Wednesday, June 30, 2021

சொந்த வீடு கட்ட 1 ரூபாய் கூட இல்லை என்றாலும் வீடு கட்டும் பரிகாரம்.

சொந்த வீடு கட்ட 1ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை!
வீடு கட்டும் யோகம் தேடிவரும். இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது.

சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்ட பலபேரின் வேண்டுதல் நிறைவேறாமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம்.

சொந்த வீடு, கட்ட வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று சின்ன சின்ன, கல்லை அடுக்கி வைத்து விட்டு வந்தாலே போதும். அவர்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. பல பேரின் வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன இந்த கோவிலில் சிறப்பு?

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி, முருகப் பெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற மிகப். பெரிய சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. முடிந்தால் ஒருமுறை சிறுவாபுரி முருகப்பெருமா னை தரிசனம் செய்து இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, காலையில் இந்த பதிகத்தை மனமுருகி உச்சரித்து, சொந்த வீடு வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வையுங்கள். சொந்த வீடு கட்டி, குடி போகும் வரை இந்த பதிகத்தை நீங்கள் பாராயணம் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை. கையில் ஒரு பைசாவும் இல்லை. என்றாலும் கூட, பரவாயில்லை . முருகப்பெருமானி டம் கையேந்தி இந்தப் பதிகத்தைப் பாடி தொடர்ந்து உங்களது வழிபாட்டை வைத்து வந்தீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

உங்களுக்கான அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பதிகம் இதோ!

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி …… வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய …… முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.

உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் வரை இந்த பதிகத்தை தினம்தோறும் உங்கள் வீட்டில் பாராயணம் செய்து கொண்டே இருங்கள்! சொந்த வீட்டை கட்டாமல் முருகப்பெருமானை விடுவதில் லை என்ற ஒரு குறிக்கோளுடன், எம்பெருமானின் திருப்பாதங்களை பிடித்துக்கொள்ளுங்கள்

Sunday, June 27, 2021

இரண்டு பொருட்கள் போதும் தெய்வ சக்தியை வீட்டில் வர வைப்பதற்கு.

தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கும் தர்ப்பை புல்லும் பச்சை கற்பூரமும் !!!

(1) வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்
வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்

(2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்போது புகை கொஞ்சமாக வரும், அந்த புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். 

தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி உண்டு.

                    

Saturday, June 26, 2021

தினமும் ராகு காலம் இருக்கிறது ஆனால் கேது காலம் என்று இல்லை. விளக்கம்.

ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான பதிவு. மிகவும் அருமையான விளக்கம் .
நாம் அனைவரும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம்.

ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை? இதை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் கேது 

ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.
நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமை கள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!

நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.
சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.
மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.

ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார் கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். , .
ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.
புராணத்தில் ராகு- கேது
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.
திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.
பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.
அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.
யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.
இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.
இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும். உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துட னாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன் களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மை யென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.
ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. இந்த இரு கோள் களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம். அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.

ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை
கிரகத்தன்மை ராகு கேது
1. நிறம் கருப்பு சிவப்பு
. குணம் குரூரம் குரூரம்
3. மலர் மந்தாரை செவ்வல்லி
4. ரத்தினம் கோமேதகம் வைடூரியம்
5. சமித்து அறுகு தர்ப்பை
6. தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி
7. தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,
சித்திரகுப்தன், விநாயகர்
8. ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்
9. திசை தென்மேற்கு வடமேற்கு
10. வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்
11. வாகனம் ஆடு சிங்கம்
12. தானியம் உளுந்து கொள்ளு
13. உலோகம் கருங்கல் துருக்கல்
14. காலம் ராகுகாலம் எமகண்டம்
15. கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை
16. பிணி பித்தம் பித்தம்
17. சுவை புளிப்பு புளிப்பு
18. நட்பு கிரகங்கள் சனி, சுக்கிரன் சனி, சுக்கிரன்
19. பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், சூரியன், சந்திரன்,
செவ்வாய் செவ்வாய்
20. சம கிரகங்கள் புதன், குரு புதன், குரு
21 காரகம் பிதாமகன் (பாட்டனார்) மாதாமகி(பாட்டி)
22. தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்
23. நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம்
சதயம்
24. தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்
25. மனைவி சிம்ஹிகை சித்ரலேகா
26. உப கிரகம் வியதீபாதன் தூமகேது

27. உருவம் 
அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை,
ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)…

Friday, June 25, 2021

ஆனி மாதத்தில் ஏன் 32 நாட்கள் வருகிறது?

*ஆனி மாதத்தில் ஏன் 32 நாட்கள் வருகிறது?*

தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. பங்குனி மாதம் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என ஒவ்வொரு மாதம் 30, 31 நாட்கள் கொண்டு முடியும். ஆனி மாதம் 32 நாட்களை கொண்டுள்ளது. அது ஏன்?

ஆனி மாதம் :

சூரியனின் வடதிசைப் பயணக் காலமான உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும்.

ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்டா மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள்.

ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும். இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளன.

ஆனியில் 32 நாட்கள் :

தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். மிதுன ராசியானது அளவில் சற்று பெரிய ராசி என்பதால் இதனைக் கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்பதே இதற்குக் காரணம். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரித்திருக்கிறது.

ஜேஷ்டாபிஷேகம் விழா?

ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன். தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனி மூலம் நட்சத்திரம் :

ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் யோகத்தினைப் பெற்றிருப்பர். அதனால் தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது.

Monday, June 21, 2021

மஹாலக்ஷ்மி வசியம் செய்ய வேண்டிய முறைகள். கண்டிப்பாக படிக்கவும்.

#மகாலட்சுமி நிலைத்திருக்க #குடும்பத் தலைவிகள் #கடைப்பிடிக்க வேண்டியவை..!!

#பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். 

அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது #மகாலட்சுமியே #வருக #என்று3 முறை கூற #வேண்டும்.

‌காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

 இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

 #மாலையில் #விளக்கு #ஏற்றிய #உடன் வெளியே செல்லக் கூடாது.

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. 

பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும்.
 வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

 பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

 ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக #ஒருரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.

Saturday, June 19, 2021

செவ்வாய் கிழமை முக்கியமான ரகசியம் கண்டிப்பாக படிக்கவும்.

*செவ்வாய் கிழமைகளில் ஏன் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?*
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள்.
இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். 
ஆனால் நம்மில் பலர் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ வருகிறோம்.
இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. 
இந்நாளில் செலவு செய்யவோ,கடன் கொடுக்கவோ கூடாது .
செவ்வாய் கிழமை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். 
இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள். வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் .
எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். 
இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
 செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது. 
இதற்கு   ஜோதிடகாரணத்தின் படி... இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது.
செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறார். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும். 
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளாக மற்றொரு ஜோதிட குறிப்பு கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாககூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்கள்
 இந்த ஜோதிட குறிப்புகள்  பற்றி  ஆராய்ச்சி செய்து நிரூபிக்கபட்டுள்ள விபரம் எனக்கு தெரியவில்லை. இருப்பினும் நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருவதால் நாமும் இதை பின்பற்றலாமே!
நண்பர்களுக்காக செவ்வாய் கிழமை சிறப்பை பற்றிய  கூடுதல் தகவல்:
பெயர், புகழ், செல்வம் மேம்பட  செவ்வாய் கிழமை செய்ய வேண்டிய புனித நூல்கள் கூறும்
எளிய ரகசிய பரிகாரம்
இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் காரியங்களும் நன்மையாகவே அமையும்.

Thursday, June 17, 2021

சர்வ கஷ்டங்கள் நீங்க சக்திவாய்ந்த கணபதி மந்திரம்.

ஸ்ரீ கணநாயகாஷ்டகம்!

இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பதால் ஸர்வ பாபங்களும் விலகும். 

கேது தசை கேது புக்தி காலத்தில் இதைப் படிப்பது நன்மை பயக்கும்.


*ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மௌஞ்ஜீ க்ருஷ்ணாஜின்தரம் நாக யஜ்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ர ரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்
 
கஜவக்த்ரம் ஸூரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம்
பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸூர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை, ஸதா
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ ய: படேந் நர:
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி*

Tuesday, June 15, 2021

இந்த பொருளை வீட்டுல வையுங்கள் அப்புறம் பாருங்க அதிசயத்தை

#உங்க வீட்ல இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்க… அப்புறம் பாருங்க அதிசயத்தை*!! 
 
வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லது மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா போன்றவற்றிற்கான பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்துவிடும். அதோடு இந்த இசைக்கருவியைப் பார்த்ததுமே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அவர் தான் எப்போதும் புல்லாங்குழலை கையில் வைத்திருப்பார்.

இத்தகைய புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பது நல்லதா கெட்டதா என்று பலரது மனதிலும் கேள்வி எழும். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரையின் மூலம் ஓர் நல்ல விடை கிடைக்கும்.

சரி, இப்போது புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால் என்ன நடக்கும் என்று காண்போம்.

நன்மை #1 புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு ஓடிவிடும். இதற்கு அந்த புல்லாங்குழல் மூங்கில் கொண்டு செய்யப்படுவது தான் காரணம்.

நன்மை #2 புல்லாங்குழலை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்திருந்தால், அது குடும்ப ஒற்றுமையை வலிமையாக்கும் மற்றும் வீட்டில் அமைதியான சூழல் உருவாகும் என நம்பப்படுகிறது.

நன்மை #3 கிருஷ்ண பகவானின் கையில் இந்த இசைக்கருவி இருப்பதால், இதை ஒரு புனிதமான பொருளாகவே இந்து மதம் கருதுகிறது.

நன்மை #4 முக்கியமாக வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்போரிடம், அன்பும், காதலும் அதிகரிக்கும்.

புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா? இந்த கேள்வி பலரது மனதிலும் உண்டு. இதற்கு புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்ற நம்பிக்கை தான் காரணம்.

ஆனால் அது ஒரு மூடநம்பிக்கை. கிருஷ்ணரின் ஒரு இணைபிரியா அம்சம் தான் புல்லாங்குழல். அது தான் அவரின் அழகும் கூட. எனவே எவ்வித அச்சமுமின்றி, புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வழிபடலாம்.. 

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
☸️⚜️☸️⚜️☸️⚜️☸️🔯💐🔯💐🔯💐🔯
˙ *·٠•●♥  ♥●•٠·˙*

Monday, June 14, 2021

மனமது செம்மை ஆனால் மந்திரம் செப்பிக்க வேண்டும்.

மனமது செம்மை.....

மனமது செம்மையானால்   மந்திரம்                                ஜெபிக்க  வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை                                    உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை                              நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால்   மந்திரம்                                         செம்மையாமே

இது அகஸ்தியர் பெருமானின் ஞான உபதேச பாடலாகும்....

   இந்தப் பாடலுக்கு மனம் செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று ஒரே வரியில் விளக்கம் சொல்லி தன் தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் இந்த பூமியிலே நிரம்ப உண்டு... 
               ஒற்றை வரியில் பொருள் கூறும் ஒரு சாதாரண பாடல் அல்ல இது அகஸ்தியர் பெருமான் மேன்மையான ஞானத்தை மக்களுக்காக சுருக்கமாக உபதேசம் செய்த ஒரு சூட்சம பாடலே இது......

(1) மனமது செம்மையானால் மந்திரம்    
                                 செபிக்க வேண்டாம்

இதற்கு விளக்கம்:-
                 மனமானது செம்மையான பின்னால் எந்த ஒரு மந்திரத்தையும் செபிக்க வேண்டாம் என்பதே இதன் சூட்சம பொருளாகும்.  மனம் செம்மையாக வேண்டுமென்றால் அதற்கு மந்திரமும் வேண்டும் என்பதே இதன் மையக் கருத்து.

உயிர் இருக்கின்ற வரை மனம் அடங்காது ஆனால் அந்த உயிரிலே மனம் அடங்கும் இதை உணர்த்துவதற்காகவே இந்தப் பாடல்.

உயிர் என்பது நமது பிராண காற்று என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சொல்லை ஒரு குறிப்பிட்ட காலம் திரும்பத் திரும்ப வேறு ஒரு சிந்தனை இல்லாமல் நினைத்து வந்தால் அதாவது செபித்து வந்தால் நமது நினைவானது ஒரே சொல்லை நினைவு கூறுவதால் அந்த சொல்லிலேயே நமது மனமானது ஒடுக்கமாகும்.

தொடர்ந்து ஒரே சொல்லை சொல்வதால் இதனால் வேறு ஒரு நினைவுகள் நமக்குள்ளே அதிகம் தோன்றாததால் இதையே மன அடக்கம் என்று சொல்லப் படுகிறது.

நமது மனதை செம்மைப் படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரம் சூட்சமமான ஒரு சொல்லை தொடர்ந்து சொன்னால் அல்லது நினைத்தால்   நமது மனமானது இதை கவனிக்க வேண்டிய ஒரு நிலைக்கு நம்மால் கொண்டு வரப்படுகின்றது. 
   
   இதன் விளைவாக மனமானது தனது தேவையற்ற சிந்தனையை குறைத்துக்கொண்டு  நமது விருப்பத்திற்கு கட்டுப்படும் ஒரு நிலையை கற்றுக் கொள்கின்றது.
ஆக.....
         மனம் நமக்கு வசமாக மந்திரம் தேவை மனம் வசமான பின்னால் மந்திரம் வேண்டாம் இதுவே இந்தப் பாடலின் முதல் வரிக்கான விளக்கமாகும்.....

(2)  மனமது செம்மையானால் வாயுவை
   உயர்த்த வேண்டாம்

இதற்கு விளக்கம்:-
                  மனம் செம்மையான பின்னால் வாயுவை உயர்த்த வேண்டாம்.
ஆனால்,
                மனம் செம்மையாவதற்கு வாயுவை உயர்த்த வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
          மனம் செம்மையாவதற்கு மந்திரம் மட்டும் போதாது ஏனெனில் நமது மனமானது ஒன்றை நினைக்கும் போதே மற்றொன்றை நினைவுகூறும் ஒரு மாய குணத்தை பெற்றிருக்கின்றது. இரு வேறு வேறான நினைவுகளை ஒரே நேரத்தில் நினைக்கும் ஒரு அதிசய ஆற்றல் நமது மனதிற்கு மட்டுமே உண்டு

ஆகவே,
            இரண்டாக இருக்கின்ற நமது மனதை நமது சக்தியாய் மற்றொன்றாக இருக்கின்ற நமது உயிர் மூச்சான காற்றை கவனிக்க பழக்க வேண்டும். இப்படி கவனித்தாலே மனதின் இரண்டான கூறுகளில் ஒன்று 
காற்றான நமது உயிர் சக்தியிலே கலந்து அதிலேயே கரைந்து அதன் விளைவால் மனமானது சலனம் எனும் தீயசக்தியை இழந்து விடுகின்றது.

      மனமானது தீய சக்தியை இழந்து விட்டால் மட்டும் போதாது இது நல்ல சக்தியாக என்றென்றும் நிலையாய் இருப்பதற்கு நமது காற்றான வாசியோடு இதை கலந்து விடவேண்டும்.

எப்படியெனில்,
                    நமது காற்றை உள்ளே உயர்த்தினால் இந்த மனமானது அதிலே கலந்துவிடும். காற்று எனும் வாசியை கவனிக்காமல் மனம் ஒரு போதும் அடங்காது.

அதாவது,
            உள் நாக்கின் உள்ளே இருக்கின்ற இரண்டு துவாரத்தின் வழியே நாம் உதிப்பதற்கு ஆதாரமாய் இருந்த அந்த உற்பத்தி ஸ்தானமான சகஸ்கரத்தை  நோக்கி உயிர் காற்றை உயர்தத  வேண்டும்.

  நமது செயலால் வாயுவை உயர்த்தும் அந்த செயல்பாட்டை மனம் கவனித்தால் அந்த செயலில் நமது மனம் ஒடுங்கி அதன் மூலமாக இந்த மனமானது ஞான சக்தியைப் பெற்று விடுகின்றது.

ஆக...  
      இப்படி மனம்  ஓடுங்க இதன் மூலம் ஞான சக்தியை பெற   காற்றை உயர்த்த வேண்டும் என்பதே இந்தப் பாடலின் இரண்டாவது வரிக்கு அர்த்தம்...  

(3) மனமது செம்மையானால் வாசியை
    நிறுத்த வேண்டாம்

இதற்கு விளக்கம்:-
                    மனதை செம்மைப்படுத்திய பின்னால் வாயுவை நிறுத்த வேண்டாம் என்பதே இதன் சூட்சம பொருள். அதாவது உள்ளேயே ஏற்றி இறக்கி நமக்குள்ளே நிறுத்திய வாசியை இனி உணர்வால் செயலால் உள்ளே ஏற்றவோ இறக்கவோ வேண்டியதில்லை என்பதே இதன் கருத்து.

              ஏனெனில் மனம் செம்மையான பின்னால் வாசியான காற்றும் நமக்கு வசப்பட்டு விடும். மனமானது வாசியிலே அடங்கி  அதன் விளைவால் வெவ்வேறாக இருந்த மனமும் உயிரான காற்றும் ஒன்றுள் ஒன்று என ஒன்றாகவே ஒடுங்கிவிடும்.

மனம் வேறு மனிதன் வேறு என்ற நிலை மாறி ஜீவனும் சிவனும் ஒன்றே என்ற உணர்வு உண்டாகிவிடும்....

அதாவது,
              காற்றாலே ஜீவிக்கின்ற உயிரான ஜீவாத்மாவும் மனமாய் உயிர்களுக்கு உள்ளே சூட்சமமாக இருக்கின்ற பரமாத்மாவும் ஒன்றாகி விடும் என்பதே இதன்  உட்பொருளாகும். இந்த நிலையை மனம் பெற்ற பின்னால் வாசியை நிறுத்த வேண்டாம் அது தானாகவே உதித்த இடத்திலேயே சூழலும் ஒரு நிலையை பெற்றுவிடும் 

ஆக இந்த நிலையை பெறுகின்ற வரை வாசியான உயிர்காற்றை உயர்த்தும் சிவயோகம் எனும் வாசியோகத்தை நிறுத்த வேண்டாம் என்பதே இந்தப் பாடலின் மூன்றாவது வரிக்கான கருத்தாகும்.....

(4) மனமது செம்மையானால்
   மந்திரம் செம்மையாமே

இதற்கு விளக்கம்:-
                    அதாவது மனம் செம்மையான பின்னால், இந்த மனதை செம்மைப்படுத்திய ஒரு யோகியானவன் சொல்கின்ற ஒரு சொல்லே மந்திரமாக ஒரு உயிர் சக்தியை பெற்றுவிடும் என்பதாலே
மனம் செம்மையான பின்னால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என சித்தர் பெருமான் அவர்களால் சொல்லப்பட்டு இருக்கின்றது.

அதாவது,
             மனதை மந்திரம் எனும் ஒரு நினைவிலே ஒடுக்கி காற்றின் உணர்விலே அதை கலக்க செய்து

அதாவது, 
              காற்றின் உணர்வான சப்தத்தை மனதால்  கவனிக்க செய்து, இப்படி காற்றும் மனமும் ஒன்றாக கலந்தால் அதன் விளைவால் மனமானது செம்மையாகிவிடும்  என்பதாலே.....

அதற்குப்பின்னால்,

மந்திரம் செபிக்க வேண்டாம் 
வாயுவை உயர்த்த வேண்டாம் 
வாசியை நிறுத்த வேண்டாம்
என்று பாடலிலே கூறப் பட்டிருக்கின்றது.

அதாவது மனம் செம்மையான பின்னால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பதை கருத்தில் கொண்டே
மனமது செம்மையானால் 
மந்திரம் செம்மையாமே
         என்று அகஸ்தியர் பெருமான் இந்த பாடலின் மூலமாக நமக்கு ஞான உபதேசத்தை செய்திருக்கிறார் என்பதே உண்மையாகும்
யோக பாதையில் தொடர்ந்து இயமநியமத்துடன் பயணிப்போம்.
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்.

Friday, June 11, 2021

சுவாமி வணங்கும் முறை எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சுவாமி கும்பிடுவது எப்படி?

அடிப்படை விஷயமே தெரியாத மக்களுக்கு அடிக்கடி சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கிறது. சொல்லவேண்டிய கடமையும் இருக்கிறது.
அபிஷேகம் நடக்கும்போது நமக்கு சம்பந்தமில்லை என்பதுமாதிரி வெளியில் எழுந்துபோவதும் வேறு விஷயங்கள்பேசுவதும் குற்றம்.
ஒவ்வொரு அபிஷேகத்தின்போதும் ஒவ்வொரு வினைகள் களையப்படுகிறது.
அரிசிமாவு அபிஷேக தரிசனம் கடன் தீர்க்கும்.
சர்க்கரை அபிஷேகதரிசனம் எதிரிகளை கட்டுப்படுத்தும்.
ஒவ்வொரு அபிஷேகமும் நம் வாழ்க்கையில் நலன் சேர்க்கும்.
கர்ப்பூர ஹாரத்தியின்போது கண்களைமூடி வணங்காதீர்கள்.
இறைவனை சோதிப்பிழம்பாய் தரிசிக்கும் தத்துவம் ஹாரத்தி.
திரைபோட்டிருக்கையில் வணங்காதீர்கள். 
அபிஷேக காலத்தில் இடையில் எழுந்து போகாதீர்கள்.
ஆச்சார்யார்கள் சிவபூஜை செய்தால் காத்திருந்து பூஜை நிறைவுபெற்றபின் ஆச்சார்யாரை நமஸ்கரித்து திருநீறு பெற்று அணியுங்கள். ஆத்மார்த்தமாக சிவபூஜை செய்கிற ஆச்சார்யார்கள் சிவனுக்கு ஒப்பானவர்கள்.
ஒரு கையால் திருநீறு குங்குமம் வாங்காதீர்கள். இறைவனிடம் பணிவைக்காட்டத்தான் இரு கரங்களைக் கொடுத்திருக்கிறான்.
இறைவனுக்கு வழங்கும் அபிஷேக நைவேத்யப் பொருட்களுக்கு பெருமை தேடாதீர்கள்.
இடது கைக்குத் தெரியாமல் இறைவனுக்கு அளிப்பதே பக்தி.
மாற்றார் அறியக் கொடுப்பது விளம்பரம். பயனில்லாமற்போகும்.
ஒவ்வொரு ஆலயத்திலும் சில பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்கள் மாறலாம்.
விவாதம் செய்வது நம் வழிபடு பலனைக் கெடுக்கும்.
இறைவன் சன்னிதானத்தில் கௌரவம் தேடாதீர்கள். இறைவனைவிட கௌரவம் அதிகம் கொண்டவர்கள் பிரபஞ்சத்தில்யே எவருமில்லை.
மனங்கசிய வணங்குதல் பக்தி.
புறசிந்தனை மிகுமானால் ஆலயந்தொழல் சாலவும் நன்றன்று.

Wednesday, June 9, 2021

பித்ரு கடன் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

ராம் ராம்

ஸ்ரீபித்ரு தேவ தாப்யோ நமோ நம :

பெற்றோர்களை நாம் காப்பதற்கு பெயர் கடமை.அவர்கள் காலமானவுடன் செய்வதற்கு பெயர் கடன்...

பித்ரு கடன் செலுத்தவில்லையென்றால் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து

நம் சந்ததிகள் தலையில் தான் விழும்

பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கர்மாக்கள் தான் நம் சந்ததியருக்கு நாம் போடும் பிக்ஸட் டெபாஸிட்

பித்ருக்களுக்கு ஒரு வருடத்திற்கு 96-நாட்கள் பசியெடுக்கும் நாட்கள். ஆகையால் ஒரு வருடத்திற்கு 96-தர்ப்பணங்கள் அதாவது ஷண்ணவதி தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று உள்ளது

அதை பற்றிய விவரம் :

மாதப்பிறப்பு - 12
அமாவாசை - 12 
வ்யதீபாதம் - 12 
வைத்திருதி - 14 
மன்வாதி - 14 
மஹாளயம் - 16
யுகாதி - 4 
பூர்வேத்யு - 4 
அஷ்டகா - 4
அன்வஷ்டகா - 4

பிரதி வருடம் தாய் தந்தை திதியன்று 
*சிரார்த்தம் செய்யாமல் ஆலயத்திலோ, மடத்திலோ, அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், ஆகியவைகளிலோ பணத்தை கட்டி 1000-பேருக்கு அன்னதானம் செய்தாலும் புண்ணியம் அக்கௌன்டிற்கு போகுமே தவிர பித்ருக்களின் அக்கௌன்டிற்கு போகாது*

சிரார்த்தத்திற்கு 15-நாட்கள் முன்பே நம் பித்ருக்கள் நம் வீட்டிற்கு வந்து விடுவதால் அந்த பித்ரு பஷத்தில் சிரார்த்தம் மறுநாள் வரை வீட்டில் சிரார்த்த கறிகாய்களே சமைக்க வேண்டும். வெங்காயம் பூண்டு முருங்கை கத்திரி முதலியவை தவிர்க்க வேண்டும்.சவரம் செய்து கொள்ள கூடாது.அதற்கு பித்ருதீஷை என்று பெயர் இவைகளின் மூலம் குடும்பத்தில் பித்ருக்கள் ப்ரீதியடைந்து மனம் குளிர்ந்து அனுக்ரஹம் செய்வார்கள்...

சிரார்த்தம் செய்வதன் பலனாக குடும்பத்தில் ஒரு குறையும் இருக்காது.
திருமண தடை, குழந்தை பாக்கிய தடை ஆகிய அனைத்து தடைகளும் நீங்கும்.

குலதேவதையும் பித்ருதேவதையும் நம் இரண்டு கண்கள்

நமக்காக தன் வாழ்க்கையையே
அர்ப்பணம் செய்தவர்களுக்கு
தர்ப்பணம் செய்வோம்.
முன்னோர்களை வழிபட்டால்
முன்னேற்றம் வந்து சேரும்.
பித்ருக்களுக்கு தவறாமல்
திதி கொடுத்தால்
விதி மாறும்...

நாம் அவர்களுக்கு கொடுப்பதோ ஜலம்
அவர்கள் நமக்களிப்பதோ நலம்.

அவர்களை என்றும் வருவோம் வலம்
அவர்கள் நமக்களிப்பார்கள் வளம்.

இறந்தவர்களுக்கு செய்வதே 
இருப்பவர்களுக்கு நலம்

பித்ருக்களின் பலம் இருந்தால்
சத்ருக்களின் பலம் குறையும்.

Sunday, June 6, 2021

சூரிய கிரகணம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்.

சூரிய கிரகணம் - 10-06-2021

பிலவ வருடம் வைகாசி மாதம் 27ஆம் தேதி (10-06-2021) வியாழக்கிழமை ஒரு கங்கண சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதுபற்றி யூடியூப்பில் ஜோதிடர்கள் பதிவிட்ட சில காணொளிகளை பார்க்க நேர்ந்தது.அதில் ஒரு காணொளியில் காலை 8-11 மணிக்கு தொடங்கி பகல் 1-12 மணி வரை கிரகணம் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. மற்றொரு காணொளியில் பகல் 1-42 முதல் மாலை 6-41 வரை கிரகணம் நடைபெறும் என்றும் சில நக்ஷத்திர, ராசியினருக்கு பாதிப்பு எனவும் சொன்னார்கள்.இப்படி பலரும் பலவிதமாக குழப்புவதால், சரியான தகவலை உங்களுக்கு தருவதற்காகவே இந்தப் பதிவு.

இந்த சூரிய கிரகணமானது 23-38 வடக்கு அக்ஷாம்சம், 44-00 மேற்கு ரேகாம்சம் அமைந்துள்ள இடத்தில் பிற்பகல் இந்திய நேரப்படி 01:42:19 மணிக்கு ஆரம்பம். கிரகண முடிவு மாலை 06:40:54 மணிக்கு 41-26 வடக்கு அக்ஷாம்சம்,94-20 கிழக்கு ரேகாம்சம் உள்ள பகுதியில் முடிவடைகிறது. இதில் எந்த இடத்திலும் இந்திய பகுதிக்குள் வரவில்லை. எனவே, இந்த கிரகணம் இந்தியாவில் எந்த பகுதியிலும் எள்ளளவு கூட தெரியாது.

ஒரு கிரகணமானது எந்த ஊரில் தெரியாதோ அந்த ஊருக்கு கிரகண தோஷம் கிடையாது. அந்த ஊரில் வசிக்கும் யாருக்கும், எந்த நக்ஷத்திரக் காரர்களுக்கும், எந்த ராசிக்காரர்களுக்கும் கிரகண தோஷமோ பாதிப்போ கிடையாது. உதாரணமாக, ஒரு கிரகணம் சென்னையில் தெரியும் என்றும், செங்கல்பட்டில் தெரியாது என்றும் வைத்துக்கொள்வோம். அப்போது சென்னையில் உள்ளவர்களுக்கு கிரகண தோஷம் உண்டு. அங்கு வசிப்பவர்கள் கிரகண தர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும், கிரகணம் சம்பவித்த நக்ஷத்திரம், அதன் திரிகோண நக்ஷத்திரம், கிரகணம் சம்பவித்த நக்ஷத்திரத்திற்கு முன் பின் நக்ஷத்திரம் ஆகியவற்றை ஜென்ம நக்ஷத்திரமாக கொண்டவர்கள் கிரகண சாந்தி செய்துகொள்ள வேண்டும். ஆனால் செங்கல்பட்டில் கிரகணம் தெரியாததால், அங்கு வசிப்பவர்களுக்கு கிரகண தோஷம் கிடையாது. அவர்கள் எந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களாயினும் அவர்களுக்கு எந்த தோஷமோ பாதிப்போ கிடையாது. அதுமட்டுமல்ல, அங்கு வசிக்கும் யாரும் கிரகண தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை.

அதுபோலவே, இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாத காரணத்தால், இங்கு உள்ள யாருக்கும் கிரகண தோஷமோ பாதிப்போ கிடையாது. கிரகண தர்ப்பணமும் செய்ய வேண்டியதில்லை. யாராவது முகநூலிலோ யூடியூப்பிலோ ஏன் தொலைக்காட்சியிலோ கூட இந்த கிரகணத்தால் இன்னின்ன நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பாதிக்கும், இன்னின்ன ராசியில் பிறந்தவர்களுக்கு பாதிக்கும் என்று சொன்னால் அதை நம்பாதீர்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று சிலர் இந்த கிரகணத்தால் நமது நாட்டிற்கு பாதிப்பு வரும் என்று கூட சொல்வார்கள். அதையும் நம்ப வேண்டாம்.

இந்தியாவில் தெரியாத இந்த கிரகணத்தால், இங்குள்ள யாருக்கும், எந்த நக்ஷத்திரத்தில் பிறந்திருந்தாலும், எந்த ராசியில் பிறந்திருந்தாலும் பாதிப்பில்லை; ஆண்களுக்கோ பெண்களுக்கோ பாதிப்பில்லை; வாலிபர்களுக்கும் பாதிப்பில்லை; வயதானவர்களுக்கும் பாதிப்பில்லை; கன்னிப்பெண்களுக்கும் பாதிப்பில்லை; கர்ப்பிணி பெண்களுக்கும் பாதிப்பில்லை. கர்ப்பிணிகள் தாராளமாக வெளியில் வரலாம். எப்போதும் போல் இயல்பாக எல்லோரும் அவரவர் பணிகளை செய்யலாம்.
ஜூன் 10 அன்று சூரிய கிரகணம் கிடையாது.
🌹🦚🙏🏻MPK🙏🏻🦚🌹