Saturday, December 5, 2020

பிறவிகளின் அற்புத ரகசியம்

✍️நாம் இந்த உலகில் வாழ்வது ஒருமுறைதான் எனவே வேண்டியமட்டும் இன்பத்தை அனுபவிப்போம் என்று சிலர் கூறுகிறார்கள்.,
எனவே பிறரை ஏமாற்றியாவது அல்லது வேறு குறுக்கு வழியிலாவது இன்பத்தை அனுபவிக்க நினைக்கிறார்கள்.
நாத்திகர்கள் பொதுவாக நேர்மையற்றவர்களாக இருப்பதற்கு காரணம் இதுதான்.
அவர்கள் மறுபிறவியையும் நம்புவதில்லை. பாவம் செய்தால் துன்பம் அனுபவிப்போம் என்பதையும் நம்புவதில்லை.
ஆனால் இந்துக்கள் அப்படி நினைப்பதில்லை.
.
வாழ்க்கை என்பது மிகவும் நீண்டது. வேண்டிகாலம் வரை நாம் இந்த உலகத்தில் வாழலாம். 
அவசரப்பட வேண்டியதில்லை. இந்தபிறவியில் அனுபவிக்க முடியாதவற்றை அடுத்தபிறவியல் அனுபவிக்கலாம்.
பிறரை ஏமாற்றி,குறுக்கு வழியில் சென்று இன்பங்களை அனுபவிக்கவேண்டிய அவசியம் இந்துக்களுக்கு இல்லை.
நாம் மறுபிறப்பை நம்புகிறோம்.
இதற்கு முன்பு எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம்,இன்னும் எத்தனையோ பிறவிகள் பிறக்க இருக்கிறோம்.எனவே அவசரப்பட வேண்டியதில்லை. நாம் ஆசைப்படுவது அனைத்தும்  கிடைக்கும்.
பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளதா? உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆகுவேண்டும் என்ற ஆசை உள்ளதா? கண்டிப்பாக அந்த ஆசை நிறைவேறும்.
ஆனால் அதை அடைய சில பிறவிகள் காத்திருக்கவேண்டும். அவ்வளவுதான்.
..
எனவே சாஸ்திரம் அறிந்த இந்துக்கள் எப்போதும் நேர்மையாக வழியையே பின்பற்றுகிறார்கள்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய பலன் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும்.
..

No comments:

Post a Comment