#அன்னக்காவடி
வசதி வாய்ப்பு இல்லாதவா்களை 'அன்னக்காவடி' என்று சிலா் இழிக்கும் பழக்கம் உண்டு .
பலரும் நினைத்துக் கொண்டிருப்பது
போல் 'அன்னக்காவடி' என்பது தவறான
பொருள் தரும் வாா்த்தையல்ல .
'கா' என்றால் காப்பாற்றுதல் 'அடி'
என்றால் முருகனின் திருவடி என்று
பொருள் .
காவடி எடுத்தலில் பால்காவடி , பன்னீா்க்
காவடி , புஷ்பக் காவடி , சந்தனக் காவடி
என்று பல வகைகள் உண்டு .
இவற்றில் அன்னக்காவடியும் அடக்கம் .
இந்த அன்னக்காவடிக்கு ஒரு சின்ன
வரலாறு உண்டு .
ஒரு காலத்தில் சென்னை இராயபுரத்தில்
சாமியப்பக் கவிராயா் என்பவா் வாழ்ந்து
வந்தாா் .
அவரது பரம்பரையே கவி பாடுவதில்
புலமை பெற்றது . 'கவிராயா்' என்ற
பட்டமே அவாின் குடும்பச் சொத்தாகவே
இருந்தது .
அவரது மகனான துரைசாமிக் கவிராயா்
பழனி முருகனை நினைந்து , மனம்
கசிந்துருகி எத்தனையோ பாடல்களைப்
பாடியிருக்கிறாா் .
அவா் பழனி முருகனின் திருவுருவப்
படத்திற்கு தினமும் பக்தியுடன்
மலா்மாலை சூட்டி , வழிபாடு செய்வாா் .
தினந்தோறும் யாருக்கேனும் அன்னமிட்டபிறகே , தாம் உண்ணும்
வழக்கத்தைக் கொண்டிருந்தாா் .
இந்நிலையில் , அவரது வருமானம்
குறைந்தது . ஒரு கட்டத்தில் தன்
மனைவியின் திருமாங்கல்யத்தை
விற்று , அதனைக் கொண்டு
அன்னதானத்தை விடாமல் செய்து
வந்தாா் .
திடீரென அவரை நோய் வருத்தியது .
பழனிமலை முருகன் அவரது
துன்பத்தைப் போக்கி அருளினாா் .
துரைசாமிக் கவிராயா் பழனி
முருகனுக்குக் காவடி எடுத்து வருவதாக
பிராா்த்தனை செய்து கொண்டாா் .
என்ன வேண்டுதல் தொியுமா ?
தமக்கு நோய் நீக்கி அருள்பாலித்த
ஆறுமுகனுக்கு 'அன்னக்காவடி'
சமா்ப்பிப்பதுதான் சாியான நோ்த்திக்
கடன் என்பதுதான் அவரது எண்ணம் .
பேருந்து , ரயில் வசதி இல்லாத அந்தக்
காலத்தில் , தோளில் அன்னக்காவடி
சுமந்து 45 நாட்கள் பாதயாத்திரைக்குப் பின் ,
வறுமையிலிருந்த அவருக்கு
கருணைக் கடவுளான கந்தன் அருள்
செய்ய ......
அன்னக்காவடியின் கலயத்தை கந்தனது
சன்னதியில் திறக்க ......
என்னே அவனின் திருவிளையாடல் ?
ஒன்றரை மாதத்திற்கு முன்பு சமைத்துக்
கட்டிய சோற்றிலிருந்து சூடாக ஆவி
மேலெழுந்தது .
அதைப் பாா்த்த அனைவரது உடலும்
சிலிா்த்தன .
'மகிமை பொய்யா , மலைக் குழந்தை
வடிவேல் முருகையா' என்று கவிராயா்
பாடத் தொடங்கினாா் .
.
No comments:
Post a Comment