*🅾️✳️பூஜையறை டிப்ஸ்!⛔️*
🔘 சுவாமி படங்களைத் துடைக்கும் தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்துத் துடைத்தால் படங்களை பூச்சி அரிக்காது.
🔘 பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை தம்ளரில் வைத்து கவிழ்த்து மூடிவையுங்கள் வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.
🔘 சுவாமிக்கு அகல் விளக்கோ, குத்து விளக்கோ ஏற்றும்போது எண்ணெய்யில் சிறிய கல் உப்பைப் போட்டுவிட்டால் விளக்கானது நன்கு சுடர்விட்டு பிரகாசமாக எரியும்.
🔘 அடிக்கடி சுவாமி படங்களை மெல்லியத் துணியால் துடைத்து வைக்கவும். வாரம் ஒரு முறையோ, மாதம் இருமுறையோ செய்தால் போதும்.
🔘 வெள்ளிக்கிழமைகளில் பூஜையறையில் இருக்கும் விளக்கு அதிக நேரம் எரிய வேண்டுமானால் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்து ஏற்ற வேண்டும்.
🔘 தீபம் ஏற்ற பஞ்சை சிக்கில்லாமல் சதுரமாகப் பிரித்து துடைப்பக் குச்சியை ஒரு சுற்று சுற்றினால் போதும். அதாவது குச்சியை பஞ்சின் நடுவில் வைத்து கையை தேய்த்தால் திரிபோல் நன்கு வரும். பின் குச்சியை அப்படியே உருவி வெளியே எடுத்தால விளக்குத்திரி தயார். குறைந்த பஞ்சில் நிறைய திரிகள் திரித்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment