வீட்டில் விளக்கு ஏற்றும் வழிமுறைகள்
1) முதலில் காமாட்சி விளக்கு ஏற்ற வேண்டும்.அதன் பிறகு அதன் பக்கத்தில் உள்ள இரண்டு குத்து விளக்குகளை ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றும் பொழுது குடும்பம்
தன தான்யம் சகல சம்பத்தும் சகல சௌபாக்கியம் பவம்.என்று கூறவும்.
2) இரண்டு மண் விளக்கு சித்தர்களூக்கு ஏற்றவேண்டும்.
3) இரண்டு மண் விளக்கு குலதெய்வத்திற்கு ஏற்ற வேண்டும்.
4) இரண்டு விளக்கு குருவிற்கு ஏற்ற வேண்டும்.
5) ஒரு சிறிய மண் பானையில் நவதானியங்கள் போட்டு வைக்க வேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒருமுறை நவதானியங்களை மாற்ற வேண்டும்.
6) மற்றும் ஒரு மண் பானையில் சாதாரண கல் உப்பு நிரப்பி வைக்க வேண்டும் முன்னமே சொன்னபடி அதற்கு உப்பு பூஜை செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் வேறு உப்பு கூடாது.
7) தினமும் தீர்த்தத்தை மாற்றி உபயோகப்படுத்துங்கள் தீர்த்தத்தை குடிக்கும் போது ஜல தீர்த்தம் புண்ய தீர்த்தம் பவம் என்று கூறி குடிக்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகு கையை தலையில் தேய்க்க கூடாது அதற்கு பதிலாக கையை பின்னோக்கி தலை பின்னர் அனுப்ப வேண்டும் அல்லது வலது கையும் வலது பக்கம் தடவி விட வேண்டும்.
No comments:
Post a Comment