#குருவேதுணை
#அகத்தியர் -மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்
வணக்கம்
ஒரு ஜீவன் உடலைவிட்டு பிரிந்த பிறகு 12 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும் என்ற #நியதிஇருக்கிறது.
பொதுவாக இதை பலவிதமாக கூறலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமாக வழக்கம் இருக்கிறது.
இந்த வழக்கத்தை என்னால் மீற முடியவில்லை என்பவரை விட்டுவிடலாம். ஒரு குடும்பத்தில் ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் அதனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் #மனோரீதியாக கடுமையான உளைச்சல் அடைகிறார்கள் என்றால் அந்த மனம் ஆறுதல் பெரும் அளவிற்கு கால அவகாசத்தைக் கொடுப்பது தவறல்ல.
அவ்வாறு இல்லாமல் வயது அதிகமாகி ஒரு ஆத்மா பிரிந்து பெரிய அளவிலே அந்த குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லையென்றால் #வழக்கம் போல் அவர்கள் இறை சார்ந்த கடமைகள் செய்யலாம்.
ஆலயம் செல்லக்கூடாது. அங்கு செல்லக்கூடாது இங்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் எதற்காக என்றால் ஒரு குடும்பம் ஒருவனை மிகவும் #இளம் வயதில் இழந்து விட்டால் அந்தக் குடும்பம் அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறும். வேதனைப்படும்.
அதிலிருந்து அந்த குடும்ப உறுப்பினர்கள் மாறுவதற்கு சில காலங்கள் #அவகாசம் வேண்டும்.
அதுவரை அந்த குடும்ப உறுப்பினர்கள் #இயல்பு #வாழ்விற்கு வர இயலாது என்பதற்காகத்தான் இது போன்ற சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.
இது மனித ரீதியானது.
ஆத்மா என்பது நபலர் கூறுவது போல படிப்படியாக இத்தனை தினங்கள், அத்தனை தினங்கள் என்பதெல்லாம் முழுக்க, முழுக்க எல்லா ஆத்மாக்களுக்கும் பொருந்தாது.
இவையும் வினைப்பயனுக்கேற்ப மாறும் அதாவது உடலை விட்டு பிரிந்த
#மறுகணமே மறுபிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்கள் உண்டு.
பல #வருடங்கள் கழித்து மறு பிறவியெடுக்கூடிய ஆத்மாக்களும் உண்டு.
#அடுத்த #கணமே இறையோடு இரண்டற கலக்கின்ற ஆத்மாக்களும் உண்டு.
இறந்தவுடன் #தேவர்களாக, #தேவதைகளாக மாறுகின்ற ஆத்மாக்களும் உண்டு.
பாவங்கள் அதிகமாகவும், புண்ணியங்கள் குறைவாகவும் செய்தவர்கள், நிறைவேறாத ஆசையில் இறந்தவர்கள் பெரும்பாலும் அந்த உடலையும் அந்த இல்லத்தையும் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
அதிலும் சிலபேர் உடலை விட்டு பிரிவதுதான் மரணம் என்கிற நிகழ்வு.
இந்த நிகழ்வு தனக்கு #நிகழ்ந்ததையே #அறியாமல் குழப்பத்தோடு அலைவார்கள்.
இந்த குழப்பத்தை நீக்கி அந்த ஆத்மாவை நல்வழிப்படுத்தத்தான் இறை வைத்துள்ள சடங்குகள்.. இறந்தவர்களை எரிக்க வேண்டும், அடக்கம் ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும்:
#வியாச #முனிவர்தான் இறப்பவர்களை எரிக்கும் சட்டத்தை கொண்டு வருகின்றார். ஒரு இறக்கும் சடலம் #நீதி #படி #வாழாததால் அது புதைத்த ஒரு குறிப்பிட்ட அளவுகோளில் உள்ள இடத்தை அது அசுத்த படுத்தும். ஆதலால் இறந்த உடலை #எரிக்க #வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருகின்றார்கள்.
மேலும் இறந்த உடலில் முதல் 2 மதங்களில் தோல்கள் தேயும். பின்னர் சதை மறையும். பின்னர் எலும்பு தேய ஆரம்பிக்கும். கடைசியில் உள்ளது நரம்பு. நம் உடலிலுள்ள நரம்பின் நீளம் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். அது அத்தனையும் கரைய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று #மெய்ஞானிகளின் கணக்கு. அப்படி அது அழியும் வரை இறந்த அந்த உயிருக்கும் #உபாதை என்றே,அதனை எரிக்க சட்டம் எடுத்து வைத்தது.
அப்படி நரம்பு அழிந்த பின்
அதற்கு "அலகை" (பிசாசு) தேகம் கொடுக்கபெற்று பின்னர் நரகில் தள்ளப்படும்.
#சொர்கமும் #நரகமும் #இங்கேயே
மரணத்தின் வேதனையை குறிப்பிடும் பொழுது ,ஒருவனை ஒரு மரத்தில் கட்டி எல்லா அவயவங்களையும் #கட்டி போட்டு வாய்க்கு #பூட்டு போட்டு விட்டு,சுற்றி #தீ #வைத்து எரித்தால் என்ன வேதனை இருக்குமோ அதனை விட 70,000 மடங்கு அதிகம் இருக்கும் என்று வேதம் குறிப்பிடுகின்றது.இதையே
மரணம்=மாரணம்=மா+ரணம்.
மனித உயிர் 6 உயிர்களின் கலப்பு,இதை 7 வது உயிராகிய "ஆவல்" என்னும் உயிரால் கட்டப்பட்டு இந்த மனித தேகம் எடுக்கின்றது.
எரிக்கும் பொழுது இந்த ஆவல் என்னும் உயிர் பிரிந்து அந்த 6 உயிரும் கலைந்து விடும். ஆதலால் அவர்களுக்கு வேதனை கிடையாது. இந்த 6 உயிர் சேருவதற்கு எத்தனனயோ பிறவி எடுத்துதான் அது கிட்டுமாம்.
எனவேதான் இறந்தவர்கள் எரிக்க வேண்டும். அடக்கம்(ஜீவசமாதி) ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்க பட்டது.
நாடகம் முடிந்து நாம் சொந்த ஊருக்கு சல்லும்போது "நீ சம்பாதித்த பாவ புண்ணியம்" மட்டுமே கொண்டு செல்ல முடியும்.....
ஓம் ஜெய் குருவே துணை.
No comments:
Post a Comment