Sunday, July 18, 2021

திட்டும் பொழுது ஏன் சனியனே என்று சொல்லக்கூடாது.

சனி பகவான்
***************
சனியனே என்று திட்டக் கூடாது என கூற காரணம் என்ன?

பல வீடுகளில் தாய்மார்கள் பிள்ளைகளை சனியனே என திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக பிள்ளைகள் பெற்றோருக்கு பிடிக்காத செயல்களை செய்யும்பொழுதும், அதிகம் பிடிவாதம் பிடிக்கும் பொழுதும், சொல் பேச்சு கேட்காத பொழுதும் பெற்றோர் இப்படி சனியனே என திட்டுவார்கள்.

ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகளை இப்படி சனியனே என திட்டினால் ஒருவருக்கு மிகப்பெரிய கோபம் வந்து அவர் உங்களை வாட்டி வதைத்து விடுவார் தெரியுமா? யார் அவர். உங்கள் பிள்ளைகளை சனியனே என திட்டினால் உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் குழந்தைகளை நீங்கள் சனியனே என திட்டும் பொழுது நீங்கள் சனி பகவானை கேலி செய்ததாக நினைத்து சனி பகவான் உங்கள் மீது அவருடைய முழு பார்வையையும் செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்.

சனி பகவானை மந்தமான கடவுள் என சொல்வார்கள். அவருக்கு மாந்தன் என்ற ஒரு பெயருமுண்டு. சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களை விடவும் சூரியனை மெதுவாக சுற்றி வருகிறது.

ஒருவருடைய எண்ணத்தில் சனியன் என்று வந்துவிட்டால் அவருடைய வார்த்தையிலும் சனியனே என்ற சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரின் நாவிலிருந்து அந்த வார்த்தை வந்துவிட்டால் சனி அவர்களின் செயல்களில் சேர்ந்து விடுவார்.

அதனால் நீங்கள் வாழ்க்கையில் அதிக சோதனைகளை சந்திக்க நேரிடும். அதனால் இனிமேல் நீங்கள் யாரையும் சனியனே என திட்டி விடாதீர்கள். சனி பகவான் உங்களை பிடித்த பிறகு வருத்தப்படுவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றது.

சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதுக்கு தகுந்தாற்படி பலன் கொடுப்பார். ஆனால் அவரால் கிடைக் கும் நன்மையால் மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி மக்கள் பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே  மிஞ்சியது.

மனம் வருந்திய சனி, அக்னி வனம் எனப்படும் திருக்கொள்ளிக்காடு வந்து, சிவனை நினை த்து தவமிருந்தார். சிவன் தரிசனம்  தந்து, சனீஸ்வரரை பொங்கு சனியாக மாற்றினார். இவர் அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
 
சனி பகவான் மந்த கதியுள்ளவர் என்பது இய ற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்க ளை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொ ல்வதுண்டு. வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால்,  ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு.

மந்த கதி உள்ளவர்களுக்காக சனி பகவானு க்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால் சனிய னே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்த தாகக் கருதி, சனி பகவான்  அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் எனபது ஐதீகம். மந்த கதி உடையவர்களிடம் பக்குவமா க பேசி  திருத்துபவர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும்..

No comments:

Post a Comment