சனி எதிலும் பிடிப்பற்றவன்., பற்று குறைவானவர்
மிக எளிமையாக வாழ்பவன்
ஒருவரது ஜாதகத்தில் சனி ராசி கட்டத்தில் எந்த பாவத்தில் அமர்ந்து இருக்கிறதோ அந்த பாவம் மிகவும் எளிமையாக இருக்கும்
அது சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகரை எளிமையை கடைபிடிப்பார்
உதாரணம் சனி லக்னத்தில் இருந்தால்
ஜாதகரை மிக எளிமையாக இருப்பார் கௌரவமான உடைகளை அதிகம் உடுத்த மாட்டாபற்று குறைவானவர் தன் மேனியை பலப்பல வைத்துக் கொள்ள பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ள மாட்டார் மிகவும் எளிமையாக இருப்பார்
இரண்டாம் பாவத்தில் சனி இருந்தால் அல்லது இரண்டாம் அதிபதி இது மகர லக்னத்திற்கும் பொருந்தும்
அவரது அவரது பேச்சு வழக்கு மிகவும் எளிமையாக இருக்கும் உணவு விஷயத்தில் எளிமையாக இருப்பார் மிக உயர்ந்த மதிப்பு உள்ள உணவுகளை உண்ண மாட்டார் சாதாரணமாக பழைய சோறு கூட உண்பார்
மூன்றாம் இடத்தில் இருந்தால் அவர்கள் முயற்சி மிக பிரம்மாண்டமாக இருக்காது எளிமையாகவும் மிகவும் பொறுமையாகவும் நடக்கும்
நான்காம் பாவத்தில் இருந்தால் அந்த ஜாதகர் பயன்படுத்தும் வாகனம் மிகவும் எளிமையாக இருக்கும் அதிகம் வாகனத்திற்கு செலவு செய்யமாட்டார் 10 ஆண்டு 15 ஆண்டு என்று ஒரே வாகனத்தை பயன்படுத்த
அதுவும் பழைய வாகனம் இருக்க வாய்ப்புண்டு.
அதுவே ஐந்தாம் பாவத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகர் குழந்தை சற்று காலதாமதமாக பெற்றுக் கொள்வார் அல்லது காலதாமதமாகவே அமையும்
ஆறாம் பாவத்தில் சனி இருந்தால் மிகவும் எளிமையான உத்தியோகத்தில் இருப்பார் உத்தியோகத்தில் பெரிய அதிகாரத்தில் இருக்க மாட்டார் ., மிகவும் எளிமையாக உத்தியோகத்தில் நடந்து கொள்வார் அவர் பெறுகின்ற வெற்றிகளும் மிகவும் எளிமையாக இருக்கும் யாருடனும் அதிகம் சண்டைக்குப் போக மாட்டார் போட்டி பொறாமைகளை தவிற்பர்
மிகவும் பெருந்தன்மையுடன் இருப்பார்.
ஏழாம் பாவத்தில் சனி இருந்தால் அவரது துணை மிகவும் எளிமையாக நடந்து கொள்வார் இவரும் சமுதாயத்தில் மிகவும் எளிமையாக வாழ்வார் நண்பர்களும் பணக்கார நண்பர்கள் அல்லது எளிமையான நண்பர்களுடன் தான் இவரது பழக்கவழக்கங்கள் அதிகம் இருக்கும்.
எட்டாம் பாவத்தில் சனி இருந்தால் அவர் மிகப்பெரிய நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்., விபத்துகள் பெரிதும் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு அவருக்கு எதிரிகள் மிக குறைவாக இருப்பார்கள் அல்லது இல்லாமல் இருப்பார்கள் அவர் பூர்விக சொத்தை பெறுவதில் மிக சிரமப் படுவார் இன்சூரன்ஸ் அல்லது உயிர் சொத்துக்களை பெற மிகவும் போராடி வழக்குகளை சந்திப்பார்
ஒன்பதாம் பாவத்தில் சனி இருந்தால் அவரது நுண்ணறிவு மிக எளிமையாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைக் கூட மிக எளிமையான சிறிய தீர்வை கொடுப்பார் பலரும் ஆச்சரியப்படும் வகையில் அவரது மூளை இருக்கும் ஆனால் அதற்கு அவர் பெரிதும் யோசிக்க மாட்டார்
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் மிக எளிமையாக நடந்து கொள்வார் கடவுள் பக்தியும் மிக எளிமையாக இருக்கும் வீட்டிலேயே மனத்தில் கடவுளை நினைத்து வழிபடுவார் கோயிலுக்குச் செல்வது தவிர்த்து வீட்டிலேயே மனமுருக வேண்டுவார்கள்
பத்தாம் பாவத்தில் சனி இருந்தால் அவரது தொழில் மிகையான மிகவும் எளிமையான தொழிலாக அமையும் முழுமையான முன்னேற்றம் ஏற்படும் தொழிலதிபராக இருந்தாலும் மிக எளிமையாக நடந்து கொள்வார் ஊருக்குத் தெரியாமல் மிகவும் அமைதியான சம்பாதிப்பார் தன்னை தொழிலதிபர் போல காட்டிக்கொள்ள மாட்டார் வெளியே சமுதாயத்தில் வர அச்சப் படுவார்
பதினொன்றாம் பாவத்தில் சனி இருந்தால் அவரது மூத்த சகோதரர்கள் எளிமையாக இருப்பார்கள் அவர்கள் செய்யும் பூஜைமுறை மிக எளிமையாக இருக்கும் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கடன் கொடுக்க மாட்டார்கள் கடன் வாங்க மாட்டார்கள் கூட்டத்தை சேர்த்து விரும்பமாட்டார்கள் இவர்களுக்கு நோய் அண்டவே அண்டாது மிகக் குறைந்த லாபத்தை அடைவார்கள் எளிமையாக வாழ்வார்
பன்னிரெண்டாம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் அவருடைய முதலீடுகள் மிகவும் குறைவாக இருக்கும் எளிமையாக வெளியே எடுக்கும் வகையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும் தாம்பத்திய வாழ்க்கை மிகவும் குறைவாக இருக்கும் இவருக்கு நோய் ஏற்பட்டால் அது உடனே குணமடையாது மிகவும் காலதாமதம் எடுத்து அதிலிருந்து மீண்டு வருவார் வெளிநாட்டில் அகதியாக வாழ்வது அல்லது வெளிநாட்டில் மிகக் குறைந்த வருமானத்தில் வாழக் கூடிய அமைப்பு அமையும் வெளிநாட்டிலும் மிக எளிமையாக வாழ்ந்தவர் என்ற பெயர் எடுப்பார்
இந்தப் பதிவை படித்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பாவத்தில் சனி பகவான் இருந்திருப்பார் அவருக்கு நான் கொடுத்த விளக்கம் அவர்களுக்கு ஜாதகம் பார்த்து சொன்னது போலவே சரியாக இருக்கும்.
ஜோதிடம் என்பது மிக சவாலானது ஆனால் மிகவும் கடினமானது கிடையாது சொல்லிக் கொடுக்கும் வகையில் சொல்லிக் கொடுத்தால் அற்புதமாக இது புரியும் இப்படி மிக எளிமையாக புரிந்து கொண்டால் முக்கியமான கணக்குகளை கூட புரிந்து கொள்ளக் கூடிய தன்மை ஏற்படும்.
இந்த பதிவு சம்பந்தமில்லாத இந்த பொதுக் கேள்வி தவிர்ப்பது நன்று இது அப்படி எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தீர்கள் என்றால் வாரத்திற்கு குறைந்தது
மூன்று பதிவாக எழுதுகிறேன்.
இந்த படத்தில் இருப்பவர் இந்தியாவின் சிறு குறு தொழில்கள் துறை இணையமைச்சர்
இவர் ஒடிசாவில் இருந்து பாலாசோர் என்ற தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றவர் .
இவர் மோடியின் அமைச்சரவையில்
இடம் பெற்றுள்ளார் இவரது
பெயர் பிரதாப் சந்திர சாரங்கி.,
64 வயதான இவர் தனது தாயை கவனித்துக் கொள்வதற்காக திருமணம் செய்யவில்லை
மண் குடிசை வீட்டில் ., சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்
இன்றளவும் அமைச்சராகி இவருக்கு சொந்த வாகனம் கிடையாது சொந்த ஊருக்கு வந்தால் அரசு வாகனத்தில் கிராமம் வரை சென்றுவிட்டு அவரது சைக்கிளில் தான் வீட்டிற்கு வந்தடைகிறார்.
No comments:
Post a Comment