சுவாமி கும்பிடுவது எப்படி?
அடிப்படை விஷயமே தெரியாத மக்களுக்கு அடிக்கடி சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கிறது. சொல்லவேண்டிய கடமையும் இருக்கிறது.
அபிஷேகம் நடக்கும்போது நமக்கு சம்பந்தமில்லை என்பதுமாதிரி வெளியில் எழுந்துபோவதும் வேறு விஷயங்கள்பேசுவதும் குற்றம்.
ஒவ்வொரு அபிஷேகத்தின்போதும் ஒவ்வொரு வினைகள் களையப்படுகிறது.
அரிசிமாவு அபிஷேக தரிசனம் கடன் தீர்க்கும்.
சர்க்கரை அபிஷேகதரிசனம் எதிரிகளை கட்டுப்படுத்தும்.
ஒவ்வொரு அபிஷேகமும் நம் வாழ்க்கையில் நலன் சேர்க்கும்.
கர்ப்பூர ஹாரத்தியின்போது கண்களைமூடி வணங்காதீர்கள்.
இறைவனை சோதிப்பிழம்பாய் தரிசிக்கும் தத்துவம் ஹாரத்தி.
திரைபோட்டிருக்கையில் வணங்காதீர்கள்.
அபிஷேக காலத்தில் இடையில் எழுந்து போகாதீர்கள்.
ஆச்சார்யார்கள் சிவபூஜை செய்தால் காத்திருந்து பூஜை நிறைவுபெற்றபின் ஆச்சார்யாரை நமஸ்கரித்து திருநீறு பெற்று அணியுங்கள். ஆத்மார்த்தமாக சிவபூஜை செய்கிற ஆச்சார்யார்கள் சிவனுக்கு ஒப்பானவர்கள்.
ஒரு கையால் திருநீறு குங்குமம் வாங்காதீர்கள். இறைவனிடம் பணிவைக்காட்டத்தான் இரு கரங்களைக் கொடுத்திருக்கிறான்.
இறைவனுக்கு வழங்கும் அபிஷேக நைவேத்யப் பொருட்களுக்கு பெருமை தேடாதீர்கள்.
இடது கைக்குத் தெரியாமல் இறைவனுக்கு அளிப்பதே பக்தி.
மாற்றார் அறியக் கொடுப்பது விளம்பரம். பயனில்லாமற்போகும்.
ஒவ்வொரு ஆலயத்திலும் சில பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்கள் மாறலாம்.
விவாதம் செய்வது நம் வழிபடு பலனைக் கெடுக்கும்.
இறைவன் சன்னிதானத்தில் கௌரவம் தேடாதீர்கள். இறைவனைவிட கௌரவம் அதிகம் கொண்டவர்கள் பிரபஞ்சத்தில்யே எவருமில்லை.
மனங்கசிய வணங்குதல் பக்தி.
புறசிந்தனை மிகுமானால் ஆலயந்தொழல் சாலவும் நன்றன்று.
No comments:
Post a Comment