Tuesday, March 30, 2021

நாராயணன் என்றால் என்ன அர்த்தம்.

#நாராயணன்_என்றால்_என்ன 

#அர்த்தம்?".

🌹எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார்.🌹

🌹முனிவர் சொன்னார். "ரொம்ப சுலபம். 'நாரம்' என்றால் 'தண்ணீர்'. 'அயனன்' என்றால் 'சயனித்திருப்பவன்'. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.🌹

🌹நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நாராயணனிடமே ஓடினார்.🌹

🌹ஐயனே! உம்மை நான் நாராயணா...நாராயணா... என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!''🌹

🌹குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும் குறும்பாகவே பதிலளித்தான்.🌹

🌹அடடா...எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக் கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்''.🌹

🌹நாரதர் வண்டிடம் ஓடினார். "வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?''. கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்து போனது🌹.

🌹நாரதர் நாராயணனிடம் திரும்பினார். "நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள். அப்படியானால் அது தானே அர்த்தம்',' என்றார்.🌹

🌹அப்படி நான் கேள்விப் பட்டதில்லையே! எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்,'' என்று ஒரு மரத்தை நோக்கி கை நீட்டினார் பகவான்.🌹

🌹கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது. நாரதருக்கு திக்கித்து விட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை "நாராயணா என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா!'' என்ற பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.🌹

🌹"பெருமாளே! அதற்கு அர்த்தம் அதுதான்.🌹

🌹"நாரதா! அவை விதி முடிந்து இறக்கின்றன. எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்''🌹.

"🌹நன்றாக இருக்கிறது  நாராயணா! இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடிய பாவம் என்னை அணுக வேண்டுமென திட்டம் போடுகிறீரா! முடியாது'' என்றார் நாரதர்.🌹

"🌹அப்படி ஏதும் ஆகாதென்றே நினைக்கிறேன். நீ ஒரு தபஸ்வி! தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ!'' என்று உசுப்பி விட்டார் பெருமாள்🌹.

🌹நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதை முடிந்தது. "நாராயணா! எல்லாம் போச்சு! இனிமேல் உம்மிடமில்லை பேச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்!'' எனக் கிளம்பியவரை பெருமாள் தடுத்தார்🌹.

"🌹நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள், அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது!'' என்ற நாராயணனை, "அய்யா! என்னை அரச தண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது'' என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.🌹

🌹நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாகப் பதில் சொன்னான்.🌹

🌹"நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால்"நாராயணா' என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி, அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய், பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்!'' என்றான்.🌹

🌹ஆகா! "நாராயணன்' என்றால் "வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்', "வாழ்வுக்குப் பின் பிறவிப் பணி தீர்ப்பவன்' என்றல்லவா அர்த்தம் எனப் புரிந்து கொண்டார் நாரதர்.🌹

🌹ஆகவே, நாராயணன்' என்றால்"வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்", "வாழ்வுக்குப் பின் பிறவிப் பிணி தீர்ப்பவன்" என்றே முழு அர்த்தமாகும்.🌹

Sunday, March 28, 2021

எந்திரத்தின் மகத்துவம் மற்றும் அதனுடைய பலன்கள்.

*🔯யந்திரம் ஒரு பார்வை*
*********************************

யந்திரம் என்பது என்ன ..?

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்ரினிக்குள் ஒன்று அடங்கும் , விலகும் , கவரும் ஆற்றல் கொண்டவை, இதில் எவற்றுக்கும் விளக்கு இல்லை .
உதாரணமாக சொல்ல வேண்டுமானால் இடிதாங்கி , தாமிரத்தால் ஆனா கூர்முனை தத்துவும். இது பால ஆயிரம் (வோல்ட் ) மின்சக்தியை கவர்ந்து அதை ஆற்றல் இழக்க செய்கிறது . இதன் கோட்பாட்டில்தான் அனைத்து எந்திரங்களும் பல காலகட்டங்களுக்கு பல சித்தர்கள் ஆராய்ந்து உருவாக்கினார்கள் .

*🔯யந்திரத்தில் பலவகை உண்டு* 

௧. வசிய எந்திரங்கள் 
௨.காப்பு எந்திரங்கள் 
3. தம்பன எந்திரங்கள் 
4. மாரண எந்திரங்கள் 
போன்ற பலவகை உண்டு ,

வசிய எந்திரம் :
கிரக வசியம் , தோழில் வசியம் , இராஜ வசியம் , துபோன்று தனக்கு சாதகமா பல வசியங்கள் செய்யமுடியும் ,

காப்பு எந்திரம் :
கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் , சத்ருக்கள் ( எதிரி ) மிருகங்கள் , பில்லி , சூன்ய ஏவல்கள் போன்றவைகள் பாதிப்புகளில் இருந்து தர்க்காது கொள்ளலாம் .

தம்பன எந்திரம் :
தம்பனம் ( கட்டு ) இதன் மூலம் சிற்றின்ப புனர்வின்போது தாது விழாமல் கட்ட முடியும் இதன்மூலம் பல சித்தர்கள் காயா சித்தி கண்டனர் .மற்றும் எதிரிகளில் செயல்பாடுகளை , தொழிலை , குடும்பத்தை முடக்க முடியும் .

மாரண எந்திரம் :
மாரணம் என்பது மரணத்தை குறிக்கு , அதிக விளக்கம் தேவை இல்லை .

இவைகளை நன்கு அறிந்த உத்தமர்கள் , தம்பனத்தையும் , மாரனத்தையும் செய்வதில்லை , இவற்றில் குரு எந்திரம் , தனலக்ட்சிமி எந்திரம் , குபேர எந்திரம் , ஸ்ரீ எந்திரம் , தட்சணாமூர்த்தி எந்திரம் , வாஸ்து எந்திரம் , தோழில் வசிய எந்திரம் , சத்ரு வசிய எந்திரம் , சர்வ வசிய எந்திரம் ,
முதலியனை முக்கியமானவை , இவற்றை

தங்கம் ( உச்சபலம் )
வெள்ளி ( உச்சபலம் )
தாமிரம் ( சம பலம் )
காரீயம் ( உயரிய பலம் )
போன்ற தகடுகளில் வரைந்து / அச்சிட்டு அதற்க்கு உரிய சஞ்சிவி மூலிகைகள் கொண்டு சாரணை கொடுத்து , பயன்படுத்துவதால் ,

அதிக பலம் பெற்று தொழில் ,தனம் , போன்ற அணைத்து நன்மைகளை அள்ளித்தரும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Saturday, March 27, 2021

14 லோகம் என்பது என்ன?

# *பதினான்கு_உலகங்கள்_என்ன_தெரியுமா..???* 
                         🕉 🙏 💐

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன..!!!

அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா..,??
அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

*பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்:-*
------------------------

1) சத்தியலோகம் - பிரம்மன்

2) தபோலோகம் - தேவதைகள்

3) ஜனோலோகம் - பித்ருக்கள்

4) சொர்க்கம் - இந்திரன் மற்றும் தேவர்கள்

5) மஹர லோகம் - முனிவர்கள்

6) புனர் லோகம் - கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்

7) பூலோகம் - மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்)

*பூமிக்கு உள்ளே / கீழே பாதாளத்தில் 7 லோகங்கள் உண்டு. அவை வருமாறு:-*

1) அதல லோகம்

2) விதல லோகம் - அரக்கர்கள்

3) சுதல லோகம் - அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால்    ஆட்கொள்ளப்பட்ட மகாபலி

4) தலாதல லோகம் - மாயாவிகள்

5) மகாதல லோகம் - புகழ்பெற்ற அசுரர்கள்

6) பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள்

7) ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்.

 

Friday, March 26, 2021

குலதெய்வத்திடம் பிரார்த்தனை வைப்பது எப்படி?

✍️குலதெய்வத்தை வழிபடுவது எப்படி? தங்கள் குலதெய்வம் எது என்று கண்டுபிடிப்பது எப்படி என்று சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள்.
-
குலதெய்வத்தை வழிபடுவது உயர்ந்தநிலை வழிபாடு அல்ல.. இந்துமதம் வகுப்பில் ஏற்கனவே அதைப்பற்றி விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.
-
நான்குவிதமான மனிதர்களும் அவர்களது வழிபாடுகளும் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
-
1.மற்றவர்களுக்கு தீங்கு நேரவேண்டும் என்று வழிபாடு செய்வது (கீழ்நிலை)
-
2. எனக்கும்,என்னை சார்ந்தவர்களுக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது (இடைநிலை)
-
3.எனக்கும் நன்மை ஏற்பட வேண்டும் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது (உயர்நிலை)
-
4. எனக்கு நன்மை ஏற்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறருக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது (உச்சநிலை)
------
பில்லி,சூனியம்,ஏவல் என்று பல வழிகளில் பேய்களை,பிசாசுகளை வழிபடுபவர்கள் கீழ்நிலை மக்கள்.
உயிர்பலிகள்,மந்திரங்கள் மூலம் பேய்.பிசாசுகளை வசப்படுத்தி தீயவழிகளில் அவற்றை பயன்படுத்தி  பிறரை அழிப்பது அல்லது குறுக்கு வழியில் பணம் சேர்ப்பது இவர்களது நோக்கம். கடைசியில் அவர்களுக்கு ஏவல்செய்யும் பேய்களே இவர்களைக் கொன்றுவிடும்.
-
இடைநிலையைச் சேர்ந்தவர்கள் குலதெய்வங்களை வழிபடுகிறார்கள்.
தங்கள் வீட்டில் அல்லது குலத்தில் பிறந்து திருமணமாகாமல் சிறுவயதில் இறந்தவர்கள் குலதெய்வமாக வழிபடப்படுகிறார்கள்.
குலதெய்வங்களை வழிபடுவதன் மூலம் தங்கள் குலம் காக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
குலதெய்வங்களிடம் எல்லையற்றசக்தி இருப்பதாக சிலர் தவறாக பதிவிடுகிறார்கள். அது தவறு.
சக்தி அல்லது ஆற்றல் என்பது கடின தவத்தினால் பாடுபட்டு அடையப்படுவதாகும். 
குலதெய்வங்களிடம் உள்ள சக்தியின் அளவு எல்லைக்கு உட்பட்டது. 
அவர்களால் ஒருசிறிதே உதவ முடியும்.
-
சித்தர்கள்,ரிஷிகள்,மகான்கள்,,குருநிலையை அடைந்தவர்கள்,அரசர்கள்,தன்னலம் கருதாத தலைவர்கள் போன்றவர்கள் காலமானபிறகு மக்கள் வழிபடுகிறார்கள்.
இந்த வழிபாடு உயர்நிலை வழிபாடாகும். மகான்கள் அனைவரிடமும் அன்புகொண்டவர்கள்.
 மகான்களை வழிபடுபவர்களும் அதேபோல பரந்த மனம்படைத்தவர்களாக உள்ளார்கள்.
குருநிலை வழிபாடுகள் படிப்படியாக உயர்வடைந்து தெய்வ வழிபாடாக மாறுகிறது.
முற்காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் பலர் பிற்காலத்தில் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள்.
தேவர்,தேவி வழிபாடு போன்றவை உயர்நிலை வழிபாடாகும்.
-
அனைத்திலும் உச்சநிலை வழிபாடு என்பது உலகத்திலுள்ள அனைவரையும் வழிபடுவதாகும். 
உலகம் ஜடப்பொருளாகத்தெரியாமல் உணர்வுப்பொருளாகத் தெரிகிறது. மனிதர்கள் மனிதர்களாக தெரிவதில்லை தெய்வங்களாக தெரிகிறது.
நான் அழிந்தாலும் பரவாயில்லை மற்றவர்கள் வாழவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருக்கும். 
இந்த வழிபாட்டையே வேதங்கள் யக்ஞம் என்கிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் மிகச்சிலரே இந்த வழிபாடு செய்கிறார்கள்.
-
தாழ்ந்தநிலை வழிபாட்டிலிருந்து உயர்ந்தநிலை வழிபாட்டை நோக்கி மனிதர்கள் முன்னேற வேண்டும்.
குலதெய்வங்களை வழிபடுபவர்கள் அதிலேயே நிற்கக்கூடாது. 
உயர்வழிபாடு செய்பவர்கள் குலதெய்வங்களை வழிடத்தேவையில்லை.அதனால் குலதெய்வம் சாபமிடும் என்று பயப்படத்தேவையில்லை. ஆனால் உயர்நிலைவழிபாடு செய்யாதவர்கள் தொடர்ந்து குலதெய்வங்களை வழிபடுவது நல்லது.
-
மேல் படிக்கு செல்லவேண்டுமானால் கீழ்படியில் உள்ள காலை எடுக்கவேண்டும்.அதேபோல உயர்நிலை வழிபாடு செய்பவர்கள் தாழ்ந்தநிலை வழிபாடுகளை விட்டுவிட வேண்டும். அப்படி விடாவிட்டால் உயர்நிலையைக்கு செல்ல முடியாது.
ஆனால் கீழ்படியில் உள்ளவன் குலதெய்வ வழிபாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அதைவிட்டுவிடக்கூடாது.
அப்படி விட்டுவிட்டால் குலதெய்வங்களில் கோபத்திற்கு ஆளாக நேரும்.
-
இன்னும் உச்சநிலை வழிபாடுசெய்பவர்கள்,உயர்நிலையில் உள்ள தெய்வங்களை வழிடத்தேவையில்லை.அதனால் தெய்வங்கள் கோபப்படுவதில்லை.
--

Tuesday, March 23, 2021

தந்தையின் இறுதி காலத்தில் செய்ய வேண்டிய கடமை.

தந்தையின்  இறுதி காலத்தில்
தேவை அன்பும், ஆரவணைப்பும்.

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். 

எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள். 

பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.

ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.

குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு 
மரியாதை செய்யுங்கள். 

அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!

மனதை கவர்ந்தது.
முகநூல் பொது பக்கத்தில்.

Monday, March 22, 2021

மூச்சு பயிற்சியின் முக்கியமான ரகசியம்.

(திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக:)

பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது.
நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.

பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.

பிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லை. மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம். பிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.

நம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறைஅறிந்தோம் இல்லை. அன்பு கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம். குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.
பிராணாயாமப் பயிற்சி செய்பவர், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாய் மாறும்.

வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாய்த் தோற்றம் அளிப்பர். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர் உடல் காற்றை விட மென்மையாய் மாறும். எல்லோராலும் விரும்பப்படுவர். பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.

நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு பெறுவோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அங்கே இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும். பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.

இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம். இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.

நம் உடலின் எல்லா பாகங்களிலும் காற்று நிரம்பும் வண்ணம், மிகுதியாகக் காற்றை உள்வாங்கிப் பூரகம் செய்வோம். பூரகத்தின் மறுபகுதியான இரேசகத்தினை, காற்று உடல் உள்ளே பதியும்படி மெலிதாக வெளியேறச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே விருப்பத்துடன் வயிற்றில் கும்பகம் செய்தால் திருநீலகண்டப் பெருமானின் அருளைப் பெறலாம்.
பிராணாயாமத்தை விருப்பத்துடன் முறையாகச் செய்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

இடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்வியோடு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால் ஆன்மிக உண்மை புலப்படும். உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன் செய்து வந்தால் ஆன்மிக உண்மை விளங்கிடும்.
பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடல் தளர்ச்சி அடையாது.

இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு பூரகம் செய்வோம். பிறகு உள்ளே இருக்கும் பிராணன், அபானன் ஆகிய காற்றை நிறுத்தி கும்பகம் செய்வோம். இந்தப் பயிற்சியை உடல் வளையாமல் நேராக அமர்ந்து செய்து வந்தால் யமனுக்கு அங்கே வேலை இல்லை. பத்து நாடிகள் எனப்படுபவை – சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.
தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதல
ே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான். பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.

சிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம். பிராணாயாமப் பயிற்சி மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு நீளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.

பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் முச்சு, இரவும் பகலும் தன் விருப்பப்படி செயல்படுகிறது. அந்த பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால் பகலும் இரவும் வீணாகக் கழியாது. நம் வாழ்நாள் பொழுது பயனுள்ளதாய் இருக்கும். இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்
பட்டுள்ளது. யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.

---------------------------------------------
-------

ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே

பிராணன் அபானன் என்று இரண்டு (மூச்சுக்காற்று ) குதிரைகள் உண்டு. இவைகளை வீசி பிடித்து ஓட்டும் திறமை அறிவாரில்லை. இந்த பிராண ஜெயம் கொண்ட குருவிடம் பணிந்து சரணடைந்து அவர் அருளால் பிராணனை ஆளும் ஜெயம் காணலாம்.

பின் குறிப்பு...
வாழ்கையில் சாதிக்க வேண்டியது இதுவே..

---------------------------------------------
------------------------------------

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே

பறவையை விட வேகமான குதிரையான பிராணானை சிரசை நோக்கி செலுத்தினால் கள் உண்ண வேண்டியதில்லை. கள் போன்றவை உடல் மகிழ்ச்சி தரும். இது கீழான சுகம். மேலே செல்லும் பிராணன் ஆத்மா சுகம் அளிக்கும். சுறுசுறுப்பு ஏற்ப்பதும். சோம்பல் தவிர்க்கும். உள்ளதை சொல்லிவிட்டேன் இறைநிலை அடைய விரும்புபவருக்கு..

---------------------------------------------
--------------------------------

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.

பிராண சக்தி மனதில் அடங்க .. மனதை அடக்க .. ஒருவருக்கு இறப்பு இல்லை.
பிராண சக்தி இயக்கத்திற்கு தேவை. இந்த சக்தி பிறவி விடுதலைக்கு அடிப்படை. ஆகவே பிராண சக்தியை மாயையுடனும் மயக்கத்துடன் சேராமல் செய்தால் பிறப்பு இறப்பு இல்லை.

சிவசிவ சிவசிவ என்று அடங்குவோம்.

---------------------------------------------
--------------------------------
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

பூரகம் - Breathin 16 (வெளியே உள்ள தூயகாற்று உடலினுள் புகுதற்கு உரித்தாய செயல்.)
கும்பகம் - Hold 64 உள்ளே புகுந்த காற்று அங்கே அடங்கி நிற்றற்கு உரித்தாய செயல்.)
திரேசகம் - Breathout 32 (உள் நின்ற காற்று வெளிப் போதற்கு உரித்தாய செயல்.)

குறிப்பு:: குரு இல்லாமல் செய்ய தொடங்க வேண்டாம்...

---------------------------------------------
--------------------------------

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே

பிராரனை அடக்கி ஆளும் வல்லமை பெரும் ஒருவன் காலத்தே அவனது உடல் முதுமை எய்தாது..
சிந்தை தெளிய குருவின் அருள் பெற பரவெளி அதுவும் வெளிப்படும்..முக்தி அடைவான்...

---------------------------------------------
---------------------------------

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்துஅது விட்டன வும்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

மனம் எங்கே இருந்தாலும் இறைவன் சிந்தனயில் அது அடங்க :
இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் கும்பகமும் ரேசகசக்கமும் செய்ய உடலானது அழிவதில்லை. ஓம் கார நாதம் ஒலிக்கும் .. ஆன்மா அவன் நிலை அடையும்.

---------------------------------------------
----------------------------

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார்இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.

இடைகலை பிங்கலை வழியாக இழுத்துப் பூரித்து, காற்றை உள்ளே கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் இல்லை. அவ்வாறு காற்றைக் கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் வாழ்வின் அளவை கூட்டமுடியும் இவர்கள் காலனைக் கடக்கும் இலட்சியத்தை உடையவராவர்.

---------------------------------------------
------------------------------

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே

பூரக இரேசகங்களை முற்கூறியவாறு இடைகலை பிங்கலைகளால் செய்தலே முறையாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள மாற்றத்தை குருவிடம் தெரிந்து பயிற்சி செய்யவும்.

16 மாத்திரை பூரகம் ::64 மாத்திரை இரசித்து:: 32 மாத்திரை விருப்பத்தோடு வயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே நீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்
1:4:2

---------------------------------------------
-----------------------------

இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே.

ஊழ் வினை நீக்ககி இறைவனை ஆடைவதற்கும் கொடுக்கப்பட்ட உடலை கொண்டு தளர்ச்சியடையாமல் இரேசகம் செய்து, தசை நாடிகள் விம்முமாறு பூரித்து பிராணனும் அபாபனும் சீராக்கப்பட்டு நிற்க எம்மான் அருகில் வரான்.

பிராணன் :(தச வாயுக்களும் அதன் தன்மைகளும் பிராணன் ஏனைய வாயுக்களுக்கு எல்லாம் தலைமையாக இருந்து அனைத்து உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் ரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை அளித்து வருகிறது.)
அபானன் (குண்டலினி போன்ற மா சக்திகளைப் பெறுவதற்கு இன்றியமையாதது மட்டுமின்றி குறிப்பிட்ட சில பயன்களுக்காக அபானன் வெளியேறி விடாமல் இருக்கச் சில பந்தங்களை இயற்றி அப்பலன்களை அடைவாரும் உண்டு.

---------------------------------------------
--------------------------------

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

வாயுவை அடக்கி நெறிப்பட ஆளும் திறம் பெற்றால் மலங்கள் நீங்கி ஆன்மா தூய்மை பெரும். இவர்களை சுற்றி இருக்கும் ஒளியானது சிவக்கும் ~தங்க நிறம் பெரும். உடல் இளமையாக இருக்கும். உரோமம் கருக்கும். இவர்களது ஆன்மாவானது சிவமாய் திகழும்.

---------------------------------------------
-------------------------------

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே.

மீண்டும் மீண்டும் 1 : 4 : 2 பற்றி கூறுகிறார்...
ஆரம்ப கட்டமாக
பூரகம் :: 4 அங்குலம் மூச்சை உள்வாங்குவது ...
கும்பகம் :: 12 அங்குலம் / மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது ..
ரேசகம் :: 8 அங்குலம் / மாத்திரை அளவு வெளியே விடுவது ..

---------------------------------------------
---------------------------------

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே.

பன்னிரண்டு அளவு சுவாசம் உள்ளே செல்லவும் வெளியே செல்லவுமாக இருக்கிறது. சூர்ய கலை சந்திர கலை என்று வெறும் காற்றின் பயணமாய் இருக்கிறது. ஆன்மா விழித்த (சகஸ்ரம் அடைந்த) பின் பிராணன் சக்தி இரவு பகல் என்று பாராமல் இயங்க ஆரம்பிக்குமே.

---------------------------------------------
----------------------------------- 
#பிராணன்
?
**************

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
புளிங்கொத்துக் காயும் பழுக்கினும் பிஞ்சாம்.
இந்த சித்தர் பாடல் பிராணாயாமத்தின்  பலனைத் தெளிவாகவும், எளிமையாகவும் சொல்கிறது. சாதாரணமாக மூச்சை இழுத்து, உடனே வெளியே விடுகிறோம். இவ்வாறு மூச்சு விடுவதிலேயே நமக்கு இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்றால், உள்ளே இன்னும் சிறிது நேரம் வைத்திருந்தால் காற்றிலுள்ள பிராணசக்தி முழுவதும் நுரையீரலில் உள்ள காற்றறைகளால் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குக் கிடைத்தால் எவ்வளவு சக்தி கிடைக்கும்.

சாதாரணமாக நாம் மூச்சுவிடும் போது 79% நைட்ரஜன் வாயு உள்ளே சென்று அப்படியே திரும்பிவிடுகிறது.

பிராணவாயுவோ 20% உள்ளே போய் 16% வெளியே வருகிறது. கரிமில வாயு 0.04 உள்ளே போய் 4.04% வெளியே வருகிறது. இந்தக் கணக்கை உற்று கவனித்தீர்கள் என்றால் ஒரு சூக்கும இரகசியம் விளங்கும். அதாவது சுவாசிக்கும் போது நம் நுரையீரல் ஈர்த்துக் கொண்டது 4% பிராணவாயுவை. 

எந்த அளவு பிராணவாயுவை ஈர்த்துக் கொண்டதோ அந்த அளவு கரிமிலவாயு வெளியேறுகிறது. அதிக அளவு பிராணவாயுவை நாம் கும்பகம் செய்வதால் ஈர்த்துக் கொள்கிற நுரையீரல், அதே அளவு கரிமிலவாயுவாகிய அபானவாயுவை வெளியேற்றிவிடும். இது நம் ஆரோக்யத்திற்கு மிகவும் பேருதவியாக இருக்கும். ஒரு மனிதன் சுவாசத்தை 4 வினாடி இழுத்து 4 வினாடி இருத்தி? 4வினாடி வெளியிட்டால், அவன் வயது ஐம்பது. 4 வினாடி இழுத்து 8 வினாடி இருத்தி 6 வினாடி வெளியிட்டால் அவன் வயது எழுபத்தைந்து. 4 வினாடி இழுத்து 16 வினாடி இருத்தி 8 வினாடி வெளியே விட்டால் அவன் வயது 100. இப்படியே காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்து கொள்ள வேண்டியது. இது சித்தர்கள் கூற்று.

இனியும் ஒரு கணக்கைத் தருகிறார்கள். அதாவது, பொதுவாக நாம் இடது நாசியில் 16 அங்குலமும், வலது நாசியில் 12 அங்குலம், சுழுமுனையில் 8 அங்குலம் என்று சராசரியாக நிமிடத்திற்கு 15 சுவாசங்கள் வீதம் ஒரு நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்களை நடத்துகிறோம்(இது சித்தர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சுவாசக் கணக்கு). சராசரியாக 12 அங்குலம் சுவாசம் வெளியேவிடுவதில் 4 அங்குலம் குறைந்து 7200 சுவாசம் நஷ்டமாகி 14400 சுவாசமே உள்ளடங்குகிறது என்கிறார்கள். இந்த நஷ்டக் கணக்கை சரி செய்யக் கண்டுபிடிக்கப்பட்ட வழியே பிராணாயாமம்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே !

96 தத்துவங்களுக்குள் அடங்கிவிடுகிறான் மனிதன். அவை, அறிவு -1, குணம் -3,வினை -2,மண்டலம் -3, மலம் -3, தோஷம் -3, ஏசனை -3, கரணம் -4, பூதங்கள் -5, பொறிகள் -5, தொழில் -5, கோசங்கள் -5, நிலை -5, அவஸ்த்தை -5, புலன்கள் -5, கன்மேந்திரியம் -5, ஆதாரம் -6, தூண்டல் -8, நாடிகள் -10, காற்று -10 என்பனவாம்.

இதில் 10 காற்றுகளை(வாயு) தசவாயுக்கள் என அழைப்பர். அவை 1 பிராணன், 2 அபானன், 3வியானன், 4 உதானன், 5 சமானன், 6 நாகன், 7 கூர்மன், 8 கிருகரன், 9தேவதத்தன், 10 தனஞ்செயன் என்பனவாகும். மனித உடல்கள எதனால் இயக்கப் படுகின்றன? காற்றால்தான. இதையே ஒரு சித்தர் ''காயமே இது பொய்யடா ! வெறும் காற்றடைத்த பையடா !'' என்று உறுதிப் படுத்துகிறார். 

மனித உடல் முழுவதும் காற்றானது நீக்கமற நிறைந்து இயங்கியும், இயக்கியும் வருகின்றது.மனித இயக்கத்திற்கு ஆதார சக்தி காற்றுதான் என்று அனைத்து சித்தர்களுமே ஒப்புக் கொள்கிறார்கள். மனதை இயக்குவதும் சுவாசிக்கும் காற்றுதான். சித்தத்தின் சலனத்திற்கு காரணம் காற்றுதான். 

காற்றைக் கவனித்து தியானிப்பதே வாசியோகம் எனப்படும். அதாவது வாசியை கவனித்து அதனோடு ஒன்றுதல். வாசி என்ற சொல்லைத் திருப்பினால் சிவா அல்லவா, எனவே வாசியோகமே சிவயோகமாகும்.

தியானம் செய்ய சுத்தமான காற்றிருந்தாலே போதும் வேறென்ன வேண்டும் என்பார்கள். மூச்சு இல்லையேல் பேச்சு இல்லை. அதிகாலையில் தியானம் செய்வதன் சூட்சுமம் என்னவென்றால், அதற்கும் காற்றுதான் காரணம்.

அதாகப்பட்டது, சாதாரணமாக காற்றில் ஆக்ஸிஜன் இருக்கிறது. ஆனால் அதிகாலையில் அதோடுகூட ஓசோனும் சேர்ந்து கிடைக்கிறது. அப்போது அது அமிர்தக்காற்று எனப்படுகிறது. அமிர்தம் உண்ட பலன் அதற்கு உண்டு. அதாவது நீடித்த ஆயுள் அல்லது மரணமில்லா பெருவாழ்வு கிடைக்க உதவியாக இருக்கும். இந்த அமிர்தக் காற்றே தேவர்கள் சுவாசிக்கும் காற்று என்று சொல்லப்படுகிறது. 

அமிர்தக் காற்றில் பஞ்சபூத சக்திகள் நிரம்பித் ததும்பி வழிகின்றன.
சுவாசம்தான் மனிதனின் ஆயுளை நிர்ணயம் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்களே. ஒரு நாயானது ஒருநாளைக்கு 72000 தடவை சவாசித்து 14 வருடங்களில் மரித்துவிடுகிறது. குதிரையானது ஒருநாள் ஒன்றுக்கு 50400 தடவைகள் சுவாசித்து 30 லிருந்து 35 வயதுகாலம் வாழ்ந்து மரிக்கிறது. 

யானை 28800 தடவைமட்டுமே சுவாசிப்பதால் 100 வருடங்கள் வாழ்ந்து விடுகிறது. ஆமை ஒருநாள் ஒன்றுக்கு 7200 தடவைகள் மட்டுமமே சுவாசிப்பதால் 400 வருடங்கள் உயிர் வாழ்கிறது. பாம்புகள் அதையும் மிஞ்சி 4320 தடவைகள் மட்டுமே சுவாசித்து சுமார் 500 முதல் ஆயிரம் வருடங்கள் கூட உயிர் வாழ்வதாக சொல்லப் படுகிறது.

மனிதனுக்கு விதிக்கப்பட்ட சுவாசமாக சித்தர்கள் குறிப்பிடும் எண்ணிக்கை 21600 ஆகும். அப்படி சுவாசிக்கும் மனிதன் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்கின்றனர். அதே சுவாசத்தை உற்று கவனித்து இழுத்து நிதானமாக மூச்சுவிட பழகிக் கொண்டால் ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர். உதாரணமாக 10800 தடவைகள் நிதானமாக நன்றாக மூச்சுவிட பழகிவிட்டான் என்றால் 240 ஆண்டுகள் உயிர் வாழலாம். 5400 தடவையே நாள் ஒன்றுக்கு சுவாசிப்பவன் 480 ஆண்டுகள் உயிர் வாழலாம் . இதையே திருமூலர் சித்தர்

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே!'' என்று குறிப்பிடுகின்றார். நமது சரீரம் அல்லாது மேலும் நான்கு சூக்கும சரீரங்கள் நமக்கு உண்டு என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தம் ஐந்து. அன்னமய கோஷம் -இது நம் தூல தேகமாகும். பிராணமய கோஷம் - பிராணனும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. மனோமய கோஷம் - மனமும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. விஞ்ஞானமய கோஷம்- புத்தியும், ஞானேந்திரியங்களும் கூடி நிற்பது. ஆனந்த மய கோஷம் - பிராணவாயுவும், சுழுத்தியும் கூடி நிற்பது.

பஞ்சபூத சக்தியாலும், அன்னத்தாலும் நரம்பு, தோல், இரத்தம், மாமிசம், நகம், ரோமம், சுக்கிலம் ஆகிய தாதுக்களால் ஆன தூல தேகமே அன்னமய கோஷம். அந்தக்கரணம், ஞானேந்திரியங்கள், பிராணாதிகள், கர்மேந்திரியங்கள் போன்றவற்றின் சேர்க்கையே சூக்கும சரீரங்களாகிய பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்றும். நம் தூல சரீரத்தின் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற அறிவுக் கருவிகளான ஞானேந்திரியங்களையும், வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபதம் என்கிற கர்மேந்திரியங்களையும் இயக்குவது பிராணனே. நாம் தூங்கினாலும், விழித்திருந்தாலும் நம் இதயத்தை இயங்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தை தடையில்லாமல் நடைபெற வைப்பதும், நுரையீரலை இயக்கி மூச்சை முறைப்படி நடத்துவதும் பிராணனே. இப்படி உடலின் சகல உள்வெளி இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராணனே பிராணமய கோஷம். அன்னமய கோஷத்தைக் கலந்து பரவி தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது  பிராணமய கோஷம், அன்னமய கோஷத்தின் ஆத்மா பிராணமய கோஷம். இந்த அன்னமய கோஷத்தை விட்டு உணர்வை உள்நிலைப்படுத்துபவன் பரம்பொருளே. தான் இந்த உடம்பு இல்லை என்கிற மெய்யுணர்வு வளர்ச்சிக்கு நுட்பமாக உடம்பினுள்ளும் வேறாகி நிற்கும் பிராணமய கோஷம் காரணமாகிறது.

சித்தர்கள், மகான்கள், யோகிகள் தங்கள் உடலை மாயமாக்கி மறையும் சித்துக்கு அன்னமய கோஷம் பிராணமய கோஷத்தில் அடங்குவதுதான் காரணம்.
சித்துக்களைக் கடந்து, அதற்கு மயங்காதவர்கள் பிராணமய கோஷத்தையும் கடந்து உணர்வை உள்ளே செலுத்த மனோமய கோஷம் ஆட்கொள்கிறது. 

மனிதனுக்கு எது சரி, எது உணமை என்பதைத் தெளிவுபடுத்துவத
ே மனோமய கோஷம் தான். மனம் அழிந்து உணர்வு தலைதூக்குமிடம் விஞ்ஞானமய கோஷம். நம் பாதை சரிதானா ? என்ற கேள்வியோடு இலட்சியத்துக்கான முடிவு எடுக்கப்படுவது விஞ்ஞானமய கோஷத்தினால்தான்.

விஞ்ஞானமய கோஷத்தை எட்டுபவர்களுக்கே உள்ளும் புறமும் ஜோதியைக் காண வாய்ப்பு கிடைக்கும். நாம் எடுக்கும் முயற்சியின் வெற்றியின் மகிழ்ச்சியை உணரும் இடமே ஆனந்தமய கோஷம். யோகத்தின் எட்டு நிலைகளையும் கடந்தவர்களுக்கே ஆனந்தமய கோஷத்தை அனுபவிக்க முடியும். இந்திரியங்களைக்  கட்டி மனத்தை வென்று நம் உடலில் உயிராய் கலந்து நிற்கும் இறைவனை உணர்ந்து, கலந்து, இன்புற்று இருக்கும் நிலையே ஆனந்தமய கோஷத்தில் உணரப்படுகிறது. இந்த கோஷங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது ஆன்மா. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மனம் உள்ளே ஒடுங்க ஒடுங்க உணர்வுகள் ஒடுங்குகின்றன. உணர்வுகளின் ஒடுக்கமே சமாதி நிலை.
இவ்வளவும் பிராணனின் கைவல்லியத்தால்தான் விளைகிறது.

வாழ்கையில் சாதிக்க வேண்டியது இதுவே..
நீங்கள் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்... 

குறிப்பு:-
-------------
மேலும் திருமூலர் முதல் பதினெண் சித்தர்கள்  பெருமானால்   உலகுக்கு அருளப்பட்ட அபூர்வ  யோக முறையான பிராணாயாம கலையை முழுமையாக தனிப்பட்ட என்னுடைய திருமந்திர whatsaap வகுப்பில் நேரடியாக கற்பிக்கிறேன். கற்க விரும்புபவர்கள் கற்று கொள்ளுங்கள். உலகில் எங்கிருந்தாலும் நேரடியாக whatsaap மூலம் கற்று கொள்ளும் அறிய வாய்ப்பு. கற்க விரும்புபவர்கள் சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம் குமார் அவர்களை (+918903834667) தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வகுப்பில் இணையவும்.

         - சித்தர்களின் குரல் shiva shangar

  - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து 
    சித்தர்களின் குரல் shiva shangar

ஓம் நமசிவாய

Sunday, March 21, 2021

ஏழுமலையானின் நித்திய சேவை ஆபரணங்கள்.

#ஏழுமலையானின்_நித்ய_சேவையில்_சுவாமி_ஆபரணங்கள்...

1. தங்க பத்ம பீடம் (திருவடியின் கீழ் இருக்கும்)

2. தங்கத்திலான திருப்பாதங்கள் 

3. சிறு கஜ்ஜினுபுராலு : திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்.

4. பாகடாலு : கால்களில் அணியும் ஆபரணம்.

5. காஞ்சி குணம்: அரைஞாண் கயிறு 

6. நாகா வேஸ்பண உதரபந்தம் - மத்தியாபரணம் 

7. சிறுகண்டல தசாவதார ரசனா - தசாவதாரம் , ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண்கயிறு.

8. சிறிய கழுத்து மாலை 

9. பெரிய கழுத்து மாலை - எம்பெருமான்
 வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.

10. தங்க புலி நக மாலை- திருமார்பில் அணியப்படும்.

11. ஐந்து வரிசை கோபு ஹாரம் - தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.

12. தங்க யக்னோ பவீதம்- பூ நூல் - ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.

13. சாதாரண பூணூல்.

14. துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.

15. சதுர்புஜ லட்சுமி மாலை.(108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)

16. 108 அஷ்டோத்தர சத நாம மாலை.

17.சஹஸ்ர நாம மாலை - 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை.

18. சூர்ய கடாரி - தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம்.

19. வைகுண்ட ஹஸ்தம்- வலது கை 

20. கடி ஹஸ்தம் - இடது கை 

21. கடியாலம்- கங்கணம் (வளையல்)

22. நாகாபரணம் 

23. புஜ கீர்த்திகள் 

24. கர்ணபத்திரம்- (காதுகளில் அணியும் ஆபரணம்)

25. சங்கு சக்ரம் - பின்னிரு கைகளில்

26. கிரீடம் (தலைக்கு)

ஓம் நமோ வேங்கடேசாய !

Friday, March 19, 2021

திருமணம் குழந்தை வரம் தரும் வக்ரகாளியம்மன்.

🙏🏼🔱#திருமணம்_குழந்தை_வரம்_தரும்_வக்கிரகாளியம்மன🙏🏼🔱

🔱தொண்டை நாட்டிலுள்ள 32சிவத்தலங்களுள் 30வது தலமாகவும் 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதும் சமயக்குறவர் நால்வரில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிறப்புடைய திருத்தலமாக விளங்குகிறது திருவக்கரை ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர் மற்றும் வக்கிரகாளியம்மன் கோயில். 

🔱விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரை கிராமத்தில் வராக நதி என்றழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் 10 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 

🐎ஆதித்யசோழன் என்னும் சோழ மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலை கட்டி உள்ளான். 

🔱இங்கு இறைவன் சந்திரமெளலீஸ்வரர் கிழக்கு நோக்கி மூன்றுமுக லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

🔱#இது_எங்கும் காணமுடியாத காட்சி.

 
ராஜகோபுர வழியாக நுழைந்தவுடன் வக்கிரகாளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 

பொதுவாக காளிகோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். 

ஆனால் ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகேவக்கிரகாளியம்மன் அமைந்துள்ளது இங்கு மட்டும்தான்.  

🔱வக்கிராசூரன் என்னும் அரக்கன் சிவபெருமானை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்தான். 

#தனது தவ வலிமையினால் தன் முன் தோன்றிய சிவபெருமானிடம் சாகா வரம் பெற்றான். 

தான் பெற்ற வரத்தைகொண்டு தேவர் முதலானவர்களை கொடுமை செய்துவந்தான்.

அவன் செய்த கொடுமைகளை தாங்கமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். 

🔱சிவபெருமான் வைகுண்ட வாசனான மகாவிஷ்ணுவை அழைத்து வக்கிராசூரனை வதம் செய்யும்படி கூறினார். 

அவரும் சிவபெருமானின் வார்த்தையை கேட்டு மகாவிஷ்ணு வக்கிராசூரனிடம் போரிட்டு தனது ஸ்ரீசக்கரத்தை பிரயோகம் செய்து அரக்கனை அழித்தார்.

#இங்கு_மகாவிஷ்ணு வரதராஜபெருமாளாக கோயிலின் பின்புறத்தில் மேற்குநோக்கி சங்கு சக்கரத்துடன் ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். 

வக்கிராசூரன் மறைவுக்கு பிறகு அவனின் தங்கையான துன்முகி தன் சகோதரனைப்போலவே கொடுஞ்செயல் புரிந்துவந்தாள். 

அவளைவதம் செய்யும்படி சிவபெருமான் பார்வதியிடம் கூற பார்வதிதேவியும் அரக்கி துன்முகியை வதம்செய்ய சென்றார். 

அப்பொழுது துன்முகி கருவுற்றிருந்தாள். 

சாஸ்திர முறைப்படி கர்ப்பிணியையோ, சிசுவையோ வதம் செய்யக்கூடாது. 

🔱#எனவே_அகிலாண்ட_நாயகியான_பார்வதிதேவி துன்முகியின் வயிற்றைக்கிழித்து அவள் வயிற்றிலிருந்த சிசுவை தனது வலது காதில் குண்டலமாக அணிந்துகொண்டு, பின்புஅரக்கியான துன்முகியை வதம் செய்தாள். 

வக்கிராசூரனின் தங்கையை அழித்ததனால் வக்கிரகாளியாக அங்கேயே அமர்ந்துவிட்டாள். 

அவள் பெயராலேயே இந்த ஊர் திருவக்கரை என்று அழைக்கப்படுகிறது.

#தோஷம்_நீக்கும் பிரார்த்தனை:

வக்கிரமாக அமையப்பெற்ற கிரகங்களால் பல்வேறு பாதிப்புக்கு ஆளானவர்கள் இத்தலத்தில் வக்கிரமாக அமையப்பெற்ற தெய்வங்களை வழிபட்டு, வக்கிரமான கட்டுப்பட்டுள்ள இக்கோயிலை வலம் வந்தால் துன்பங்கள் நீங்க பெற்று வளமான வாழ்வு பெறுவார்கள். இது வக்கிரதோஷ நிவர்த்தி தலமாகும்.

🔱#திருமண_தோஷம்:

திருமணமாகாதவர்கள், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோயிலில் உள்ள துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் பூஜை செய்துவந்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை, 

நினைத்த காரியம் கைகூடபௌர்ணமி தினத்தன்று வக்கிரகாளியம்மனை தொடர்ந்து 3 மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்து வந்தால் எண்ணிய காரியம் கைகூடும். 

அதனாலேயே பௌர்ணமி அன்று இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது கர்நாடகம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இந்த திருக்கோயிலில் தனியாக அமைந்துள்ள தீபலட்சுமியின் கோயிலில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இராகு காலத்தில் விளக்கேற்றி அம்மனை கும்பிட்டு, மாங்கல்யம் கட்டி பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

இந்த அண்டசராசரத்தில் சுழன்று கொண்டிருக்கிற ஒன்பது கிரகங்களுக்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. 

அதன்படி ராகு, கேது இரண்டிற்கும் அதிதேவதை காளி. 

எனவே இந்தகோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலதுபக்கமாக 5 முறையும், இடது பக்கமாக 4 முறையும் வலம் வந்து தொழுது வணங்கவேண்டும். 

🙏🏼#குண்டலினி_சித்தர்_சன்னதி:
 
கருவறைக்கு தென்திசையில் குண்டலினி மாமுனிவர் என்னும் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. 

தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மயிலம், இரும்பை, திருவக்கரை ஆகிய ஊர்களில் இவ்வகை கோயில்கள் உள்ளன. 

சித்தர்கள் இறைவழிபாட்டில் நமக்கு குருவாக விளங்குபவர்கள். 

அத்தகைய பெருமைமிக்க சித்தர்களில் ஒருவரின் ஜீவசமாதி இந்த கோயிலில் அமைந்துள்ளது சிறப்பு.்🙏🏼

Thursday, March 18, 2021

அனைத்து விதமான கெட்ட சக்திகளிடமிருந்து காப்பாற்றக்கூடிய காளிமந்திரம்

அனைத்து விதமான கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சுலபமான மந்திரம் தான் காளி கட்டு மந்திரம். உங்களை நீங்களே பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு செல்வதற்கான காளி கட்டு.நம்மை பிடிக்காதவர்கள்,நம்முடைய விரோதிகள், நம் மேல் பொறாமை கொண்டவர்கள், நம்மை அழிப்பதற்காக நம்மேல் ஏவிவிடும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் யாவும் நம்மை தாக்காமல் இருக்கவும், நம்மையறியாமலேயே நம்மை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் நம்மை தாக்காமல் இருக்கவும் நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. இப்படி அனைத்து விதமான கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சுலபமான மந்திரம்தான் காளி கட்டு மந்திரம். உங்களை நீங்களே பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு செல்வதற்கான காளி கட்டு மந்திரம் இதோ..

“ஓம் பஹவதி! பைரவி!!
என்னை எதிர்த்து வந்த எதையும் கட்டு,
கடுகென பட்சியை கட்டு, மிருகத்தைகட்டு
ஓம், காளி ஓம், ருத்ரி ஓங்காரி, ஆங்காரி,
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு!
சத்ருவை கட்டு, எதிரியை கட்டு,
எங்கேயும் கட்டு!
சிங் வங் லங் லங்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம”
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை நாம் வெளிப்படையாக உச்சரிக்காமல் நம் ஆழ் மனதுக்குள் பத்து நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். தினந்தோறும் நீங்கள் இதனை தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றத்தினை உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும்.

Wednesday, March 17, 2021

குட்டிக்கதை ,உப்பாய் இரு.

*குட்டி கதை -  உப்பாய் இரு*

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் *தலை* கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது *உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது, பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாராக இரு* என்று கட்டளை போட்டது *தலை*. ஏனென்று மன்னன் கேட்டான். நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார் என்று பதில் வந்தது. இதற்குத் தீர்வே இல்லையா? என்று மன்னன் முறையிட்டான். *தலை* முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப்படும் என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடா முயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா? என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள் என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள் என்று சொல்லி விட்டு தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்ட போது. எனக்கு நினைவில்லை, ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன என்று சொன்னது. அப்போது மன்னன் நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய் என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான். ஆமையும் கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

*நீதி:-*
நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது.

Tuesday, March 16, 2021

மனம் செய்யும் மாயாஜாலம்.

ஒரு தெரு நாய்  சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே
திரிந்து கொண்டிருக்கும்,

அது அந்த 
ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தும் வந்தது,

இப்படியாக 
வாழ்ந்து வந்த காலத்தில்,
அந்த ஊரின் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது,

அந்த ஊரில் அனைவருமே 
பத்து நாட்களுமே விரதம் இருந்தார்கள்,

விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை 
நாய்க்கு போடக்கூடாது 
என்ற ஒரு நம்பிக்கையில்,
யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவே இல்லை,

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால், 
பசி தாங்க முடியாமல்,

கோயிலின் 
ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது,

அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் பண்ணி, 

இராமேஸ்வர 
தல மகிமையை விளக்கமாகவே பேசினார்கள்,

அதனை 
அப்போது,
அந்த நாயும் காது கொடுத்தே கேட்டதாம் !!

ஆஹா !! இராமேஸ்
வரத்துக்கு இத்தனை மகிமையா ?? 

எல்லோரும் போகனும்ணு சொல்றாங்களே !!  

நாமும் தான் இப்படியே எச்சில் இலையை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன ?? 

போகிற வழிக்கு
ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா ??
என்று 
எண்ணிய
படியே,

இன்றிலிருந்து 
பத்து நாட்களும் விரதமாகவே இருந்து, 

திருவிழா 
முடிந்ததும்,
கண்டிப்பாக இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு செய்தது,

தினமும் 
தொடர்ந்து
கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்கும்,

நாளடைவில்
அதற்கு 
இராமேஸ்
வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,

விரதத்தில் இருந்ததால்,
பசி கொடுத்த வைராக்கியம் 
வேறு இருப்பதால், 

திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

திருவிழா பத்தாம் நாள் முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள், 

நாயும் இராமேஸ்வரம் புறப்படத் 
தயாராகி நடை பயணத்தை தொடங்கியது,

முதல் அடி எடுத்த வைத்த பொழுதே, 

ஒரு வீட்டின் பின் பக்கத்தில் 
*"பொத்"* என்று ஒரு சத்தம் கேட்டது,

திரும்பிப் 
பார்த்தால்,

ஆஹா !! 
என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி 
விருந்தாக 
இருக்கும் போலிருக்கிறதே !! 

நிறைய வேறு 
மிச்சம் வைத்து 
இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான் !! என்று எச்சில் இலையை 
தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாயை வைத்து கொண்ட படியே,

நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம்  போயிருந்தால்,

இந்த கறி விருந்து கிடைத்திருக்குமா ?? என்றே நினைத்து கொண்டதாம் !!

இந்த நாய் தான் 
நமது ஆழ்மனம்,

நம் மனம் இருக்கிறதே
ஆட்டம் போட 
எதுவும் கிடைக்காத பொழுது,

ரொம்ப அடக்கமாகவும், சுவாமி மீது பக்தி பண்ணுவது 
போலவும்,

நம்மை போல புண்ணியசாலி 
யார் இருக்கிறார்கள் ?? என்றும் எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும்,

ஆனால்,
தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ !?

சாமியாவது, பூதமாவது !?  

அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குதுய்யா !! 

இப்பவே
உத்ராட்சம் போட்டுகிட்டு, திருநீறு 
பூசிக்கிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா ?? 

வாழ்க்கையை 
எப்பத் தான்
அனுபவிக்கிறது 
எனவும் கேட்கும்,

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால், 

உடனே,
கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போது தான் வரும், 

இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால்
பழைய படியே ஆட்டம் போடும்,

அதே நாய், 
இரவு முழுக்க குளிர் தாங்க முடியாமல் திண்ணையில் படுத்திருக்கும் பொழுதே,

என்னா 
குளிருப்பா சாமி ??

பொழுது 
விடிஞ்சதும்,
முதல் வேலையா போய்,

ஒரு நல்ல போர்வையா வாங்கிடனும்,

அப்பத் தான் நாளைக்கு நாம உயிரோடவே 
இருக்க முடியும்னு நினச்சிக்கும்,

பொழுது 
விடிஞ்சதும்,

சூரியன் தகதக என்று வெப்பத்தை பரப்பிக் கொண்டு வருவதை பா்த்தவுடனே,

அடாடா !! 
எவ்வளோ பெரிய தப்பு பண்ணப் பார்த்தோம் !! 

இந்நேரம் போர்வையை வாங்கியிருந்தா ??

காசில்லே வீணா போயிருக்கும் !! எனவும் 
நினைத்தது,

மீண்டும் அடுத்த நாள் பனியில் வாடும் போது,
இன்றைக்கு 
இரவு போர்வை வாங்கியே தீரனும்ணு நினைக்கும்,

இது தான் 
நம்மில் பெரும்பாலரது செயற்கையான கடவுள் வழிபாடும் !! 

துன்பம் வரும்
போது கடவுளைப் பற்றி நினைப்போம், உருகுவோம்,

சிக்கலின்றி
நன்றாக 
வாழும் போது,

கடவுள் வழிபாட்டுக்கு இன்னும் நமக்கு 
வயது இருக்கிறது என்று நினைப்பதோடு அல்லாமல், 

இளமையில் 
சாமி கும்பிடுபவர்
களையும் கெடுப்போம் !! கிண்டலடிப்போம் !!

சும்மாவா பாடினார்கள் பெரியவர்கள்;

ஒன்றுமே பயனில்லை,
என்று உணர்ந்த பின்பே சிவனே உண்டென்பார் !! 

ஒவ்வொரு மனிதரும் 
ஒரு நாள் இந்நிலை எய்துவது உறுதி, 

இதை மறந்தார் !! அன்று செயல் அழிந்து தலம் வரும் பொழுது, 

சிவன் பெயர் 
நாவில் வாராதே !! 

ஆதலினால் 
மனமே,
இன்றே,
சிவன் நாமம் சொல்லிப் பழகு !!

எண்ணிக்கைகளாலோ,
பகட்டு வேடங்களிலோ,
கட்டணம் கட்டியோ, வரிசையில் அனைவரையும் முந்தியே கூட,
நாம் எப்போது 
வேண்டுமானாலும், *கூட்டத்தோடே* *இறைவனைக்*
*காணலாம்*,

ஆனால்,
எண்ணங்கள்
உண்மையானால் தான்,
பெருங்கூட்டத்திலும், *இறைவனே* *தனித்தே* 
*நம்மைக்*
*காண்பான்*
அருளாசி வழங்குவான்.

Sunday, March 14, 2021

வசிஷ்டர் அருளிய ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி மந்திரம்.

*ஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்


மகரிஷி வசிஷ்டர் செய்த கடும்தவத்தின் போது அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றி இந்த மந்திரத்தை உபதேசித்தார்கள்.இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து ஜெபித்து வருகிறாரோ அவரை ஒருபோதும் வறுமை பீடிப்பதில்லை என்று அருளியதோடு தினம் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் கூட நான் அவர்கள் இல்லத்தில் குடியிருப்பேன் என்று ஆசி கூறியதாக மந்திர நூல்களில் உள்ளது.

இந்த மந்திரத்தை முன்பு ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும் இந்தத் தகவல் விடுபட்டதால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

மந்திரம் 

ஓம் |ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் | லக்ஷ்மீ ஆகச்ச ஆகச்ச|
மம மந்திரே | திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !

Friday, March 12, 2021

மனிதன் அறிய வேண்டிய அற்புதமான உளவியல் உண்மைகள்.

_*மனிதம் பற்றிய உளவியல் தகவல்*_

_*1.* ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்._ 

_*2.* அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்._ 

_*3.* எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்._

_*4.* குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்._ 

_*5.* நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்._ 

_*6.* உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்._ 

_*7.* சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்._

_*8.* மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்._ 

_*9.* முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை._

_*10.* இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்._ 

_*11.* ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம் என்று
 உளவியல் கூறுகிறது._

_*12.* ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம்._ 

_*13.* ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்._  

_*14.* ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும்._ 

 _*15.*  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்._  

_*16.* ஒருவர் அடிக்கடி Mobile phoneயை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் (Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார் என்று அர்த்தம்._

 _*17.* ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6 மணித்தியாளங்கள் (மணிநேரம்) ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது._ 

_*18.* ஒருவர் அதிகமாக  *Negative Thoughts* (முடியாது/கிடைக்காது/இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் *Negative Thoughts* பேசுபவராக இருப்பார்._

_மருத்துவர் மலர்விழி_ 
_உளவியல் நிபுணர்_ 
_ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை_ 
_சென்னை_

Thursday, March 11, 2021

உன்னை யாருடனும் ஒப்பிடாதே கடவுளின் படைப்பில் நீ நீதான்.

*உணவை தான் உண்டேன்... எப்படி மலம்  ஆனது?*

*உயிரோடுதானே இருந்தேன்.... எப்படி மாண்டு போனேன்?*

*மலம்தான் உணவாக இருந்ததா?*
*மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா?* 
.
*இந்த சுருங்கி போன உடம்பு தான் இது வரை இளமையை சுகித்ததா?*

*இந்த சூம்பும் மார்புகளுக்கா.. இத்தனை  கண்கள் வட்டமிட்டது?*

*பெருத்தன சிறுக்கும்.. சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?*

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான்.. செத்து தொலையவில்லையே...
என்று  மனைவியும், சுற்றமும் பேசியது,

என்னை அவர்கள்  *நூறாண்டு வாழ்க!!!* என வாழ்த்தியது எனக்கு நினைவுக்கு வந்தது.

*இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !* 

*நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்துக் கொண்டிருந்தது* .

*இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி இருக்க வேண்டும்* . 

*அறுசுவை உணவை தேடித் தேடி உண்ணும் போதே, அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்.* 

*அனைவருக்கும் பயன்பட வேண்டிய  பொன், பொருளை ஒரு திருடனைப் போல் பதுக்கி இருக்க மாட்டேன்.* 

*காலம் கடந்த ஞானம்...  பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்.*

*இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?*

*பிணமான பின் இந்த மாளிகையும், பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?* 

*சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?* 

*கண்ணே, மணியே என்று கொஞ்சிய தாயும்..  காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்...  பிணமான பின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள்!* 
*பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள்... ""பிணம்""* *என்று, வீசி சென்ற பிறகு,    மண்* *என்னைப் பார்த்து  ,* *" மகனே !* *நானிருக்கிறேன்!!*.... *என் மடியில் வந்து உறங்கு!!!" என்று  என்னை மார்போடு தழுவிக் கொண்டது.* 

அருந்தின மலமாம் 
பொருந்தின அழுக்காம்   
வெறுப்பன உவப்பாம் 
உவப்பன  வெறுப்பாம் 
உலக பொய் வாழ்க்கை 
நீ_நீயாக_இரு...

*உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும், நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.* 

*அதனால் வயதானால் அந்த நோய் வரும்.. வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்* 

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். *மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.* 

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை.

*மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக, சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.* 

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*

முதுமை என்று எதுவும் இல்லை.

*நோய் என்று எதுவும் இல்லை.* 

*இயலாமை என்று எதுவுமில்லை.* 

*எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.* 

சிந்தனையை மாற்றுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்.

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!

*நான்* பெரியவன்,

*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன்  என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் இரண்டு கிட்னியையும்  இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக  பிரித்து, இரத்தத்தில் கலக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா??

*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன்  என்று உங்களால் சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும் எவன்  செய்கிறானோ, இயக்குகிறானோ, அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும், உரிமையும் உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள். 

*உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே... தாழ்வு மனப்பான்மை வரும்* 

*உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே...  தலைக்கனம் வரும்.* 

*உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ.. நீயாக இரு...  தன்னம்பிகை வரும்.....*

Wednesday, March 10, 2021

பழனி ஆண்டி கோல தரிசனத்தின் பலன்கள்.

அற்புத பலன்கள் தரும் பழனி ஆண்டி கோலம் முருகர் தரிசனம்
 **"***************

வாழ்வில் தடை போட்டி பொறமை   கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்

 ஒருவருக்கு வாழ்க்கையில் தீராத கஷ்டம்  தடைகள்  குடும்பத்தில் சண்டை வருமானம் இல்லாமை போன்ற பல்வேறு விதமான பிரச்சனையை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலை இருந்தால்  நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம்  ஆகும்

கலியுகத்தில், நாம் செய்த கர்மவினைகளை குறைக்கக்கூடிய மாபெரும் சக்தி முருகப்பெருமானுக்கு உள்ளது. முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் கட்டாயம் குறையும் 

 கர்ம வினைகளால் ஏற்படும் நம்முடைய  பிரச்சனைகள் தீர பழனி முருகனை எப்படி வழிபாடு பூஜை செய்வது என்று பார்ப்போம்

பழனி  முருகப்பெருமானை  ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும்  ராஜ அலங்காரத்தில் தான் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால்  ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்று  சொல்வார்கள்

ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தீராத துயரத்தை அனுபவித்து வந்தால், அதிகப்படியான தடைகள்  இருந்தால்   நீங்கள் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது

திங்கள் கிழமையில் காலை நேரத்தில் மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி  படிப்படியான முன்னேற்றம் மாற்றம் ஏற்படும்

உங்களுடைய ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள்  இருந்தாலும்  அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு தாக்கம் குறைய  வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் திங்கட்கிழமை காலை வேளையில் தரிசனம் வழிபாடு பூஜை தானம் தர்மம் அன்னதானம் செய்வதால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் நன்மைகள் பல கிடைக்கும்

 நம்பிக்கையோடு  செய்து நலம் பல பெறுங்கள்.

Tuesday, March 9, 2021

மகா சிவராத்திரியின் சிறப்பு பதிவு.

🚩✡#மகா_சிவராத்திரி_சிறப்பு_பதிவு✡🚩 

✡மகா சிவராத்திரி 2021 இந்த ஆண்டு மார்ச் 11 வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சிவன் மற்றும் சக்தி தேவியின் ஒருங்கிணைப்பான அர்த்தநாரீஸ்வரரைக் கொண்டாடும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் மகா சிவராத்திரி ஒன்றாகும்.
    
✡ஒரு உயிரினம் முக்தி அடைய வேண்டுமானால் அந்த உயிர் மனிதனாகப் பிறக்க வேண்டும். மனிதனால் மட்டுமே முக்தி அடைய முடியும். அப்படிப்பட்ட மனித பிறவி எடுத்த நாம் முக்தி அடைய சிவ பெருமானை வழிபட மிக சிறப்பான நாள் தான் மகா சிவராத்திரி.

✡அன்றைய தினம் நாம் காலை முதல் இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து சிவபெருமானை வணங்கி அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும்.

🚩#மகா_சிவராத்திரி_விரத_முறை🚩: 

✡மகா சிவராத்திரி கடைப்பிடிக்க வேண்டிய 
சதுர்த்தசி திதி தொடங்குகிறது: 2021 மார்ச் 11 அன்று பிற்பகல் 02:39
சதுர்த்தசி திதி முடிவடைகிறது -மார்ச் 12ம் தேதி பிற்பகல் 03:02 வரை.

✡#முதல்_ஜாமம்

இரவு முதல் ஜாமம் பூஜை நேரம்: மாலை 06:27 முதல் 09:29 வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்

அபிஷேகம் - பஞ்சகவ்வியம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை மலர்கள் - தாமரை, அரளி
நிவேதனம் - பால் அன்னம்,சர்க்கரைப்பொங்கல்

பழம் - வில்வம்

சிவராத்திரி விரதம் இப்படி இருந்தால் ஈசனின் திருவடி நிழலில் இடம் கிடைக்கும்!

பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம்

வாசனைப் புகை போடுதல்- சாம்பிராணி, சந்தனக்கட்டை
தீப ஒளி- புட்பதீபம்
பாராயணம் - ரிக்வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

✡#இரண்டாவது_ஜாமம் 

இரவு இரண்டாவது ஜாமம் பூஜை நேரம்: 09:29 முதல் 12:31, மார்ச் 12

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை

அர்ச்சனை மலர்கள் - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்

பழம் - பலா

பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் - அகில், சந்தனம்
வாசனைப் புகை போடுதல்- சாம்பிராணி, குங்குமம்

தீப ஒளி- நட்சத்திரதீபம்
பாராயணம் - யஜூர்வேத பாராயணம் செய்யவும்

✡#மூன்றாம்_ஜாமம் 

இரவு மூன்றாம் ஜாமம் பூஜை நேரம்: மார்ச் 12ம் தேதி 12:31 AM முதல் 03:32 AM

வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை மலர்கள் - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்

நிவேதனம் - எள் அன்னம்
பழம் - மாதுளம்

பட்டு - வெண் பட்டு

தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
வாசனைப் புகை போடுதல்- மேகம், கருங் குங்கிலியம்
தீப ஒளி- ஐதுமுக தீபம்

பாராயணம் - சாமவேத பாராயணம் செய்யவும்

🚩#நான்காம்_ஜாமம் 

இரவு நான்காவது ஜாமம் பூஜை நேரம்: மார்ச் 12ம் தேதி 03:32 AM முதல் 06:34 AM

வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி

அர்ச்சனை மலர்கள் - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்

பழம் - நானாவித பழங்கள்

பட்டு - நீலப் பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
வாசனைப் புகை போடுதல்- கர்ப்பூரம், இலவங்கம்

தீப ஒளி- மூன்று முக தீபம்
பாராயணம் - அதர்வண வேதம் பாராயணம் செய்யலாம்.

சிவராத்திரி பரண நேரம்: 

மார்ச் 12ம் தேதி அதிகாலை 06:34 AM முதல் பிற்பகல் 03:02 PM வரை

✡மகா சிவராத்திரி தினமானது மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மாலை முதல் மறுநாள் காலை வரை தொடர்ந்து ஒவ்வொரு ஜாமத்தில் சிவ பெருமானுக்கு பழங்கள், வில்வ இலை, இனிப்புகள் மற்றும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, ருத்ராட்சம் உள்ளிட்ட பொருட்களால் சிவ பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படும். ஒவ்வொரு ஜாமம் பூஜை முடிந்ததும் அலங்காரம் செய்யப்படும். பின்னர் மீண்டும் அடுத்த ஜாம அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.

✡அன்றைய தினம் அனைத்து சிவன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் குவிந்து சிவனை மனதார வழிபட்டு ஆசி பெறுவர். அன்று முழுவதும் சிவனுக்கு உகந்த சிவ புராணம், சிவ திருவிளையாடல்கள் போன்றவற்றை உச்சரித்து நற்பேறு பெறலாம். 

✡சிவனின் பாடல் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, ‘ஓம் நமசிவாய’ என்ற எளிய மந்திரத்தை உச்சரித்தாலே அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்றிடலாம்.

சிவாய நம 🙏 
திருச்சிற்றம்பலம் 
சர்வம் சிவமயமே 
ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே வணக்கங்கள் 🌺🙏🏻🌺

Monday, March 8, 2021

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனைகள்.

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.
43 அறிவுரைகள்.இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது,எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே,அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.சுற்றம்,நட்பு,செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே.அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,பாசமாய் இருந்தாலும்,பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம்,புரிந்து கொள்.
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க,நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால்,நிலைமையை அறிந்து, அளவோடு கொடு.எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே. 
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என,உயில் எழுதி வைத்திராதே.நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே,கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு.மேலும் தர வேண்டியதை,பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை,மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு,நடை பயிற்சி செய்து,உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி,மன நிறைவோடு வாழ்.

30. இன்னும் 20, 30,40 ஆண்டுகள்,சுலபமாக ஓடிவிடும்.
31. வாழ்வை கண்டு களி.
32. ரசனையோடு வாழ்.
33. வாழ்க்கை வாழ்வதற்கே.

34. நான்கு நபர்களை புறக்கணி.
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே.
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே.
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி.
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே.
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை.
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு.
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு.
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்.
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.
🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹

Sunday, March 7, 2021

இந்துவாக இருக்க பெருமைப்படுகிறேன்

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :? ?👇👍

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள், 
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பகவதம்,

அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு
👉வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். 

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்...

இந்துவாக (#இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்!!
🙏🙏🙏

Friday, March 5, 2021

சூலினி தேவி துர்காவின் சிறப்பு அம்சங்கள்.

சூலினி துர்க்கையின் சிறப்புகள் ..

மூன்று அங்கங்களுடன் கூடிய சூலத்தைக் கையில் ஏந்தியுள்ள தால் சூலினி துர்க்கை என இத்தேவி வழிபடப்படுகிறாள். சூலம், பாணம், கத்தி, சக்கரம், சங்கு, கதை, வில், பாசம் இவற்றைக் கைகளில் தரித்துக் கொண்டருளும் அம்பிகை இவள். உயரமான கிரீடத்தைக் கொண்டவள்.

மேகம் போன்ற நிறத்தினள். அணிகலன்களை அணிந்து அழகே உருவாய் தோற்றமளிக்கும் இத்தேவி சிம்மத்தை தன் வாகனமாகக் கொண்டவள். கத்தி, கேடயத்துடன் கூடிய ஜெயா, விஜயா, பத்ரா, சூல காத்யாயனீ எனும் நான்கு கன்னியர்களால் சூழப்பட்டவள். அம்பிகை மும்மூன்றாக உள்ள எல்லா வடிவங்களாகவும் விளங்குகிறாள்.

ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் போன்ற மூன்று சரீரங்களாகவும், கர்மம், உபாசனை, ஞானம் எனும் மார்க்கங்களாகவும், அ, உ, ம எனும் பிரணவத்திலுள்ள பீஜாக்ஷரங்களாகவும், இச்சா, க்ரியா, ஞான சக்திகளாகவும், பூ, புவ: ஸுவ: எனும் லோகங்களாகவும், சத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்களாகவும், ஜாக்ரத், ஸ்வப்ன, சுக்ஷுப்தி எனும் அவஸ்தைகளாகவும், சத், சித், ஆனந்தம் எனும் நிலைகளாகவும், சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஜோதிகளாகவும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் போன்ற காரியங்களாகவும் தேவி விளங்குகிறாள்.

அனைத்திலும் மூன்றாக விளங்கி அதற்கு அப்பாலும் துரீய நிலையில் நான்காக விளங்குபவள். மும்மூன்றாக உள்ள சகல மானவைகளும் எந்த தேவியை வணங்கி நிற்கின்றதோ அவளே சூலினி துர்க்கை என்கிறது  திரிபுரோபநிஷத். மகா தேவியின் உடல் ஓங்கார ரூபமாகவும், ஹ்ரீங்கார ரூபமாகவும், இரண்டும் சேர்ந்து ஓம், ஹ்ரீம் ரூபமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. திரிபுர ஸம்ஹாரம் செய்ய முனைந்த சிவபெருமானுக்கு சூலம் ஏந்திய கையுடன் பக்கத்துணையாக இருந்தவள் இந்த சூலினி துர்க்கை. ராவண சம்ஹாரத்தில் ராமனுக்குத் துணையாக இருந்து வெற்றியைத் தேடித்தந்தவள் இவள்.

அம்பிகையின் நினைவு, தாமரைக்காடுகள் மலர்வதற்குக் காரணமான உதயசூரியனாக விளங்குகிறது, இனிமையான வசந்த காலத்தில் பாடும் குயில்கள் போல கவிவாணர்கள் தேவியின் தியான விசேஷத்தால் கவிகளை இயற்றிப்பாடும் திறன் பெறுகிறார்கள். பௌர்ணமி தினத்தன்று தேவி அமுதத்தைப் பொழியும் நிலவில் ஞானமே வடிவாய் வீற்றிருக்கிறாள். இதை சந்த்ரமண்டல மத்யகா என்றும் லலிதா ஸஹஸ்ரநாமம் மெய்ப்பிக்கிறது. தேவி நாம் மனதால் நினைத்த மாத்திரத்தில் மனதில் எழுந்தருள்வாள்.

தேவி ஞானமே வடிவாகத் திகழ்பவள். அஞ்ஞானத்தை அழித்து மெய்ஞானம் அருள்பவள். நீலோத்பலம் போன்ற கண்கள். அக்னி போல் ஜொலிக்கும் நெற்றி. கையில் திருசூலம் ஏந்தியருள்பவள். ஈசன் காமனைக் கண்ணால் காய்த்தார். காலனைக் காலால் கடிந்தார். தேவி மன்மதனை தன் சந்த்ர நேத்ரத்தால் அம்ருதத்தைப் பொழிந்து அவனை யாரும் ஜெயிக்க முடியாத வரத்தையும் தந்து அனுப்பினாள்.

ஈசன் புரிந்த திருவிளையாடல்கள் அனைத்தும் தேவியின் அனுக்ரஹத்தினாலேயே நிகழ்ந்தது முக்கண்ணனாகிய ஈசனின் கண்களுக்கு விருந்தாகும் தேவி மிகச் சிறந்த ஸௌந்தர்யவதியாவாள். அவள் முகமென்னும் தாமரை மன் மதனின் முதல் பாணமாகிய தாமரையை இகழ்வது போலவும், அதைத்தன் அழகால் துன்புறுத்துவது போலவும் உள்ளது. மேலும், இந்த முகத் தாமரை யில் பிறந்த நான்முகனின் வாகனமான அன்னத்தையும் தன் நடையால் தேவி ஜெயிக்கிறாள்.

தேவர்கள் அமிர்தம் உண்டதால் என்றுமே நரை, திரை, மூப்பு, மரணம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் என்றும் யௌவனமாகவே இருப்பவர்கள். ஏதாவது நல்ல உணவு கிடைத்தால் அம்ருதம் போல் இருக்கிறது என்று அம்ருதத்திற்கு ஈடாகக் கூறுவோம். தேவர்கள் உண்ணும் அமிர்தத்தையும் தன் இனிமையான சொற்களால் ஏக்கமுறச் செய்யும் சொல்வளம் படைத்தவள் அம்பிகை.

அம்பிகையின் திருவடிகள் இரண்டும் தாமரை புஷ்பங்கள். புஷ்பங்கள் பூமியில் நடந்தால் எப்படி யிருக்கும்? அதுபோல் மெத்து மெத்தென்று மெதுவாக நடப்பதில் அந்த திருவடிகள் கஜேந்திரனைத் தோற்கடிக்கிறது. தேவியின் பாதங்கள் தாமரை மலர்களிடம் பொறாமை கொள்கின்றது. நாம் என்ன?

மிக உயர்ந்த ஞானிகளும் தேவியின் பாதங்களில் மிகுந்த ஆசை கொள்கிறார்கள். தேவியின் திருவடிகள் போகம், மோட்சம் என்ற இரண்டையுமே தருவதால் முனிவர்களும் ஞானியர்களும் அப்பாதங்களில் வீழ்ந்து வணங்கியே மோட்சத்தைப் பெறுகிறார்கள். தேவி உபாசனை போகம், மோட்சம் இரண்டையுமே தரவல்லது. தேவி வேண்டுவோர்க்கு வேண்டியதைத் தரவல்லவள்.

தேவியின் பாதங்களின் யானை போன்ற நடையால், தாமரையைப் பழிக்கும் குணத்தால், ஞானிகளின் ஆசைக்கு இருப்பிடமாய் உள்ளதால் துரோகம், பொறாமை, காமம் ஆகிய குணங்களைக் கொண்டிருந்தும் ஞானிகள் அதை விரும்புவது அதிசயம் என மூகர் தன் பாதார விந்த சதகத்தின் கரீந்த்ராய துதியில் அருளியுள்ளார்.

தேவியின் திருவடியின் மகிமையை யாரால் இயம்ப முடியும்?தேவியின் திருவடிகளை வணங்குபவர்கள் மஹாபாஷ்யம் எனும் வியாக்யானத்தை இயற்றிய பதஞ்சலி முனிவராக அவதரித்த ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு அதில் துயிலும் திருமாலைப் போல் ஆவார்கள்.

மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த பரமேஸ்வரன் எனும் பெரிய தெய்வமாகவும் ஆவார்கள். வண்டுகள் உறையும் தாமரையில் வசிக்கும் நான்முகன் என்ற பிரம்மதேவனாகவும் செய்து விடும். மும் மூர்த்திகளும் கூட தேவியின் பாதத்தூளியாலேயே தங்களுடைய தொழில்களை ஆற்ற வல்லவராகிறார்கள். அவ்வாறே நாமும் தேவியின் பாதகமலங்களைப் பணிந்து இக பர சுகம் பெறலாம். தேவியின் பாதங்களில் எப்பொழுதுமே லாக்ஷாரஸம் அல்லது மருதாணி ஈரம் உலராமல் காணப்படும்.

தேவியின் பாத தீர்த்த லாக்ஷா ரஸத்துடன் கலந்து வருவதாகும். அந்தப் பாத தீர்த்தத்தை ஒரு காலத்தில் பருகிய மூகர் கவி பாடும் திறமை பெற்றார் என்பது வரலாறு. தேவி மூகாம்பிகை எனும் பெயர் கொண்டவளாகவும் திகழ்கிறாள். மேலும், காளிதாஸர், மூகர், காளமேகம் போன்ற கவிகள் தேவியின் தாம்பூலம் தேவியின் வாயாலேயே கிடைக்கப்பெற்று அதனால்தான் கவித்துவம் பெற்றார்கள் என்பது வரலாறு.

சரப சக்திகளில் பிரதான இடத்தை பிரத்தியங்கிரா வுக்கு கொடுத்து விட்டு அடுத்த இடத்தைப் பெற்றிருப்பவள் சூலினி. பிரத்தியங்கிரா காளி, இவள் துர்க்கை. மனித வாழ்க்கையில் துன்பங்களை ஒழித்துக்கட்ட துர்க்கை யின் தயவு வேண்டும். சிவபெரு மான் சூலத்தைப் பிரயோகித்து துஷ்ட நிக்ரஹம் செய்த காரியங்களில் எல்லாம் பக்கத்துணையாக இருந்தவள் சூலினி தான்.       

சூலபாணியாக எப்போதும் விளங்குவதால் சூலினி. தேவியின் உபாசனை நான்முகன் பொறாமைப்படும் அளவு கல்வியறிவு, நாரணன் பொறாமைப்படும் அளவு ஐஸ்வர்யம், மன்மதன் பொறாமைப்படும் அளவு பேரழகு போன்றவற்றை தரும். இவ்வளவு பாக்கி யங்களுடன் தீர்க்காயுள் இருந்தால்தான் இதையெல்லாம் அனுபவிக்க முடியும். தான்யம், தனம், பசும், பஹுபுத்ரலாபம் ஸத ஸம்வத்ஸரம் தீர்க்கமாயு: என்று ஸ்ரீ ஸுக்தத்தில் தேவியிடம் கடைசியில் ‘நூறு வயது கொடு’ என்று ப்ரார்த்திக்கின்றோம். இவ்வளவு பாக்கியங்களையும் தேவியின் உபாசகன் அடைகிறான். அதோடு பேரானந்தமும் அடைகிறான்.

இத்தேவி பட்டாடை உடுத்தி நீளமான திரிசூலத்தை ஏந்தி போரிடும் பாவனையிலேயோ அல்லது அனுக்ரஹம் செய்யும் பாவனையிலேயோ இருப்பாள் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. திருவாரூர் கோயிலிலும், தீர்த்த மலையிலும் இந்த சூலினி துர்க்கைக்கு வடிவங்கள் உண்டு. வாழ்வில் வெற்றி பெற விரும்புவோர் இத் தேவியை வழிபட்டு அருள் பெறலாம்.சூலினி துர்க்கா த்யானம் பிப்ராணா சூல பாணாஸ்யரி ஸதரகதா சாப
பாசான் கராப்ஜை:

மேக ச்யாமளா கிரீடோல்லிகித ஜலதரா பீஷணா
பூஷணாட்யா
ஸிம்ஹஸ் கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடான்
ஸிதாபி - பரீதா
கன்யாபி பின்ன தைத்யா பவது பவபயத்வம்ஸினீ
சூலினி. 
சூலினி துர்க்கா மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ச் ரௌம் தும் ஜ்வல ஜ்வல
சூலினி
துஷ்ட க்ரஹ ஹும் பட் ஸ்வாஹா.
ஸ்கந்தமாதா

சைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து, சிவனை மணந்து, முருகனை ஈன்று, அவரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு உலகைக் காக்கும் தேவி ஸ்கந்தமாதா. இவள் அக்னி மண்டலத்தின் தேவதையாவாள். தமிழர் கடவுளாம் கந்தனின் அன்னை. வடமாநிலங்களில் முருகன் குமார், கார்த்திக் எனும் பெயர்களில் வணங்கப்படுகிறான். சிம்மத்தை வாகனமாகக் கொண்டவள்.

நவராத்திரியின் ஐந்தாம் நாள் துர்க்காதேவி அழகன் முருகனின் அன்னையாக ஸ்கந்தமாதாவாக வணங்கப்படுகிறாள். முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர். அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியிருந்தது.

அச்சமயம் ஈசன் ஆழ்ந்த யோகத்தில் இருந்தார். குமார ஜனனம் வேண்டி தேவர்கள் ஈசனின் தவத்தைக் கலைக்க முற்பட்டனர். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் சிதறித்தெறித்தன. தேவர்களின் வேண்டுகோளை ஏற்று ஈசன் அத்தீப்பொறிகளை சரவணப்பொய்கையில் விடும்படி பணித்தார்.

அத்தீப்பொறிகளை அதில் சேர்ப்பிக்க உதவியவளே இந்த ஸ்கந்தமாதாதான். சரவணப்பொய்கையில் சேர்க்கப்பட்ட ஆறு தீச்சுடர்களும் ஆறு குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் செவிலித் தாயாக இருந்து அவர்களை பாலூட்டி வளர்த்தனர். தேவி தாயன்புடன் அந்த ஆறு குழந்தைகளையும் தன் இரு கரங்களால் ஒரே சமயத்தில் அணைக்க ஆறுமுகப்பெருமான் தேஜோமயமாகக் காட்சியளித்தார்.

 ஸ்கந்தமாதா அக்னி வடிவமாக இருந்து உலகை காக்கின்றாள். சிம்ம வாகனத்தில் தாமரையில் பத்மாசனமிட்டு அமர்ந்து ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள்.

இத்தேவி நவராத்திரியின் செவ்வாய்க்கிழமைகளிலும் துதிக்கப்பட வேண்டியவள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திருவவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே.

அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே.

அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப்படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள். தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது.

நவராத்திரியின் ஐந்தாம் நாள் காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் உள்ள ஸ்கந்தமாதா கோயிலுக்கு பக்தர்கள் தரிசிக்கச் செல்வார்கள். இவளே ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகளை ஆற்றில் ஒன்றாகச் சேர்த்தவள்.

 அசுரர்களை வென்றிட முருகனுக்கு வேலினை ஈந்த துர்க்கையவள். ஸ்கந்தமாதா எனப் பெயர் பெற்று குமரக்கடவுளை எப்போதும் மடியில் அணைத்து வைத்து மகிழும் பாக்கியம் பெற்றவள். இந்த ஸ்கந்தமாதாவை விசுத்தி சக்கரத்தில் அமர்த்தி வழிபட வாழ்நாள் முழுவதும் பேரின்பம் கிட்டும். ஆத்மசுத்தியோடு வழிபடும்போது அம்பிகையின் மடியில் தவழும் கந்தனுக்கும் வழிபாட்டில் பங்கு கிடைப்ப தால் பக்தனுக்கு கிடைக்கும் பலன் இரட்டிப்பாகிறது.

ஸ்கந்தமாதாவின் த்யான ஸ்லோகம் ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில்
தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.

Thursday, March 4, 2021

புதுச்சேரி மணக்குள விநாயகர் வரலாறு.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்

 பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும்.மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது.தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.
600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இத்துடன் இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்புண்டு. புதுவை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழ்ந்த 41க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லகாது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு அவரை தினசரி தரிசனம் செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர்.

புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த “முண்டாசுக்கவிஞன்’ பாரதி , இந்த விநாயகரை போற்றி; “நான்மணிமாலை” என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.

ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; 'மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்’ எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது 'ஸ்ரீமணக்குள விநாயகர்’ என்கிறோம்!
கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர்.அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது.

அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங் களையும் நடத்தி வந்தனர்.பிரெஞ்சு ஆட்சியாளர் களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங் களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.

இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது.

மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.
மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே.
மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார்.வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனி யில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்து ள்ளன.மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது.கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையா டல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.

தங்கத்தேர் உலாவும் உண்டு.அனைத்து மதத்தி னரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள்.தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி.பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது.இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Tuesday, March 2, 2021

செய்த தவறுக்கு தெய்வமாக இருந்தாலும் தண்டனை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

🌺🌹 *செய்த தவறுக்கு, தெய்வமாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆம், உப்பு தின்னவன், தண்ணீர் குடித்து தான் ஆகனும்🌹🌺* 
 - விளக்கும் அஸ்வத்தாமன் மற்றும் 
ஸ்ரீகிருஷ்ணன் பக்தி கதை 🌹🌺

🌺குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். 

🌺பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி, துரோணரின் மகன், அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான்.

🌺அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. ‘என் தந்தை சத்தியவான்; செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். 

🌺ஆனால், அவரை, பாண்டவர்கள், நான் இறந்ததாக பொய் சொல்லி, அநியாயமாக கொன்று விட்டனர். 

🌺என் தந்தை செய்த தவறு என்ன’ என, மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான்.

🌺ஒருநாள், கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தது. 

🌺அதனால், அவனிடமே, தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். ‘என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீதானே காரணம். அவர் செய்த தவறு என்ன?’ என கேட்டான்.

🌺கிருஷ்ணன் சிரித்து விட்டு, ‘செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும், தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என்றான்.

🌺‘அப்படி என்ன என் தந்தை பாவம் செய்துவிட்டார்’ கேட்டான் அஸ்வத்தாமன்.

🌺கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான்.'உன் தந்தை, அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால், ஏழையாக இருந்தார். அவரை, கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக, பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான், அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது.

🌺கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் சகல, வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். ‘எனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள்’ என, உன் தந்தையிடம் கேட்டான்.

🌺அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர, துரோணர் மறுத்துவிட்டான். 

🌺ஆனால், ஏகலைவன், உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து, குருவாக வழிபட்டு, வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான்.

🌺சில ஆண்டுகளுக்கு பின், ஒரு சந்தர்ப்பத்தில், ஏகலைவனின் வில் வித்தை திறமை, அர்ஜூனனுக்கு தெரிந்தது. அவன், துரோணரிடம் கோபம் அடைந்தான். 

🌺ஏகலைவன் தானே கற்றுக் கொண்டதை அர்ஜுனனிடம் தெரிவித்து, அவனை உன் தந்தை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.

🌺ஆனால், என்ன செய்தார். வில்வித்தைக்கு மிகவும் தேவையான, கட்டை விரலை, குரு காணிக்கையாக, ஏகலைவனிடம், உன் தந்தை கேட்டார். 

🌺அவனும், மகிழ்ச்சியாக கொடுத்து, குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார்.

🌺அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தில் உன் தந்தை, சுயநலமாக நடந்து கொண்டு, ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும், அவனது எதிர்காலம் வீணானதுக்கு, உன் தந்தை தான் காரணம்.

🌺இந்த பாவம் தான், உன் தந்தையை, போர்களத்தில், மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது. 

🌺துரோணர், தியானத்தில் இருந்த போது, அவரை திரவுபதியின் சகோதரரன் அநியாயமாக கொலை செய்தான்.

🌺அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால், பாண்வர்கள், தங்களின் வாரிசுகளை இழந்தனர் என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன். 

🌺உண்மைதான் என ஒப்புக் கொண்ட அஸ்வத்தாமன், ‘நீ நினைத்திருந்தால், இந்த யுத்தம் நடக்காமல் தடுத்திருக்கலாம். 

🌺ஆனால் ஒரு வம்சமே அழிவதை வேடிக்கை பார்த்தாய். உனக்கு தண்டனை கிடையாதா ’என, கேட்டான் அஸ்வத்தாமன்.

🌺‘ஏன் இல்லை .ஒரு வம்சம் அழிவதற்கு காரணமாக இருந்ததால், என் வம்சம் அழிவதை பார்த்த பின் தான் எனக்கு மரணம் ஏற்படும்’ என்றான் கிருஷ்ணன்.

🌺உண்மைதான், யாதவ வம்சம் அழிந்து, காட்டில் தனிமையில் தியானத்தில் அமர்ந்திருந்த போது, மான் என நினைத்து வேடன் எய்த அம்பால் ,கிருஷ்னணின் உயிர் பிரிந்தது.

🌺செய்த தவறுக்கு, தெய்வமாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆம், உப்பு தின்னவன், தண்ணீர் குடித்து தான் ஆகனும். 🌹🌺

--------------------------------------------------------------------------
💐🌹 *சர்வம் கிருஷ்ணார்ப்பணம்* 🏵️💐🌹

Monday, March 1, 2021

தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம்.

தீராத நோயை தீர்க்கும் தீர்த்தம் !
*********************

சித்தர்களான மெய்கண்டர், குண்டலி சித்தர், வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும்,
சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில்
தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு
வந்தவர்கள், மலையில் ஒரு சிவலிங்கத்தை
பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய
சிவன் இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு
சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.

தலபெருமை:
************

மலையின் சிறப்பு: அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்த கோயில்
இது. சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடை பிடிப்பது போல அமைந்த மலை இது.

பாறையை ஒட்டி சிறிய சன்னதியில் சிவன் காட்சி தருகிறார். பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு
விசேஷ பூஜை நடக்கும்.

கோயிலுக்கு
அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக்
கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது. பல
மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது.
வயிற்று வலி, தீராத நோயால்
அவதிப்படுவோர் நிவர்த்திக்க இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச்
செல்கின்றனர்.

அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள்
கிடையாது. கோயில் வளாகத்தில் வேம்பு,
வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும்
இருக்கிறார். இவருக்கு எதிரே தந்தைக்குரிய
நந்தி வாகனம் இருப்பது விசேஷமான
அமைப்பு.

தீப வடிவ குகை: சோமலிங்கசுவாமி
சன்னதிக்குப் பின்புறம், மெய்கண்டார் தவம்
செய்த குகை உள்ளது. பாறையில்
இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு
தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப்
போல அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின்
அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர். மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு
இடங்களில் உள்ளது.

பழநியில் முருகனுக்கு நவபாஷாண சிலை
வடித்த போகர் சித்தரும் இம்மலையில் தவம்
செய்துள்ளார். ஒரு சமயம் அவர் கௌரி பூஜை செய்வதற்காக, தமக்கு அனைத்து
அங்கலட்சணங்களும் பொருந்திய பெண்
வேண்டுகின்றார். அத்தகைய பெண்ணைத் தேடிச்சென்ற கொங்கணர் மற்றும் கருவூரார் சித்தருக்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய
பெண் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் தந்திரமாக போகர் விரும்பியபடி ஒரு கல்லில் சிலை வடித்து, அதற்கு உயிர் கொடுத்து
அவரிடம் அழைத்துச் சென்றனர்.

 நடந்ததை தன் ஞானதிருஷ்டியில் அறிந்த போகர், அப்பெண்ணைப் பார்த்து “கல் நீ வாடி’ என அழைத்தார். கொங்கணரும், கருவூராரும்
தங்களை மன்னிக்கும்படி வேண்ட, போகர்
அவர்களை மன்னித்தருளினார். இவ்வாறு,
போகர் அப்பெண்ணை அழைத்ததால் கல்நீவாடி என்றே அழைக்கப்பட்ட ஊர், பிற்காலத்தில்
கன்னிவாடி என மருவியது. இந்த தகவல் ஜலத்திரட்டு என்னும் புராதனமான நூலில்
கூறப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:
*************

திருமணத்தடை, மாங்கல்ய தோஷம்,
பூர்வஜென்ம தோஷம் நீங்க இங்கு வேண்டிச்
செல்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:
**************

வேண்டுதல் நிறைவேறியதும் சிவனுக்கு
அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

முகவரி:
*******

அருள்மிகு சோமலிங்கசுவாமி திருக்கோயில்,
சோமலிங்கபுரம், கன்னிவாடி – 624705.
திண்டுக்கல் மாவட்டம்.✍🏼🌹