Sunday, January 21, 2024

குரு கடாட்சம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.

*🌹குரு கடாட்சம் கிடைக்க...  ; இந்த நாட்களில்*
*மட்டும் உங்கள் தீபங்களை சுத்தம் செய்யுங்கள்...!!🌹*

🌷🌷🌷

*எந்த திசையில் தீபம் ஏற்றலாம் ..?*
------------------------------------------------------------------------------
தீபவழிபாடு என்பது மன, உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என புராணங்கள் சொல்கிறது. தீபமானது வீட்டில் பூஜையறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. எல்லா செயல்களின் தொடக்கத்திலும் தீபம் ஏற்றப்பட்டே செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன.

*எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்?*
------------------------------------------------------------------------------
*கிழக்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

*தென்கிழக்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இட வேண்டும்.

*தெற்கு* : வீட்டில் தெற்குதிசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. இது மரண பயத்தை உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லாதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றினால் இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரும்.

*தென்மேற்கு* : இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் மற்றும் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

*மேற்கு* : இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லைகள் நீங்கும்.

*வடமேற்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர, சகோதரிகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.

*வடக்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தை பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

*வடகிழக்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குடும்பத்தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும், அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

*விளக்கை எப்போது சுத்தம் செய்ய வேண்டும்..?*
------------------------------------------------------------------------------
திங்கட்கிழமை நடு இரவு முதல் புதன்கிழமை நடு இரவு வரை குபேர தன தாட்சாயணி மற்றும் குககுரு தன தாட்சாயணியும் குடி கொண்டிருப்பதால், இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்வதால்;, இந்த சக்திகள் விலகி விடும். வெள்ளிக்கிழமையன்று சுத்தம் செய்வதால் குபேர சங்கநித யட்சணி விலகி விடும்.

ஆகையால் ஞாயிறு, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்தான் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். ஞாயிறு அன்று சுத்தம் செய்து விளக்கை ஏற்றினால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கை ஏற்றினால், குரு கடாட்சம் கிட்டும். சனிக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கை ஏற்றினால், வாகன விபத்துக்களில் இருந்து விடுபடலாம். நலமுடன், வாழ்க வளமுடன்!

 *ஸர்வம்_சிவார்ப்பணம் .*

➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️

No comments:

Post a Comment