Wednesday, November 29, 2023

பாம்பாட்டி சித்தர் யார்? மற்றும் அவரது வரலாறு.

குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்:

பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர்.

 இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். “இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை” என்றார். இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். “நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே” என்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். 
                         
சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்க மளிக்கத் தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதி யிலி ருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான். இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார். “குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!” என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார். பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார். 
                                               
ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் அரசனொருவன் இறந்து போய் அவனது உடல் கிடத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் யோசித்தார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் தன் உடலை மறைவிலிட்டு இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார். அரசன் எழுந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை. சித்தன் போல் பிதற்றுகிறார், மாயங்கள் எல்லாம் செய்கிறார் என்ற மக்களின் விமர்சனம் ராணியின் காது படவே விழுந்தது. அவள் மனதில் கவலையோடு சந்தேகமும் எழுந்தது. அரசனைப் பார்த்து “ஐயா! தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது சித்து வித்தைகள் புரிபவரா?“ என்று கேட்டாள். அதற்கு சித்தர் “அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களின் துன்பத்தினைப் போக்குவதற்காகவே நான் மன்னனது உடலில் புகுந்தேன். என் பெயர் பாம்பாட்டி சித்தன்” என்றார். 

உண்மை உணர்ந்த அரசி “எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கடைதேறும் வழியை உபதேசியுங்கள்” என்று கைகூப்பி வேண்டினாள். அரசரிடமிருந்து பலப்பல தத்துவப் பாடல்கள் உபதேசமாக வெளிவந்தன. அவைகளை கவனமாக எல்லோரும் கேட்டனர். அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேரினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது. சித்தர் உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்தொடங்கினாள். அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் உடலில் புகுந்தார். 
                                           
 இவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சிலரும் கூறுகின்றனர். 

மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது. இவர் செய்த நூல்கள் 
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், 
பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன. 

மருதமலை சித்தர் தியானச் செய்யுள் 
அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து ! பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து 
கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து 
கொடுத்தவரே! குவலயத்தின் காவலரே! 
ஆதிசேசனின் அருள் கண்டு 
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு 
சாதி மத பேதம் இன்றி 
காக்கும் சித்தரே காக்க! காக்க! 
பாம்பாட்டி சித்தரின் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறுபலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமிகளின் படத்தை வைத்து, அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் சித்தருக்காக குறிப்பிட்ட தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறவேண்டும். பின்னர் அல்லி, தாமரை, தாழம்பூ, சம்பங்கி ஆகிய மலர்களால் பின்வரும் 16 போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும். 

பதினாறு போற்றிகள் 

1. ஸ்ரீ நாகாபரணம் உடைய சிவனை வணங்குபவரே போற்றி! 
2. ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி! 
3. சர்ப்பரட்சகரே போற்றி! 
4. முருகனின் பிரியரே போற்றி! 
5. பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி! 
6. மூன்று வர்ணங்கள் கொண்டவரே போற்றி! 
7. வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி! 
8. ஸ்ரீ ஆதிசேசனை வணங்குபவரே போற்றி! 
9. விஷத்தினை முறிப்பவரே போற்றி! 
10. நடுநிசியில் சஞ்சரிப்பவரே போற்றி! 
11. ஜந்துக்களின் உருவம் உடையவரே போற்றி! 
12. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி! 
13. ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 
14. சிவனுக்கு ஆபரணமாஅக இருப்பவரே போற்றி! 
15. நந்திதேவரின் நண்பரே போற்றி! 
16. ஸ்ரீ பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தர் பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! 
இவ்வாறு கூறி அர்ச்சித்தபின் மூலமந்திரமான “ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும். பின்னர் நிவேதனமாக சர்க்கரை கலக்காத பச்சைப் பாலையும், வாழைப்பழங்களையும் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும். 

பாம்பாட்டி சித்தர் பூசா பலன்கள் 
இவர் நவக்கிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர். 

இவரை முறைப்படி வழிபட்டால்: 

1. நாகதோசம் அகலும். 
2. மாயை அகன்று மனத்தெளிவு பிறக்கும். நிழல் நிஜமாகவும், நிஜம் நிழாகவும் தோன்றும் நிலை மாறும். 
3. கணவன், மனைவி இடையே உள்ள தாம்பத்திய பிரச்சினைகள் அகலும். 
4. போதைப் பொருட்கள், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் அகலும். 
5. வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும். 
6. ஜாதகத்தில் ராகுபகவானால் ஏற்படக்கூடிய களத்திர தோசம் நீங்கும். நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். 
7. ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஓங்கும். 
8. வீண்பயம் அகன்று தன்பலம் கூடும். 
9. நரம்பு சம்பந்தமான கோளாறுகள் அகலும். 
இவருக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேடம். பூசை செய்ய உகந்த நாள் சனிக்கிழமை. 

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை - 641046 கோயம்புத்தூர் மாவட்டம் சுமார் 837 படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. 
                                      
வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது.

 ஆடிப்பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது. பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, "பாம்பு வைத்தியர்' என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, ""உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!'' என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில்ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார்.பக்தர்கள் இவரை, "மருதமலை மாமணி' என்றுசெல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

 பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக நம்பிக்கை. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள். மன நிம்மதி வேண்டுபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர், இனிப்பான நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

அர்த்தஜாம பூஜை விசேஷம் : 

மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போதுஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் "ஏழாம்படை வீடாக' கருதப்படுகிறது. 

பாம்பாட்டி சித்தர் சன்னதி :

 மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடிவைத்துள்ளார். அருகில் சிவலிங்கம், நாகர் இருக்கிறது. முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது.

 பாம்பாட்டிச்சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள்.

 "பாம்பு' முருகன் : 

பாம்பாட்டிச்சித்தர் சன்னதியிலுள்ளபாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச்சித்தருக்கு முருகன் காட்சி தந்தார். இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளது. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன்தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது விசேஷம்.

மருதாச்சல மூர்த்தி : 

மருத மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகன், "மருதாச்சலமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.

 மருதமரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் "மருது சுனை'. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 

ஆதி முருகன்:

புராதனமான சிவன் கோயில்களில் சிவன், சுயம்புலிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார். இவரது சன்னதி "ஆதி மூலஸ்தானம்' எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் இவருக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். 

பஞ்ச விருட்ச விநாயகர் :

அரச மரத்தின் அடியில் விநாயகர் இருப்பார். இத்தலத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்க அதன் அடியில் விநாயகர் இருக்கிறார். இவரை, "பஞ்சவிருட்சவிநாயகர்' என்று அழைக்கிறார்கள். அருகில் முருகப்பெருமான், மயில் மீது அமர்ந்து, கையில் வேலுடன் காட்சி தருகிறார். 

சோமாஸ்கந்த தலம்:

சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, சோமாஸ்கந்த அமைப்பு என்பர். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில்தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் சன்னதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை சன்னதியும் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள முருகன் சிகிவாகனர் (மயிலை வாகனமாக உடையவர்), "சேனானி' (படைத்தளபதி) என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம். 

தோஷம் நீக்கும் விபூதி பிரசாதம்:
 பாம்பாட்டிச்சித்தருக்கு ஆடம்பர அலங்காரம் செய்யப்படுவதில்லை. விபூதிக்காப்பு செய்து, காவியுடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். மனிதர்கள்ஆடம்பரம் இல்லாமல், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. 

தம்பிக்கு உகந்த விநாயகர்: 

மருதமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவதுவிசேஷம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, "தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். 

மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். மலைக்கோயிலுக்கு படி வழியாகச் செல்லும் பக்தர்கள் மட்டுமே இவரை வணங்கிச் செல்கிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள், இவரைக் கவனிக்காமல் சென்று விடுகிறார்கள். வாகனத்தில் வந்தாலும், அடிவாரத்திலுள்ள இவரை வணங்கியபிறகே செல்ல வேண்டும் என்பது நியதி.  

குதிரையில் வந்த முருகன் : 

முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோயில்களில் அவரை விழாக்காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முற்காலத்தில் இக்கோயிலில் சில திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோயிலில் சேர்க்கச் செய்தார். அதோடு அவர்களை பாறையாக மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை "குதிரைக்குளம்பு கல்' என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.

Monday, November 27, 2023

சாளக்ராமத்தின் வழிபாட்டின் நன்மை

*சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?*

சாளக்கிராமத்தை யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம்.

ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும்.  
சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். இது நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகிறது. இது நத்தைக்கூடு, சங்கு என பல வடிவங்களில் கிடைக்கிறது.

இது புனிதமான நதிக்கரையில் கிடைப்பதால் தோஷம் இல்லாதது. யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம். ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும்.

இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோயில்கள், மடங்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.

லட்சுமி நாராயண சாளக்கிராமம், லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம், ரகுநாத சாளக்கிராமம், வாமன சாளக்கிராமம், ஸ்ரீதர சாளக்கிராமம், தாமோதர சாளக்கிராமம், ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம், ரணராக சாளக்கிராமம், மதுசூதன சாளக்கிராமம், சுதர்சன சாளக்கிராமம்... இப்படி 68 வகையான சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் அருள்செய்வதாக ஒரு நம்பிக்கை.

சாளக்கிராமத்தை இருமுறை வழிபட வேண்டும். சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது.

அழகுக்காக ஷோ கேஸில் வைக்கக்கூடியது அல்ல. பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வலம்புரி சங்கை போல் மிகவும் அரிய பலன்களை தரக்கூடியது இந்த சாளக்கிராமம்.

*சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் பலன்*

1. சாளக்கிராம பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்  
கொலை செய்தவனின் பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள்கழன்றுஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும்முக்திஉண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் இப்பூஜையினை செய்பவர்கள்  
விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை பக்தியுடன் நமஸ்கரித்தவன் தேவனாகிறான்...!  
அவன் சாதாரண மனிதன் அல்லன்...!

9. சாளக்கிராமம் பகவான் இருக்குமிடம்.  
சர்வ பாபங்களையும்  
நாசம் செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட சாளக்கிராம பூஜையினால் பரகதி அடைகிறார்கள். பக்தியோடு செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில் ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட ஹரி சாளக்கிராமத்தில் மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் பூதானமும் செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,  
ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன்  
ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட சாளக்கிராம பூஜையினால் முக்திபெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சாளக்கிராம பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்துகொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும்,  
சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.  
21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..! சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம் 
உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவாநிலை கிடைத்துவிடும்.

*நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.*
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

அனைத்து அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள்.

அனைத்து அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள்.
அனைத்து அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள்
காயத்திரி 
(சகல காரியங்கள் வெற்றி அடைய)
ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ் ப்ரசோதயாத்
துர்கை 
(ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத்

அன்னபூரணி தேவி 
(நித்தியான்ன பிராப்திக்காக)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே மஹேஸ்வர்யைஹ் தீமஹி தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

சிவதூதி 
ஓம் சிவதூத்யை ச வித்மஹே சிவங்கர்யைச தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

பாலா 
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே காமேஸ்வரீ ச தீமஹி தன்னோ பாலா ப்ரசோதயாத்

அம்ருதேஸ்வரி தேவி 
(ஆயுள் ஆரோக்கியம் பெற)
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

வாக்பலா 
(பேச்சுபிழை சரியாக)
ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே வாக்பவேஸ்வரீ தீமஹி தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
சர்வமங்கள (நல் பயணத்திற்கு)
ஓம் சர்வமங்களை வித்மஹே மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத்

கன்னிகா பரமேஸ்வரி 
(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
ஓம் பாலாரூபிணி வித்மஹே பரமேஸ்வரி தீமஹி தன்னோ கந்யா ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே கந்யாரூபிணீ தீமஹி தன்னோ கந்யா ப்ரசோதயாத்

காமேச்வரி 
(மங்களம் உண்டாக)
ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே காமேச்வர்யை தீமஹி தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே நித்யக்லிந்நாய தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

காமதேனு 
(கேட்டது கிடைக்க)
ஓம் சுபகாமாயை வித்மஹே காமதாத்ரை ச தீமஹி தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்

காளிகா தேவி 
(கேட்ட வரம் கிடைக்க)
ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரசோதயாத்

வாராஹி 
(நினைத்தது நிறைவேற)
ஓம் வராஹமுகி வித்மஹே ஆந்த்ராஸனீ தீமஹி தன்னோ யமுனா ப்ரசோதயாத்

குலசுந்தரி 
(சொத்து, கவுரவம் அடைய)
ஓம் குலசுந்தர்யை வித்மஹே காமேஸ்வர்யை தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

சந்தோஷி மாதா 
(திருமண தடை நீங்க)
ஓம் ருபாதேவீ ச வித்மஹே சக்திரூபிணி தீமஹி தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

கவுமாரி தேவி 
(சக்தி பெற)
ஓம் சிகித்வஜாயை வித்மஹே வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்

கவுரிதேவி 
(தியானம் சித்தி அடைய)
ஓம் சுவபாகாயை வித்மஹே காம மாளினை தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ரபத்ன்யை ச தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் கணாம்பிகாய வித்மஹே மஹாதபாய தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் சௌபாக்யதாயை வித்மஹே காம மாலாய தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் ஸோஹம்ச வித்மஹே பரமஹம்ஸாய தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

கங்காதேவி 
(ஞாபக சக்தி பெற)
ஓம் த்ரிபதகாமினி வித்மஹே ருத்ரபத்ன்யை ச தீமஹி தன்னோ கங்கா ப்ரசோதயாத்

சாமுண்டி 
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னோ காளி ப்ரசோதயாத்
ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே சக்ரதாரிணி தீமஹி தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

சித்ரா 
(கலைகளில் தேர்ச்சி பெற)
ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே மஹாநித்யை ச தீமஹி தன்னோ நித்ய ப்ர சோதயாத்
சின்னமஸ்தா (எதிரிகளை வெல்ல)
ஓம் வைரேசான்யை ச வித்மஹே சின்னமஸ்தாயை ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

சண்டீஸ்வரி 
(நவகிரக தோஷங்கள் விலக)
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே மஹாதேவீ ச தீமஹி தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே கௌரீஸித்தாய தீமஹி தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஜெயதுர்கா 
(வெற்றி கிடைக்க)
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே துர்காயை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் நாராண்யை வித்மஹே துர்காயை ச தீமஹி தன்னோ கேணீ ப்ரசோதயாத்
ஜானகிதேவி (கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)
ஓம் ஜனகனாயை வித்மஹே ராமபிரியாய தீமஹி தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஓம் அயோநிஜாயை வித்மஹே ராமபத்ன்யை ச தீமஹி தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ராமபத்ன்யை ச தீமஹி தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஜ்வாலாமாலினி 
(பகைவரை வெல்ல)
1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே மஹா ஜ்வாலாயை தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத்

ஜேஷ்டலக்ஷ்மி 
(மந்திர சக்தி பெற)
ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே நீலஜேஷ்டாயை தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

துவரிதா 
ஓம் த்வரிதாயை வித்மஹே மஹாநித்யாய தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்

தாராதேவி 
ஓம் தாராயை ச வித்மஹே மனோக்ரஹாயை தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்

திரிபுரசுந்தரி 
ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்
ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே க்ளீம் காமேஸ்வரீ தீமஹி சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்
மஹா திரிபுரசுந்தரி 
ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்

தனலட்சுமி 
(செல்வம் பெற)
ஓம் தம்தனதாயை வித்மஹே ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்
பராசக்தி (வாக்குவன்மை பெற)
ஓம் தசவனாய வித்மஹே ஜ்வாமாலாயை ச தீமஹி தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்
பிரணவதேவி 
ஓம் ஓம்காராய வித்மஹே பவதாராய தீமஹி தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்

தரா 
ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே சர்வ சித்தை ச தீமஹி தன்னோ தரா ப்ரசோதயாத்

தூமாவதி 
ஓம் தூமாவத்யை ச வித்மஹே சம்ஹாரின்யை ச தீமஹி தன்னோ தூம ப்ரசோதயாத்
நீலபதாகை (தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)
ஓம் நீலபதாகை வித்மஹே மஹாநித்யாயை தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத்

நீளா 
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே ஸ்ரீ பூ சகை ச தீமஹி தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீ(மகாலட்சுமி) 
ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீதேவி 
ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே மஹாசக்த்யை தீமஹி தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்

தேவி பிராஹ்மணி 
ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே மஹாசக்த்யை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்

சூலினிதேவி 
(தீய சக்திகளிலிருந்து காக்க)
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே மஹாசூலினி தீமஹி தன்னோ துர்கா ப்ரசோதயாத்
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே மஹாசூலினி தீமஹி தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்

சரஸ்வதி 
(கல்வியும், விவேகமும் பெருக)
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வ ஸித்தீச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே காமராஜாய தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத்
லட்சுமி (சகல செல்வங்களையும் அடைய) 
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி ஸ்வஹ் காலகம் தீமஹி தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபந்தாய ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் பூ ஸக்யைச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் அமிர்தவாசினி வித்மஹே பத்மலோசனீ தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

சப்தமாத்ருகா தேவி 
ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்

பகமாளினி 
(சுக பிரசவத்திற்காக)
ஓம் பகமாளிணி வித்மஹே சர்வ வசங்கர்யை தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத்
பகளாதேவி 
ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்
ஓம் குலகுமாரை வித்மஹே பீதாம்பராயை தீமஹி தன்னோ பகளா ப்ரசோதயாத்
பகளாமுகி 
ஓம் பகளாமுக்யை ச வித்மஹே சதம்பின்யை ச தீமஹி தன்னோ தேவ ப்ரசோதயாத்
ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே மஹாஸ்தம்பிணி தீமஹி தன்னோ பகளா ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே பகளாமுகி தீமஹி தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்
பாரதிதேவி
ஓம் நாகாராயை ச வித்மஹே மஹா வித்யாயை தீமஹி தன்னோ பாரதீ ப்ரசோதயாத்

புவனேஸ்வரி தேவி 
ஓம் நாராயந்யை வித்மஹே புவநேஸ்வர்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்
பூமா தேவி 
(வீடு, நிலம் வாங்க)
ஓம் தநுர்தராயை ச வித்மஹே சர்வஸித்தைச தீமஹி தன்னோ தராஹ் ப்ரசோதயாத்

பைரவி தேவி 
ஓம் த்ரிபுராதேவி வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ பைரவீ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராயை வித்மஹே பைரவைச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்
மகாமாரி 
(அம்மை வியாதி குணமடைய)
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத்
மஹா வஜ்ரேஸ்வரி 
(பிரச்சனைகளில் தீர்வு காண)
ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே வஜ்ரநித்யாய தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத்

மகாசக்தி 
(மந்திர சக்தியில் வல்லமை பெற)
ஓம் தபோமயை வித்மஹே காமத்ருஷ்ணை ச தீமஹி தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத்

மஹிஷாஸுரமர்தினி 
(பகைவர்கள் சரணாகதி அடைய)
ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே துர்காதேவ்யை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மகேஸ்வரி 
(சர்ப தோஷம் நீங்க)
ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே மிருக ஹஸ்தாய தீமஹி தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

மாதங்கி 
(அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)
ஓம் மாதங்க்யை வித்மஹே உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

மாத்ரு (கா) 
ஓம் சர்வசக்திஸ்ச வித்மஹே ஸப்தரூப ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மீனாக்ஷி 
(சகல சவுபாக்கயங்களை பெற)
ஓம் உன்னித்ரியை ச வித்மஹே சுந்தபப்ரியாயை ச தீமஹி தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத்
முக்தீஸ்வரி
ஓம் த்ரிபுரதேவி வித்மஹே முக்தீஸ்வரி ச தீமஹி தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

யமுனா 
ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே தீர்தவாசினி தீமஹி தன்னோ யமுனா ப்ரசோதயாத்

ராதா 
(அனுகிரகஹம் பெற)
ஓம் விருஷபானுஜாயை வித்மஹே கிருஷ்ணப்ரியாயை தீமஹி தன்னோ ராதிகா ப்ரசோதயாத்
ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே விஸ்வஜனன்யை தீமஹி தன்னோ சக்தி ப்ரசோதயாத்

வாணி 
(கலைகளில் தேர்ச்சி பெற)
ஓம் நாதமயை ச வித்மஹே வீணாதராயை தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத்
வாசவி
ஓம் வாசவ்யை ச வித்மஹே குசுமபுத்ர்யை ச தீமஹி தன்னோ கண்யகா ப்ரசோதயாத்
விஜயா (வழக்குகளில் வெற்றி பெற)
ஓம் விஜயதேவ்யை வித்மஹே மஹாநித்யாய தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத்

வைஷ்ணவி தேவி 
(திருமண தடை நீங்க)
ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே சக்ர ஹஸ்தாய தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்
ஓம் சக்ரதாரிணீ வித்மஹே வைஷ்ணவீதேவீ தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

சியாமளா 
(சகல சவுபாக்யங்களும் கிடைக்க)
ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே க்லீம் காமேஸ்வரி தீமஹி தன்னோ சியாமா ப்ரசோதயாத்
ஓம் மாதங்கேஸ்வரி வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்

துர்கா தேவி 
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
வனதுர்கா 
ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே மகாசக்த்யை தீமஹி தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத்
ஆஸூரி துர்கா 
ஓம் மகா காம்பீர்யை வித்மஹே சத்ரு பக்ஷிண்யை தீமஹி தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்

திருஷ்டி துர்கா 
ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத்

ஜாதவேதா துர்கா 
ஓம் ஜாதவேதாயை வித்மஹே வந்தி ரூபாயை தீமஹி தன்னோ ஜாதவேதோ ப்ரசோதயாத்

வனதுர்கா 
ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி தன்னோ வந துர்கா ப்ரசோதயாத்

சந்தான துர்கா 
ஓம் காத்யாயண்யை வித்மஹே கர்பரக்ஷிண்யை தீமஹி தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்
சபரி துர்கா
ஓம் காத்யாயண்யை வித்மஹே கால ராத்ர்யை தீமஹி தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்
சாந்தி துர்கா
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ஜயவரதாயை தீமஹி தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்.

மருத்துவர்களை அடிக்கடி சந்திப்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு.

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.கணேஷ் பால்ராஜ்,,,,,.

Thursday, November 23, 2023

அந்த காலம் அந்த காலம்தான்

*#அந்தகாலம்*.

ஊசி போடாத *Doctor* ..
சில்லறை கேட்காத *Conductor* ..
சிரிக்கும் *police* ...
முறைக்கும் *காதலி* ..
உப்பு தொட்ட *மாங்கா* ..
மொட்டமாடி *தூக்கம்* ..
திருப்தியான ஏப்பம்...
Notebookன் *கடைசிப்பக்கம்* ...
தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....
பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..
இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..
இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...
கோபம் மறந்த *அப்பா* ..
சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..
அக்கறை காட்டும் *அண்ணன்* ..
அதட்டும் *அக்கா* ...
மாட்டி விடாத *தங்கை* ..
சமையல் பழகும் *மனைவி* ...
சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..
வழிவிடும் *ஆட்டோ* காரர்...
*High beam* போடாத லாரி ஓட்டுனர்..
அரை மூடி *தேங்கா* ..
12மணி *குல்பி* ..
sunday *சாலை* ...
மரத்தடி *அரட்டை* ...
தூங்க விடாத *குறட்டை* ...
புது நோட் *வாசம்* ..
மார்கழி *மாசம்* ..
ஜன்னல் *இருக்கை* ..
கோவில் *தெப்பகுளம்* ..
Exhibition *அப்பளம்* ..
முறைப்பெண்ணின் *சீராட்டு* ...
எதிரியின் *பாராட்டு* ..
தோசைக்கல் *சத்தம்* ..
எதிர்பாராத *முத்தம்* ...
பிஞ்சு *பாதம்* ..
எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,
வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,
சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,
முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,
*மிதி வண்டி* வைத்திருந்தோம்.,
*எம்ஜிஆர், கலைஞர்* உயிரோடு இருந்தார்கள்.
*ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.
கபில் தேவின் *கிரிக்கெட்* .
குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.
*வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,
சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,*
தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,
மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,
மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,
பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,
கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...
பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...
கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...
7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..
பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...
எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது
வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்
*சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்
ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்
பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,
சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,
தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,
இதை எழுதும் *நான்* ..
படிக்கும் *நீங்கள்* ..
இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,

நம் சுகங்களும
நம்பிக்கைகளும் தான்....

இன்று எல்லாமே
உள்ளங்கையில் கைபேசி வந்து
எல்லாமே கனவாக..... காணாமல் போய் விட்டது....!!

நினைத்து, நினைத்து....
ரசித்து, ரசித்து ....
கண்களில் ஆனந்தக்கண்ணீர்,
ஆஹா அற்புதமான நாட்கள் ...
திரும்பாத நாட்களாகி போயின..🙏🙏🙏

Wednesday, November 22, 2023

வேண்டும் வரத்தை வாராகி இடமிருந்து எப்படி பெற வேண்டும் என்பதே இந்த பதிவு.

வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?

ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவது. எதிலும் சக்தியே பிரகாசிக்கிறது. அந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள் என்று நினைவில் வைத்து அம்பாளை லயம் செய்து கொள்வதே உபாசனை என்பதாகும். அவ்வாறு தாங்கள் வாராஹியை உபாசித்தால் சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். ஆதிசக்தியாகிய பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள். ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பு : 1. வாராஹிக்கு ஏற்ற மாலை - செவ்வரளி மாலை.
2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் - செந்தாமரை, வெண் தாமரை.
3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு - தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.
4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் - மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.
5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் - வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.
6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் - கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன. வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் : 1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி. இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஜபத்திற்கான மந்திரங்கள் மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம். ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி? மந்திரத்தை குரு மூலம் தீட்சை பெற்று ஜபிக்க வேண்டும் அப்படி ஜெபித்தால் மட்டுமே மந்திரம் சக்தி பெரும், இல்லை என்றால் தேவதையின் சாபம் பெருவோம், மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். 1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும். 2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே. 3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம். 4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம். 5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம். 6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும். 7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது. 8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது. 9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது. 10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை. 11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது. 12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன. ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும். பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது. சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது. கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.
ஸ்ரீ வாராஹி அஷ்டகம்

தேவி க்ரோடமுகி ந்வதங்ரி கமலத்வத்
த்வானு ரக்தாத்மனே
மஹ்மம் த்ருஹயதயோ மஹேசி மனஸா
காயேன வாசா நர ;
தஸ்யாசு த்வதயோக்ர நிஷ்டுரஹலா
கதா ப்ரபூதவ்யதா
பர்யஸ்யன் மனஸோ பவந்து வபுஷ ;
ப்ராணா ப்ராயாணோன் முகா
தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரஷீனே
துஷ்கர்மணி
ப்ராதுர்பூத ந்ருசபர்ஸ பாவமலினாம்
வ்ருத்திம் விதத்தே மயி யோ தேஹி புவணேத தீய ஹ்ருதாயாந்
நிர்கத்வரைர் லோஹிதை
ஸத்ய; பூரயஸே கராப்ஐ சஷகம்
வாஞசாபலைர் மாமயி
சண்டோத்துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய
ப்ரோத்பின்ன ரக்தச்சுடா
ஹாலாபான மதாட்ட ஹாஸநித
தா கோப ப்ரதா போந் கடே,
மாதர் மத் பரிபந்தினா மபஹ்ருதை ;
ப்ரானண ஸத் வதங்ரித்வயம்
த்யானோட்டாமர வைபவோதய வசாத்
ஸந்தர்ப்பயாமி க்ஷணா ;
ச்யாமாம் தாமரஸானனாங்ரி நயனாம்
ஸோமார்த்த ஷடாம் ஜகத்
த்ராண வ்யக்ர ஹலாயு தோக்ர முஸலாம்
ஸந்த்ராஸ முத்ராவதீம் யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோ
ஹேவரா ஹானனாம்
பாவை; ஸந்தத்தே சதப் க்ஷணம்பி
ப்ராணாந்தி தேஷம் த்விஷ
விஸ்வாஸ்தீஸ்வர வல்லபே ஜெயஸேயா
த்வம் நித்யந்த்ரி யாத்மிகா
பூதானாம் புருஷாயு ÷ஷாவதிகரீ
பகா ப்ரதா கர்மணாம்
தர்மயாசே பவதீம் கிமப்யவிதகம்
யோமத் விரோ நீஜன ;
தஸ்யாயர்ம வாஞ் சிதாவதி பவேத்
மாதஸ்தவை வாக்ஞயா
மாதஸ்ஸம்யகு பாஸிதும் ஜடமதி ஸ்திவாம்
நைவ சக்னோம் யஹம்
யத்யப்யன் வித தேசிகாங்ரி கமலானுக் ரோச
பாத் ஸங்கின ; வாராஹி வ்யத்மான மானஸ களத்
ஸெனக்யம் ஹதாசாபலம்
ஸிதத்தம் தமபாக்ரு தாத்ய வஸிதம் ப்ராப்தா
கிலோத் பாதகம்
கிரந்தத் பந்துஜனம் களங்கித குலம் கண்ட
வரணோத்யத் க்ரியிம்
பச்யாமி ப்ரதிக்ஷமா பதிதம் ப்ராந்தம்
லுடந்தம் முஹு
வாராஹி த்வம்சேஷ ஜந்து ஹீபுன ;
ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே
சக்திவ்யாபத சராசர கலுய தஸ்த்வாமேத
தப்யர்த்தயே
த்வத பாதாம்புஜ ஸங்கினோமம ஸக்ருத்
பாபம சிகீர் ஷத்தியே
தோஷாம் மாகுரு சங்கரப் பிரியதமே
தேஹாந்தரா வஸ்திதம்

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம் தேவ்யுவாச : 1. நமோஸ்து தேவி வாராஹி ஐயைகாரஸ்வரூபிணி !
ஜபித்வா பூமிரூபேண நமோ பகவதிப்பரியே!! 2. ஜயக்ரோ டாஸ்து வாராஹி தேவித் வாம்ச நமாம்யஹம்!
ஜய வாராஹிவிஷ் வேஸிமுக்ய வாராஹிதே நம!! 3. ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாநாம் வாக் ஸ்தம்ப நகரீநம!
நமஸ் ஸ்தம்பிநி ஸ்தம்பே தவாம் ஜ்ரும்பே ஜரும்பிணி தே நம!! 4. முக்யவாரா ஹிவந்தே த்வாம் அந்தே அந்திநி தே நம!
ருந்தே ருந்தேநிவந்தே த்வாம் நமோ தேவீது மோஹி நீ !! 5. ஸ்வபக்தானாம் ஹி ஸர்வேஷாம் ஸர்வகாம ப்ரதே நம!
பாஹ்வோ ஸ்தம்பகரீம் வந்தே சித்தஸ் தம்பிந தே நம!! 6. சக்ஷúஸ் ஸ்தம்பிநி த்வாம் முக்யஸ்தம்பி தே நமோ நம
ஜகத்ஸ்தம்பிநி வந்தே த்வாம் ஜீஹ்வாஸ்தம்பந காரிணி 7. ஸ்தம்பனம் குரு ஸத்ரூணாம் குரு மே ஸத்ருநாஷநம்
ஸீக்ரம் வஸ்யம் ச குரு யோக்நௌ வாசாத்மகேநம 8. டசதுஷ்டயரூபே த்வாம் ஸரணம் ஸர்வதா பஜே
ஹோமாத்ம மகே பட்ரூபேண ஜய ஆத்யாநநேஸிவே 9. தேஹி மே ஸகலான் காமான் வாராஹீ ஜெகதீஸ்வரி
நமஸ்துப்யம், நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம 10. இதம் ஆத்யாநநா ஸ்தோத்ரம் ஸர்வ பாபவிநாஸநம்
படேத்ய ஸர்வதா பக்த்யா பாத கைர் முச்யதே ததா 11. லபந்தே ச ஸத்ரவோ நாஸம் து ; கரோகாபம்ருத்யவ
மஹதாயுஷ்யமாப் நோதி அல க்ஷ் மீர் நாஸமாப்நுயாத் 12. ந பயம் வித்ய தே க்வாபி ஸ்ர்வதா விஜயோ பவேத்
அபீஷ்டார்தான் லபேத் ஸர்வான் ஸரீரீ நாத்ர ஸம்ஸய (இதி ஸ்ரீருத்ர யாமளே உமா மஹேஸ்வர ஸம்வாதே
ஆதிவாராஹீ ஸ்தோத்ரம் ஸமாப்தம்)

முருகன் அருள் சக்தியை வழங்கிய பரதேசி சித்தர்.

08..#_பரதேசி_சித்தர்..!!!

இளம் துறவியான பரதேசி சித்தருக்கு, முருகப்பெருமான் அருள் சக்தியை வழங்கினார். பரதேசி சித்தர், ஒருவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்தால் தீராத நோய் கூட தீர்ந்து விடும்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். வள்ளியை மணமுடித்து முருகப்பெருமான் இங்கு அமர்ந்தக் காரணத்தினால், இந்த ஊர் ‘வள்ளியூர்’ என்றானதாக பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. இவ்வூரில் குடவரைக் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் மிக அதிகம். இந்த முருகப்பெருமானுக்கு திருப்பணிகள் செய்து, கோவில் வெளிச் சுற்று பிரகாரத்திலேயே சமாதி அடைந்த இரண்டு சித்தர்களின் அருள், இந்த ஆலயத்திற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம். 

 

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நான்குநேரி அருகே உள்ள செண்பகராமபுதூரில் பிறந்தவர் வேலாண்டி சுவாமிகள். சிறு வயது முதலே முருகப்பெருமான் மீது அதிகப் பற்று கொண்டவர். அதுவும் வள்ளியூர் முருகன் மீது அலாதி பிரியம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் இவர் கோவிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவில் வெளியில் நின்றே முருகப்பெருமானைத் தரிசிப்பார். 

தன்னுடைய 13 வயதில் வள்ளியூர் முருகப்பெருமான் ஆலயத்தில் நடந்த கார்த்திகை தெப்பத் திருவிழாவுக்கு வேலாண்டி சுவாமிகள் வந்தார். அதன் பின் கோவில் வாசலிலேயே தங்கி விட்டார். பெற்றோர்கள் அவரை ஊருக்கு அழைத்தும், செல்ல மறுத்து விட்டார். முருகனுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். வேலாண்டி சுவாமிகள் தினமும் சரவணப் பொய்கையில் நீராடுவார். முருகனைச் சுற்றிக் கிரிவலம் வருவார். வடக்கு மற்றும் கீழ்வாசல் வெளியே நின்று முருகனை வணங்குவார். அதன் பின் கீழ்வாசலிலேயே நிரந்தரமாக தங்கி பரதேசிக் கோலம் பூண்டார். மக்களிடம் யாசகம் செய்து அதைக் கொண்டு முருகன் கோவிலில் திருப்பணி செய்தார். 

 

அந்தக் காலத்தில் சாதிப் பெயரைக் கூறி அழைப்பது சர்வ சாதாரணமாக வழக்கில் இருந்தது. எனவே மக்கள் அவரைப் பரதேசி என்று அழைத்தனர். வேலாண்டி சுவாமிக்கு அந்த பரதேசி என்ற பெயரே நிலைத்தது. மனிதர்களுக் குத்தான் சாதி, மதம் எல்லாம். இறைவன் அதற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு மனித மனங்களும், பக்தியும் தான் முக்கியம்.

இளம் துறவியான பரதேசி சித்தருக்கு, முருகப்பெருமான் அருள் சக்தியை வழங்கினார். பரதேசி சித்தர், ஒருவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்தால் தீராத நோய் கூட தீர்ந்து விடும். நோய் தீர்ந்த மக்கள் நெல், வாழை போன்ற விளை பொருட்களை அவருக்குக் காணிக்கையாக வழங்கினர். கருப்பட்டி, காசு என அவர் முன் கொண்டு வந்து கொட்டினர். பொருட்களைப் பணமாக்கி கோவிலுக்கு விளைநிலங்களை வாங்கினார். அழகப்பபுரம், கீக்குளம், பரதேசிபத்து, சாமியார் பத்து, தாழக்கடி, தெரிசனம் தோப்பு ஆகியக் கிராமங்களில் கோவிலுக்காக சுவாமிகள் வாங்கிய நிலங்கள் உள்ளன. கீக்குளத்தில் வீடு கட்டி பகலில் விவசாயம் செய்தார். அதில் கிடைக்கும் பொருளை கொண்டு மாலையில் முருகன் ஆலயத்தில் பணிவிடை செய்து வாழ்ந்தார்.

 

தான் பரதேசியாய் இருந்தாலும், சுவாமிகள் மாமன்னர் போன்று முருகனுக்கு தங்க அங்கித் தயார் செய்தார். அவருக்கு அதை அணிவித்து மகிழ்ந்தார். ஆலயத்துக்குள்ளே வராமல் அவர் கீழ் வாசலில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை மக்கள் வணங்கி, குழந்தைப்பேறு, வியாபாரம், தொழில்விருத்தி, நோய் நிவாரணம் ஆகியவைப் பெற்றனர். வாசலில் அமர்ந்தே தனது மனக்கண்ணால் கோவிலுக்குள் நடக்கும் அத்தனைத் திருவிழாக்களையும் காணுவார்.

ஒருநாள்.. மூலஸ்தானத்தில் தீப்பற்றி எரிகிறது என பரதேசி சித்தர் கூறவே, அனைவரும் ‘அது எப்படி மூலஸ்தானத்தில் தீப்பிடிக்கும்’ என ஆச்சரியத்துடன் கேட்டனர். உள்ளே சென்று பார்த்தால், சித்தர் சொன்னது போலவே தீ பிடிப்பதைக் கண்டனர். இந்த நிகழ்வுதான் பக்தர்கள் மத்தியில் அவருக்கு இருந்த சக்தியை உணர்த்தியது. அனைவரும் அவரை மகா சித்தர் என்று போற்றினர். அதன் பிறகு பரதேசி சித்தரின் திருப்பணிக்கு கூடுதலாக காணிக்கை சேர ஆரம்பித்தது.

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வடக்கு வாசல் அருகில் பக்தி மணம் பரப்ப ஒரு மடம் ஏற்படுத்தினார். அதன் பின் கோவிலைச் சுற்றி வர கிரிவலப்பாதையை உருவாக்கினார். கோவிலுக்கு தென்புறம் காணிக்கை வாங்கிப் பாதுகாக்க காணிக்கை மடமும் அமைத்துக் கொண்டார். எல்லா வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழாக் காலங்களிலும் காணிக்கை மடத்தில் வடக்கு பார்த்து தியானத்தில் அமர்ந்து இருப்பார். அப்போது அவருக்கு முருகப்பெருமானின் திருமணக்கோல காட்சி மனக்கண்ணில் கிடைத்துக்கொண்டே இருக்குமாம்.

 

பரதேசி சுவாமிகள் தனது இறுதி காலத்தை அறிந்தார். குறிப்பிட்ட காலத்தில் தான் சமாதி நிலை அடைவதாகவும், தன்னை சரவணப் பொய்கையின் தென் கிழக்கு மூலையில் சமாதி வைக்கவும் மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். அதன்படி பக்தர்கள் இவருக்கு சமாதி கோவில் அமைத்தனர். அதன் பிறகு அவரது அருட்கடாட்சம் வள்ளியூரை சுற்றி மலர ஆரம்பித்தது. இந்தத் துறவியின் அருள் தொடர்வதை அனுபவித்த மக்கள் அவர் சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்தனர்.

சமீபத்தில் ஆன்மிக அன்பர்கள் பிரசன்னம் பார்த்தபோது, பரதேசி சித்தரின் அருள் இந்தப் பகுதியில் நிலைத்திருப்பதாகவும், மாலை நேரத்தில் ஆலயத்தில் நடமாட்டம் அல்லாமல், கோவிலைச் சுற்றிய 9 மைல் தூரத்திற்கு அவர் இருப்பதாகவும் தெரியவந்தது.

பரதேசி சித்தர் பீட மகிமை வெளிப்பட இன்னொரு காரணம், தினமும் முருகன் கோவில் மயில் ஒன்று, இவரது பீடத்திற்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்வதைச் சொல்கிறார்கள். இந்த மடத்திற்கு வருபவர்கள், தங்களது பெயரைக் குறிப்பிடாமல், தங்களின் வேண்டுதலை மட்டும் ஒரு காகிதத்தில் எழுதி ஜீவ சமாதி பீடம் அல்லது காணிக்கை மடத்தில் சமர்ப்பித்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

Monday, November 20, 2023

20 வகை பிர தோஷங்கள் அதன் பலன்கள்.

*20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்*

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

*1.தினசரி பிரதோஷம்*

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். 

*2. பட்சப் பிரதோஷம்*

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும். 

*3. மாசப் பிரதோஷம்*

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும். 

*4. நட்சத்திரப் பிரதோஷம்*
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும். 

*5. பூரண பிரதோஷம்*

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள். 

*6. திவ்யப் பிரதோஷம்*

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும். 

*7. தீபப் பிரதோஷம்*
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும். 

*8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்*

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். 

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

*9. மகா பிரதோஷம்*

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும். 

*10. உத்தம மகா பிரதோஷம்*

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும். 

*11. ஏகாட்சர பிரதோஷம்*

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும். 

*12. அர்த்தநாரி பிரதோஷம்*

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள். 

*13. திரிகரண பிரதோஷம்*

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. 

*14. பிரம்மப் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம். 

*15. அட்சரப் பிரதோஷம்*

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர். 

*16. கந்தப் பிரதோஷம்*

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும். 

*17. சட்ஜ பிரபா பிரதோஷம்*

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம். 

*18. அஷ்ட திக் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள். 

*19.  நவக்கிரகப் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும். 

*20. துத்தப் பிரதோஷம்*

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

சனிக்கிழமை ஏன் புனிதமானது அந்தப் புனிதத் தன்மையை அது எப்படி பெற்றது

அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்!

விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள!!

நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும்
போக்க வல்ல மருந்து 
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.

64- பரஸ்மை மங்களாய நமஹ (Parasmai Mangalaaya namaha)

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? 

சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு?

இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.

சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள்.

சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். 

சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.

கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும்
யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். 

கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள்.

அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே.

உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். 

அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள்.

நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார்.

“அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சனீஸ்வரன் கேட்டார்.

அதற்கு நாரதர், “ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள்.

அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு.

பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன்,
ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான்.

பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள்.

அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்.

ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் 
காத்த நாளைத் தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள்.

அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார்.

இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். 

நாளை இங்கே ஹோலிப் பண்டிகை.

தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும்
தீக்கு இரையாக்கிப் பழி
தீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள்.

சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம்.

அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!” என்றார். 

அடுத்தநாள் ஹோலிப் பண்டிகை.

கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக 
அடுக்கி வைத்து,
நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து
ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். 

தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும்
உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான்.

சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள். 

கண்ணன் தீ மூட்டினான்.
அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள். 

நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார்.

அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன், “சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய்.

உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும்.

அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும்.

28வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன்.

சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.

அதனால்தான் ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும்,
அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன.

இவ்வாறு அமங்களமானவனாகக் கருதப்பட்ட சனீஸ்வரனுக்கே மங்களத்தைத் தந்தமையால்,
திருமால் ‘பரம் மங்களம்’ 
என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 64வது திருநாமமாக விளங்குகின்றது.

“பரஸ்மை மங்களாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைத்து மங்களங்களையும் திருமால் அருளுவார்.

அதுமட்டுமின்றி சனிக்கிழமையன்று திருமலையப்பனைத் தரிசித்த பலனும் அவர்களுக்குக் கிட்டும்.

வீட்டில் விளக்கு ஏற்றும் வழிமுறைகள்.



வீட்டில் விளக்கு ஏற்றும் வழிமுறைகள்


1) முதலில் காமாட்சி விளக்கு ஏற்ற வேண்டும்.அதன் பிறகு அதன் பக்கத்தில் உள்ள இரண்டு குத்து விளக்குகளை ஏற்ற வேண்டும்.
 விளக்கு ஏற்றும் பொழுது குடும்பம்
 தன தான்யம் சகல சம்பத்தும்  சகல சௌபாக்கியம் பவம்.என்று கூறவும். 

2) இரண்டு மண் விளக்கு சித்தர்களூக்கு ஏற்றவேண்டும்.

3) இரண்டு மண் விளக்கு குலதெய்வத்திற்கு ஏற்ற வேண்டும்.

4) இரண்டு விளக்கு குருவிற்கு ஏற்ற வேண்டும்.

5) ஒரு சிறிய மண் பானையில் நவதானியங்கள் போட்டு வைக்க வேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒருமுறை நவதானியங்களை மாற்ற வேண்டும்.

6) மற்றும் ஒரு மண் பானையில் சாதாரண கல் உப்பு நிரப்பி வைக்க வேண்டும் முன்னமே சொன்னபடி அதற்கு உப்பு பூஜை செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் வேறு உப்பு கூடாது.


7) தினமும் தீர்த்தத்தை மாற்றி  உபயோகப்படுத்துங்கள் தீர்த்தத்தை குடிக்கும் போது ஜல தீர்த்தம் புண்ய தீர்த்தம் பவம் என்று கூறி குடிக்க வேண்டும்.

 சாப்பிட்ட பிறகு கையை தலையில் தேய்க்க கூடாது அதற்கு பதிலாக கையை பின்னோக்கி தலை பின்னர் அனுப்ப வேண்டும் அல்லது வலது கையும் வலது பக்கம்  தடவி விட வேண்டும்.

Friday, November 17, 2023

27 நட்சத்திரக்காரர்களுக்கு பொருத்தமான அபிஷேக பொருட்கள்.

27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்!

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்

1. அசுவினி - சுகந்த தைலம்
2. பரணி - மாவுப்பொடி
3. கார்த்திகை - நெல்லிப்பொடி
4. ரோகிணி - மஞ்சள்பொடி
5. மிருகசீரிடம் - திரவியப்பொடி
6. திருவாதிரை - பஞ்சகவ்யம்
7. புனர்பூசம் - பஞ்சாமிர்தம்
8. பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை)
9. ஆயில்யம் - பால்
10. மகம் - தயிர்
11. பூரம் - நெய்
12. உத்திரம் - சர்க்கரை
13. அஸ்தம் - தேன்
14. சித்திரை - கரும்புச்சாறு
15. சுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
16. விசாகம் - இளநீர்
17. அனுஷம் - அன்னம்
18. கேட்டை - விபூதி
19. மூலம் - சந்தனம்
20. பூராடம் - வில்வம்
21. உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
22. திருவோணம் - கொம்பு தீர்த்தம்
23. அவிட்டம் - சங்காபிஷேகம்
24. சதயம் - பன்னீர்
25. பூரட்டாதி - சொர்ணாபிஷேகம்
26. உத்திரட்டாதி - வெள்ளி
27. ரேவதி - ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்

12 ராசி மந்திரம்

மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
MESHAM – OM AIM KLEEM SOUM
ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
RISHABAM – OM AIM KLEEM SHRIM
மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்
MITHUNAM – OM KLEEM AIM SOUM
கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
KADAGAM – OM AIM KLEEM SHRIM
சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
SIMMAM – OM HREEM SHREEM SOUM
கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
KANNI – OM SHREEM AIM SOUM
துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
THULAM – OM HREEM KLEEM SHREEM
விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
VRICCIGAM – OM AIM KLEEM SOUM
தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
THANUSU – OM HREEM KLEEM SOUM
மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
MAGARAM – OM AIM KLEEM HREEM SHREEM SOUM
கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
KUMBAM – OM HREEM AIM KLEEM SHREEM
மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
MEENAM – OM HREEM AIM KLEEM SHREEM
இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.

குல தெய்வத்திற்கு அவசியம் பொங்கல் வைக்க வேண்டும்.

*குலதெய்வத்துக்கு அவசியம் பொங்கல் வையுங்கள்*
    
உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். 

இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குலதெய்வத்தை வணங்குவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. 

மற்ற கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். 

ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.

உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். 

இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

குலதெய்வம் படத்தை வாங்கி வந்து உங்கள் விட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ள வேண்டும். 

உங்களது மணிப் பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். 

வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்கிட வேண்டும். 

ஒருவருக்குக் குலதெய்வம் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பத்திரகாளி அம்மன் என வைத்துக் கொள்வோம்.

திருச்செந்தூரைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று வைத்துக் கொள்ளலாம். 

அவர் திருச்செந்தூரில் உள்ள தனது குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்துவிட்டால், அது குலதெய்வத்தைப் போய்ச் சேராது. 

ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால் இந்த நிலை. 

எனவே, தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும்.

Tuesday, November 14, 2023

கோயில் கர்ப்பகிரகம் புனிதத்தன்மை என்ன?

கர்ப்பகிரகத்தில் ஏன் எல்லோரும் நுழைய முடியவில்லை அதை கட்டிய கொத்தனார் ஏன் நுழையமுடியவில்லை, செதுக்கிய சிற்பி ஏன் நுழையமுடியவில்லை , சிற்பிக்கு சோறுபோட்ட அவன் மனைவி ஏன் நுழையமுடியவில்லை என கிளம்பிவிட்டார்கள் ஒரு சிலர்

கிளப்பிவிட்டது இப்போதைய அறமில்லா அமைச்சர், தன் அதிகாரம் மீறி எல்லை 

ஆலயத்து கர்பகிரகம் தனித்து காக்கபட வேண்டும் என்பது அக்காலத்து விதி, அது இந்துமதத்துக்கு மட்டுமல்ல யூத மதத்திலும் இன்னும் சில பண்டைய மதங்களிலும் இருந்தது

அதற்கு காரணம் தீண்டாமை அல்ல, அல்லவே அல்ல‌

ஞானிகளுக்கான ஞானி சாலமோன் அமைத்த ஆலயத்திலே முக்கியமான பீடத்திற்கு குரு தவிர யாரும் நுழைய அனுமதியில்லை என்கின்றது சான்றுகள், ஆம் அவன் கட்டிய ஆலயத்து கர்ப்பகிரஹத்துக்குள் அவனே நுழையவில்லை

ராஜராஜ சோழனும் அப்படியே தன் ஆலயத்தில் தள்ளி நின்றான், ஏன் அப்படி விதி வைத்தார்கள்?

முதல் விஷயம் பாதுகாப்பு, சிலைகளும் அவற்றின் நகைகளும் இன்னு விலைமதிக்கபடா பொக்கிஷங்களும் அந்த சந்ததியில்தான் இருந்தன, கருவறை தெய்வமே எல்லா வளங்களுக்கும் சாட்சியாய் நின்றது

எல்லோரையும் உள்ளே விட்டால் அதை காப்பதும் சிரமம், இன்னொன்று அழகிய சிலைகளை சேதபடுத்தும் ஆபத்தும் உண்டு

முக்கியமான விஷயம் பாதுகாப்பு என்பதால் தள்ளி இருந்து மக்களை தரிசிக்க வைத்தார்கள்

கருவறையும் அதன் நகையும் பொன்னும் வைரமும் ஒரு நாட்டின் செழுமையின் அடையாளமாய் இருந்தது
இன்று டிரம்போ மோடியோ வருகின்றார்கள் என்றால் ஓடிசென்று நெருங்கமுடியுமா? தள்ளி நின்றுதான் தரிசிக்கமுடியும்

மானிடருக்கே இப்படி என்றால் அன்று தெய்வத்தின் சிலைகளுக்கு எப்படி எல்லாம் பாதுகாப்பு வழங்கியிருப்பார்கள்

அடுத்த விஷயம் எல்லா மக்களையும் கருவறையில் அனுமதித்தால் மூல தெய்வத்தின் பாதம் முதல் முகம் வரை தொட்டு வணங்குவார்கள், அந்த தெய்வத்தின் மேல்தான் பக்தி அதிகம் ஓங்கும்

எல்லோரும் தொட்டு அல்லது எல்லோரும் அபிஷேகமும் அலங்காரம் செய்தால் என்னாகும்?

சிலையின் ஆயுள்தான் என்னாகும்? எல்லோரும் தொட்டால் சேதமாகாதா? இதனால் தள்ளி இருந்து வணங்க சொன்னார்கள்

இன்னொன்று ஆகம விதி

சைவ உணவும் கட்டுபாடான விரதமும் இன்னும் மந்திர உச்சாடனைகளில் தேர்ச்சியும் முழுநேரமும் இறைவனை பற்றி சிந்தித்து அந்த பாடங்களில் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்றவர்களே அங்கு அனுமதிக்கபட்டனர்

முதல் காரணம் அவர்கள் வாழ்வினை முழுநேரமும் கடவுளுக்காக அர்பணித்தவர்கள், கடவுளின் பணியாளர்கள்
மனசாட்சியும் தெய்வபக்தியும் நிறைந்தவர்கள்

அவர்களால் ஆலய பீடமோ சிலையோ நகையோ எதுவும் ஆகாது எனும் நம்பிக்கையில் அனுமதிக்கபட்டாரகள்
ஆம் இறைவனுக்கு வாழ்வினை முழுக்க அர்பணித்தவர்களே செல்லலாம் என்பதுதான் பண்டைய மதங்களின் விதி, அதன் தொடர்ச்சியான இந்துமதத்தின் விதியும் கூட‌

ஆலயத்தையும் வழிபாட்டையும் தவிர ஏதுமறியா குருக்கள் அங்கு அனுமதிக்கபட்டனர்

காரணம் கர்பகிரகத்து அமைப்பு முதல் தன்மை வரை சிலையின் பராமரிப்பு வரை அவர்களுக்குத்தான் தெரியும்

சும்மா நேரம் போகவில்லை என்றாலோ இல்லை நாளில் 10 நிமிடம் கடவளை வணங்க அல்லது புலம்ப வருபவர்களை கர்பகிரகத்தில் விட என்ன அவசியம் உண்டு?

மனமும் சிந்தனையும் உடலும் எல்லாமும் ஆலயத்தில் பின்னி பிணைந்த மானிடர்களே குருக்கள் என மகா தூய்மையான சந்நிதானத்தில் அனுமதிக்கபட்டார்கள்

அதிலும் வழிபாட்டு நேரம் மட்டும் செல்லமுடியுமே தவிர அமரவவோ அங்கு ஓய்வெடுக்கவோ அனுமதி இல்லை
இன்னும் சிலர் சொல்வார்கள் சமஸ்கிருதம் ஏன்?

அங்குதான் இருக்கின்றது ரகசியம்

இந்நாடு அன்றே மொழியால் பிரிந்தாலும் மதத்தால் ஒன்றாயிருந்தது

அன்றைய பாரதத்திலும் பாரதத்துக்கு வெளியிலேயும் இந்து ஆலயம் இருந்தன மொழிவேறு
ஒரு இந்து எந்த ஆலயத்துக்கு சென்றாலும் புரிந்து வழிபடும் மொழியாக இணைப்பு மொழியாக சமஸ்கிருதம் இருந்தது

இன்று இஸ்லாமியர் தொழுகைக்கும் அழைப்புக்கும் அரேபிய மொழி உலகளாவிய நிலையில் இருக்கின்றதல்லவா?

கிறிஸ்தவருக்கு ஆங்கிலம் உண்டல்லவா?

அப்படி இந்து ஆலயங்களை இணைத்த மொழி சமஸ்கிருதம், அதுதான் உண்மை, அதுதான் சத்தியம்
கவனியுங்கள்

அந்த ஆலயத்தை கட்ட சொல்லி பொன்னும் பொருளும் கொடுத்து வழிபாட்டு மானியமும் கொடுத்த அரசன் உள்ளே செல்ல முடியாது

அவனோ அவனின் குடும்பமோ கர்ப்பகிரகத்தினுள் நுழைய முடியாது

அரசனின் பலம் வாய்ந்த தளபதிகளும் நுழைய முடியாது

அதாவது அந்த சமூகம் அப்படி கட்டுபட்டு நின்றது, கடவுளுக்காக வாழ்வோர் மட்டும் உள்ளே சென்றால் போதும் மன்னனே ஆயினும் வெளியில் நிற்க என வகுத்தது

மன்னனும் அதை ஏற்று மனமார பின்பற்றினான்

ஆம் ஆலயத்தில் ஆண்டான் அடிமை பார்ப்பான் சூத்திரன் வைசிகன் எனும் பேதத்தை யாரும் கண்டதில்லை
ஆலயத்துள் நுழைய எல்லோருக்கும் அனுமதி இருந்தது, இந்த மதுரை வைக்கம் போன்ற ஆலயங்களில் இருந்த சர்ச்சை சில காலமே. அதுவும் வெள்ளையன் வந்து செய்த குழப்பங்களின் பின்பே

அப்பொழுதும் மற்ற ஆலயங்களில் எல்லோரும் செல்லும் அளவுதான் நிலமை இருந்தது, அங்கெல்லாம் சிக்கல் இல்லை

இறந்த ஆடுமாடுகளை சுமப்போர், வெட்டியான் போன்ற சிலரால் நோய்பரப்பும் ஆபத்து இருப்பதால் சிலரை பொதுஇடங்களில் அக்கால சமூகம் அனுமதிக்கவில்லை

ஆலயமும் பொதுவிடம் என்பதால் நோய்தடுப்புக்காக சில தொழில் செய்வோரை அனுமதிக்கவில்லை

அது சாதிவிரோதம் அல்ல, பைரவர் கபாலி மாவிரதர் போன்ற சைவ அடியார்கள் கூட ஆலயத்துனுள் அனுமதிக்கபடவில்லை, அவர்களை கண்டும் இந்து சமூகம் தள்ளி நின்றுதான் வணங்கிற்று

மற்றபடி ஆலயத்துள் யாரும் செல்லலாம் ஆனால் மகா முக்கியமான கர்ப்பகிரகத்தில் கடவுளுக்கு அர்பணிக்கபட்டோரும் மகா நம்பிக்கைக்கு உகந்தோரும் பந்த பாசம் அறுத்தோரும் மட்டும் செல்லலாம் எனும் விதி இருந்தது

குருக்கள் செல்வாரே அன்றி குருக்களின் மனைவியும் மக்களும் செல்லமுடியுமா?

பார்ப்பான் என்பதுதான் கர்ப்பகிரகத்தில் நுழையும் தகுதி என்றால் பிராமண பெண்களும் குழந்தைகளும் செல்லலாமே? சென்றார்களா?

இல்லை ஒரு காலமும் இல்லை

பாதுகாப்புக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் அன்றே ஏற்படுத்தபட்ட விஷயங்களை இன்றளவும் பின்பற்றி வருகின்றது தூய்மையான இந்துமதம்

கர்ப்பகிரகம் பார்ப்பனருக்கு மட்டுமான இடம் அல்ல, கடவுளுக்காக அர்ப்பணிக்கபட்ட மற்ற சாதியின வழிபாடு நடத்தும் எத்தனையோ ஆலயங்கள் இங்கு உண்டு

கத்தோலிக்க கிறிஸ்தவ பீடங்களிலும் குருக்கள் தவிர யாரும் வழிபாடு நடத்தமுடியாது, பெண்களுக்கு பீடத்தில் வழிபாடு நடத்த அனுமதி இன்றும் இல்லை

பீடத்தை அடுத்த அந்த நற்கருணை பெட்டியினை குருவானவர் தவிர யாரும் தொடக்கூடாது, திறக்க கூடாது
அவர்கள் காக்கும் புனிதம் அப்படி

இன்றும் புனிதமான மெக்காவின் கபாவில் அரசகுடும்பம் தவிர யாரும் செல்லமுடியாது

எல்லோரையும் அனுமதித்தால் அந்த மகா புண்ணிய இடத்தை பராமரிப்பது கடினம் என்கின்றது சவுதி அரச குடும்பம்

அட வேளாங்கண்ணி கோவிலிலே மூல விக்கிரகத்தை யாரும் தொடமுடியாது

பீடத்துக்குள்ளே பக்தர்கள் செல்லமுடியாது, காரணம் அந்த காணகிடைக்கா சொரூபத்துக்கான பாதுகாப்பு
இதுதான் இந்து ஆலயங்களிலும் நடக்கின்றது, அது தீண்டாமையாம்

ஆம் தனித்துவமும் புனிதமுனான விஷயங்களை எல்லோருக்கும் பொதுவாக தூரத்தில் வைப்பதுதான் சரி
அனுமதிக்கபட்ட சிலரை மட்டும் வைத்து வழிபடுவதுதான் சால சிறந்தது

அதில் மந்திர உச்சாடனை,சிலையினை உருவேற்றுதல் என சில விஷயங்கள் உண்டு என நம்புபவர்கள் நம்பட்டும்

நம்பாதோர் அதில் இருக்கும் பாதுகாப்பு இன்னபிற விஷயங்களை நம்பினாலோ போதும்

ஒரு மருத்துவருடன் நோயாளி கைகுலுக்கினால் அடுத்த நோயாளி வருமுன் மருத்துவர் கைகளை பலமுறை டெட்டால் போட்டு கழுவுகின்றார் மருத்துவர்

ஏன் நோய் பரவிவிடுமாம், ஆம் கொரோனா காலத்தில் இது தெளிவாய் விளங்கும்

எல்லோரையும் கர்பகிரகத்தில் விட்டு சொரூபத்தை தொட்டு வணங்க சொன்னால், ஒவ்வொரு முறையும் சிலையின் பாதத்தை கழுவுவது நடக்கும் காரியமா?

இதனால்தான் தள்ளி நின்று வணங்க சொன்னார்கள் அன்றைய இந்துக்கள்

ஆலயங்களை கழுவி விடுவதும் மிக சுத்தமாக பார்த்துகொள்வதும் இந்த தத்துவமன்றி வேறல்ல‌
அதில் சூத்திரன் அது இது தீட்டு என சொல்ல ஒன்றுமில்லை இன்றைய சுத்தத்தின் அவசியத்தை அன்றே சொன்னது இந்துமதம்

குருவானவர் பூஜை செய்யும் பொழுது மணி அடிக்கின்றார்களே ஏன்?

அந்த ஓசை கேட்கும் பொழுதுஎல்லோர் கண்ணும் கர்ப்பகிரகம் நோக்கி திரும்ப வேண்டும், அந்த தெய்வத்தை எல்லோரும் ஒன்றாய் தொழ வேண்டும்

அரசன் முதல் ஆண்டிவரை அன்று மணியோசை எழுப்பும் பொழுது தள்ளி நின்று வணங்கினார்கள்
மாறாக நீங்களே சென்று வணங்கிவிட்டு வாருங்கள் என அனுப்பினால் கூட்டம் என்னாகும்? கருவறை என்னாகும்?

இதெல்லாம் அன்றே திட்டமிட்டு உருவாக்கபட்ட நுட்பமான விஷயங்கள்

வைர நகையினை ஒருவர் வைத்திருந்தால் அதை பொத்தி பொத்தி பாதுகாப்பாரா இல்லை? எல்லோரும் வந்து பாருங்கள் என எல்லோர் கையிலும் கொடுப்பாரா?

வைர கண்காட்சியிலே அது பாதுகாப்பாக தள்ளிதான் வைக்கபட்டிருக்கும்

உயர்ந்த மதிப்புமிக்க பொருட்களுக்கான இடம் அப்படியானது, மகா மகா தூய்மையான கற்பகிரகமும் அப்படியே

ஆழ சிந்தித்தால் அதிலுள்ள உண்மை விளங்கும்
புனிதமான விஷயங்களில் சாணி அடிக்க வேண்டாம், திருப்பி 
அடிக்கபடும்
 
அங்கு பிறப்பால் எதுவும் வருவதில்லை தனக்கு பின் மகனும் பேரனும் கர்ப்பகிரகத்தில் வந்து தட்சனை பிச்சை வாங்க வேண்டும் என எந்த பிராமணனும் நினைப்பதில்லை

மாறாக திராவிட கட்சி தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் தலமை பதவி பிறப்பால் நிர்ணயிக்கபடுகின்றது

 என் அப்பனுக்கு பின் எனக்கு, எனக்கு பின் என்மகனுக்கு அவனுக்கு பின் என் பேரனுக்கு என பிறப்பால் வரும் உரிமையினை நிலைநாட்டுகின்றார்கள்

மாட்டார்கள்

ஆலயங்களும் அவற்றின் அமைப்புகளும் நுட்பமான நிர்வாகம், பக்தி, இயங்குமுறை , பாதுகாப்பு, உடல்நலம் இன்னும் ஏகபட்ட விஷயங்களை உள்ளடக்கியவை

பெண்களுக்கு கர்பகிரகத்தில் அனுமதியில்லை என்பதை விட நோக்க வேண்டிய விஷயம் அவர்கள் மந்திரங்களை உச்சரிக்க கூட அனுமதியில்லை

காரணம் மந்திரங்கள் உடலை சூடாக்க கூடியவை அது பெண்களின் கர்ப்பையினை பாதிக்கும் என்பதால் அனுமதி இல்லை

இதே அனுமதிதான் கருவறையிலும் மறுக்கபட்டது, மாத விலக்கான நாள் மட்டுமல்ல சூடு நிறைந்த கருவறை மந்திர உச்சாடனைகளுடன் சேர்ந்தால் பெண்ணின் கர்ப்பபை பாதிக்கபடும்

இதனாலே அவளுக்கு விலக்கு அளித்தது இந்துமதம்

கர்ப்பகிரகம் செல்ல அவளுக்கு அனுமதியில்லை தவிர, பூச்சூடி பட்டு உடுத்தி தேர்போல் வர அவளை அனுமதித்தது, பாடல் பாடவும் ஆடவும் அவளுக்கு தடை இல்லை

சில மதங்களை போல் முக்காடு இட்டு, முழுக்க மூடி புண்ணாக்கு மூட்டைபோல் வர சொல்லவில்லை இந்துமதம், அது பெண்களை பெண்ணாக கொண்டாடியது

ஆக ஒரு காலத்தில் இருந்த மிக பெரும் அறிவான சமூகத்தால் ஏற்படுத்தபட்டவை, அறிவும் ஆழ்ந்த கவனமும் இருந்தால் அது புரியும், புரிந்தால் கை எடுத்து வணங்க தோன்றும்

சில விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம்,  முதலில் கற்பகிரகம் நுழைய வேண்டும் என்பார்கள், பின் தொட வேண்டும் என்பார்கள் மெல்ல ஆலயத்தில் மீன்குழம்பும் கருவாட்டு பொறியலும் சமைக்க அனுமதிக்க வேண்டும் என்பார்கள், ஒவ்வொன்றாய் சொல்லி ஆலயத்தை மீன் சந்தையாக ஆக்க நினைப்பார்கள்

அவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் அசைன்மென்ட் இதுதான், அதனால் இப்படி ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்

இவ்வளவு சொல்வார்கள், சரி பூசாரி மகன் பூசாரி என கற்பகிரகத்தில் நுழைவதில்லை ஆனால் தலைவன் மகன் அடுத்த முதல்வராவார், அவருக்கு பின் அவர் மகனும் அவர் மகனும் முதல்வராவார்களே, பிறப்பால் ஏற்ற தாழ்வு எங்கே உண்டு என கேளுங்கள்

நடிகனுக்கு பின் அவர் மகன் நடிகனாய் வந்து சம்பாதிக்கலாம் இன்னொருவன் வந்தால் வளரவிடாமல் அடிப்பார்கள், அவனவன் போராடி வரும் இடத்தை நடிகன் மகன் எளிதாக வரமுடிகின்றதே எப்படி பிறப்பால் ஏற்றம் எங்கே இருக்கின்றது என கேளுங்கள்

பதிலே வராது

ஒவ்வொரு இந்துவும் விழித்தெழுந்து தன்னால் முடிந்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நேரமிது, அமைச்சர் சேகர் பாபு இந்துஆலய நிர்வாகியே தவிர ஆகம விதிகளை, இந்து சம்பிரதாய சாஸ்திரங்களை தொட்டுபார்க்கவோ அதில் விளையாடி பார்க்கவோ அவருக்கு உரிமையுமில்லை தகுதியுமில்லை

அகத்தியர் சொன்ன மரணத்தைப் பற்றிய ரகசியம்.

#குருவேதுணை

 #அகத்தியர் -மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்

வணக்கம்  

        ஒரு ஜீவன் உடலைவிட்டு பிரிந்த பிறகு 12 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும் என்ற #நியதிஇருக்கிறது.
                   பொதுவாக இதை பலவிதமாக கூறலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமாக வழக்கம் இருக்கிறது.

                   இந்த வழக்கத்தை என்னால் மீற முடியவில்லை என்பவரை விட்டுவிடலாம். ஒரு குடும்பத்தில் ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் அதனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் #மனோரீதியாக கடுமையான உளைச்சல் அடைகிறார்கள் என்றால் அந்த மனம் ஆறுதல் பெரும் அளவிற்கு கால அவகாசத்தைக் கொடுப்பது தவறல்ல.

             அவ்வாறு  இல்லாமல் வயது அதிகமாகி ஒரு ஆத்மா பிரிந்து  பெரிய அளவிலே அந்த குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லையென்றால் #வழக்கம் போல் அவர்கள் இறை சார்ந்த கடமைகள் செய்யலாம்.

                ஆலயம் செல்லக்கூடாது. அங்கு செல்லக்கூடாது இங்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் எதற்காக  என்றால் ஒரு குடும்பம் ஒருவனை மிகவும் #இளம் வயதில் இழந்து விட்டால் அந்தக் குடும்பம் அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறும். வேதனைப்படும்.
அதிலிருந்து அந்த குடும்ப உறுப்பினர்கள் மாறுவதற்கு சில காலங்கள் #அவகாசம் வேண்டும்.

         அதுவரை அந்த குடும்ப உறுப்பினர்கள் #இயல்பு #வாழ்விற்கு வர இயலாது என்பதற்காகத்தான் இது போன்ற சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.
இது மனித ரீதியானது.

       ஆத்மா என்பது நபலர் கூறுவது போல படிப்படியாக இத்தனை தினங்கள், அத்தனை தினங்கள் என்பதெல்லாம் முழுக்க, முழுக்க எல்லா ஆத்மாக்களுக்கும் பொருந்தாது.
இவையும் வினைப்பயனுக்கேற்ப மாறும் அதாவது உடலை விட்டு பிரிந்த
 #மறுகணமே மறுபிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்கள் உண்டு.

  பல #வருடங்கள் கழித்து மறு பிறவியெடுக்கூடிய ஆத்மாக்களும் உண்டு.

        #அடுத்த #கணமே இறையோடு இரண்டற கலக்கின்ற ஆத்மாக்களும் உண்டு.

           இறந்தவுடன் #தேவர்களாக, #தேவதைகளாக மாறுகின்ற ஆத்மாக்களும் உண்டு.
பாவங்கள் அதிகமாகவும், புண்ணியங்கள் குறைவாகவும் செய்தவர்கள்,  நிறைவேறாத ஆசையில் இறந்தவர்கள் பெரும்பாலும் அந்த உடலையும் அந்த இல்லத்தையும் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.

        அதிலும் சிலபேர் உடலை விட்டு பிரிவதுதான் மரணம் என்கிற நிகழ்வு.
இந்த நிகழ்வு தனக்கு #நிகழ்ந்ததையே #அறியாமல் குழப்பத்தோடு அலைவார்கள்.

          இந்த குழப்பத்தை நீக்கி அந்த ஆத்மாவை நல்வழிப்படுத்தத்தான் இறை வைத்துள்ள சடங்குகள்.. இறந்தவர்களை எரிக்க வேண்டும், அடக்கம் ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும்:

         #வியாச #முனிவர்தான் இறப்பவர்களை எரிக்கும் சட்டத்தை கொண்டு வருகின்றார். ஒரு இறக்கும் சடலம் #நீதி #படி #வாழாததால் அது புதைத்த ஒரு குறிப்பிட்ட அளவுகோளில் உள்ள இடத்தை அது அசுத்த படுத்தும். ஆதலால் இறந்த உடலை #எரிக்க #வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருகின்றார்கள்.

மேலும் இறந்த உடலில் முதல் 2 மதங்களில் தோல்கள் தேயும். பின்னர் சதை மறையும். பின்னர் எலும்பு தேய ஆரம்பிக்கும். கடைசியில் உள்ளது நரம்பு. நம் உடலிலுள்ள நரம்பின் நீளம் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். அது அத்தனையும் கரைய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று #மெய்ஞானிகளின் கணக்கு. அப்படி அது அழியும் வரை இறந்த அந்த உயிருக்கும் #உபாதை என்றே,அதனை எரிக்க சட்டம் எடுத்து வைத்தது.

           அப்படி நரம்பு அழிந்த பின் 
அதற்கு "அலகை" (பிசாசு) தேகம் கொடுக்கபெற்று பின்னர் நரகில் தள்ளப்படும்.

#சொர்கமும் #நரகமும் #இங்கேயே

           மரணத்தின் வேதனையை குறிப்பிடும் பொழுது ,ஒருவனை ஒரு மரத்தில் கட்டி எல்லா அவயவங்களையும் #கட்டி போட்டு வாய்க்கு #பூட்டு போட்டு விட்டு,சுற்றி #தீ #வைத்து எரித்தால் என்ன வேதனை இருக்குமோ அதனை விட 70,000 மடங்கு அதிகம் இருக்கும் என்று வேதம் குறிப்பிடுகின்றது.இதையே
 மரணம்=மாரணம்=மா+ரணம்.
மனித உயிர் 6 உயிர்களின் கலப்பு,இதை 7 வது உயிராகிய "ஆவல்" என்னும் உயிரால் கட்டப்பட்டு இந்த மனித தேகம் எடுக்கின்றது.

       எரிக்கும் பொழுது இந்த ஆவல் என்னும் உயிர் பிரிந்து அந்த 6 உயிரும் கலைந்து விடும். ஆதலால் அவர்களுக்கு வேதனை கிடையாது. இந்த 6 உயிர் சேருவதற்கு எத்தனனயோ பிறவி எடுத்துதான் அது கிட்டுமாம்.
எனவேதான் இறந்தவர்கள் எரிக்க வேண்டும். அடக்கம்(ஜீவசமாதி) ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்க பட்டது.
 
            நாடகம் முடிந்து நாம் சொந்த ஊருக்கு சல்லும்போது "நீ சம்பாதித்த பாவ புண்ணியம்" மட்டுமே கொண்டு செல்ல முடியும்..... 

ஓம் ஜெய் குருவே துணை.