அவமானங்களை வெல்லுவது எப்படி.??
அவமானம்.....அது பாவத்தை போக்கும் சன்மானம்.!!
வாழ்க்கையில் அவமானங்களை கடந்து வராமல் யாரும் இருந்து இருக்க முடியாது.
அவமானத்தால் வருத்ததில் இருப்பவர்களுக்கு சில motivation speech தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்து இருக்கும்.
அதை கேட்கும் பொழுது உங்கள் நரம்புகள் புடைத்து ஒரு புத்துணர்வு கிடைத்திருக்கும். தன்னம்பிக்கை கிடைத்து இருக்கும்.
யாரை பற்றியும் கவலை இல்லாமல் போகும். எல்லோரையும் வெறுப்பாக பார்ப்பீர்கள்.உங்கள் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கும். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஓடிக்கொண்டு இருப்பீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். அப்பொழுது நீங்கள் அவமானத்தை வென்றதாக உணர்வீர்கள்.
ஆனால் உண்மையில் அவமானங்கள் என்பது என்ன....
உங்கள் தகுதிக்கு ஒரு குறைவு ஏற்படுவதை நீங்கள் அவமானமாக எண்ணுகிறீர்கள்..
நான் ஒரு ஆண் என்ற கர்வம் இருக்கும் பொழுது, ஒரு பெண்ணுடைய பேச்சு உங்களுக்கு அவமானமாக தோன்றும்.
நான் ஒரு அதிகாரி என்று கர்வம் இருக்கும் பொழுது, ஒரு சராசரி மனிதனுடைய செயல் உங்களுக்கு அவமானமாக தோன்றும்.
நான் ஒரு குடும்பத் தலைவன் என்ற கர்வம் இருக்கும் பொழுது, குடும்பத்தார் செயல் உங்களுக்கு அவமானமாக தோன்றும்.
உங்களுக்கு என நீங்கள் ஒரு தகுதியை வைத்து உங்களை உயர்த்தி நினைக்கும் போது
அதற்கு ஒரு குறை ஏற்படும் போது
உங்களுக்கு அது அவமானமாக தோன்றுகிறது.
எப்பொழுதெல்லாம் நீங்கள் உங்களை உயர்வாக எண்ணி ஒரு தகுதியை வைத்துக் கொள்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் அதற்கு ஒரு இழுக்கு ஏற்பட்டு உங்கள் கர்வத்தை கடவுள் உடைப்பார்.
எளிமையாக வாழ்ந்தால் உங்களை நீங்கள் சாதாரணமாக எண்ணினால் உங்களை அந்த இறைவன் உயரத்தில் தூக்கி வைப்பார்.
நான் ஒரு ஆண் என்னால் ஒரு பெண்ணின் காலை தொட்டு செருப்பு போட்டுவிட முடியும்.
நான் ஒரு அதிகாரி என்னால் என் இடத்தை கூட்டி பெருக்க முடியும்.
நான் ஒரு குடும்பத் தலைவன் வீட்டில் சிறு குழந்தையின் கருத்தையும் கேட்டு குடும்பத்தை வழிநடத்த முடியும்.
என நீங்கள் உங்களை உயர்வாக எண்ணாமல் எளிமையாக வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கை முறை அவமானங்கள் என்பதற்கே இடமில்லை.
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பிச்சை எடுக்கும் நிலைமை எனக்கு வந்து விடக்கூடாது என்பதுதான் பெரும்பாலானோரின் கவலையாகவும் இருக்கும்.
எவ்வளவு மோசமான கிரக அமைப்பு இருந்தாலும் ஒருவர் பிச்சை எடுத்து சாப்பிடுவது அவர் துன்பத்தை குறைக்கும். பிச்சை எடுத்து சாப்பிடுவதை பரிகாரமாக கூட சொல்வது உண்டு. மகான்கள் ஞானிகள் எல்லோரும் பிச்சை எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். சீரடி சாய்பாபா கூட பிச்சை எடுத்து சாப்பிடுவார். அதற்கு ஒரு காரணமும் உண்டு.
ஆகவே இந்த உலகில் எதுவுமே குறைவான ஒன்றல்ல... அதனால் எதையுமே அவமானமாக கருதத் தேவையில்லை...
இப்பொழுது என்னை ஒருவர் திட்டி அவமானப்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்றால், என் பாவத்தை அவர் வாங்கி எனக்கு குறைத்துக்கொண்டு இருக்கிறார் என்று தான் அர்த்தமே தவிர....அதற்கு நான் வருந்துவதற்கோ கோபப்படுவதற்கோ ஏதுமில்லை....
எல்லாருமே பண்ணிய பாவங்களை போக்குவதற்கு தான் பூமியில் பிறந்து உள்ளோம். இதில் என்ன உயர்ந்தவன் தாழ்ந்தவன் வெற்றிகள் அவமானங்கள் எல்லாம்.
ஜெய் ஸ்ரீராம்.
No comments:
Post a Comment