
எண்ணிய
படியே,

இன்றிலிருந்து 
பத்து நாட்களும் விரதமாகவே இருந்து, 

திருவிழா 
முடிந்ததும்,
கண்டிப்பாக இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு செய்தது,

தினமும் 
தொடர்ந்து
கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்கும்,

நாளடைவில்
அதற்கு 
இராமேஸ்
வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,

விரதத்தில் இருந்ததால்,
பசி கொடுத்த வைராக்கியம் 
வேறு இருப்பதால், 

திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

திருவிழா பத்தாம் நாள் முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள், 

நாயும் இராமேஸ்வரம் புறப்படத் 
தயாராகி நடை பயணத்தை தொடங்கியது,

முதல் அடி எடுத்த வைத்த பொழுதே, 

ஒரு வீட்டின் பின் பக்கத்தில் 
*"பொத்"* என்று ஒரு சத்தம் கேட்டது,

திரும்பிப் 
பார்த்தால்,

ஆஹா !! 
என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி 
விருந்தாக 
இருக்கும் போலிருக்கிறதே !! 

நிறைய வேறு 
மிச்சம் வைத்து 
இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான் !! என்று எச்சில் இலையை 
தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாயை வைத்து கொண்ட படியே,

நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம்  போயிருந்தால்,

இந்த கறி விருந்து கிடைத்திருக்குமா ?? என்றே நினைத்து கொண்டதாம் !!

இந்த நாய் தான் 
நமது ஆழ்மனம்,

நம் மனம் இருக்கிறதே
ஆட்டம் போட 
எதுவும் கிடைக்காத பொழுது,

ரொம்ப அடக்கமாகவும், சுவாமி மீது பக்தி பண்ணுவது 
போலவும்,

நம்மை போல புண்ணியசாலி 
யார் இருக்கிறார்கள் ?? என்றும் எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும்,

ஆனால்,
தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ !?

சாமியாவது, பூதமாவது !?  

அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குதுய்யா !! 

இப்பவே
உத்ராட்சம் போட்டுகிட்டு, திருநீறு 
பூசிக்கிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா ?? 

வாழ்க்கையை 
எப்பத் தான்
அனுபவிக்கிறது 
எனவும் கேட்கும்,

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால், 

உடனே,
கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போது தான் வரும், 

இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால்
பழைய படியே ஆட்டம் போடும்,

அதே நாய், 
இரவு முழுக்க குளிர் தாங்க முடியாமல் திண்ணையில் படுத்திருக்கும் பொழுதே,

என்னா 
குளிருப்பா சாமி ??

பொழுது 
விடிஞ்சதும்,
முதல் வேலையா போய்,

ஒரு நல்ல போர்வையா வாங்கிடனும்,

அப்பத் தான் நாளைக்கு நாம உயிரோடவே 
இருக்க முடியும்னு நினச்சிக்கும்,

பொழுது 
விடிஞ்சதும்,

சூரியன் தகதக என்று வெப்பத்தை பரப்பிக் கொண்டு வருவதை பா்த்தவுடனே,

அடாடா !! 
எவ்வளோ பெரிய தப்பு பண்ணப் பார்த்தோம் !! 

இந்நேரம் போர்வையை வாங்கியிருந்தா ??

காசில்லே வீணா போயிருக்கும் !! எனவும் 
நினைத்தது,

மீண்டும் அடுத்த நாள் பனியில் வாடும் போது,
இன்றைக்கு 
இரவு போர்வை வாங்கியே தீரனும்ணு நினைக்கும்,

இது தான் 
நம்மில் பெரும்பாலரது செயற்கையான கடவுள் வழிபாடும் !! 

துன்பம் வரும்
போது கடவுளைப் பற்றி நினைப்போம், உருகுவோம்,

சிக்கலின்றி
நன்றாக 
வாழும் போது,

கடவுள் வழிபாட்டுக்கு இன்னும் நமக்கு 
வயது இருக்கிறது என்று நினைப்பதோடு அல்லாமல், 

இளமையில் 
சாமி கும்பிடுபவர்
களையும் கெடுப்போம் !! கிண்டலடிப்போம் !!

சும்மாவா பாடினார்கள் பெரியவர்கள்;

ஒன்றுமே பயனில்லை,
என்று உணர்ந்த பின்பே சிவனே உண்டென்பார் !! 

ஒவ்வொரு மனிதரும் 
ஒரு நாள் இந்நிலை எய்துவது உறுதி, 

இதை மறந்தார் !! அன்று செயல் அழிந்து தலம் வரும் பொழுது, 

சிவன் பெயர் 
நாவில் வாராதே !! 

ஆதலினால் 
மனமே,
இன்றே,
சிவன் நாமம் சொல்லிப் பழகு !!

எண்ணிக்கைகளாலோ,
பகட்டு வேடங்களிலோ,
கட்டணம் கட்டியோ, வரிசையில் அனைவரையும் முந்தியே கூட,
நாம் எப்போது 
வேண்டுமானாலும், *கூட்டத்தோடே* *இறைவனைக்*
*காணலாம்*,

ஆனால்,
எண்ணங்கள்
உண்மையானால் தான்,
பெருங்கூட்டத்திலும், *இறைவனே* *தனித்தே* 
*நம்மைக்*
*காண்பான்*
அருளாசி வழங்குவான்.

Wednesday, February 3, 2021

சித்தர்கள் கூறிய பொன்மொழிகள்.

சித்தர் பழமொழிகள்.

1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்
உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.
விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

Tuesday, February 2, 2021

ஆண்டவன் ஏன் மனிதர்களை படைக்கவேண்டும்?

✍️இறைவன் ஏன் மனிதர்களைப் படைக்கவேண்டும்? 
அவர்களுக்கு ஏன் துன்பத்தைக்கொடுக்கவேண்டும்? 
எதற்காக தீயவர்களை படைக்கவேண்டும்?
கடவுள் நினைத்தால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைக்கலாமே
எதற்காக இப்படிப்பட்ட நோயையும்,இயற்கை சீற்றங்களையும் கொடுத்து உயிர்களை துன்புறுத்தவேண்டும்?
இவைகள் எல்லோர் மனதிலும் உள்ள கேள்விகள்.
-
நாம் அடிக்கடி படிக்கும் ஒரு விஷயம் உண்டு.
கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார்.அவர் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார்.அவர் இல்லாத இடமே இல்லை. என்றெல்லாம் அடிக்கடி படிக்கிறோம்.ஆனால் அதுபற்றி சிறதும் சிந்திப்பதில்லை.மேலும் அதுபற்றி ஆழமாக படிப்பதும் இல்லை.
-
கடவுளே தேவர்களாகவும்,மனிதர்களாகவும்,விலங்குகளாகவும்,செடிகொடிகளாகவும்,
அனைத்துமாகவும் ஆகியிருக்கிறார்.
கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவனையும்,வைகுண்டத்தில் வீற்றிருக்கும் விஷ்ணுவையுமே நாம் இறைவன் என்று வழிபட பழக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் இதையும் தாண்டி எங்கும் நிறைந்துள்ள கடவுளைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோம்.
-
இறைவன் மாயை(அறியாமை)யின் துணையினால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுமாக ஆகியிருக்கிறார்.
அவரே படைக்கும் தொழிலை செய்பவராகவும்.காக்கும்தொழிலை செய்பவராகவும்,அழிக்கும் தொழிலை செய்பவராகவும்,கோடிக்கணக்கான தேவர்களாகவும்,கிரகங்களாகவும்,சந்திர சூரியர்களாகவும்,பற்பல உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்.
இதில் பல படிநிலைகள் உள்ளன. சக்திக்கு ஏற்றபடி உயர்வு தாழ்வு உள்ளது.
அதிக சக்தியை பெற்றிருப்பவர்கள் மேல் உலகங்களில் வாழ்கிறார்கள்.
குறைந்த சக்தியைப்பெற்றிருப்பவர்கள் கீழ் உலகங்களில் வாழ்கிறார்கள்.
அதுதான் வேறுபாடு.
-
கடவுள் ஏன் இப்படி செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்ப முடியாது. 
ஏனென்றால் இந்த கேள்வியைக் கேட்பவரும் கடவுள்தான்.
இதற்கு பதில் சொல்பவரும் கடவுள்தான்.
கண்களை இறுக மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று கத்தினால் இருட்டு விலகிவிடுமா? 
கண்களில் உள்ள துணியை நீங்கள்தான் கட்டினீர்கள். நீங்களே அதை அகற்ற வேண்டும்.
நாமே கடவுள் என்பதை அறியும்போது மாய உலகம் மறைந்துவிடும்.
அப்போது நம்மைநாமே கண்களால் கட்டிக்கொண்டோம் என்பது புரியும். 
யாரும் நமது கண்களைக்கட்டி இந்த உலகிற்குள்கொண்டுவிடவில்லை.
-
நமது சொந்த இயல்பை அறியவேண்டும்.
அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நமது சக்தியை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். 
மனிதனாக இருப்பவன் தெய்வமாக உயரவேண்டும் பின்பு இன்னும் உயர்ந்து பிரம்மமாகவேண்டும்.
அப்போது நானே அனைத்துமாக இருக்கிறேன் என்ற அனுபவம் உண்டாகும். 
நமது உடல் பிரபஞ்ச உடலாக,எல்லையறற்ற உடலாக மாறிவிடும்.
இதை பகவத்கீதை யோகமார்க்கம் என்கிறது.
-
இன்னொரு வழி, நமது சக்தியை குறைத்துக்கொண்டே வரவேண்டும். முடிவில் சக்தியற்ற நிலையை அடையவேண்டும். சக்தியை சூன்யநிலைக்கு கொண்டுவரவேண்டும். அப்போது நமது சொந்த இயல்பு வெளிப்படும். நான் செயலற்றவன் என்பது அனுபவமாகும்.
இதை சந்நியாச மார்க்கம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்
-
முதல் வழியில் செல்பவன் எல்லையற்ற சக்தியை அடைகிறான்.
இன்னொரு வழியில் செல்பவன் சக்தியின் ஒடுக்கநிலையை அடைகிறான்.சிலர் சூன்யம் என்கிறார்கள்..
இந்த இரண்டு வழிகளில் செல்பவர்களும் நானே கடவுள் என்பதை அனுபவத்தில் உணர்கிறார்கள்.
-
முதல் வழியில் செல்பவர் தேவைப்பட்டால் மீண்டும் மனிதனாகப்பிறந்து மனித குலத்திற்கு நன்மை செய்ய முடியும். அவரையே அவதாரபுருஷர்கள் என்று மக்கள் வழிபடுகிறார்கள்.
இன்னொரு வழியில் செல்பவர் மீண்டும் பிறப்பதில்லை.
-🕉️