Saturday, January 27, 2024

செல்வம் பெருக சித்தர்கள் தரும் ரகசியங்கள்

*செல்வம்* பெருகி நிலைக்க சித்தர்களால் எழுதப்பட்ட  தந்திர நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.:
                                    
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ  அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.

2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். 

3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).

5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

6. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

7. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். 
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).

8.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

9. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

10. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

11. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

12. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

13. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.

14. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.

15. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.

16. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.

17. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

Friday, January 26, 2024

விதியை மாற்றும் துளசியின் வல்லமை.

*திருநெல்வேலி மாவடத்தில் ஏழை ஒருவன் தினமும் அதிகாலையில் எழுந்து தனக்கு சொந்தமான வயற்காட்டுக்கு சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார்.*

*அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில் ஒரு சிறு இல்லத்தில் பிராமணர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையை வைத்து பூஜை செய்வதை பார்த்து கொண்டே போவான்.*

*ஒரு நாள் அதே போல் பிராமணர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதை பார்த்துகொண்டே வயற்காட்டுக்கு கீரை பறிக்க சென்றான்.* 

*கீரை வகைகளை பறிக்கும் போது அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதை கண்டான். அப்போது அவனுகு  அந்த பிராமணர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகம் வந்தது.*

*உடனே நாமும் அந்த பிராமணரை போன்று ஒரு மனித பிறவி தானே? இதுவரை என்றாவது பெருமாளுக்கு ஒரு சிறு பூஜை செய்திருக்கிறோமா?*

*சரி நம்மால் தான் விக்ரஹத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை இன்றுமுதல் இந்த துளசியையாவது பறித்து சென்று அந்த பிராமணர செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாக கொடுப்போமே என்று செடியில் இருந்து துளசியையும் சேர்த்து பறித்து கீரை கட்டோடு ஒன்றாக போட்டு தலை மீது வைத்து கொண்டு பிஈமணரின் இல்லம் நோக்கி போனான்.*

*ஆனால் அவன் பறித்து போட்ட கீரை கட்டில் ஒரு சிறு கருநாகமும் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.*

*பிராமணரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி.பிராமணன் ஏழையை பார்த்தார். அவன் பின்னே அருவுருவமாய் யாரோ ஒருவர் நிற்பதை கண்டார்.*

*பின் தான் கண்ணை மூடி தன் ஞான-திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று பார்த்ததில் அந்த ஏழையின் பின்னே நிழல் போல் நிற்பது கிரகங்களில் நாகத்தின் அமசத்தில் ஒருவரான ராகு நின்றிருந்தார்.*

*பிராமணர் உடனே ஏழையிடம் அப்பா உன் தலையில் உள்ள கீரை கட்டை அப்படியே வைத்திரு ஒரு ஐந்து நிமிடம் அதை கீழே இறக்க வேண்டாம் இதோ வந்து விடுகிறேன் என்று கூறி குடிலின் பின் பக்கம் சென்று ஒரு விதமான மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு கிரஹத்தை அழைத்தார்.*

*ராகுவும் ஆச்சரியத்துடன் பிராமணர் முன்னே வந்து நின்று வணங்கி ஸ்வாமி என்னை தாங்கள் அழைத்த காரணம் என்ன என்று கேட்டான்.*

*பிராமணரும் ராகுவை வணங்கி ராகுவே எதற்காக இந்த ஏழையை பின் தொடர்ந்து வருகிறாய் என்ன காரணம் என்று நான் அறியலாமா என கேட்க*

*ராகுவோ ஸ்வாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு நாகம் உருவம் எடுத்து தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று பகவானின்  பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.*

*இவன் தலையில் சுமந்திருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனை தீண்டி விட்டு என் கடமையை முடித்து கொண்டு நான் கிளம்பி சென்று விடுவேன் என்றார்.*

*பிராமணனுக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியை பறித்து கொண்டு வந்துள்ளான் அவனை காப்பற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணி ராகுவே அவனை நீர் தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா என்றார்.*

*ராகவோ ஸ்வாமி இத்தனை காலம் தேவரீர் பகவத் ஆராதனம் செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்க பெற்று அதனால் நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் என்றார்.*

*பிராமணரும் அகமகிழ்ந்து அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை பெருமாளுக்கு செய்த ஆராதனை செய்ததற்காக பலன் என ஏதும் இருந்தால் அது முழுவதையும்  அந்த ஏழைக்கு தாரை வார்த்து தருகிறேன் என்று கூறி ஏழைக்கு தன் ஆராதனை பலனை தாரையாக வார்த்து கொடுக்க ராகு பகவானும் பிராமணரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார்.*

*கீரை கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது.பிராமணர் அந்த ஏழையிடம் அப்பா இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா என்றார்.*

*ஏழைக்கு மிகுந்த மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே இல்லம் நோக்கி சென்றான்.*

*அபிமானிகளே வைகுண்ட வாசன் ஹரி நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே.*

*பக்தியோடு சிறு துளசி இலையை கொடுத்தாலும் பரவசமாய் அவன் ஏற்பான்.*

*எனவே பகவத் ஆராதனம் தினமும் செய்யுங்கள் மிகுந்த நன்மை அடையுங்கள்.*

*நமஸ்தே துளசி தேவி !*
*நமோ நமஸ்தே நாராயண ப்ரியே !*

Tuesday, January 23, 2024

காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதம்.

*காமாட்சி விளக்கின் அற்புதம்!!*

விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. இது பெரும்பாலும் பல வீடுகளில் இருக்கும்.

*காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்?*

*அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்?*

* உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர், காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.

* காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, ‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடுவார்கள். அதற்கு ‘காமாட்சி தீபம்’ என்று பெயர்.

* அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள். திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான் காரணம். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

* மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும்.

* மணப்பெண்ணுக்கு சீர்வரிசை களை தரும் போது, காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குவார்கள்.

* சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கு, இந்த காமாட்சி அம்மன் விளக்கு.  

ஆன்மீக வழியில்
🙏🙏

சக்திவாய்ந்த மூல கணபதியின் மந்திரங்கள்.

சக்தி வாய்ந்த அபூர்வ கணபதி மூலமந்திரங்கள்
*************************************************

1. ஏகாக்ஷர கணபதி: (கணபதி அருள் கிடைக்க)

மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:

2. மகாகணபதி : (பரிபூரண சித்தி)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி நேத்ரம் ரஸாத்
ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ் வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-பாசாத்பல
வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந் ஹஸ்லதர வஹந்தம் பஜே

3. மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு)

ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

4. லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)

அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !

இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:

ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத்

5. ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க)

ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்

6. மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

7. ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)

ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

8. வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்)

வக்ர துண்டாய ஹும்

9. நிதி கணபதி : (செல்வம் கிட்ட)

ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான்:
ரக்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும் !!

10. புஷ்டி கணபதி :

ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா

11. பால கணபதி : (மகிழ்ச்சி)

ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா

கரஸ்த-கதளீ சூத
பநஸேக்ஷúக- மோதகம்
பால ஸுர்ய- நிபம் வந்தே
தேவம் பால கணாதிபம்

12. சக்தி கணபதி : (எல்லாக் காரியமும் நிறைவேற)

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்
பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்
பயாபஹம் சக்தி கணேசமீடே 

13. ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா

14. க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)

ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:

15. குக்ஷி கணபதி : (நோய் நீங்க)

ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

16. சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)

ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா

17. சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)

ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா

18. ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)

ஓம் கூம் நம:

19. விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)

ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா

பாசாங்குச-ஸ்வதந் தாம்ர
பல வா நாகு வாஹந
விக்நம் நிஹந்து ந: ஸர்வம்
ரக்தவர்ணோ விநாயக

20. அர்க்க கணபதி : (நவக்கிரக சாந்தி)

ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

21. உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)

ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா

நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக

22. விரிவிரி கணபதி : (விசால புத்தி)

ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா

23. வீர கணபதி : (தைரியம் வர)

ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்

வேதாள சக்தி-சர- கார்முக- சக்ர-கட்க
கட்வாங்க-முத்கர-கதாங்குச-நாகபாசாந்
சூலம் சகுந்த-பரக-த்வஜமுத்ஹந்தம்
வீரம் கணேசமருணம் ஸததம் ஸ்மராமி

24. ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க)

ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா

25. விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)

ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா

சங்கேக்ஷú-சாய-குஸுமேஷு குடார- பாச
சக்ர-ஸ்வதந்த-ஸ்ருணி-மஜ்சரிகா-சராத்யை
பாணிச்ரிதை-பரிஸமீஹித பூஷணஸ்ரீ
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர

26. ராஜ கணபதி

ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா

27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:

28. யோக கணபதி :

ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:

29. நிருத்த கணபதி : (கலை வளர)

ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:

பாசாங்குசா பூப-குடார-தந்த
சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்
பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்
பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம்

30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும் வெற்றி)

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
திலமோதகை: ஸஹ 
உத்வஹந் பரசுமஸ்து தேநம
ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா

31. புத்தி கணபதி : (கல்விப் பேறு)

ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா

32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)

ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)

ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா

34. குரு கணபதி : (குருவருள் உண்டாக)

ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:

35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்)

ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட்

36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)

ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா

37. பக்த கணபதி

நாளிகேராம்ர- கதளீ
குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம்
பஜே பக்தகணாதிபம்

38. த்விஜ கணபதி

ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய

39. க்ஷிப்ர கணபதி

தந்த-கல்பலதா- பாச
ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்
பந்தூக-கமநீயாபம்
த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம்

40. ஹேரம்ப கணபதி

அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா

41. ஊர்த்வ கணபதி

கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண
தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க
ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா
தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந

42. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய
ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்

43. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
(குமார சம்ஹிதையில் காண்பது)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

44. கணபதியைக் குறித்து வரும் ரிக்வேத மந்திரம்

கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்

45. கணபதி உபநிஷத் தரும் மந்திரம்

நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:

46. கணேசர் மாலா மந்திரம்

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர,  வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே

ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே

ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.

47. ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர :

ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா

48. போக கணபதி (ஸகலபோகப்ரதம்)

அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ

கராங்கந்யாஸ:

ஓம்
ஹ்ரீம்
கம்
வசமானாய
ஸ்வாஹா   இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் கம்  வசமானய ஸ்வாஹா

தியானம்

பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி

ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்:

லமித்யாதி பூஜா
மந்த்ரா :

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம்

49. கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர :

அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

கராங்கந்யாஸ:

ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம்  இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர:

தியானம்

முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி

லமித்யாதி பூஜா
மந்த்ர:

ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா

ஸமர்ப்பணம்.

50. குமார கணபதி (மாலா மந்த்ர:)

ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம:

51. ப்ரயோக கணபதி (மாலா மந்த்ர)

ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய  கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :

52. தருண கணபதி (தியானம்)

பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:

மந்த்ர :

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய
யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம:

53. ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்:

54. நவநீத கணபதி (மனோவச்யம்)

ஐம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லௌம் நவநீத கணபதயே நம:

55. மேதா கணபதி (மேதாபிவ்ருத்தி)

மேதோல்காய ஸ்வாஹா:

56. வாமன கணபதி (விஷ்ணு பக்தி)

ஓம் வம் யம் ஸெளபாக்யம் குரு குரு ஸ்வாஹா:

57. சிவாவதார கணபதி

ஓம் ஸ்ரீம் த்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ கணபதயே ஓம் சிம் வர வரத ஓம் வாம் ஸர்வ ஜனம் மே ஓம் யம் வசமானய ஸ்வாஹா:

58. ரக்த கணபதி (வச்யஸித்தி)

ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய ரக்த மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹும் ஹும் ஹும் கே கே ரக்த களேபராய தயாபராய ஸ்வாஹா :

59. ப்ரம்மணஸ்பதி

1. ஹ்ரீம் ச்ரீம் க்லீம் நமோ கணேச்வராய ப்ரும்ம ரூபாய சாரவே
ஸர்வஸித்தி ப்ரதேயாய ப்ரம்மணஸ்பதயே நம:

2. நமோ கணபதயே துப்யம் ஹேரம்பாயைக தந்தினே ஸ்வானந்த
வாஸினே துப்யம் ப்ரம்மணஸ்பதயே நம:

60. மஹா கணபதி ப்ரணவமூலம்
ஓம்

த்வநி மந்திரம்

ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய சிவசிவ லம்போதராய வக்ரதுண்டாய ஸுர்ப்ப கர்ணாய ஸித்தி விநாயகாய ஸ்ரீம் மஹா கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம் ஹ்ரீம்

சதாசிவ கணபதி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் ஈம் நம் ஆம் ஹம் ஸம்பன்னுவஸ்ச ஸதாசிவ கணபதயே வரவரத ஸர்வ ஜகம் மே வசமானய ஸகலைச் வர்யம் ப்ரயச்ச ஸ்வாஹா



Monday, January 22, 2024

ஜாதகம் என்பது வேறொன்றுமில்லை நம் முன் ஜென்ம பதிவு.

ஜோதிடத்தில் இருக்கும் 9  கிரகத்திற்கும் நம்முடைய முன் ஜென்மத்திற்கும் இடையில் தொடர்பு உண்டு.

★ஜாதகம் என்பது வேறொன்றும் கிடையாது நம்முடைய முன் ஜன்மத்தின் scan report ஆகும்.

★நம் முன் ஜென்மத்தில் என்னென்ன விஷயத்தில் நாம் தவறு செய்து இருக்கிறோம். எந்த ஆசை நமக்கு நிறைவேறவில்லை. 

★எந்த கடமை நமக்கு balance இருக்கிறது.  எதைப் பற்றி நாம்  யோசிக்கவில்லை .

★எந்தெந்த விஷயங்களில் நாம் ஆணவத்தில் அகங்காரத்தில் ஆடி இருக்கிறோம்.

★நாம் முன்ஜென்மத்தில் எந்த எந்த விஷயங்களில் தர்மத்தையும் நியாயத்தையும் ஒழுங்காகக் கடைப் பிடிக்காமல் வாழ்ந்து இருக்கின்றோமோ.

★இந்த அனைத்தையும் சுட்டிக்காட்டக் கூடிய கருவி அல்லது  scan report தான் ஜாதகம் வேறொன்றுமில்லை.

★இந்த ஜென்மத்தில் நமது ஜாதகத்தில் இருக்கும் ஒன்பது கிரகமும் முன் ஜென்மத்திற்கு  ஏற்றவாறு எப்படி active ஆகும் என்பதை  ஒவ்வொரு கிரகமாக பார்க்கலாம்.

1.(சூரியன்)

★நாம் முன்ஜென்மத்தில் எந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தை ரகசியமாக வைத்திருந்ததோமோ அது இந்த ஜன்மத்தில் சூரியனின் controlல் வந்துவிடும்.

★இந்த ஜென்மத்தில் சூரியன் இருக்கும் பாவத்தை நம்மால் மறைத்து வைக்க முடியாது.

★சூரியன் இருக்கும் பாவத்தை  வெளிச்சம் போட்டு காட்டி விடும்.

★சூரியன் நமது லக்னத்தில் இருந்து எந்த பாவத்திற்கு அதிபதியோ அதற்கும் இது பொருந்தும்.

2.(சந்திரன்)

★நம் முன் ஜென்மத்தில் எந்த பாவ சம்மந்தப்பட்ட விஷயம் நமக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்ததோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயம் இந்த ஜென்மத்தில் சந்திரன் controlல் சென்றுவிடும்.

★இந்த ஜென்மத்தில் சந்திரன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயம் நமக்கு floating வரும் ஆனால் வராது.

★சந்திரன் ஒரு விஷயத்தை கொடுக்கும்போது அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லை என்றால் நாம் நினைக்கும்போது சந்திரனிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் நம்மால் பார்க்க முடியாது.

3.(செவ்வாய்)

★நம் முன் ஜென்மத்தில் எந்த லட்சியம் நிறைவேறவில்லையோ அது செவ்வாய் controlல் போய்விடும்.

★இந்த ஜென்மத்தில் செவ்வாய் தான் நம்முடைய பிறப்பின் லட்சியம்.

★இந்த ஜென்மத்தில் செவ்வாய் நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவத்திற்கு அதிபதியோ அதனை இலட்சியமாகக் கொண்டு தான் நாம் இந்த ஜென்மம் எடுத்து இருக்கிறோம் என்று அர்த்தம்.

★எந்த காரணத்திற்காகவும் ஜாதகர் செவ்வாய் இருக்கும் பாவத்தையும்.செவ்வாய்க்கு சொந்தமான பாவ ஆதிபத்ய விஷயங்களை விட்டுக் கொடுக்கவே மாட்டார்.

4.(குரு)

★நாம் முன்ஜென்மத்தில் எந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப் பிடிக்க வில்லையோ அது இந்த ஜென்மத்தில் குருவின் controlல் சென்றுவிடும்

★இந்த ஜென்மத்தில் குரு எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவாதிற்கு அதிபதிஆக இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தர்மசங்கடமும், பிரச்சனையும் ஏமாந்துதான் போவோம்.

5.(சனி)

★நாம் முன்ஜென்மத்தில் எந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அகங்காரத்திலும்,அனவத்திலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருக்கிறோமோ அது இந்த ஜென்மத்தில் சனியின் controlல்
சென்றுவிடும்.

★இந்த ஜென்மத்தில் சனி எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவத்திற்கு அதிபதியாக இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தை நமக்கு slow அல்லது late செய்யும்.

★சனி இருக்கும் பாவத்தை நாம் எப்போதும் தூக்கி பேசக்கூடாது.

★சனி கொடுப்பதே நாம் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் வெளியில் சொன்னால் அந்த பாவமே கெட்டுவிடும்.

6.(புதன்)

★நாம் முன்ஜென்மத்தில் எந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தை யோசிக்கவே இல்லையே அது இந்த ஜென்மத்தில் புதனின் control க்கு சென்று விடும்.

★இந்த ஜென்மத்தில் புதன் பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவத்திற்கு அதிபதியாக இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாதகர் யோசித்துக் கொண்டே இருப்பார்.

7.(ராகு)

★நம் முன் ஜென்மத்தில் எந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நம்முடைய ஆசை நிறைவேறவில்லையோ.

★அது இந்த ஜென்மத்தில் ராகுவின் controlல் வந்துவிடும்.

★இந்த ஜென்மத்தில் ராகு எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாதகருக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீரவே தீராது.

8.(கேது)

★கேது முன் ஜென்மத்தில் நாம் எந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கடமையை நிறைவேற்றப் படாமல் இருந்தோமமோ

★அது இந்த ஜென்மத்தில் கேதுவின் controlல் சென்று விடும்.

★இந்த ஜென்மத்தில் கேது எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் கடமைக்கு  என்று செய்வோம்.

9.(சுக்கிரன்)

★சுக்கிரன் நாம் போன ஜென்மத்தில் எந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் செலவு செய்யவில்லையோ அது இந்த ஜென்மத்தில் சுக்கிரன் controlக்கு சென்றுவிடும்

★இந்த ஜென்மத்தில் சுக்கிரன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் செலவு அதிகமாக இருக்கும்.

(இப்படி தான் நம்முடைய முன் ஜென்மத்திற்கும் இந்த ஜென்மத்துக்கும் இருக்கும் தொடர்பை கிரகங்கள் மூலம் கண்டுபிடிப்பது)

★ஜாதகத்தில் check செய்து பாருங்கள் நான் சொல்வது புரியும்.


Sunday, January 21, 2024

குரு கடாட்சம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.

*🌹குரு கடாட்சம் கிடைக்க...  ; இந்த நாட்களில்*
*மட்டும் உங்கள் தீபங்களை சுத்தம் செய்யுங்கள்...!!🌹*

🌷🌷🌷

*எந்த திசையில் தீபம் ஏற்றலாம் ..?*
------------------------------------------------------------------------------
தீபவழிபாடு என்பது மன, உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என புராணங்கள் சொல்கிறது. தீபமானது வீட்டில் பூஜையறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. எல்லா செயல்களின் தொடக்கத்திலும் தீபம் ஏற்றப்பட்டே செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.

திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன.

*எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்?*
------------------------------------------------------------------------------
*கிழக்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

*தென்கிழக்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இட வேண்டும்.

*தெற்கு* : வீட்டில் தெற்குதிசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. இது மரண பயத்தை உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லாதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றினால் இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரும்.

*தென்மேற்கு* : இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் மற்றும் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

*மேற்கு* : இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லைகள் நீங்கும்.

*வடமேற்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர, சகோதரிகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.

*வடக்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தை பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

*வடகிழக்கு* : இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குடும்பத்தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும், அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

*விளக்கை எப்போது சுத்தம் செய்ய வேண்டும்..?*
------------------------------------------------------------------------------
திங்கட்கிழமை நடு இரவு முதல் புதன்கிழமை நடு இரவு வரை குபேர தன தாட்சாயணி மற்றும் குககுரு தன தாட்சாயணியும் குடி கொண்டிருப்பதால், இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்வதால்;, இந்த சக்திகள் விலகி விடும். வெள்ளிக்கிழமையன்று சுத்தம் செய்வதால் குபேர சங்கநித யட்சணி விலகி விடும்.

ஆகையால் ஞாயிறு, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்தான் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். ஞாயிறு அன்று சுத்தம் செய்து விளக்கை ஏற்றினால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கை ஏற்றினால், குரு கடாட்சம் கிட்டும். சனிக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கை ஏற்றினால், வாகன விபத்துக்களில் இருந்து விடுபடலாம். நலமுடன், வாழ்க வளமுடன்!

 *ஸர்வம்_சிவார்ப்பணம் .*

➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️

Saturday, January 20, 2024

சனியின் கோர பார்வை ராஜாவையும் பிச்சைக்காரனாக மாற்றும்.

சனி கோர பார்வை ராஜாவை பிச்சைகாரனாகவும், பிச்சைக்காரனை ராஜாவாகவும் மாற்றும் சக்தி வாய்ந்தது. அதனால்தான் "சனியை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை'' என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனென்றால் சனிபகவான் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவார்.
 
ஆனால் பிறருக்கு கெடுதல், தீமை செய்பவர்கள் மீது சனியின் கோரப்பார்வை சனி பிடிக்கும் போது அவர்களை ஏழரை ஆண்டுகள் சனி பிடித்து ஆட்டி படைப்பார். அப்போது வாழ்க்கை இன்பத்தினை இழந்து, பதவி மற்றும் இருந்த வேலை இழந்து, வாழ்க்கையே வெறுத்து தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு துன்பத்தினை அனுபவிப்பார்கள். 
இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்
 
ஒரு சமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு "நான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன் என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று  கேட்டார். அதற்கு சனி பகவான் "என் பார்வையிலிருந்து எவருமே  தப்ப முடியாது'' எனப்பதிலளித்தார். "அப்படியானால் நீ என்னைப்பிடிக்கும் நேரத்தைச் சொல்லி விடு'' என்று தேவேந்திரன் கேட்டார்.
 
சனி பகவானும் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச்சாளி உருவம் எடுத்து சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார்  என்று நினைத்தார். அவர் நினைத்தப்படியே குறிப்பிட்ட நேரம் கடந்தது. சனி பார்வை தன் மீது படவில்லை என்று இந்திரன் மகிழ்ந்தார்.
 
சிறிது நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்துக் விட்டதாக பெருமையாக கூறினார். உடனே சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால் தான்! என்றார் எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Friday, January 19, 2024

கண்டிப்பாக படிக்கவும் சிவ சின்னங்களும் அதனுடைய விளக்கங்கள்.

சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ?  பத்மாசனம்ஏன்?  உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலி குறிப்பது என்ன ?
சிவன் சின்னங்களும் அதன் விளக்கங்களும்.

சிவன் சின்னங்களும் அதன் விளக்கங்களும் 

ஈசனடி போற்றி – நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
பல்லாயிரம் ஆண்டுகளாக இப்புண்ணிய பூமியில் வாழ்ந்து அனுபவம் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் தீர ஆராய்ந்து, இறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப்
பெற்று சீரூம் சிறப்புமாக வாழ்ந்த பூமி நம் பாரதபூமி. கடந்த சில நூற்றாண்டுகளில் இப்பூவுலகில் வேறு பகுதியில் வாழ்ந்து வந்தவர்களின் பேராசை, பொறாமை, அபகரிக்கும் தன்மை போன்ற குணங்களினாலும் நம்மிடையே ஒற்றுமையின்றி தவித்ததாலும், நம் செல்வங்களையும், ஞானத்தையும், பல அரிய பொக்கிஷங்களையும் இழந்து நிற்கிறோம். அது மட்டுமின்றி, இவ்வுலகில் வேறுபகுதியில் இருப்பவர்கள் நம் அறியாமையை பயன்படுத்தியும் நம்மிடம் மிஞ்சியிருக்கும் செல்வங்களை குறிவைத்தும் இன்றும் நம்மை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.

இச்சமயத்தில் நாம் இறைவனை வணங்கி, அவன் அருள் பெற்று, நம் ஞானத்தை மீண்டும் பெறவும், நம் செல்வங்களை பெறவும், நம் மக்களை காக்கவும், நாம் மக்களுக்காக தொண்டாற்றவும் வேண்டும். இதைப் போன்ற ஒரு தெய்வீக வேலை இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. 

ஓம் நமசிவாய.
சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ? 

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாலூட்டி வளர்த்தாலும் பாம்பு தீண்டத்தான் செய்யும் என்பார்கள். பாம்புகளை செல்ல பிராணியாக யாரும் வளர்ப்பதில்லை. பாம்புகள் வலையில் உள்ள எலிகளை பிடித்து உண்பதால் விவசாயிகளின் நண்பன் என்பார்கள். இத்தகைய குணங்களை கொண்ட பாம்பு ஏன் சிவனின் கழுத்தில் வந்தது. 

சிவபெருமானுடைய வடிவம் மூன்று. அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம். அருவத் திருமேனியையுடை ய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத்திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவ ர்.
மகேசுவரன் 25 வடிவங்களி ல் அருள்புரிகிறான். மேலும், சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர் த்தி என்று பல்வேறு மூர்த்திகளாகவும் ஆகிறான்.

சுந்தரர் திருமழபாடியி ல் பாடியருளிய தேவார ப் பாடல் வரி ஒன்றைக் காண்போம்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

 பத்மாசனம். 

அந்த சிவனே பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம். அவனின் ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில். இரு புருவங்களுக்கும் நடுவில் நெற்றிக்கண். நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள். செம்மை நிற சடைமுடியான். அவன் தலையில் கங்கை ஆறாக பெருக் கெடுத்து ஓடுகிறாள். பிறையை தலையில் சூடிய பெருமானாய்இருக்கிறான். சிவனுக்கு பிடித்த கொன்றை மலரை தலையில் அணிந்திருக்கிறான். உடல் முழுவதும் திருநீற்று கோடுகள். கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை. கழுத்தில் பாம்பு. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருக்கிறான். விடையாகிய காளை மாட்டை வாகனமாக வைத்துள்ளான். புலித்தோலை இடையில் அணி ந்துள்ளான். கைலாய மலையை வீடாக வைத்து உள்ளான். நடனத்தை உருவாக்கியவனாய் நடராசனாய் இருக்கிறான். இப்பிரபஞ்ச அதிர்வுகள் யாவையும் கடந்த சலனமில்லாத முக பாவனையோடு நமக்கு காட்சி தருகிறான். இன்னும் இன்னும் நமக்கு புலப்படாத எவ்வளவோ தத்துவங்களை அடக்கியவனாய் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தந்து அருள் புரிகிறான்.

நெற்றிக்கண்

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக் கண்” என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

குண்டலினி  சக்தியை மேலே எழுப்பி தலையின் நடு உச்சி பகுதிக்கு கொண்டு வரும்போது அளப்பரிய ஞானம் தோன்றும். அப்போது நெற்றிக் கண்ணும் திறக்கும். நெற்றிக் கண்ணினால் பல விசயங்களை உணர முடியும். நெற்றிக்கண் மிகவும் சக்தி வாய் ந்ததாகும். நெற்றிக்கண் ஞானத்தின் உச்சத்தை குறிக்கும்.
உடுக்கை

உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. 

உடுக்கையை  அடிக்கும் போது ஓம் என்ற பிரணவ மந்திர ஒலி பிறக்கிறது. இந்த நாத ஒலி பிரபஞ்ச ஆக்கத்தின் பிறப்பிடம். பிரபஞ்ச படைப்பை ஆக்கும் ஆனந்த தாண்டவத்தை தொடங்கும் முன்னர் சிவன், உடுக்கையை 14 முறை அடிக்கிறார். இது பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையான சாத்திரத்தை உருவாக்குகிற து. இவ்வாறு பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையானவற்றை உரு வாக்கிய பின்னர் சிவன், ஆனந்த தாண்டவத்தை தொடங்குகிறா ர். ஆகவே, உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலிக்குறிப்பாகும்.
பிறை சந்திரன்

பிறை சந்திரன் வளரும், தேயும் குணமுடையது. காலச் சக்கரத்தில் இந்த வளர்தலும் தேய்தலும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலத்தை நாம் இரவு பகல் என்று உணர்ந்தாலும், தினமும் நிகழும் கால மாற்றம் சந்திரன் மூலம் நம் கண் முன்னே காலம் நகர்ந்து செல்வதை எளி தாக உணர்த்துகிறது. இந்த பிரஞ்சத்தையே படைத்த இறைவன், காலத்தை வென்றவனாவான். இந்த தத்துவத்தையே பிறை சந்திரன் உணர்த்துகிறது.

நெற்றியில் மூன்று திருநீற்று கோடுகள்

இவ்வுலகில் பிறந்து உயிரினங்கள் யாவும் இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.
காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத் துவ நூல்கள் கூறுகின்றன.
திருநீறு உடலில் உள்ள நீர்த்தன் மையை உறிஞ்சவல்லது. நம்மை சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல் ல அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது

திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன் று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
திருநீறு இன்னும் பற்பல நன்மைகளை நமக்கு அருள்கிறது.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

என்பது திருஞானசம்பந்தர் திரு நீற்றுப்பதிக வாக்கு.
சூலாயுதம்

மூன்று முனைகளை கொண்ட சூலாயுதம், சிவனின் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்தியை குறிக்கிறது. இச்சையினால் படைத்தலும், கிரியையால் காத்தலும் ஞானத்தினால் நன்மை பெறுதலும் ஆகும். இந்த ஆயுதம் வல்வினைகளை அழித்து நன்மை பயப்பவை.
கொன்றை மலர்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, கோடையின் துவக்கத்தில் மலரக் கூடியது கொன்றை மலர்கள். இதற்கு சொர்ணபுஷ்பம் என்ற மற்றொரு பெயருமுண்டு. சரக்கொன்றை, சிறுகொன்றை, செங் கொன்றை , மஞ்சள்கொன்றை, மைக்கொன்றை , மயில்கொன்றை, புலிநககொன்றை , பெருங்கொன்றை என பல வகையா க இருக்கும் கொன்றை, தமிழகத்தைப் பொறுத்தவரை காடும் காடு சார்ந்த பகுதியான முல்லை பகுதிக்கு உரிய மரம்.

மருத்துவ குணத்திலும் கொன்றை மரம் ஈடு இணையற்றது. சரக்கொன்றை சிறந்த நோ ய்க்கொல்லியாகிறது. கண் நோய்கள், மலச்சிக்கல், தோல் நோய்கள், சர்க்கரை நோய், சளி என்று பல்வேறு நோய்களை கட்டுபடுத்த பயன்படுகிறது. சிவன் கொன்றை மலர் தரித்தவனாக காட்சி தருகிறான்.

புலித்தோல்
புலி மிகுந்த ஊக்கமுடைய விலங்காகும். புலித்தோல் இயற்கையின் சக்தியைக் குறிக்கிறது. இது உலகி ன் ஆக்க சக்திகளுக்கு மூலமாகவும் இருக்கிறது. சிவன் புலித்தோலின் மேல் அமர்ந்திருப்பது, அவன் எல்லா சக்திக ளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்துகிறது.

உருத்திராச்ச மாலை 
உருத்திராச்சம்  என்பது இமய மலையில் உண்டாகும் ஓர் மரத்தின் விதையாகும். இந்த உருத்திராச்சத்திற்கு  மனித உடலில் ஏற்படும் பலவித நோய்களை நீக்கும் தன்மை இருக்கிறது. உருத்திராச்சம்  மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடிய து. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது வயிற்றிலும் வாயிலும் புண்உருவாகிறது. பஞ்ச பூதங்களின் வெவ்வேறு விகிதசேர்க்கையே  நவ கிரகங்களாகும். இந்த நவகிரகங்களினால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உருத்திராக்கம் பெரிதும் உதவுகிறது.

பாயும் கங்கை

கங்கை நதி வளமையும் செல்வ செழிப்பையும் அளிக்கவல்லது. மானுட நல் வாழ்வுக்கு நல்ல ஞானம் மிக அவசியம். கிடைத்தற்கரிய இந்த ஞானம் காலத்தின் மாற்றத்தில் நலிந்துவிடாமல் தலைமுறை தலைமுறையாக ஊடுருவிச் செல்வது அவசியம். இந்த ஞானம் தலைமுறை கடந்து செல்வதையே கங்கை நதி உருவகிக்கிறது. இந்த ஞானம் எல்லா உயிரினங்களுக்கும் நல் வாழ்க்கையும் , அமைதியையும் கொடுத்து கொண்டே இருக்கும்.
தோடு

சிவனின் இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். சிவன் உமையொ ரு பாகனாவான். உமையம் மையை தன்னுள் ஒரு பாக மாக கொண்டவன். பெண்கள் அணியும் தோடை அணிந்த இவனது இடது காது, இந்த தத்துவத்தை உணர்த்திக்கொண்டேயிருக்கும்.
காளை (விடை) வாகனம்

நந்தி தேவர்.
 நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலை யில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்த வராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.
செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்துநம் பவமறுத்த நந்திவானவர்
எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்திதேவரே என்பது தெளிவாகின்றது.

நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற் குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிட மிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.
நந்தி வெண்மையாகிய தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. இது தர்மத்தை குறிக்கிறது. 

தர்மமே இறைவனை தாங்கி நிற்கிறது . சிவபெருமானின் ஆணைக்கேற்ப கலியுகத்தில் ஒரு காலை மட்டும் தூக்கி நிற்கும். நந்தி சிவனிடம் பெற்ற வரத்திற்கேற்ப எல்லா கோவில்களிலும் சிவன் முன்னே அவரை நோக்கியபடியே இருக்கும். ஆன்மாக்களாகிய நாம் நம் கவனத்தை நந்தியைப் போல எப்போதுமே இறைவன் மீதே நோக்கியிருக்க வேண்டும்.
.
கழுத்தில் பாம்பு
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்மை செல்ல பிராணியாக வளர்க்க முடியாது. என்ன தான் பால் ஊற்றி வளர்த்தாலு ம், சமயங்களில் வளர்த்தவனையே கடித்து விடும். விளைநிலங்களில் பயிர்களை நாசமாக்கும் எலிகளை பிடித்து உண்பதால் விவசாயி களின் தோழனாகும். இவ்வாறு பல்வேறு குணமுடைய பாம்பு போ ன்ற விலங்களின் மீது இறைவனு க்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை உணர்த்துகிறது.
இன்னுமொரு முக்கியமான தத்துவம்:

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டி ன் வழியே தலையில் இருக்கு ம் சக்தியோடு சிவம் சேரும் போது அளப்பரிய ஞானம் உண் டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். இந்த தத்துவத்தை விளக்க வே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருப் பது தெளிவு படுத்துகிறது.
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த 
அருள் செய்தபீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!

அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள்
அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள் 

காலையில் எழுந்திருக்கும் போது :-
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது :-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது :-
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது :-
தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது :-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது :-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது :-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது :-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது :-
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது :-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது :-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி...

Thursday, January 18, 2024

அவமானங்களை வெல்வது எப்படி.

அவமானங்களை வெல்லுவது எப்படி.??
அவமானம்.....அது பாவத்தை போக்கும் சன்மானம்.!!

வாழ்க்கையில் அவமானங்களை கடந்து வராமல் யாரும் இருந்து இருக்க முடியாது. 

அவமானத்தால் வருத்ததில் இருப்பவர்களுக்கு சில motivation speech தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்து இருக்கும். 

அதை கேட்கும் பொழுது உங்கள் நரம்புகள் புடைத்து ஒரு புத்துணர்வு கிடைத்திருக்கும். தன்னம்பிக்கை கிடைத்து இருக்கும்.

யாரை பற்றியும் கவலை இல்லாமல் போகும். எல்லோரையும் வெறுப்பாக பார்ப்பீர்கள்.உங்கள் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கும். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஓடிக்கொண்டு இருப்பீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். அப்பொழுது நீங்கள் அவமானத்தை வென்றதாக உணர்வீர்கள்.

ஆனால் உண்மையில் அவமானங்கள் என்பது என்ன....
உங்கள் தகுதிக்கு ஒரு குறைவு ஏற்படுவதை நீங்கள் அவமானமாக எண்ணுகிறீர்கள்..

நான் ஒரு ஆண் என்ற கர்வம் இருக்கும் பொழுது, ஒரு பெண்ணுடைய பேச்சு உங்களுக்கு அவமானமாக தோன்றும். 

நான் ஒரு அதிகாரி என்று கர்வம் இருக்கும் பொழுது, ஒரு சராசரி மனிதனுடைய செயல் உங்களுக்கு அவமானமாக தோன்றும்.

நான் ஒரு குடும்பத் தலைவன் என்ற கர்வம் இருக்கும் பொழுது, குடும்பத்தார் செயல் உங்களுக்கு அவமானமாக தோன்றும்.

உங்களுக்கு என நீங்கள் ஒரு தகுதியை வைத்து உங்களை உயர்த்தி நினைக்கும் போது 
அதற்கு ஒரு குறை ஏற்படும் போது 
உங்களுக்கு அது அவமானமாக தோன்றுகிறது.

எப்பொழுதெல்லாம் நீங்கள் உங்களை உயர்வாக எண்ணி ஒரு தகுதியை வைத்துக் கொள்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் அதற்கு ஒரு இழுக்கு ஏற்பட்டு உங்கள் கர்வத்தை கடவுள் உடைப்பார்.

எளிமையாக வாழ்ந்தால் உங்களை நீங்கள் சாதாரணமாக எண்ணினால் உங்களை அந்த இறைவன் உயரத்தில் தூக்கி வைப்பார்.

நான் ஒரு ஆண் என்னால் ஒரு பெண்ணின் காலை தொட்டு செருப்பு போட்டுவிட முடியும்.
நான் ஒரு அதிகாரி என்னால் என் இடத்தை கூட்டி பெருக்க முடியும்.
நான் ஒரு குடும்பத் தலைவன் வீட்டில் சிறு குழந்தையின் கருத்தையும் கேட்டு குடும்பத்தை வழிநடத்த முடியும்.

என நீங்கள் உங்களை உயர்வாக எண்ணாமல் எளிமையாக வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கை முறை அவமானங்கள் என்பதற்கே இடமில்லை.

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பிச்சை எடுக்கும் நிலைமை எனக்கு வந்து விடக்கூடாது என்பதுதான் பெரும்பாலானோரின் கவலையாகவும் இருக்கும்.

எவ்வளவு மோசமான கிரக அமைப்பு இருந்தாலும் ஒருவர் பிச்சை எடுத்து சாப்பிடுவது அவர் துன்பத்தை குறைக்கும். பிச்சை எடுத்து சாப்பிடுவதை பரிகாரமாக கூட சொல்வது உண்டு. மகான்கள் ஞானிகள் எல்லோரும் பிச்சை எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். சீரடி சாய்பாபா கூட பிச்சை எடுத்து சாப்பிடுவார். அதற்கு ஒரு காரணமும் உண்டு.

ஆகவே இந்த உலகில் எதுவுமே குறைவான ஒன்றல்ல... அதனால் எதையுமே அவமானமாக  கருதத் தேவையில்லை...

இப்பொழுது என்னை ஒருவர் திட்டி அவமானப்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்றால், என் பாவத்தை அவர் வாங்கி எனக்கு குறைத்துக்கொண்டு இருக்கிறார் என்று தான் அர்த்தமே தவிர....அதற்கு நான் வருந்துவதற்கோ கோபப்படுவதற்கோ ஏதுமில்லை....

எல்லாருமே பண்ணிய பாவங்களை போக்குவதற்கு தான் பூமியில் பிறந்து உள்ளோம். இதில் என்ன உயர்ந்தவன் தாழ்ந்தவன் வெற்றிகள் அவமானங்கள் எல்லாம்.

ஜெய் ஸ்ரீராம்.

Tuesday, January 16, 2024

வாரியார் சொன்ன குரங்கு கதை.

*வாரியார் சொன்ன "சாமியாரும் குரங்கும்" என்ற அருமையான கதை.!!!*

ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார்..!!

அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய *"சாமியார்",* தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்..

குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது..

 உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார்..!!

குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது..

திரும்பவும் தலையில் அடித்தார்..!!
அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது...

நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை..

சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே..??

அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார்..!!

சாமியார் எதுவும் பேசவில்லை..

சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார்...

சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது..

காதைப் பிடித்து இழுத்தது..

தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது...

சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது..

உடனே சாமியார் நண்பர்,
ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர்..!!!

உடனே சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார்..

அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது..

உடனே 
சாமியார் சொன்னார்...

இந்தக் குரங்கைப் போலத் தான்
மனித மனங்களும்...

நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது..!!

*தேவாரம், திருவாசகம், தியானம், தவவிரதங்கள் என்னும் பிரம்புகளால் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்..!!*

சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் என்றார்..!!!

சிவனென்றிரு மனமே.

*திருச்சிற்றம்பலம்.*

Sunday, January 14, 2024

_பொங்கல் பொங்கி வழியும் திசையும். அதன் பலன்களும்._*

*_பொங்கல் பொங்கி வழியும் திசையும். அதன் பலன்களும்._*


உறவோடு ஒன்று கூடி புதிதாக அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைக்க புதிய மண்பானை வாங்கி அதில் அரிசி கழுவிய தண்ணீருடன் பசும்பால் சேர்த்து புதிய அடுப்பில் சமநிலையில் வைத்து இளம் தீயில் எரியவிட்டு பானையில் வைத்த கழுநீரை பொங்கவிட்டு, பொங்கிவரும்போது  "பொங்கலோ பொங்கல்" என்று குலவையிட்டு கூவி மகிழ்ந்து, சூரிய பகவானுக்கும் கதிரவனுக்கும்  நன்றி சொல்லுவார்கள் நம் முன்னோர்கள்.

அப்போது பொங்கல் பொங்கிவழியும் திசையை வைத்து அந்த வருடம் முழுதும் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும்  நடக்கும் பலனை தீர்மானிக்கின்றனர்.

*கிழக்கு - பொங்கல்*

 கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது சுமூகமாக நடக்கும். 

ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள். 

உடை மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

*மேற்கு – பொங்கல்* 

மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். 

மகன் – மகளுக்கு மகளுக்கு வரன் தேடுபவராக இருந்தால் இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். 

சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை
 குறிக்கும்.

*வடக்கு – பொங்கல்*

 வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் பண வரவு அதிகரிக்கும். நீங்கள் பதவி உயர்வு அடைவீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமா பேச்சுகள் நிறைவாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் போக வாய்ப்புகள் அதிகம். கொடுத்த கடன் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.

*தெற்கு- பொங்கல்*

தெற்கு திசையில் பொங்கல் பொங்கி வழித்தால் பிணி என்றே சொல்லலாம். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். எனவே உடல்நிலையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நலம்.

*அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.*


🌷🌷

Saturday, January 13, 2024

மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்

மனைவி அமைவதெல்லாம்......

1 ) திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது.

2 ) மனைவி இல்லாதவன் யாகம் செய்ய கூடாது.

3 ) மனைவி இல்லாதவன் கும்பாபிஷேகம் போன்ற யாகங்களில் பங்கேற்க தகுதி கிடையாது.

4 ) மனைவி இல்லாதவன் தானம் செய்ய முடியாது.

5 ) மனைவி இன்றி செய்யும் தானம் பலன் தராது.

6 ) மனைவி இல்லாதவன் பித்ரு கடன்களை செய்ய வாய்ப்பற்றவன்.

7 ) மனைவி இல்லாதவன் கோயில் உள்ளே சென்று ஸ்வாமியை  பூஜை செய்ய அருகதை அற்றவன்.

8 ) மனைவி இல்லாதவன் பஞ்சாயத்தில் தலைமையாக உட்காரும் தகுதி இல்லாதவன்.

9 ) மனைவி இல்லாதவன் நேரில் வந்தால் சகுன பிழை என பொருள்.
( இதுவே ஒத்தை பிராமணன் என திரிக்கப்பட்டது )

10 ) மனைவி இல்லாதவனுக்கு ஆகமங்களின்படி ஆச்சார்ய தீக்ஷை கிடையாது.

11 ) மனைவி இல்லாதவனுக்கு கும்ப மரியாதை கிடையாது.

12 ) மனைவி இன்றி ஒற்றை நபராக பசுவை வணங்க கூடாது.

13 ) மனைவி இன்றி ஒற்றை நபராய் புண்ணிய தீர்த்தம் ஆடுதல் கூடாது.

14 ) மனைவி இன்றி பெரியோர்களை நமஸ்கரிக்க கூடாது. அதாவது முழு பலன் இல்லை என்பதாகும்.

15 ) மனைவி இல்லாதவன் கோயில் விழாக்களில் காப்பு கட்டி கொள்ள தகுதி கிடையாது.

இப்படி பல பல நியதிகள் உள்ளது. இவை இல்லற வாழ்வியல் அல்லது அந்நிலை சூழலில்  உள்ளவர்களுக்கே.

மனைவி என்ற பெண் உடன் இல்லையெனில், ஒரு ஆண் வெறும் ஜடமே. சாஸ்திர மரியாதை சிறிதும் கிடையாது.

Friday, January 12, 2024

கணபதி வணங்கினால் நவ கிரக தோஷம் நீங்கும்

நவகிரக தோஷங்களை நீக்கும் நவகிரக கணபதி

விநாயகரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. 

தலை உச்சியில்  குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில் சனிபகவான், வலது கீழ்க்கையில் புதன், இடது மேற்கையில் ராகு, இடது கீழ்க்கையில் சுக்கிரன் என எல்லா கிரகங்களும் பிள்ளையாரிடம் இருக்கின்றன. 

தும்பிக்கையில் ஸ்வர்ண கலசம் ஏந்தி பக்தர்களின் நவகிரக தோஷங்களை நீக்குகிறார் விநாயகர். 

முறம் போன்ற காதுகளை அசைத்து பக்தர்களின் துன்பங்களை விரட்டுகிறார் என்கிறது ‘கணேச புராணத்தின் வக்ர  துண்ட கணபதி துதி.

கணபதியை சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துதித்திட அவரருள் பெற்று நலமடையலாம் என்பது பொதுவானது. 

என்றாலும் அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் நலம் பல பெறலாம்.

ஞாயிறு– சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம

திங்கள்– சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம

செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம

புதன் – புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம

வியாழன் – குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம

வெள்ளி– சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம

சனி – சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம

இராகு – ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம

கேது – கேதுஸ்வரூப ஞான கணபதயே நம

எல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம்

“நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ
ஸ்வரூபகம் கணபதயே நம.”

கணபதியே நவகிரக வடிவில் உள்ளார் என்றெண்ணி, அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் விலகுவது நிச்சயம். 

காரிய வெற்றியும் கைமேல் கிட்டும்.

Thursday, January 11, 2024

ஏழு ஜென்மம் புண்ணியம் பண்ணவர நீங்கள்?

ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு  ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில்  மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார். 
இவ்வுலகில் பிறந்த அனைவரும்  ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.
ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு வகையில் ருத்ராட்சம்  பலன்களை  கொடுத்துக் கொண்டிருந்தாலும், அது தோன்றிய வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது. 
முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.
அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம், தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார்.
அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். பக்தியுடன் அதை அணிபவரை எப்பொழுதும் கண்போலக் காப்பாற்றுவார் . எனவே அனைவரும்  ஒரு ஐந்து முகம்  ருத்ராட்சம் கழுத்தில் எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். 
பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.. 
எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

Tuesday, January 9, 2024

திக்காற்றவனுக்கு தெய்வமே துணை

பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?

கண்களை மூடிக்கொண்டு 
சற்று சிந்தித்து பாருங்கள்.

ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!

ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு.

இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.

ஒரேயடியாக உச்சிக்கு  போய் விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருக்கிறது என்று
பொருள்.

‘ஆண்டவனின் அவதாரங்களே விதியின் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.

தெய்வ புருஷன் ஸ்ரீ
ராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!

அதனால் வந்த வினைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!

சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாக
வில்லையே!

அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!

துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைகள் என்றும், அவற்றுக்காக்க் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் நம்மை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்கள்.

இந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.

ஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதிலை.

இந்து மத்த்தின் சாரமே உனது லௌகீக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது என்பதையே.

துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், நமக்கேன் வேதனை வரப்போகிறது?

அந்தச் சோதனையிலிருந்து நம்மை விடுவிக்கும் படி நாம் இறைவனை வேண்டிக்கொள்லாம்; காலம் கடந்தாவது அது நடந்து விடும்.

தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்
முட்டாள்களல்ல.

கஷ்டத்திலும் நேர்மையாக இரு.

நாம் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.
நம் வாழ் நாளிலேயே அதன் பலனைக்
காணலாம்.

தெய்வ நம்பிக்கை நம்மைக் கைவிடாது.