Sunday, September 20, 2020

ஓம் என்ற மந்திரத்தின் சிறப்புத்தன்மை


-
ஓம்
-
ஒவ்வொரு பொருளுக்கும் ஒலிநிலை உள்ளது. அதாவது நுண் நிலை உள்ளது. நாம் காண்கின்ற கேட்கின்ற அனுபவிக்கின்ற தொட்டுணர்கின்ற பொருட்கள் எல்லாமே இவ்வாறு நுண்நிலை அல்லது ஒலிநிலையில் இருக்கின்ற பொருட்களின் தூல வெளிப்பாடுகளே. 
இவற்றின் இடையில் உள்ள தொடர்பு காரணகாரியத் தொடர்பு போன்றது .உலகமே அழிந்து போனாலும் கூட ஒலிநிலை அல்லது அந்த உலகின் உணர்வான தூலப் பொருட்கள் அனைத்தின் நுண் நிலையான பிரம்மத்தில் காரண வடிவில் நிலைபெறுகிறது. 
படைப்பு தொடங்கும் முன்னர் முதலில் இந்த நுண் வடிவங்களின் தொகுதியான பொருள்விம்மிப் புடைப்பதுபோல் அதிர்கிறது. அப்போது நுட்பமான ஆதி ஒலியான ஓம் தானாக வெளிப்படுகிறது பின்னர் படிப்படியாக அந்தத் தொகுதியிலிருந்து ஒவ்வொரு பொருளுடையவும் நுட்பமான ஒலி வடிவம் தோன்றுகிறது. பின்னர் அது தூலமாக வெளிப்படுக்கிறது .இவ்வாறு உலகம் படைக்கப்படுகிறது.
வேதம் கூறும் ஒலி என்பது நாம் கேட்கும் ஓசை sound என்று அர்த்தம் அல்ல.
ஒலி என்பது கருத்துக்களின் தொகுப்பு.அதன் வெளிப்பாடே ஓசை sound .
-
இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் அதாவது பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ள எல்லா பொருட்களும் அணு அணு வாகச் சிதைந்து போனாலும் அந்தப் பொருட்களைப் பற்றிய உலகைப் பற்றிய கருத்து எஞ்சிநிற்கும்.அந்த கருத்துதொகுதி ஓம்.
-
படைப்பின் ஆரம்பத் தில் பிரம்மம் முதலில் ஒலி வடிவாகிறார், பின்னர்நாதம் அல்லது ஓம் வடிவாகிறார் அடுத்த நிலையில் முந்திய யுகங்களில் இருந்த பூமி ஆகாசம் சொர்க்கம் அல்லது பசு மனிதன் குடம் துணி முதலிய குறிப்பிட்ட ஒலிகள் அல்லது கருத்துக்கள் அந்த ஓம் என்பதிலிருந்து வெளிவருகின்றன. ஸித்த சங்கல்பரான பிரம்மத்தில் இந்தக் கருத்துக்கள் ஒவ்வொன்றாகப் படிப்படியாகத் தோன்றுகின்ற கணமே அவற்றின் தூல வடிவங்களும் தோன்றி இந்த அற்புதப் பிரபஞ்சம் ஆகிறது ஒலியே படைப்பின் அடிப்படை 
ஓம் ஆதி ஒலி.அதிலிருந்தே இந்த உலகம் தோன்றியது.
-
மனம் பிரம்மத்தில் மூழ்கும் போது  முதலில் இந்த உலகம் எண்ணமயமாகத் தெரியும்.பிறகு எல்லாமே ஆழ்ந்த ஓங்காரத்திற்குள்(ஓம்) ஒடுங்கும்.பிறகு அதுவும் கேட்காமல் போய்விடும் அது இருக்கிறதா இல்லையா என்று தோன்றும் இதுதான் அனாதி நாதம். 
பின்னர் மனம் சுத்தப் பிரம்மத்தில் ஒடுங்கிவிடும் அவ்வளவுதான் எல்லாம் அமைதி
-
ஓம் மந்திர சிறப்பு
-
நம்நாட்டில் இந்து சமயத்தின் மிகவும் பக்தியுடன் உச்சரிக்கபடடும் புனித மந்திரம் ஓம். 
இதை பிரணவ மந்திரம் ஆகும். இந்த பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்தது  வேதங்களில் சாரம் அனைத்தும் ஒம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன. 
இந்த ஓம் மந்திரம் உச்சரிக்கப் படுவர்களின் உள்ளத்திற்கு கூர்மையையும், அமைதியையும் ஏற்படுத்தும் நன்மை தரும் மின்னதிர்வுகளை உண்டாக்குகிறது. நம் நாட்டில் பெரும்பாலான மந்திரங்களும் பிராத்தனைகளும் ஓம் என்ற ஓலியுடன் தான் தொடங்குகின்றன.
-
ஓம் நமசிவாய ஓம்,
ஓம் நாமோ நாராயணா
ஓம் முருகா
ஓம் சக்தி போன்றனவாகும்
எல்லா மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஓலியுடன் தொடங்குகின்றன.
-
ஓம் மனதை அமைதிபடுத்தி ஒருமுகப்படுத்துவதால் தியானம் செய்யும் பொழுதும் ஓம் எனும் மந்திரம் மனத்துக்குள் உச்சரிக்கப்படுகிறது. 
ஓம் என்பது எழுத்து வடிவமும், பக்தியுடன் வணங்கப்படுகிறது. 
ஓம் ஒரு மங்களச் சின்னமாக போற்றப் படுகிறது. 
ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர். 
இச்சொல் அ, உ, ம், என்ற மூன்று எழுத்துக்களால் உருவாகிறது. 
” அ” என்னும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது. 
உதடுகளை உச்சரித்து “உ” என்று சொல்லப்படுகிறது. 
உதடுகள் சேரும் போது ” ம்” என்னும் ஒலியில் அது முடிகிறது. 
-
“எவ்வொருவன் பரம் பொருளாகிய ஓம் என்ற ஓரேழுத்து சொல்லை உச்சரித்துக் கொண்டும், என்னை மனதில் கொண்டும், இப்பூத உடலை விட்டு புறப்படுகின்றானோ, அவன் எல்லாவற்றிக்கும் மேலான கதியை அடைகிறான்” என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்
-
திருமூலர் இது பற்றி…

“ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத்துள்ளே பலபேதம்
ஓமெனு ஓங்காரம் ஓண்முத்தி சித்தியே ” என்கிறது திருமந்திரம்
-
ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது முதலில் ஒரு சொல்லாகவும், பின் உருவமாகவும், அதன் விளக்கங்கள் பலவாகவும், அதை உச்சரித்து தியானிப்பதால் முக்தியும், சித்தியும் கிட்டும் என்றும் திருமூலர் கூறுகின்றார். 
ஓம் மந்திரத்தை தியானித்து அறிபவன் தான் விரும்பியது அனைத்தையும் பெறுவான் என்று “கபோநிடதம்” கூறுகிறது, 
-
பகவத்கீதை 8.12,13 
எல்லா துவாரங்களையும் அடக்கி (கண்,காது உட்பட 9துவாரங்களை) 
மனதை ஹிருதயத்தில் நிறுத்தி 
தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து 
யோகசாதனையில் நிலைபெற்று 
ஓம் என்கின்ற ஓரெழுத்து அழிவற்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, 
உடலைவிட்டு யார் போகிறாரோ 
அவன் மேலான நிலையை பெறுகிறான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்
-
“ஓம்” என்பது தமிழில் “ஆம்” என்று மருவியுள்ளது.பிற மதங்களில் “ஆமென்” என்று மாறியிருக்கிறது.
ஓம் என்பதன் அர்த்தம் அப்படியே ஆகட்டும் என்பதாகும்.
மனதில் ஒன்றை நினைத்துக்கொண்டு.ஓம் என்று கூறவேண்டும்.
அப்போது மனதில் நினைத்த கருத்தும்,வெளிப்பட்பட வார்த்தையும் இணைந்து செயல்வடிவம் பெறுகிறது.
-
1. ஒம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது
2. எதன் மீதும் செயல்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கின்றது.
3. ஓம் உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வுகள் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது.
4. உளவியல் ரீதியாக மன அழுத்திற்கு இது ஒரு மா மருந்து
-
காலையும், மாலையும் 15 நிமிடங்கள் ஓம் என்னும் மந்திரத்தை ஒருமுகத்துடன் செய்து வந்தால் ஆன்மிக பேரின்பத்தை நீங்கள் உணர முடியும்.  ஓம் மந்திரத்தை உள்வாங்கி உச்சரித்தால் அந்த மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும்  ஒருவித காந்தசக்தி போல பரப்புவதை உணரலாம். 
ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்துவரும் சப்தம். 
நம்  பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருவதால் தான் இதற்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் வந்தது.
-
ஆலய வழிபாடு செய்து முடித்ததும், சன்னதி பிரகாரங்களில் அமைதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து மனத்துக்குள் ஓம், ஓம், ஓம் என்று உச்சரித்தால் உங்கள் மனம் இறைவனோடு முழுமையாக ஒன்றி விடும்.
அதன் காரணமாக ஆலய வழிபாடு செய்த பலன் இரட்டிப்பாக கிடைக்கும். 
-
ஓம் மந்திரத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு பதஞ்சலி முனிவர் ஒரு வரையறை செய்துள்ளார். 
அதாவது, ஓம் என்று சொல்லும்போது ஓவின் உச்சரிப்பு குறைவாகவும், ம் என்பதின் உச்சரிப்பு நீண்டதாகவும் இருக்க வேண்டும் என்கிறார். ஓ என்று சொல்லத் தொடங்கும் போது உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். அப்போது மூச்சுக்காற்றை நன்கு உள் இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மூச்சுக்காற்றை மெல்ல வெளியில் விட்டபடி ‘ம்’ என்பதை உச்சரிக்க வேண்டும். அப்போது நீங்கள் நினைத்த இஷ்ட தெய்வத்தை மனதுக்குள் நன்கு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

இந்த முறையில், தினமும் ஓம் மந்திரத்தை சொல்லி வந்தால், நாளடைவில் உங்கள் இஷ்ட தெய்வம் உங்கள் ஆழ்மனதில் நிலையாக இடம் பெற்று விடும். உங்கள் மனம் வேறு சிந்தனைகளில் சிக்கி அலைபாய நேரிட்டாலும், ஓம் உச்சரிப்பால் இஷ்ட தெய்வத்தை ஓரிரு வினாடிகளில் மனதில் ஒரு முகப்படுத்தும் ஆற்றலை பெற முடியும்.
-
மிகவும் உயரமான இடத்தில் இருந்து ஓம் என்று உச்சரித்தால் பலன் அதிகம். அதனால்தான் முனிவர்கள் சித்தர்கள் மலை உச்சியில் இருந்து தியானம் செய்தனர். நாம் மலைக்கோவில்களில் இருந்து ஒம் சொல்லலாம். ஓம் மந்திரத்தை திரும்ப, திரும்ப கூறி வந்தால் மூச்சின் வேகம் குறையும். இது நோய்கள் வருவதைத் தடுக்கும். நோய் இருந்தால் நீங்கும். மலட்டுத் தன்மையை விரட்டும் சக்தி ஓம் மந்திரத்துக்கு உண்டு.
-
ஓம் எனும் ஒலி அதிர்வுக்கு இப்படி பல ஆற்றல்கள் தரும் மகிமை உண்டு. 
-

மிக மிக முக்கியமான மந்திரங்கள்

#காரிய_சித்தி_தரும்_மந்திரங்கள்!

1. நோயின்றி உடல் ஆரேக்கியமாக இருக்க
ஓம் நமோ நாரஸிம்ஹாய
இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை சொல்லி வந்தால் வஜ்ரம் போல் அமைப்பு ஏற்படும்.

2. நினைத்த காரியம் நிறைவேற.
நிர்மலாய நிபந்தாய நிர்மோஹாய நிராக்ருதே
நமோ நித்யாய ஸத்யாய ஸத்காம நிராதய ச
இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை பாராயணம் செய்து வரவும்.

3. ஆயுளை அதிகரிக்க
காலாந்தகாய கல்யாய கலநாய க்ருதே நம
காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே
இந்த ஸ்லோகத்தை காலை, மாலை 21 முறை பாராயணம் செய்ய தீர்க்காயுள் உண்டாகும்

4. நம் மனதில் ஏற்பட்டுள்ள நிரந்தர பயம் நீங்க தினம்.
ஸஹஸ்ர பாஹவே துப்யம் 
ஸஹஸ்ரசரணாய ச
ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே
இந்த ஸ்லோகத்தை காலை, மாலை 21 முறை ஜபிக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தீர்த்தம் வைத்து இதனால் மந்திரித்து உட்கொள்ளவும். வெகு சீக்கிரத்தில் பயம் நீங்கும்

5. துஷ்டக்ரஹங்கள் பூத ப்ரேத பிஸாசங்கள் விலக.
ஸத்ருக்நாய ஹ்யவிக்நாய விக்நகோடிஹராய ச
ர÷க்ஷõக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம
இந்த ஸ்லோகத்தை ஒரு மண்டலம் காலை, மாலை எட்டு முறை பாராயணம் செய்யவும்.

6. ஜ்வரம், ரோகங்கள், அபிசாரம், சூந்யம் ஒழிய.
ஸர்வ ஜ்வரவிநாஸாய ஸர்வ ரோகபஹாரிணே
ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே
இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை 11 முறை பாராயணம் செய்யவும்.

7. புஷ்டியைப் பெற
மஹாதம்ஷ்ட்ராய துஷ்டாய நம: புஷ்டிகராய ச
ஸிபிவிஷ்டாய ஹ்ருஷ்டாய புஷ்டாய பரமேஷ்டிநே
இந்த ஸ்லோகத்தை தினமும் பத்து முறை பராராயணம் செய்து பசும்பாலில் ஜபித்து உட்கொண்டு வரவும்.

8. அபஸ்மாரம் (காக்காய் வலி) விலக.
அபம்ருத்யு விநாஸாய ஹ்யபஸ்மார விகாதிநே
அந்நதாயாந்நரூபாய ஹ்யந்நாயாந்ந புஜே நம:
இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறை கூறி வர ஆறு மாதத்தில் அதிசயமான குணம் தெரியும்.

9. வாக்குவன்மை பெற
அத்வாதீதாய ஸத்வாய வாகதீதாய வாக்மிநே
வாகீஸ்வராய கோபாய கோஹிதாய கவாம்பதே
இந்த ஸ்லோகத்தை தினமும் 51 முறை காலை, மாலை பாராயணம் செய்யவும்

10. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரஹதோசம் விலக.
நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ
நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ
நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ
நமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ
இந்த ஸ்லோகத்தை குழந்தைகள் தூங்கச் செய்யும் போது மூன்று முறை பாராயணம் செய்து தூங்க வைத்தால் தோஷம் அணுகாது

11. கண்களில் ஏற்படும் நோய் விலக.
ஸுஜ்யோதிஸ்த்வம் பரம்ஜ்யோதி
ஆத்மஜ்யோதி ஸநாதந
ஜ்யோதிர்லோகஸ்வரூபஸ் த்வம்
ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி
இந்த ஸ்லோகத்தை அநுஸந்தாநம் பண்ணினால் பிரகாசமான கண்கள் வாய்க்கும்.🌹

நன்றி:-🙏 ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏

Saturday, September 19, 2020

சைவசமயத்தின் பெருமை

#சைவ_சமயம் 

சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .(சிவ சம்பந்த முடையது சைவம்).

2. சிவபெருமான் எப்படிபட்டவர் ?

சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் .

3. சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ?

1.படைத்தல் –மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம்,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.

2.காத்தல் –படைக்கபட்டதை உயிர்கள் அனுபவிக்க ஒருகால எல்லைவரைகாத்து நிறுத்தி வைத்தல்.

3.அழித்தல் – உயிர்களுக்குக் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவைகளை மீண்டும் மாயையில் ஒடுக்குதல்.

4.மறைத்தல் – உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக சிவபெருமான் தன்னை மறைத்து உலகத்தை காட்டல் .

5.அருளுதல் – பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அருளை வழங்கி தன் திருவடியில் சேர்த்தல்.

4.சிவபெருமான் ஐந்தொழில்களையும் எதைக் கொண்டு செய்கிறார் ?

தம் சக்தியாகிய உமாதேவியாரை கொண்டு செய்கிறார்.

5. சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை வகை ?

1.அருவம்- கண்ணுக்கு புலனாகமல் சக்திருபமாய் இருந்து அருளல்(மந்திர ஒலி).

2.அருவுருவம் – முகம் ,கை, கால்,உறுப்புகள் இல்லாமல் தெரிவது(சிவலிங்கம்) .

3.உருவம் –முகம் முதலிய உறுப்புகளுடன் தெளிவாக தோன்றுவது (25 மகேசுவரவடிவங்கள்).

6.சைவ சமய சாதனங்கள் எவை ?

திருநீறு , திருவைந்தெழத்து , உருத்திராக்கம் .

7. திருவைந்தெழத்து எத்தனை வகைப்படும் ?

. திருவைந்தெழத்து மூன்று வகைப்படும் .

1.தூல திருவைந்தெழத்து –நமசிவாய .

2.சூக்கும திருவைந்தெழத்து – சிவாய நம.

3.காரணதிருவைந்தெழத்து – சிவயசிவ .

8. மணத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?

1.மானதசெபம் ,அகப்பூசை , திலாயம்

9.வாக்கால் செய்யு வழிப்பாடுகள் யாவை?

திருமுறைகள் ஒதுதல், ஒதுவித்தல் , நாமவளிகூறல் ,வாசகசெபம்.

10.காயத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?

ஆலயம்வலம்வருதல் , திருப்பணிசெய்தல் , நந்தவனம்அமைத்தல் , மாலை தொடுத்தல் ,ஆலயத்தை கூட்டி மெழகிடுதல் முதலியன .

11.இறைவனை அடையும் மார்க்கங்கள் எவை?

1.தாச மார்கம் – இறைவனுக்கு அடிமை பூண்டியற்றும் நெறியான இம்மார்கம் சரியை எனவும் கூறப்பெறும்.

2.சற்புத்திர மார்கம் – மகன் மைநெறி எனக் கூறப்படும் இம்மார்க்கம் கிரியை நெறியாகும் .

3.சகமார்க்கம் – தோழமை நெறிஎனப் பெறும் இம்மார்க்கம் யோகநெறி பாற்பட்டதாகும் .

4.சன்மார்கம் – ஞானநெறி எனப் பெறும் இம்மார்கம் குருசிஷ்ய பாவத்தை உணர்த்துவது .

12.குரு , லிங்க , சங்கம வழிபாடு என்றால் என்ன ?

சிவபெருமான் திருவடி நீழலைச் சென்றடைவதற்குரிய பல மார்க்கங்களில் குரு லிங்க சங்கம வழிப்பாட்டு நெறிகளும் குறிப்பிடத்தக்கனவாகும் .

1.குரு வழிப்பாடு – குருவை தரிசித்தலும் , குருவின் திருநாமத்தைச் செப்புதலும் , உபதேசத்தை கேட்டலும் , அவர் தம் அறிவுரையை சிந்தித்தலும் ஆகும் .

2.இலிங் வழிப்பாடு – சிவபெருமானுடைய அருவுருவமாகிய சிவலிங்கத்தைவழிபடுதலாகும் .

3.சங்கம வழிப்பாடு – சிவனடியார்களை சிவமாகவே கருதி வணங்கி வழிப்படுதல்.

13.தீக்கை என்றால் என்ன ?

சைவகுருமார்களால் ஏனையோர்க்கு அளிக்கப் பெறும் சைவ சமய அங்கீகாரச் சடங்கே தீக்கை ஆகும் .

14. .தீக்கை எத்தனை வகைப்படும் ?’

சமயதீக்கை ,விசேசதீக்கை,நிர்வாணதீக்கை ,ஆச்சார்யதீக்கை என நான்கு வகைப்படும்.

15.சைவ சமயத்தின் சிறந்த நூல்கள் யாவை?

தோத்திரமும் , சாத்திரமும் சைவத்தின் இரு கண்கள் போன்றது .

16. தோத்திரம் என்றால் என்ன ?

சிவபெருமானின் புகழைப் போற்றித்துதித்து நாயன்மார்களும் அடியார்களும் பாடியுள்ள பாடலகள் தோத்திரம் அல்லது திருமுறைகள் எனப்படும் .

17. திருமுறைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

திருமுறைகள் பன்னிரன்டு வகைப்படும் , அவை முதலாம் திருமுறைமுதல் பன்னிரன்டாம் திருமுறைவரை பெயர் சொல்லி வ.ழங்கப்படும் .

18.திருஞானசம்பந்தர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

முதல் மூன்று திருமுறைகள்.

திருஞானசம்பந்தர்

19.திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

நான்கு , ஐந்து , ஆறாம் திருமுறைகள்.

திருநாவுக்கரசர்

20.சுந்தரர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

ஏழாம் திருமுறைஆகும் .

சுந்தரர்

21.எட்டாம் திருமுறை யாவது யாது ?

திருவாசகமும் , திருக்கோவையாரும் அருளியவர் மாணிக்கவாசகர் .

மாணிக்கவாசகர்

22.திருவாசகத்தின் பெருமை என்ன ?

மாணிகவாசகர் அருள சிவபெருமான் அதனைத்தன் திருக்கரங்களினால் எழதிக் கையொப்பமிட்டுவைத்தவை திருவாசகப்பாடல்கள் .

23.ஒன்பதாம் திருமுறை எதைக் குறிக்கும்?

திருவிசைப்பா , திருப்பல்லாண்டைக்குறிக்கும் .

24. ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்கள் யாவர் ?

திருமாளிகைத்தேவர் , சேர்ந்தனார் , கருவூர்தேவர் , பூந்துருத்திகாடவநம்பி , கண்டராதித்தர் ,வேணாட்டிகள் , திருவாலிஅமுதனார் , புருடோத்தமநம்பி,சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் .

25. பத்தாம் திருமுறை யாவது யாது ?

திருமூலர் அருளிச் செய்துள்ள திருமந்திரம் .

26. பதினோராம் திருமுறையாவது யாது ?

சைவ சமயப் பிரபந்தத்திரட்டு என இருபத்திரண்டு வகைசிற்றிலக்கியங்களால் ஆனது .

27. பதினோராம் திருமுறையின் ஆசிரியர்கள் யாவர் ?

திருவாலவாயுடையார் , காரைகாலம்மையார் , ஐயடிகள் காடவர்கோன் , சேரமான் பெருமான்நாயன்னார் , நக்கீரதேவர் , கல்லாடதேவர் , கபிலதேவர் , பரணதேவர், இளம் பெருமானடிகள் , அதிராவடிகள் , பட்டினத்து அடிகள் , நம்பியாண்டார்நம்பிகள் .

காரைகாலம்மையார்
சேரமான் பெருமான்நாயன்னார்

28.பதினோரம் திருமுறையின் சிறப்பு என்ன ?

தமிழ்சங்கத் தலைமைப் புலவரான சோமசுந்தரக்கடவுள் பாணபத்திரக்காக சேரமன்னுக்கு வரைந்த திருமுகப்பாசுரம் இடம் பெற்றுள்ளது , திருமறைகள் பாடியவர்களில்ஒரேபெண்புலவரான காரைக்கால் அம்மையாரின் பதிகங்களைப் பெற்றது .

29.பன்னிரண்டாம் திருமுறையாவது யாது ? அதை பாடியவர் யார் ?

பன்னிரண்டாம் திருமுறை‘பெரியபுராணம்’ ஆகும் . இதை பாடியவர் சேக்கிழார் .

சேக்கிழார்

30.சாத்திரங்கள் என்றால் என்ன ? அவை எத்தனை ?

சைவ சித்தாந்த முப்பெரும் உண்மைகளை கூறும் நூல்கள் சாத்திரங்களாகும் அவை பதிநான்கு .

31. பதிநான்கு . சாத்திர நூல்கள் எவை ? அதன் ஆசிரியர் யார் யார் ?

1.திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் .

2.திருக்களிற்றுப்பாடியார் – திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் .

3.ஞானபோதம் – மெய்கண்டார் .

4.சிவஞானசித்தியார் – அருணந்தி சிவாச்சாரியார் .

5.இருபாஇருபது - அருணந்தி சிவாச்சாரியார் .

6.உண்மை விளக்கம் – திருவதிகைமனவாசகம்கடந்தார்.

7.சிவப்பிரகாசம் - உமாபதிசிவம்

8.திருவருட்பயன் - உமாபதிசிவம்

9.வினாவெண்பா - உமாபதிசிவம்

10.போற்றிப்பஃறொடை - உமாபதிசிவம்

11.கொடிக்கவி - உமாபதிசிவம்

12.நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவம்

13.உண்மை நெறி விளக்கம் - உமாபதிசிவம்

14.சங்கற்ப நிராகரணம் – உமாபதிசிவம்

32.சைவசமயத்தில் சிறந்து விளங்கிய அருளாளர்கள் யாவர் ?

அறுபத்து மூன்று நாயன்மார்களும் சைவத்தில் சிறந்த அருளாளர்களாக விளங்கினார்கள் . 

தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கலைக்களஞ்சியம், சைவசமய தோத்திர வினாவிடை , சைவ சமயக்கல்வி, தருமபுர ஆதீனம், 
சைவ சமய வரலாறும் பன்னிரு திருமுறை வரலாறும்.

திருநீற்றின் மகிமை

புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. 

• பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. 
• அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. 
• சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. 
• நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. 
• அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். 
• முகத்தில் பிரகாசம் வீசியது.

இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான் அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே? என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை.  எனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள். 

சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். 
இதுதான் முறை.

• அகாரம் என்பது பிரம்மனையும், 
• உகாரம் விஷ்ணுவையும், 
• மகாரம் என்னையும் குறிக்கின்றன. 

எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன். 

பார்த்தீர்களா திருநீற்றின் மகிமையை...! 

ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள். ஆகவே நாளும் பூசுவோம் திருநீறு. போற்றி வணங்குவோம் சிவபெருமானை. 

#ஓம்நமசிவாய🙏

Friday, September 18, 2020

சித்தர்களுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு

1. சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன?
2.  சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?

இந்த அருமையான கேள்வியை கேட்டவர் நமது நண்பர் Baski Krish . ஆன்மீகம் என்னும் கடலை கடக்க நினைக்கும் அணைத்து மனிதர்களுக்கும் மனதில் கட்டாயம் இந்த கேள்விகள் எழுந்தே தீரும். விளக்கம் அளிக்கும் வாய்ப்பை கொடுத்தமைக்கு ஈசனுக்கு  நன்றியோடு இந்த பதிவை பதிக்கிறேன்.

கேள்வி 1: 
சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன?

யோக  சாஸ்திரத்தில்   சிவன்  என்பவன்  கடவுள்  அல்ல.... ஆதி  சித்தன்.  அதாவது  முதல்  சித்தன்.  சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள்  சிவனை  கடவுளாக  பார்ப்பதை  விட  குருவாக  தான்  பார்கிறார்கள்.... குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால்  தான்  இந்த  நிலை. 

கேள்வி 2:
சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்? 

ஜீவசமாதி  என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்..... சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான  அத்மாவாகதான் பிறக்கிறோம். ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின்  கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம். 

ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று அர்த்தம். இதை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.

ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல் அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாது இது எப்படி  என்ற கேள்வி வரலாம்...... விடை காயகல்ப்பம்.  காயகல்ப்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம் உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு. மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே ஜீவசம்மதி அடைபவர்கள் இரண்டாவது வகை காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள்.  உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல்  தெரியும். இவ்வாறு ஜீவசமாதி ஆகும்  மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின்  ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள  முடியும் என்று அகத்தியர் கூறுகிறார். 

பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி  செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம்  அவற்றை வலம்வரும் போது, அந்த அதிர்வுகலானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல  சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்துவிடும் ......... பல மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம். 

மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல் அழுகிவிடும். எந்த ஒரு அதிர்வுகளும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த சூட்சமங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்....

ஸ்ரீ சக்கரம் உள்ள ஆலயங்கள்

#ஸ்ரீ_சக்கரம்_அமைந்துள்ள #பிரசித்தி_பெற்ற_ஆலயங்கள்

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா  ஸஹஸ்ர நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.

பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது. 

கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள் ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.

கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.

சென்னை-காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. த்ரிபங்க நிலையில் வீற்றருளும் இவள் மிக்க வரப்பிரசாதி.

சென்னை-நங்கநல்லூரில் திதிநித்யா தேவிகளின் சக்ரங்களும் விக்ரகங்களும் இரு புறங்களிலும் திகழ, 16 படிகளின் மேல் மகாமேருவுடன்  கோலோச்சுகிறாள், ராஜராஜேஸ்வரி. 

நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீசக்ரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம்; அதில் பொங்கி வரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு பிரசாதமாகவும் உட்கொள்ளலாம்.

திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்ரத்தை தனி சந்நதியில் தரிசிக்கலாம். 

தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வாராஹி, மாதங்கி மற்றும் திதி  நித்யா தேவியர் பதினைந்து பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள். 

திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சந்நதி ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கிறது.

கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சந்நதியில் ஸ்ரீசக்ரம் பொருத்தப்பட்டிருக்கிறது.

காசி-அனுமன் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலஸுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்ரம் வைத்து வழிபடப்ப டுகிறது. 

திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.

புன்னை நல்லூர் மாரியம்மனின் முன் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்தவர், மகான் சதாசிவபிரம்மேந்திரர்.

வாழ்க வளமுடன்!!

Thursday, September 17, 2020

ஐந்தெழுத்தின் மந்திர விளக்கம்

ஐந்தெழுத்து மந்திரம் ஒரு சிறு விளக்கம்:

இம் மந்திரத்தில்  ஐந்து நிலைகள் அல்லது ஐந்து வகைகள் உள்ளன என்பர்

முதல் நிலை:  உலக இன்பங்களைத் தரவல்லது.  இம்மை நலம் பயக்கும்.

மந்திரம்:  நமசிவாய

இரண்டாம் நிலை:  இம்மை மறுமைப் பயன்களை அளிக்கவல்லது

மந்திரம்:  சிவாய நம

மூன்றாம் நிலை:  இந்த உலகிலேயே,  ஆணவம், கன்மம்( கர்மா),  மாயை  என்ற  மூன்று தடைகளையும் நீக்கி  இறைவனை அடைய உதவும். 

மந்திரம்:  சிவயசிவ

நான்காம் நிலை:  சிவனாகவே மாறும் நிலை.  சிவ சிவ என்றிட தேவரும் ஆவார்;   சிவசிவ என்ன  சிவகதி தானே -   திருமூலர்.

மந்திரம்:  "சிவ" அல்லது   " சிவ சிவ" 

ஐந்தாம் நிலை:  பெற்ற திருவடிப் பேற்றில்,   சிவகதியில்  என்றென்றும் நிலை பெற்றிருத்தல்.  வாசனா மலம்  தாக்காது  காத்துக் கொள்ளுதல்.

மந்திரம்: " சி"   

சி என்ற ஓரெழுத்தில்  சிவாய நம  என்ற ஐந்து எழுத்துக்களும்  மறைபொருளாக உள்ளது  என்பதை உணர்தல் வேண்டும்.

கூட்டு தவம்  உங்களுக்கு நன்மை பயக்கும்;  உலகுக்கும் நன்மை பயக்கும்🙏🙏