Sunday, August 1, 2021

பிரேத சாபம் என்றால் என்ன? ஜாதக ரீதியாக எப்படி நம்மை பாதிக்கிறது?

பிரேத சாபம்..!

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கடைசி காரியம் என்று கூறப்படும் சிராத்த காரியங்கள் சரியாக செய்யவில்லை என்றாலோ, அகால மரணங்கள் என்று கூறபடும் விபத்து/தற்கொலை போன்றவற்றால் இறந்து போய் எள்ளு தர்ப்பணம் கொடுக்காமல் விட்டாலோ அவர்களின் ஆத்மா மோட்ச நிலை எனும் இன்னொரு உடலை அடைய இயலாமல் ரெண்டுங்கெட்டான் நிலையை அடையும், இதனால் அந்த ஆத்மா தன் கர்மத்துக்கு ஏற்ற உடலை மறுபிறப்பாக எடுக்க இயலாமல், தான் கடைசியாக எடுத்த உடலை சார்ந்த உறவுகளை இந்த ஆத்மா தன் எதிர்மறை ஆற்றலால் ஆட்டிபடைக்கும், இதனால் அந்த நபரின் வாழ்க்கை போராட்டமாக, எதிலும் தோல்வி/விரக்தி/சிக்கல் போன்ற நிலைகளை எதிர்கொள்வார், சோதிட ரீதியாக இதன் கிரகநிலையை கீழே கொடுக்கிறேன், இதனை அவரவர் ஜாதகத்தில் பொருத்தி பார்த்து தெளிவு பெறுங்கள், மேலும் இந்த கிரக நிலையில் லக்ன சுபர் தொடர்பு இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யும் என்று பொருள் என்பதையும் நினைவில் வையுங்கள்..!

கிரகநிலை..!

ஜனன ஜாதகத்தில் குளிகனுடன் கேது இணைந்து பாதக ஸ்தானத்தில் நின்றால் இந்த தோஷம் உள்ளது என்பதை உறுதிபடுத்தலாம்..! 
குளிகனுடன் இணைந்த அசுபர் எந்த வகையில் அந்த ஆத்மா இறந்தது என்பதை சுட்டிக்கட்டும்..!
கேதுவும்+குளிகனும் செவ்வாயின் தொடர்பை எவ்விதத்தில் பெற்றாலும் திடீர் விபத்து, தீ, ஆயுதம், சின்னம்மை போன்றவற்றால் இறந்தார் என்று கணிக்கலாம்..!
குளிகனும்+கேதுவும் சனியின் தொடர்பை பெற்றால் வறுமை அல்லது மர்ம மரணம் என்று கணிக்கவேண்டும்..!
குளிகன்+கேதுவுடன் ராகு தொடர்பு பெற்றால் பாம்பு மற்றும் விஷம் போன்றவற்றால் இறந்தார் என்று கணிக்க வேண்டும்..!
 
இறந்துபோனது ஆண்/பெண் என்பதை குளிகன்+கேது நின்ற வீட்டை வைத்து கணிக்க வேண்டும், மேலும் குளிகன்+கேது 4 அல்லது 4 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் இறந்தவர் குடும்பத்தை சார்ந்தவர் என்று கணிக்க வேண்டும், மேலும் இவ்விதம் பாதிக்கபட்ட ஜாதகருக்கு பரிகாரமாக, எள்ளு தர்ப்பணம் மற்றும் தவறாமல் சிராத்த காரியங்களை செய்துவர கூற வேண்டும் மேலும் அவரது ஜாதகத்துக்கு உகந்த உக்கிர தெய்வத்தை வழிபட பரிந்துரை செய்யவேண்டும், மீண்டும் சந்திப்போம்..!

No comments:

Post a Comment