Tuesday, November 19, 2024

பெருமாள் கருடனை பற்றி சொன்னது என்ன?

பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாகஏற்றுக்கொண்டுள்ளார்.
சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள்.
நவ நாகங்களில், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியை பூணூலாகவும், தட்சகனை இடுப்பிலும், கார்க்கோடனை கழுத்து மாலையாகவும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார்கருடன்.
இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும், கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.
நன்மைகள் :
ஆடி சுக்கில பஞ்சமி திதியில் கருட பகவானை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல குழந்தைப்பேறு வாய்க்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான். ஸ்ரீ கருடனுக்கு ‘அமுதகலசம்’ என்ற மோதகம் (கொழுக்கட்டை) மிகவும் விருப்பமாகும்.
அதனால் இவரை ‘மோதகா மோதர் எனவும் அழைப்பதுண்டு. ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கருடன், கடல் முத்து மூவரும் சுவாதி நட்சத்திரசத்தில் தோன்றியவர்கள்.
சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ கருடனை வணங்கினால், நன்மைகள் பெருகும்.
கருட தரிசனம் சுப சகுனமாகும். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களை கொண்டு வரும்போது ஊர்வல பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும். இதை இன்றளவும் தரிசிக்கிறோம்.
பிரம்மோற்சவ காலங்களில் கருட சேவைக்கு தனி சிறப்பு உண்டு. இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ராமாயணத்தில் ராம பிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதா பிராட்டியை சந்தித்தவர் அனுமன்.
அதேபோல, கிருஷ்ண அவதாரத்தில் தாயார்ருக்மணி கொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூது சென்றவர் கருடன். அனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள். இவர;களிடம் மனமுருக வேண்டினால் நமது பிரார்த்தனைகள், வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது ஐதீகம். விஷ்ணு ஸ்தலங்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன.
நாட்கள் – பலன்கள் :
கருட பகவானை எந்த நாட்களில் வணங்கினால் என்ன பலன்களை பெறலாம்.
ஞாயிறு – நோய் நீங்கும்
திங்கள் – குடும்பம் செழிக்கும்
செவ்வாய் – உடல் பலம் கூடும்
புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும்
வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம்
வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
சனி – மோட்சம் கிடைக்கும்
ஆகையால் கோவிலுக்கு செல்வோர்களும், வீட்டில் இருப்போர்களும் தினமும் கருடனை பார்த்தால் வணங்கி துதித்து நன்மை பெறவும்.

No comments:

Post a Comment