Wednesday, December 30, 2020

குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பது ஆபத்தா?

*அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.* 
 

*அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை*. 

*அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும்.*
 

*செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது,* 

சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர்.

குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும். 

தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும். 

ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஊட்டியே விடுகின்றனர். 

நடக்கத் தெரியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரியக் கூடாது. 

குறிப்பாக அப்பாக்கள், வளர்ந்த பிள்ளைகளையும் கைகளில் தூக்கி வைத்திருப்பதை வீதிகளில், கடைகளில் பார்க்க முடியும். 

இதன் பெயர் அன்பன்று. குழந்தை தன் வேலையைத் தானே செய்வதைப் பெற்றோர் தடுக்கின்றனர்.

தத்தித் தத்தி நடக்கும்போதே பெருக்குமாற்றை எடுத்து வீட்டைப் பெருக்க எத்தனிப்பதைப் பார்க்க முடியும். 

பெண் குழந்தை என்றால் இதெல்லாம் இப்பச் செய்ய வேண்டாம் என்கிறோம். 

ஆண் பிள்ளை என்றால் இதெல்லாம் நீ எப்பவுமே செய்யக் கூடாது என்று தடுக்கிறோம். 

*ஆனால் குழந்தைகள் பால் பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய விருப்பம் காட்டுகின்றன*. 

*ஆண் பெண் வித்தியாசமில்லாமல்,  இன்றைய குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை.* 

*துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமைப்பது போன்ற அடிப்படை வேலைகளுக்கு நாம் அவர்களைப் பழக்கவில்லை*. 

*வீட்டு வேலைகளைக் கற்பது பெண் குழந்தைகளின் சுமையாக இருந்த அவலம் தற்போது மாறிவருகிறது*. 

இன்றைய இளைஞர்கள் பைப் கசிந்தால் சரிசெய்வது, ட்யூப் லைட்டை மாற்றுவது போன்ற சாதாரணப் பணிகளுக்குக்கூட app-ஐத்  திறந்து ஆளைத் தேடுகின்றனர்.  

*அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளைக்கூட அவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை.* 

*வீட்டில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் பிற்பகல் வரை உறங்குகின்றனர்.* 

*நள்ளிரவு கடந்தும் செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.*

இதனால், சோம்பேறித் தலைமுறையாக இன்றைய இளைஞர்கள் தலையெடுத்ததன் காரணம் நமது செல்லங்கொடுத்தல்.

வீட்டில் என்ன வேலை என்றாலும் அம்மாவோ அப்பாவோதான் செய்ய வேண்டும். 

ஒரு நாள் மிக்ஸி போடும்போது ஹை வோல்டேஜ் ஆகி ஃப்யூஸ் போய்விட்டது. 

டம்மென்ற சத்தத்தைக் கேட்டுக்கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. 

ஒருமணி நேரம் கழித்து, உள்ளே இருந்து அவனது குரல் மட்டும் வந்தது, `அம்மா, ஏ.சி ஓடல’. நாள் முழுவதும் அந்த ஆன்ட்டிதான் மாறி மாறி போன் செய்து ஆள்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். 

அந்த இளைஞன் படுத்தே கிடந்தான். 

அண்மையில் விசாரித்தபோது தெரிந்தது, அவனுக்கு மணமான சில மாதங்களிலேயே விவாகரத்தாகி அம்மா வீட்டில் இருக்கிறானாம்.

*செல்லங்கொடுத்து வளர்க்கப்படுகிறவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.*

 *சோம்பேறித்தனமும், தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும்.* 

*இந்தியக் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் செல்லத்தால் சீரழிக்கப்பட்டனர்*. 

*இப்போது பெண் குழந்தைகளுக்கும் அது பரவிவருகிறது*.  

நான் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்த போது, கல்லூரி படிக்கும் மகள்களைக் கொண்ட தந்தை ஒருவர் சக ஊழியராக இருந்தார். 

மூத்த மகளை இன்ஜினீயரிங் சேர்ப்பதற்குப்பட்ட கடனை அவர் அடைத்து முடிக்கும் போது திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. 

மகள் பேரில் 30 பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். 

ஆனால், அந்தப் பெண், தனக்கு நூறு பவுன் நகை போட வேண்டுமென்று தந்தையிடம் டிமாண்ட் செய்தாள். 

அதற்காக ஊரில் உள்ள சொத்தை விற்கச் சொல்லி அடம்பிடித்தாள். 

`அதை உன் தங்கைக்காக வைத்திருக்கிறேன்’ என அவர் சொன்ன போது, `அவளுக்கு இந்த வீடு இருக்குல்ல’ என்றாளாம். 

`எங்கள பத்தி அவ கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பினார்.

 கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உயிரையும் கேட்பார்கள். கொடுப்பீர்களா?

செல்லங்கொடுக்கும் பெற்றோர் நல்லொழுக்கத்தைவிடக் குழந்தைகளின் திறமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  

*ஒவ்வொரு குழந்தையும் தனிமனிதராக வளர்ந்தாக வேண்டும்.*

*எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு புள்ளியில்  தன் வாழ்க்கையை, தன் தோல்விகளை, தன் பிரச்னைகளைத் தானே சமாளித்தாக வேண்டும்.* 

*ஆனால், நமது அதீதப் பாதுகாப்பு வளர்ப்பு முறையால் அவை திக்கற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.*

*செல்லமாக வளரும் பிள்ளைகளால் வாழ்வின் உண்மைகளை ஏற்க முடியாது.*  

குழந்தைகளைக் கைக்குள்ளிருந்து விடுதலை செய்யுங்கள். 

அவர்கள் சிரமப்படட்டும். 

எப்போதும் ஏ.சி போட்டு வைத்திருந்தால் வெயிலுக்கும் குளிருக்கும் எப்படி அவை பழகும்!  

வெளியே கூட்டி வாருங்கள். 

வெறுங்காலில் நடக்கச் சொல்லுங்கள். 

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும். 

*துணிகளை மடிப்பது, இஸ்திரி போடுவது (வளர்ந்த பிள்ளைகளை) புத்தகங்களை அடுக்குவது, ஷெல்ஃபை க்ளீன் செய்வது போன்ற தம் வேலைகளைத் தாமே செய்யட்டும்.* 

பொருள்களைக் கேட்டால் `நோ’  சொல்லுங்கள். அன்பைக் கேட்டால் அள்ளித் தாருங்கள்.

*குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமைதான் செல்லங்கொடுத்தல்.* 

*பிரதிபலனாக, தான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்க வேண்டுமென மூளையை கண்டிஷன் செய்யும் சுயநலனே அதில் நிறைந்திருக்கிறது*.  

தானே உலகம் என்று வாழ்ந்தால் போதும் என நினைக்கின்றனர். 

*ஆனால்,  பெற்றோரின் காலத்திற்குப் பின்னரும் இந்தப் பூமியில் குழந்தை ஒரு தனிமனிதராக, சமூக விலங்காக வாழ்ந்தாக வேண்டும்.*

*கைகளிலிருந்து வெளியேறிக் கல்வி கற்கவும், பொருளீட்டவும், தனக்கெனத் துணையை அமைத்துக்கொள்ளவும், போகும் இடங்களில் நல்ல மனிதராக அறியப்படவும் வேண்டும்.* 

*அந்தச் சமூக வாழ்க்கைக்கு வெகுமுன்னரே தயார்படுத்துங்கள்.* 

*நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.   அப்படியான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே ஆதாரம். அதைக் கற்பியுங்கள்.* 

*உங்களின் கண்டிப்புகளும் இல்லைகளும் அதைத் தன் காலில் நிற்கப் பழக்கட்டும்!*

#படித்ததில் பிடித்தது-
 பகிர்கிறேன்

பரிகாரம் ஹோமம் யாகம் உண்மையா?

பரிகாரம், ஹோமம், யாகம், அன்னதானம் ஆகியவைகளைச் செய்வதால் தோஷம் நீங்குமா?

மருந்து  மாத்திரை சாப்பிடுவதால் உடல்நலம் சரியாகுமா என்று கேட்பதைப் போல்  இருக்கிறது உங்களது கேள்வி.நோய் தீருவதற்காகத்தானே  மருத்துவர் மருந்து  மாத்திரைகளைத் தருகிறார்.அதுபோலத்தான் இதுவும். நம்மை பீடித்திருக்கும்  தோஷங்கள் நீங்குவதற்காகத்தான் பரிகாரம்,  ஹோமம், அன்னதானம் போன்ற  தீர்வுகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.அதே நேரத்தில்  மருந்துகளை பரிந்துரைக்கும்  மருத்துவர் அதற்குத் தகுதியானவராக இருக்க  வேண்டும்.மெடிக்கலுக்குச் சென்று நாமே வியாதியைச் சொல்லி மருந்து  சாப்பிடுதல் என்பது  எத்தனை தவறானதோ அதே போல நாமாக பரிகாரத்தைச் செய்தல்  என்பதும் தவறானதே.முதலில் பரிகாரம் வேறு, ஜோதிடம் வேறு என்பதைப்  புரிந்து  கொள்ளுங்கள்.ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒன்று.  

ஜோதிட நூல்கள் எதுவும் பரிகாரத்தைப் பற்றிச் சொல்லாது.ஜோதிடர் என்பவர்  உங்களுக்கு உண்டாகியுள்ள தோஷத்தைப் பற்றித் தெளிவாக  எடுத்துரைக்க இயலும். ஆனால்,அதே ஜோதிடர் பரிகாரத்தைச் சொல்வது என்பது தவறு.பரிகாரத்தைச் சொல்ல  வேண்டும் என்றால் அந்த ஜோதிடர்  அது குறித்த அறிவினைப் பெற்றவராக இருக்க  வேண்டும்.அதாவது பரிகாரத்தைப் பற்றி ஜோதிட நூல்கள் அல்லாத சாந்தி  குஸூமாகரம், சாந்தி  ரத்னாகரம் முதலான நூல்கள் தெளிவாகச் சொல்கின்றன. இந்த  நூல்களையும் தர்ம சாஸ்திரத்தையும் கற்றறிந்த வேத விற்பன்னர்கள் மட்டுமே   சாந்தி பரிகாரங்களைச் சொல்லவும் செய்யவும் இயலும். 

உங்களுக்குத் தெளிவாகப்  புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜோதிட நிலையம்  என்பது லேபரட்டரி  என்று அழைக்கப்படும் பரிசோதனைக் கூடங்கள் போல என்று வைத்துக் கொள்ளலாம்.ஜோதிடர் என்பவர் பரிசோதனை செய்து ரிசல்ட்டைச் சொல்லும் லேப்  டெக்னீஷியன்கள். அவ்வளவுதான்.இந்த நோயினுடைய கிருமியின் தாக்கம்  அதிகமாக  உள்ளது என்று டெக்னீஷியன்கள் சொல்வதைப் போல ஜோதிடர்கள் இந்த கிரகத்தால் இன்ன  தோஷம் உண்டாகியிருக்கிறது என்பதைச்  சொல்ல வேண்டும்.நோய்க்கான தீர்வினை  மருத்துவர்தான் சொல்ல முடியும், அதற்குரிய மருந்தினை கற்றறிந்த மருத்துவர்  மட்டுமே பரிந்துரைக்க  வேண்டும்.

அதுபோலத்தான் தோஷத்திற்கான தீர்வினை அதாவது  பரிகாரத்தினை சாஸ்திரத்தை கற்றறிந்த பெரியோர்கள் மட்டுமே சொல்ல இயலும்.   


அதனை விடுத்து ஜோதிடர் சொல்லும் பரிகாரத்தைச் செய்தல் என்பது  லேப்டெக்னீஷியன் பரிந்துரைக்கும் மருந்தினைச் சாப்பிடுவதற்கு  ஒப்பானதாகவே  அமையும்.

பரிகாரத்தைச் சொல்லும் தகுதியை அந்த ஜோதிடர் பெற்றிருக்கிறாரா,  அதாவது வேதம், தர்மசாஸ்திரம், மற்றும் சாந்தி  பரிகாரங்களைச் சொல்லும்  நூல்களைப் படித்திருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு அவரிடம் பரிகாரத்தைக்  கேளுங்கள்.இல்லாவிட்டால்  உங்களுக்கு உண்டாகியிருக்கும் தோஷத்தினை மட்டும்  அவரிடம் தெரிந்து கொண்டு அதற்குரிய பரிகாரத்தை சாஸ்திரம் அறிந்தவர்களிடம்  கேட்டுத்  தெரிந்து கொண்டு செய்யுங்கள். 

ஜோதிடம் வேறு பரிகாரம் வேறு என்று  பிரித்துப் பார்த்து செயல்பட்டால் நீங்கள் செய்யும் பரிகாரம்,ஹோமம் அல்லது  அன்னதானம் முதலியவை நிச்சயமாக முழுமையான பலனைத் தரும்.

Tuesday, December 29, 2020

கண்ணதாசன் சொன்ன இந்து மத உண்மைகள்.

*மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது சரியான உண்மை*!!! 

"💮அர்த்தமுள்ள இந்து மதம்"💮

*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?👇👍

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.💪

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.💪

3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.💪

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.💪

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.💪

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.💪

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.💪

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.
👉மரமும் கடவுள்,🌼
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),🌼
👉குரங்கும் கடவுள் அனுமன்,🌼
👉நாயும் கடவுள் (பைரவர்),🌼
👉பன்றியும் கடவுள் (வராகம்).🌼

9. நீயும் கடவுள், 
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.👍

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்👍,

பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,👍

மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,👍

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பகவதம்,👍

அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,👍

தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,💪

மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,👍

கல்விக்கு
👉வேதக் கணிதம்,👍

உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,👍

கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,👍

விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.👍

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.🌸

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.💐

13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம்.🌼 ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.🌺

13. முக்தி எனப்படும் மரணமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.🌺

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். 

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமை
கொள்வோம்.
🌹🌻🙏🏻MPK🙏🏻🌻🌹

ஆருத்திரா தரிசனம் என்றால் என்ன?

#ஆருத்ரா_தரிசனம்_என்றால்

 #என்ன? 

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

#மார்கழி_மாத 
#திருவாதிரைநட்சத்திர_நாளில்எல்லா  சிவாலயங்களில் #ஆருத்ரா தரிசனம் சிறப்பாக #நடைபெறும். 

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்
என்று சங்க இலக்கியமான #சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் #திருவாதிரை ஆனதுபற்றி #புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், #திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. #அக்காலத்தில் திருமணமான #நான்காவது நாளில்தான் #சாந்தி_முகூர்த்தம் நடக்கும்

 ஆனால் திருமணமான #மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் #இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து #பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி #என்ன_பயன் என்று கூறிக் கதறி #அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,#திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு 
#அவள் கணவனுக்கு 
#உயிர்ப் பிச்சையளிக்க 
#சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு 
#பார்வைபார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் #உயிர்_கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து #ஆசீர்வதித்தார்கள்

 #இந்த_நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு 
#ஆருத்ரா_தரிசனம் என்று

 #பெயர்_ஏற்பட்டது.

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை #வழிபட்டால்__பலன். #ஆருத்ராவன்று__தரிசித்தாலே பலன் ஆகும்
திருச்சிற்றம்பலம்...  

வரும் 30.12.2020 ஆருத்ரா தரிசனம்...... அருகில் இருக்கும் சிவாலயத்தில் தரிசியுங்கள் . 

#இறை_உணர்வோடு
            🙏🙏

Monday, December 28, 2020

சிவன் சுடுகாட்டு சாமியா?

*சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று சிவனை விமர்சித்துவருகிறார்கள் இதன் உண்மை சூட்சுமம் என்ன!!*

*சுடுகாடு என்பது உயிர் எனும் மெய் இருந்த கூடாகிய நம் உடலை விட்டுபிரிந்த பின் கூடு ஆகிய உடலை பயனற்ற கூட்டை நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு.*

*அதாவது, உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம்,*

*உயிரற்ற உடல் பிணம் (சவம்).*

*60 – 70 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் நம் ஆன்மா பரிதவிக்கும்.*

*ஒரு ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு நாம் பிரியும்போது ஏற்படும் உணர்வு போல.... 60 – 70 ஆண்டு காலம் இருந்த கூடு தமக்கு என்றும் *நிரந்தரம் என நினைத்து பேணி காத்த* உறவுகள் அனைவரும் நம் உடலை எரித்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விடும்போது இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்ற மெய்யை உணர்ந்து நமது ஆன்மா பரிதவிக்கும் போது,*

*மாபெரும் கருணை யாளன் எம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அந்நேரத்தில் நமக்கு அபயம் அளிக்கிறார்,*

*இதை உணர்த்தவே அப்பர் பெருமான் திருஅங்கமாலை தேவாரத்தில்....*

*உற்றார் ஆருளரோ*
*உயிர் கொண்டு* *போகும்பொழுது*
*குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ..?*

*என்று மிக தெளிவாக கூறியுள்ளார்.*

*யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்பட்டு நம் ஆன்மா பரிதவிக்கும் நேரத்தில்,*

*சிவன் மட்டுமே நமக்கு கருணையுடன் அடைக்கலம் தந்து நமக்கு அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று சிவனை கூறுவது எவ்வளவு சிறுமை என்று உணர்ந்து பாருங்கள்.*

*சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை,*

*அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன்,*

*நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி,*

*சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு காக்கிறான் என்பதே உண்மை.*

*இதை உணராதவர்கள் தான் வீண்பேச்சு பேசுகிறார்கள்.*

*மாபெரும் கருணையாளன் ஈசன்*
*கருணையை உணராமல் அல்லது மெய் உணராமல் இருப்பவர்கள்,*

*மெய் உணர வேண்டி ஈசன் திருவருளால் அடியார்கள் பாதம் பணிகிறேன்.

Sunday, December 27, 2020

அற்புதமான வாழ்க்கை போதனைகள்

அற்புதமான வாழ்க்கை போதனை.....

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்...

Saturday, December 26, 2020

சனி தோஷம் நீங்க அற்புதமான மந்திர பாடல்

#இன்று_இரவு_சனிபெயர்ச்சி

#சனிக்கிரக_தோஷம்_நீக்கும் 
#சனைச்சர_ஸ்தோத்திரம்

தசரதர் அருளிய துதிப்பாடல்...
தசரதர் அருளிய சனீஸ்வர ஸ்லோகம்!

ஒரு முறை தசரத சக்ரவர்த்தியை சந்தித்த அவரின் ஜோதிடர்கள், ‘`சனி பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோஹிணி நட்சத்திரத்தில், சகடத்தை உடைத்து சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் 12 வருட காலம் கடும் பஞ்சம் உண்டாகும். சகல லோகங்களும் அழியும் நிலை ஏற்படும்!’’ என்றனர்.

தசரதர் மிகவும் கவலை அடைந்தார். உடனடியாக வசிஷ்ட முனிவரிடம் சென்று விஷயத்தை விளக்கினார். அவரும் ஜோதிடர்கள் கூறியதை ஆமோதித்தார். இதனால் தசரதரின் கவலை பன்மடங்கு அதிகரித்தது.

‘`நாட்டில் பஞ்சம் நேராமல் தடுக்க- உலகைக்காக்க வழியே இல்லையா?’’- -எனக் கேட்டார் தசரதர்.

‘`இல்லை மன்னா... இதைத் தவிர்க்க முடியாது!’’ பதிலளித்தார் வசிஷ்டர்.

இதைக் கேட்டு கலக்கம் அடைந்தார் தசரதர். ஊன்- உறக்கம் இன்றி சிந்தனையில் ஆழ்ந்தவர், இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். தனது ரதத்தில் ஏறி பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவு வரை பயணித்தார். தான் எதிர்பார்த்த ஓர் இலக்கை அடைந்ததும் தமது வில்லில் நாண் ஏற்றி, ‘ஸம்ஹார அஸ்திர’த்தை சனி பகவான் மீது பிரயோகிக்கத் தயாரானார்.

இந்த நிலையில், சனி பகவான் கார்த்திகையில் இருந்து ரோஹிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் தருணம் நெருங்கியது. அப்போது, அஸ்திரத்துடன் தசரதர் நிற்பதைப் பார்த்த சனி பகவான், ‘`தசரதரே! தேவர்களையும் நடுங்கச் செய்யும் உனது பராக்கிரமம் வியக்க வைக்கிறது. அஸ்திரத்தைப் பிரயோகிக்க வேண்டாம். வேண்டும் வரம் அளிக்க சித்தமாக உள்ளேன். என்ன வேண்டும், கேள்!’’ என்றார்.

இதைக்கேட்டு சற்று நிம்மதி அடைந்தார் தசரதர். அவர், சனி பகவானிடம் தனது வேண்டுதல்களை வைத்தார் ‘`சூரிய புத்திரரே! இன்று முதல் எனது நாட்டு மக்கள் எவரையும் நீங்கள் துன்புறுத்தக் கூடாது. மேலும் தாங்கள் ரோஹிணி நட்சத்திரத்தைப் பிளந்து கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன், சூரிய- சந்திரர்கள் இருக்கும் வரை பூமியில்... நதி உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு போகவோ, 12 வருட கால வறட்சி ஏற்படுவதோ கூடாது. இந்த வரங்களைத் தந்தருள வேண்டும்!’’ என்று வணங்கினார்.

அதன்படியே வரம் அளித்தார் சனி பகவான். உடனே தசரதர், சரஸ்வதி மற்றும் விநாயகரை தியானித்து, சனி பகவான் குறித்து ஸ்தோத்திரம் இயற்றினார். அதுவே தசரதர் இயற்றிய ஸ்தோத்திரம்...

🙏தசரதர் அருளிய சனீஸ்வரர் ஸ்லோகம் உங்களுக்காக:

நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய ச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூலரோம்ணே ச தே நம:
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கராளிநே
நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே
நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்து தே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச
ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா:
த்வயாவலோகிதா: ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே
ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய: ஸப்த தாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா:
த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குரு மே ஸௌரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித:

தசரதரின் இந்த துதியைக் கேட்டதும் உள்ளம் பூரித்தார் சனி பகவான்.

‘`உமது ஸ்லோகத்தால் பெரிதும் மகிழ்ந்தேன். ஆகவே, கொடுக்கக் கூடாத வரத்தை உனக்கு அளிக்கிறேன்.

ஒருவன், இந்த ஸ்லோகத்தை ஒரு முறையோ அல்லது இரு முறையோ சொல்லி இருந்தாலும்கூட, அவனை துன்புறுத்துவதை விட்டு விடுகிறேன்.

ஒருவனது ஜாதகத்தில், அஷ்டமத்திலோ ஜன்ம லக்னத் திலோ நான் இருந்தால், அவன் கர்ம சிரத்தையுடன் ஸ்நானம் செய்து, இரும்பால் செய்யப்பட்ட எனது வடிவத்தை அரச இலையால் அர்ச்சனை செய்து, எள் கலந்த உளுந்து அன்னம், இரும்புப் பொருள், தட்சணை, கறுப்புப் பசு அல்லது எருமை மற்றும் வஸ்திரம் ஆகியவற்றை, என்னை நினைத்து, ஒரு அந்தணனுக்கு தானம் செய்ய வேண்டும்!’’ என்றார் சனி பகவான்.

மேலும், ‘`சனிக்கிழமை அன்று இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி பூஜை செய்பவருக்கு எந்த இன்னலும் தர மாட்டேன். அதுமட்டுமின்றி கோசாரம், ஜன்ம லக்னம், தசைகள், புக்திகள் ஆகியவற்றில் வேறு ஒரு கிரகத்தால் ஏற்படும் பீடைகளில் இருந்தும் காப்பாற்றுவேன். அனைத்து உலக இன்னல்களையும் களைந்து இன்பமுறச் செய்வேன்!’’ என்றும் உறுதி அளித்தார் சனி பகவான்.

🙏இந்த ஸ்லோகத்தைப்பாடி சனிபகவானின் இன்னருளைப் பெறுவோம்.

🙏ஓம் சனீஸ்வரா போற்றி போற்றி🙏

Friday, December 25, 2020

சனி எங்கு இருந்தால் என்ன செய்வார்.

சனி எதிலும் பிடிப்பற்றவன்., பற்று குறைவானவர் 
மிக எளிமையாக வாழ்பவன்

ஒருவரது ஜாதகத்தில் சனி ராசி கட்டத்தில் எந்த பாவத்தில் அமர்ந்து இருக்கிறதோ அந்த பாவம் மிகவும் எளிமையாக இருக்கும்

அது சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகரை எளிமையை கடைபிடிப்பார்

உதாரணம் சனி லக்னத்தில் இருந்தால்

ஜாதகரை மிக எளிமையாக இருப்பார் கௌரவமான உடைகளை அதிகம் உடுத்த மாட்டாபற்று குறைவானவர்  தன் மேனியை பலப்பல வைத்துக் கொள்ள பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ள மாட்டார் மிகவும் எளிமையாக இருப்பார்

இரண்டாம் பாவத்தில் சனி  இருந்தால் அல்லது இரண்டாம் அதிபதி  இது மகர லக்னத்திற்கும் பொருந்தும்

அவரது அவரது பேச்சு வழக்கு மிகவும் எளிமையாக இருக்கும் உணவு விஷயத்தில் எளிமையாக இருப்பார் மிக உயர்ந்த மதிப்பு உள்ள உணவுகளை உண்ண மாட்டார் சாதாரணமாக பழைய சோறு கூட உண்பார்

மூன்றாம் இடத்தில் இருந்தால் அவர்கள் முயற்சி மிக பிரம்மாண்டமாக இருக்காது எளிமையாகவும் மிகவும் பொறுமையாகவும் நடக்கும்

நான்காம் பாவத்தில் இருந்தால் அந்த ஜாதகர் பயன்படுத்தும் வாகனம் மிகவும் எளிமையாக இருக்கும் அதிகம் வாகனத்திற்கு செலவு செய்யமாட்டார் 10 ஆண்டு 15 ஆண்டு என்று ஒரே வாகனத்தை பயன்படுத்த 
அதுவும் பழைய வாகனம் இருக்க வாய்ப்புண்டு.

அதுவே ஐந்தாம் பாவத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகர் குழந்தை சற்று காலதாமதமாக பெற்றுக் கொள்வார் அல்லது காலதாமதமாகவே அமையும்

ஆறாம் பாவத்தில் சனி இருந்தால் மிகவும் எளிமையான உத்தியோகத்தில் இருப்பார் உத்தியோகத்தில் பெரிய அதிகாரத்தில் இருக்க மாட்டார் ., மிகவும் எளிமையாக உத்தியோகத்தில் நடந்து கொள்வார் அவர் பெறுகின்ற வெற்றிகளும் மிகவும் எளிமையாக இருக்கும் யாருடனும் அதிகம் சண்டைக்குப் போக மாட்டார் போட்டி பொறாமைகளை தவிற்பர் 
மிகவும் பெருந்தன்மையுடன் இருப்பார்.

ஏழாம் பாவத்தில் சனி இருந்தால் அவரது துணை மிகவும் எளிமையாக நடந்து கொள்வார் இவரும் சமுதாயத்தில் மிகவும் எளிமையாக வாழ்வார் நண்பர்களும் பணக்கார நண்பர்கள் அல்லது எளிமையான நண்பர்களுடன் தான் இவரது பழக்கவழக்கங்கள் அதிகம் இருக்கும்.

எட்டாம் பாவத்தில் சனி இருந்தால் அவர் மிகப்பெரிய நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்.,  விபத்துகள் பெரிதும் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு அவருக்கு எதிரிகள் மிக குறைவாக இருப்பார்கள் அல்லது இல்லாமல் இருப்பார்கள் அவர் பூர்விக சொத்தை பெறுவதில் மிக சிரமப் படுவார் இன்சூரன்ஸ் அல்லது உயிர் சொத்துக்களை பெற மிகவும் போராடி வழக்குகளை சந்திப்பார்

ஒன்பதாம் பாவத்தில் சனி இருந்தால் அவரது நுண்ணறிவு மிக எளிமையாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைக் கூட மிக எளிமையான சிறிய தீர்வை கொடுப்பார் பலரும் ஆச்சரியப்படும் வகையில் அவரது மூளை இருக்கும் ஆனால் அதற்கு அவர் பெரிதும் யோசிக்க மாட்டார் 
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் மிக எளிமையாக நடந்து கொள்வார் கடவுள் பக்தியும் மிக எளிமையாக இருக்கும் வீட்டிலேயே மனத்தில் கடவுளை நினைத்து வழிபடுவார் கோயிலுக்குச் செல்வது தவிர்த்து வீட்டிலேயே மனமுருக வேண்டுவார்கள்

பத்தாம் பாவத்தில் சனி இருந்தால் அவரது தொழில் மிகையான மிகவும் எளிமையான தொழிலாக அமையும் முழுமையான முன்னேற்றம் ஏற்படும் தொழிலதிபராக இருந்தாலும் மிக எளிமையாக நடந்து கொள்வார் ஊருக்குத் தெரியாமல் மிகவும் அமைதியான சம்பாதிப்பார் தன்னை தொழிலதிபர் போல காட்டிக்கொள்ள மாட்டார் வெளியே சமுதாயத்தில் வர அச்சப் படுவார்

பதினொன்றாம் பாவத்தில் சனி இருந்தால் அவரது மூத்த சகோதரர்கள் எளிமையாக இருப்பார்கள் அவர்கள் செய்யும் பூஜைமுறை மிக எளிமையாக இருக்கும் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கடன் கொடுக்க மாட்டார்கள் கடன் வாங்க மாட்டார்கள் கூட்டத்தை சேர்த்து விரும்பமாட்டார்கள் இவர்களுக்கு நோய் அண்டவே அண்டாது மிகக் குறைந்த லாபத்தை அடைவார்கள் எளிமையாக வாழ்வார்

பன்னிரெண்டாம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் அவருடைய முதலீடுகள் மிகவும் குறைவாக இருக்கும் எளிமையாக வெளியே எடுக்கும் வகையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும் தாம்பத்திய வாழ்க்கை மிகவும் குறைவாக இருக்கும் இவருக்கு நோய் ஏற்பட்டால் அது உடனே குணமடையாது மிகவும் காலதாமதம் எடுத்து அதிலிருந்து மீண்டு வருவார் வெளிநாட்டில் அகதியாக வாழ்வது அல்லது வெளிநாட்டில் மிகக் குறைந்த வருமானத்தில் வாழக் கூடிய அமைப்பு அமையும் வெளிநாட்டிலும் மிக எளிமையாக வாழ்ந்தவர் என்ற பெயர் எடுப்பார்

இந்தப் பதிவை படித்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பாவத்தில் சனி பகவான் இருந்திருப்பார் அவருக்கு நான் கொடுத்த விளக்கம் அவர்களுக்கு ஜாதகம் பார்த்து சொன்னது போலவே சரியாக இருக்கும்.

ஜோதிடம் என்பது மிக சவாலானது ஆனால் மிகவும் கடினமானது கிடையாது சொல்லிக் கொடுக்கும் வகையில் சொல்லிக் கொடுத்தால் அற்புதமாக இது புரியும் இப்படி மிக எளிமையாக புரிந்து கொண்டால் முக்கியமான கணக்குகளை கூட புரிந்து கொள்ளக் கூடிய தன்மை ஏற்படும்.

இந்த பதிவு சம்பந்தமில்லாத இந்த பொதுக் கேள்வி தவிர்ப்பது நன்று இது அப்படி எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தீர்கள் என்றால் வாரத்திற்கு  குறைந்தது
மூன்று பதிவாக எழுதுகிறேன்.

இந்த படத்தில் இருப்பவர் இந்தியாவின் சிறு குறு தொழில்கள் துறை இணையமைச்சர்

இவர் ஒடிசாவில் இருந்து பாலாசோர் என்ற தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றவர் .

இவர் மோடியின் அமைச்சரவையில்
 இடம் பெற்றுள்ளார் இவரது 
பெயர் பிரதாப் சந்திர சாரங்கி., 

 64 வயதான இவர் தனது தாயை கவனித்துக் கொள்வதற்காக திருமணம் செய்யவில்லை

மண் குடிசை  வீட்டில் ., சைக்கிளில் பயணம் செய்து வருகிறார் 

இன்றளவும் அமைச்சராகி இவருக்கு சொந்த வாகனம் கிடையாது சொந்த ஊருக்கு வந்தால் அரசு வாகனத்தில் கிராமம் வரை சென்றுவிட்டு அவரது சைக்கிளில் தான் வீட்டிற்கு வந்தடைகிறார்.

Wednesday, December 23, 2020

கடவுள் உங்களோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கின்றார்

துன்ப காலங்களில்  கடவுள்*

ஒரு  மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். 

அது அவன் வாழ்க்கைப் பயணம். 

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். 

சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.  சத்தமாகக் கேட்டான். 

"என்னுடன் வருவது யார்?"

 "நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது. 

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 

'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். 

சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. 

சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.  

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது. 

'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான். 

அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.  

அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து 

ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது. 

கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.  

"கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், 
துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?" 

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. 

உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை. 

இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். 

அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை...."  

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று. 

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப் படுவதில்லை. 

கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல 

கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை. 

சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள், 
அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள. 

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, 

அவை இறையருளால் வராமல் தவிர்க்கப் பட்டிருக்கலாம். 

அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. 

கடவுள் கணக்கு சொல்வதில்லை. 

எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன. 

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது. 

எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. 

அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. 

நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வர வழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. 

மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். 

நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே, 
அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே 
நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். 

அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை. 

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது. 

இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவம் அடைவதும் சாத்தியமல்ல.  

உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை. 

கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே. 

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள். 

குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில் 

குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம். 

குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல. 

குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம். 

குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள்.  

கடவுளும் அந்தத் தாயைப் போல் தான். 

இனி கஷ்ட காலங்கள் வரும் போது 
கடவுளை திட்டாதீர்கள். 

அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.  

கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். 

உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் 

உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். 

முடிவு கண்டிப்பாக இனிமையாகும் ,,,

குலதெய்வத்தை உங்கள் வீட்டில் அழைத்து வர என்ன செய்ய வேண்டும்.

🔥💙🔥💙🔥💙🔥💙🔥💙🔥💙🔥💙🔥💙🔥💙 *🔥வாசலில் நிற்கும்* 
      *குலதெய்வத்தை வீட்டிற்குள்*🔥

 *அழைத்து வர என்ன செய்யவேண்டும்*

*சில வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக தலை விரித்தாடுவதற்கு, எதிர்மறை ஆற்றல் தான் காரணமாக இருக்கும். எதிற்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில் தெய்வங்கள் குடியேர தயங்க தான் செய்யும்.

*எந்த ஒரு வீட்டில் தெய்வங்கள் குடி கொள்ளாமல், இருள் சூழ்ந்த நிலையில் இருக்கின்றதோ, கட்டாயம் அந்த வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வரும்*
 
*இப்படிப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான சுலபமான ஒரு தீர்வு உள்ளது. நம்முடைய வீட்டில், இந்த பரிகாரத்தை நாமே செய்து கொள்ள முடியும். சிகப்பு நிற காட்டன் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் போல பன்னீர், வாசனைப் பொருட்களான, ஜவ்வாது ஒரு சிட்டிகை, அக்தர்  ஒரு சிட்டிகை, மல்லிகைப்பூ, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் இந்த சிவப்பு துணியை அந்த தண்ணீரில் நனைத்து முதலில் உலர வைத்துக்  கொள்ளுங்கள்*

*முனை உடையாத 3 விரலி மஞ்சளை எடுத்து, அதில் இந்த மூன்று மஞ்சளையும் வைத்து, சிகப்பு நூலால் ஒரு முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு இந்த முடிச்சுக்கு சந்தன பொட்டு, குங்கும பொட்டு வைத்து, உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை தீபத்தின் அருகில்  வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, நில வாசப்படியில் ஒரு ஆணியில் இந்த முடிச்சை மாட்டிவிட வேண்டும்*
 
*இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு செய்யலாம். வாசலில் மாட்டிய இந்த முடிச்சுக்கு தினந்தோறும் வீட்டில் தீபம்  ஏற்றும்போது, தூபம் காட்ட வேண்டும். மேலும் வீட்டு வாசலில் நிற்க கூடிய தெய்வம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று பிரார்த்தனை இருக்க வேண்டும்*

 
*11 நாள் கழித்து மாலை 6 மணிக்கு, வீட்டில் எப்போதும் வெள்ளிக்கிழமை பூஜை செய்வது போல செய்து, வாசலில் இருக்கும் முடிச்சை அவிழ்த்து பூஜை  அறையிலேயே மீண்டும் ஒரு 5 நாட்கள் வைத்து பூஜை செய்து வர வேண்டும்*
 
*உங்கள் வாசலில் 11 நாட்கள் வாசம் நிறைந்த இந்த மஞ்சளை வைத்து, மனநிறைவோடு வீட்டிற்குள் உங்களது தெய்வத்தை அழைக்கும் போதே, அந்த  தெய்வமா ஸனது இந்த மஞ்சளில் குடியேறியிருக்கும். அதை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்*

🌷🔥🌷🔥🔥🔥🌷🔥🌷
*🚩சர்வம் சிவமயம்🚩*💙🔥💙🔥💙🔥💙💙🔥💙🔥💙🔥🔥💙🔥

Tuesday, December 22, 2020

எப்படிப்பட்ட தோல்வியாக இருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்

தோல்வியில் இருந்து மீள்வதற்கு, வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 1 மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் போதும்.

சிலருக்கு எல்லா விதத்திலும் சறுக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அது தொழில், வியாபாரம், கல்வி, வேலை என்று எந்த விஷயமாக இருந்தாலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் பொழுது மனதில் மிஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும். அதுபோல் நம்பிக்கை இழக்கும் பொழுது வாழ்க்கையில் விரக்தி உண்டாகும். உங்களுக்கு தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டே இருந்தால் மிகப்பெரிய சாதனையை நீங்கள் புரிய போகிறீர்கள் என்பது தான் அதன் அர்த்தம். எப்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்து ஒருவருக்கு தோல்விகள் வந்து கொண்டு இருக்கிறதோ அப்பொழுது அவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை உயர வேண்டும். அது சற்று கடினமான காரியம் தான். ஆனால் முடியாதது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது போன்ற தருவாயில் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். அது என்ன மந்திரம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் உங்கள் தொழிலில் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அதிலிருந்து விரைவில் நீங்கள் நிவாரணம் பெற முடியும். உங்கள் தொழிலில் மாறாக நீங்கள் தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்தாலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கலாம்.

தொழில் மட்டுமல்ல, வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும் பொழுதும், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வியாபார விருத்தி ஏற்படும் பொழுதும், இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்தால் மேலும் மேலும் செழித்து முன்னேற்றமடையும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் மட்டும்தான் உச்சரிக்க வேண்டும் என்று இல்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படும் பொழுது அதை திறம்பட செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள். அதுபோன்ற சமயத்தில் இந்த மந்திரம் நிச்சயம் உங்களுக்கு துணையாக இருக்கும்.

இதோ அந்த மந்திரம்: 
ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம!

குழந்தைகள், மாணவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், கூடுதல் பலமும் நிச்சயம் கிடைக்கும். முருகனின் மூல மந்திரமான இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை உச்சரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்ன தேவையோ அது உடனே கிடைக்கும். முருகரின் அருட்கொடை பெற இந்த மந்திரத்தை தக்க சமயத்தில் தியான நிலையில் அமர்ந்து அமைதியாக 108 முறை மனதை ஒருமுகப்படுத்தி உச்சரித்து பயன் பெறுங்கள்.

வைகுண்ட ஏகாதேசி மகத்துவம்

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்  !

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1) நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம் (3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6) சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம், (4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6) பூபதி திருநாள் தை மாதம், (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை வாஹனம் - தை, மாசி, சித்திரை (2) தங்க கருடன் வாஹனம் - தை, பங்குனி சித்திரை (3) ஆளும் பல்லக்கு - தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை - தை, மாசி, சித்திரை (5) சேஷ வாஹனம் - தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமந்த வாஹனம் - தை, மாசி, சித்திரை (7) ஹம்ச வாஹனம் - தை, மாசி, சித்திரை

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம், ஹனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் - ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை (1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21 கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6) தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

கொடுக்கப்பட்டுள்ள 25ல் 2 மற்றும் 5 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர். 
காரியங்கள் அனைத்தும் கைகூடும் பாரீர்.

ஓம் நமோ நாராயணாய !

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !

Sunday, December 20, 2020

சஷ்டி விரதம் எப்படி இருப்பது

🙏🙏🙏🙏🙏#சஷ்டி விரதம் வீட்டில், கோயிலில் இருப்பது எப்படி??

குழந்தை அருள் உட்பட 16 சம்பத்துகள் எனும் செல்வங்களைப் பெற முருகனின் அருளால் பெற கந்த சஷ்டி விரதம் இருப்பது அவசியம். கந்த சஷ்டி விரதம் எப்படி இருப்பது, வீட்டில் விரதம் இருக்க நினைப்பவர்கள் என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பனவற்றைப் பார்ப்போம்...

முருகனை வழிபடுபவர்களுக்கு எந்த தடையும் வருவதில்லை. மலை போல் வருகின்ற பிரச்சனைகள் எல்லாம் பனி போல் விலக முருகப்பெருமான் ஒருவரை வழிபட்டாலே போதும். காக்கும் கடவுளாகவும், அருளும் குழந்தையாகவும் பக்தர்களுக்கு காட்சி தரும் முருகப்பெருமான் கலியுகக் கடவுளாக போற்றப்படுகின்றார்.
 
அவரை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாட்களாக இந்த நாட்கள் இருக்கின்றன. இந்த நாட்களில் மட்டும் முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் கிடைக்கப் பெற்று வாழ முடியும் என்கிறது வேதம். அப்படி எந்த நாட்களில் நாம் முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
கந்த சஷ்டி என்பது ஒவ்வொரு மாதமும் வரக்கூடியது தான். அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு பின் 6ம் நாள் சஷ்டி திதி வரும். இந்த நாளில் இருக்கும் விரதத்தை விட, ஐப்பசி மாதத்தில் (தீபாவளி அடுத்து வரும் அமாவாசை)அமாவாசைக்கு பின் வரும் பிரதமை தினத்திலிருந்து சஷ்டி வரை உள்ள 6 நாட்கள் விரதமிருக்க மிகச் சிறப்பாக நாட்கள்.

சஷ்டி என்றால் என்ன?
சூரனுடன் 6 நாட்கள் கடுமையாக போரிட்ட முருகப்பெருமான் கடைசியில் வெற்றி பெற்ற நாளை குறிப்பதாக அமைகிறது. இந்த 6 நாட்கள் விரதம் இருப்பது பல விசேஷ பலன்களை தரும்

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

இந்த சஷ்டி விரதம் வீட்டில் அல்லது கோயிலில் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

இந்த விரதம் இருப்பதன் மூலம் முதல் சிறப்பு பலன் குழந்தை பேறு. அதோடு நம்மிடம் இருக்கும் குறைகள் நீங்கி நன்மை சேரவும், நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேர உதவும்.

வீட்டில் விரதம் இருப்பது எப்படி?

வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம்.

முருகனை வழிபட சஷ்டி சிறந்த நாளாக இருந்து வருகிறது. குறிப்பாக சஷ்டி விரதம் இருந்தால் திருமண தடை அகலும். யார் யாருக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்தாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்குவார். முருகனை நம்புபவர்களுக்கு தோல்வியே கிடையாது.

சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் மேற்கொள்ள வேண்டும். ஆறு நாட்கள் வரை மது, மாமிசம், தொடக் கூடாது.
 
அது போல் சைவத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு கட்டாயம் சேர்க்க கூடாது என்பது நியதி.
 
நீங்கள் சமைக்கும் பொழுது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் சமைத்து சாப்பிடலாம். முருகப் பெருமானின் படத்தை பூஜை அறையில் வைத்து அவருடன் அவருடைய பெற்றோர்களாகிய எம்பெருமான் ஈசன் மற்றும் பார்வதி தேவியின் படத்தையும் வைத்து விளக்கேற்ற வேண்டும். சஷ்டி விரதத்தின் போது முடியாதவர்கள் பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 
 
குறிப்பாக எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அதாவது கணவன் மனைவி, சகோதர சகோதரிகள், தாய் சேய் என எந்த உறவில் விரிசல்கள் இருந்தாலும் அதனை சரிசெய்ய கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளலாம். உறவில் சந்தேகம் போன்ற விஷயங்கள் இருந்தால் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வது சிறந்த பலன்களை தரும். கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கை உண்டாகும். நேர்மறை ஆற்றல் பெருகும்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின் போது சொல்ல வேண்டிய திருப்புகழ் பாராயணம்.

வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.

அது போல் ஐந்து மற்றும் ஆறாம் நாள் விரதம் இருப்பவர்களுக்கு தொழில் வியாபார வளர்ச்சி உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். முருகப் பெருமான் சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த நாட்களில் தண்ணீர் மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
பின்னர் புதிய ஆடை சாற்றி, அலங்காரம் செய்ய வேண்டும். சஷ்டி விரதத்தின் ஆறு நாட்களும் சஷ்டி கவசம் பாட வேண்டும். இவைகளை செய்து மனமுருக முருகப்பெருமானை வணங்கினால் நோய் நொடி இன்றி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இனி சஷ்டி விரதத்தை அனைவரும் மேற்கொண்டு நாமும் நல்ல பலன்களை பெறலாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி||

ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்  திருச்சிற்றம்பலம்.

ஓம் சரவண பவ.

Saturday, December 19, 2020

இறப்புக்கும் ஜீவசமாதி க்கும் உள்ள வித்தியாசம்

🙏🌺#ஜீவன்_சமாதி_நிலை 🔱(ஜீவசமாதி நிலை)

 1.உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும், அதாவது இப்படி  ஜலமும் வெளியே வந்துவிடும்.இப்படி வெளியாவதே தீட்டு என்று கூறுவதுண்டு.இந்த தீட்டின் காரணமாகத்தான் அந்த உடல் நாற்றம் வீசுகிறது (அதுவே பிண வாடை).

2.சித்தர்கள்,முத்தர்கள்,ரிஷிமார்கள்,சிவனடியார்கள், இறை பக்தி மார்க்கத்தில் சிறந்தவர்கள் போன்றோர் இறப்பது கிடையாது.அவர்களுடைய உயிர் அவர்களின் தலையில் சென்று அடங்கி விடும். இப்படி அடக்கம் ஆகும் உடலுக்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன

1.அந்த உடல் கெட்ட நாற்றம் வீசாது.தேவ மணம் வீசும். அந்த உடலில் முழுக்கு (தீட்டாகிய மலமும் ஜலமும்) வெளியாகாது.

2.அந்த உடல் விரைப்பாகாது.எவ்வளவு நேரம் ஆனாலும் வளைந்து கொடுக்கும். அதற்க்கு நாடி கட்டு, கால் கட்டு இட தேவையில்லை.

3.அந்த உடல் கணக்காது,ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும்.

4.இந்த உடல் நேரம் ஆக ஆக அதில் வியர்வை கொட்டும்.

5.உடல் குளுந்து போகாமல் எப்பொழுதும் வெது வெதுவென்று அதன் சூடு மாறாமல் இருக்கும்.

6.பொதுவாக பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் ஆனால் அடக்கமான உடலின் தொண்டையோ எவ்வளவு தீர்த்தம் கொடுத்தாலும் அது தொண்டையின் வழியாக இறங்கும்.

7.உயிர் உள்ள பொழுது எப்படி ஒரு உடலுக்கு சொடுக்கு எடுக்க முடியுமோ அது போல இந்த அடக்கமான உடலிலும் எடுக்கலாம்.

8.உயிர் உள்ள பொழுது இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும்.பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும்.80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் அடக்கமானவுடன் அதன் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும்.

9.இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும்.அடக்கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் தூங்கி கனவில் ஒரு கெட்ட கனவு கண்டு விழிக்கும் பொழுது நமது முகம் அரண்டு காணப்படும்,இதே ஒரு நல்ல கனவு கண்டு விழித்தால் சிரிப்புடன் எழுவோம்.இறந்த ஆன்மா நரகத்தை கண்டு அது அரண்டு விடுகின்றது. அடக்கமாகும் ஒரு ஆன்மாவோ இறைவனை கண்டு அந்த எக்களிப்பில் சிரிக்கின்றது.

10.அடக்கமாகும் உடல் எக்கோடி காலமானாலும் மண்ணில் மக்காது.இறந்த உடலோ 6 மாதத்திற்குள் கிட்ட தட்ட சின்னா பின்னமாகிவிடும். பூமியை நாம் தாய் என்று கூறுவோம். ஒரு தாய் தன் மகனை தின்பதாக இருந்தால் இவன் எக்கேடு கெட்ட நிலைக்கு தள்ளபட்டால் இது நடக்கும்? அடக்கமான சடலத்திற்கோ அந்த பூமி அது மக்காமல் பாதுகாக்கின்றது. ஏனெனில் இவர்களோ வந்த கடமையை சரி வர செய்ததால் இந்த நிலை.

சாகாக்கலை பெற்றவர்களின் (ஜீவ சமாதி) ஸ்தூல அடையாளங்களளே...இவை.🙏

முருக வழிபாடு தோன்றிய வரலாறு

முருக வழிபாட்டை மனித குலத் தோற்றத்தில் இருந்து தேடிக் கண்டறியலாம். முருக வழிபாட்டின் தோற்றம், காலந்தோறும் முருக வழிபாடு அடைந்த மாற்றம், கௌமாரம் என்ற தனி மதம், சைவம், வைணவம், பௌத்தம் என்று பல்வேறு மதங்கள் எப்படி முருகனை தம்முடையவனாக்கிக் கொண்டன. வட நாட்டிலும் தென்னாட்டிலும் காணப்படும் முருக வழிபாடு, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் காணப்படும் முருக வழிபாடு என முருகனின் வழிபாடு குறித்து நீண்ட சமூகப் பண்பாட்டு ஆய்வு வரலாறு உள்ளது.

ஆதி பெண் தெய்வ வழிபாட்டுக்கு அடுத்த நிலையில் மனித சமுதாயம் கண்டறிந்த வழிபாடு குமரன் அல்லது முருகன் வழிபாடு. இவன் அழகன்; குமரன்; வேல் தாங்கிய வீரன்.
அவன் தாயே தலைவி ஆவாள். அவளே அன்னை மகா சக்தி. அவள் காட்டிய வழியில் அவள் அளித்த ஆயுதமாகிய வேலைக் கொண்டு இவன் பல வீரச்செயல்களை நடத்தி வந்தான். அனைவரையும் காக்கும் அன்னை அவளது வீரப்புதல்வன் என்ற இருவருமே ஆதி தெய்வங்கள். இவன் தாயின் குழந்தை என்பதால் இவன் சிறுவன் என்ற பொருளில் சேயோன் எனப்பட்டான்.

சங்க காலத்து முருகன்முருகன் என்ற பொதுச் சொல்லை மக்கள் அதிகம் பயன்படுத்தினாலும் அவன் ஒவ்வொரு இடத்திலும் காலத்திலும் மதத்திலும் நாட்டிலும் வெவ்வேறு பெயரால் குறிப்பிட்டுள்ளனர். தொல்காப்பியம் முருகனை சேயோன் என்கிறது. அவன் குறிஞ்சி நிலத்தின் தெய்வம் ஆவான். சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நிலமே கூடலுக்குரிய இடமாகும்.

தலைவன் திருமணத்துக்கு முன்பு தலைவியுடன் கூடி மகிழ்ந்து காலங்கழித்த பின்னர் அவளைத் தேடி அவன் வராதபோது அவனைக் காண வேண்டும் என்ற ஏக்கத்தால் அவள் உண்ணாமல் உறங்காமல் தவித்து உடல் நலிந்து மகளின் இந்நிலையைக் கண்ட தாய் அவளுடல் நலிவுக்கான காரணத்தை அறிய அவ்வூர் சாமியாடியும் மருத்துவனுமான [SHAMAN] வேலனை அழைத்துக் குறி கேட்கிறாள். இங்கு வேலன் என்பவன் குறிஞ்சி நிலத்துத் தெய்வமான சேயோனின் பிரதிநிதி ஆவான், தெய்வமேறி ஆடல் என்பது மந்திரச் சமயச் சடங்குகளில் [magico religious ritual.] ஒன்றாகும். இன்றைக்கும் தொடரும் இந்நடைமுறை மனிதன் தன் வாழ்வில் தெய்வம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஆக, குறிஞ்சி நிலத் தெய்வமான சேயோனின் சாமியாடி வேலன் எனப்பட்டான்.

சங்க காலத்தில் வேலனை முருகன் என்றும் அழைத்ததாக இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. குறிஞ்சித் திணையின் கருப்பொருள் கூடலும் கூடல் நிமித்தமும் என்பதாகும். அகத்திணையியலை களவியல் [திருமணத்துக்கு முந்தைய காதல் நிகழ்வுகள்]. கற்பியல் [திருமணத்துக்குப் பிந்தைய இல்லற நிகழ்வுகள்] எனப் பிரித்த தொல்காப்பியர் களவு என்பதில் குறிஞ்சித்திணை ஒழுக்கத்தைச் சேர்த்தார். வேலன், சேயோன், முருகன் மற்றும் வள்ளித் திருமணம் ஆகியவை சங்க காலம் தொட்டு இருந்து வந்த பழந்தமிழ்த் தெய்வங்களும் கதை நிகழ்வுகளும் ஆகும்.

சங்க காலத்தில் கந்து வழிபாடுதொல்காப்பியர் வழிபாடுபற்றி குறிப்பிடும் நூற்பாவில் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றினைக் குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் நடுகல் நட்டு வழிபடுவதும் கந்து எனப்படும். கம்பம் வைத்து வழிபடுவதும் வீரவழிபாட்டின் சின்னங்கள் ஆகும். கந்தழி என்பது புலிவேட்டையில் மறைந்த வீரன், நாட்டை காப்பாற்றுவதில் பகைவனின் வேலுக்கு பலியாகி இறந்த வீரன் என ஆண்மகனின் வீரத்தைப் போற்றி கல்லோ கம்பமா நட்டு வணங்கி வந்த முன்னோர் வழிபாட்டு முறை ஆகும். கம்பும் கழியும் இறந்த சிறந்த ஆண் மகனுக்கு அடையாளமாக இருந்து ஆண்மைக்கும் அடையாளமாயிற்று.

பவுத்தம் தமிழ்நாட்டில் பரவிய போது பல்லவர்களின் ஆதரவு பெற்று விளங்கியது பல்லவ மன்னர்கள் முதலில் குகைக் கோயில்களை உருவாக்கினர். சம நிலங்களில் கந்து [கம்பம்] இந்திரன் கோயிலுக்கு அடையாளச் சின்னமாயிற்று. பூம்புகாரில் இருந்த இந்திரனின் கோயிலை 'கந்துடைப் பொதியில்' என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில், மருத்துவா மலை [வள்ளிமலை, இந்திரன் பொத்தை], சபரி மலை, சதுரகிரி, பழனி, பொதிகை [பொதியில்] போன்ற மலைப்பகுதிகளில் பவுத்தர்கள் மறைந்து வாழ்ந்தனர். காலத்தால் பிந்திய திருமுருகாற்றுப் படையும் முருகனின் கோயில்களை, மன்றம், பொதியில், கந்துடை நிலை என்ற பெயர்களில் குறிப்பிட்டுள்ளது.

கந்தனை தேவர்களின் காவலனாகக் கருதினர். கந்தனுக்கு தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தைக் கொடுத்து அசுரர்களைக் கொல்லப் புறப்பட்ட படையின் சேனாதிபதி ஆக்கினான்.

கந்தன் தேவர்களைக் காத்து அசுரர்களை அழிக்கும் பணியில் உதவிய மாவீரன் என்பதால் இந்திரன் தன் மகளை இவனுக்குத் திருமணப் பரிசாக கொடுத்துத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டான். வடநாட்டிலிருந்து பௌத்த சமயம் தென்பகுதிக்குப் பரவி அங்குள்ள காஞ்சிபுரத்திலிருந்து போதி தர்மர் வழியாக சீனா, ஜப்பான் எனப் பரவியபோது மண்ணின் கடவுளரும் சேர்ந்தே பயணப்பட்டனர். அவ்வாறு பயணித்த சரஸ்வதி, பிரம்மன்,
கணபதி ஆகியோருள் ஸ்கந்தனும் இடம்பெற்றான்.

தேவசேனாதிபதி ஸ்கந்தன்ஸ்கந்தனுக்கு சீனாவில் வியே து ஓ என்று பெயர்; [ஜப்பானில் இதா தென்]. இவன் அங்கும் தேவேந்திரனின் படைத் தளபதியே ஆவான். தேவேந்திரன் அளித்த வஜ்ராயுதத்தை படுக்கைவசமாக தன் திருக்கரங்களில் ஏந்தி இருப்பான். புத்தர் கோயில்களில் புத்தருக்கு நேரே ஸ்கந்தனுக்கு சந்நதி உண்டு. சீனாவில் ஸ்கந்தன் புத்த மடங்களின் காவல் தெய்வம். புத்த தர்மத்தை தனக்குப் பிறகு மாரனிடமிருந்து [ஆசை] பாதுகாக்கும்படி புத்தர் இவனுக்கு ஆணையிட்டார். பவுத்தக் கடவுளான காவல் தெய்வம் என்ற கருத்து சீனா, ஜப்பானில் இருப்பதை போலவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலக் கோயில்களிலும் உண்டு. இங்கு சுப்பிரமணியன் என்ற பெயரில் நாகங்கள் சூழ காணப்படும் இவன் புதையலின் காவலன் ஆவான்.

சிவசக்தி இணைப்பும் முருகனும் சிவனை குறிக்கும் நேர் முக்கோணமும் சக்தியைக் குறிக்கும் தலை கீழ் முக்கோணமும் சேர்ந்ததே கந்தனின் அறுகோண வடிவம் ஆகும் என்ற கருத்தியலும் நிலவுகிறது. அறுவகைச் சமயங்களுள் சைவம், சாக்தம் இரண்டையும் இணைத்து கௌமாரச் சிந்தனைக்குள் கொண்டு செல்கின்றனர். ஏனெனில் கந்தம் என்ற சொல் தூண், மணம், அணு ஆகிய பொருட்களை அளிக்கிறது. கந்தம் என்பது வழமை குறியீடாக விளங்குகிறது.

அறுகோணம் என்பது சிவசக்தி சேர்க்கையைக் குறிப்பதால் கந்தன் என்பவன் மக்கட்செல்வத்தை அளிக்கும் வளமையின் அடையாளம் ஆகிறான். தமிழில் கச்சியப்ப சிவாச்சார்யாரால் கந்த புராணம் என்று கி.பி. 1350ல் இயற்றப்பட்டது. இந்த மூலக் கதையை கச்சியப்ப சிவாச்சார்யார் வள்ளியின் மணாளனான முருகனுடன் இணைத்து ஒரே கதையாக்கி அதற்குப் புராண வடிவம் கொடுத்தார். கந்தனின் பிறப்பு, கார்த்திகைப் பெண்கள் வளர்த்தது, சக்தி வேல் வழங்கியது, வள்ளி தெய்வானை திருமாலின் கண்ணீர் துளிகளில் இருந்து பிறந்தது, நவ காளி, நவ வீரர்கள் என பலரின் பங்களிப்பும் இக்கதையில் இடம் பெற்றது.

சைவம், வைணவம் பவுத்தம் என்று பல சமயங்கள் முருகனை, கந்தன் என்றும் கார்த்திகேயன் என்றும் கொண்டாடி வந்த நிலையில் சித்தரியம் அவனை வேறு விதமாகப் போற்றியது. பவுத்தர்களும் சமணர்களும் மாமன்னர்களின் செல்வாக்கு இழந்து வைதிக சமயவாதிகளிடம் வாதில் தோற்றனர். அவர்களில் சமணர்கள் சைவர்களாக மாறினர். அவர்கள் முருகனையும் சிவனையும் [நடராசர்] மறைசமயக் கோட்பாடுகளின் அடையாளமாக்கிக் கொண்டனர். மனிதனின் புவியுலக வாழ்க்கை சிறப்பாக இருக்க உடல்நலம் பற்றி கவனம் செலுத்தினர். பரிபாஷையைப் பின்பற்றினர். பிராணாயாமம், இரசவாதம், ஜோதிடம், வானசாஸ்திரம், தற்காப்புக் கலை என்று அறிவியல்களில் நாட்டம் செலுத்தினர்.

வள்ளலார், அறுவகை சக்கரம் மற்றும் குண்டலினி என்ற கருத்தாக்கத்திற்குள் முருகனைக் கொண்டு போய் அவனைச் சுப்பிரமணி என்று குறிப்பிட்டார். சிறந்த மணி, அப்பழுக்கற்ற மணி அல்லது வெண்மை மணி என்ற பொருளில் சுப்பிரமணி என்ற சொல்லைப் பயன்படுத்தினார். விசுக்தி எனப்படும் இதயப் பகுதியில் அதன் இடது புறத்தில் ஆறு தலை உடைய ஒரு நாடி உண்டு, அதைச் சுப்பிரமணி என்று குறிப்பிட்டார். புருவ மத்தியில் ஆறு பட்டையாகத் தோன்றிய ஜோதிமணியை ஆறுமுகம் அல்லது சண்முகம் என்றார். ஆறு ஆதாரச் சக்கரங்களில் தோன்றும் ஆறு ஒளியையும் சுப்பிரமணி சுத்தமான ஒளி என்றார்.

அந்தணர்களின் சுப்பிரமணிசித்தர்கள் [பவுத்தர்கள்] முருகனை சித்த சுத்த கோட்பாடாக வணங்கிப் போற்றிய காலத்தில் மீண்டும் வைதிகர்கள் முருகனை தமக்கென்று சொந்தம் கொண்டாடினர். ' சு பிராமணர் என்றால் நல்ல பிராமணன், தேர்ந்த பிராமணன்; பிரமம் என்றால் சத்யமான பரமாத்மா சொரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். பிரம்ம என்ற பதத்துக்கு இன்னொரு முக்கியமான அர்த்தம், வேதம் என்பது. வேதத்தை அனுசரிப்பது. அனுஷ்டிப்பது.

அதாவது வைதிகம் என்பதுதான் பிராமண்யம். அதை முக்கியமாகக் கொண்டவர்கள் பிராமணர்கள்; வேதங்களின் பரம தாத்பர்யமான பிரம்மமாகிற பரமார்த்த சொரூபமாகவே இருப்பதால் சுப்பிரமணியராக இருக்கப்பட்ட மூர்த்தி' என்று சந்திரசேகரேந்திர சுவாமிகள் சுப்பிரமணியரை வேதமாகவும் பிரம்மமாகவும் கருதி சிறந்த பிராமணர் என்று கொண்டாடுகிறார்.

சங்க இலக்கியத்தில் காணப்பட்ட சேயோன், அவனது சாமியாடி வேலன், வட நாட்டிலும் பவுத்தத்திலும் உள்ள இந்திர சேனாதிபதி ஸ்கந்தன், புராணங்களில் சிவனின் குடும்பத்தைச் சேர்ந்த கந்தன், சித்தர்களின் முருகன் [சுப்பிரமணி]. இன்று வைதிகர்கள் சுப்பிர
மணியராக கோட்பாட்டளவில் வளர்ந்து வந்துள்ளான்.

Friday, December 18, 2020

திருச்சி அகிலாண்டேஸ்வரி கோயிலில் மகிமை

*அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில்*

 
திருச்சியை அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோவில். இந்த கோவிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்டவர்.  

*பஞ்சநத நடராஜர், சுத்தரத்தினேஸ்வரர்*

*மூலவர்* : சுத்தரெத்தினேஸ்வரர்
*அம்பாள்* : அகிலாண்டேஸ்வரி

இத்திருத்தலத்தில் உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஒரே கல்லால் ஆன "பஞ்ச நதன நடராஜர்" அருள்புரிகிறார்.. 

இத்தல நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி வழிபட்டால் சிறுநீரக நோய் குணமாகும்....திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் பாடாலூர் அருகே 5km தொலைவில் உள்ளது.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி.இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.

இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது. 

சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது. 

சிவகாமி அம்மையும் அழகோ அழகு.வெட்டிவேர் மாலையை நடராஜருக்கு சாற்றி பூஜை செய்து அந்த மாலை எடுத்து வந்து 48 நாட்கள் சாப்பிட சிறுநீரக நோய்கள் தீரும் அனுபவ உண்மை...இறைவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் இருந்தது வியப்பாக தோன்றுகிறது

*ஸ்தல வரலாறு* :

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. 

முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. 

ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

காயத்துடன் சிவலிங்கம்.......... ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். 

மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். 

இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். 

இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். 

சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.

*இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்* :

ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். 

பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். 

இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.

ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. 

பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவில் அமைப்பு

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. 

இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.

*மேற்கூரையில் நவக்கிரகங்கள்*

ஊட்டத்தூர் சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது கோவில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. 

அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். 

ஆனால் ஊட்டத்தூர் கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.

இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

*கிழக்கு நோக்கி நந்தி*

மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். 

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. 

இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது. இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று.

*அபூர்வ நடராஜர்*

இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, 

வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.

*அகிலாண்டேஸ்வரி காலபைரவர் சுரங்கப்பாதை:*

ஊட்டத்தூர் சிவன் கோவில் அருகிலேயே பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரம்ம தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று பூஜைகள் செய்யப்பட்டதாகவும் கோவில் வரலாறுகள் கூறுகின்றன. 

இதற்காக சிவன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது அந்த சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

*நோய் தீர்க்கும் தீர்த்தம்:*

உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. 

இதற்கு சான்றாக ராஜராஜசோ ழன் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு அடைந்து தனது ஆயுட்காலம் வரை நோய் நொடியின்றி வாழ்ந்ததை சான்றாக தெரிவிக்கின்றனர். 

தற்போதும் கோவில் மூலஸ்தானத்தில் இறைவனை வழிபட நிற்கும்போது தீபாராதனைக்கு முன்பாக, பக்தர்களின் கையில் பிரம்ம தீர்த்த நீரை ஊற்றி கையை கழுவிய பின்னரே கோவில் குருக்கள் வழிபாடு நடத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

*சக்தி வாய்ந்த காலபைரவர்:*

இந்த கோவிலில் உள்ள காலபைரவர் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது.

*சந்தன காப்பு அலங்காரம்:*

மேலும் அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள
செய்து வழிபட்டு வருகிறார்கள். 

ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது.

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்,
ஊட்டத்தூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
🌻🌹🙏🏻MPK🙏🏻🌹🌻

Thursday, December 17, 2020

தோஷங்கள் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்

#தோஷம்_நீங்க - ஏற்ற வேண்டிய #தீபங்கள்

1.    ராகு தோஷம்            - 21 தீபங்கள்
2.    சனி தோஷம்            -  9 தீபங்கள்
3.    குரு தோஷம்            - 33 தீபங்கள்
4.    துர்க்கைக்கு               -  9 தீபங்கள்
5.   ஈஸ்வரனுக்கு            - 11 தீபங்கள்
6.    திருமண தோஷம்   - 21 தீபங்கள்
7.    புத்திர தோஷம்        - 51 தீபங்கள்
8.    சர்ப்ப தோஷம்         - 48 தீபங்கள்
9.    காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10.  களத்திர தோஷம்    -108 தீபங்கள்

வலம் வருதல்
1.    விநாயகர்                        -      1 அல்லது 3 முறை
2.    கதிரவன் (சூரியன்)      -      2 முறை
3.    சிவபெருமான்               -      3, 5, 7 முறை  (ஒற்றைப்படை)
4.    முருகன்                           -      3 முறை
5.    தட்சினா மூர்த்தி         -      3 முறை
6.    சோமாஸ் சுந்தர்          -      3 முறை
7.    அம்பாள்                          -      4, 6, 8 முறை  (இரட்டைப்படை)
8.    விஷ்ணு                          -      4 முறை
9.    மஹாலட்சுமி                     -      4 முறை
10.  அரசமரம்                        -      7 முறை
11.  அனுமான்                      -      11 அல்லது  16 முறை

12.  நவக்கிரகம்                  -      நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை 

13  பிராத்தனை                    -  108  முறை

* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
...
* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.

* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.

* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

வணங்கும் விதி

பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.
மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.
குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
... பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.
தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது..

உறுப்புகளின் மூலம் சக்தி பெறும் முறை

உறுப்புக்களின்  செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு  சக்தி கிடைக்குமா எப்படி ?

மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய்
காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம்
செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, "என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?" என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான். துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன்
தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.

பாரத போரின் இறுதியில் பீமனுக்கும்,
துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம்
உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும்
தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால்
நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு
ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது
ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக
காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து சொல்ல முடியும்.

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது
ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை
செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில்
அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது
பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - காற்று 
தொடு உணர்வு - மண் 

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு
உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.

காது மற்றும் மூக்கு பகுதிகளின்
செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும்
இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.

உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக
நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா
எப்படி?

சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய
கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம்
உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது
சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்
பயன்படுத்தினார். தற்சமயம் அது
அரசியலாகிவிட்டது.

நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம.

நமது உடலின் சக்தியை அதிகமாக
செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும்
அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு.
அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும்
தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும்
முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை  வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை
பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத
தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க
கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும்   சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

மெளனவிரதம் இருப்பது வாய் எனும்
உறுப்பின் மற்றொரு விரதமாகும்.
மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர்
காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை
ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும்
விரதத்திற்கு இது எதிரான செயல்.
மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை
மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள்.
அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர்
உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்.. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது. வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு
சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை
சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்.

Wednesday, December 16, 2020

வாழ்வில் ஒருமுறை கண்டிப்பாக செல்லக்கூடிய சிவஸ்தலம்

வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய #சிவஸ்தலம்..!

ஒரு வருடம் பழமும், 
ஒரு வருடம் சருகும், 
ஒரு வருடம் தண்ணீரும், 
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். 

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.

 
எதுவுமே இங்கு தேவையில்லை. 

ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். 

பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.

இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும், 
இரண்டு நாள் தங்கினால் 
இப்பிறப்பில் செய்த பாவமும், 
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.

ஞாயிறன்று இங்கு சூரியனை 
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். 

திங்களன்று சந்திரனை  நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.

புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். 

வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.

வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர். 

சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்
நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்
பிறரை ஏமாற்றியிருந்தால் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும். 

இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர் நவரத்தினங்களில் வைரமும் ராசிகளில் சிம்மமும் தேவர்கலில் இந்திரனும் மிருகங்களில் கஸ்தூரி பூனையும் இலைகளில் வில்வமும் பாணங்களில் பாசுபதாஸ்திரமும் சக்திகளில் உமாதேவியும் பூக்களில் தாமரையும் குருக்களில் வியாழ பகவானும் முனிவர்களில் அகத்தியரும் பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.

இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு. 

இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும். 

ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும் 

இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.

இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும். 

இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர். 

இத்தலம் எதுவென 
இன்னும் புரியவில்லையா?  

சங்கரனாகிய சிவனும் 
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது. 

உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்… 

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.

இத்தலத்திற்கு 
எப்படி செல்வது?

சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.            *என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி*

Tuesday, December 15, 2020

மனிதனின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வேண்டும்

மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்???

ஒரு மனிதன் எப்போது அச்சம் கொள்கிறான்?

இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்...

உலகின் வேறு எதுவும் மனிதனை 
இத்தனை அசைத்துப்பார்ப்பதில்லை..

நமக்கு சோறு ஊட்டிய அன்னை,
நம்மை தோளில் சுமந்த தந்தை,
நாம் தூக்கி வளர்த்த பிள்ளை,
நாம் இன்பதுன்பங்களை பகிர்ந்த வாழ்க்கை துணை,
நம்முடன் சுற்றித்திரிந்த நண்பன்,
இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்....

ஒருநாள் நமக்கும் இருக்கிறது என்ற எண்ணமே நம்மை ஆட்டிப்பார்க்கிறது...

மனதுக்கு நெருங்கியவரை 
குழிக்குள் இறக்கி 
மண்ணிட்டு மூடும் போது 
வரும் வெறுமை....

நாம் தலையில் சேர்த்து வைத்திருக்கும் 
புகழ்,
ஈகோ,
அகந்தை,
கர்வத்தையும் 
சேர்த்து மண்ணோடு மூடிவிடும்.....

ஒரு மரணத்தை காணும் போது 
மனம் இறங்க வேண்டும்....

"மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம் 
தான் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டியது.....

பணம் மீது தீராத வெறி,
பதவி மீது தீராத வேட்கை,
இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.....

ஒவ்வொரு மரணத்தை காணும் போதும் 
நம் மனதில் இருக்கும் 
வஞ்சம்,
பகை,
ஈகோ, 
      போன்றவற்றை மறக்க வேண்டும். 

ஒரு பிரேதம் 
மண்ணில் அடக்கப்படும் போது 
வஞ்சம்,
பகை,
ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும். 

மரணத்தின் எண்ணம் நம்
இறையச்சத்தை அதிகரிக்கும்.....

 மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.
காரணம் மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது 
நம் மனமும் ஒரு முறை அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது. 

மண்ணின்  இயற்கை சுழற்சியை 
ஒழுங்கு செய்யும் ஒரே விசயம் 

மரணம் மட்டுமே....

மரணத்தை நேசிப்போம்...
காரணம் 
நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்டபரிசாக மரணம் இருக்கிறது..

ஐயப்பனை பற்றி அருமையான தகவல்கள்.

 ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள் :*

1. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.



2. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.

3. ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு அய்யப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

4. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.

5. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே அய்யப்பன் விரும்புகிறார்.

6. கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வா... என்று தன் பக்தர்களுக்கு அய்யப்பன் ஒரு போதும் சொன்னதே இல்லை.

7. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

8. அய்யப்பன் தன் அவதாரத்தின் போது தன் படைகளுடன் ஆடியபடி காட்டுக்குள் சென்றார். அதை நினைவுபடுத்தவே ``சாமி திந்தக்கத்தோம்.... அய்யப்ப திந்தக்கத்தோம்...'' என்ற பேட்டைத் துள்ளல் நடக்கிறது.

9. மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.

10. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பொது இடங்களில் வைத்து அதிக பணத்தை மற்றவர்கள் பார்க்கும் வகையில் எடுக்கக் கூடாது. பணத்தை நிறைய கையில் வைத்திருப்பதற்கு பதில் பம்பையில் உள்ள ஏடிஎம்களை பயன்படுத்தலாம்.

11. தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம் என்பவர் ``சுவாமி அய்யப்பன்'' என்று ஒரு படம் தயாரித்தார். அந்த படம் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு, பம்பையில் இருந்து நீலீமலை ஏற ஆரம்பிக்கும் போது இடது புறம் காணப்படும் ஏற்றமான பகுதியில் இருந்து சபரிமலை வரை பாதை அமைத்தார். இதனால் அந்த பாதை சுப்பிரமணியர் பாதை என்று அழைக்கப்படுகிறது.

12. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.

13. பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.

14. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ``தத்துவமசி'' எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், ``நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்'' என்று பொருள்.

15. சபரிமலை பதினெட்டு படிகளும் பல நூறு ஆண்டுகளாக கற்களாகவே உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் அதில் தேங்காய் உடைத்ததால் படிகள் சிதலமடையும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் 1985-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் பதினெட்டுப் படிகளும் பஞ்சலோகத்தால் மூடப்பட்டது.

16. சபரிமலை அய்யப்பன் கோவில் கோபுரம், விமானங்களை பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லய்யா தங்கக் கவசமாக மாற்றிக் கொடுத்தார்.

17. அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

18. சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

19. சபரிமலை அய்யப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.

20. சபரிமலை சென்று வந்தவர்கள் அய்யப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.

21. சபரிமலை அய்யப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு சென்று வரலாம்.

22. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

23. பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை அய்யப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.

24. சபரிமலையில் ஜனவரி 19-ந்தேதி மண்டலபூஜை நிறைவு பெறும். அன்று தண்ணீரில் குங்குமம் கலந்து மஞ்சமாதா சன்னதியில் பூஜை செய்வார்கள். இதற்கு குருதி பூஜை என்று பெயர்.

25. சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

26. சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.

27. சபரிமலைக்குள் செல்போனில் பேச தடை உள்ளது. எனவே நடைபந்தல் தொடங்கும் முன்பு செல்போன்களை பத்திரமாக கொடுத்து விடுவது நல்லது.

28. ஐயப்பா சேவா சங்கம் சார்பில் செய்யப்பட்டுள்ள, செய்யப்பட்டு வரும் சேவைகள் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

29. சபரிமலையில் மஞ்சமாதா கோவில் அருகில் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள தபால்களில் 18 படி தபால்முத்திரை பதிக்கப்படும்.

30. சபரிமலையில் விழாக்காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதிபதி ஒருவரை கேரளா ஐகோர்ட்டு நியமனம் செய்யும். இந்த நீதிபதிக்கு எல்லா அதிகாரமும் வழங்கப்படும்.

31. சபரிமலை நடைபந்தல் அருகே டாடா நிறுவனம் ஆஸ்பத்திரி கட்டி கொடுத்துள்ளது. மண்டல பூஜை நாட்களில் ஏராளமான டாக்டர்கள் இங்கு வந்து சேவை செய்வது குறிப்பிடத்தக்கது.

32. சபரிமலையில் எல்லா இடங்களிலும் தண்ணீர் குடிக்காதீர்கள். தேவஸ்தானம் தரும் சுக்கு தண்ணீர் வாங்கிக் குடிப்பது நல்லது.

33. சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.

34. நடிகர் எம்.என்.நம்பியார் சபரிமலை தேவஸ்தானம் அனுமதி பெற்று பல கட்டிடங்கள் கட்டினார். அதன் பிறகே சபரிமலை சன்னிதானம் நகரம் போல மாறியது.

35. கேரள கவர்னராக இருந்த பி.வி.கிரி நடந்து மலையேற இயலாத நிலையில் இருந்ததால் அவரை ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி சன்னிதானத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகே பிரம்பு நாற்காலி-கம்பு கட்டிய டோலி முறை நடைமுறைக்கு வந்தது.

36. அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

37. அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

38. அய்யப்பனுக்கு 1973-ம் ஆண்டு சித்திரை திருநாள் மகாராஜா, தங்க அங்கி தயாரித்து காணிக்கையாகச் கொடுத்தார். 420 பவுன் கொண்ட இந்த தங்க அங்கி மண்டல பூஜை கடைசி நாள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.

39. சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

40. தஞ்சை மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த முருகையன் குருசாமி 50 ஆண்டுக்கும் மேல் சபரிமலை சென்று வந்தவர் ஆவார்.

41. சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

42. ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

43. பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

44. வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

45. சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

46. ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

47. ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

48. சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப்பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன.

49. ஸ்ரீகிருஷ்ண அவதாரத் திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.

50. குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பகிர்வு : உமாபதி.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*