Monday, December 20, 2021

ஒரு காலத்தில் தமிழ்நாடு உலகத்திலேயே மிகப் பெரிய பணக்கார நாடு

உலகத்திலேயே மிகவும் 
பணக்கார நாடு.

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

ஏன் கோவிலை கட்டினார்கள்?

இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?

பாரதத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ?

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் இந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

சிலைகள் செய்யவும், தங்க நகைகள் செய்வும் அதற்கு ஒரு சமூகம்

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் இந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம், 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.*

Wednesday, December 15, 2021

தமிழன் தமிழ் மொழி பெருமையை படியுங்கள்.

● சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன்தான்.

● மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன்தான்.

● மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன்தான்.

● ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன்தான்.

● பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியதுதான்

● இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ்தான் இருக்கிறது.

● மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

● சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

● கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.

● ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.

● பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலி நடத்தப்படும் மொழியும் தமிழ் தான்.

● சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ், இலங்கை நாடுகளின் காசுகளிலும் எழுதப்பட்டிருக்கும் ஒரே இந்திய மொழி தமிழ் தான்.

● ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே இந்திய மொழியான தகுதியுடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.

● 12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்து இருக்கின்றன.

● 200 நாடுகளிலும் வாழும் ஒரே இனம் உலகிலே தமிழ் இனம் மட்டும் தான்..

● இதில் பல நாடுகளில் இந்திய தூதர்களாக இருப்பது தமிழர்கள் தான்.

உலகத்துடன் உண்மையாகவே இணைந்திருந்து இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் இந்திய நாடு முழுவதும் தமிழைப் பாட மொழியாக வையுங்கள். இந்தியாவை உலகிற்கு தமிழ் அடையாளப்படுத்தும்.

Thursday, December 9, 2021

1008 சிவலிங்கத்தின் பெயர் உங்களுக்கு தெரியுமா?

#1008_லிங்கங்கள்

1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி லிங்கம் 11 அங்கு லிங்கம் 12 அசரிய லிங்கம் 13 அசுர லிங்கம் 14 அசை லிங்கம் 15 அசோக லிங்கம் 16 அச்சு லிங்கம் 17 அஞ்சா லிங்கம் 18 அட்ட லிங்கம் 19 அட்ச லிங்கம் 20 அட்சதை லிங்கம் 21 அட்டோ லிங்கம் 22 அடிமுடி லிங்கம் 23 அடி லிங்கம் 24 அணணா லிங்கம் 25 அண்ட லிங்கம் 26 அணி லிங்கம் 27 அணு லிங்கம் 28 அத்தி லிங்கம் 29 அதழ் லிங்கம் 30 அதிபதி லிங்கம் 31 அதிர்ஷ்ட லிங்கம் 32 அதிய லிங்கம் 33 அதிசய லிங்கம் 34 அதீத லிங்கம் 35 அந்தார லிங்கம் 36 அந்தி லிங்கம் 37 அநந்தசாயி லிங்கம் 38 அநலி லிங்கம் 39 அநேக லிங்கம் 40 அப்ப லிங்கம் 41 அப்பு லிங்கம் 42 அபய லிங்கம் 43 அபி லிங்கம் 44 அபிநய லிங்கம் 45 அபிஷேக லிங்கம் 46 அம்பல லிங்கம் 47 அம்பி லிங்கம் 48 அம்புசி லிங்கம் 49 அம்ம லிங்கம் 50 அமல லிங்கம் 51 அமர லிங்கம் 52 அமராவதி லிங்கம் 53 அமிர்த லிங்கம் 54 அர்ச்சனை லிங்கம் 55 அர்ச்சுண லிங்கம் 56 அர்த்த லிங்கம் 57அரச லிங்கம் 58 அரவ லிங்கம் 59 அரங்க லிங்கம் 60 அரம்பை லிங்கம் 61 அரளி லிங்கம் 62 அரி லிங்கம் 63 அரிணி லிங்கம் 64 அரிமா லிங்கம் 65 அருக லிங்கம் 66 அருணை லிங்கம் 67 அருமணி லிங்கம் 68 அரும்பு லிங்கம் 69 அருளி லிங்கம் 70 அரூப லிங்கம் 71 அல்லி லிங்கம் 72 அலை லிங்கம் 73 அவைய லிங்கம் 74 அழகு லிங்கம் 75 அளத்தி லிங்கம் 76 அற லிங்கம் 77 அறிவு லிங்கம் 78 அன்பு லிங்கம் 79 அன்புரு லிங்கம் 80 அன்ன லிங்கம் 81 அனுதாபி லிங்கம் 82 அனுபூதி லிங்கம் 83 அஷ்ட லிங்கம் 84 ஆக்கை லிங்கம் 85 ஆகம லிங்கம் 86ஆகாய லிங்கம் 87 ஆசான லிங்கம் 88 ஆசிரிய லிங்கம் 89 ஆசி லிங்கம் 90 ஆட லிங்கம் 91 ஆடரி லிங்கம் 92 ஆண் லிங்கம் 93 ஆண்டி லிங்கம் 94 ஆணுரு லிங்கம் 95 ஆத்ம லிங்கம் 96 ஆதார லிங்கம் 97 ஆதி லிங்கம் 98 ஆதிரி லிங்கம் 99 ஆதிசேவி லிங்கம் 100 ஆதிரை லிங்கம் 101 ஆதினா லிங்கம் 102 ஆபேரி லிங்கம் 103 ஆமிர லிங்கம் 104 ஆமை லிங்கம் 105 ஆய லிங்கம் 106 ஆயதி லிங்கம் 107 ஆர்த்தி லிங்கம் 108 ஆரண்ய லிங்கம் 109 ஆரண லிங்கம் 110 ஆராதனை லிங்கம் 111 ஆராபி லிங்கம் 112 ஆரூர லிங்கம் 113 ஆரோக்ய லிங்கம் 114 ஆலகால லிங்கம் 115 ஆலவாய் லிங்கம் 116 ஆலால லிங்கம் 117 ஆலி லிங்கம் 118 ஆவார லிங்கம் 119 ஆவி லிங்கம் 120 ஆவே லிங்கம் 121 ஆவுடை லிங்கம் 122 ஆழி லிங்கம் 123 ஆனந்த லிங்கம் 124 இக்கு லிங்கம் 125 இசை லிங்கம் 126 இடப லிங்கம் 127 இணை லிங்கம் 128 இதய லிங்கம் 129 இந்திர லிங்கம் 130 இமய லிங்கம் 131 இமை லிங்கம் 132 இரட்டை லிங்கம் 133 இராம லிங்கம் 134 இலக்கிய லிங்கம் 135 இலாப லிங்கம் 136 இளைய லிங்கம் 137 இறவா லிங்கம் 138 இறை லிங்கம் 139 இனிமை லிங்கம் 140 ஈகை லிங்கம் 141 ஈசான்ய லிங்கம் 142 ஈட லிங்கம் 143 ஈடண லிங்கம் 144 ஈடித லிங்கம் 145 ஈடிலி லிங்கம் 146 ஈர்ப்பு லிங்கம் 147 ஈழ லிங்கம் 148 ஈஸ்வர லிங்கம் 149 ஈஸ்வரி லிங்கம் 150 உக்ர லிங்கம் 151 உச்சி லிங்கம் 152 உசித லிங்கம் 153 உடம்பி லிங்கம் 154 உடுக்கை லிங்கம் 155 உணர் லிங்கம் 156 உத்தம லிங்கம் 157 உத்ராட்ச லிங்கம் 158 உதய லிங்கம் 159 உதிர லிங்கம் 160 உப்பிலி லிங்கம் 161 உப்பு லிங்கம் 162 உப லிங்கம் 163 உபதேச லிங்கம் 164 உபய லிங்கம் 165 உமா லிங்கம் 166 உமை லிங்கம் 167 உயிர் லிங்கம் 168 உரி லிங்கம் 169 உரு லிங்கம் 170 உருணி லிங்கம் 171 உருமணி லிங்கம் 172 உவப்பு லிங்கம் 173 உழவு லிங்கம் 174 உழுவை லிங்கம் 175 உற்சவ லிங்கம் 176 உன்னி லிங்கம் 177 ஊக்க லிங்கம் 178 ஊசி லிங்கம் 179 ஊதா லிங்கம் 180 ஊருணி லிங்கம் 181 ஊழி லிங்கம் 182 ஊற்று லிங்கம் 183 எட்டி லிங்கம் 184 எட்டு லிங்கம் 185 எதனா லிங்கம் 186 எந்தை லிங்கம் 187 எம லிங்கம் 188 எருது லிங்கம் 189 எல்லை லிங்கம் 190 எளிய லிங்கம் 191 எழிலி லிங்கம் 192 எழுத்தறி லிங்கம் 193 என்குரு லிங்கம் 194 ஏக லிங்கம் 195 ஏகம லிங்கம் 196 ஏகா லிங்கம் 197 ஏகாம்பர லிங்கம் 198 ஏகாந்த லிங்கம் 199 ஏடக லிங்கம் 200 ஏந்திழை லிங்கம் 201 ஏம லிங்கம் 202 ஏர் லிங்கம் 203 ஏரி லிங்கம் 204 ஏவச லிங்கம் 205 ஏழிசை லிங்கம் 206 ஏறு லிங்கம் 207 ஏனாதி லிங்கம் 208 ஐங்கர லிங்கம் 209 ஐய லிங்கம் 210 ஐராவத லிங்கம் 211 ஒப்பிலா லிங்கம் 212 ஒப்பிலி லிங்கம் 213 ஒருமை லிங்கம் 214 ஒளி லிங்கம் 215 ஓசை லிங்கம் 216 ஓடேந்தி லிங்கம் 217 ஓம் லிங்கம் 218 ஓம்கார லிங்கம் 219 ஓவிய லிங்கம் 220 ஔடத லிங்கம் 221 ஔவை லிங்கம் 222 கங்கா லிங்கம் 223 கச்ச லிங்கம் 224 கண்ட லிங்கம் 225 கடம்ப லிங்கம் 226 கடார லிங்கம் 227 கடிகை லிங்கம் 228 கடை லிங்கம் 229 கதிர் லிங்கம் 230 கதலி லிங்கம் 231 கந்த லிங்கம் 232 கபால லிங்கம் 233 கபில லிங்கம் 234 கமல லிங்கம் 235 கயா லிங்கம் 236 கயிலை லிங்கம் 237 கர்ண லிங்கம் 238 கர்ப்ப லிங்கம் 239 கரண லிங்கம் 240 கரு லிங்கம் 241 கருட லிங்கம் 242 கருமை லிங்கம் 243 கருணை லிங்கம் 244 கல்ப லிங்கம் 245 கல்வி லிங்கம் 246 கலி லிங்கம் 247கலை லிங்கம் 248 கவி லிங்கம் 249 கற்பக லிங்கம் 250 கற்பூர லிங்கம் 251 கன்னி லிங்கம் 252 கன லிங்கம் 253 கனக லிங்கம் 254 கனி லிங்கம் 255 கஸ்தூரி லிங்கம் 256 கஜ லிங்கம் 257 கருணாகர லிங்கம் 258 காசி லிங்கம் 259 காஞ்சி லிங்கம் 260 காடக லிங்கம் 261 காத்த லிங்கம் 262 காதம்பரி லிங்கம் 263 காந்த லிங்கம் 264 காப்பு லிங்கம் 265 காம லிங்கம் 266 கார் லிங்கம் 267கார்த்திகைலிங்கம் 268 காரண லிங்கம் 269 கால லிங்கம் 270 காவி லிங்கம் 271காவிய லிங்கம் 272 காவேரி லிங்கம் 273 காளி லிங்கம் 274 காளத்தி லிங்கம் 275 காளை லிங்கம் 276 கான லிங்கம் 277கிண்கிணி லிங்கம் 278 கிரி லிங்கம் 279 கிரியை லிங்கம் 280 கிரீட லிங்கம் 281 கிருப லிங்கம் 282 கிள்ளை லிங்கம் 283 கீத லிங்கம் 284 கீர்த்தி லிங்கம் 285 கீர்த்தன லிங்கம் 286 குக லிங்கம் 287 குங்கும லிங்கம் 288 குஞ்சு லிங்கம் 289 குட லிங்கம் 290 குடுமி லிங்கம் 291 குண லிங்கம் 292 குணக்ரி லிங்கம் 293 குபேர லிங்கம் 294 குருதி லிங்கம் 295 குமர லிங்கம் 296 குமரி லிங்கம் 297 குமுத லிங்கம் 298 குல லிங்கம் 299 குழலி லிங்கம் 300 குழவி லிங்கம் 301 குழை லிங்கம் 302 குற்றால லிங்கம் 303 குன்று லிங்கம் 304 குண்டலி லிங்கம் 305 குந்த லிங்கம் 306 கும்ப லிங்கம் 307 குரவ லிங்கம் 308 குறிஞ்சி லிங்கம் 309 கூததாடி லிங்கம் 310 கூத்து லிங்கம் 311 கூர்ம லிங்கம் 312 கெஜ லிங்கம் 313 கேச லிங்கம் 314 கேசரி லிங்கம் 315 கேசவ லிங்கம் 316 கேடிலி லிங்கம் 317 கேதார் லிங்கம் 318 கேள்வி லிங்கம் 319 கைலாய லிங்கம் 320 கொங்கு லிங்கம் 321 கொடி லிங்கம் 322 கொடு லிங்கம் 323 கொளஞ்சி லிங்கம் 324 கொற்றை லிங்கம் 325 கொன்றை லிங்கம் 326 கோ லிங்கம் 327 கோகழி லிங்கம் 328 கோகுல லிங்கம் 329 கோட்டை லிங்கம் 330 கோடி லிங்கம் 331 கோண் லிங்கம் 332 கோண லிங்கம் 333 கோதண்ட லிங்கம் 334 கோதை லிங்கம் 335 கோப லிங்கம் 336 கோபி லிங்கம் 337 கோமதி லிங்கம் 338 கோல லிங்கம் 339 கௌசிக லிங்கம் 340 கௌதம லிங்கம் 341 கௌரி லிங்கம் 342 சக்தி லிங்கம் 343 சக்கர லிங்கம் 344 சகஸ்ர லிங்கம் 345 சகல லிங்கம் 346 சங்க லிங்கம் 347 சங்கம லிங்கம் 348 சங்கர லிங்கம் 349 சங்கு லிங்கம் 350 சஞ்சீவி லிங்கம் 351 சடாட்சர லிங்கம் 352 சடைமுடி லிங்கம் 353 சண்முக லிங்கம் 354 சத்திய லிங்கம் 355 சதங்கை லிங்கம் 356சதய லிங்கம் 357 சதா லிங்கம் 358 சதாசிவ லிங்கம் 359 சதுர் லிங்கம் 360 சதுர்த்தி லிங்கம் 361 சதுரங்க லிங்கம் 362 சதுரகிரி லிங்கம் 363 சந்த லிங்கம் 364 சந்திர லிங்கம் 365 சந்தன லிங்கம் 366 சந்தான லிங்கம் 367 சப்த லிங்கம் 368 சபா லிங்கம் 369 சம்பந்த லிங்கம் 370 சம்பு லிங்கம் 371 சமுத்திர லிங்கம் 372 சயன லிங்கம் 373 சர்வேஸ லிங்கம் 374 சரச லிங்கம் 375 சரீர லிங்கம் 376 சவரி லிங்கம் 377 சற்குண லிங்கம் 378 சஹான லிங்கம் 379 சற்குரு லிங்கம் 380 சாட்சி லிங்கம் 381 சாணக்ய லிங்கம் 382 சாதக லிங்கம் 383 சாதனை லிங்கம் 384 சாதி லிங்கம் 385 சாது லிங்கம் 386 சாந்த லிங்கம் 387 சாந்து லிங்கம் 388 சாம்ப லிங்கம் 389 சாமுண்டி லிங்கம் 390 சிகர லிங்கம் 391 சிகா லிங்கம் 392 சிகரி லிங்கம் 393 சிகை லிங்கம் 394 சிங்கார லிங்கம் 395 சிசு லிங்கம் 396 சித்தி லிங்கம் 397 சித்திரை லிங்கம் 398 சிந்தாமணிலிங்கம் 399 சிந்து லிங்கம் 400 சிநேக லிங்கம் 401 சிப்பி லிங்கம் 402 சிபி லிங்கம் 403 சிம்ம லிங்கம் 404 சிர லிங்கம் 405 சிரஞ்சீவி லிங்கம் 406 சிரபதி லிங்கம் 407 சிருஷ்டி லிங்கம் 408 சிலம்பு லிங்கம் 409 சிவ லிங்கம் 410 சிவகதி லிங்கம் 411 சிவாய லிங்கம் 412 சிற்பவ லிங்கம் 413 சினை லிங்கம் 414 சிஷ்ட லிங்கம் 415 சீதன லிங்கம் 416 சீதாரி லிங்கம் 417 சீமை லிங்கம் 418 சீர்மை லிங்கம் 419 சீற்ற லிங்கம் 420 சீனி லிங்கம் 421 சுக்கிர லிங்கம் 422 சுக லிங்கம் 423 சுகந்த லிங்கம் 424 சுகநிதி லிங்கம் 425 சுகுண லிங்கம் 426 சுடர் லிங்கம் 427 சுத்த லிங்கம் 428 சுதர்சண லிங்கம் 429 சுந்தர லிங்கம் 430 சுந்தரி லிங்கம் 431 சுப்பு லிங்கம் 432 சுமித்ர லிங்கம் 433 சுய லிங்கம் 434 சுயம்பு லிங்கம் 435 சுரபி லிங்கம் 436 சுருதி லிங்கம் 437 சுருளி லிங்கம் 438 சுரை லிங்கம் 439 சுவடி லிங்கம் 440 சுவடு லிங்கம் 441 சுவர்ண லிங்கம் 442 சுவாச லிங்கம் 443 சுவாதி லிங்கம் 444 சுனை லிங்கம் 445 சூட்சம லிங்கம் 446 சூர லிங்கம் 447 சூரி லிங்கம் 448 சூரிய லிங்கம் 449 சூல லிங்கம் 450 சூள்முடி லிங்கம் 451 சூளாமணி லிங்கம் 452 செக்கர் லிங்கம் 453 செங்கு லிங்கம் 454 செண்பக லிங்கம் 455 செந்தூர லிங்கம் 456 செம்ம லிங்கம் 457 செம்பாத லிங்கம் 458 செரு லிங்கம் 459 செருக்கு லிங்கம் 460 செல்வ லிங்கம் 461 செழுமை லிங்கம் 462 சேகர லிங்கம் 463 சேலிங்கம் 464 சேது லிங்கம் 465 சேர்ப்பு லிங்கம் 466 சேற்று லிங்கம் 467 சைல லிங்கம் 468 சைவ லிங்கம் 469 சொக்க லிங்கம் 470 சொப்பன லிங்கம் 471 சொர்க்க லிங்கம் 472 சொரூப லிங்கம் 473 சோம லிங்கம் 474 சோண லிங்கம் 475 சோபன லிங்கம் 476 சோலை லிங்கம் 477 சோழ லிங்கம் 478 சோழி லிங்கம் 479 சோற்று லிங்கம் 480 சௌந்தர்ய லிங்கம் 481 சௌந்தர லிங்கம் 482 ஞான லிங்கம் 483 தகழி லிங்கம் 484 தகு லிங்கம் 485 தங்க லிங்கம் 486 தச லிங்கம் 487 தட்சண லிங்கம் 488 தடாக லிங்கம் 489 தத்துவ லிங்கம் 490 தந்த லிங்கம் 491 தந்திர லிங்கம் 492 தமிழ் லிங்கம் 493 தர்பை லிங்கம் 494 தர்ம லிங்கம் 495 தருண லிங்கம் 496 தவ லிங்கம் 497 தளிர் லிங்கம் 498 தன லிங்கம் 499 தனி லிங்கம் 500 தவசி லிங்கம் 501 தாண்டக லிங்கம் 502 தாண்டவ லிங்கம் 503 தாமு லிங்கம் 504 தாய் லிங்கம் 505 தார லிங்கம் 506 தாழி லிங்கம் 507 தாழை லிங்கம் 508 தாள லிங்கம் 509 தான்ய லிங்கம் 510 தாரகை லிங்கம் 511 திக்கு லிங்கம் 512 திகம்பர லிங்கம் 513 திகழ் லிங்கம் 514 தியாக லிங்கம் 515 தியான லிங்கம் 516 திரி லிங்கம் 517 திரிபுர லிங்கம் 518 திரு லிங்கம் 519 திருமேனி லிங்கம் 520 திருவடி லிங்கம் 521 திருவாசக லிங்கம் 522 திருவாத லிங்கம் 523 திலக லிங்கம் 524 திவ்ய லிங்கம் 525 தீ லிங்கம் 526 தீட்சை லிங்கம் 527 தீர்க்க லிங்கம் 528 தீர்த்த லிங்கம் 529 தீப லிங்கம் 530 தீர லிங்கம் 531 தீர்ப்பு லிங்கம் 532 துதி லிங்கம் 533 துர்கை லிங்கம் 534 துருவ லிங்கம் 535 துலா லிங்கம் 536 துளசி லிங்கம் 537 துறவு லிங்கம் 538 தூங்கா லிங்கம் 539 தூண்டா லிங்கம் 540 தூமணி லிங்கம் 541 தூய லிங்கம் 542 தூளி லிங்கம் 543 தெங்கு லிங்கம் 544 தெய்வ லிங்கம் 545 தெரிவை லிங்கம் 546 தெளி லிங்கம் 547 தென்னவ லிங்கம் 548 தேக லிங்கம் 549 தேகனி லிங்கம் 550 தேகி லிங்கம் 551 தேச லிங்கம் 552 தேசு லிங்கம் 553 தேயு லிங்கம் 554 தேர லிங்கம் 555 தேவ லிங்கம் 556 தேவபத லிங்கம் 557 தேவாதி லிங்கம் 558 தேவு லிங்கம் 559 தேன் லிங்கம் 560 தேன்மணி லிங்கம் 561 தேன லிங்கம் 562 தேனுக லிங்கம் 563 தைரிய லிங்கம் 564 தொகை லிங்கம் 565 தொட்டி லிங்கம் 566 தொடி லிங்கம் 567 தொடைய லிங்கம் 568 தொண்டக லிங்கம் 569 தொண்டை லிங்கம் 570 தொல் லிங்கம் 571 தோகச லிங்கம் 572 தோண்டி லிங்கம் 573 தோணி லிங்கம் 574 தோத்திர லிங்கம் 575 தோரண லிங்கம் 576 தோரி லிங்கம் 577 தோழ லிங்கம் 578 தோன்ற லிங்கம் 579 தௌத லிங்கம் 580 தௌல லிங்கம் 581 நகமுக லிங்கம் 582 நகு லிங்கம் 583 நகை லிங்கம் 584 நங்கை லிங்கம் 585 நசை லிங்கம் 586 நஞ்சு லிங்கம் 587 நடன லிங்கம் 588 நடம்புரி லிங்கம் 589 நடு லிங்கம் 590 நதி லிங்கம் 591 நந்தி லிங்கம் 592 நம்பி லிங்கம் 593 நம லிங்கம் 594 நயன லிங்கம் 595 நர்மதை லிங்கம் 596 நலமிகு லிங்கம் 597 நவ லிங்கம் 598 நவமணி லிங்கம் 599 நவிர லிங்கம் 600 நற்குண லிங்கம் 601 நற்றுணை லிங்கம் 602 நறுமண லிங்கம் 603 நன்மணி லிங்கம் 604 நன்மை லிங்கம் 605 நனி லிங்கம் 606 நா லிங்கம் 607 நாக லிங்கம் 608 நாச்சி லிங்கம் 609 நாசி லிங்கம் 610 நாட லிங்கம் 611 நாடி லிங்கம் 612 நாத்திர லிங்கம் 613 நாத லிங்கம் 614 நாரண லிங்கம் 615 நாரணி லிங்கம் 616 நாரி லிங்கம் 617 நாபிச லிங்கம் 618 நாயன லிங்கம் 619 நாயாடி லிங்கம் 620 நாவ லிங்கம் 621 நாற்கர லிங்கம் 622 நான்மறை லிங்கம் 623 நான்முக லிங்கம் 624 நிகர் லிங்கம் 625 நித்தில லிங்கம் 626 நித்ய லிங்கம் 627 நிதர்சண லிங்கம் 628 நிதி லிங்கம் 629 நிபவ லிங்கம் 630 நிர்மல லிங்கம் 631 நிரஞ்சன லிங்கம் 632 நிரம்ப லிங்கம் 633 நிருதி லிங்கம் 634 நிமல லிங்கம் 635 நில லிங்கம் 636 நிலை லிங்கம் 637 நிவேத லிங்கம் 638 நிறை லிங்கம் 639 நிஜ லிங்கம் 640 நிசாக லிங்கம் 641 நீடு லிங்கம் 642 நீடுநீர் லிங்கம் 643 நீத்தவ லிங்கம் 644 நீதி லிங்கம் 645 நீர்ம லிங்கம் 646 நீரச லிங்கம் 647 நீரேறு லிங்கம் 648 நீல லிங்கம் 649 நீள்முடி லிங்கம் 650 நீறாடி லிங்கம் 651 நீறு லிங்கம் 652 நுதற் லிங்கம் 653 நுதி லிங்கம் 654 நூதன லிங்கம் 655 நெகிழ் லிங்கம் 656 நெஞ்சு லிங்கம் 657 நெட்ட லிங்கம் 658 நெடு லிங்கம் 659 நெய் லிங்கம் 660 நெற்றி லிங்கம் 661 நெறி லிங்கம் 662 நேச லிங்கம் 663 நேர் லிங்கம் 664 நைச்சி லிங்கம் 665 நைவேத்ய லிங்கம் 666 நொச்சி லிங்கம் 667 நோக்கு லிங்கம் 668 நோன்பு லிங்கம் 669 பசு லிங்கம் 670 பசுவ லிங்கம் 671 பசுபதி லிங்கம் 672 பஞ்ச லிங்கம் 673 பஞ்சாட்சர லிங்கம் 674 பட்டக லிங்கம் 675 படரி லிங்கம் 676 படிக லிங்கம் 677 பண்டார லிங்கம் 678 பண்டித லிங்கம் 679 பத்ம லிங்கம் 680 பத்ர லிங்கம் 681 பத்திர லிங்கம் 682 பதி லிங்கம் 683 பதிக லிங்கம் 684 பர்வத லிங்கம் 685 பரசு லிங்கம் 686 பரத லிங்கம் 687 பரம லிங்கம் 688 பரமாத்ம லிங்கம் 689 பரமேஸ்வர லிங்கம் 690 பரணி லிங்கம் 691 பரிதி லிங்கம் 692 பவண லிங்கம் 693 பவணி லிங்கம் 694 பவநந்தி லிங்கம் 695 பவழ லிங்கம் 696 பவாணி லிங்கம் 697 பவித்ர லிங்கம் 698 பளிங்கு லிங்கம் 699 பன்னக லிங்கம் 700 பனி லிங்கம் 701 பரகதி லிங்கம் 702 பராங்க லிங்கம் 703 பராபர லிங்கம் 704 பவநாச லிங்கம் 705 பா லிங்கம் 706 பாக்ய லிங்கம் 707 பாக லிங்கம் 708 பாச லிங்கம் 709 பாசறை லிங்கம் 710 பாசுர லிங்கம் 711 பாத லிங்கம் 712 பாதாள லிங்கம் 713 பாதி லிங்கம் 714 பாதிரி லிங்கம் 715 பார்வதி லிங்கம் 716 பாரதி லிங்கம் 717 பாராயண லிங்கம் 718 பாரி லிங்கம் 719 பாரிஜாத லிங்கம் 720 பாயிர லிங்கம் 721 பாலக லிங்கம் 723 பாலா லிங்கம் 723 பாவை லிங்கம் 724 பானு லிங்கம் 725 பாஷான லிங்கம் 726 பாகோட லிங்கம் 727 பாசுபத லிங்கம் 728 பாணிக லிங்கம் 729 பார்த்திப லிங்கம் 730 பாநேமி லிங்கம் 731 பாம்பு லிங்கம் 732 பாழி லிங்கம் 733 பிச்சி லிங்கம் 734 பிச்சை லிங்கம் 735 பிட்டு லிங்கம் 736 பிடரி லிங்கம் 737 பிடாரி லிங்கம் 738 பிடி லிங்கம் 739 பிண்ட லிங்கம் 740 பித்த லிங்கம் 741 பிதா லிங்கம் 742 பிம்ப லிங்கம் 743 பிரகதி லிங்கம் 744 பிரகாச லிங்கம் 745 பிரசன்ன லிங்கம் 746 பிரணவ லிங்கம் 747 பிரதர்சன லிங்கம் 748 பிரபாகர லிங்கம் 749 பிரபு லிங்கம் 750 பிரம்ம லிங்கம் 751 பிரம்பு லிங்கம் 752 பிரமிள லிங்கம் 753 பிராண லிங்கம் 754 பிராசித லிங்கம் 755 பிரிய லிங்கம் 756 பிரேம லிங்கம் 757 பிள்ளை லிங்கம் 758 பிழம்பு லிங்கம் 759 பிறவி லிங்கம் 760 பிறை லிங்கம் 761 பீச லிங்கம் 762 பீட லிங்கம் 763 பீடு லிங்கம் 764 பீத லிங்கம் 765 பீதகார லிங்கம் 766 பீதசார லிங்கம் 767 பீதமணி லிங்கம் 768 பீதாம்பர லிங்கம் 769 பீர லிங்கம் 770 பீம லிங்கம் 771 புகழ் லிங்கம் 772 புங்கவ லிங்கம் 773 புங்கவி லிங்கம் 774 புடக லிங்கம் 775 புண்ணிய லிங்கம் 776 புத்தி லிங்கம் 777 புத்ர லிங்கம் 778 புதிர் லிங்கம் 779 புது லிங்கம் 780 புரட்சி லிங்கம் 781 புரவு லிங்கம் 782 பராண லிங்கம் 783 புரி லிங்கம் 784 புருஷ லிங்கம் 785 புருவ லிங்கம் 786 புலரி லிங்கம் 787 புலி லிங்கம் 788 புவன லிங்கம் 789 புற்று லிங்கம் 790 புற லிங்கம் 791 புன்னை லிங்கம் 792 புனித லிங்கம் 793 புனை லிங்கம் 794 புஜங்க லிங்கம் 795 புஷ்கர லிங்கம் 796 புஷ்ப லிங்கம் 797 பூசனை லிங்கம் 798 பூத லிங்கம் 799 பூதர லிங்கம் 800 பூதி லிங்கம் 801 பூபதி லிங்கம் 802 பூபால லிங்கம் 803 பூதவணி லிங்கம் 804 பூர்ண லிங்கம் 805 பூர்த்தி லிங்கம் 806 பூர்வ லிங்கம் 807 பூரணி லிங்கம் 808 பூமித லிங்கம் 809 பூமுக லிங்கம் 810 பூவிழி லிங்கம் 811 பூலோக லிங்கம் 812 பூஜித லிங்கம் 813 பெண் லிங்கம் 814 பெண்பாக லிங்கம் 815 பெரு லிங்கம் 816 பேரின்ப லிங்கம் 817 பேழை லிங்கம் 818 பைரவி லிங்கம் 819பொன்னம்பலலிங்கம் 820 பொன்னி லிங்கம் 821 பொருந லிங்கம் 822 பொருப்பு லிங்கம் 823 பொழி லிங்கம் 824 பொய்கை லிங்கம் 825 போக லிங்கம் 826 போதக லிங்கம் 827 போதன லிங்கம் 828 போதி லிங்கம் 829 போற்றி லிங்கம் 830 போனக லிங்கம் 831 பௌதிக லிங்கம் 832பௌர்ணமி லிங்கம் 833 மகர லிங்கம் 834 மகவு லிங்கம் 835 மகா லிங்கம் 836 மகிழ லிங்கம் 837 மகுட லிங்கம் 838 மகுடி லிங்கம் 839 மகேச லிங்கம் 840 மகேஸ்வர லிங்கம் 841 மங்கள லிங்கம் 842 மஞ்சரி லிங்கம் 843 மஞ்சு லிங்கம் 844 மண லிங்கம் 845 மணி லிங்கம் 846 மதன லிங்கம் 847 மதி லிங்கம் 848 மந்தாரை லிங்கம் 849 மந்திர லிங்கம் 850 மயான லிங்கம் 851 மயூர லிங்கம் 852 மரகத லிங்கம் 853 மருக லிங்கம் 854 மருத லிங்கம் 855 மருது லிங்கம் 856 மலர் லிங்கம் 857 மழலை லிங்கம் 858 மவுலி லிங்கம் 859 மன்னாதி லிங்கம் 860 மனித லிங்கம் 861 மனோ லிங்கம் 862 மலை லிங்கம் 863 மாங்கல்ய லிங்கம் 864 மாசறு லிங்கம் 865 மாசி லிங்கம் 866 மாசிவ லிங்கம் 867 மாட்சி லிங்கம் 868 மாணிக்க லிங்கம் 869 மாதங்கி லிங்கம் 870 மாதவ லிங்கம் 871 மாதவி லிங்கம் 872 மாது லிங்கம் 873 மாதேவி லிங்கம் 874 மாமிச லிங்கம் 875 மாயை லிங்கம் 876 மாலை லிங்கம் 877 மார்க்க லிங்கம் 878 மிசை லிங்கம் 879 மிண்டை லிங்கம் 880 மீளி லிங்கம் 881 மீன லிங்கம் 882 முக்கனீ லிங்கம் 883 முக்தி லிங்கம் 884 முகுந்த லிங்கம் 885 முடி லிங்கம் 886 முத்து லிங்கம் 887 மும்மல லிங்கம் 888 முரசு லிங்கம் 889 முருக லிங்கம் 890 முல்லை லிங்கம் 891 முனி லிங்கம் 892 மூர்த்தி லிங்கம் 893 மூல லிங்கம் 894 மெய் லிங்கம் 895 மேக லிங்கம் 896 மேதினி லிங்கம் 897 மேவி லிங்கம் 898 மேனி லிங்கம் 899 மொழி லிங்கம் 900 மொட்டு லிங்கம் 901 மோட்ச லிங்கம் 902 மோன லிங்கம் 903 மோலி லிங்கம் 904 மௌன லிங்கம் 905 யதி லிங்கம் 906 யாக லிங்கம் 907 யாசக லிங்கம் 908 யாத்திரை லிங்கம் 909 யுக்தி லிங்கம் 910 யுவ லிங்கம் 911 யோக லிங்கம் 912 யோகி லிங்கம் 913 ரகசிய லிங்கம் 914 ரம்ய லிங்கம் 915 ரமண லிங்கம் 916 ரத்தின லிங்கம் 917 ரத லிங்கம் 918 ராக லிங்கம் 919 ராட்சச லிங்கம் 920 ராவண லிங்கம் 921 ராஜ லிங்கம் 922 ரிஷப லிங்கம் 923 ரிஷி லிங்கம் 924 ருத்ர லிங்கம் 925 ரூப லிங்கம் 926 ரௌத்திர லிங்கம் 927 லகரி லிங்கம் 928 லாவண்ய லிங்கம் 929 லீலா லிங்கம் 930 லோக லிங்கம் 931 வசந்த லிங்கம் 932 வஞ்சி லிங்கம் 933 வடுக லிங்கம் 934 வர்ம லிங்கம் 935 வர லிங்கம் 936 வருண லிங்கம் 937 வல்லப லிங்கம் 938 வழக்கு லிங்கம் 939 வள்ளுவ லிங்கம் 940 வளர் லிங்கம் 941 வன லிங்கம் 942 வனப்பு லிங்கம் 943 வஜ்ர லிங்கம் 944 வாகை லிங்கம் 945 வாசி லிங்கம் 946 வாணி லிங்கம் 947 வாயு லிங்கம் 948 வார்ப்பு லிங்கம் 949 வாழ்க லிங்கம் 950 வான லிங்கம் 951 வானாதி லிங்கம் 952 வார்சடை லிங்கம் 953 விக்ர லிங்கம் 954 விக்ரம லிங்கம் 955 விகட லிங்கம் 956 விகார லிங்கம் 957 விகிர்த லிங்கம் 958 வசித்ர லிங்கம் 959 விடங்க லிங்கம் 960 வித்தக லிங்கம் 961 விதி லிங்கம் 962 விது லிங்கம் 963 விந்தை லிங்கம் 964 விநாசக லிங்கம் 965 விபீஷ்ண லிங்கம் 966 விபூதி லிங்கம் 967 விமல லிங்கம் 968 வியூக லிங்கம் 969 விருட்சக லிங்கம் 970 வில்வ லிங்கம் 971 விளம்பி லிங்கம் 972 விழி லிங்கம் 973 வினைதீர் லிங்கம் 974 வினோத லிங்கம் 975 விஜய லிங்கம் 976 விஷ்ணு லிங்கம் 977 விஸ்வ லிங்கம் 978 விஸ்வேஸ்வரலிங்கம் 979 வீர லிங்கம் 980 வீணை லிங்கம் 981 வெற்றி லிங்கம் 982 வெற்பு லிங்கம் 983 வெள்ளி லிங்கம் 984 வேங்கட லிங்கம் 985 வேங்கை லிங்கம் 986 வேட்டுவ லிங்கம் 987 வேத லிங்கம் 988 வேதாந்த லிங்கம் 989 வேம்பு லிங்கம் 990 வேழ லிங்கம் 991 வேள்வி லிங்கம் 992 வைகை லிங்கம் 993 வைர லிங்கம் 994 வைத்திய லிங்கம் 995 வைய லிங்கம் 996 ஜடா லிங்கம் 997 ஜதி லிங்கம் 998 ஜல லிங்கம் 999 ஜீவ லிங்கம் 1000 ஜெக லிங்கம் 1001 ஜெய லிங்கம் 1002 ஜென்ம லிங்கம் 1003 ஜோதி லிங்கம் 1004 ஸ்ரீ லிங்கம் 1005 ஸோபித லிங்கம் 1006 ஹேம லிங்கம் 1007 ஐஸ்வர்ய லிங்கம் 1008 சுப லிங்கம்

Tuesday, December 7, 2021

எப்படி தூங்க வேண்டும் தெரியுமா? சித்தர் வழிகாட்டும் முறை.

#தூங்கும்முறை #பற்றி #சித்தர்கள் #கூறியது.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மல்லாந்து கால்களையும், கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

சித்தர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் நன்மைக்காகவே இருக்கும்…

நம் வாழ்க்கை நம் கையில்… நாம் எவ்வாறு நல் வழிகளை பின்பற்றுகிறோமோ அவ்வாரே நமக்கு நன்மைகளும் கிடைக்கும்….

Wednesday, December 1, 2021

அன்னக்காவடி என்றால் உண்மையான அர்த்தம் தெரியுமா?

#அன்னக்காவடி

வசதி வாய்ப்பு இல்லாதவா்களை 'அன்னக்காவடி' என்று சிலா் இழிக்கும் பழக்கம் உண்டு .

பலரும் நினைத்துக் கொண்டிருப்பது 
போல் 'அன்னக்காவடி' என்பது தவறான 
பொருள் தரும் வாா்த்தையல்ல .

'கா' என்றால் காப்பாற்றுதல் 'அடி' 
என்றால் முருகனின் திருவடி என்று 
பொருள் .

காவடி எடுத்தலில் பால்காவடி , பன்னீா்க் 
காவடி , புஷ்பக் காவடி , சந்தனக் காவடி 
என்று பல வகைகள் உண்டு .

இவற்றில் அன்னக்காவடியும் அடக்கம் .

இந்த அன்னக்காவடிக்கு ஒரு சின்ன 
வரலாறு உண்டு .

ஒரு காலத்தில் சென்னை இராயபுரத்தில் 
சாமியப்பக் கவிராயா் என்பவா் வாழ்ந்து 
வந்தாா் .

அவரது பரம்பரையே கவி பாடுவதில் 
புலமை பெற்றது . 'கவிராயா்' என்ற 
பட்டமே அவாின் குடும்பச் சொத்தாகவே 
இருந்தது .

அவரது மகனான துரைசாமிக் கவிராயா் 
பழனி முருகனை நினைந்து , மனம் 
கசிந்துருகி எத்தனையோ பாடல்களைப் 
பாடியிருக்கிறாா் .

அவா் பழனி முருகனின் திருவுருவப் 
படத்திற்கு தினமும் பக்தியுடன் 
மலா்மாலை சூட்டி , வழிபாடு செய்வாா் . 
தினந்தோறும் யாருக்கேனும் அன்னமிட்டபிறகே , தாம் உண்ணும் 
வழக்கத்தைக் கொண்டிருந்தாா் .

இந்நிலையில் , அவரது வருமானம் 
குறைந்தது . ஒரு கட்டத்தில் தன் 
மனைவியின் திருமாங்கல்யத்தை 
விற்று , அதனைக் கொண்டு 
அன்னதானத்தை விடாமல் செய்து 
வந்தாா் .

திடீரென அவரை நோய் வருத்தியது . 
பழனிமலை முருகன் அவரது 
துன்பத்தைப் போக்கி அருளினாா் .

துரைசாமிக் கவிராயா் பழனி 
முருகனுக்குக் காவடி எடுத்து வருவதாக
பிராா்த்தனை செய்து கொண்டாா் .

என்ன வேண்டுதல் தொியுமா ?

தமக்கு நோய் நீக்கி அருள்பாலித்த 
ஆறுமுகனுக்கு 'அன்னக்காவடி' 
சமா்ப்பிப்பதுதான் சாியான நோ்த்திக் 
கடன் என்பதுதான் அவரது எண்ணம் .

பேருந்து , ரயில் வசதி இல்லாத அந்தக் 
காலத்தில் , தோளில் அன்னக்காவடி 
சுமந்து 45 நாட்கள் பாதயாத்திரைக்குப் பின் , 

வறுமையிலிருந்த அவருக்கு 
கருணைக் கடவுளான கந்தன் அருள் 
செய்ய ......

அன்னக்காவடியின் கலயத்தை கந்தனது 
சன்னதியில் திறக்க ......

என்னே அவனின் திருவிளையாடல் ?

ஒன்றரை மாதத்திற்கு முன்பு சமைத்துக் 
கட்டிய சோற்றிலிருந்து சூடாக ஆவி 
மேலெழுந்தது .

அதைப் பாா்த்த அனைவரது உடலும் 
சிலிா்த்தன .

'மகிமை பொய்யா , மலைக் குழந்தை 
வடிவேல் முருகையா' என்று கவிராயா் 
பாடத் தொடங்கினாா் .
.

Sunday, November 28, 2021

கார்த்திகை மாத சோம விரதம் ரகசியம்

🔥கார்த்திகைசோமவாரச்சிறப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.

 
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.
 
கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.

 
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
 
சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆதலால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைபிடிப்பார்கள்.
 
சோம வார விரத மகிமைகள்:
 
தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் - ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். 

 
தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரனை காக்கும்பொருட்டு சிவன் தன் தலை முடியில் அமர்த்தி கொண்டார். அப்படியமர்ந்து கொண்ட சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.
 
‘இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான். அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன். இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.

 
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம். அல்லது இரவில் சாப்பிடலாம். ஆனால் அந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும். 
 
இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப, வாழ்நாள் முழுவதுமாகவே அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ கடைப்பிடித்து நலம் பெறலாம்.

Monday, November 8, 2021

கந்த சஷ்டி ஸ்பெஷல் பதிவு

*கந்த சஷ்டி ஸ்பெஷல்*
🕉️🌷🕉️🌷🕉️🌷🕉️🌷🕉️

*சந்தான பாக்கியம் தரும் சஷ்டி விரதம்!*

சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தைப் பேறுக்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதைத்தான் ‘சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 

சஷ்டி விரதம் என்றால் மாதாமாதம் வரக்கூடிய திதி நாளா அல்லது ஐப்பசி மாதம் தீபாவளியன்று வரும் கந்த சஷ்டியா?

ஐப்பசி மாத கந்த சஷ்டியின்போது விரதம் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஐப்பசி வரை காத்திருக்காமல் ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதத்தைக் கடைபிடிக்கலாம். 

முருகன் அருளால் கர்ப்பப்பையில் கரு வளர, உடனே அந்த விரதத்தை மேற்கொள்வதும் சரிதானே?

சூரபத்மன் மிகக் கொடுமையான ஓர் அரக்கன். மூவுலகத்தோரையும் மிரட்டி, உருட்டி, அதட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தான். அவனுக்கு பயந்து ஒதுங்கிப் பணிந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து அப்படி பணிந்துகொண்டேயிருக்க, அவர்களுடைய பலவீனத்தைத் தன்னோட வெற்றியாக நினைத்து குரூரமாக சந்தோஷப்பட்டான் சூரபத்மன். மேலும் மேலும் அவர்களைத் துன்புறுத்தி மகிழ்ந்தான். 

அவனுடைய அக்கிரமத்தையும், அதனால் அவன் அடையும் அல்ப சந்தோஷத்தையும் பார்த்த பிற அரக்கர்கள், தாமும் ஏன் அவனைப்போலவே நடந்துகொள்ளக்கூடாது என்று யோசித்து அவர்களும் எதிர்ப்பட்ட முனிவர்களையும், பொது மக்களையும் கொடுமைப்படுத்தினர். 

அப்படி அடிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவன் ஜயந்தன். இவன் இந்திரனுடைய மகன். தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் மகனையே அரக்கர்கள் சிறைப்பிடித்துப் போனது கொடுமையின் உச்சம். 

அதோடு இந்திரனின் மனைவி இந்திராணியையும் விரட்ட, அவள், சூரபத்மனுக்கு பயந்து எங்கேயோ போய் ஒளிந்துகொண்டாள். தேவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தித் தன் சர்வாதிகார சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினான் சூரபத்மன். 

அவன் செய்வதை தப்புன்னு சொல்றதுக்கோ, அவனை எதிர்ப்பதற்கோ யாருக்கும் தைரியமில்லை. 

அப்பாவிகளின் துயரத்தைப் போக்க வேல் முருகன் முன்வந்தார். அவன் தன் தவறுக்கு வருந்துகிறானா என்பதை அறிய, தன்னுடைய தளபதி வீரபாகுவை அவனிடம் தூது அனுப்பினார். 

சூரபத்மன் பிடித்துவைத்திருப்பவர்களையெல்லாம் அவன் விடுதலை செய்தானானால் சமாதானமாகப் போய்விடலாம் என்று சொல்லி அனுப்பினார். 

ஆனால், சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தப்போன வீரபாகுவை சூரபத்மனுடைய ஆட்கள் தடுத்தார்கள். அவன் சொல்ல வந்தது எதையும் கேட்காமல், அவனைத் தாக்க ஆரம்பித்தார்கள். 

ஆகவே தன்னைக் காத்துக்கொள்வதற்கும், சூரபத்மனிடம் நேரடியாக முருகன் சொல்லியனுப்பிய தகவலைச் சொல்வதற்கும் இடையூறாக இருந்த அரக்கர்கள் சிலரை அவன் திருப்பித்தாக்க வேண்டியதாயிற்று. 

அதனால், பல அரக்கர்கள் மடிந்தனர். ஆனால், சூரபத்மன் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. யாரையும் விடுவிக்க முடியாது, மன்னிப்பும் கேட்கமுடியாது என்று இறுமாப்பாகச் சொல்லிவிட்டான். ஜயந்தன் மட்டுமல்ல, இந்திரன், இந்திராணி இருவரையும் விரைவில் சிறைபிடிப்பேன் என்றும் கொக்கரித்தான். 

சாத்வீகமாகப் போனால் இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்று தெரிந்துகொண்ட வீரபாகு, முருகனிடம் வந்து விவரம் சொன்னான். 

இனிமேலும் பொறுப்பதில்லை என்று முருகன் தீர்மானித்தார். தன் வீரர்களை அழைத்துக்கொண்டு சூரபத்மனை பந்தாடப் போனார். 

ஆனால், முருகனைப் பார்த்தால் சண்டை போடும் குணமுடையவனாகவே தெரியமாட்டார். அழகான குழந்தை முகம், சாந்தமான அழகான புன்னகை. இந்த மலருக்கும் கோபம் வருமா என்றுதான் பார்ப்போருக்குத் தோன்றும். 

அக்கிரமங்கள் அடுக்கடுக்காகப் பெருகிக்கொண்டே போகும்போது பூக்களும் புயலாவதுதானே வழக்கம்? ஆனால், சூரபத்மனும், அவனைச் சேர்ந்தவர்களும் முருகனை ஒன்றும் தெரியாத பாலகன் என்றுதான் தவறாக மதிப்பிட்டார்கள். 

ஆனால், அவர்களுடைய நினைப்பெல்லாம் தவிடுபொடியாவதுபோல துர்க்குணன், தருமகோபன், சண்டன் ஆகிய அரக்கர்களையும், சூரபத்மனுடைய பிள்ளைகளான பானுகோபன், இரணியன் ஆகியோரையும், அவனுடைய தம்பிகளான அக்கினி முகன், சிங்கமுகாசுரன்னு என்று எல்லோரையும் முருகன் பந்தாடிக் கொன்றான்.

தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் இழந்தும் சூரபத்மனுக்கு முருகனின் பராக்கிரமம் புரியவில்லை. 

இன்னும் கோபம் அதிகமாயிற்று. முருகனைப் பார்த்து அலட்சியமாக சிரித்தான். இந்தப் பொடியனோடு சண்டை போடுவது தன்னுடைய பராக்கிரமத்துக்கே இழுக்கு என்று கர்வப்பட்டான். 

ஆனால், போகப்போக குமரனுடைய ஆற்றலைப் பார்த்த சூரபத்மன் திகைத்தான். அவரை எதிர்ப்பது தனக்குப் பேராபத்தாகத்தான் முடியும் என்பதை உணர்ந்த அவன் உடனே மாயமாக மறைந்துவிட்டான். 

தனக்குக் கிடைத்திருந்த அபூர்வ சக்தியால் யார் கண்ணிற்கும் தெரியாதபடி மறைந்தபடி போரிட்டான் அவன். ஆனால், எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி மாயப்போர் புரிய முடியும்? 

சக்கரவாகப்பட்சியாக, பெரிய பூமி உருண்டையாக, மும்மூர்த்திகளாக, தேவர்களாக, அசுரர்களாக, கூற்றுவனாக, இறந்த தன் பிள்ளைகள், தம்பிகள் என்று பலவாறாக மாய உருவம் கொண்டு முருகனை எதிர்த்தான். ஆனாலும் புன்னகை மாறாமல் அப்படி புதிதுபுதிதாகத் தோன்றிய சூரபத்மனுடைய எல்லா உருவங்களையும் அழித்து ஒழித்தான். 

இறுதியாக சூரபத்மன் மாமரமாக மாறி கடலிலிருந்து பிரமாண்டமாக எழுந்து, முருகவேளை எதிர்த்தான். அவனை தன் முயற்சிகளால் மட்டும் வெல்ல முடியாது என்று தோன்றியது முருகனுக்கு. உடனே, (இப்போதைய நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள) சிக்கல் என்ற தலத்துக்குப் போய் அங்கே கோயில் கொண்டிருந்த தன் தாயான அம்பிகையிடமிருந்து ஒரு வேலை வாங்கி வந்தார். 

இன்றைக்கும் சிக்கல் தலத்தில் உற்சவத்தின்போது, தாயிடமிருந்து வேல்வாங்கும் முருகன் விக்கிரகத்தின் முகத்தில் வியர்வை அரும்புவதைப் பரவசத்துடன் காணலாம்! அந்த சூரசம்ஹார உற்சவத்தின்போது அப்படி முருகன் விக்கிரகத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வையைத் துடைத்துவிடுவதற்கென்றே ஒரு அர்ச்சகர் துணியோட காத்திருப்பார்!

தாயாரிடமிருந்து வாங்கி வந்த சக்தி வேலை எடுத்து சூரபத்மனை நோக்கி எறிந்தார் முருகன். அது அசுரனை நேரடியாகத் தாக்கி அவனை இருகூறுகளாகப் பிளந்தது. மாய்ந்து வீழ்ந்தான் அரக்கன். ஆனால், அந்தக் கொடிய அரக்கனுக்கும் நற்கதி தந்தார், முருகன். 

மாமரமாகத் தோன்றிய அவனை இருகூறுகளாகப் பிளந்து, அவற்றில் ஒன்றைத் தன் சேவற்கொடியாகவும், இன்னொன்றை மயில் வாகனமாகவும் மாற்றித் தன்னுடனேயே இருத்திக் கொண்டார். 

இந்த சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூரில். இப்போதும் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இந்த சூரசம்ஹார சம்பவத்தை நடத்திக் காட்டுகிறார்கள். 

பொதுவாகவே இந்த சூரசம்ஹார வைபவம் உலகத்திலுள்ள எல்லா முருகன் கோயில்களிலும் கொண்டாடப் படுகிறது.

*சரி, கந்த சஷ்டி விரதத்தை எப்படி மேற்கொள்வது?*

ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி ஆரம்பிக்கும் நாளிலிருந்தே விரதத்தை ஆரம்பிக்கலாம். கந்த சஷ்டி முடிவில், சூரசம்ஹார தினத்தன்று விரதத்தை முடித்துவிடலாம். மொத்தம் ஆறு நாட்கள். 

ஆறுமுகன் விரதத்துக்கு ஆறு நாட்கள்! அந்த ஆறு நாட்களும் ஆறுமுகனைத் துதித்து உபவாசம் மேற்கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பால், பழம் என்று மட்டும் உட்கொண்டு, ஆறாம் நாள் முழு உபவாசம் இருக்கலாம். 

இந்த காலத்தில் பொதுவாக இப்படி உபவாசம் இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆகவே ஆறாம் நாள், சூரசம்ஹாரம் அன்றாவது முழு உபவாசம் இருப்பது நல்லது. 

ஆனால், கந்த சஷ்டி ஆரம்பிக்கும் நாளிலிருந்து அதாவது, வளர்பிறை பிரதமை திதியிலிருந்து தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு மூச்சிழையாக முருகன் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருப்பது நல்லது. 

இந்த ஆறு நாட்களும் தினமும் பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்குப் போய்வரலாம். தினமும் வீட்டு பூஜையறையில் முடிந்த உணவுப் பொருட்களை முருகனுக்கு நைவேத்யமாகப் படைக்கலாம். 

அதேபோல் பக்கத்து முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகன் அருளைப் பெறலாம்...’’ சிலர் இந்த கந்த சஷ்டி நாட்களில் சில பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதும் உண்டு. 

குறிப்பிட்ட ஒரு முருகன் கோயிலுக்கு போவதற்கும், அங்கே காவடி எடுக்கவும், மொட்டை போட்டுக்கொள்வதாகவும் வேண்டிக்கொண்டு அப்படியே செய்வார்கள். இன்னொன்றையும் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். 

அதாவது, இந்த ஆறு நாட்களும் தினமும் அதிகாலையில் குளித்து முடித்தபிறகு, பூஜையறையில் அறுகோண கோலம் வரைந்து, ஒவ்வொரு முனையிலேயும் ‘ச-ர-வ-ண-ப-வ’என்ற சடாட்சர மந்திர எழுத்துகளை எழுதி பிரார்த்தனை செய்யலாம்.

அறுகோண கோலம் என்பது ஆறு முனை கொண்ட நட்சத்திரக் கோலம். நடுவில் ஒரு வட்டம் போட்டு, அதிலிருந்து ஆறு கூம்புகள் வெளியே நீட்டியிருப்பதுபோல வரைந்துகொள்ளலாம். 

பொதுவாக இதை அவரவர் குடும்ப வழக்கப்படி வரைந்துகொள்வது நல்லது அல்லது ஆன்மிகப் புத்தகக் கடைகளில் பூஜையறைக் கோலங்கள் என்றே புத்தகம் கிடைக்கும். அதைப் பார்த்தும் வரையலாம்.

முக்கியமாக, குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இந்த விரதம் சிறப்பானது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அதாவது மழையும், குளிருமாக இருக்கக்கூடிய காலத்தில் இப்படி உபவாசம் இருந்து முருகன் நாமத்தையே உள்ளார்ந்த பக்தியோடு ஜபித்துக்கொண்டிருந்தால் அந்த ஒலியலைகளும் சேர்ந்து ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழி செய்யும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. 

தம்பதி சமேதராக இந்த விரதத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது, ஏக்கம் தீர்ந்து குழந்தை பாக்கியமும் கிடைத்ததென்றால் அடுத்த கந்த சஷ்டியின்போது மறுபடி உபவாசம் இருந்து முருகனுக்கு நன்றி தெரிவிக்க மறக்கக்கூடாது! கந்த சஷ்டி மட்டும் என்றில்லாமல் ஒவ்வொரு மாத சஷ்டி திதியன்றும் இவ்வாறு உபவாசமும் விரதமும் மேற்கொள்ளலாம், பயன் பெறலாம்.

கீழ்க்காணும் துதியை கந்தசஷ்டி ஆறுநாட்களிலும், ஒவ்வொரு மாத சஷ்டி நாளன்றும் பாராயணம் செய்தால் முருகப்பெருமானின் திருவருள் முழுமையாகக் கிட்டும். 

*மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்*
*மனோஹாரி தேஹம் மஹத்சித்தகேஹம்*
*மஹீதேவதேவம் மஹாவேதபாவம்*
*மஹாதேவபாலம் பஜே லோகபாலம்*

*பொதுப்பொருள்*: 

மயில் வாகனத்தில் ஆரோகணித்திருப்பவரே, ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளானவரே, மனதைக் கவரும் வண்ணம் ஒளிபொருந்திய தேகம் கொண்டவரே, சுப்ரமண்யா, நமஸ்காரம். மகான்களின் இதயத்தை வீடாகக் கொண்டவரே, பூதேவர்களான வேதவித்துக்களால் உபாசிக்கப்படுபவரே, உபநிஷத்துக்களின் பொருளும், பரமசிவனின் புத்திரனும் ஆனவரே, உலகங்களைக் காப்பவரே, சுப்ரமண்யா, நமஸ்காரம். முடிந்தால் திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். இயலாதவர்கள் பக்கத்துக் கோயிலில் முருகனை வழிபடலாம்.

Friday, November 5, 2021

நீங்க சுமந்து வந்த கர்மாக்களை கழிக்க இந்த தானங்கள் செய்யுங்கள்.

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்..... 

 உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
     தானியங்கள் வைத்தால் = 5 % (-)
(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) 
(10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்தர்வர்கும் = 70% (-)
(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15)நோயளிகளுக்கு = 93% (-)
(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புன்னிய காரியங்களுக்கு உதவுதல். 

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். 

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

(1)கோயில் மயில்களுக்கு 
(2)கோயில் காகத்திற்கு 
(3)கோயில் சேவல்களுக்கு 
(4)கோயில் யானைகளுக்கு 
(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு 
(6)கோயில் பூசாரி 
(7)பிராமனர்களுக்கு உணவு 
(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு 
(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் 
(10)அன்னதானத்திற்கு உதவுதல் 
(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் 
(12)கோயில் விளக்கிற்கு எண்ணை கொடுத்தல்
(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14)இறைவனுக்கு பூ மாலை 
(15)முன்னோர்கள் வழிபாடு
(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17)ஏழை மாணவர்கள் படிக்க 
(18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து  செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். 

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.

      - அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து......

Wednesday, November 3, 2021

இந்த இடம் போனால் நம் தலையெழுத்து மாறும்.

திருப்பட்டூர்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது.
இவ்வூரில் தான் மிகவும் பழமையும் சக்தியும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்திற்கு ஒரு முறை செல்வதே ‘விதி இருப்பின்’ மட்டும் தான் நிகழுமாம். ஒரு முறை சென்றவர் மீண்டும் மீண்டும் செல்லும் வரம் கிட்டும் என்பதும் நிதர்சன உண்மையாகும்.
திருப்பட்டூர் வரலாறு:
பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்.
படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன் ”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.
படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.
பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.
மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
”என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக, என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.
பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.
திருவிழா: இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.
சிறப்பு :
பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.
சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.
கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம்.
இந்த அமைப்பு மிக விசேஷமானது.
திறக்கும் நேரம் : காலை 7.30- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி. வியாழனன்று காலை 6- மதியம் 12.30 மணி.
பொது தகவல் : இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது. பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.
சங்க காலப் பாடல்களில் இத்திருக்கோயில் மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை நக்கீரனார் தம்முடைய 395வது புறநானூறு பாடலில் இக்கோயிலில் உறையும் சாஸ்தாவைப் புகழ்கிறார். சேக்கிழார் பெருமான் பெரிய புராண பாடலை தில்லையம்பலத்தில் தொடங்கி திருப்பிடவூர் என்னும் திருப்பட்டூரில் முடித்ததாக வரலாறு.
அமைப்பு:
இக்கோயிலின் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள மற்ற அய்யனார் கோயில்களிலிருந்து மாறுபட்டு உள்ளது. ராஜகோபுர வாசலிலிருந்து கோயிலுக்குள் நுழைந்ததும் முதலில் தென்படுவது பலி பீடமும், கல் யானையும்.
கல் யானைக்கு இடது புறமும், வலது புறமும் அதாவது தெற்கிலும் வடக்கிலும் கோயிலின் உள்ளே செல்வதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெற்க்கில் வடக்கு பார்த்து காளியம்மன் என்கிற நருவிழியம்பாள் எனும் வன மாதா மகா மண்டபத்தில் விதானம் யந்த்ர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு உடலில் புதிய ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.மகா மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும் வழியில் பிரதட்சிண மண்டபம் அமைந்துள்ளது.
பூர்ண புஷ்கலா தேவியரோடு அய்யனார் இடது கையில் ஓலை சுவடியும். வலது கையை முழங்கால் மீது வைத்தும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அய்யனார் சிரசிலும் மார்பிலும் மணிக்கட்டிலும் ருத்ராட்சம் அணிந்து சிவ ஸ்வரூபமாக உள்ளார்.
புராண வரலாறு: திருக்கயிலாயத்தில் சேரமான் பெருமாள் நாயனாரால் சிவபெருமானைப் போற்றி ”ஞான உலா எனும் பாடல் பாடப்பட்டது. அதை பூவுலகிற்கு தந்தருள்வதற்காக அய்யனார் திருவுளங்கொண்டு எழுந்தருளிய திருத்தலம் இது. எனவே அரங்கேற்ற அய்யனார் என்ற பெயர் பெற்றார். ”ஞான உலா பாடல் அரங்கேறிய 18 கால் கல் மண்டபம் இன்றும் உள்ளது.
ஏழாம் தேதி பிறந்தவரா?
ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.
சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன் ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும்.
ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.
பிரார்த்தனை:
குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம், மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குரு பெயர்ச்சி அன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.
திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.
நேர்த்திக்கடன்
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு :
வித்தியாசமான அமைப்பு:
”குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு;
குருர் தேவோ மகேச்வர;
குரு சாக்ஷ?த் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ’
என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.
முருகன் வணங்கிய சிவன்:
முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் ‘திருப்படையூர்’ எனப்பட்ட தலம் ‘திருப்பட்டூர்’ என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.
எல்லாமே மஞ்சள் நிறம்
பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால் பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு புளியோதரை படைத்து மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.
பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர் கந்தபுரீஸ்வரர் பாதாள ஈஸ்வரர் தாயுமானவர் மண்டூகநாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாசலேஸ்வரர் கைலாசநாதர் ஜம்புகேஸ்வரர் காளத்தீஸ்வரர் சப்தரிஷீஸ்வரர் தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.
பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா.
எனவே வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள். என்பது ஐதீகம்.அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.
உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும்.
பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.
முகவரி: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர்-
பின்...621 105. திருச்சி மாவட்டம்.

Thursday, October 28, 2021

சிங்கப்பூரின் பிரம்படி எப்படி இருக்கும் தெரியுமா?

சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது? 

குற்றங்கள் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால் ,  கை கால்களைக் கட்டி குனிய வைத்து , ‘பின் புற’த்தில் வலிமையான குச்சியால் அடி பின்னுவார்கள் .
ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு  ஜென்மத்துக்கும் வலிக்கும் என்கிறார்கள்.

நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுறயா என்றால் சரி என கட்டுவார்கள் என்பதே அடி எப்படி இருக்கும் என சொல்லும். 

மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்க வேண்டும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் குச்சி உடையாமல் இருக்க. புண் ஆனால் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும். 

முழு நிர்வாணமாக கீழே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள்.  

முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பின்பு மயக்கம் தெளியவைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. 

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார் அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று மாறிக் கொள்வார்கள். உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும். 

மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார்.

4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது. 

தமிழ்நாட்டிலே செய்வது போல் கருப்புபணம் பதுக்கினால் 24 அடி விழும். 

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை ஏன்னா இந்த அடி தான். ரவுடித் தனம், திருட்டு, கருப்பு பணம், கொள்ளை என்று அனைத்தையும் ஒழித்தது  இந்த அடிதான். 

24 அடி வாங்கினவன் வாழ் நாளிலே திரும்ப ஒழுங்கா நடக்க கூட முடியாது. அப்புறம் எங்க பொம்பளை கையபிடிச்சு இழுக்கறது? கொள்ளையடிக்கறது? 

தமிழ்நாட்டு புனிதர்களுக்காகவே இதை கொண்டு வரனும். ஒரு வருசம் நடைமுறையிலே இருந்தா போதும். தமிழ்நாடு சிங்கப்பூராகி விடும்.

Wednesday, October 27, 2021

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்.

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

Friday, October 22, 2021

தீபாவளிக்கு முன் நம்முடைய முன்னோர்களுக்கு யம தீபம் ஏற்றுவோம்

நமது முன்னோர்களுக்கு 
"எம தீபம்" ஏற்றுவோம் ....

நவம்பர் 2ஆம் தேதி எமதீபம் ஏற்றுவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும் சொத்துக்கள் சேரும்.

தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

தீபாவளி பண்டிகைக்கு அதிக சத்தம் தரும் வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூலோகம் வந்திருந்த நம்முடைய பித்ருக்கள் நாம் காட்டும் மத்தாப்பு வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்கள் என்பது நம்பிக்கை.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள். நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.

பித்ரு கடன் .....

அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. 

பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம்தான். எனவேதான் முதலில் பிதுர் தோஷத்தினையும், சாபத்தினையும் போக்க வேண்டும்.

ஐபசி அமாவாசை....

மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது ஐதீகம். 

எனவே ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

எம தீபம் ஏற்றுவோம் ....

தீபாவளிக்கு முதல் நாளில் திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு நவம்பர் 02ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றலாம். அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். 
அனைத்து விதத் தடைகளும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.

Tuesday, October 19, 2021

முதுமையில் மனைவி இறந்து விட்டாள் அனாதையான வாழ்க்கை..

*காணாமல் போகும்  உறவுகள்...!*

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும்.., சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!

இருபது வருடங்கள் முன்னாடி... அவர் மனைவி இறந்த பிறகு, *சாப்பிட்டாயா..!!* என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை...!!

*பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே..* – என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!

*தாய்க்குப் பின் தாரம்.. தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!!* என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை ..!!!

*காசு இங்கே மரத்திலேயா காய்க்குது..* - என்று மகன் அமிலவார்த்தையை வீசிய போது..!!! அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!!

*என்னங்க...!!! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!* என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை...!!!

*உனக்கென்னப்பா...!!!பொண்டாட்டி தொல்லை இல்லை..* என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது அவர் இறந்திருந்தார்..!!!அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

*இப்போதுதான் இறந்தாராம்!* என்கிறார்கள்..!
எப்படி நான் நம்புவது..???

*_நீங்கள் செல்லும் வழியில்இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்..._*
ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்..!!!

இல்லையேல்...!
உங்கள் அருகிலேயே இறந்துகொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள்..

*வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல..!!!*
*வாழவைப்பதும்தான் ..!!!!*

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது. இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை... மாறாக திறன்பேசி (SMART PHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்... ஆக!, மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப் பட்டு வருகின்றன என்பதே உண்மை...

பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய், இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து, கணிணியும், அலைபேசியும் இருந்தால் போதும் என்று நிலையில் வாழ்ந்து வருகிறோம்...

இது ஒருபுறம் இருக்க, இனி வரும் காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்... இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது...

எவரும் அப்படிக் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்... காரணம்., நகரவாழ் பெரியோர்கள் கூறுவது போல "*ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு*" என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்தது தான்...! அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்...?

கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள், இனி யார் போவார்கள்...? ஒவ்வொரு பெண்ணும், சொந்த பந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்...

ஒவ்வொரு ஆணும் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப் பட போகிறார்கள், அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுகளும் இருக்கப் போவதில்லை...
அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக் குடித்தனமோ சென்று விட்டால்...?

*"ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு"* என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை!, அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்...! 

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இதே நிலை தான்...! 

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டால் ஓடோடி வந்து இனி யார் வரப் போகிறார்கள்...? வாகனங்கள், வீட்டு வசதி வாய்ப்புகளுடன் ''ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு'' என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா...? இவ்வளவு பாடு பட்டு ஓடி ஓடி செல்வம் ஈட்டுகிறீர்கள்...?

ஒரே ஒரு முறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பார்ப்போம்...!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை, ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்து விடாதீர்கள்...!!_*

படித்ததில் பிடித்தது...

Monday, October 18, 2021

நீச்ச சனிக்கு சக்தி வாய்ந்த பரிகாரம்.

சனியும் பரிகாரமும்..!

ஜனன ஜாதகத்தில் சனி நீச்சம் அல்லது ஷட் வலுவில் வலுவிழந்து இருந்தால் கீழ் காணும் எதிர்மறை நிகழ்வுகளை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும், மேலும் கீழே கொடுத்துள்ளவாறு ஒருவர் செயல்பட்டால் சனியின் நீச்ச பலனை அனுபவிக்க நேரும்..!

தென்மேற்க்கு அல்லது தெற்கே அடசல் அல்லது சாக்கடை போன்ற அசுத்தமான இடங்கள் இருப்பது..!
சனி வலுவிழந்தால் ஜாதகருக்கு கொடூரமான குணாதிசயம், எப்பொழுதும் அதீத கவலையில் இருப்பது, கட்டுபடுத்துவது, ஆழமான கண்கள், ஒல்லியான தேகம், நீண்ட கழுத்து, கீழே உள்ள உடல் பாகங்கள் ஒல்லியாக நீண்டு இருப்பது போன்ற அமைப்புகள் இருக்கும்..!
பொதுவாகவே சனி வலுவிழந்தவர்களின் முகம் பொலிவாக இருக்காது, இவ்வாறானா நபர்களை தொழிலாளர் சங்கங்கள், சுகாதாரத்துறை போன்ற இடங்களில் காணலாம்..!
நீண்ட கால மற்றும் குணபடுத்த கடினமான நோய்கள் இருக்கும், இவர்களுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டால் நீண்ட காலம் ஆகும் குணமாக ஏனெனில் சனி காலம் தழ்த்தியே பலனளிப்பார்..!
கடினமாக உழைக்கும் சூழ்நிலை..!
அமைதியாக பேச சிரமப்படுவார்..!
கீழ்தரமான வார்த்தைகளை பேசும் பொழுது பயன்படுத்துவார்..!
எதிர்பார்ப்புகள் அதிகம் அதீத ஏமாற்றங்கள், லாபங்கள் குறைவு..!
சேமிப்பு இல்லாமை மற்றும் அறிவின்மை அல்லது அதீத அறிவு..!
சனி நின்ற வீட்டின் காரகங்கள் கிடைபதில் தாமதம்..!
முட்டி மற்றும் முழங்கால்களில் வலி..!
வீடு மற்றும் நில புலங்களில் பொருளாதார இழப்புகள்..!
வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் ஒழுக்கமின்மை..!
அதிக எண்ணை பண்டங்களை உட்கொள்வது..!
சமையலறை கழுவு தொட்டி அசுத்தமாக இருப்பது..!
பொய் பேசுவது வேலையாட்கள் ஒத்துழைப்பின்மை அல்லது வேலையாட்களை மோசமாக நடத்துவது..!
வீட்டில் தெற்க்கு பகுதியில் அடசல் அல்லது சரியாக உபயோகபடுத்தாமல் இருப்பது..!

பரிகாரம்.. !

சுக்கிலபட்ச சனிக்கிழமையில் ஆரம்பித்து, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் வரும் முதல் ஹோரை சனி ஹோரையில் தசரத சனி சோஸ்த்திரம் குறைந்தது 11 முறையும் பொதுவாக 108 முறையும் பாராயணம் செய்யவும்..!
ஹனுமான் சாலிஸா சோஸ்த்திரம் இரவு வேளையில் ஒரே இடத்தில் ஆசனத்தில் 11 முறை பாராயணம் செய்யவும், ஹனுமான் சாலிஸா சோஸ்த்திரம் பாராயணத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்க தினமும் பாராயணம் செய்யும் முன்னர் "ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராணனே" என்று உச்சரித்து ஆரம்பியுங்கள்..!
விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தை வழிபடுங்கள், ஹனுமான் பூஜை செய்யுங்கள்..!
சனிக்கிழமை நல்லேண்ணை தேய்த்து குளிப்பது உத்தமம்..!
கருப்பு எள்ளு தானம் தாருங்கள், எருமை மாட்டை தானம் கொடுங்கள், நல்லெண்ணை தானம் கொடுங்கள்..!
தோல் ஆடை அல்லது பை, செருப்பு, கருப்பு நிற துணிகள் போன்றவற்றை சுக்கிலபட்ச சனிக்கிழமையில் தானம் கொடுங்கள்..!
சனிக்கிழமை விரதம் இருக்கலாம், 14 முக ருத்திராட்சம் அணியலாம்..!

மீண்டும் சந்திப்போம்..!

Tuesday, October 5, 2021

தெய்வீக ரகசியங்களை படித்து புரிந்து கொள்ளுங்கள்.

#தெய்வீக #ரகசியங்கள்!

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் . குறிப்பாக துளசி அல்லது தொட்டா சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .

4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .

5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரிசெய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் , மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .

9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து காக்கும்.
அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவைலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி  தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ..

Tuesday, September 21, 2021

விபூதியை பற்றிய சித்தர்களின் ரகசியம்.

சித்தர்கள் ரகசியம்

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்!

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இந்த அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

 பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.



இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும்

. அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு .



நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.



நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம்.



 வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது

ஓம் நமசிவய❤️

Monday, September 20, 2021

வீட்டில் குபேரனை எங்கு வைத்து வழிபடலாம்.

🌺 வீட்டில் #குபேரரை எந்த திசையில் வைக்க வேண்டும். மேலும் அவரை பராமரிக்கும் மற்றும் வழிபடும் முறை :   

🌷 குபேரர் பொதுவாக #அதிர்ஷ்டத்தை தரக்கூடிய தெய்வமாக கருதப்படுகிறார்.

🌷 இவரை பொதுவாக #வடகிழக்கில் அமைந்துள்ள பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள்.

🌷 குபேர பொம்மையை அறை (Room), ஹால்(Hall), படுக்கையறை (Bedroom) அல்லது உணவருந்தும் (Dining room) அறை என எங்கு #வேண்டுமானாலும் வைக்கலாம். 

🌷 குபேரரை முதல் தரமாக #வடக்கு திசை பார்த்த மாதிரி வைத்து வழிபடுவது சிறப்பு. அப்படி இல்லாத பட்சத்தில் கிழக்கு திசை பார்த்த மாதிரியும் வைக்கலாம். 

🌷 பணம் வைக்கும் #பீரோவில் வைப்பதாக இருந்தால் அந்த பீரோவின் மேற்கு அல்லது தெற்கு பாகத்தில் வைத்து கிழக்கு அல்லது வடக்கு பார்த்த மாதிரி வைக்க வேண்டும். 

🌷 இவருக்கு உகந்த தினமாக #வியாழக்கிழமை சொல்லப்படுகிறது. ஆகையால், அந்நாளில் காலையில் வீட்டை சுத்தப்படுத்தி அன்று மாலை 5 முதல் 8 மணி வரை குபேர #விளக்கேற்றி, இவருக்கு தட்டில் 21 காசு அல்லது 48 காசு அல்லது 108 காசு வைத்து #நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 

🌷 மேலும் பழங்களில் #மாதுளை இவருக்கு உகந்தது. இவரை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். 

🌷 படம் இல்லாமல் #விக்கிரகமாக வைத்து வழிபட்டால் மறக்காமல் தினமும் #நைவேத்தியம் படைக்க வேண்டும்.

Sunday, September 19, 2021

வாஸ்து படி படிக்கட்டுகள் எப்படி அமைய வேண்டும் படித்து பயன் பெறவும்.

🔥 #_வாஸ்துபடி வீட்டில் படிக்கட்டு அமைப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம் (#_Staircase_Vastu) :

🎄நம் வீட்டில் அமைந்திருக்கும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை #_ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அது #_லாபத்தில் வைத்ததாக கணக்கில் வரும். மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கும் நன்மை செய்யும்.

🎄எக்காரணத்தைக் கொண்டும் படிக்கட்டுகள் வீட்டிற்குள்ளே அமைப்பதாக இருந்தாலும் சரி, அல்லது வெளியில் அமைப்பதாக இருந்தாலும் சரி #_வடகிழக்கில் மட்டும் அமைத்து விடக்கூடாது. அப்படி அமைத்தால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும். இதற்கு காரணம் என்னவென்றால், வட கிழக்கில் உள்ள படிக்கட்டு அமைப்பு அவ்வழியாக வரும் #_நல்ல ஆற்றல்களை தடுத்து நிறுத்திவிடும்.

🎄மேலும் படிக்கட்டுகள் வீட்டிற்குள் அமைக்க வேண்டுமென்றால், வீட்டின் #_தெற்கு_மத்தி அல்லது #_மேற்கு மத்தியில் #_Clockwise direction'ல் திரும்புவது போன்ற அமைப்பில் அமைத்துக் கொள்ளலாம்.

🎄வீட்டிற்கு வெளியே அமைப்பதாக இருந்தால் #_நீச்ச பகுதியாக கருதப்படும் #_தென்மேற்கு_தெற்கு அல்லது #_தென்மேற்கு_மேற்கு அல்லது #_வடமேற்கு_வடக்கு அல்லது #_தென்கிழக்கு_கிழக்கு ஆகிய பகுதிகளில் #_Clockwise direction'ல் திரும்புவது போன்ற அமைப்பில் அமைத்துக் கொள்ளலாம்.

🎄படிக்கட்டுகளில் ஏறும் போது #_வடக்கிருந்து_தெற்காகவும் அல்லது #_கிழக்கிருந்து_மேற்காகவும் ஏறுவது போன்று அமைக்க வேண்டும். அப்போதுதான் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் உயர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு தாழும். இதன்மூலம் தென்மேற்கு வழியாக வரக்கூடிய கெட்ட ஆற்றல்கள் உள்நுழைவதை தடுக்கலாம்.

🎄#_சுழல் (Spiral) வடிவ படிக்கட்டு தவறான ஒரு அமைப்பு. இது பல பிரச்சினைகளை உண்டுபண்ணும்.

🎄வீட்டை முழுவதுமாக சுற்றியபடி படிக்கட்டு அமைத்திட கூடாது.

🎄நம் வீட்டுக்குள் அமைக்கும் படிக்கட்டு, மற்றொருவர் #_கண் பார்வை இருக்கும் இடத்தில் அமையாமல் மறைவாக அமைத்தல் வேண்டும் (வெளியிலிருந்து பார்க்கும்போது).

🎄படிக்கட்டு கீழே உள்ள காலி இடத்தில் பூஜை அறை (Pooja room), படுக்கை அறை (Bed room) மற்றும் சமையலறை (Kitchen) போன்றவைகள் வரக்கூடாது. மாறாக அதன் கீழே பொருட்கள் சேமிக்கும் அறை (Store room) போன்று அமைத்துக் கொள்ளலாம்.

🎄படிக்கட்டுகளின் தொடக்கத்திலும் மற்றும் முடிவிலும் வீட்டின் வாசல் தொடங்கும்படி அமைத்தால் சிறப்பான பலனை தரும்.

🎄#_வெளிர்_நிறங்களை படிக்கட்டுக்கு பயன்படுத்தலாம்.

🎄#_சதுர அல்லது #_செவ்வக வடிவிலான படிகட்டுகள் சிறப்பான பலனைத் தரும். மேலும் 90 டிகிரி வளைவு கொண்ட படிகட்டுகள் சிறப்பு.

🎄படிக்கட்டுகளின் தொடக்கம் மற்றும் முடிவு இரண்டுமே பூஜை அறை மற்றும் சமையலறை வாயிலில் அமையக்கூடாது. அது நாம் உணவுக்கும், கடவுளுக்கும் கொடுக்கப்படும் #அவமரியாதையாக கருதப்படும்.

🎄மொட்டை மாடியில் உள்ள படிக்கட்டுக்கு #_கதவு மிகவும் அவசியம்.

🎄படிக்கட்டுகள் #_தலை_வாசலுக்கு உடன் நேராக தொடங்குவது போன்று அமையக்கூடாது.

🎄#_உடைந்த_படிகட்டுகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

🎄படிக்கட்டு சுவரில் சாமி படங்கள், முன்னோர்களின் படங்கள் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை மாட்டக்கூடாது.

🎄இப்படி நான் மேலே சொன்ன அமைப்புகளை பின்பற்றும் பட்சத்தில்,உங்களுக்கு படிக்கட்டு சார்ந்த எந்த தோஷத்திலிருந்தும் உங்களுக்கு #_கெடுதல்கள்_வராது...  நன்றி.

Thursday, September 16, 2021

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரங்களின் மந்திரம். கண்டிப்பாக படியுங்கள்.

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..

இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய 
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய 
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய 
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய 
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய 
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய 
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய 
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய 
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய 
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய 
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய 
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய 
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய 
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய 
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய 
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய 
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய 
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய 
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய 
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய 
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய 
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய 
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய 
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய 
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய 
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய 
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய 
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய 
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய 
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய 
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய 
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய 
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய 
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய 
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய 
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய 
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய 
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய 
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய 
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய 
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய 
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய 
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய 
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய 
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய 
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம: 
கபாலினே நம: சிவாய 
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய 
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய.

                      

Wednesday, September 15, 2021

ஏழு குதிரை பற்றிய வாஸ்து டிப்ஸ். ரகசியம் அறிய படியுங்கள்.

💐 #ஏழு_குதிரைப்படம் பற்றிய வாஸ்து டிப்ஸ்:

🌺 ஏழு குதிரைப்படத்தை நிறைய நபர்கள் வீட்டில் மாட்டி இருப்பதை பார்த்திருப்போம். அவை #நன்மையா? #தீமையா? என்று பார்த்தால், அந்தப்படம் எந்த அமைப்பில் உள்ளது என்பதைப் பொருத்து நன்மை தீமைகள் தீர்மானிக்கப்படும்.

🌺 இந்த ஏழு குதிரைகள் படத்தை சரியான அமைப்பில் வீட்டில் மாட்டிக் கொள்ளும் போது, உங்களின் மனதில் உத்வேகம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை தூண்டி உங்களை வாழ்க்கையில் #வெற்றியாளராக மாற்றும்.

🌺 அந்த ஏழு குதிரைகளும் #பின்னோக்கிச் செல்வது போன்றோ அல்லது நின்றிருப்பது போன்றோ இருக்கக் கூடாது. மாறாக உத்வேகத்துடன் ஓடுவது போன்ற அமைப்பில் இருக்க வேண்டும்.

🌺 #கடிவாளம் கட்டியிருப்பது போன்றும் இருக்கக்கூடாது.

🌺 #ஏழு என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் மாறாக வேறு எந்த எண்ணிக்கையிலும் இருக்க கூடாது.

🌺 #வெண்மை நிற குதிரைகளாக இருந்தால் கூடுதல் சிறப்பு.

🌺 உங்கள் #வீட்டிலோ அல்லது அலுவலங்களிலோ இந்த ஏழு குதிரை படத்தை மாட்டிக் கொள்ளலாம்.

🌺 இந்த ஏழு குதிரைகளுக்கு பின்னாடி #சூரியன் உதயமாவது போன்று இருக்க வேண்டும்.

🌺 #வீட்டு_வாசலை நோக்கி வைத்திருக்கக் கூடாது .இது குதிரைகள் நம்மை விட்டு பிரிவதற்கு சமமாக கருதப்படும்.

🌺 நம் வீட்டின் தெற்கு அல்லது கிழக்கு சுவரில் மாட்டிக்கொள்ளலாம். ஆனால், குதிரைகள் நம் வீட்டை விட்டு செல்வது போன்ற திசையில் வைக்க கூடாது. மாறாக #உள்_நுழைவது போன்ற அமைப்பில் இருக்கவேண்டும்.

🌺 ஏழு குதிரைகளின் முகமும் #அமைதியும் சாந்தமும் உடையதாக இருக்க வேண்டும் . மாறாக ஆக்ரோஷம் நிறைந்து காணப்படக்கூடாது.

🌺 இந்த படத்தை பூஜை அறையிலோ அல்லது படுக்கை அறையிலோ #மாட்டக்கூடாது.

🌺 நான் மேலே சொன்ன அமைப்புகள் போன்று வைத்துக்கொண்டால் உங்களுக்கு வாழ்க்கையில் #வெற்றி மேல் வெற்றி தரும் வகையில் அமையும்.

     🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.

Tuesday, September 14, 2021

வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி இப்படி வைக்கவே கூடாது.

*"கண்ணாடியை வீட்டில் இப்படி வைத்தால் உங்களால் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஜெயிக்கவே முடியாது."*

காசு பணம் இல்லாத வீடுகள் கூட இருக்கும். ஆனால் கண்ணாடி இல்லாத வீடு கட்டாயமாக இருக்காது. நம்மை அப்படியே, நமக்கு பிரதிபலித்துக் காட்டும் இந்த கண்ணாடியை வீட்டில் எந்தெந்த இடத்தில் எல்லாம் எப்படி வைக்க வேண்டும் எப்படி வைக்கவே கூடாது என்பதை பற்றியும், இந்த கண்ணாடியின் மூலம் நம் வீட்டில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் உங்களுடைய வீட்டில் இந்த தவறுகளை செய்து வந்தால் அதை கொஞ்சம் மாற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும்.

முதலில் படுக்கை அறையில் கட்டிலுக்கு நேராக கண்ணாடி கட்டாயம் இருக்கக் கூடாது. இது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். 

*ஆனால் கண்ணாடியை இப்படி வைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன தெரியுமா?*

காலையில் எழுந்து நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் படுக்கை அறையில் இருக்கும் கண்ணாடியில் கண் விழித்தால் உங்களால் வாழ்க்கையில் ஒருபோதும் ஜெயிக்கவே முடியாது. வாழ்க்கையில் தோல்விகள் பின் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம். உங்கள் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால் இரவு அந்த கண்ணாடிக்கு ஒரு திரை போட்டு விடுங்கள். காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு அதன்பின்பு அந்த திரையை விலக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக நிறைய பேர் வீட்டு நிலை வாசலில் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயமாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் சில வீடுகளில் நிலை வாசலில் கண்ணாடியை வைப்பதன் மூலம் பிரச்சினைகள் அதிகமாக வருகின்றது. உங்கள் வீட்டில் அதிகப்படியான பணப்பிரச்சனை சண்டை சச்சரவுகள் இருந்தால் நிலை வாசலின் வெளியில் இருக்கும் கண்ணாடியை எடுத்து நிலை வாசலுக்கு உள்ளே, நேராக வீட்டிற்குள் இருக்கும் சுவற்றில் மாட்டி வையுங்கள். வீட்டிற்குள் நுழைபவர்கள், வீட்டிற்குள் நுழைந்தவுடன் பார்க்கும்படி இந்த கண்ணாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நிலைவாசலின் வெளிப்பக்கத்தில் கண்ணாடியை வைக்கக்கூடாதென்று ஏன் சொல்லுகிறார்கள். நிலைவாசல் என்பது மகாலட்சுமியும் அஷ்டலட்சுமிகளும் வாழும் இடம். அந்த இடத்தில் கண்ணாடியை வைத்து விட்டால், உள்ளே நுழைபவர்களுடைய எண்ணங்களை அந்தக் கண்ணாடி தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ளும். அப்போது அந்த இடத்தில் இறை சக்தி குறைந்து விடும் என்பதற்காகவே நிலை வாசலில் கண்ணாடியை வைக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

அடுத்தபடியாக நிறைய பேர் வீடுகளில் குளியல் அறையில் கண்ணாடி வைக்கும் பழக்கம் உள்ளது. குளியல் அறையில் கண்ணாடி வைக்கக்கூடாது. அப்படியே கண்ணாடி குளியலறையில் தேவை என்றால், நீங்கள் குளிக்கும் போது உங்களுடைய பிம்பம் கண்ணாடியில் தெரியும் படி இருக்கக் கூடாது. முகம் கழுவும் இடம் கைகழுவும் இடம், அதாவது வாஷ்பேஷன் மேலே கண்ணாடியை வைக்கலாம். நாம் குளிப்பது அப்படியே பிரதிபலிக்கும் படி எதிர்ப்பக்கத்தில் கட்டாயமாக கண்ணாடி இருக்கக்கூடாது.

குளியல் அறையில் கண்ணாடியானது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் அல்லது கிழக்கு திசையில் உள்ள சுவற்றில் தான் இருக்க வேண்டும். மாறாக குளியலறையில் தெற்கு திசை சுவற்றில், மேற்கு திசையில் உள்ள சுவற்றில் கண்ணாடியை மாட்டி வைத்திருந்தால் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய் படுவார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு மன பயம் இருக்கும். சில பேருக்கு மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

இதேபோல் வீட்டிற்குள் அதாவது ஹாலில் அல்லது வேறு ஏதாவது இடத்திலோ கண்ணாடியை வைத்து இருந்தால் அதை வடக்கு திசையிலும் கிழக்குத் திசையிலும் வைக்கக்கூடாது. தெற்கு திசையில் இருக்கும் சுவற்றிலும், மேற்கு திசையில் இருக்கும் சுவற்றிலும் தான் வீட்டிற்குள் கண்ணாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களுடைய வீட்டில் கஷ்டம் இருந்தால் மேல் சொன்ன படி கண்ணாடியை ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் தவறாக வைத்திருந்தால் கண்ணாடி இருக்கும் இடத்தை சரியான இடத்திற்கு மாற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்ல மாற்றம் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்."
 

*வாழ்க வளமுடன்*

Monday, September 13, 2021

விரைவில் பூமியில் முருகனின் ஆசிர்வாதம் பெற்ற சித்தர்களின் ஆட்சி.

*முருகப்பெருமானின் வழிகாட்டலில் சித்தர்கள் ஆட்சி*

*பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது. கிபி 2027 முதல் கிபி 2037க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.*

*முருகப்பெருமானின் வழிகாட்டலில் சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப் போகிறார்கள். பழனி மலையில் இருக்கும் நவபாஷாண முருகனின் சிலை சிதைந்து விட்டது நம் அனைவருக்கும் தெரியும். இந்த சிலையை போகர் நிறுவினார்.*

*அவர் இதேபோல் 9 நவபாஷாண சிலைகளை உருவாக்கி பழனி மலையும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார். அதேபோன்று ஒரு முருகன் சிலை பழனி மலையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.*

*கிபி 2027 முதல் கிபி 2037 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறு ஒரு சித்தரால் புதிய நவபாஷாண சிலை நிறுவப்படும். குணக்கேடுகளால்தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி வருகிறது. பொறாமை, பேராசை, அளவு கடந்த சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே பிறவிக்கு காரணமாகும்.பக்தி தான் குணக்கேடுகளை பற்றி புரிந்தும் அதை வெல்லுகின்ற உபாயத்தையும் உணர்த்தும்*

மனிதர்களின் பாவ மிகுதியால் இயற்கை சீற்றமடையும்.  கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் 100 கிலோ மீட்டர் உயரம் அலைகள் எழும்பி நகரங்களை நாசமாக்கிவிடும்.
புயல்கள் வீசும்.

இந்த மாற்றங்கள் கிபி 2027 முதல் கிபி 2037க்குள் நடந்து முடிந்து விடும். அணைக்கட்டுகள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது. இயற்கையின் சீற்றத்தால் மக்கள் தொகை பெருமளவு குறைந்துவிடும். நிலத்தில் அழிவு ஏற்படும்போது *கொங்கணவர்* தோன்றுவார். 120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.

நேர்மையும் சத்தியமும் இருக்கும். தெய்வீகம் சேரும். காகித நோட்டுக்களே இருக்காது. தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்து விடும். பல மேலை நாடுகள் அனைத்தும் பொசுங்கி போய் விடும். அசுர சக்திகளை காளி அப்படியே அடக்கி ஒடுக்கி விடுவாள். பிறகு இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய பிரத்தியங்கரா தேவியினுடைய சக்தியானது ஞான சித்தர் உடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாக தெரியும். இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.

2037ல் தான்
ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும். இந்தியாதான் உலகத்திற்கே வல்லரசு ஆக போகிறது. உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது. இதனை ஞானத்தினால் மட்டுமே உணரமுடியும். வெளி ஆற்றலால் ஒருபோதும் உணர முடியாது.

உலகிற்கே வழிகாட்ட போகிற ஒரு ஜோதி தென்னாட்டில் இருந்துதான் தோன்றப் போகிறது என்று தீர்க்கதரிசனமாக  சித்தர்கள் சொல்லிவிட்டார்கள். ஆம் அந்த ஞான சித்தர் சென்னையிலிருந்து உலகிற்கே வழிகாட்ட போகிறார்.

18 மாபெரும் சித்தர்கள் அனைவரும் இந்த ஞானசித்தர் இடம் வந்து பேசுவார்கள். அத்தனை சக்திகளும் 2027 க்கு பிறகு அந்த ஞான சித்தருடன் ஆவாகனம் ஆகிவிடும். உலகம் இதை எதிர்காலத்தில் வரக்கூடிய காலகட்டங்களில் உணரும். வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது.

2037 க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடு உலகிற்கே வழிகாட்ட போகிறது. அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்திய முனிவர் காட்டியுள்ளார். இதை சித்தர்கள் நாடி மூலமாக புரிந்து கொள்ளலாம்.

இது எல்லாம் சித்தர்கள் மூலமாக நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் நீங்கள் நடக்க காண்பீர்கள். . அதனால் நீங்கள் தேட வேண்டியது உலகியல் பொருள்களையல்ல. ஆன்மா சம்பந்தப்பட்டது. 
தன்னைஅறிகின்றவன் தலைவனை அறிவான். உடம்பைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவதே தன்னை அறிவதாகும். அதுவே ஞானமாகும். உடம்பையும், உயிரையும் பற்றி அறிந்து கொண்டவர்கள் இயற்கை அன்னையைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள்.

தன்னை அறியக்கூடிய அறிவு பெற்றாலும், உலகநடையில் இருந்து கொண்டே விடுபடாமல் ஆசான் அகத்தீசரை தினமும் காலை மாலை பூசை செய்தும், தவத்திற்குரிய முறையை கடைப்பிடித்தும், மற்றும் உடம்பை பாதுகாக்க கூடிய மூலிகை கற்பங்களையும் ஆசானைக் கேட்டு உண்டு, அத்துடன்ஆசானின் அனுமதியுடன் அவ்வப்போது பிரணாயாமமாகிய யோகம் செய்யவேண்டும். தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தன்னடக்கத்தோடு இருந்து குரு அருள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குரு அருள் இன்றி ஒருவன் தன்னை அறியமுடியாது. குணக்கேடுகளால்தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி வருகிறது. பொறாமை, பேராசை, அளவு கடந்த சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே பிறவிக்கு காரணமாகும். குருபக்தி தான் குணக்கேடுகளை பற்றி புரிந்தும் அதை வெல்லுகின்ற உபாயத்தையும் உணர்த்தும். ஆகவே குருபக்தி தான் தன்னை அறியக்கூடிய தகைமையைத் தரும்.

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே."

"என்னை யறிகிலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)
என்னையிட் டென்னை உசாவுகின் றேனே."

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே
-திருமந்திரம்