Tuesday, January 9, 2024

திக்காற்றவனுக்கு தெய்வமே துணை

பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?

கண்களை மூடிக்கொண்டு 
சற்று சிந்தித்து பாருங்கள்.

ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!

ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு.

இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.

ஒரேயடியாக உச்சிக்கு  போய் விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருக்கிறது என்று
பொருள்.

‘ஆண்டவனின் அவதாரங்களே விதியின் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.

தெய்வ புருஷன் ஸ்ரீ
ராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!

அதனால் வந்த வினைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!

சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாக
வில்லையே!

அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!

துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைகள் என்றும், அவற்றுக்காக்க் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் நம்மை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்கள்.

இந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.

ஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதிலை.

இந்து மத்த்தின் சாரமே உனது லௌகீக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது என்பதையே.

துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், நமக்கேன் வேதனை வரப்போகிறது?

அந்தச் சோதனையிலிருந்து நம்மை விடுவிக்கும் படி நாம் இறைவனை வேண்டிக்கொள்லாம்; காலம் கடந்தாவது அது நடந்து விடும்.

தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்
முட்டாள்களல்ல.

கஷ்டத்திலும் நேர்மையாக இரு.

நாம் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.
நம் வாழ் நாளிலேயே அதன் பலனைக்
காணலாம்.

தெய்வ நம்பிக்கை நம்மைக் கைவிடாது.

No comments:

Post a Comment