Sunday, December 20, 2020

சஷ்டி விரதம் எப்படி இருப்பது

🙏🙏🙏🙏🙏#சஷ்டி விரதம் வீட்டில், கோயிலில் இருப்பது எப்படி??

குழந்தை அருள் உட்பட 16 சம்பத்துகள் எனும் செல்வங்களைப் பெற முருகனின் அருளால் பெற கந்த சஷ்டி விரதம் இருப்பது அவசியம். கந்த சஷ்டி விரதம் எப்படி இருப்பது, வீட்டில் விரதம் இருக்க நினைப்பவர்கள் என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பனவற்றைப் பார்ப்போம்...

முருகனை வழிபடுபவர்களுக்கு எந்த தடையும் வருவதில்லை. மலை போல் வருகின்ற பிரச்சனைகள் எல்லாம் பனி போல் விலக முருகப்பெருமான் ஒருவரை வழிபட்டாலே போதும். காக்கும் கடவுளாகவும், அருளும் குழந்தையாகவும் பக்தர்களுக்கு காட்சி தரும் முருகப்பெருமான் கலியுகக் கடவுளாக போற்றப்படுகின்றார்.
 
அவரை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாட்களாக இந்த நாட்கள் இருக்கின்றன. இந்த நாட்களில் மட்டும் முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் கிடைக்கப் பெற்று வாழ முடியும் என்கிறது வேதம். அப்படி எந்த நாட்களில் நாம் முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
கந்த சஷ்டி என்பது ஒவ்வொரு மாதமும் வரக்கூடியது தான். அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு பின் 6ம் நாள் சஷ்டி திதி வரும். இந்த நாளில் இருக்கும் விரதத்தை விட, ஐப்பசி மாதத்தில் (தீபாவளி அடுத்து வரும் அமாவாசை)அமாவாசைக்கு பின் வரும் பிரதமை தினத்திலிருந்து சஷ்டி வரை உள்ள 6 நாட்கள் விரதமிருக்க மிகச் சிறப்பாக நாட்கள்.

சஷ்டி என்றால் என்ன?
சூரனுடன் 6 நாட்கள் கடுமையாக போரிட்ட முருகப்பெருமான் கடைசியில் வெற்றி பெற்ற நாளை குறிப்பதாக அமைகிறது. இந்த 6 நாட்கள் விரதம் இருப்பது பல விசேஷ பலன்களை தரும்

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

இந்த சஷ்டி விரதம் வீட்டில் அல்லது கோயிலில் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

இந்த விரதம் இருப்பதன் மூலம் முதல் சிறப்பு பலன் குழந்தை பேறு. அதோடு நம்மிடம் இருக்கும் குறைகள் நீங்கி நன்மை சேரவும், நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேர உதவும்.

வீட்டில் விரதம் இருப்பது எப்படி?

வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம்.

முருகனை வழிபட சஷ்டி சிறந்த நாளாக இருந்து வருகிறது. குறிப்பாக சஷ்டி விரதம் இருந்தால் திருமண தடை அகலும். யார் யாருக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்தாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்குவார். முருகனை நம்புபவர்களுக்கு தோல்வியே கிடையாது.

சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் மேற்கொள்ள வேண்டும். ஆறு நாட்கள் வரை மது, மாமிசம், தொடக் கூடாது.
 
அது போல் சைவத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு கட்டாயம் சேர்க்க கூடாது என்பது நியதி.
 
நீங்கள் சமைக்கும் பொழுது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் சமைத்து சாப்பிடலாம். முருகப் பெருமானின் படத்தை பூஜை அறையில் வைத்து அவருடன் அவருடைய பெற்றோர்களாகிய எம்பெருமான் ஈசன் மற்றும் பார்வதி தேவியின் படத்தையும் வைத்து விளக்கேற்ற வேண்டும். சஷ்டி விரதத்தின் போது முடியாதவர்கள் பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 
 
குறிப்பாக எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அதாவது கணவன் மனைவி, சகோதர சகோதரிகள், தாய் சேய் என எந்த உறவில் விரிசல்கள் இருந்தாலும் அதனை சரிசெய்ய கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளலாம். உறவில் சந்தேகம் போன்ற விஷயங்கள் இருந்தால் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வது சிறந்த பலன்களை தரும். கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கை உண்டாகும். நேர்மறை ஆற்றல் பெருகும்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின் போது சொல்ல வேண்டிய திருப்புகழ் பாராயணம்.

வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.

அது போல் ஐந்து மற்றும் ஆறாம் நாள் விரதம் இருப்பவர்களுக்கு தொழில் வியாபார வளர்ச்சி உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். முருகப் பெருமான் சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த நாட்களில் தண்ணீர் மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
பின்னர் புதிய ஆடை சாற்றி, அலங்காரம் செய்ய வேண்டும். சஷ்டி விரதத்தின் ஆறு நாட்களும் சஷ்டி கவசம் பாட வேண்டும். இவைகளை செய்து மனமுருக முருகப்பெருமானை வணங்கினால் நோய் நொடி இன்றி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இனி சஷ்டி விரதத்தை அனைவரும் மேற்கொண்டு நாமும் நல்ல பலன்களை பெறலாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி||

ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்  திருச்சிற்றம்பலம்.

ஓம் சரவண பவ.

No comments:

Post a Comment