Sunday, August 29, 2021

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் கண்டிப்பாக படிக்கவும்.

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்: (30/08/2031)
ஆவணி 14...

கிருஷ்ணரை பற்றிய அற்புத தகவல்கள்.

மஹா விஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம்.

தமிழர்களால் கண்ணன், கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர நாள் கிருஷ்ண ஜெயந்தியாக (கோகுலாஷ்டமி) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் பல்வேறு பெயர்களுடன் அடைமொழிகளையும் கொண்டுள்ளார்.

மோகன் என்றால் பெண்களை வசீகரிப்பவர் என்றும், கோவிந்தன் என்றால் பசுக்களை கண்டுபிடிப்பவன் என்றும், கோபாலன் என்றால் பசுக்களை பாதுகாப்பவன் என்றும் பொருள்படும். 

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவரது படத்தை வைத்து திருப்பாதங்கள் வரைந்து நைவேத்தியங்கள் படைத்து வழிபடுவது வழக்கம். 

கிருஷ்ணரைப் பற்றி நாம் தெரிந்தது என்னவோ குறைவு தான். அவரைப் பற்றி தெரியாத சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

கிருஷ்ணர் (கிருஷ்ண ஜெயந்தி) அவதரித்த நாளில் அதான் கோகுலாஷ்டமி நாளில் உறியடி விழா சிறப்பாக கொண்டாப்படுகிறது. இந்த நாளில் உறியடித்து மக்கள் கிருஷ்ணரை வரவேற்கின்றனர்.

மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக நூல்களில் ஒன்று பகவத் கீதை. இது இந்துக்களின் புனித நூல். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் எப்படி வாழ வேண்டும்? என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது. பகவத் கீதையில் உள்ள கருத்துக்களை மக்கள் பின்பற்றி வந்தால் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழலாம். அப்படிப்பட்ட பகவத் கீதையை கிருஷ்ண பகவான் நமக்கு அளித்துள்ளார்.

○ கிருஷ்ண ஜெயந்தி சென்னையில் கௌடியா மடத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
○ வட இந்தியாவில் கண்ணையா என்றும், தமிழக மக்கள் கண்ணன் என்றும் கிருஷ்ணரை வழிபடுகின்றனர்.
○ கோகுல கிருஷ்ணன் பிறந்த கோகுலாஷ்டமியில் வெண்ணை வைத்து கிருஷ்ண பகவானை வழிபட்டு அவரை அழைத்தால் நமக்கு வேண்டிய வரங்களை அளிப்பார்.
○ கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த அப்பம், தட்டை, பால் திரட்டு, வெண்ணெய், நாட்டு சர்க்கரை, அவல், லட்டு, முறுக்கு, சீடை ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.
○ கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை உங்களது வலது கை உள்ளங்கையை மடித்து பக்கவாட்டு பகுதியை நாமத்தில் நனைத்து கீழே வைத்து பதித்தால் அழகான விரல்களை பாதச்சுவடுகளாக பெறலாம்.
○ எப்பொழுதும் வீட்டின் வாசல் படியிலிருந்து பூஜையறை வரையில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகள் செல்ல வேண்டும். இந்த பாதசுவடுகள் வழியாக கிருஷ்ண பகவானே நமது வீடுகளுக்கு வருவார் என்பது நம்பிக்கை.
○ கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால், கிருஷ்ண பகவானை இரவு நேரங்களில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 
○ கிருஷ்ணரின் 3 வயது வரை அவர் கோகுலத்தில் வசித்து வந்தார்.
○ கோகுலத்தில் வசித்த வந்த கிருஷ்ணர் அதன் பின்னர் பிருந்தாவனம், மதுரா என்று பல இடங்களில் வாழ்ந்து வந்தார். 
○ தனது 7ஆவது வயதில் கம்சனை வதம் செய்தார்.
○ கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ண லீலை, கீத கோவிந்தம், ஸ்ரீமன் நாராயணீயம், கிருஷ்ண நாமம், கிருஷ்ண காணாம்ருதம், பகவத் கீதை ஆகியவற்றை வாசித்து கிருஷ்ண பகவானின் அருளைப் பெறலாம்.
○ ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை சொல்லி வர நினைத்தது நிறைவேறும். பகவத் கீதையிலுள்ள அவதார கட்டத்தை சொல்லி வர புண்ணியம் அதிகரிக்கும்.
○ கிருஷ்ண ஜெயந்தி நாளில் குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களுக்கு ராதா, கிருஷ்ணன் போன்று வேடமிட்டு அலங்காரம் செய்து கிருஷ்ண பகவானை வழிபட குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதோடு, அவர்கள் அறிவாளிகளாகவும், புத்திசாலியாகவும் விளங்குவார்கள்.
○ கிருஷ்ணரை வழிபடுபவர்களுக்கு தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பெயர், புகழ், கௌரவம், செல்வம், செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். மருத்துவ துறையில் இருப்பவர்கள் கிருஷ்ண பகவானை வழிபட மென் மேலும் உயரலாம்.
○ எதிரிகளின் தொல்லை நீங்க ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தை கூடவே வைத்துக் கொள்ள வேண்டும்.

Saturday, August 28, 2021

கோகுலாஷ்டமிக்கும் கிருஷ்ணாஜெயந்திக்கும் என்ன வித்தியாசம்?

கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?

கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம்.

கீதாசாரம்:

பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:-  
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்  
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே  
எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.  
கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து விளக்குகிறார் .  
கோகுலாஷ்டமி-கிருஷ்ண ஜெயந்தி : வித்தியாசம்  
ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இன்னொன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் - பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.  
2 விதமான ஆகமங்கள்  
இதிலும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு 2 ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானச ஆகமம், இன்னொன்று பாஞ்சராத்ர ஆகமம். வைகானஸ ஆகமத்திற்கு அஷ்டமி பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமம் அஷ்டமியினுடைய மிச்சமும் ரோகினி நக்ஷத்ரத்தினுடைய மிச்சமும் - முக்கியமாக சூரிய உதயம் கழிந்து 2 நாழிகைகள் மேற்சொன்ன அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரமும் இருந்தால் அதை பாஞ்சராத்திர ஆகம கிருஷ்ண ஜெயந்தியாக எடுத்துக் கொள்வார்கள். ஸ்ரீவைஷ்ணவ ஜெயந்தி அதாவது வைஷ்ணவ கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லப்படுவதும் பாஞ்சராத்திர ஜெயந்தி தான்.  
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடும் இடங்கள்  
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரி ஜெகன்நாத், பண்டரிபுரம் மற்றும் ஏனைய பெருமாள் ஆலயங்களில் மிகவும் விசேஷமாக விண்ணும் மண்ணும் வியக்கும் வண்ணம் கொண்டாடி வருகிறார்கள்.  
கிருஷ்ணருடைய விளையாட்டுகள்  
இந்த கிருஷ்ண ஜெயந்தியில் வழுக்குமரம் ஏறுவதையும் உறியடி திருநாளாக உறியடி அடிப்பதையும் மக்கள் கிருஷ்ணருடைய விளையாட்டாகக் கொண்டு விளையாடுகிறார்கள். இந்த கண்ணன் பிறந்தநாள் வீடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. அன்றைய தினம் வீட்டினை சுத்தமாக்கி மலர்களினால் அலங்கரித்து, கோலமிட்டு, கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை கண்ணனுடைய படத்தை வைத்து அலங்கரித்து, வாசல் முதல் சுவாமி வரை உள்ள இடம் வரை சிறுசிறு பாதங்கள் வரைவது வழக்கம்.  
அரிசி மாவினால்  பாதம் போடுவது வழக்கம்  
அதற்கு காரணம் உண்டு. கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும் போது அவசரத்தில் கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் வீடு முழுவதும் வெண்ணெய் ஆனது. அதனால் தான் அந்த காலத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் வெண்ணெயினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த காரணத்தினாலேயே பின்னாட்களில் அரிசி மாவினால் கோலம் அதாவது பாதம் போடுவதை வழக்கமாக்கி இருக்கிறார்கள்.  
இன்று பஜனை பாடல்கள் பாடுவது மிகச்சிறப்பு  
ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணன் பிறந்ததாகவே தோன்றும் வண்ணம் தோற்றமளிக்கும் படி சிறப்பாக கொண்டாடப்படுவதை நாம் காணலாம். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) அன்று கிருஷ்ணர் அஷ்டோத்திரம் - விஷ்ணுசஹஸ்ரநாமம் இதையெல்லாம் பாராயணம் செய்வது நன்மை தரும். பஜனை பாட்டு என்று வாத்தியங்களுடன் இன்னிசை பாடல்கள் பாடுவதும் மிகச்சிறப்பு. சிறு குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுப்பதும் வந்திருக்கக்கூடிய விருந்தினர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது மிக விசேஷமானதாகும்..

Wednesday, August 25, 2021

முன்ஜென்ம ஆசை கடவுள் நிறைவேற்றுவார்.

"முன் ஜென்ம ஆசை "
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். அப்போது கடலில் இருந்த ஒரு முதலை அவர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் எம்பி எம்பி குதித்தது. தண்ணீர்த் திவலைகள் தெறித்து அவர் காலில் பட்டதால், உறக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஆதிசேஷன் சீறி எழுந்து முதலையை கொத்தாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தது. நான் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டுச் சென்று விடுகிறேன். அவர் உறக்கத்தைத் கலைக்கமாட்டேன் என்னைத் தடுக்காதே என்று முதலை எவ்வளவோ கெஞ்சியும் ஆதிசேஷன் கொஞ்சமும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நீ ஒரு சாதாரண முதலை. உனக்கு அவர் காலைத் தொடக்கூடத் தகுதியில்லை. ஆனால் என் படுக்கையில் அவர் படுத்து உறங்குகிறார் என கர்வமாக ஆதிசேஷன் கூறியது. ஐயன் மெல்லிதாகப் புன்னகை புரிந்தார். திரேதாயுகத்தில் ராமனாக விஷ்ணுவும், லட்சுமணனாக ஆதிசேஷனும் அவதரித்தனர். கைகேயி தசரதரிடம் கேட்ட வரத்தின்படி, ராமர் சீதை, லட்சுமணனுடன் வனவாசம் செய்யப் புறப்பட்டார். கங்கைக் கரைக்கு வந்தார். இரு கரையும் புரண்டு ஓடும் நதியை எவ்வாறு தாண்டுவது என யோசித்தார்.
அப்போது குகன் தன் படகுடன் அங்கு வந்தான். அவன் ஒரு நிபந்தனையின் பேரில் அவர்களை அக்கரையில் சேர்க்க ஒப்புக் கொண்டான். ஐயனே ! நான் ஒரு சாதாரண படகோட்டி. இதை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறேன். உங்கள் பொற்பாதம் பட்டு கல்லும் பெண்ணாக ஆனது. உங்கள் கால்பட்டு என் ஓடமும் பெண்ணாகிவிட்டால் நான் பிழைப்புக்கு என்ன செய்வேன். ஆகையால் உங்கள் காலை நன்றாக அலம்புகிறேன். பிறகு நீங்கள் படகில் ஏறலாம். எனக்கு உங்கள் பாதம் கழுவ அனுமதி அளிக்க வேண்டும் என பிரார்த்திக்க ராமரும் சம்மதித்தார். குகன் மிக சந்தோஷமாக ராமர் பாதத்தை அலம்பினார். குகனே முற் பிறவியில் முதலையாக இருந்தார். அப்போது யதேச்சையாக லட்சுமணனைப் பார்த்தார் ராமர். அந்தத் தருணத்தில் ராமர் இருவருக்கும் பூர்வ ஜன்ம ஞாபகத்தை ஏற்படுத்தினார். உடனே லட்சுமணனுக்கு சினம் ஏற்பட்டது. என் முன் இந்த அற்ப முதலை ஐயனின் காலை அலம்புவதா? என்று அகங்காரத்துடன் குகனைப் பார்த்தார். குகன், இப்போது உன்னால் என்னை என்ன பண்ண முடியும்? என்பது போல் சிரித்துக் கொண்டே இன்னும் அதிக நீர் விட்டு ஐயனின் பாதத்தை ஆசை தீர அலம்பினார். ராமர் சட்டென்று அவர்கள் பூர்வ ஜன்ம நினைவை மறைத்துவிட, இருவரும் சாதாரணமாக மாறினர். பக்தனின் மனப்பூர்வமான ஆசையை, அது விலங்கானாலும் கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை...

            

Tuesday, August 24, 2021

கன்னியாகுமரி அம்மனின் தல வரலாறு.

கன்னியாகுமரி அம்மன் தல வரலாறு :-

வேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது.

 1892ல் சுவாமி விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் ஒரு உயர்மட்டக் குழு அமைத்து தேவியை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார்கள். இதில் சுவாமி பிரமானந்தா (1863-1922) , நிர்மலானந்தா (1963-1938)  ஆகியோர் இக்காலகட்டங்களில் தேவிக்கு பணிவிடை செய்துள்ளனர். 

இந்தவூர் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் பரவ வம்ச அரசர்களின் ஆட்சியில், திருவிதாங்கூர் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1947 இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின் இந்திய சமஸ்தானத்துடன் இணைந்தது.

புராணங்களில் இப்பகுதியை பாணாசூரன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவன் தவமிருந்து பிரம்மாவிடம் "தனக்கு மரணம் என்று ஒன்று நிகழ்ந்தால் இவ்வுலகத்தில் ஒரு கன்னிப் பெண்ணின் கையால் மட்டுமே மரணம் நேர வேண்டும்" என வரம் பெற்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்வம் கொண்டு இந்திரனை அவனின் சிம்மாசனத்திலிருந்து அகற்றியதாகவும், பின்னர் அங்கிருந்த தேவர்களை விரட்டியதாகவும், இந்திரன் இல்லாமல் பஞ்சபூதங்களை சமன்படுத்த முடியாமல் பூலோகம் தடுமாறியதாகவும் கூறப்படுகிறது.

 அப்போது தேவர்களின் வேண்டுதலால் பகவதி அம்மன் இவ்வூரில் சிறு பெண்ணாக பிறந்ததாகவும், பகவதி அம்மனை மணமுடிக்க சிவன் ஆசை கொண்டதாகவும், ஆகையால் சிவன் காலை முகூர்த்தத்திற்காக சுசீந்திரத்திலிருந்து புறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிவன் அம்மனை மணந்துகொண்டால் "பாணாசூரன்" வதம் நடக்காது என உணர்ந்து கொண்ட நாரதர் சேவல் வடிவங்கொண்டு கூவியதாகவும், சூரியன் உதயமானதால், நல்ல நேரம் முடிந்துவிட்டதாக நினைத்து சிவபெருமான் சுசீந்திரம் இருந்துவிட்டதாகவும், பின் கன்னி தேவி பாணாசூரனை அழித்ததார். 

Saturday, August 21, 2021

சிவனை வணங்கினால் சிக்கல்கள் வருகிறது ஏன்? இது உண்மையா?

சிவனை வழிபட்டால் சிக்கல் வருகிறதே ஏன்??

சிவனை வழிபடு எல்லாம் சரி ஆகி விடும் என்று அறிவுரை கூறினால் அட போய்யா. அவரை வழிபட்டு தான் சாதாரணமா இருந்த பிரச்சனை பெரிதாகிடுச்சு என்று அலுத்து கொள்ளும் சிலரை பார்த்திருப்போம்.

சரி நமக்கே சில நேரங்களில் தோன்றும் ஐயப்பாடு இது.சிவனை வணங்கினால் சிக்கல் வருகிறதே.ஏன் அவர் உடனடியாக பக்தனின் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை ??

முதலில் சிவன் யார் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சிவனை பூவுலகில் வாழும் அனைத்து ஜீவன்களின் தந்தையாகவே பார்க்கப்படுகிறார்.அவனின்றி அணுவும் அசையாது.அவன் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.

தந்தையானவர் பல குழந்தைகளின் கண்களுக்கு தவறானவராகவே தென்படுவார்.ஏனெனில் நாம் தவறு செய்யும் போது கண்டிப்பார்.கேட்கும் பொருட்களை சரியா தவறா என்று ஆய்வு செய்த பிறகு தான் வாங்கி கொடுப்பார்.பணத்தை கொடுத்து விட்டு அறிவுரை கூறி சலிப்பை ஏற்படுத்துவார்.தந்தை இவ்வாறு செய்வதனால் அது நமக்கு பிடிக்காமல் போகிறது. 

ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு தான் நமக்கு புரியும் அவர் செய்தது அனைத்தும் நம் நன்மைக்காக என்று.வாழ்வில் அனைத்து விஷயங்களும் எளிதில் கிடைத்து விட்டால் அதன் அருமையை ஒரு போதும் உணர மாட்டோம்.எனவே சில படிப்பினைகளை கற்ற பிறகு அது கிடைக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி ரகம்.

சிவனும் அப்படி தான்.தன் பக்தன் படிக்க வேண்டிய பாடங்களை அவரே கற்று கொடுத்து அதன் பிறகு அவனுக்கு தர வேண்டிய நற்பலன்களை அள்ளி தருவார்.பொறுமை கடலினும் பெரிது என்பதை உணர்த்துவார்.எல்லாமே எளிது அல்ல என்பதை அடிக்கடி உணர்த்துவார்.

இன்பம் துன்பம் அனைத்தும் சமமானதே என்பதை உணர்ந்து தான் தவ கோலத்திலும் உருவமற்ற அருவமற்ற அருவுருவ லிங்கனாய் நமக்கு காட்சி தருகிறார். அவரை சிந்தித்தாலும் நிந்தித்தாலும் அமைதியுடன் தான் இருப்பார். அனைத்தும் அறிந்தவர்.அதனால் தான் அத்துணை துன்பம் தந்தாலும் அவரை நோக்கி சிவனடியார்கள் சிவ பக்தர்கள் அனைவரும் அவரை சரணாகதி அடைகிறார்கள்.

துன்பம் அளித்தாலும் சரி இன்பம் கொடுத்தாலும் சரி என் அப்பன் சிவனை என்றென்றும் போற்றி வணங்குவதே நான் பெற்ற பாக்கியம் என்பதை மனதில் நிறுத்தும் போது அவர் திருவடியை அடைய முடியும்.
அதனால் தான் நம் கர்ம வினைகள் தீர சோதித்து அருள் புரிகிறார் ஈசன்.

தென்னாடுடைய சிவனே போற்றி. ஈசனருள் எல்லாருக்கும் கிட்டட்டும்.

ஓம் நமசிவாய ஓம்

Thursday, August 19, 2021

ஆலய தீப வழிபாடு மற்றும் தீபங்களின் ரகசியம்.

அப்படி ஆலய வழிபாட்டில் வேண்டிய தீபங்களும், வலம் வரும் முறைகளும், பயன்களும் தீபங்கள் ஏற்றும் முறையும் பலன்களும்

   ராகு தோஷம்            - 21 தீபங்கள்
   சனி தோஷம்            -  9 தீபங்கள்
   குரு தோஷம்            - 33 தீபங்கள்
   துர்க்கைக்கு               -  9 தீபங்கள்
  ஈஸ்வரனுக்கு            - 11 தீபங்கள்
  திருமண தோஷம்   - 21 தீபங்கள்
  புத்திர தோஷம்        - 51 தீபங்கள்
  சர்ப்ப தோஷம்         - 48 தீபங்கள்
  காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
  களத்திர தோஷம்    -108 தீபங்கள்

 *தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்* 

 கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.

பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

•தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும்,
 ஆயுள்விருத்தி உண்டாகும்.

• திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.

மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், *தீபலட்சுமியே நமோ நம* 
என்று கூறி வணங்குவது அவசியம். 

*தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்*

*சித்ர தீபம்*
வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

*மாலா தீபம்*
அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

*ஆகாச தீபம்*
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். 
கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

*ஜல தீபம்*
தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

 *படகு தீபம்**
கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.

*சர்வ தீபம்*
வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.

*மோட்ச தீபம்*
முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

*சர்வாலய தீபம்*
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

*அகண்ட தீபம்*
மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

*லட்ச தீபம்*
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.

மாவிளக்கு தீபம்*
அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.🙏🌹🌈

Monday, August 16, 2021

பூஜை அறை டிப்ஸ் பயனுள்ள பதிவு படியுங்கள்.

*🅾️✳️பூஜையறை  டிப்ஸ்!⛔️*

🔘 சுவாமி  படங்களைத் துடைக்கும் தண்ணீரில்  கற்பூரத்தைக் கரைத்துத் துடைத்தால்  படங்களை  பூச்சி அரிக்காது.

🔘 பூஜைக்கு  வாங்கிய வெற்றிலையை  ஒரு  பித்தளை  தம்ளரில் வைத்து கவிழ்த்து  மூடிவையுங்கள்  வெற்றிலை  வைத்தபடி வாடாமல் இருக்கும்.

🔘 சுவாமிக்கு  அகல் விளக்கோ,  குத்து விளக்கோ  ஏற்றும்போது  எண்ணெய்யில் சிறிய  கல் உப்பைப் போட்டுவிட்டால் விளக்கானது  நன்கு சுடர்விட்டு பிரகாசமாக  எரியும்.

🔘 அடிக்கடி  சுவாமி  படங்களை  மெல்லியத் துணியால்  துடைத்து  வைக்கவும். வாரம் ஒரு முறையோ, மாதம் இருமுறையோ  செய்தால்  போதும்.

🔘 வெள்ளிக்கிழமைகளில்  பூஜையறையில்  இருக்கும் விளக்கு அதிக  நேரம்  எரிய வேண்டுமானால்  ஒரு தேக்கரண்டி  விளக்கெண்ணெய்யும்  நல்லெண்ணெய்யும் கலந்து ஏற்ற வேண்டும்.

🔘  தீபம்  ஏற்ற பஞ்சை  சிக்கில்லாமல்  சதுரமாகப் பிரித்து  துடைப்பக் குச்சியை ஒரு சுற்று சுற்றினால்  போதும். அதாவது  குச்சியை  பஞ்சின் நடுவில்  வைத்து கையை தேய்த்தால் திரிபோல்  நன்கு வரும்.  பின் குச்சியை அப்படியே  உருவி வெளியே  எடுத்தால விளக்குத்திரி தயார். குறைந்த பஞ்சில் நிறைய திரிகள் திரித்து கொள்ளலாம்.

 

Friday, August 13, 2021

நீங்கள் கோடீஸ்வரன் ஆக மாற இந்தப் பதிவை கண்டிப்பாக படிக்கவும.

#அதென்ன #குபேர_கிரிவலம்??

உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் என்பது  உண்மை... உண்மை....  உண்மை....
                           
நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படி கஷ்டப்படுகிறோம். நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப் பாவச்சுமையை நாமும் நமது பங்குக்குச் சுமக்கிறோம். 
சரி.பணக்கஷ்டத்தின் வேதனையை நாம் தினம் தினம் இல்லாவிட்டாலும், அடிக்கடியாவது உணர்கிறோம். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம். 

அதென்ன குபேர கிரிவலம்!

ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார். வந்து அவர் திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் வாழும். 

ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.

இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்; மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும்.
இரவு 7மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

 அதில் அதிகமாக "ஓம் ரீம் தன தான்யம் அனுகிரஹ ஆகர்ஷய ஆகர்ஷய" என்று கூறுவது மிகவும் சிறப்பு. அனால் தனம் வந்த பின்பு அந்த தனத்தால் மற்றவருக்கு துன்பம் விதித்தால் வந்த செல்வம் எப்படி போகும் என்று எம்பிரானுக்கு மட்டும் தான் தெரியும்.

கிரிவலம் செல்லும் போதே, அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம். அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம்.

ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை.

கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்.
கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது. ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை) அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும். கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும். 

ஏன் வெட்டிக்கதை பேசக்கூடாது? இந்த கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள். நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது அதனால்!

நமது வீண் பேச்சு அவர்களுக்கு மற்றவர்களுக்கும் தொந்தரவாக இருக்ககூடாது.  அதிலே உங்களால் முடிந்தால் அங்கு கிரிவல பாதையில் உள்ள சாதுக்களுக்கு அன்னதானம் , வஸ்திர தானம் செய்வது கோடி புண்ணியம்.

குபேரலிங்கத்தின் ஆசிகளோடு உண்ணாமலை சமேத அண்ணாமலை அருள் பெறுக!!!

Thursday, August 12, 2021

போன ஜென்மத்தில் பாவத்தை தீர்க்கும் அதிசய கோயில் இது.

🌺 போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் அதிசய கோவில் இது!

போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீயி... நீ பண்ண பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாவே முன் ஜென்மத்துல நம்பிக்கை இருக்கு' என்கிறீர்களா?..

உண்மைதான்... முந்தைய பிந்தைய ஜென்மங்கள் இருக்குதுங்க... என் பாப்பா பேசுறது என் அம்மா மாதிரியே இருக்குமுங்க.. என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். விசாரித்துப் பார்த்தால், அவரின் அம்மா இறந்த சில வருடங்களில் அவருக்கு குழந்தை பிறந்ததாக சொல்வார் அவர். இன்னும் சிலருக்கோ, புதிதாக சென்ற இடம் கூட ஏற்கனவே தான் இங்கு வந்திருப்பதுபோல நினைவுக்கு வரும். ஆனால் நீங்கள் வந்திருக்கவே மாட்டீர்கள்..

அப்போது ஏன் அப்படி நினைவு வருகிறது. முந்தைய ஜென்ம நினைவுகளாக இருக்கலாமோ. முன் ஜென்மத்தை அறிவியலால் இன்னும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், அப்படி ஒன்று இல்லை என்று கூறிவிடமுடியாது.

முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..

உங்களுக்கு கடன் தொல்லையா, உடல் நிலை பிரச்சனைகள் அடிக்கடி வருகின்றதா.. இது போன்ற பிரச்னைகள் தொடர்கதையால் வாழ்வையே வெறுக்கிறீர்களா.. இவையெல்லாம் முன்ஜென்ம பிரச்னைதான் என்கிறார்கள் இறைவன்மீது அதீத பக்திகொண்ட பெரியவர்கள்.

இந்த இந்த பாவத்துக்கு இந்த இந்த பரிகாரம் என்று எழுதிவைத்துள்ள நம் முன்னோர்கள், அந்த பாவத்தைக் கழுவ போக வேண்டிய கோவிலையும் கூறியுள்ளார்கள்.. அப்படிபட்ட ஒரு கோவிலுக்குத் தான் இன்று நாம் போகவிருக்கிறோம்.

திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

முன்ஜென்ம பகைகளை போக்கி, பாவங்களை நீக்கி வருங்காலத்தை செம்மைபடுத்த நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று இந்த திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

வாழ்வில் நல்ல திருப்பம் வேண்டுமா, புதுவீடி கட்ட திட்டமா இந்த கோவிலுக்கு வந்து பாருங்க அப்றம் ஓஹோனு வாழ்வீங்க...

முக்கிய சிறப்புக்கள்

அக்னிக்கு உருவச்சிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான்

அப்பர், சம்பந்தர்,திருநீல நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய தலம் இதுவாகும்.

முக்காலத்துக்கும் ஆசி அருள் வழங்கும் தலம்.. பண்ணிய பாவங்கள் போக்கும் தலம்

தல நம்பிக்கைகள்

கோவில் அமைந்துள்ள ஊரின் அருகில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காக்க அம்மன் வெண்ணிற புடவை அணிந்து வந்ததாகவும், அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவச்சி போல காப்பாற்றியதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

வேண்டுதல்கள்

அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.

பிறவிப் பலன்

சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த தலத்துக்கு ஒருமுறையாவது வந்தால் பிறவி பலனை அடைவதாக நம்பிக்கை.

போகரின் சமாதி

இங்கு ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. 18 சித்தர்கள் வந்து வழிபட்ட ஸ்தலம் என்னும் பெருமை இந்த கோவிலுக்கு உள்ளது. இதனால் அந்த சமாதி போகருடையதாக அநேகம் பேரால் கருதப்படுகிறது.

சந்நிதிகள்

பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.

எப்படி செல்லலாம்

நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன. அல்லது நீங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் வந்து அங்கிருந்து கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரலாம். அல்லது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த புண்ணியதலம்.

🙏 

Wednesday, August 11, 2021

கால்களை வலுவாக வைத்துக் கொள்ளுங்கள் முதுமை நெருங்கும்போது.

முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!

* உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

 * *நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. 
* தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள். 

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
*நடந்து செல்லுங்கள்* 

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் *செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை *மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 *எனவே நடந்து செல்லுங்கள்* 

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், *நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது *

. நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
* *கால்கள் ஒரு வகையான தூண்கள் *, மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
*தினமும் நடைபயிற்சி.*
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
*நடந்து செல்லுங்கள்* 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 *10,000 அடிகள் / நாள்*
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
*இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. *

 * ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை! * 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.*

 * கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 *நடங்கள்.*

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக  வயதான நோயாளிகளில் 15%,  தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்* 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

*10,000 அடிகள் நடக்க*
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

*365 நாட்கள் நடைபயிற்சி* 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்* ‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♂️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻

Tuesday, August 10, 2021

பெருமாள் கோயில் நுழைந்தவுடன் முதலில் யாரை வணங்க வேண்டும்

#பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை #வழிபடவேண்டும்?

பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். 

கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். 

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும். 

அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றுவார்கள்.
அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். அதனையும் வழிபட வேண்டும்.

பெருமாளை தரிசிக்கும் போது முதலில் பாதத்தைத் தான் பார்க்க வேண்டுமா?
மகாபாரதத்தில் போர் நடக்கும் முன்பு கிருஷ்ணரிடம் போரில் உதவி கேட்டு முதலில் வந்த துரியோதனன், தூக்கத்தில் இருந்த கிருஷ்ணரின் தலையருகில் அமர்ந்தான். 

ஆனால் அடுத்து வந்த அர்ஜுனனோ பாதத்தின் அருகில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணர் கண் திறந்ததும் முதலில் அவருடைய அருள் பார்வை அர்ஜுனன் மீது விழுந்தது. அப்போதே பாண்டவர்களின் வெற்றி உறுதியாகி விட்டது.

அர்ஜுனனுக்கு வெற்றி கிடைத்தது போல, பெருமாளின் பாத தரிசனம் எல்லாருக்கும் வெற்றி தரும் என்பதால் தான் பெருமாளை முதலில் பாதத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.

பிறகு லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.

அடுத்து, கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது.
இறைவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோவிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். 

கோவிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோவிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது.

இறைவன் எளிமையையே விரும்புபவர். இறைவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடையை தவிர்ப்பது நல்லது.
பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க, அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன்படுத்துகின்ற பச்சை கற்பூரம், சந்தனம், சம்பங்கி பூ , துளசி தீர்த்தம் போன்றவை உதவும். 

மேலும் உடம்பில் அசுரத் தன்மையை தூண்டக் கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் வாழ்வில் ஈடுபட்டு நல்ல வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசியில் பெருமாள் வழிபாடு வலியுறுத்தப்பட்டது.

Monday, August 9, 2021

காஞ்சி மாமுனிவர் சொன்ன தெய்வீக பரிகாரம் கண்டிப்பாக படிக்கவும்

காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம் 

ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் காஞ்சி பெரியவர்.  பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும். இதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.  

ஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும். இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும் என்று வழிகாட்டியிருக்கிறார். 

இந்த அரசாணிக்காய் மகிமை எல்லா சத்துக்களும் அடங்கும் ஒரு நோய் நிவாரணி. அதனால் தான் பெரியவா பரிகாரமாகச் சொல்லிருக்கிறார் இவற்றின் சக்தியை அனைவரும் பெறவேண்டும் என்பது ஒரு சூட்சமம்.

நாள் முழுதும் சந்திரனால் ஏற்படும் மன வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சோர்வு, என்னவென்றே தெரியாத குழப்பம் போன்றவற்றிற்குப் பெரியவா சொல்வது இரவு படுக்கும்பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துக் கொண்டு படுக்க சொல்லுவார் . காலையில் அந்த மனோ தோஷமானது அந்த தண்ணீரில் இறங்கிவிடும் அந்த நீரை மரத்திலோ, வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதற்குப் பிறகு எந்த மன வியாதிக்காரருக்கும் ஒரு தெளிவு ஏற்படும் என்பது ஆணித்தரமான உண்மை.

 ஒருமுறை பெரியவாவுக்கு மிகுந்த காய்ச்சல் ஏற்பட்டது அவருடைய ஆயுர்வேத சீடரான ராமசர்மாவை காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். மருத்துவர் அங்கு வந்து தன் மருந்தை பெரியவாவிடம் கொடுத்தார் அதற்கு அழகிய சிரிப்புடன் பெரியவா சொன்னார் "உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர இந்த மருந்து அல்ல; எனக்கு மற்றொரு மருந்து உள்ளது நான் மறுபடியும் குளித்து விட்டு வருகிறேன்" என்று கூறினார். 

ராமசர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை குளித்துவிட்டு வந்த பெரியவர் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது. "நாம் இருவரும் தற்பொழுது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிக்கலாமா!" என்று பெரியவா கேட்க, மருத்துவரும் ஒண்ணும்புரியாமல் சரி கூற,  இருவரும் இணைந்து விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஜெபித்தார்கள். 

ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார். என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும் குணமாகி இருந்தது. பெரியவர் எப்பொழுதும் செல்வம் மற்றும் ஆரோக்கியம் இல்லாதவர்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு விஷ்ணு சகஸ்ரநாம மற்றும் கடவுளின் நாமத்தை ஜெபிக்கச் சொல்லுவார். 

நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகிக் கொண்டிருப்பது என்பது 12ம் அதிபதி தசா புத்தி காலங்களில் நடைபெறும். ஆனால், சிலபேருக்குத் தொடர்ந்து இந்த விரயம் இருந்துகொண்டு இருக்கும். அதற்குப் பெரியவா கூறுவது மற்றொரு வழியில் தானமோ தர்மமோ செயல்படுத்த வேண்டும் என்று அவர் கருத்து. அதற்குப் பெரியவா தன் பக்தர்களிடம் சூட்சமாகத் தினமும் காலை வேளைகளில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்குதல் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவு தானம் செய்தால் வீண் விரயத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறுவார்.

ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழைகளுக்கு அரிசி அல்லது உணவு தானம் செய்ய வேண்டும். நாம் எவரெல்லாம் 4-ம் பாவமான வீடு, சொத்து நோக்கிச் செல்கிறோமோ அது சேமிப்பு அல்ல புண்ணியம் என்பது தான் சேமிப்பு. இந்த புண்ணிய சேமிப்பு தான் பெரியவா "ஒரு  பிடி அரிசித்திட்டம்” என்று  26 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா ஊர்களில் சென்று ஆரம்பித்து வைத்துவிட்டார். அவர் அந்த தானத்தைச் சிரமம் இல்லாமல் எளிமையாகக் கூறினார்.

அவர் கூறியது "நீ உண்ணும் ஒரு பகுதி உணவை அதாவது அரிசியைத் தினமும் சமையல் செய்யத் துவங்கும் போது ஒரு பிடி அரிசியையும் ஒரு நயா பைசாவையும் ஒரு பானையில் போட வேண்டும். இவற்றைச் சேகரித்து இல்லாதவர்களுக்கு மற்றும் கோவில் பிரசாதமாக தரப்பட வேண்டும்". இதில் ஒரு சூட்சம விதி உள்ளது. நாம் முன்பு செய்த சேமித்த கர்மா மற்றும் சனீஸ்வரனால் ஏற்படும் இன்றைய கடன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். நிறையக் கடனால் தத்தளிப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது.

ஒரு பக்தர் தனக்கு இரத்த சோகை மற்றும் எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது அதனால் எனக்குச் சோர்வாக உள்ளது என்று பெரியவாவிடம் கேட்க அதற்குப் பெரியவா தங்க பஸ்பம் சாப்பிடு (மணத்தக்காளி கீரை) என்று சூட்சமாகக் கூறினார். பெரியவாக்கு தெரியும் சூரியன் (எலும்பு) மற்றும் சனியின் (இரும்புச் சத்து) பாதிப்பு உள்ளவர்களுக்கு இரும்பு மற்றும் கால்சியம் சத்து சேர்ந்த  மணத்தக்காளி என்கிற தங்க பஸ்பம் என்று. 

தாங்கமுடியாத முதுகு வலிக்கு நல்லெண்ணெய் சிகைக்காய் தேய்த்து வெந்நீரில் குளியல் அதன்பின்  மிளகு ரசம், பிரண்டை துவையல் என்று பெரியவா சொன்னது  எளிய வைத்தியம் ஆகும். 

நோயில்லா வீட்டில் மூன்று மருத்துவ எண்ணெய் கட்டாயமாக இருக்கும் என்று பெரியவா கூற்று.  அவை  நல்லெண்ணெய் (விளக்கேற்ற, சமைக்க, எண்ணெய் தேச்சு குளிக்க), விளக்கெண்ணெய் (வெறும் வயிற்றில் குடிக்க, சூடு தணிக்க, புண் மருந்தாக) மற்றும் வேப்பெண்ணெய் (முட்டி வலி) மருந்தாக சொல்லுகிறார் நம் மகான்.

இன்றைக்கும் என்றைக்கும் அவர் அருளிய இதுபோன்ற ஆலோசனைகள் நம்மை கண்டிப்பாக காப்பாற்றும்.

Friday, August 6, 2021

ஆடி அம்மாவாசையின் முக்கியத்துவத்தை படியுங்கள்.

ஆடி அமாவாசை ;  தர்ப்பணம் யாரெல்லாம் கொடுக்கணும்? - 

வாழ்க்கையில், யாரேனும் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்தால், அவர்களுக்கு நன்றி சொல்லுவோம். ‘அவராலதான் இன்னிக்கி நான் நல்லாருக்கேன். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்’ என்று சொல்லாதவர்கள் என்று எவருமில்லை. ஆக, வாழ்வில் நன்றியுணர்வு மிக மிக முக்கியம்.வாழ்க்கையில் ஒரு வேலையோ, நாலு காசு தந்தோ, ஆபத்துசமயத்தில் பக்கத்துணையாக இருந்தோ நமக்கு உதவியவர்களை நன்றியுடன் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படியெனில், இந்த உலகுக்கு நாம் வருவதற்குக் காரணமாக இருந்தவர்களை நாம் நன்றியுடன் நினைக்கவேண்டாமா? நாம் இந்த உலகில் வருவதற்கு நம் தாய் தந்தை காரணம். அவர்களின் தாய் தந்தை காரணம். அவர்களுக்கும் முன்னே உள்ள தாய் தந்தை காரணம். இப்படி மூன்று தலைமுறை, மூன்று வம்சங்களின் தாய் தந்தையரை வணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சாஸ்திரம். 

அப்பேர்ப்பட்ட முன்னோர்கள், நம் வாழ்வின் ஏணிகள். விதைகள். அவர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்கக்கூடாது. அப்படி நன்றி சொல்லும் விஷயம்தான் தர்ப்பணம், வழிபாடு என்பதெல்லாம்! 

தர்ப்பணம் என்றால் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். அமாவாசை என்றால் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். 

தர்ப்பணம் எதற்காகச் செய்யவேண்டும்? 

ஆத்மாவில் பாவம் செய்த ஆத்மாக்கள், புண்ணியம் செய்த ஆத்மாக்கள் உண்டுதானே. ஆத்மாக்களும் பாவம் புண்ணியம் என்று இரண்டும் உண்டுதான். அந்த பாவ புண்ணியங்களைக் கொண்டுதான், பித்ரு லோகத்தில் அவர்களுக்கான இடம் அமையும் என்பதாகச் சொல்கிறது சாஸ்திரம். 

அமாவாசை முதலான நாளில், முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யும் போது, அது நம் முன்னோர்களைப் போய்ச் சேரும். அதனால் அவர்கள் செய்த பாவங்களின் கெடுபலன்கள் குறையும். புண்ணியங்கள் பெருகும். நாமும் முன்னோரை வணங்கிய பலனைப் பெறலாம். முன்னோருக்குப் புண்ணியம் சேர்த்த, பாவங்களைக் குறைத்த புண்ணியத்தைப் பெறலாம். 

தினமும், முன்னோரை வழிபடவேண்டும். நம்மை இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்த முன்னோர்களை தினமும் வழிபடுவதில் தவறு இல்லை. அதேசமயம் முன்னோர் வழிபாட்டை வருடத்திற்கு 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும், எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம். 

அதாவது, மன்வாதி 14 நாட்கள், யுகாதி 4 நாட்கள், மாதப் பிறப்பு 12 நாட்கள், அமாவாசை 12 நாட்கள், மஹாளய பட்சம் 16 நாட்கள், வியதீபாதம் 12 நாட்கள், வைத்ருதி 12 நாட்கள், அஷ்டகா 4 நாட்கள், அன்வஷ்டகா 4 நாட்கள், பூர்வேத்யு 4 நாட்கள் என்று தர்ப்பணம் செய்யவேண்டும். 

யாரெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்? செய்யக்கூடாது? 

தாயும் தந்தையும் இல்லை என்றிருப்பவர்கள் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். நம் தாய் தந்தையரைத் தவிர, முந்தைய முன்னோர்களை நமக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை மனதால் நினைத்து, அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை தினங்கள். முக்கியமாக... ஆடி அமாவாசையில் வணங்கவேண்டும். 

‘எனக்கு அப்பா இருக்கிறார். அம்மா இல்லை’, ‘எனக்கு அம்மா உண்டு, அப்பா இல்லை’, எனக்கு அப்பா அம்மா இரண்டுபேருமே இல்லை, இறந்துவிட்டார்கள்’ என்றால் அவர்கள் நிச்சயமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். 

‘என் அண்ணன் இருக்கிறார். அவர்தான் கொள்ளிவைத்தார். தம்பி உண்டு. அவர்தான் கொள்ளிவைத்தார்’ என்றாலும் தாயாரை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த சகோதரர்கள் அனைவருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். ‘என் அண்ணன் தர்ப்பணம் செய்கிறாரே. நானும் செய்யவேண்டுமா?’ எனும் கேள்விக்கே இடமில்லை. மகன்கள் அனைவருக்கும் சொத்தில் எப்படி பங்கு உண்டோ, மகன்கள் அனைவருக்கும் பெற்றோரின் கடனை அடைப்பது எப்படிக் கடமையோ, அதேபோல், மகன்கள் எல்லோருமே தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் அப்படிச் செய்யாததெல்லாம் பாவமாக, நம் தலையிலும் நம் சந்ததியினரின் தலையிலும் வந்துவிடும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம். 

ஆகவே, அமாவாசை நாளில், ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்

Thursday, August 5, 2021

பரிகாரம் என்பது உண்மையா? படியுங்கள் கண்டிப்பாக தெரியும் உண்மை.

பரிகாரம் உண்மையா? (மறுபதிப்பு)
பகுதி – 1
நமது வாழ்கையில் சில காரியங்கள் நடை பெறுவதில் கால தாமதம் ஏற்படும் பொழுது அல்லது நடக்காமல் இருக்கும் பொழுது, இந்த தடையை நீக்குவதற்கு, அல்லது தோஷங்களை நிவர்த்தி செய்ய நாம் பலவித பரிகாரங்களை செய்து வருகின்றோம். இந்த பரிகாரம் உண்மையா?

“பரிகாரம்” இதன் உண்மையான சொல் “மன சாந்தி பரிகாரம்” ஆகும். அதாவது மனதை சாந்தி செய்வதே இதன் உண்மையான நோக்கம். ஒரு செயலை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தருவதே பரிகாரம் ஆகும். பரிகாரம் செய்தால் உறுதியாக தடைகள் நீங்கி விடுமா என்றால் யாராலும் உத்தரவாதம் தர முடியாது. ஆனால் பரிகாரம் பொய் என்றும் கூற முடியாது. 

உதாரணமாக கிராமத்தில் வசிப்பவர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது மருத்துவர் கொடுக்கும் மருந்து, மாத்திரையை விட அவர் போடும் ஊசிக்கு வலிமை அதிகம், ஊசி நோயை உடனே சரிபண்ணிவிடும். இந்த மாதிரி  நம்பிக்கை உடையவர்களுக்கு எத்தனை மருந்து, மாத்திரைகள் கொடுத்தாலும் காய்ச்சல் போகாது. அதே காய்ச்சலுக்கு ஒரு மருத்துவர் வெறும் தண்ணீரை (Distilled Water)  ஊசி என்ற பெயரில் போட்டால் கூட, உடனே அவரது காய்ச்சல் போய்விடும். இது எப்படி சாத்தியம் என்றால், அந்த நோயாளியின் நம்பிக்கை தான். இதே போல்தான் பரிகாரமும். 

பரிகாரம் செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்ப கூடியவர்களுக்கு பரிகாரம் செயல்படும். நம்பிக்கைதான் வாழ்க்கை. நமது பிரச்சனையை கடவுளிடம் கூறினால் கடவுள் சரிபண்ணிவிடுவார் என்பது ஒரு நம்பிக்கை. அதேபோல் பரிகாரம் பிரச்சனையை சரிபண்ணும் என்பதும் நம்பிக்கைத்தான். (It is just a Psychology)

ஆனால் இன்றைய ஜோதிடர்களுக்கு ஜாதகம் பார்த்து வரும் வருமானம் பத்தவில்லை என்பதால் விதவிதமான பரிகாரங்களை மக்களிடம் திணித்து வருகிறார்கள். இவ்வாறு திணிப்பதால் எந்த பலனும் இல்லை. நாங்கள் எல்லா ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களையும் செய்து விட்டோம் இருந்தும் திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை, நோய் சரி ஆகவில்லை என்று புலம்புகிறார்கள், மக்களிடம் பரிகாரத்தின் மேல் ஒரு வெறுப்பும் ஏற்படுகிறது.  

எனவே எதாவது பரிகாரம் சொல்லுங்கள் செய்கிறோம் என்று கேட்பவர்களுக்கும், பரிகாரத்தின் மேல் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டும் பரிகாரம் கூறுங்கள் தவறு இல்லை. 

இந்தியாவில் Psychologist தேவை அதிகம் இல்லை, காரணம் ஜோதிடர்கள் Psychologist வேலையை செய்து விடுகின்றனர் என்பதே எனது கருத்து. நமது வாடிக்கையாளர்களின் பிரச்சனையை ஜோதிடர்கள் காது கொடுத்து கேட்கின்றனர். இவ்வாறு தனது பிரச்சனையை குடும்ப ஜோதிடரிடம் மனம் விட்டு கூறிவிட்டால் மன வலி வேதனை குறைந்து விடுகிறது. அதேபோல் பரிகாரம் தன் நம்பிக்கையையும் தருகிறது. ஒரு ரூபாய் அகல் விளக்கு கூட நம்பிக்கை உடையவர்களுக்கு நல்ல பரிகாரம் தான், பல தடைகளை உடைத்துவிடும்.

எனவே பரிகாரம் என்பது மன பலமே !
                          
பரிகாரம் பகுதி – 2
ஜோதிடத்தை தொழிலாக செய்தால் குடும்பம் விளங்காது, ஜோதிடரின் குடும்பம் பாதிக்கப்படுகிறது என்ற கூற்று உண்மையா? உண்மைதான். அநேக ஜோதிடர்களும், அவரது குடும்பத்தினரும் பாதிகப்படுகிறர்கள். ஏன்? எப்படி?
முதல் காரணம், மனிதனுடைய மூளையில் நடந்து முடிந்த பதிவுகள் (Past) மட்டுமே இருக்கும், நடக்க இருப்பது (Future) பிரம்ம ரகசியமாகவே இருக்கும். ஆனால் ஆதி முதல் மனித குலம், நடக்க இருப்பதை முன்கூட்டியே எப்படியாவது தெரிந்து கொள்ளவேண்டும் என பல முயற்சிகள்  செய்த வண்ணம் இருக்கிறார்கள், அதில் ஒன்றுதான் ஜோதிடம். நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் தன்னை தற்காத்து கொள்ளலாமே என்கிற நப்பாசைதான். 

சுமார் 5000 ஆண்டு காலமாக வானவியல் அறிஞர்கள், வானில் உள்ள கோள்களுக்கும் மனிதனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கோள்களுக்கும் மனிதனுடைய செயல்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, இதனை நமது முன்னோர்கள் முதல் இன்று வரை உள்ள வானவியல் ஜோதிடர்கள் நிருபித்து இருகிறார்கள். வானில் உள்ள கோள்களுக்கும் மனிதனுடைய மூளைக்கும் எதோ தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. ஒரேடியாக தொடர்பு இல்லை என மறுக்கவும் முடியாது.

அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து விட்டபோதிலும், ஜோதிட கலை அழிந்து விடவில்லை, மாறாக ஜோதிடம் இன்றும் வளர்ந்து வரும் ஒரு கலையாக உள்ளது. ஜோதிடம் பொய்யாக இருந்தால் இந்நேரம் எத்தனையோ கலைகள் அழிந்து விட்டது போல் ஜோதிடமும் அழிந்து இருக்கும். இன்றளவும் உலகில் பல கோடி மக்கள் ஜோதிடத்தை மிகவும் நம்புகின்றனர்.
மனித குலத்திற்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவிப்பவனே ஜோதிடன் ஆவான். நடக்க இருப்பதை முன்கூட்டியே கூறுவது இயற்கைக்கு மாறான ஒரு செயலாகும். ரகசியமாகவே இருக்க வேண்டிய விஷயங்களை, வெளிபடுத்துவது ஒரு குற்றம், அதற்கு பரிகாரம் சொல்லுவது அடுத்த குற்றம் ஆகும். எப்படி என்றால் கோள்கள் அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை செய்து வருகிறது. அதை செய்ய விடாமல் தடுப்பது ஒரு குற்றம்தானே. 
உலகை படைத்த கடவுள் மனிதனுடைய பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை, இறப்பு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை கோள்களிடம் ஒப்படைத்து உள்ளார் என கூறலாம். அந்த கோள்களின் செயல்பாடுகளை பரிகாரத்தின் மூலம் தடுப்பதினால், அந்த கோள்களின் கோபம் ஜோதிடன் மேல் கண்டிப்பாக திரும்பும். அதனாலேயே ஜோதிடன் பாதிக்க படுகிறான். இந்த விஷயம் அநேக ஜோதிடர்களுக்கும் தெரியும். தெரிந்தும் ஏன் செய்கிறார்கள் என்றால் புகழுக்கு மயங்குவதால்தான்.

பொதுவாக ஜோதிடகள் தான் கூறும் ஒருசில பலன்கள் நடந்து விடுகின்ற பொழுது ஒருவித போதையில் சிக்கி கொள்கிறார்கள், அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாது. 
                                                              
பரிகாரம் பகுதி – 3
ஒரு ஜோதிடர் நல்ல பலன்களை மட்டும் கூறு வருவாரேயானால் வாடிக்கையாளர்கள் பரிகாரம் கேட்பதில்லை. ஆனால் வர இருக்கும் தீய பலன்களை ஒரு ஜோதிடர் கூறினால் அதை தடுக்க, பரிகாரம் கூறுங்கள் என்று வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். பரிகாரம் கேட்பவர்களிடம் எப்படி பரிகாரம் ஒன்றும் இல்லை, உன் விதியை வாசித்தேன் அவ்வளவுதான் என்று சொல்ல முடியுமா? சொன்னாலும், வாடிக்கையாளர்கள் விட்டு விடுவார்களா? 

மருத்துவரின் வேலை நோயை கண்டுபிடித்து கூறுவது மட்டும் அல்ல, அதற்கு மருந்து கொடுப்பதும் தான். அதேபோல் ஒரு ஜோதிடர் பிரச்சனை வரப்போகிறது என்று சொன்னால் மட்டும் போதாது, அதற்கு நிவர்த்தியும் கூறவேண்டும். இதுவே தொழில் தர்மமும் ஆகும். சரி வாடிக்கையாளரை பிரச்சனையில் இருந்து பரிகாரம் கூறி காப்பாற்ற வேண்டும், இந்த செயல்  எது போன்றது தெரியுமா? ஒருவன் மூட்டையை தூக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் இறக்க குணம் அவரை காப்பாற்ற துடிக்கிறது, அவன் முதுகில் இருந்து நீங்கள் அந்த மூட்டையை தூக்கி இறக்கி வைத்தால் தான் அவனை காப்பாற்ற முடியும். ஆக நீங்கள் அந்த மூட்டையின் பாரத்தை சிறுது நேரம் தூக்க வேண்டியது  வரும். இதுதான் நாம் கொடுக்கும் பரிகாரத்தில் உள்ள சிக்கல்.

எனவே ஒரு ஜோதிடர் மற்றவர்களுக்கு பரிகாரம் கூறவேண்டுமானால், முதலில் தனக்குதானே பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். நெருப்பில் உள்ளவர்களை காப்பாற்ற தீ அணைப்பு வீரர்கள் தற்காப்பு கவசம் அணிந்து கொள்வது போல, ஜோதிடர்களும் தனது தற்காப்புக்கு பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டும். 
பொதுவாக இயற்கையின் மாற்றங்களை உணரும் சக்தி விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் உண்டு. குறிப்பாக பசு மாடு, யானை, குதிரை, நாய் போன்ற மிருகங்களுக்கு இயற்கையின் மாற்றம் அதிகம் தெரியும். உதாரணமாக 2004 ம் ஆண்டு சுனாமியில் மேற்கண்ட நான்கு மிருகங்களும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிருகங்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஜோதிடர்கள் வெல்லம், அகத்திக்கீரை, வாழைப்பழம் இம்முன்றும் கொடுத்து வந்தால் ஜோதிடருக்கு பிரச்சனை வராது தற்காத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பரிகாரம் சொல்லும் ஜோதிடருக்கும், அவரது குடும்பதிற்கும் நிச்சயமாக பாதிப்பு வரும், எப்பொழுது வரும் என்றால் ஜோதிடரின் பலவீனமான தசாபுத்தி காலங்களில் வரும். 

இவ்வாறு தனது வாடிக்கையாளர்களுக்கு வரும் துன்பத்தை தனது தனது துன்பமாக கருதும் ஜோதிடர்களை, மக்கள் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்து “தெய்வக்ஞன்” என அன்போடு அழைகின்றனர்.   
நன்றி ! அன்புடன். 

Wednesday, August 4, 2021

சுய ஒழுக்கத்தை பற்றிய பதிவு

#சுய_ஒழுக்கம் 
(Self Discipline).

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
"இன்னும் கல்யாணம் ஆகலயா?"
"குழந்தைகள் இல்லையா?"
"இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?"
"ஏன் இன்னும் Car வாங்கவில்லை?"
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. இம்முறை  இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார்  உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க  Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment  இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். "விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து  பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிருங்கள்.

Monday, August 2, 2021

பாசம்,பந்தம் மற்றும் பணம் மற்றும் சொத்து ஏதும் அறியாது ஆன்மா படிக்கலாம்.

அர்ச்சுனன் மகன் அபிமன்யு

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்...
 
அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான். 

கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் ,கண்ணனை இறுக பற்றி  கொண்டு கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான்  நீயும் துக்கம் தாள முடியாமல்  அழுகிறாயோ ? என்று கேட்டான்.

கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம்  தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன்.

அர்ஜுனன் -- கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.

கண்ணன் --- உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா.

அர்ஜுனன் -- அப்படி சொல்லாதே கண்ணா --- மானிடர்கள் மறைந்தாலும் பாச--பந்தம் அவர்களை விட்டு போகாது.

கண்ணன் -- அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம்  செல்லலாம். அங்கே தான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன்.

சொர்க்கலோகம் --- ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு -- அவனை அடையாளம் கண்டுகொண்ட  அர்ஜுனன் --- என் மகனே அபிமன்யு என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான்.

அணைக்க போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் ஆன்மா -- அய்யா யார் நீங்கள் -- என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது.

தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள் என்றது அபிமன்யுவின் ஆன்மா .

அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம் --- பார்த்திபா பார்த்தாயா – உறவு, பாசம், பந்தம், உணர்வு, கோபம், அன்பு, காமம் யாவும் உடலில் உயிர் இருக்கும் வரை தான். உடலை விட்டு உயிர் போய் விட்டால், ஏதும் அற்ற உடலுக்கும் உணர்வு இல்லை. அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை.

நீ  அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே. அதை கட்டி பிடித்து அழு. உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு. ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல; பிறந்த  உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல; என்பதை நன்கு உணர்ந்து கொள்.

படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான். நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே. செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு. அதுவே வாழ்வின் அர்த்தமாகும் என்று கூறி கண்ணன் புன்னகைத்தான்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலம் கூட சொந்தம் இல்லையடா
இதை புரிந்து கொண்டு வாழப் பழகடா.

பிறந்த பிறப்பில் நீ செய்ய வேண்டிய நியாயமான குடும்ப கடமையை உறுதியாக நின்று செய்.

ஆனால் தன் நலம் கருதாத உன் அர்ப்பணிப்பு மட்டுமே உன் பெயர் சொல்லி நிலையாக உலகில் வாழும் என்பதை உணர்பவனே மனிதன்.

Sunday, August 1, 2021

பிரேத சாபம் என்றால் என்ன? ஜாதக ரீதியாக எப்படி நம்மை பாதிக்கிறது?

பிரேத சாபம்..!

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கடைசி காரியம் என்று கூறப்படும் சிராத்த காரியங்கள் சரியாக செய்யவில்லை என்றாலோ, அகால மரணங்கள் என்று கூறபடும் விபத்து/தற்கொலை போன்றவற்றால் இறந்து போய் எள்ளு தர்ப்பணம் கொடுக்காமல் விட்டாலோ அவர்களின் ஆத்மா மோட்ச நிலை எனும் இன்னொரு உடலை அடைய இயலாமல் ரெண்டுங்கெட்டான் நிலையை அடையும், இதனால் அந்த ஆத்மா தன் கர்மத்துக்கு ஏற்ற உடலை மறுபிறப்பாக எடுக்க இயலாமல், தான் கடைசியாக எடுத்த உடலை சார்ந்த உறவுகளை இந்த ஆத்மா தன் எதிர்மறை ஆற்றலால் ஆட்டிபடைக்கும், இதனால் அந்த நபரின் வாழ்க்கை போராட்டமாக, எதிலும் தோல்வி/விரக்தி/சிக்கல் போன்ற நிலைகளை எதிர்கொள்வார், சோதிட ரீதியாக இதன் கிரகநிலையை கீழே கொடுக்கிறேன், இதனை அவரவர் ஜாதகத்தில் பொருத்தி பார்த்து தெளிவு பெறுங்கள், மேலும் இந்த கிரக நிலையில் லக்ன சுபர் தொடர்பு இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யும் என்று பொருள் என்பதையும் நினைவில் வையுங்கள்..!

கிரகநிலை..!

ஜனன ஜாதகத்தில் குளிகனுடன் கேது இணைந்து பாதக ஸ்தானத்தில் நின்றால் இந்த தோஷம் உள்ளது என்பதை உறுதிபடுத்தலாம்..! 
குளிகனுடன் இணைந்த அசுபர் எந்த வகையில் அந்த ஆத்மா இறந்தது என்பதை சுட்டிக்கட்டும்..!
கேதுவும்+குளிகனும் செவ்வாயின் தொடர்பை எவ்விதத்தில் பெற்றாலும் திடீர் விபத்து, தீ, ஆயுதம், சின்னம்மை போன்றவற்றால் இறந்தார் என்று கணிக்கலாம்..!
குளிகனும்+கேதுவும் சனியின் தொடர்பை பெற்றால் வறுமை அல்லது மர்ம மரணம் என்று கணிக்கவேண்டும்..!
குளிகன்+கேதுவுடன் ராகு தொடர்பு பெற்றால் பாம்பு மற்றும் விஷம் போன்றவற்றால் இறந்தார் என்று கணிக்க வேண்டும்..!
 
இறந்துபோனது ஆண்/பெண் என்பதை குளிகன்+கேது நின்ற வீட்டை வைத்து கணிக்க வேண்டும், மேலும் குளிகன்+கேது 4 அல்லது 4 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் இறந்தவர் குடும்பத்தை சார்ந்தவர் என்று கணிக்க வேண்டும், மேலும் இவ்விதம் பாதிக்கபட்ட ஜாதகருக்கு பரிகாரமாக, எள்ளு தர்ப்பணம் மற்றும் தவறாமல் சிராத்த காரியங்களை செய்துவர கூற வேண்டும் மேலும் அவரது ஜாதகத்துக்கு உகந்த உக்கிர தெய்வத்தை வழிபட பரிந்துரை செய்யவேண்டும், மீண்டும் சந்திப்போம்..!