*60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும்*
*என்னுடைய நண்பர் ஒருவரிடம்,*
*"உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் உங்களுக்குள் நீங்கள் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?"*
*என்று கேட்டேன்.* *அதற்கு அவர்*
*"உங்களுடைய கேள்விக்கான*
*பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்"*
*என்றார். அவ்வாறே அவர் ஒரு நீண்ட பட்டியலை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார். அவர் ஆங்கிலத்தில் அனுப்பியதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துக் கீழே தந்துள்ளேன்.*
*1) என் பெற்றோரிடம்,*
*என் உடன்பிறந்தோரிம்,*
*என் இணையரிடம்,*
*என் குழந்தைகளிடம்,*
*என் நண்பர்களிடம்*
*அன்பும், பாசமும், காதலும்*
*கொண்டிருந்த நான், இப்போது*
*என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.*
*2)இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.*
*3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம்,* *தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.* *பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை*அவருடைய* *குடும்பத்திற்கு ஏதாவது* *ஒருவகையில் உதவும்*
*என்று கருதுகிறேன்.*
*4)நாள் முழுதும் உழைக்கும்*
*டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறைக்*
*காசுக்காகக் காத்திராமல் திரும்புகிறேன்.* *இதனால்*
*அவர் முகத்தில் அரும்பும்*
*புன்னகையை விரும்புகிறேன்.*
*5) என்னைவிட முதியவர்கள்*
*ஒரு செய்தியை - நிகழ்வை -* *கதையைத் திரும்பத்திரும்பக் கூறினாலும்,* *'இதை நீங்கள்*
*முன்பே கூறிவிட்டீர்கள்' என்று முகத்தில் அடித்தால் போல் கூறாமல், முதல்முறை கூறுவதாகவே கருதிக் கேட்டுக்கொள்கிறேன்.*
*6) நமக்காக உழைக்கும் வீட்டு வேலையாட்களிடம் விவாதம் செய்வதையோ சத்தம் இடுவதையோ முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். நிறைவைவிட அமைதியே விலைமதிப்பற்றது (Peace is more precious than perfection) என்பதை உணர்ந்துகொண்டேன்.*
*7) ஒவ்வொருவரையும் அவர்களின் செயற்பாடுகளில் மனமுவந்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.*
*8) என் சட்டையில் காணப்படும் சிறுசிறு கறைகளையெல்லாம்* *இப்போது நான் பொருட்படுத்துவது இல்லை.* *தோற்றத்தைவிட ஆளுமையே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளேன்.* *(personality*
*speaks louder than appearances.)*
*9) என்னை மதிக்காதவர்களை விட்டு நானே விலகிச் சென்று விடுகிறேன்.*
*10) தேவையற்ற - முடிவற்ற தொடர் ஓட்டத்தில் என்னை முந்துபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. நான் பந்தயத்தில் இருப்பதாகவே என்னை நினைத்துக் கொள்வதில்லை.*
*11) இப்போதெல்லாம் நான் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படுவதோ அடிமையாவதோ இல்லை.*
*12)உறவுகளை முறித்துக்* *கொள்வதைவிட,என்னுடைய*
*egoவைக் கைவிடுவதே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்.*
*13) இந்த நாள்தான் வாழ்வின் இறுதிநாள் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறேன்.*
*14) எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையிலும், மற்றவர்களை* * *மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையிலும் முடிந்தவரை*
*என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளேன்.*
*15) மற்றவர்களைக் குறைசொல்வதையும்,* *புறங்கூறுவதையும்*
*முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன்.*
*16)என்னால் மற்றவர்களுக்குச்*
*சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை வாழ்ந்து வருகிறேன்.*
*17) தேவையின்றிப் பிறர் விஷயங்களில் தலையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன்.*
*18) யாரும் என்னை அணுகிக் கேட்டாலொழிய வலியச் சென்று ஆலோசனை வழங்குவதை நிறுத்தியுள்ளேன்.*
*19) என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிந்தவரை குறைத்துக்கொண்டுள்ளேன்.*
*20) அரசியல், ஆன்மீகம், மதம் தொடர்பான செய்திகளைப் பகிர்வதையோ, அவை தொடர்பாக மற்றவர்களிடம் விவாதிப்பதையோ முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டேன்.*
No comments:
Post a Comment