Monday, November 27, 2023

சாளக்ராமத்தின் வழிபாட்டின் நன்மை

*சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?*

சாளக்கிராமத்தை யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம்.

ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும்.  
சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். இது நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகிறது. இது நத்தைக்கூடு, சங்கு என பல வடிவங்களில் கிடைக்கிறது.

இது புனிதமான நதிக்கரையில் கிடைப்பதால் தோஷம் இல்லாதது. யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம். ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும்.

இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோயில்கள், மடங்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.

லட்சுமி நாராயண சாளக்கிராமம், லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம், ரகுநாத சாளக்கிராமம், வாமன சாளக்கிராமம், ஸ்ரீதர சாளக்கிராமம், தாமோதர சாளக்கிராமம், ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம், ரணராக சாளக்கிராமம், மதுசூதன சாளக்கிராமம், சுதர்சன சாளக்கிராமம்... இப்படி 68 வகையான சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் அருள்செய்வதாக ஒரு நம்பிக்கை.

சாளக்கிராமத்தை இருமுறை வழிபட வேண்டும். சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது.

அழகுக்காக ஷோ கேஸில் வைக்கக்கூடியது அல்ல. பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வலம்புரி சங்கை போல் மிகவும் அரிய பலன்களை தரக்கூடியது இந்த சாளக்கிராமம்.

*சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் பலன்*

1. சாளக்கிராம பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்  
கொலை செய்தவனின் பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள்கழன்றுஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும்முக்திஉண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் இப்பூஜையினை செய்பவர்கள்  
விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை பக்தியுடன் நமஸ்கரித்தவன் தேவனாகிறான்...!  
அவன் சாதாரண மனிதன் அல்லன்...!

9. சாளக்கிராமம் பகவான் இருக்குமிடம்.  
சர்வ பாபங்களையும்  
நாசம் செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட சாளக்கிராம பூஜையினால் பரகதி அடைகிறார்கள். பக்தியோடு செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில் ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட ஹரி சாளக்கிராமத்தில் மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் பூதானமும் செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,  
ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன்  
ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட சாளக்கிராம பூஜையினால் முக்திபெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சாளக்கிராம பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்துகொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும்,  
சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.  
21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..! சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம் 
உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவாநிலை கிடைத்துவிடும்.

*நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.*
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment