சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் :
🌼எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.
🌼பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.
🌼கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.
🌼சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.
🌼ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.
🌼பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.
🌼எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,
🌼காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
🌼 முக்கியமான விஷயம் சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வது, செய்பவர்களுக்கு உதவுவதும் 21 தலைமுறைகள் செய்த பாவம் தீரும்.
🌼எந்த ஒரு சிவாலயம் சிதிலமாகி இருக்கிறதோ, அங்கு ஈசன் தியானத்தில் இருப்பார் என்றும் அங்கு அவ்வளவு எளிதில் சித்தர்கள் கூட நெருங்க முடியாது என்கிறார்கள்....
🌼அப்படிப்பட்ட சிதிலமாகி இருக்கும் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்பவருக்கு அந்த ஈசன் தியானம் செய்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்குமாம்.... அவர்கள் இருக்கும் இடத்தில் ஏதேனும் ஒரு தெய்வம் அவர்கள் அருகில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்கிறார்கள்... இவர்களுக்கு உதவி செய்வது அந்த ஈசனுக்கே செய்கின்ற உதவி என்றும் கூறப்படுகிறது
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
பழமையான சிவனார் ஆலயங்களில் மாதம் ஒருமுறை உழவாரப்பணி,
திருவாசகமுற்றோதுதல், கோபூசை, மண்ணுக்கேற்ற மரக்கன்று நடுதல்,
திருக்கைலாய வாத்திய இசையோடு அம்மையப்பர் திருமேனியுடன் திருவீதி உலா, மற்றும் சிறப்புவாய்ந்த மூலிகை அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது
அனைவரும் வருக சிவனருள் பெறுக
No comments:
Post a Comment