✍️குலதெய்வத்தை வழிபடுவது எப்படி? தங்கள் குலதெய்வம் எது என்று கண்டுபிடிப்பது எப்படி என்று சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள்.
-
குலதெய்வத்தை வழிபடுவது உயர்ந்தநிலை வழிபாடு அல்ல.. இந்துமதம் வகுப்பில் ஏற்கனவே அதைப்பற்றி விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.
-
நான்குவிதமான மனிதர்களும் அவர்களது வழிபாடுகளும் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
-
1.மற்றவர்களுக்கு தீங்கு நேரவேண்டும் என்று வழிபாடு செய்வது (கீழ்நிலை)
-
2. எனக்கும்,என்னை சார்ந்தவர்களுக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது (இடைநிலை)
-
3.எனக்கும் நன்மை ஏற்பட வேண்டும் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது (உயர்நிலை)
-
4. எனக்கு நன்மை ஏற்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறருக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது (உச்சநிலை)
------
பில்லி,சூனியம்,ஏவல் என்று பல வழிகளில் பேய்களை,பிசாசுகளை வழிபடுபவர்கள் கீழ்நிலை மக்கள்.
உயிர்பலிகள்,மந்திரங்கள் மூலம் பேய்.பிசாசுகளை வசப்படுத்தி தீயவழிகளில் அவற்றை பயன்படுத்தி பிறரை அழிப்பது அல்லது குறுக்கு வழியில் பணம் சேர்ப்பது இவர்களது நோக்கம். கடைசியில் அவர்களுக்கு ஏவல்செய்யும் பேய்களே இவர்களைக் கொன்றுவிடும்.
-
இடைநிலையைச் சேர்ந்தவர்கள் குலதெய்வங்களை வழிபடுகிறார்கள்.
தங்கள் வீட்டில் அல்லது குலத்தில் பிறந்து திருமணமாகாமல் சிறுவயதில் இறந்தவர்கள் குலதெய்வமாக வழிபடப்படுகிறார்கள்.
குலதெய்வங்களை வழிபடுவதன் மூலம் தங்கள் குலம் காக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
குலதெய்வங்களிடம் எல்லையற்றசக்தி இருப்பதாக சிலர் தவறாக பதிவிடுகிறார்கள். அது தவறு.
சக்தி அல்லது ஆற்றல் என்பது கடின தவத்தினால் பாடுபட்டு அடையப்படுவதாகும்.
குலதெய்வங்களிடம் உள்ள சக்தியின் அளவு எல்லைக்கு உட்பட்டது.
அவர்களால் ஒருசிறிதே உதவ முடியும்.
-
சித்தர்கள்,ரிஷிகள்,மகான்கள்,,குருநிலையை அடைந்தவர்கள்,அரசர்கள்,தன்னலம் கருதாத தலைவர்கள் போன்றவர்கள் காலமானபிறகு மக்கள் வழிபடுகிறார்கள்.
இந்த வழிபாடு உயர்நிலை வழிபாடாகும். மகான்கள் அனைவரிடமும் அன்புகொண்டவர்கள்.
மகான்களை வழிபடுபவர்களும் அதேபோல பரந்த மனம்படைத்தவர்களாக உள்ளார்கள்.
குருநிலை வழிபாடுகள் படிப்படியாக உயர்வடைந்து தெய்வ வழிபாடாக மாறுகிறது.
முற்காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் பலர் பிற்காலத்தில் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள்.
தேவர்,தேவி வழிபாடு போன்றவை உயர்நிலை வழிபாடாகும்.
-
அனைத்திலும் உச்சநிலை வழிபாடு என்பது உலகத்திலுள்ள அனைவரையும் வழிபடுவதாகும்.
உலகம் ஜடப்பொருளாகத்தெரியாமல் உணர்வுப்பொருளாகத் தெரிகிறது. மனிதர்கள் மனிதர்களாக தெரிவதில்லை தெய்வங்களாக தெரிகிறது.
நான் அழிந்தாலும் பரவாயில்லை மற்றவர்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருக்கும்.
இந்த வழிபாட்டையே வேதங்கள் யக்ஞம் என்கிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் மிகச்சிலரே இந்த வழிபாடு செய்கிறார்கள்.
-
தாழ்ந்தநிலை வழிபாட்டிலிருந்து உயர்ந்தநிலை வழிபாட்டை நோக்கி மனிதர்கள் முன்னேற வேண்டும்.
குலதெய்வங்களை வழிபடுபவர்கள் அதிலேயே நிற்கக்கூடாது.
உயர்வழிபாடு செய்பவர்கள் குலதெய்வங்களை வழிடத்தேவையில்லை.அதனால் குலதெய்வம் சாபமிடும் என்று பயப்படத்தேவையில்லை. ஆனால் உயர்நிலைவழிபாடு செய்யாதவர்கள் தொடர்ந்து குலதெய்வங்களை வழிபடுவது நல்லது.
-
மேல் படிக்கு செல்லவேண்டுமானால் கீழ்படியில் உள்ள காலை எடுக்கவேண்டும்.அதேபோல உயர்நிலை வழிபாடு செய்பவர்கள் தாழ்ந்தநிலை வழிபாடுகளை விட்டுவிட வேண்டும். அப்படி விடாவிட்டால் உயர்நிலையைக்கு செல்ல முடியாது.
ஆனால் கீழ்படியில் உள்ளவன் குலதெய்வ வழிபாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அதைவிட்டுவிடக்கூடாது.
அப்படி விட்டுவிட்டால் குலதெய்வங்களில் கோபத்திற்கு ஆளாக நேரும்.
-
இன்னும் உச்சநிலை வழிபாடுசெய்பவர்கள்,உயர்நிலையில் உள்ள தெய்வங்களை வழிடத்தேவையில்லை.அதனால் தெய்வங்கள் கோபப்படுவதில்லை.
--
No comments:
Post a Comment