பணத்தை சம்பாதிப்பது கஷ்டம் என்றால் அதைவிட அதை சேமிப்பது மிகவும் கஷ்டம். பணத்தை எங்கு வேண்டுமானாலும் வைக்க கூடாது.
பணம் வீட்டில் அதிகம் சேர முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது என்ன தெரியுமா? பணம் வைக்க பெட்டி ஒன்றை ஏற்படுத்துவது. அதாவது பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். மரபெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. நீங்கள் 10,000 சம்பதிப்பவராக இருந்தாலும் சரி, 10,0000 சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்ததும் இந்த பெட்டியில் வைத்து விடுங்கள். இந்த பெட்டியை எங்கே வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்க வேண்டும்? வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகிறது? இது போன்ற தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள்.
பெட்டியில் பணத்தை வைச்சா மட்டும் பணம் பெருகிடுமானு கேட்கலாம்!! ஆமாம் பெருகும். உதாரணத்திற்கு சாதாரணமாக உங்களால் சில்லறைகள் கூட சேமிக்க முடியாது. ஆனால் அதுவே ஒரு உண்டியல் வாங்கி வீட்டில் வைத்து பாருங்கள். கட கடவென சில்லறைகள், நோட்டுகள் என்று ஆர்வமாக போட்டு கொண்டு வருவோம். சிறிது காலத்திலேயே அந்த உண்டியலும் நிரம்பிவிடும். இதெல்லாம் புரியாத டிரிக்ஸ். ஜோதிடத்தில் இதனை வாஸ்து என்கிறார்கள். வாஸ்துவில் இதனை பண ஈர்ப்பு விதி என்கிறார்கள். ஒரு பொருளை நீங்கள் வைக்கும் திசை உங்கள் வாழ்க்கையில் சில மாறுதல்களை உண்டு பண்ணும். உளவியல், அறிவியல், ஆன்மீகம் அல்லது ஜோதிடம் எந்த பேரில் சொன்னாலும் பலன் மட்டும் உண்டு.
செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரன் ஒருவரது வீட்டில் வடக்கு திசையில் தான் அமர்கிறார். எனவே செல்வம் நிலைக்க மென்மேலும் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களது பணப்பெட்டியை வடக்கு திசையில் வைப்பது நல்லது. பணப்பெட்டி அல்லது பீரோ இவற்றில் தான் பணத்தை வைக்க வேண்டும். ஒரு சிலர் என்ன செய்வார்கள் என்றால், பணத்தை சமையல் அறையில் கொண்டு போய் வைப்பார்கள். இன்னும் சிலர் பணம், நகைகளை பரண்மேல் கூட வைப்பார்கள். அவ்வாறு வைப்பதும் சரியான முறை அல்ல. பணத்தைப் பணமாக மட்டும் பார்க்காமல் மகாலட்சுமி ஆக பார்க்க வேண்டும். அதற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். பணத்தை சுற்றிலும் தெய்வீக மணம் வீச வேண்டும். பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லக்ஷ்மி அம்சம் பொருந்திய பொருட்களை வாசனைக்காக வைத்துக்கொண்டால் செல்வம் நிலையாக தங்கும்.
வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் இடம்பெற்றுள்ளன. நீங்கள் பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும். நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கை ஆனது வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், நீங்கள் பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக் கொள்வது நல்லது.
பணம் வைப்பதற்கான மிகச்சரியான திசை என்றால் வடக்கு திசை தான். அறையின் 4 மூலைகளில் கட்டாயம் பணத்தை வைக்கக்கூடாது. அதாவது வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற மூலைகளில் பணத்தை வைப்பது கூடாது. தெற்கு திசையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இந்த திசைகளில் எல்லாம் நீங்கள் பணம் வைத்திருந்தால், உங்களது வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் குறையும். கையில் இருக்கும் பணம் விரைவாக செலவாகிவிடும். சேமிப்பதற்கு வாய்ப்புகள் அமையாது.
பணம் வைத்திருக்கும் இடமானது நுழைவு வாயிலை பார்த்தவாறு கட்டாயம் இருக்கக் கூடாது. வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்கவேண்டும். அதேபோல் பூஜையறையில் சிலர் பணத்தை வைத்திருப்பார்கள். இதுவும் தவறான முறையாகும். பூஜை அறையிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்வது போல் வைத்துக் கொள்ளாதீர்கள். இதுவும் பணம் தங்காமல் போவதற்கு காரணமாக இருக்கும். வீட்டின் நுழைவு வாயில், சமையலறை, குளியலறை, கழிவறை, மாடிபடிக்கட்டுகள் இவற்றையும் நோக்கியபடி பணத்தை வைக்கக்கூடாது. பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். பூச்சிகள் வரும்படி விட்டுவிட கூடாது..
பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் மணி பர்ஸிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபரிடமிருந்து அல்லது உங்கள் வளர்ச்சியை பார்த்து பெருமைப்படும் நபரிடமிருந்து இந்த ஒரு ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
பணம் என்பது நிலையான ஒரு பொருள் அல்ல. இன்று இருக்கும் நாளை இல்லாமல் போகும். எவ்வளவு தான் பணம் வைத்திருந்தாலும் நொடிகளில் செலவு செய்து விடலாம். ஆனால் அதை ஈட்டுவதற்கு பெரும்பாடு பட வேண்டும் ஒரு சிலர் அவன் நிறைய பணம் வைத்திருக்கிறான், எப்படித்தான் இவ்வளவு பணம் சம்பாதித்தானோ என்று கண் வைப்பார்கள். இவ்வாறு நினைப்பதும் தவறான செயலாகும். பணம் சம்பாதிக்க அறிவும், திறமையும் இங்கே மூலதனமாக வைக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் நீங்கள் சம்பாதிக்கும் பணம் வீண் போவதில்லை. அடுத்தவர்கள் பேசுவதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. விடாமுயற்சியில் முன்னேறுங்கள். ஈட்டிய செல்வத்தை நிலைக்குமாறு வழி செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment