Saturday, December 26, 2020

சனி தோஷம் நீங்க அற்புதமான மந்திர பாடல்

#இன்று_இரவு_சனிபெயர்ச்சி

#சனிக்கிரக_தோஷம்_நீக்கும் 
#சனைச்சர_ஸ்தோத்திரம்

தசரதர் அருளிய துதிப்பாடல்...
தசரதர் அருளிய சனீஸ்வர ஸ்லோகம்!

ஒரு முறை தசரத சக்ரவர்த்தியை சந்தித்த அவரின் ஜோதிடர்கள், ‘`சனி பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோஹிணி நட்சத்திரத்தில், சகடத்தை உடைத்து சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் 12 வருட காலம் கடும் பஞ்சம் உண்டாகும். சகல லோகங்களும் அழியும் நிலை ஏற்படும்!’’ என்றனர்.

தசரதர் மிகவும் கவலை அடைந்தார். உடனடியாக வசிஷ்ட முனிவரிடம் சென்று விஷயத்தை விளக்கினார். அவரும் ஜோதிடர்கள் கூறியதை ஆமோதித்தார். இதனால் தசரதரின் கவலை பன்மடங்கு அதிகரித்தது.

‘`நாட்டில் பஞ்சம் நேராமல் தடுக்க- உலகைக்காக்க வழியே இல்லையா?’’- -எனக் கேட்டார் தசரதர்.

‘`இல்லை மன்னா... இதைத் தவிர்க்க முடியாது!’’ பதிலளித்தார் வசிஷ்டர்.

இதைக் கேட்டு கலக்கம் அடைந்தார் தசரதர். ஊன்- உறக்கம் இன்றி சிந்தனையில் ஆழ்ந்தவர், இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். தனது ரதத்தில் ஏறி பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவு வரை பயணித்தார். தான் எதிர்பார்த்த ஓர் இலக்கை அடைந்ததும் தமது வில்லில் நாண் ஏற்றி, ‘ஸம்ஹார அஸ்திர’த்தை சனி பகவான் மீது பிரயோகிக்கத் தயாரானார்.

இந்த நிலையில், சனி பகவான் கார்த்திகையில் இருந்து ரோஹிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் தருணம் நெருங்கியது. அப்போது, அஸ்திரத்துடன் தசரதர் நிற்பதைப் பார்த்த சனி பகவான், ‘`தசரதரே! தேவர்களையும் நடுங்கச் செய்யும் உனது பராக்கிரமம் வியக்க வைக்கிறது. அஸ்திரத்தைப் பிரயோகிக்க வேண்டாம். வேண்டும் வரம் அளிக்க சித்தமாக உள்ளேன். என்ன வேண்டும், கேள்!’’ என்றார்.

இதைக்கேட்டு சற்று நிம்மதி அடைந்தார் தசரதர். அவர், சனி பகவானிடம் தனது வேண்டுதல்களை வைத்தார் ‘`சூரிய புத்திரரே! இன்று முதல் எனது நாட்டு மக்கள் எவரையும் நீங்கள் துன்புறுத்தக் கூடாது. மேலும் தாங்கள் ரோஹிணி நட்சத்திரத்தைப் பிளந்து கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன், சூரிய- சந்திரர்கள் இருக்கும் வரை பூமியில்... நதி உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு போகவோ, 12 வருட கால வறட்சி ஏற்படுவதோ கூடாது. இந்த வரங்களைத் தந்தருள வேண்டும்!’’ என்று வணங்கினார்.

அதன்படியே வரம் அளித்தார் சனி பகவான். உடனே தசரதர், சரஸ்வதி மற்றும் விநாயகரை தியானித்து, சனி பகவான் குறித்து ஸ்தோத்திரம் இயற்றினார். அதுவே தசரதர் இயற்றிய ஸ்தோத்திரம்...

🙏தசரதர் அருளிய சனீஸ்வரர் ஸ்லோகம் உங்களுக்காக:

நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய ச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூலரோம்ணே ச தே நம:
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கராளிநே
நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே
நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்து தே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச
ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா:
த்வயாவலோகிதா: ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே
ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய: ஸப்த தாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா:
த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குரு மே ஸௌரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித:

தசரதரின் இந்த துதியைக் கேட்டதும் உள்ளம் பூரித்தார் சனி பகவான்.

‘`உமது ஸ்லோகத்தால் பெரிதும் மகிழ்ந்தேன். ஆகவே, கொடுக்கக் கூடாத வரத்தை உனக்கு அளிக்கிறேன்.

ஒருவன், இந்த ஸ்லோகத்தை ஒரு முறையோ அல்லது இரு முறையோ சொல்லி இருந்தாலும்கூட, அவனை துன்புறுத்துவதை விட்டு விடுகிறேன்.

ஒருவனது ஜாதகத்தில், அஷ்டமத்திலோ ஜன்ம லக்னத் திலோ நான் இருந்தால், அவன் கர்ம சிரத்தையுடன் ஸ்நானம் செய்து, இரும்பால் செய்யப்பட்ட எனது வடிவத்தை அரச இலையால் அர்ச்சனை செய்து, எள் கலந்த உளுந்து அன்னம், இரும்புப் பொருள், தட்சணை, கறுப்புப் பசு அல்லது எருமை மற்றும் வஸ்திரம் ஆகியவற்றை, என்னை நினைத்து, ஒரு அந்தணனுக்கு தானம் செய்ய வேண்டும்!’’ என்றார் சனி பகவான்.

மேலும், ‘`சனிக்கிழமை அன்று இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி பூஜை செய்பவருக்கு எந்த இன்னலும் தர மாட்டேன். அதுமட்டுமின்றி கோசாரம், ஜன்ம லக்னம், தசைகள், புக்திகள் ஆகியவற்றில் வேறு ஒரு கிரகத்தால் ஏற்படும் பீடைகளில் இருந்தும் காப்பாற்றுவேன். அனைத்து உலக இன்னல்களையும் களைந்து இன்பமுறச் செய்வேன்!’’ என்றும் உறுதி அளித்தார் சனி பகவான்.

🙏இந்த ஸ்லோகத்தைப்பாடி சனிபகவானின் இன்னருளைப் பெறுவோம்.

🙏ஓம் சனீஸ்வரா போற்றி போற்றி🙏

No comments:

Post a Comment