Friday, November 29, 2024

வீட்டில் கடிகாரம் மாற்றுவது இவ்வளவு இருக்கிறதா.

*எந்த வீட்டில் கடிகாரம் இந்த திசையில் மாட்டி இருக்கின்றதோ, அந்த வீட்டில் கஷ்டமும் வறுமையும் நிரந்தரமாக தங்க தான் செய்யும். உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது.* 🛑🛑

கடிகாரம் என்பது வெறும் நேரம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையின் நேரத்தை நல்ல நேரமாகவும் மாறுவதற்கு கூட, இந்த கடிகாரம் ஒரு காரணமாக இருக்கின்றது. இது நம்மில் பல பேருக்கு தெரியவில்லை. நம் வீட்டில் வரக்கூடிய கஷ்டத்திற்கு நாம் கடிகாரம் மாட்டியிருக்கும் திசையும், கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வீட்டில் எந்த திசையில் கடிகாரம் இருக்க வேண்டும்? எந்த திசையில் வைத்தால் வீட்டில் வறுமை நீங்கும். குறிப்பாக அது எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும், எந்த வடிவத்தில் இருக்க வேண்டும், இப்படிப்பட்ட பல குழப்பங்களுக்கான தீர்வைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சுழல்கின்ற காலச்சக்கரத்தை நமக்கு வலியுறுத்துவதே இந்த கடிகாரம் தான். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கடிகாரத்தை மாட்டி வைக்க வில்லை. வானத்தை பார்த்து, வானத்திலுள்ள சூரியனைப் பார்த்து தான் நேரத்தை கணித்தார்கள். அவர்களுடைய முன்னேற்றம் தடைபடாமல் இருந்ததற்கு வீட்டில் கடிகாரம் இல்லாததும் ஒரு காரணம். சரி, இப்போது நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல் இருக்க என்ன செய்வது?

முதலில் உங்களுடைய வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசை. வடக்கு பக்கம் உள்ள சுவற்றில் உங்களுடைய கடிகாரத்தை மாட்ட வேண்டும். அந்த கடிகாரம் தெற்கு பார்த்த வாறு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் வராது. பொருளாதார சூழ்நிலை உயர்ந்துகொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு திசை சுவற்றில் மாட்டப்படும் கடிகாரம் வட்ட வடிவில் இருப்பது நமக்கு இன்னும் அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும்.

வீட்டில் நோய்நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும். குடும்பத் தலைவனின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும். அப்போது கடிகாரம் மேற்கே பார்த்தவாறு இருக்கும். கிழக்குப்பக்கம் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது.

கிழக்கு பக்கம் மாட்டும் கடிகாரத்தை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் மாற்றிக் கொள்ளலாம். சிலபேரது வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சத்தம் எழுப்பும் கடிகாரம் இருக்கும் அல்லவா? அந்த கடிகாரம் இருந்தால் அதை கிழக்குப்பக்கம் மாட்டி வையுங்கள். உங்களுடை ய வீட்டில் செல்வ செழிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உங்களால் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை. வடக்குப் பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாற்ற முடியவில்லை, என்றால் மேற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

எக்காரணத்தைக் கொண்டும் தெற்குப் பக்கத்தில் மட்டும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. இதற்கு என்ன காரணம்? கடிகாரத்தில் எப்போதுமே முள் ஓடிக்கொண்டே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் போது அதில் ஒரு விதமான சத்தம் எழும். பொதுவாக அது நம்முடைய காதுகளுக்குக் கேட்காது. சில சமயங்களில் அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் நமக்கு அந்த சத்தம் கேட்கும் அல்லவா? தெற்கு என்பது எமதர்ம ராஜாவுக்கும், நம்முடைய முன்னோர்களுக்கும் சொந்தமான திசை. ஆகவே அவர்களை தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பும் இந்த கடிகாரத்தை அந்த இடத்தில் மாற்றக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய வீட்டில், நேரம் பார்ப்பதற்காக அடிக்கடி பார்க்கக்கூடிய பொருள் கடிகாரம். இந்த கடிகார கண்ணாடியில் நிச்சயம் விரிசலும் அல்லது உடைந்து இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் எதிர்மறை ஆற்றல் நமக்கு உண்டாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய கால நேரத்தை குறித்து, நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் சக்தியும் இந்த கடிகாரத்திற்கு உண்டு. ஆகவே, இந்த கடிகாரத்தை எக்காரணத்தைக் கொண்டும் மெதுவாக ஓட விடக்கூடாது. அதாவது கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தில் தான் இருக்க வேண்டும். 5 நிமிடங்கள் அதிகமாக வைத்துக் கொள்ளலாமே தவிர ஒரு நிமிடம் கூட நம்முடைய கடிகாரம் பின்னோக்கி ஓடக் கூடாது. என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஓடாத கடிகாரத்தை சுவற்றில் மாட்டி வைக்காதீர்கள். உங்களுடைய வீட்டில் நிறைய கடிகாரம் இருக்கின்றது என்பதானால் ஆங்காங்கே எல்லா இடங்களிலும் கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாது. குறிப்பாக நில வாசலுக்கு வெளியில் கடிகாரம் இருக்கவே கூடாது. சிலபேர் பால்கனியில் எல்லாம் கடிகாரம் மாட்டி வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறு. ஒரு கடிகாரத்திற்கு வாஸ்துப்படி எத்தனை விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன! நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

செல்வம் நிலைக்க ஆன்மீக ரகசியங்கள்

‪45 ஆன்மீக‬ ‪‎சூட்சமங்கள் - ‎சகல‬ ‪‎செல்வங்கள்‬ ‪‎நிலைக்க‬
------------------
நீங்கள பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம். கோயிலுக்கு போனாலும் சரி போகவில்லை என்றாலும் சரி., இதை முதலில் படியுங்கள். உங்களுக்கு வேலை கிடைக்கும் வியாதி போகும்., திருமணம் நடைபெறும் அன்பர்களே.
‪#‎சகல‬ ‪#‎செல்வங்கள்‬ ‪#‎நிலைக்க‬*
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும
10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள
21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும
22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள
23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும
24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும
28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது
.31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும
32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாதுநகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது
33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும
37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.,
38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான
39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும். ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,
அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள
40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான
41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும
43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும
44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாகஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண
்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும
45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்



தங்க நகைகள் அடமானம் வைக்க கூடாது இந்த நாட்கள்.

தங்க நகையை அடமானம் வைக்க கூடாத நாட்கள்!

தங்கம் அடமானம் வைத்தால் சிலரால் திரும்ப மீட்க முடியாது அவைகள் எல்லாம் வட்டிக்கு மூழ்கிப்போய் தரித்திரம் அடைந்து விடுகிறார்கள் பரவலாக அவசரத்தேவை கொண்டு தங்கத்தை அடமானம் வைத்தாலும் அவைகள்

கிருத்திகை நட்சத்திரம் மகம் நட்சத்திரம் ஹஸ்தம் நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் மூலம் நட்சத்திரம் சதயம்நட்சத்திரம்

ஆகிய நாட்களில் தங்கத்தை அடமானம் வைத்தவர்கள் "தரித்தர நிலையை அடைகிறார்கள் "அடமானம் வாங்கியவர்கள் செல்வந்தர்கள் நிலையில் இருந்து கொஞ்சம் கூட குறையாமல் மென்மேலும் முன்னேற்றத்தை அடைகிறார்கள்.

செய்வினை தோஷம் போக வழிபாடுகள்.

செய்வினை தோஷம் போக வழிபாடுகள்:

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை  போன்றவை  ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை  பாதிக்காது.

ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று  அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, 
நாட்டு வாழைப்பழம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, 
கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு  தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.

அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

முருகனருள் பெற்ற மகான்கள்.

முருகனருள் பெற்ற மகான்கள்

முருகப் பெருமானின் பேரருள் பெற்றவர்கள் பலர். யதார்த்த உலகில் பலருக்கும் அந்த இறை அனுபவம் கிட்டியிருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில மகான்களின் வாழ்க்கைச் சம்பவங்களே அவனருளுக்குப் பெரிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. அந்தப் பெருமை பெற்ற சில மகான்களைப் பற்றி, இங்கே:

ஆதிசங்கரர் தீராத வயிற்றுவலியால் துடித்தபோது திருச்செந்தூர் முருகனின் மீது சுப்ரமண்ய புஜங்கம் என்ற அருமையான தோத்திரத்தைப் பாட, அவரின் வயிற்றுவலி முருகன் அருளால் நீங்கியது. கடல் சூழ்ந்திருந்த அந்த தலத்தை, அவர் பாடிய சுப்ரமண்ய புஜங்கம்தான் சுனாமிப் பேரழிவிலிருந்து காத்தது என்று அப்பகுதி பக்தர்கள் இன்றும் நினைத்து ஆதிசங்கரருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர், தமிழ் மீதும் தமிழ்க்கடவுள் முருகன் மீதும் பற்றுடையவர். அவர் வெப்பு நோயால் பெரும் துன்பப்பட்டபோது, முருகனை திருமுருகாற்றுப்படை எனும் துதியால் துதித்தார். அதனால் மகிழ்ந்த முருகன் அவருக்கு தரிசனம் தந்து திருக்காளத்திக்குச் செல்ல பணித்தான். அவரும் அதன்படி அங்கு சென்று பொன்முகலியாற்றில் மூழ்கி எழுந்து, தன் நோய் நீங்கப் பெற்றார்.

காஞ்சியம்பதியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு கந்தபுராணத்தை எழுதுவதற்கு ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என அடி எடுத்துத் தந்தது முருகப்பெருமானே! இதைப் பலரும் நம்பாததால் முருகனே ஒரு புலவர் வேடத்தில் வந்து தன்னை மெய்ப்பித்து கச்சியப்பரின் புகழை உலகறியச் செய்தார்.

அருணகிரிநாதர் தீய வழியில் சென்று, அதன் விளைவுகளால் மனம் வருந்த, முருகன் அவரைத் தடுத்தாட்கொண்டு திருப்புகழ் பாடப்பணித்தார். அதுமட்டுமன்றி, ‘முத்து..’ என்ற முதற்சொல் கொடுத்து அவரைத் தொடரச் செய்தார். பகைவரின் சூழ்ச்சியால் கிளியாக மாறிய அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ததுடன் மதுரை மீனாட்சியம்மனுடைய திருத்தோளில் அமரும் பாக்கியத்தையும் அவருக்கு முருகன் அருளினார்.

பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை வாய் பேச இயலாதவராக இருந்தவர் குமரகுருபரர். அவர் திருச்செந்தூர் முருகனின் அருளால் பேசும் ஆற்றல் பெற்று, அதற்கு நன்றியறிதலாக கந்தர் கலி வெண்பா எனும் துதியைப் பாடி, அதுமுதல் கவி இயற்றும் திறமையையும் பெற்றார்.

பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானின் மீது அளவற்ற பக்தி கொண்டவர். முருகனை அழைத்துத் தன்னுடன் அமர்ந்து பால் சோறு சாப்பிடச் செய்தவர்! இது அவருடைய பக்தியின் சிறப்பு! தன் வாழ்க்கையில் நேர்ந்த பல இன்னல்களை தான் இயற்றிய ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தே தீர்த்துக் கொண்டார் அவர். முதுமைக் காலத்தில் அவர் கால் எலும்பு முறிய உடனே அவர் முருகனைப் பாட, எங்கிருந்தோ வந்த இரு மயில்கள் அவர் படுத்திருந்த மருத்துவமனை ஜன்னல் வழியே பறந்து வந்து அவர் காலை தம் தோகையால் வருட, மருத்துவர்களே வியந்து போற்றும்படி அவர் கால் எலும்புகள் ஒன்று சேர்ந்தன. 

ஔவையாரிடம்   சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, தனக்கிருந்த தமிழ் கர்வத்தை அடக்கிய முருகனின் தரிசனம் பெற்று அவன் அருளையும் பெற்றார்.

போகர் பெரும் சித்தர். முருகப் பெருமான் திருவருளால் நவபாஷாணங்களினால் இவர் உருவாக்கிய முருகனின் திருவுருவமே இன்று பழநியில் மூலவர் முருகனாய் அருளொளி பரப்புகிறார். 

மகான்களுக்கு அருளிய முருகப் பெருமானை வைகாசி விசாகப் புண்ணிய தினத்தில் வணங்கி, அவன் அருள் வேண்டி சிரம் தாழ்த்தி அவன் திருவடிகளைப் பணிவோம்.

விதியின் பாதை மாற்ற கடவுள் மட்டுமே உதவி செய்வார் என்ற கதை.

அவர் ஒரு பிரபல ஜோதிடர். 
அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.
தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.
“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.
ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.
பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.  
எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.
“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”
“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”
தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன்.  
பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.
இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.
வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.
அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.
மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.
அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார்.  
கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.
அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.
இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.
வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.
மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  
அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.
ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்?  
இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது.  
ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.
ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.
மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.
ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.
*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.
நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.
சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது !
. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு.
🙏ஓம் நமசிவாய🙏

Tuesday, November 26, 2024

வாழ்க்கைக் காலத்தில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவஸ்தலம்.

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய #சிவஸ்தலம்..!

ஒரு வருடம் பழமும், 
ஒரு வருடம் சருகும், 
ஒரு வருடம் தண்ணீரும், 
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். 

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.

 
எதுவுமே இங்கு தேவையில்லை. 

ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். 

பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.

இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும், 
இரண்டு நாள் தங்கினால் 
இப்பிறப்பில் செய்த பாவமும், 
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.

ஞாயிறன்று இங்கு சூரியனை 
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். 

திங்களன்று சந்திரனை  நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.

புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். 

வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.

வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர். 

சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்
நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்
பிறரை ஏமாற்றியிருந்தால் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும். 

இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர் நவரத்தினங்களில் வைரமும் ராசிகளில் சிம்மமும் தேவர்கலில் இந்திரனும் மிருகங்களில் கஸ்தூரி பூனையும் இலைகளில் வில்வமும் பாணங்களில் பாசுபதாஸ்திரமும் சக்திகளில் உமாதேவியும் பூக்களில் தாமரையும் குருக்களில் வியாழ பகவானும் முனிவர்களில் அகத்தியரும் பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.

இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு. 

இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும். 

ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும் 

இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.

இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும். 

இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர். 

இத்தலம் எதுவென 
இன்னும் புரியவில்லையா?  

சங்கரனாகிய சிவனும் 
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது. 

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்… 

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.

இத்தலத்திற்கு 
எப்படி செல்வது?

சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.            

மாதங்களில் மார்கழி ஏன் உயர்ந்தது?

மார்கழி ஸ்பெஷல் !

#மார்கழி_பூஜை_ஆரம்பம்

திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. 

இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். 

தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள். 

மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த விரதம் அமைந்தது. இந்த விரதத்தை இப்போதும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம். 

காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். 

உதாரணமாக, மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும். 

மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். 

இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும். 

விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். 

ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களிலுமே அதிகாலையில் பூஜை நடக்கும். 

கோயில்களில் மட்டுமின்றி வீட்டையும் சுத்தம் செய்து, காலையில் எளிய பூஜை ஒன்றை பெண்கள் செய்யலாம். 

திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும். 

திருவிளக்கேற்றி, நம் இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த பாடல்களை பாட வேண்டும். 

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் முதலானவை செய்வதற்கு எளியவையே. கற்கண்டு சாதம் அமுதம் போல் இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். கன்னிப்பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் முதலானவற்றை நைவேத்யம் செய்யலாம்.

திருப்பாவை பிறந்த கதை: 

கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள். 

கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள். 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று. 

திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவைஎன்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று. 

முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது. 

ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது. 

இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலை புரிகிறது.

வைகறை-மார்கழி: 

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். 
இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. 

உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப்பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பு. 

ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளினார். காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் கடவுள். இவர்களுக்கு இன்னது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள். 

எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ணன், மாதங்களில் நான் மார்கழி என்றார். இவரது திருவாய் மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்து விட்டது இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு.

மார்க் சீர்ஷம் என்ற தொடர் மார்கழி என்று மாறியது. மார்க் சீர்ஷம் என்றால் தலையாய மார்க்கம். இதன் வேறு பெயர் தனுர் மாதம்.வைத்திய நூல்கள் மார்கழியைப் பீடை மாதம் என்று வழங்குகின்றன. 

மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி. பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.
விடியற்காலையில் எழுகின்றனர். குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர். பனி தலையில் படிய வீட்டையும், முற்றத்தையும் பெருக்கி தூய்மைப்படுத்துகின்றனர். சாணத்தால் முற்றத்தை மெழுகுகின்றனர். தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து. அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். 
விளக்கேற்றுகின்றனர். எல்லா முற்றங்களும், வீடுகளும் லட்சுமிகரமாகப் பொலிகின்றன. பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். சாணத்தில் பூசணிப்பூ... என்ன காரணம்? பூவுக்கு ஆதாரம் சாணமா? இல்லை. 

ஒருபிடி சாணத்தில் பிள்ளையாரைப் பிடிக்கின்றனர். பூக்கின்றபோதே காய்க்கின்ற பூசணிப்பூவை, வழிபடுகின்றபோதே அருளுகின்ற பிள்ளையாரின் திருமுடிமேல் சூட்டுகின்றனர். பிள்ளையார் அனைவருக்கும் அருள்வதற்கு பிரசன்னமாகிறார். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. 

எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம். 
இவை அனைத்தும் மார்கழியின் சிறப்புகள்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

Monday, November 25, 2024

எல்லாம் அஞ்சு தான் எம் பெருமானுக்கு

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு 

1.பஞ்ச பூதங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 

2. பஞ்சாட்சரம்

நமசிவாய - தூல பஞ்சாட்சரம் 
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம் 
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம் 
சிவசிவ     - காரண பஞ்சாட்சரம் 
சி                  - மகா காரண பஞ்சாட்சரம் 

3.சிவமூர்த்தங்கள் 

1.பைரவர்                      -வக்கிர மூர்த்தி 
2.தட்சிணாமூர்த்தி   -சாந்த மூர்த்தி 
3.பிச்சாடனர்               -வசீகர மூர்த்தி 
4.நடராசர்                     -ஆனந்த மூர்த்தி 
5.சோமாஸ்கந்தர்    - கருணா மூர்த்தி  

4.பஞ்சலிங்க சேத்திரங்கள்

1.முக்திலிங்கம் -கேதாரம் 
2.வரலிங்கம்       -நேபாளம் 
3.போகலிங்கம்  -சிருங்கேரி 
4.ஏகலிங்கம்        -காஞ்சி 
5.மோட்சலிங்கம் -சிதம்பரம் 

5.பஞ்சவனதலங்கள் 

1.முல்லை வனம்   -திருக்கருகாவூர் 
2.பாதிரி வனம்         -அவளிவணல்லூர் 
3.வன்னிவனம்        -அரதைபெரும்பாழி 
4.பூளை வனம்         -திருஇரும்பூளை 
5.வில்வ வனம்       -திருக்கொள்ளம்புதூர் 

6.பஞ்ச ஆரண்ய தலங்கள் 

1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம் 
2.மூங்கில் காடு     -திருப்பாசூர் 
3.ஈக்காடு                  -திருவேப்பூர் 
4.ஆலங்காடு          -திருவாலங்காடு 
5.தர்ப்பைக்காடு    -திருவிற்குடி 

7.பஞ்ச சபைகள் 

1.திருவாலங்காடு -இரத்தின சபை 
2.சிதம்பரம்               -பொன் சபை 
3.மதுரை                    -வெள்ளி சபை 
4.திருநெல்வேலி   -தாமிர சபை 
5.திருக்குற்றாலம் -சித்திர சபை 

8.ஐந்து முகங்கள் 

1.ஈசானம் - மேல் நோக்கி 
2.தத்புருடம் -கிழக்கு 
3.அகோரம் -தெற்கு 
4.வாம தேவம் -வடக்கு 
5.சத்யோசாதம் -மேற்கு 

9.ஐந்தொழில்கள்  

1.படைத்தல் 
2.காத்தல் 
3.அழித்தல் 
4.மறைத்தல் 
5.அருளல் 

10.ஐந்து தாண்டவங்கள் 

1.காளிகா தாண்டவம் 
2.சந்தியா தாண்டவம் 
3.திரிபுரத் தாண்டவம் 
4.ஊர்த்துவ தாண்டவம் 
5.ஆனந்த தாண்டவம்  

11.பஞ்சபூத தலங்கள்  

1.நிலம்        -திருவாரூர் 
2.நீர்               -திருவானைக்கா 
3.நெருப்பு   -திருவண்ணாமலை  
4.காற்று      -திருக்காளத்தி   
5.ஆகாயம் -தில்லை 

12.இறைவனும் பஞ்சபூதமும் 

1.நிலம்        - 5 வகை பண்புகளையுடையது
            (மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை ) 
2.நீர்               - 4 வகை பண்புகளையுடையது
            (சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை ) 
3.நெருப்பு   - 3 வகை பண்புகளையுடையது
            (ஒளி ,ஊறு ,ஓசை ) 
4.காற்று      - 2 வகை பண்புகளையுடையது
             (ஊறு ,ஓசை ) 
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
              (ஓசை )

13.ஆன் ஐந்து

பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம் 

14.ஐங்கலைகள் 

1.நிவர்த்தி கலை 
2.பிரதிட்டை கலை 
3.வித்தை கலை 
4.சாந்தி கலை 
5.சாந்தி அதீத கலை 

15.பஞ்ச வில்வம்  

1.நொச்சி 
2.விளா 
3.வில்வம் 
4.கிளுவை 
5.மாவிலங்கம் 

16. ஐந்து நிறங்கள்

1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம் 
2.தத்புருடம் -கிழக்கு           - பொன் நிறம் 
3.அகோரம் -தெற்கு              - கருமை நிறம் 
4.வாம தேவம் -வடக்கு      - சிவப்பு நிறம் 
5.சத்யோசாதம் -மேற்கு    - வெண்மை நிறம்

17.பஞ்ச புராணம் 

1.தேவாரம் 
2.திருவாசகம் 
3.திருவிசைப்பா 
4.திருப்பல்லாண்டு 
5.பெரியபுராணம் 

18.இறைவன் விரும்ப நாம் செய்யும்  ஐந்து

1.திருநீறு பூசுதல் 
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல் 
4.வில்வ அர்ச்சனை புரிதல் 
5.திருமுறை ஓதுதல்

19.பஞ்சோபசாரம் 

1.சந்தனமிடல் 
2.மலர் தூவி அர்ச்சித்தல் 
3.தூபமிடல் 
4.தீபமிடல் 
5.அமுதூட்டல்.

Tuesday, November 19, 2024

திட்டும் பொழுது ஏன் சனியனே என்று சொல்லக்கூடாது.

சனி பகவான்
***************
சனியனே என்று திட்டக் கூடாது என கூற காரணம் என்ன?

பல வீடுகளில் தாய்மார்கள் பிள்ளைகளை சனியனே என திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக பிள்ளைகள் பெற்றோருக்கு பிடிக்காத செயல்களை செய்யும்பொழுதும், அதிகம் பிடிவாதம் பிடிக்கும் பொழுதும், சொல் பேச்சு கேட்காத பொழுதும் பெற்றோர் இப்படி சனியனே என திட்டுவார்கள்.

ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளை இப்படி சனியனே என திட்டினால் ஒருவருக்கு மிகப்பெரிய கோபம் வந்து அவர் உங்களை வாட்டி வதைத்து விடுவார் தெரியுமா? யார் அவர். உங்கள் பிள்ளைகளை சனியனே என திட்டினால் உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் குழந்தைகளை நீங்கள் சனியனே என திட்டும் பொழுது நீங்கள் சனி பகவானை கேலி செய்ததாக நினைத்து சனி பகவான் உங்கள் மீது அவருடைய முழு பார்வையையும் செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்.

சனி பகவானை மந்தமான கடவுள் என சொல்வார்கள். அவருக்கு மாந்தன் என்ற ஒரு பெயருமுண்டு. சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களை விடவும் சூரியனை மெதுவாக சுற்றி வருகிறது.

ஒருவருடைய எண்ணத்தில் சனியன் என்று வந்துவிட்டால் அவருடைய வார்த்தையிலும் சனியனே என்ற சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரின் நாவிலிருந்து அந்த வார்த்தை வந்துவிட்டால் சனி அவர்களின் செயல்களில் சேர்ந்து விடுவார்.

அதனால் நீங்கள் வாழ்க்கையில் அதிக சோதனைகளை சந்திக்க நேரிடும். அதனால் இனிமேல் நீங்கள் யாரையும் சனியனே என திட்டி விடாதீர்கள். சனி பகவான் உங்களை பிடித்த பிறகு வருத்தப்படுவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றது.

சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதுக்கு தகுந்தாற்படி பலன் கொடுப்பார். ஆனால் அவரால் கிடைக் கும் நன்மையால் மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி மக்கள் பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே  மிஞ்சியது.

மனம் வருந்திய சனி, அக்னி வனம் எனப்படும் திருக்கொள்ளிக்காடு வந்து, சிவனை நினை த்து தவமிருந்தார். சிவன் தரிசனம்  தந்து, சனீஸ்வரரை பொங்கு சனியாக மாற்றினார். இவர் அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
 
சனி பகவான் மந்த கதியுள்ளவர் என்பது இய ற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்க ளை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொ ல்வதுண்டு. வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால்,  ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு.

மந்த கதி உள்ளவர்களுக்காக சனி பகவானு க்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால் சனிய னே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்த தாகக் கருதி, சனி பகவான்  அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் எனபது ஐதீகம். மந்த கதி உடையவர்களிடம் பக்குவமா க பேசி  திருத்துபவர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும்..

இறந்தவர்களின் படத்தை எந்த பக்கத்தில் மாட்ட வேண்டும்.

🔥இறந்தவர்களின் படத்தை மாட்டும் 
     இடம் எது தெரியுமா?🔥

🌹இறைவன் முன்னிலையில் பஞ்ச பாத்திர கலசத்தில் நீர் நிரம்பியிருப்பது போன்று இறந்தவர்களின் படங்களுக்கு முன்னால் செம்பு நிறைய நீர் வைப்பது அவர்களது ஆசிர்வாதத்தை அதிகரிக்கும்.🌹

🌷தேவர்கள் ஆறுமாதங்களும், பித்ருக்கள் ஆறுமாதங்களும் நம்மை காக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் முன்னோர்கள். எவன் ஒருவன் பித்ரு வழிபாடை முறையாக கையாள்கிறானோ அவனுக்கு வாழ்வில் எத்தகைய துன்பங்களும் சஞ்சலங்களும் உண்டாகாது என்கிறது  இந்துமத சாஸ் திரங்கள். ஏனெனில் இறந்தவர்கள் தெய்வமாக இருந்து நம்மை காக்கிறார்கள் என்பது காலங்காலமாக மக்களால் நம்பப்படுகிறது. 🌷

குலதெய்வமும், இஷ்ட தெய்வமும் ஒரு சேர அமைந்திருக்கும் பூஜையறையில்  நம்மை பாதுகாக்கும் நம் உடன் பயணிக்கும் தெய்வமாக மாறிய நம் முன்னோர்களின் படங்களையும் மாட்டலாமே. ஏனெனில் அவர்களும் தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுபவர்கள் தானே என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மைதான் தெய்வமாக இருந்து காக்கும் முன்னோர்கள் மனிதர்களாக இருந்து இறந்தவர்கள். இறைவன் அல்ல என் பதை மனதில் கொள்ள வேண்டும்.

தெய்வத்தோடு தெய்வமாக என்  பெற்றோர்களையும் வைத்து வழிபடுகிறேன் என்று சொல்லும் அநேகம் பேர் நம்மில் உண்டு. ஆனால்   அகிலத் தையும் அண்ட சராசரங்களையும் உருவாக்கியது தெய்வம் தான். உலகில் சக ஜீவராசிகளையும் உருவாக்கி அவர்களுக்கு அபயம் அளிப்பதும் இறைசக்திதான். அதனால் இறந்த மனிதப்பிறவிகள் இறைவனுக்கு நிகராக மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

கடவுள் தான் நம்மை காப்பவர். அவருக்கு நிகரானவர்கள் அவரைத் தவிர வேறுயாருமில்லை. இறந்தவர்களை பூஜிக்கிறேன் என்று இறைவனை நிந்தித்துவிடக்கூடாது. அப்படியா என்று கடவுளின் படங்களுக்கு மேலும் மாட்டக்கூடாது. இறந்தவர்களின் படங்களை இறைவன் இருக்கும் படத் துக்கு கீழே தரையில் வைத்து வணங்குவது தான் நல்லது. அதே போன்று கடவுள் படங்களோடு பக்கத்தில் ஒட்டி வைத்திருப்பதும் தவறு.
இவ்வளவு சம்பிரதாயங்களையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததால் தான் பூஜையறையில்  இறந்தவர்களின் படங்களை மாட்டாமல்  வேறு இடங்களில் தென் திசையை நோக்கி இருக்குமாறு மாட்டிவைத்தார்கள்.பித்ரு உலகம்  பூமியிலிருந்து தென் திசையை நோக்கி இருக்கிறது என்ற நம்பிக்கையை  இந்துமதம் கொண்டிருந்தது. அதனால் தான் இறந்தவர்களின் படங்களை தென் திசை நோக்கி மாட்டிவைத்தார்கள். ஆனால் ஆன்மிக பெரியோர்கள்  பூஜையறை தவிர வேறு எந்த இடத்தில் மாட்டினாலும் தவறில்லை என்கிறார்கள்.
கடவுள் படங்களுக்கு செய்யும் வழிபாட்டையே இறந்தவர்களின் படங்களுக்கும் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பூஜைய றையில் இருக்கும் கடவுள் படங்களும், இறந்தவர்களின் படங்களும் வணங்கத்தக்க வகையில் சுத்தமாக துடைத்து  நறுமணமிக்க மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும்.
இறைவன் முன்னிலையில் பஞ்ச பாத்திர கலசத்தில் நீர் நிரம்பியிருப்பது போன்று இறந்தவர்களின் படங்களுக்கு முன்னால் செம்பு நிறைய நீர் வைப்பது அவர்களது ஆசிர்வாதத்தை அதிகரிக்கும். இறந்தவர்கள் வணங்குதலுக்கும் வழிபாடுக்கும் உரியவர்களே என்றாலும் இறைவனுக்கு ஒப்பானவர்கள் அல்ல என்பதால் பூஜையறையில் வைக்காமல் தனியாக வைத்து வணங்குவது தான் முழுமையான பலனை அளிக்கும்.
இறைவனுக்கு நிகரான வழிபாட்டை செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மா குளிர்ந்து நம்மை ஆசிர்வதிக்கும். இறைவனின் ஆசியும் முழு மையாக கிட்டும்.

பெருமாள் கருடனை பற்றி சொன்னது என்ன?

பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாகஏற்றுக்கொண்டுள்ளார்.
சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள்.
நவ நாகங்களில், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியை பூணூலாகவும், தட்சகனை இடுப்பிலும், கார்க்கோடனை கழுத்து மாலையாகவும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார்கருடன்.
இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும், கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.
நன்மைகள் :
ஆடி சுக்கில பஞ்சமி திதியில் கருட பகவானை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல குழந்தைப்பேறு வாய்க்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான். ஸ்ரீ கருடனுக்கு ‘அமுதகலசம்’ என்ற மோதகம் (கொழுக்கட்டை) மிகவும் விருப்பமாகும்.
அதனால் இவரை ‘மோதகா மோதர் எனவும் அழைப்பதுண்டு. ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கருடன், கடல் முத்து மூவரும் சுவாதி நட்சத்திரசத்தில் தோன்றியவர்கள்.
சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ கருடனை வணங்கினால், நன்மைகள் பெருகும்.
கருட தரிசனம் சுப சகுனமாகும். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களை கொண்டு வரும்போது ஊர்வல பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும். இதை இன்றளவும் தரிசிக்கிறோம்.
பிரம்மோற்சவ காலங்களில் கருட சேவைக்கு தனி சிறப்பு உண்டு. இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ராமாயணத்தில் ராம பிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதா பிராட்டியை சந்தித்தவர் அனுமன்.
அதேபோல, கிருஷ்ண அவதாரத்தில் தாயார்ருக்மணி கொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூது சென்றவர் கருடன். அனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள். இவர;களிடம் மனமுருக வேண்டினால் நமது பிரார்த்தனைகள், வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது ஐதீகம். விஷ்ணு ஸ்தலங்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன.
நாட்கள் – பலன்கள் :
கருட பகவானை எந்த நாட்களில் வணங்கினால் என்ன பலன்களை பெறலாம்.
ஞாயிறு – நோய் நீங்கும்
திங்கள் – குடும்பம் செழிக்கும்
செவ்வாய் – உடல் பலம் கூடும்
புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும்
வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம்
வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
சனி – மோட்சம் கிடைக்கும்
ஆகையால் கோவிலுக்கு செல்வோர்களும், வீட்டில் இருப்போர்களும் தினமும் கருடனை பார்த்தால் வணங்கி துதித்து நன்மை பெறவும்.

முருகனுக்கு ஏன் மயில் வாகனம்

*முருகனுக்கு மயில் வாகனம் - தத்துவம்..!*

முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம் பின்னனியாக இருக்கிறது ? 

அந்த மயில், பாம்பை மிதிப்பது போலவைத்திருப்பதன் தத்துவம் என்ன ?

மயிலின் முக்கியமான பண்பு அதன் அழகான தோற்றமும், ஒயிலாக ஆடும்நடனமும்தான். 

ஆனால் அவை கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீலமயமானவண்ணம்தான் காரணமாக இருக்கிறது. 

அது, தான் அழகாக ஆடுவதாகநினைக்கும்போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்துகட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.

மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். 

தனக்குஅழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். 

தன்னால் நினைத்துப் திட்டமிடக்கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான். 

கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால் எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான். 

இதில் ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதை உணரமுடிவதில்லை. 

இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். 

அவனுள் இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். 

கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும்சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.

மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டு. 

மயில் பாம்பைக் கொல்லுவதில்லை.

ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது. 

அதைப்போல உலக பந்தங்கள், ஆசைகள்எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமானால், இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும். 

இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும்பாம்பு நமக்கு உணர்த்துகிறது.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..!

*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*

*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

நவக்கிரகங்களால் நாம் பெரும் அதிக நன்மைகள்.

நவக்கிரகங்களினால்  நாம் அடையும் நன்மைகள் 

நமது வழிபாடு முறையில் சூரியன் முதல் ராகுவரையில் அமைந்த நவகோள்களை திருக்கோயில்களில் ஒன்பது முறை வலம் வந்து வழிபாடு செய்கிறோம் அல்லவா?  ஜாதக கட்டங்களில் வேறு வேறு இடங்களில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்திடும் அல்லது நமது வாழ்வினை விதித்த விதி வழியே நடத்திச் செல்லும் இந்த நவகோள்கள் இயல்பாகவே பல விதத்திலும் நமக்கு நன்மைகளைச் செய்பவையேயாகும். ஒவ்வொரு கிரகமும் நமக்கு என்னென்ன நன்மைகளைச் செய்கிறது என்பதைக் காண்போம்.

சூரியன்: நினைத்த காரியத்தை செய்யும் ஆற்றல் தைரியம், உடலாரோக்கியம், ஆகியவைகளைத் தருகிறார். கண் வலி, இருதயவலி, மஞ்சள் காமாலை ஆகிய வியாதிகளில் இருந்து  நம்மை காக்கிறார். காலையில் குளித்து முடிந்ததும் சூரியனை வழிபடுவர்களுக்கெல்லாம் மேலே சொன்ன நன்மைகளைச் சூரிய பகவான் தருகிறார்.

சந்திரன்: நமக்கு ஏற்படும் அன்றாடப் பிரச்னைகளை நல்ல முறையில் ஒழுங்குபடுத்தி, செல்வச் சேர்க்கையினை சந்திர பகவான் தருகிறார்.

செவ்வாய்: எதிர்ப்புகளில், மறைமுக கவிழ்ப்பு வேளைகளில் இருந்து நம்மைக் காத்து, நமக்கு பூமி, வயல், வீடு, பசு பயிர் பச்சை லாபங்களை அங்காரக பகவான் தருகிறார். சுருக்கமாச் சொல்லப்போனால் செவ்வாய்  நமது வாழ்வின் செழிப்பிற்கு உதவுகிறார். 

புதன்: சிறந்த கல்வியாளர்களாக, கவிஞர்களாக தாம் செல்லுமிடமெல்லாம் தனது அறிவாற்றலை அமைதியான போக்கினால் வெளிப்படுத்துதல். அறிஞர்களின் மதிப்பை பெறுதல், அடிப்படை ஜோதிட அறிவினைப் பெறுதல் ஆகிய கல்வி - அறிவு நலன்களை அவரவர் விருப்பப்படி அடைந்து பிரகாசிக்க புத பகவான் உதவுகிறார். 

குரு: புத்திர பாக்கியம், மாங்கல்ய பலம் எனச் சொல்லப்படுகிற  தாலி பாக்கியம் தருவதுடன், வாழ்க்கைச் சிக்கல்களை எதுவானாலும் போக்கி நமக்கு  நல்லதோர் வாழ்க்கையினை குருபகவான் அமைத்துக் கொடுக்கிறார். இதனாலேயே நம்மில் அநேகர் தட்சிணாமூர்த்தி வழிபாட்டினைச் செய்கிறோம். குருபெயர்ச்சி பலன்களைத் தெரிந்து கொள்வதில் ஒவ்வொரு ஆண்டும் நாம் காட்டும் ஆர்வத்திலிருந்தே நமது வாழ்க்கை அமைப்பில் குருவுக்குரிய முக்கியத்துவம் தெரியவரும்.

சுக்கிரன்: சுகமான இல்வாழ்க்கையினையும், லட்சுமி கடாட்சத்தையும் புத்தாடை அணிகலன்களின் சேர்க்கையையும், செல்வ வளத்தினால் சமூகத்தில் அந்தஸ்தையும், ஆயுள் விருத்தியையும் சுக்கிர பகவான் தருகிறார். நமக்கு திடீர் தனப்பிரட்தியை தருவர் இவரே. அதனாலேயே வாழ்க்கை வசதிகள் ஒருவனுக்கு அதிகரித்துச் செல்வதைப் பார்க்கும் பொழுது, அவருக்கு சுக்கிர தெசை எனப் பாராட்டுகிறோம்.

சனி: வாழ்க்கையை அனுபவிக்க முக்கியமாகத் தேவைப்படுவது தீர்க்காயுள், பொதுவாக மனிதன் இருப்பதற்கு  உதவும் உடலாரோகியத்தை  சனிபகவான் தருகிறார். நீண்ட ஆயுளும், உடலாரோகியாமும் உடையவனே செல்வங்களை தனது சுயமுயற்சியால் அடைவதற்கு இயலும் இவ்விதத்தில் வாழ்விற்கான அடிப்படை சனிபகவான் வழங்குகிறார். இந்த அடிப்படைச் குறைந்தால் வாழ்க்கையில் பலவித இன்னல்களை அனுபவிப்பார்.

நீண்டகாலம் (2 1/2 ஆண்டுகள்)  ஒவ்வொரு ராசிவீட்டிலும் சஞ்சரித்து ஒருவரது வாழ்க்கையினை உயர்த்தக்கூடிய அல்லது தாழ்த்தக்கூடிய ஆற்றல் சனிபகவான் ஒருவருக்கே பட்டா பாதியுமாக உள்ளது.

ராகு: நோயற்ற வாழ்வையும், திடீர் அதிருஷ்டத்தையம், எதிர்பாராத சரிவுகளையும் தருபவர் ராகுபகவான். ராகுவின் அருள் பெற்றவர்களே விஷ பயமின்றியும், திரண்ட செல்வத்தையும், பூரண இல்வாழ்க்கை சுகத்தையும் அடைய முடியும் என பண்டைய ஜோதிட நூல்களில் சொல்கின்றன. ராகுவைப்போல் கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட சாஸ்திர  பழமொழிகளில் ஒன்றாகும். 

கேது: புத்தியால் சுக விருத்திக்கான ஞானத்தை  கேது பகவான் தருகிறார். நமக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் பீடைகள் எனப்படுகிற துன்பங்களை நீக்கி உயர்ந்த அறிவாற்றல், வெற்றி, துணிவாகச் செயல்படும் திறமை ஆகியவைகளை கேதுபகவான் தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறார்.

எனவே ஜாதக தோஷங்களை எளிதில் போக்கிக்கொள்ள  உதவும் வகையில் திருக்கோயில்களில் நவக்கிரக வழிபாட்டினை நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எதிரியைக் கூட சமயமறிந்து பாராட்டினால் நன்மைகளைச் செய்வான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நவகிரக வழிபாடு அமைந்துள்ளது எனக் கருதலாம்.

Saturday, November 16, 2024

ஆயிரம் ஆண்டுகளாக இராமானுஜனுடைய பூதவுடல் இருக்கிறது தெரியுமா?

ஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்!

ஆதிசேஷனின் அவதாரம் 
என்றென்றும் நிலைத்திருக்கும்
#இராமானுஜர்..

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.

இராமானுஜரின் பூதவுடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரமும், குங்குமப்பூவும் கொண்டு அபிஷேகம் செய்து வருகிறார்கள். அமர்ந்த நிலையில் சற்றே பெரிய திருமேனியாக இராமானுஜரை இன்றும் நாம் ஶ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் தரிசிக்கலாம் (உடையவர் என்பது இராமானுஜரின் சிறப்புப் பெயர்).

இந்த அதிசய செய்தியை இந்துக்களிலேயே பலரும் அறிந்திருக்கவில்லை.

ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே ஸ்ரீராமனுஜர் சந்நதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று அறிவது இல்லை, சந்நதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து கடந்துப் போகிறார்கள்.

*தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.

இராமானுஜர் தமது 120-ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.

அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

அவரது உயிர் பிரிந்த உடனே:
தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது! என்பர்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த ஆடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி, அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த ஆடையையும் சூடிக்களைந்தத் தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம்.

பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் “பிரம்மமேத ஸம்ஸ்காரம்” என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு, இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும், ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம்.

பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

தொடர்ந்து ‘இராமானுஜர் நூற்றந்தாதி” ஓதியபடி ஶ்ரீரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது
தரிஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்

“இராமானுஜன் என்தன் மாநிதி
என்றும்
இராமனுஜன் என்தன் சேமவைப்பு”
என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்! அரங்கன்.

அதாவது இராமானுஜர், எனது மிகப் பெரும் செல்வம்; எனது சேமநிதி! என அரங்கன் திருவாய் மலர்ந்தருளினார்.

நமது பணத்தை. நாம் வங்கியில் நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியாகப் பாதுகாப்பதைப் போல; அரங்கன், இராமரின் தம்பி இலட்சுமணரின் அவதாரமான இராமனுஜரை என்றென்றும் பாதுகாத்து வைத்திட அருள் செய்தார்.

அப்படியானால் பிற சிரஞ்ஜீவிகளைப் போல இவரையும் ஏன் என்றென்றும் உயிரோடிருக்கச் செய்யவில்லை?

என்றால், கலியுகம் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை! எனலாம். உயிர் பிரிந்து பூதவுடலானாலும் திருமேனி எப்போழுதும் அடையாதிருப்பதே இறைபக்தி மற்றும் இறை நம்பிக்கையற்றவர்கள் இதைக் கண்ணாரக் கண்டு, அறிவு பெற்றிட வேண்டும்! என்பது திருமாலின் திருவுள்ளமாக இருக்கலாம்.

எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சந்நதிக்குள்ளேயே, (யதிஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்! பெரியோர்கள்.
பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. 
இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சந்நதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு
தானான திருமேனி என்று பெயர்.

ஆதிசேஷனின் அவதாரமல்லவோ இராமானுஜர்! இலட்சுமணரின் மறுபிறவி அல்லவோ இராமனுஜர்,(இராம+ அனுஜர்
அனுஜ = தம்பி) அவரது திருமேனி. இன்றும் நிலைத்திருக்கத் தானே செய்யும்? 
ஆயிரம் ஆண்டுகளாக ஜீவித்திருக்கும் இராமானுஜர். 

நலம் தரும் நவ நரசிம்மர்கள் வழிபாடு

#நலம்_தரும்_நவ #நரசிம்மர்கள்

#அதர்மத்தை அழித்து #தர்மத்தைக் காக்க திருமால் எடுத்த அவதாரங்களில் #நரசிம்ம அவதாரமும் ஒன்று. இரணியன் இறைவனை நோக்கி கடும் தவம் இருந்து பூமியிலோ, வானத்திலோ, தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், மிருகங்கள் போன்ற உயிரினங்களாலோ மரணம் ஏற்படக்கூடாது என்று #வரம் பெற்றான்.

தான் பெற்ற வரத்தின் ஆணவத்தால் திருமாலையே எதிர்த்தான். மேலும் ‘நாராயணனே கடவுள்’ என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் தூணைப் பிளந்து கொண்டு அவதரித்த நரசிம்மர், இரணியனை தன் மடியில் கிடத்தி கூரிய நகங்களால் வயிற்றைக் கிழித்து அவனை வதம் செய்தார்.

உக்கிரம் கொண்ட நரசிம்மரை பிரகலாதன் சாந்தம் கொள்ளச் செய்தான். உக்கிரம் நீங்கிய நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்தி லட்சுமிநரசிம்மராக காட்சிக்கொடுத்தார். நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம், ஆந்திராவில் உள்ள அகோபிலம் ஆகும்.

‘#அகோ’ என்றால் ‘#சிங்கம்’, ‘#பிலம்’ என்றால் ‘#குகை’ என்று பொருள். நரசிம்மர் இத்தலத்தில் குகைக்குள் காட்சியளிப்பதால் இக்கோவிலுக்கு ‘அகோபிலம்’ என்று பெயர் வந்தது.

அகோபிலம் என்ற திவ்யதேசம் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் இருக்கிறது. கடப்பாவில் இருந்து 112 கி.மீ. தூரம். தமிழ்நாட்டில் இருந்து அகோபிலம் செல்ல சென்னையில் இருந்து கடப்பாவுக்கு செல்லும் ரெயில் அல்லது பேருந்தில் சென்று, அங்கிருந்து அல்லகட்டா வழியாக அகோபிலத்துக்கு பேருந்து அல்லது வேன் மூலமாகச் செல்லலாம்.

திருமாலின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க விரும்பிய கருடன், கடும் தவம் இருக்க பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்திகளும் சுயம்பு வடிவங்களே. இந்த நவ நரசிம்மர்களை நவக்கிரகங்கள் வழிபட்டிருக்கின்றன. எனவே நவ நரசிம்மர்களை வழிபட்டால், நவக்கிரகங்களின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்கிறார்கள்.

ஒன்பது நவ நரசிம்மர்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

#அகோபில நரசிம்மர்

பவன நதிக்கரையில் அமைந்திருக்கும் குகை ஆலயத்தில் வீற்றிருக்கிறார் இந்த நரசிம்மர். இவர் உயர்ந்த பீடத்தில் சுமார் 2 அடி உயரத்தில், சாலகிராம வடிவில் சுயம்புவாக அருள்கிறார். உக்கிர நரசிம்ம சுவாமியான இவர், ஒரு காலை மடித்து மற்றொரு காலை கீழேவிட்டு தொடை மீது இரணியனை படுக்க வைத்து, இரண்டு கைகளால் வயிற்றைக் கிழிக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். இந்த நரசிம்மரை வழிபாடு செய்தால் சுக்ரனால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.

#மாலோல நரசிம்மர்

இவரைக் காண மலையில் நடந்து செல்ல வேண்டும். கனகப்யா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இந்த நரசிம்மர் ஆலயம். ‘மா’ என்றால் லட்சுமி என்றும், ‘லோ’ என்றால் காதல் என்றும் பொருள். அன்னையை தன் இடதுமடியில் அமர வைத்துக்கொண்டு இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு சுகா ஆசனத்தில் வீற்றிருக்கிறார், இந்த நரசிம்மர். வலது மேல் கரத்தில் சக்கரம், இடது மேல் கையில் சங்கு, வலது கீழ்கரத்தில் அருள்புரியும் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் மகாலட்சுமியை சுற்றி வளைத்திருக்கிறது. இந்த நரசிம்மர் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள்பவர்.

#ஜ்வாலா நரசிம்மர்

மேல் அகோபிலத்தில் இருந்து 3½ கி.மீ தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் வேதாசலம், கருடாசலம் மலைகளுக்கு நடுவே இந்த நரசிம்மர் அருளும் கோவில் உள்ளது. அசலாசல மேரு என்னும் மலைப்பகுதியில் ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கச் செல்லும் வழி மிக சிரமமானது. இந்த சுவாமி மூன்று மூர்த்திகளாக தரிசனம் தருகிறார். மத்தியில் உக்கிர ரூபமாய் நரசிம்மர் எட்டுத் திருக்கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டு மடியில் இரணியனை வைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு கரங்களில் சங்கு, சக்கரமும், இரண்டு கரங்கள் வயிற்றை கிழிப்பது போலவும், மற்ற கரங்கள் அவனது உடல் அங்கங்களை அசையாதபடி பற்றிக்கொண்டும் காட்சி தருகிறது. இந்த சிலைக்கு வலதுபுறம் அவதார சமயத்தில் நரசிம்மரின் தோற்றமும், இடதுபுறம் இரணியனுடன் போர்புரிவது போன்ற சிலையும் காணப் படுகின்றன. இந்த நரசிம்மர் சனி பகவானின் தோஷங்களை போக்குகிறார்.

#பார்கவ நரசிம்மர்

கீழ் அகோபிலத்தில் இருந்து மேல் அகோபிலத்திற்கு செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் சிறுகுன்றின் மேல் இந்த நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயம் உள்ளது. 130 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படி ஏறும் முன் பார்கவ தீர்த்தக் குளத்தைக் காணலாம். பார்கவ ரிஷி பரந்தாமனை தரிசிக்க இங்கு வந்ததாகவும், அவருக்கு தசவதாரத் தோற்றங்கள் அனைத்தையும் ஒருசேர இறைவன் காட்டியதாகவும் கூறப்படுகிறது. சன்னிதியில் பார்கவ நரசிம்மர் மேல் இரண்டுகரங்களில் சங்கும், சக்கரமும், கீழ் கரங்களில் இரணியனை தன் மடியில் கிடத்தி அவனை வதம் செய்யும் தோரணையில் வீற்றிருக்கிறார். சந்திரனால் ஏற்படும் தோஷங்களை போக்குபவர் இவர்.

#பாவன நரசிம்மர்

கருடாத்ரி மலைக்கு தென்புறம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பவன நதிக்கரையில் இந்த நரசிம்மர் கோவில் உள்ளது. மிககடினமான பாதை. நடைப்பயணம் அல்லது ஜீப்பில் மிக சிரமத்துடன் தான் பயணிக்க வேண்டும். கருவறையில் பாவன நரசிம்மர், ஆதிசேஷன் குடைபிடிக்க கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், தாயாரை அரவணைத்து அபய முத்திரை காட்டியபடியும் 4 கரங்களுடன் திகழ்கிறார். இவரது சன்னிதியில் வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், ஆஞ்சநேயர் உள்ளனர். பரத்வாஜ மகரிஷி, தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிப்கொள்ள இங்கு தியானம் செய்ததாக கூறப்படுகிறது. இவரை வணங்குவோருக்கு பாவங்கள் விடுபட்டு அனைத்து நலங்களையும் வளங்களையும் அடைவார்கள் என்று ஆழ்வார்கள் கூறியுள்ளனர். ராகு கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை இந்த நரசிம்மர் தீர்ப்பாராம்.

#யோகநந்த நரசிம்மர்

கீழ் அகோபிலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் இந்த நரசிம்மர் ஆலயம் இருக்கிறது. இங்கு வீற்றிருக்கும் யோக நந்த நரசிம்மர், தனது மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், கீழ் இரு கரங்களை யோக முத்திரையில் வைத்தபடியும் காட்சி தருகிறார். இந்த நரசிம்மர், தனது பக்தனான பிரகலாதனுக்கு சில யோக மந்திரங்களையும், முத்திரைகளையும் கற்றுக்கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்த நரசிம்மரை வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

#சத்ரவட நரசிம்மர்

கீழ் அகோபிலத்தில் இருந்து கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது, இந்த நரசிம்மர் கோவில். இரண்டு கந்தவர்கள் நரசிம்மரைத் துதித்து இனியபாடல்கள் இயற்றி பாடி வர, அந்த சங்கீதத்தை பாராட்டுவதற்காகவே பெருமாள் இங்கு தோன்றினாராம். இங்குள்ள நரசிம்மர், இரண்டு கரங்களில் சங்கு சக்கரமும், மற்ற இரு கரங்களில் ஒரு கரத்தில் அபயமுத்திரையோடும், மற்றொரு கரத்தைக் கொண்டு சங்கீதத்தை கேட்டபடி தாளம் போடுவது போன்ற பாவனையிலும் வைத்திருக்கிறார். சங்கீதத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் இந்த நரசிம்மரை வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்களை இந்த நரசிம்மர் போக்குகிறார்.

#வராக நரசிம்மர்

இந்தக் கோவில் மேல் அகோபிலத்திற்கு 1 கி.மீ. தொலைவில் பவன நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் வராக நரசிம்மர், தனது இரண்டு கரங்களை இடுப்பில் தாங்கி, நின்றபடியும், பூமாதேவியை அரவணைத்தது போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறார். இந்த நரசிம்மரை வணங்கினால் குரு பகவானால் ஏற்படும் தோஷங்கள் அகலும்.

#காரஞ்ஜ நரசிம்மர்

இந்தக் கோவில் கீழ் அகோபிலத்தில் இருந்து மேல் அகோபிலத்திற்கு செல்லும் மார்க்கத்தில் 7 கி.மீ. தொலைவில் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. நரசிம்மர் வலது கையில் சுதர்சன சக்கரத்தோடும், இடது கையில் சங்குக்கு பதிலாக வில் ஏந்தியபடியும் தரிசனம் தருகிறார். மற்ற இரண்டு கை தியான முத்திரையோடு இருக்கிறது. மண்டபத்தில் இடதுபுறத்தில் ஆஞ்சநேயர் நரசிம்மரை நோக்கி வணங்குவது போன்ற காட்சி காணப்படுகிறது.

#ஒரு முறை கருங்காலி #மரத்தின் கீழ் ராமனை #நினைத்து #அனுமன் #தவம்இருந்தார். அப்போது #நரசிம்மர் வில்லுடன் தோன்றி ‘#நான்தான் #ராமர்’ என்றார். #அனுமன் அவரை ராமனாக #ஏற்றுக்கொள்ள மறுத்தார். உடனே #ராமனாக #வில்லேந்தி #அழகிய தோற்றத்தில் காட்சிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த #நரசிம்மரை வணங்கினால் #கேது கிரகத்தால் ஏற்படும் #பாதிப்புகள் நீங்கும். 

அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜெயம்  🐘

சிவன் கோயில் கட்டுவதால் என்னென்ன நன்மைகள்

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் :

🌼எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

🌼பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

🌼கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

🌼சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.

🌼ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

🌼பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

🌼எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள்,  நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,

🌼காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

🌼 முக்கியமான விஷயம் சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வது, செய்பவர்களுக்கு உதவுவதும் 21 தலைமுறைகள் செய்த பாவம் தீரும்.

🌼எந்த ஒரு சிவாலயம் சிதிலமாகி இருக்கிறதோ, அங்கு ஈசன் தியானத்தில் இருப்பார் என்றும் அங்கு அவ்வளவு எளிதில் சித்தர்கள் கூட நெருங்க முடியாது என்கிறார்கள்....

🌼அப்படிப்பட்ட சிதிலமாகி இருக்கும் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்பவருக்கு அந்த ஈசன்  தியானம் செய்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்குமாம்.... அவர்கள் இருக்கும் இடத்தில் ஏதேனும் ஒரு தெய்வம் அவர்கள் அருகில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்கிறார்கள்... இவர்களுக்கு உதவி செய்வது அந்த ஈசனுக்கே செய்கின்ற உதவி என்றும் கூறப்படுகிறது
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
பழமையான சிவனார் ஆலயங்களில் மாதம் ஒருமுறை உழவாரப்பணி,
திருவாசகமுற்றோதுதல், கோபூசை, மண்ணுக்கேற்ற மரக்கன்று நடுதல்,  
திருக்கைலாய வாத்திய இசையோடு அம்மையப்பர் திருமேனியுடன் திருவீதி உலா, மற்றும் சிறப்புவாய்ந்த மூலிகை அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது
அனைவரும் வருக சிவனருள் பெறுக

Wednesday, November 13, 2024

சுந்தரகாண்டம் படிப்பதால் கற்பனைக்கு எட்டாத பயன்கள்.

*🔯சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!* 

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீ ராம ஜெயம்.
💐🦜🙏🏻MPK🙏🏻🦜💐

Tuesday, November 12, 2024

உங்கள் ராசிக்கு எந்த பறவை அல்லது மிருகம் வளர்த்தால் அதிர்ஷ்டம்

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம்?

செல்லப்பிராணிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். ஒரு சிலரைத்தவிர செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பாலோனோருக்கு ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருக்கும். அதிலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்றே கூறலாம். அது மட்டுமில்லாமல் ‘லவ் பேர்ட்ஸ்’ எனப்படும் கிளி வகைகளையும் அதிக அளவில் வளர்ப்பதை விரும்புகின்றனர். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால் நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது ஆன்மீக ரீதியாக கண்டுபிடிக்கபட்ட உண்மை. எந்த ராசிக்காரர்கள்? எந்த வளர்ப்பு பிராணியை வளர்த்தால் மேலும் அதிர்ஷ்டம் பெருகும் என்பதை இப்பதிவில் காணலாம்.

வளர்ப்பு பிராணிகளுக்கு வீட்டில் இருக்கும் துர் சக்தியை கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. வீட்டில் இருப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து முதலில் பாதுகாப்பது செல்லப்பிராணிகள் தான். வீட்டில் தீய சக்திகள் இருந்தால், நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் வீட்டு செல்லப் பிராணி கூட திடீரென இறந்துவிடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் செல்லப்பிராணி உங்களை மிகப் பெரிய விஷயத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று அர்த்தம்.

குரு மற்றும் சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் நாய்கள் வளர்ப்பதால் நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாய்கள் வளர்ப்பதால் உங்களிடம் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. அவர்களிடம் அதிக அன்பும், அக்கறையும், வெளிப்படையான பேச்சும் கட்டாயம் இருக்கும். நாயைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. தன் எஜமானருக்காக இன்னுயிரையும் கொடுக்கும் நன்றியுள்ள ஒரு செல்லப்பிராணியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. உங்களால் நாய் வளர்க்க முடியவில்லை என்றால், நீங்கள் நாய் படத்தையோ அல்லது உருவத்தையோ உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். நாய், பைரவரின் அம்சமாக பார்க்கப்படுவதால் சகல யோகங்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.

மேஷ ராசிக்காரர்கள் ஆடு, கோழி, சேவல், குதிரை போன்ற பிராணிகளை வளர்ப்பதால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் பசு, காளை, முயல் போன்ற விலங்குகளை வளர்ப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சியும், சுபீட்சமும், அதிர்ஷ்டமும் பெறலாம்.

மிதுன ராசிக்காரர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டுக்கோழி, பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் முன்னேற்றமும், அதிர்ஷ்டமும் பெறலாம்.

கடக ராசிக்காரர்கள் கோழி, வான்கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பதால் குடும்பத்தில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் நாய் வளர்க்க கூடாது.அதிலும் பொதுவாகவே சூரியன் பகை வீடாக இருந்தால் கடகம் மட்டுமின்றி எந்த ராசிக்காரர்களும் நாய் வளர்க்கக் கூடாது.

சிம்ம ராசிக்காரர்கள் ஆடு, மாடு, நாய், கோழி போன்றவற்றை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்கள் நாய், கிளி, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பதன் மூலம் அதிர்ஷ்டம் பெறலாம். அதிலும் குறிப்பாக லவ்பேர்ட்ஸ் வளர்ப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை தவிர்க்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் விலங்குகளை வளர்ப்பதை விட பறவைகள் வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். கிளி, புறா, பஞ்சவர்ண கிளி போன்றவற்றை தாராளமாக வளர்க்கலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு நாய் வளர்ப்பது நல்லதல்ல. நாயால் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் கோழி இனத்தை சேர்ந்த எந்த வகையான பறவைகளையும் வளர்க்கலாம். இது போன்ற பறவைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை பெற்று தரும். பறவைகள் வளர்க்க முடியாதவர்கள். நீங்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பறவைகள் படத்தை வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு யானை, மயில் போன்றவற்றை நீங்கள் வளர்க்கலாம். ஆனால் யானை, மயில் எல்லாம் வளர்த்தால் சிறை தண்டனை தான் கிடைக்கும் என்பதால் பசு மாடு வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். யானை, மயில் படமாக வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்போதாவது காணும்போது நீங்கள் உங்கள் கைகளால் உணவு வாங்கி கொடுப்பது நல்லது.

மகர ராசிக்காரர்களுக்கு கழுதை, பன்றி போன்றவை அதிர்ஷ்ட பிராணிகளாக உள்ளன. ஆனால் இந்த காலத்தில் இவற்றை எல்லாம் வளர்க்க முடியாது என்பதால் நீங்கள் கழுதை படத்தை மாட்டி வைப்பது யோகத்தை பெற்று தரும். கழுதை படத்தை யார் மாற்றி வைத்தாலும் யோகம் தரும். ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு அது பெரும் யோகமாக அமையும்.

கும்ப ராசிக்காரர்கள் தினமும் காக்கைக்கு உணவு வைப்பதால் நிறைய நன்மைகளைப் பெறலாம். கும்ப ராசிக்கும் விலங்குகளை விட பறவைகளே அதிர்ஷ்டம் தரும் செல்லப்பிராணியாக இருக்கின்றன. நீங்கள் எந்த வகை பறவைகளாக இருந்தாலும் தாராளமாக வளர்க்கலாம். நாய் வளர்க்கக் கூடாது.

மீன ராசிக்காரர்கள் ஆடு, மீன், கோழி வளர்த்தால் அதிர்ஷ்டம் தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்கும். நேர்மறை ஆற்றல்களை ஊடுருவ செய்யும்.

21 தலைமுறை பாவங்கள் தீர

21 தலைமுறை பாவங்கள் தீர வேண்டுமா ?
நீங்கள் வணங்க வேண்டிய தலம்   திருவெண்காடு ! 

 திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்த கோவில் பற்றி 20 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.சிவாயநம திருச்சிற்றம்பலம்

திருவெண்காடு கோவில் பற்றிய 20 அரிய தகவல்கள்

1. திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

2. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

3. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

4. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

5. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.

6. திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.

7. சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.

8. திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.

9. திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.

10. அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.

11. இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

12. திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.

13. திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

14. இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.

15. இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.

16. காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

17. இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தர வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.

18. நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.

19. திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.

20. சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது.

சிவாயநம திருச்சிற்றம்பலம.

Monday, November 11, 2024

ஸ்ரீசக்கரத்தின் மகிமை

1. பண்டைக்காலத் தாந்ரீக தத்துவ போதனைப்படி, பழைய சடங்கு முறைகளை கடைப்பிடித்து ஒழுகுவதில் நம்பிக்கை கொண்ட மக்கள் இந்த சக்கரத்தை பயன்படுத்தி வந்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

2.தாந்ரீக பிரபஞ்சோற்பத்தி மட்டுமின்றி, மனோ தத்துவம், உடலின் ஒப்பற்ற தத்துவம் இவைகளின் கருத்துக்களை உருவகப்படுத்தும் சித்திரமாகவும் ஸ்ரீசக்கரம் சொல்லப்படுகிறது.

3. ஸ்ரீ சக்கரத்தின் சித்திரம் கி.மு. ஓராயிரம் ஆண்டு காலத்துக்கு முந்தியதாகும்.

4. ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம் மற்றும் சேஷாத்திரக் கணிதம் மட்டுமின்றி விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இத்துறைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். அப்போது தான் முழுமையான பலன் பெற முடியும்.

5.ஒருசமயம் அகிலாண்டேசுவரியான காமாட்சிதேவியின் சக்தியானது மிகவும் உக்கிரமாக இருந்தபோதும் சாந்தடையச் செய்ய வேறு வழி தெரியாமல், அம்பிகையின் எதிரில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி ஆகர்சித்து பின்சாந்தமுறச் செய்தனர்.

6.ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன.

7. ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித் தருகிறாள்.

8.சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி - வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ சக்கரமானது.

9.சக்தி வழிபாட்டின் மிக முக்கியமான பரிகார தேவதை கள் 64 (அறுபத்து நான்கு யோகினிகள்). இது அன்னையிடம் இருந்து தோன்றிய அபரிதமான சக்திகளாகும். சஷ்டி என்றால் 6 (ஆறு) சதுர் என்றால் 4 (நான்கு) இவ்வாறாக 64 கோடி யோகினியரால் பூஜிக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த எண்ணிக்கை அறுபத்து நான்கை மையப்படுத்தி ஸ்ரீசக்கரத்தை வடிவமைத் தார் பூஜ்ய ஸ்ரீஆதிசங்கரர்.

10. மனிதன் தன்னை கட்டுப் படுத்தி சித்தபுருஷாக வளர்ந்து அன்னையின் அருளை உணரும் ஆன்மீக நிலையின் முடிவே, ஸ்ரீசக்கர தத்துவமாகும்.

11. ஸ்ரீசக்கரத்தின் மறுபெயரே, ஸ்ரீசக்கரராஜம் என்ற சிறப்பு பெயராக விளங்குகிறது.

12. சக்கரத்தின் கீழாக நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் (5), மேல் நோக்கிய முக்கோணங்கள் நான் கும் (4), சிவாத்மகம் என்பர்.

13. ஸ்ரீசக்கர பூஜை செய்யும் உபாசகன் (சாதகன்) லௌகீக சுகானுபவங்களை அடைவதோடு ஞானத்தை கடைபிடிப்பதின் மூலம் விருப்பு, வெறுப்பு, புலன்கள் இவற்றை வென்று மோட்ச சாம்ரா யத்தை அடைகிறான்.

14.சென்னையில் உள்ள திருவேற் காட்டு கரு மாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன், தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆகிய மூவரையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் தரிசனம் செய்வது திரிசக்கர தரிசனம் என்று அழைக்கப்படும். ஆடி மாத பவுர்ணமியன்று இந்த தரி சனம் மிகவும் விசேஷமானது.

15.திருச்சிக்கு அருகே திருவானைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் தாடங்க வடிவில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. உக்கிரமாக இருந்த அம்பாளுக்கு ஸ்ரீசக்கரம் அணிவித்து சாந்தமாக்கியவர் ஆதி சங்கரர் என்று கூறப்படுகிறது.

16.நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். இது தவிர 51 கணேசர்கள், 9 கிரகங்கள், அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்கள், 7 யோகினிகள், 12 ராசிகள், 51 பீட தேவதைகள் என்று 157 தேவதைகளின் ரூபமாக அம் பிகை ஸ்ரீசக்கரத்தில் வழிபடப்படுகிறாள்.

17.ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவ மாகவும் செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

18.சவுந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், தேவி புஜங்கம், பவானி புஜங்கம், தேவிபாகவதம், திருமந்திரம் போன்ற நூல்கள் ஸ்ரீசக்கர வழிபாட்டை சிறப்பித்துக் கூறுகின்றன.

19.மாங்காட்டில் ஆதிசங்கரர் தன்னுடைய கரத்தா லேயே அர்த்த மேருவை பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த மேருவானது அஷ்ட கந்தங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் சந்தனம். அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிவாஜித், ஜடாமாஞ்சில், கச்சோலம் ஆகிய எட்டு விதமான நறுமணப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

20.சென்னையின் முக்கியப்பகுதியாக விளங்கும் பாரிமுனையில் தம்புச்செட்டித்தெருவில் உள்ளது புகழ் பெற்ற காளிகாம்பாள் ஆலயம். குபேரன் வழிபட்ட தலம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இங்குள்ளது.

Saturday, November 9, 2024

உறவுமுறைகளை மதித்தால் உங்கள் ஜாதகம் உயர்த்தும்.

*உங்கள் ஜாதக கட்டத்தில் நவகிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்திருந்தாலும் கூட, உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த தவறுகளை நீங்கள் செய்தால்!*

*நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுக துக்கங்களுக்கு, நல்லவை கெட்டவைகளுக்கு, ஜாதக கட்டங்களும், அதில் அமர்ந்திருக்கும் நவகிரகங்களும் தான் காரணம் என்று சொல்கிறது ஜோதிடம். இருப்பினும், 

சில பேருக்கு ஜாதக கட்டத்தில் எந்த தோஷமும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை. 

ஆனாலும், கிரகங்களின் அனுகிரக பார்வை கிடைக்கவில்லையே! 

அது எதனால்?

 நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,

 கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,

 என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவார்கள்! 

இது கூடவா, 
ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும், 

அந்த காரணம் என்ன?

 தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?

 என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
🙏🤝🙏

*எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ,* 

அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிஹமும் *கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.*

 இப்படியாக சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.

 *சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?*

#எந்த கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் பார்த்துவிடலாம்.#
👇👇👇👇👇👇

*உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,*

 அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,

 உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.

 வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.

 ஏனென்றால், அப்பா ஸ்தாணத்தை குறிப்பது சூரியன்.*

*உங்களுடைய அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால்,*

 அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,

 அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,

 கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.

 அறிவாற்றல் மங்கிப் போகும்.

 குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.

 மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், *அம்மா ஸ்தானத்தை குறிப்பது சந்திரபகவான்.*

*நீங்கள் கணவனாக இருந்தால்,*
உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும்.

 மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,

 உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை. 

வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும். 

*மனைவி இடத்தை குறிப்பது சுக்கிரன்.*

*நீங்கள் மனைவியாக இருந்தால்* உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். உங்கள் கணவர் இடத்தை குறிப்பது குரு. 

 *உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.*

*தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் புதன்* தாய்மாமன் மட்டுமல்ல, 
அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.

 உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன், 
அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும்.

*சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால்,* செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது.

 உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். 

#(இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.

 கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும். 

 மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.)#

*அடுத்ததாக பாட்டிமார்களும் தாத்தாக்களும்.*

 இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது.

 அதாவது, ராகு கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.

 ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும். 

 முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.

 *இப்போதாவது நம்புவீர்களா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று!*

Tuesday, November 5, 2024

பெண்களுக்கு மெட்டி கொலுசு ஏன் தேவை.

பெண்களுக்கு மெட்டி மற்றும் கொலுசு ஏன் அணிவிக்கப்படுகிறது??

நமது பாரம்பரியத்தில் பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே காலில் வெள்ளி கொலுசும், 
        திருமண நாளில் கணவனால் கால் இரண்டாவது விரலில் மெட்டியும் அணியப்படுகிறது.

காலில் கொலுசு அணியும் இடத்தில் தான் கருப்பை, சூலகம், மற்றும் மார்பகத்தின் செயல்பாடுகளை தூண்டும் நரம்பு முடிவிடங்கள் வந்து முடிகின்றன. 
          பொதுவாகவே உலோகங்கள் கடத்தல் தொழில்பாடடை சிறப்பாக செய்ய வல்லன.  வெள்ளி உலோகமானது நமது இனப்பெருக்க உறுப்புகளின் விருத்திக்கு மிகப்பெரும் நன்மையை செய்வது. 

ஜோதிட ரீதியில் கூட, 7 ஆமிடம் இனப்பெருக்க உறுப்புகளையே குறிக்கிறது. இயற்கை ஜாதகத்தில் 7 ஆமிடம் துலா ராசியை குறிக்கும்.

 துலா ராசி வெள்ளியின் சொந்த வீடு. வெள்ளி கிரகம் வெள்ளி உலோகத்தில் அதிக சக்தியை செலுத்தக் கூடியது. இதன் காரணத்தாலேயே வெள்ளி என்பது இனப்பெருக்க உறுப்புகளை தூண்டி விடுவதில் சிறந்த பங்காற்றுகிறது.

அதனால் தான் பெண் குழந்தைகளுக்கு காலில் கொலுசு வெள்ளியில் செய்து அணிவிக்கும் வழக்கம் வந்தது.

இதன் மூலம் அவர்களின் கருப்பை, மார்பகங்கள் சீரான வளர்ச்சியை பெற்று உரிய காலத்தில் பருவமடைய உதவுகின்றன. 

இப்போதெல்லாம் பருவமடைதலில் தாமதம் என்றால் மருத்துவரை நாடுகின்றனர். பருவமடைந்தாலும் மாதவிலக்கு பிரச்சனைகள், மற்றும் மார்பக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு காலில் வெள்ளியில் கொலுசு போட்டு விடுங்கள். படிப்படியாக இந்த பிரச்சனைகள் குறைவதை அவதானிக்க முடியும். 

கருப்பை இறக்கத்தை கூட தடித்த கொலுசுகள் சரி செய்யும் குணமுள்ளவை. 

சரி மெட்டி ஏன் திருமணமாகாத இளம் பெண்கள் அணிவதில்லை. 

ஆனால் திருமணத்தில் கணவன் கையால் அணிவிக்கப்படுகிறது?

மெட்டி அணியும் இடத்தில் உள்ள நரம்பு முடிவிடங்கள் பாலுணர்வை தூண்டக்கூடியவை.

திருமணமானாலும், பல பெண்களுக்கு தாம்பத்தியம் பற்றிய விபரங்கள் தெரிவதில்லை. 

இப்போதெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கணவனுடனான தாம்பத்தியத்தையே உடல் வலியாக உணரும் பெண்கள் உள்ளதை பார்க்க முடிகிறது. 

இதற்கு அவர்களுக்கு முறையான பாலுணர்வு ஏற்படாமையே காரணம். அந்த பாலுணர்வை இந்த வெள்ளி மெட்டி இரண்டாம் விரலில் உள்ள நரம்புகளை தூண்டுவதன் மூலம் தூண்டி விட்டு சரி செய்யும். தரமான வெள்ளியில் அளவான மெட்டி இதனை சரி செய்யும் வல்லமை படைத்தது. 

அது மட்டுமல்ல இன்றைய பல ஆண்களுக்கும் பெண்களை சரியாக கையாள தெரிவதில்லை என்பதும் இன்னொரு மறுக்க முடியாத காரணமே. 

ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டிவிட தேவையில்லை. அது உடனே வந்து விடும்.

ஆனால் பெண்கள் நிலை அதுவல்ல. அவர்களது உணர்வுகள் தூண்டப்படடால் மட்டுமே அவர்களால் தாம்பத்தியத்தில் முறையாக ஈடுபட முடியும். அதற்கு ஆண்களின் ஒத்துழைப்பும் புரிதலும் மிக அவசியம். 

அதனால் தான் தாம்பத்தியத்தில் வெறுமே சேர்க்கை என்பதை விடுத்து, முன் விளையாட்டுகள், சீண்டல்கள் மிக மிக அவசியம்.

 இதனை சில மிருகங்களின் கூடலில் கூட அவதானிக்கலாம். மிருகங்களுக்கே உள்ள புரிதல், மனிதர்களின் இன்றைய அவசர வாழ்க்கை முறையினால் மழுங்கடிக்கப்பட்டு பல வாழ்க்கை பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது.